Friday, October 12, 2007

சில வினாக்களும் , விடைகளும்!





விக்கி பசங்களின் கேள்வியின் நாயகனே பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளில் எனக்கு தெரிந்த சில கேள்விகளுக்கான பதில்கள், பிழை இருப்பின் திருத்தலாம்!

ரவிசங்கர் கேட்டது:

//9. பாம்புக்கு காது இருக்கிறதா? பால் குடிக்குமா?//

பாம்புக்கு காது இல்லை, அதன் உடல் மூலம் தரையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்தே ஒலியை கிரகிக்கும், மற்ற உயிரினங்களின் நட மாட்டத்தை அறியும்.

பாம்பின் நாக்கு பிளவுப்பட்ட தன்மையுடன் இருக்கும் , மேலும் அதற்கு திரவத்தை உறிஞ்சும் தொண்டை கிடையாது. எனவே பால் எல்லாம் குடிக்காது. இன்னும் சொல்ல போனால் மென்று தின்னும் அமைப்பில் அதன் தாடைகளும் இல்லை, அப்படியே முழுங்கும்.

சிபிக்கேட்டது:

//ரோடு ரோலர்கள் இன்னும் அளவில் பெரியதாகவே இருப்பது ஏன்?

அதன் வடிவமைப்பை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லையா? முயற்சி செய்யவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?//

ரோலர்கள் அது தரும் அழுத்தத்தின் மூலம் தரையை சமம் செய்கிறது , சிறியதாக வைத்தால் தேவையான அழுத்தம் கிடைக்காது. ஆனால் தற்போது வேகமா இயங்கும் (ஓடும்) ரோட் ரோலர்கள் இருக்கிறது.

சாலைப்பணிகள் அல்லாமல் நிலத்தை சமன் செய்ய என சிறிய ரோலர்களும் உள்ளது. தேவையைப்பொருத்து அளவு.

//தீக்கங்குகளை தண்ணீரில் போட்டால் "புஸ்"ஸென்ற சப்தம் வருவது எதனால்?

(இந்தியாவிலும் இதே சத்தம்தான் கேட்கிறது?)

வெந்நீரில் போட்டாலும் இதே சப்தம் வருமா?//

எல்லாம் வெப்ப நிலை வேறுபாடு தான். வென்னீரை எரியும் நெருப்பில் ஊற்றினால் அணைக்காதா? தீக்கங்கின் வெப்பத்தில் நீர் ஆவியாகிவிடும், அது விரைவாக நடப்பதால் ஏற்படும் விரிவினால் காற்றில் ஒரு அதிர்வு ஏற்படும் அது தான் புஸ் சப்தம். அதாவது தீக்கங்கின் அருகில் மட்டும் காற்று விரிவடையும் மற்றப்பகுதியில் காற்று விரிவடையாது இருக்கும் இந்த வித்தியாசம் தான் சத்தம்.

துளசிகோபால் கேட்டது:
//போட்டோஜினிக் என்றால் என்ன?//

ஒரு புகைப்படம் என்பது பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும் ஒளியை புகைப்பட சுருளில் சிறைப்பிடிப்பது.

நம் முகம் எந்த அளவுக்கு ஒளியை மீண்டும் வெளியிடுகிறதோ அந்த அளவுக்கு நம் முகம் தோற்றப்பொளிவுடன் இருக்கும்.

முகத்தில் இருக்கும் மேடுகள் ஒளியை நன்கு திருப்பும் , பள்ளங்கள் அப்படி திருப்பும் ஒளியின் அளவு குறைவாக இருக்கும்.

இதை எல்லாம் சரிக்கட்ட தான் மேக் அப். மேக் அப் பொருள் சிவப்பாக காட்டும் என்றாலும், அதில் நிறைய ஒளியை எதிரொளிக்கும் ரசாயனங்களும் இருக்கும்.

இன்னும் சொல்ல போனால் எந்த அளவு லைட்டுக்கு எந்த கிரேட் மேக் அப் என்று கூட உள்ளது.

