Tuesday, October 16, 2007

குண்டு துளைக்காத கண்ணாடி!

சாதாரணக்கண்ணாடி நம் வீடு முதல் அலுவலகம் வரை எங்கு பார்த்தாலும் காணக்கிடைக்கிறது. கண்ணாடியை கவனமாக கையாளவும் என்றே சொல்வார்கள் காரணம் அது எளிதில் உடைந்து விடும். ஆனால் சில கண்ணாடி துப்பாக்கியால் சுட்டால் கூட தாங்கும் வலிமை மிக்கதாகவும் இருக்கிறதே எப்படி, அதே கண்ணாடியா அல்லது வேறா?

குண்டுதுளைக்காத கண்ணாடி எதனால் ஆனது?

முதலில் கண்ணாடி என்றால் என்னவென்று பார்ப்போம்.
கண்ணாடி என்பது வேதியல் ரீதியாகப்பார்த்தால் வேறொன்றும் இல்லை "மணல்" தான். சிலிக்காவால் ஆனது தான் மணல். இதனை அதிக வெப்பத்தில் சூடுப்படுத்தி உருகவைத்து குளிரவைத்தால் கிடைப்பது தான் கண்ணாடி.சுத்தமான சிலிக்காவில் இருந்து கண்ணாடி தயாரிக்கலாம் என்றாலும், எளிதாக தயாரிக்க சிலிக்காவுடன், சுண்ணாம்பு, சோடீயம் கார்பனேட் எல்லாம் கலந்து சூடுப்படுத்தி, உருக்கி பின்னர் குளிர வைப்பார்கள்! கண்ணாடி என்பது திடப்பொருளோ, திரவப்பொருளோ அல்ல அது ஒரு உறைந்த திரவம்!(frozen liquid)

இப்படி தயாரிக்கப்படும் கண்ணாடி ஒளி ஊடுருவும் வகையிலும், எளிதில் உடையும் தன்மையுடனும் இருக்கும்.

மேலும் கடினப்படுத்த கண்ணாடி தயாரிக்கும் போது வேகமாக குளிர வைப்பார்கள் , இதற்கு "குயிஞ்சிங்க்"(quenching) என்று பெயர்.

குண்டு துளைக்காதக்கண்ணாடி:

துப்பாக்கி குண்டினை தாங்கும் வலிமைக்கொண்ட கண்ணாடி ஒரேக்கண்ணாடிக்கிடையாது, பல மெல்லிய கடினமாக்கப்பட்ட கண்ணாடி ஏடுகளை ஒன்றன் மீது ஒன்றாக படியவைத்து தயாரிக்கப்படுவது. ஒவ்வொருக்கண்ணாடிப்படிமத்தின் இடையிலும் பாலிக்கார்பனேட் என்ற பிளாஸ்டிக் படிமம் வைக்கப்படும்.எனவே குண்டு துளைக்காத கண்ணாடியில் ஒரு ஏடு கண்ணாடி, அடுத்த ஏடு பாலிகார்பனேட் என அடுத்தடுத்து இருக்கும்.

பாலிக்கார்பனேட் என்பது ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் ஆகும் இதனை பல இடங்களிலும் பார்த்து இருப்போம், சுத்திக்கரிக்கப்பட்ட குடி நீர் கேன்கள் செய்யப்பயன்படுவதும் பாலிக்கார்பனேட் தான்.

பாலிக்கார்பனேட்டின் ரசாயான மூலங்கள்:

பிஸ்பினால் -A (bisphenol-A), சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றை வினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள்.

மற்றொரு வகை பாலிக்கார்பனேட் பாலி மெத்தில் மெத்தாகிரைலேட் (poly methyl-methacrylate)ஆகும்.



இவ்வாறு தயாரிக்கப்பட்ட கண்ணாடி அதன் தடிமனுக்கு ஏற்ப குண்டு துளைக்காத தன்மையுடன் இருக்கும். சாதாரண கைத்துப்பாக்கி முதல் ஏ.கே-47 வரைக்கும் துப்பாக்கியின் சக்திக்கு ஏற்ப கண்ணாடியின் தடிமன் வேறுபடும்.அதிகப்பட்சமாக 50 மி.மீ தடிமன் கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது.