பிலிம்களும் ஒளி அளவுக்கு ஏற்றார் போல ரேட்டிங்க் இருக்கு. சாதாரணமான கையடக்க கேமிரா பிலிம் பார்த்தீர்கள் எனில் 100 என போட்டு இருக்கும். அப்படியே 200, 400, 600 என ரேட்டிங்களில் எல்லாம் பிலிம் வருகிறது, அதற்கு ஏற்றார்ப்போல ஒளியை நன்கு வாங்கிக்கொள்ளும். இண்டோர், அவுட்டோர் எனவும் பிலிம் இருக்கிறது.
(சாமுத்திரிகா லட்சணம் படி முகம் இருப்பது வேறு அம்முகம் நேரிலும் அழகாகவே இருக்கும்)

ஓகை கேட்டது:

//கௌ்வி: கிபி 1000 ஆவது ஆண்டில் உலகின் மிக உயரமான கட்டிடம் எது?//

அப்பொழுது என்று இல்லை ஆரம்பத்தில் இருந்தே மிக உயரமான கட்டுமான அமைப்பு எகிப்திய கிரேட் பிரமிட் தான் உயரம் 487 அடி. தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 216 அடிகள் தான். தற்காலத்தில் எக்கச்சக்கமான உயரமான கட்டிடங்கள் வந்தாச்சு . தற்போது உலகின் உயரமான கட்டிடம் ,தாய் பே-101 , தைவான், உயரம்1671 அடிகள், அதற்கு முன்னர்ர் பெட்ரோனாஸ் டவர், மலேசியா உயரம் 1483 அடிகள்.

தருமி் கேட்டது:

//டென்னிஸ் மேட்சுகளில் இப்போதெல்லாம் controvercial calls பற்றி விளையாடுவோர் கௌ்வி எழுப்பலாம். உடனே பந்து கோட்டின் எந்த இடத்தில் விழுந்தது என்பது உடனே காண்பிக்கப் படுகிறது.
இது எப்படி?//

டென்னிஸ் கோர்ட்டில் உள்ள எல்லைக்கோடுகள் வெள்ளை நிறப்பட்டியாக இருக்கும் அதன் அடியில் முழுவதும் பட்டையாக சென்சார்கள் வைத்து , கம்பியூட்டர் உடன் இணைத்து இருப்பார்கள், பந்து கோட்டில் பட்டதும் பீப் சத்தம் வரும். மேலும் பலக்கேமிராக்கள் இருக்கும் அதன் மூலம் பதிவு செய்துக்கொண்டே இருப்பார்கள். தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு காமிரக்கோணம் தான் வழக்கமாக வரும். ஒளிப்பரப்புவதற்கு ஒரு பெரிய அணியே வேலை செய்யும்.

//கிர்க்கெட் மேட்சுகளில் விழுந்து எழும்பிச் செல்லும் பந்தைமட்டும் close-up-ல் replay-ல் காட்டுகிறார்களே. நிச்சயமாக manual-ஆக அந்தப் பந்தை மட்டும் படம் பிடிக்க முடியாது - with very long focal length lenses.
எப்படி முடிகிறது.//

கிரிக்கெட் மேட்சில் காட்டும் பந்து கிராபிக்ஸில் காட்டுவது. அதை சொல்கிறீர்களா, இல்லை மற்ற ரீப்பிளே வா? எதுவாக இருந்தாலும் சாத்தியமே.

//one way mirror-ன் அறிவியல் என்ன?
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?//

போலரைசர் பிலிம்களின் வேலை அவை.வழக்கமாகஒளிக்கற்றையில் பல தளங்களிலும்ம் ஒளி அதிர்வடைந்து கொண்டு ஒரு கலவையாக இருக்கும்.இதில் நாம் சில தளங்களை மட்டும் வடிக்கட்டி ஒரே தளத்தில் மட்டும் அதிரும் சமச்சீரான அதிர்வு கொண்ட ஒளியைப்பெற முடியும். அல்லது முழுவதுமாக வடிகட்டி தடுக்க முடியும். ஒரு வழிக்கண்ணாடி, கார் கண்ணாடி பிலிம்களில் ஒரு பக்கத்தில் இருந்து வரும் ஒளியின் அதிர்வுகளை மட்டும் வடிக்கட்டி விடும் போலரைச்சர் பிலிம்கள் அல்லது பூச்சுகள் இருக்கும்.

சிபி கேட்டது

//சாதாரணமாக உணவுப் பொருட்களை தீயில் காட்டி சூடு செய்யும்போது இன்னும் மொறுமொறுப்புதானே (கிரிஸ்பி) அடையவேண்டும். மாறாக பிஸ்கட்டுகளை தீயில் சுட்டால் கிரிஸ்பி தன்மையை இழந்து நெகிழ்வதன் காரணம் என்ன?//

காரணம் பிஸ்கெட்டில் உள்ள சர்க்கரை, நேரடியாக சுட்டால் வெப்பத்தில் இளகுவது. நீங்கள் மைரோவேவ் அவனில் வைத்து சுட்டால் அப்படி ஆகாது மொறு மொறுப்பாக இருக்கும்.

21 comments:

ILA (a) இளா said...

Good Collection.

வெற்றி said...

வவ்வால்,
நல்ல பதிவு. மிக்க நன்றி. ஒரு ஐயம்.

/* பாம்பின் நாக்கு பிளவுப்பட்ட தன்மையுடன் இருக்கும் , மேலும் அதற்கு திரவத்தை உறிஞ்சும் தொண்டை கிடையாது. */


அப்ப பாம்பு திரவ வகைகளை [தண்ணீர், பால் etc] உட்கொள்ளாமலா வாழ்கிறது? தனிய திண்மப் பொருட்களை மட்டும் தான் உண்டு வாழ்கிறது என்கிறீர்களா? அனைத்து உயிரினங்களும் [பூச்சிகள் கூட பூக்களில் இருக்கும் தேனைப் பருகும்] நீரின்றி வாழாது என நினைத்திருந்தேன். அல்லது நான் உங்களின் பதிலைத் தவறாக விளங்கிக் கொண்டேனோ?!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
நான் தொ.காவில் பார்த்தேன். பாம்பு ,நீரை உறிஞ்சிக் குடித்ததை, ஆற்ரோரத்தில்...வாயை நீருள் வைத்து அலகு(மேற்,கீழ்த் தாடை) ஆடியது.
மேலும் வெற்றிக்கு, அவுஸ்ரேலியாவில் உள்ள கோலா ,வாழ்வில் நீரே அருந்துவதில்லை, இலைகளில் கிடைக்கும் நீரையே பிரித்து வாழ்கிறது.
மொரக்கோவில் ஒருவகை மான் இருக்கிறது. அது நீரருந்துவதில்லை.
சாப்பிடும்,புல்,பூண்டிலிருந்தே ,சொற்பவளவு நீரைப்பிரித்து வாழ்கிறதாகக் கூறினார்கள்.அதன் புழுக்கைகள் உடன் போட்ட நிலையிலும் கூழாங்கற்கள் போல் கடினமாக இருந்ததைக் காட்டினார்கள். அந்த அளவு அதைப் பிளிந்து நீரெடுக்கும் குடலமைப்பு என விளக்கினார்கள்.
இப்படி மேலும் உயிரினங்கள் இருக்கலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
வெற்றி said...

யோகன் அண்ணை,
நன்றி.

/* அவுஸ்ரேலியாவில் உள்ள கோலா ,வாழ்வில் நீரே அருந்துவதில்லை, இலைகளில் கிடைக்கும் நீரையே பிரித்து வாழ்கிறது*/

கோலா என்பது ஒரு வகைப் பாம்பு இனமா? அல்லது வேறு உயிரினமா? நான் இதுவரை இப்படி ஒரு உயிரினத்தைக் கேள்விப்படவில்லை.