குண்டு துளைக்காத கண்ணாடி செயல்படும் விதம்:

துப்பாக்கி குண்டு மோதியதும் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள ஏடு மட்டும் விரிசல் விடும் இதன் மூலம் துப்பாக்கி குண்டின் விசை பல திசைகளிலும் பரவி குறையும், அதற்கு அடுத்துள்ள பாலிக்கார்பனேட் ஏடு குண்டினால் ஏற்படும் விசையின் அதிர்வை மட்டுப்படுத்தும், இதனால் வேகம் குறையும் குண்டு துளைக்கும் சக்தி இழக்கும்.

a bullet proof glass after fired

கண்ணாடி என்பது கடினமான ஒரு பொருள், இடையில் உள்ள பாலிக்கார்பனேட் பிளாஸ்டிக் , இரப்பர் போன்று அதிர்வுகளை உள்ளிழுத்துக்கொள்ளும்.

வழக்கமான குண்டு துளைக்காத கண்ணாடி மிக கனமாக இருக்கும் இதனால் இக்கண்ணாடிப்பொறுத்தப்பட்ட வாகனத்தின் செயல் திறன்ப்பாதிக்கப்படும் , இதனைக்குறைக்க தற்சமயம் நவீன வகையிலான லேசான எடைக்கொண்ட ஒருக்கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது. இக்கண்ணடியில் சிலிக்காவுடன் அலுமினியம் ஆக்சைடு, நைட்ரேட் ஆகியவை கலந்து இருக்கும், இதனால் அது குறைந்த எடையில் அதிக கடினமாக இருக்கும்.இக்கண்ணாடியை அலுமினியம் ஆக்சிநைட்ரைட் கண்ணாடி என்பார்கள்.

ஒரு குண்டு துளைக்காதக்காரில் , குண்டு துளைக்காத கண்ணாடி, அதன் உலோகப்பகுதியில் உள்ப்புறமாக இன்னும் தடிமனான இரும்பு தகடுகளும் பொறுத்தப்பட்டு இருக்கும், காரின் அடிப்பகுதியில் "fibre reinforced plastic" பொறுத்தி இருப்பார்கள்.

உங்களுக்கும் குண்டு துளைக்காத கார் வேண்டுமா விலை அதிகம் இல்லை , குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் ஒன்றின் விலை 18 லட்சம் தான்.கண்ணிவெடி தாக்காத கார் எனில் 70 லட்சம் ஆகும். விலையுயர்ந்த மாடல் கார் எனில் அதற்கு ஏற்ப விலை. எல்லாக்கார்களும் குண்டு துளைக்காத கார்களாக மாற்றி அமைக்கபடுவது தான். எந்தக்கார் தயாரிப்பு நிறுவனமும் சொந்தமாக தயாரிக்கவில்லை.

வேகமா எங்கே கிளம்பிட்டிங்க குண்டு துளைக்காத கார் வாங்கவா?

41 comments:

cheena (சீனா) said...

முதன்முறையாக ஒரு பயனுள்ள தகவலைத் தெரிந்து கொண்டேன். நன்றி

வடுவூர் குமார் said...

18 லட்சம் கொடுத்து அந்த மாதிரி கார் எதுக்கு?
50 ரூபாய் கொடுத்து தெலுங்கு/ தமிழ் சினிமாவில் ஹீரோ குண்டுக்காக அப்படி தலையை சாய்பாரே!! அது எப்படி என்று தெரிந்துகொண்டால் போயிற்று. :-))
கண்ணாடியில் அப்படி பெரிய மனிதர்கள் போடும் கோட்டில் எப்படி? அங்கும் பாலிகார்பனேட் தானா?

jeevagv said...

//முதன்முறையாக ஒரு பயனுள்ள தகவலைத் தெரிந்து கொண்டேன். நன்றி//
இந்த வலைப்பதிவு முழுதும் பயனுள்ள பதிவுகள் பல இருக்கிறது சீனா சார்!

கானா பிரபா said...

அருமையான பதிவு, கில்லிக்கு தொடுப்பிட்டிருக்கின்றேன்

வவ்வால் said...

சீனா,
நன்றி,
அபப்டியே கொஞ்சம் பழைய பதிவையும் ஒரு எட்டுப்பார்த்தா , உங்களுக்கு முதல் முறையாக இருக்காது?

நீங்க தான் அந்த சீனா தானா-001 ஆஹ்?

வவ்வால் said...

குமார்,
நன்றி!