/* அது நீரருந்துவதில்லை.
சாப்பிடும்,புல்,பூண்டிலிருந்தே ,சொற்பவளவு நீரைப்பிரித்து வாழ்கிறதாகக் கூறினார்கள்.அதன் புழுக்கைகள் உடன் போட்ட நிலையிலும் கூழாங்கற்கள் போல் கடினமாக இருந்ததைக் காட்டினார்கள். */

எங்கள் ஊரில் உள்ள ஆடுகள் தண்ணியெல்லாம் நல்லாய் குடிக்கும். ஆனால் அவை புழுக்கை போடும் போது நீங்கள் குறிப்பிட்டது போல கூழாங்கற்கள் போல கடினமாகத்தானே உள்ளது, இல்லையா? அப்ப அதை மட்டும் வைத்து நீங்கள் குறிப்பிட்ட மான் வகை தண்ணீர் குடிப்பதில்லை என முடிவுக்கு வரலாமா? அப்ப இந்த மான்வகை மூத்திரம்[சலம்] பெய்வதில்லையா? அறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன். விதண்டாவாததிற்கு அல்ல.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இதை koala, இப்படியே பிரஞ்சில் எழுதிலாலும் அவர்கள் உச்சரிக்கும் போது என்காதில் கோலா எனத்தான் விழுந்தது. இது பண்டாக் கரடிபோல்
ஆனால் அளவில் சிறிது சாம்பல் நிறம்.
முலையூட்டி மிருகம் ,யூக்கலிப்ஸ் மரங்களில் வாழும் அந்த இலையே அதன் உணவு.

ஊரின் ஆட்டுப் புழுக்கை நல்ல அனுமானம். ஆனால் அதில் உடன் இட்டதை,பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குள்ளும் வைத்து, அவித்த கடலைபோல் நசித்து விடலாம்.
ஆனால் இந்த மொரக்கோ பாலை நில மானின் புழுக்கை அதே அளவு , அப்படி அந்த விபரணத் தயாரிப்பாளர் முயன்றும் முடியவில்லை. அதனால் கல்லால் குற்றி உடைத்தார்கள். காட்டுவதற்காக...படகாகப் பார்த்தேன்.
நீங்கள் குதர்க்கம் புரிவதில்லை. அதை நான் அறிவேன்.
பாம்பு நீர் குடிக்கும் படம் போட்டுள்ளேன். பார்க்கவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால் !
இயற்கையில் வாழும் பாம்பும் நீர்குடிப்பது கிடைத்தது. ஆனால் அதன் வீடியோ தொடுப்பை எடுக்க முடியாது. தொடர்வில் சென்று நேரே பார்க்கவும்.

Anandha Loganathan said...

Good answers with detail explanation.

Really helpful .

வவ்வால் said...

இளா.
நன்றி!
-----

வெற்றி,
நன்றி!
எந்த உயிரினமும் , நீர் எடுத்துக்கொள்வது அது இழக்கும் நீரின் அளவைப்பொருத்தே.மனிதன் போன்ற பாலுட்டிகளின் உடைல் நீர் இழப்பு அதிகம் இருக்கும், வியர்வை, சிறு நீர், உடல் இயக்க செயல்கள் என , பூச்சிகள் எல்லாம் நேரடியாக நீர் உட்கொள்வதே இல்லை. காரணம் அவற்றின் உடல் மீது உள்ள. கியுட்டீன், உடல் இயக்க செயல்களுக்கு உணவில் உள்ள நீர் போதும்.

வெற்றி, மற்றும் யோகன்,

பாம்புகளில் எல்லாப்பாம்பும் நீரில் தலையை முக்காது தண்ணீர் பாம்பு என்ற வகை மட்டும் தண்ணீரில் தலை முக்கி செல்லும். நல்ல பாம்பு போன்றவை தண்ணீரில் நீந்தினாலும் தண்ணீரில் தலையை மூழ்காது செல்லும்.

நில வாழ் பாம்புகளுக்கு தண்ணீர்,பால் குடிக்க தெரியாடு என சொல்லி இருக்க வேண்டும். தண்ணீர் பாம்பு என விஷமற்ற பாம்புகள் அப்படி இல்லை. ஆனால் அவை புற்றுகளில் வசிப்பதில்லை. மேலும் பாம்புகளுக்கு புற்று கட்டவும் தெரியாது, கரையான் புற்றில் தான் பாம்பு குடியேறும். காரணம் கரையான் புற்றுகள் மிக குளிர்ச்சியாக இருக்கும், கரையானின் எச்சிலில் இருந்து ஒரு பேக்டிரியா படலம் உருவாகும் அதுவே மரம் அரிக்க காரணம் ,அது மிக குளிர்ச்சியாக இருக்கும், அதை விரும்பி பாம்புகள் அங்கு குடியேறும்.

புற்றில் வாழும் பாம்புக்கு தானே பால் கொண்டு போய் படைக்கிறார்கள். எனவே நான் சொன்னது நில வாழ் பாம்புகள் என கொள்ளவும்.நீர் வாழ் பாம்புகள் நீர் குடிக்கலாம், நீரில் வேட்டையாடலாம்.அவற்றின் தகவமைப்பு வேறு!
--------------------

//அவுஸ்ரேலியாவில் உள்ள கோலா ,வாழ்வில் நீரே அருந்துவதில்லை, இலைகளில் கிடைக்கும் நீரையே பிரித்து வாழ்கிறது.//

கோலா கரடி அல்ல (ஆஸ்திரேலியாவில் இருப்பது கோலக்கரடி அல்ல), பாண்டா கரடி , அது தான் இலைகளில் உள்ள நீரை மட்டும் நம்பி வாழும், கோலா கரடி அளவில் பெரியது.

கோலாக்கரடி என்பது துருவக்கரடி எனப்படும் பனிக்கரடி ஆகும்.

இன்னும் சொல்லப்போனால், எலிகள், அணில்களுக்கு கூட நீர் தேவை இல்லை, ஆனால் நீர் கிடைத்தால் குடிக்கும், நீரே இல்லையென்றாலும் வாழும்.
---------------

ஆனந்த லோகநாதன்,
நன்றி!

வித்யா கலைவாணி said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

வித்யா கலைவாணி,

நான் முன்னரே ஒரு விளக்கமான பின்னூட்டம் உங்கள் பதிவில் இட்டேன், அது வரவே இல்லை, ஆனால் ஒரே போல உள்ள மற்றவர்கள் பின்னூட்டம் வந்திருந்தது, எனவே முறன் பட்ட கருத்து என்பதால் , வெளியிடவில்லையா எனக்கேட்டேன். எனக்கும் அது வரிக்கு வரி நினைவில்லை, ஆனால் மீண்டும் ஒரு பின்னூட்டம் இடுகிறேன்.

வவ்வால் said...

யோகன்,

பாம்பின் உடலில் நீர் குறைந்தால் மட்டுமே மிகச்சிறிய அளவு நீர் மட்டுமே குடிக்கும், ஆனால் பால் குடிக்காது என ஒரு இணைய தளத்தில் போட்டுள்ளார்கள். காரணம் பால் செரிக்க வைக்கும் என்சைம் அதன் உடலில் இல்லையாம். மனிதனுக்கே பசுவின் பால் இயல்பாக செரிக்காது, அதற்கு என ஒரு பாக்டிரியா தேவை அது , வளர்ந்த பின்னர் , நமக்கு ஒரு தொற்றாகத்தான் உடலில் செல்கிறது. அது நன்மை செய்யும் தொற்று!

மேனகா காந்தி கூட மனிதர்கள் பசும்பால் குடிப்பது இயல்புக்கு எதிரானது என கூறியுள்ளது நினைவுக்கு வருகிறது.

Anandha Loganathan said...

//பாம்பின் உடலில் நீர் குறைந்தால் மட்டுமே மிகச்சிறிய அளவு நீர் மட்டுமே குடிக்கும், ஆனால் பால் குடிக்காது என ஒரு இணைய தளத்தில் போட்டுள்ளார்கள். காரணம் பால் செரிக்க வைக்கும் என்சைம் அதன் உடலில் இல்லையாம்//

ராம நாராயணன் படங்களில் பாம்பு பால் குடிப்பது போல் காட்டுகிறார்களே ,அப்போ அதெல்லாம் உடான்ஸா. ( நான் பாம்பு நேரைடியாக பால் குடித்ததை பார்த்ததில்லை).

வவ்வால் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ஆனந்த லோகநாதன்,
நன்றி,

மனிதர்களுக்கு பால் அவ்வளவு எளிதாக ஜீணரிக்காது, பல மனிதர்கள் பால் செரிமானக்கோளாறுகளால் பால் குடிக்காமலே இருக்கிறார்கள் இதில் பாம்பு எப்படி.

பாம்பால் சர்ரென்ரு திரவங்களை உறிஞ்ச முடியாது என்று படித்துள்ளேன், தண்ணீரைக்கூட கஷ்டப்பட்டு தான் குடிக்க வேண்டும்.

நீங்கள் வேண்டுமானல் பறவைகள் நீர் குடிப்பதை பாருங்கள், ஒரு வாய் அலகால் நீர் எடுத்து மேலே அண்ணாந்து பார்த்து தண்ணீரை உள்ளே தள்ளும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கோலா கரடி அல்ல (ஆஸ்திரேலியாவில் இருப்பது கோலக்கரடி அல்ல), பாண்டா கரடி , அது தான் இலைகளில் உள்ள நீரை மட்டும் நம்பி வாழும், கோலா கரடி அளவில் பெரியது.

கோலாக்கரடி என்பது துருவக்கரடி எனப்படும் பனிக்கரடி ஆகும்.//

koala கரடி, அவுஸ்ரேலியாவையும், பாண்டா கரடி சீனாவையும், துருவக்கரடி வட தென் துருவத்தையும்
வாழ்விடமாகக் கொண்டவை.
கோலா,பாண்டா தாவரபட்சனி..யூக்கலிப்ஸ் இலை, மூங்கில் உணவாக உண்பவை.
துருவக் கரடி இறைச்சி,மீன் உண்பது.
அளவில் கோலா,பாண்டா, துருவக் கரடி என உயர்ந்து கொண்டே செல்லும்
நிறம் சாம்பல், கறுப்பு வெள்ளை குறிப்பாக கண்கள் இரண்டிலும் கருப்பாக இருக்கும்,பழுப்பு வெள்ளை
மேலதிக தகவல் பின்பு தருகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நீங்கள் வேண்டுமானால் பறவைகள் நீர் குடிப்பதை பாருங்கள், ஒரு வாய் அலகால் நீர் எடுத்து மேலே அண்ணாந்து பார்த்து தண்ணீரை உள்ளே தள்ளும்.//

ஆனால் இதற்குப் புறா விதிவிலக்கு..அது உறுங்சிக்குடிக்கும்
அத்துடன் பறவையினத்தில் புறா (அதன் அளவுக்கு) அதிக நீரரருந்தும் பறவை.
கோழிகூட அதிக தாகமாக இருக்கும் போது உறிஞ்சும்..இதேவேளை அண்ணாரும்.
//பாம்பால் சர்ரென்ரு திரவங்களை உறிஞ்ச முடியாது என்று படித்துள்ளேன், தண்ணீரைக்கூட கஷ்டப்பட்டு தான் குடிக்க வேண்டும்//

நான் பார்த்த விவரணத்தில் மிகச்சாதாரண்மாக மூக்கை அமிழ்த்தாமல் ஆடு,மாடு குடிப்பது போல் தான் பாம்பு ஆற்றுத் தண்ணீரைக் குடித்தது.
என் பதிவில் அப்படி ஓர் படக்காட்சி இட்டுள்ளேன்.

ஆனால் பாம்பு பால் குடிக்க இயற்கையில் சந்தர்ப்பம் இல்லை.
மிருகங்களின் மடியில் உள்ள பாலை
பாம்பு எப்படிக் குடிப்பது, ஆனால் மனிதன் பல விதமான ஆய்வற்ற பாம்புக் கதைகளில் பால்குடிப்பதும் ஒன்று.
சிலவேளை வளர்ப்புப் பாம்பு சிலசமயம் குடிக்கலாம்.என் வீட்டு வளர்ப்புக் கிளி, மீன் குழம்புடன் சோறுண்பது போல்(40 வருடத்துக்கு முன் ஈழத்தில்) காரணம் அதைத் தாய்
உணவூட்டும் வயதில் பிடித்து, நான் சாப்பிடுவதெல்லாம் ஊட்டுவேன்.அதற்கு விருப்பமோ இல்லையோ ஊட்டி விடுவேன்.பின் அதற்கு மீன் குழம்பில்லாமல் சோறு இறங்காது.

இதற்காக கிளி மீன்குழம்புடன் சோறு சாப்பிடுவதைப் பொது விதியாக்க முடியாது.
ஆனால் பழக்கினால் பாம்பு பியரையும் குடிக்க வைக்கலாம் போல் உள்ளது.

//மனிதனுக்கே பசுவின் பால் இயல்பாக செரிக்காது//

ஆனால் உலக மனித நாகரீகமே மிருகங்களின் பாலுடனே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது.
மங்கோலியாவில் கறந்தபாலை பச்சையாக அதே சூட்டுடன் குடிப்பார்கள்.
அரேபியர் ஒட்டகப்பாலையும் அப்படியே உடன் குடிப்பார்கள்.
மத்திய ஆபிரிக்காவில் ஓர் இனம் ,உடன்கறந்த பால் அத்துடன் மாட்டுஇரத்தம் கலந்து காலை உணவாக உண்பார்கள்.

வவ்வால் said...

யோகன்,
நன்றி,

சில விதி விலக்குகள் எல்லாவற்றிலும் உண்டு, அப்படித்தான் புறாவும் நீர் அருந்தும் போல, அன்னப்பறவை என்பது கற்பனைப்பறவை என்பதால் அதே போல வேறு பறவை இருக்கா என்று அய்யம் இருந்தது, புறாவாலும் உரிஞ்சி குடிக்க முடியும் என்பது நல்ல தகவல்.

உங்கள் பதிவில் பாம்பு நீர் உறிஞ்சுகிறது தான். நான் இதுவறை பாம்பு நீரோ, பாலோ குடித்து பார்த்தது இல்லை.

அந்த கோலாக்கரடி என்பது துருவக்கரடி அல்ல தான். சரியாகப்பார்க்காமல் சொல்லிவிட்டேன். ஆனால் மீண்டும் பார்த்த போது அது கரடியே அல்ல என்று போட்டு இருக்கு!

அது ஒரு கங்காரு போன்ற ஒரு மார்சுபியல்(marsupial) என்று போட்டு இருக்கு.யூகலிப்டஸ் இலையை உண்டு அதில் இருந்தே நீர் பெற்றுக்கொள்ளும் என்றுள்ளது.

இந்த சுட்டியில் பாருங்கள்:

http://www.giftlog.com/pictures/koala_fact.htm

மனிதன் பால் கொடுக்கும் விலங்குகளை வளர்க கற்றுக்கொண்ட பின்னர் ,பால் அருந்துவது அனைத்து வகையான மனித கலாச்சாரத்திலும் கலந்து விட்டது. சீனர்கள் மிக அரிதாகவே பால் அருந்துவார்களாம்.

பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையை தவிர்க்க சோயப்பால் எல்லாம் கண்டுப்பிடித்தாகிவிட்டது.

cheena (சீனா) said...

எத்தனை பின்னூட்டங்கள். அத்தனையும் பாம்பு கரடி பறவைகள் விலங்கினங்கள் பற்றியவை. விவாதம் சூடாக இருந்தது. பலப் பல தகவல்கள். முடிவு என்ன ?? படிப்பவர் விருப்பமா ??

வவ்வால் said...

சீனா,
நன்றி,

சில விஷயங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக சொல்வதில்லை, அதை எல்லாம் உதாரணங்களை கொடுத்து எப்படி என்று படிப்பவர்கள் முடிவுக்கே விட்டு விடுவது தான் சரி.

பாம்பு பால்குடிப்பதில்லை. அது பால் குடிப்பதை பார்த்தவரும் இல்லை. ஆனால் தண்ணீர் குடிக்கிறது, எனவே ஏன் பால் குடிக்காது என்று ஒன்றில் இருந்து இன்னொன்றை நிறுவ முயலும் போது, தர்க்க ரீதியாகிவிடுகிறது அறிவியல்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
கோலாவை கங்காருவகையிலேதான் சேர்க்கிறார்கள்; காரணம் அது குட்டியை பையில் தான் கங்காருபோல் வளர்க்கிறது; அத்துடன் கோலா என்றால் பழம் குடியினர் மொழியில் "தண்ணீர் தேவையில்லாதது" என்பது தானாம் கருத்து.
புறாவை அவதானிக்கவும்.