தெலுங்குல மட்டுமா , நம்ம விசயக்காந்து கூட அப்படி வித்தைக்காட்டுவாரே :-))

//கண்ணாடியில் அப்படி பெரிய மனிதர்கள் போடும் கோட்டில் எப்படி? அங்கும் பாலிகார்பனேட் தானா?//

குண்டு துளைக்காத உடை கெவ்லார்(kevlar)என்ற செயற்கை இழையால் செய்யப்பட்டு இருக்கும். இது இரும்பை விட 5 மடங்கு வலிமையானது.இந்த ஆடையும் ஒரே துணியாக இல்லாமல் பல அடுக்கு துணியாக இருக்கும்.

அதிகப்படியான பாதுகாப்பிற்கு அந்த ஆடையினுள் டைட்டானியம் தகடுகள் வைப்பார்கள்.

குண்டு துளைக்காவிட்டாலும், குண்டு மோதும் விசையினால் கூட பாதிப்பு ஏற்படும், சமயத்தில் அந்த அதிர்சியில் இறக்கவும் நேரிடும், பெரிய சுத்தியால் ஓங்கி அடித்த விளைவு தான்! இதயத்திற்கு நேராக வைத்து 4 ரவுண்ட் சுட்டால், குண்டு உள்ளேப்போகலைனாலும் அந்த விசையில் எலும்பு உடைந்து , இதயம் செயல் இழந்து இறக்கவும் நேரிடும்.

என்ன தான் புல்லட் புரூப் ஆ இருந்தாலும் , சுடும் தூரம், மனிதரின் உடல் பலம் ஆகியவையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வலுவான உடை தண்ணீர் பட்டால் வலுவிழந்து விடும், எனவே மேலே நீர் எதிர்ப்பு பூச்சு வேற பூசனும்! அதனால இந்த உடைப்போட்டவன் வேர்த்தே செத்து போய்டுவான் :-))

தனியா ஒரு பதிவா போடலாம்னு இந்த மேட்டர்லாம் வைத்து இருந்தேன், நீங்கள் கேட்டுவிட்டதால் இங்கேயே சொல்லிட்டேன் :-(

வவ்வால் said...

ஜீவா,
//இந்த வலைப்பதிவு முழுதும் பயனுள்ள பதிவுகள் பல இருக்கிறது சீனா சார்!//

நன்றி!

அடிக்கடி இந்தப்பக்கம் வருவதே இல்லை , ஆனாலும் தெரிந்து வைத்து இருக்கிங்களே!

வவ்வால் said...

வாங்க கானா,
மிக்க நன்றி!
(நீங்க புகைப்படத்துல போட்டு இருக்கும் சட்டை புல்லட் புரூப் ஆ? -)))

துளசி கோபால் said...

புதுத்தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.

கார் எல்லாம் வேணாம். வடக்குப் பக்கம் இருக்கும் ஜன்னலுக்கு இந்தக் கண்ணாடி இருந்தாத் தேவலைன்னு இருக்கு.
பக்கத்துவீட்டுப்பையன்( 10 வயசு) புதுசா கோல்ஃப் விளையாடக் கத்துக்கறான். ஒரு நாள் அடிச்ச பந்து நம்ம வீட்டு ஜன்னலுக்கு மேலெ உள்ள சுவத்துலெ அடிச்சு பயங்கர சத்தம்.

பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளே ஓடுனவனைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சு:-)))

பந்து நம் வசம்:-)))))

Anonymous said...

வவ்வால் அண்ணாச்சி, உங்க பதிவுகள் எல்லாத்தையும் ஒரு புத்தகமாப்போடுங்க சீக்கிரம். கண்டிப்பா முதல் ஆளா நான் வாங்கறேன். அவ்வளவு விஷயங்கள் இருக்கு.

ரவி said...

வெரிகுட்...

ஹவ்ஸ்டப் ஒர்க்ஸ் படிச்சமாதிரி அழகா தந்திருக்கீங்க...

அப்படியே தமிழ் விக்கியிலயும் போட்டிருங்க...

இலவசக்கொத்தனார் said...

//கண்ணாடி என்பது திடப்பொருளோ, திரவப்பொருளோ அல்ல அது ஒரு உறைந்த திரவம்!(frozen liquid)
//

இது என்னங்க கதை? எனக்குத் தெரிந்து Solid, Liquid and Gas என மூன்று நிலைகள்தானே இருக்கின்றது. உறைந்த திரவம் என்றால் அது திடப் பொருள்தானே?

வவ்வால் said...

துளசி கோபால்,
நன்றி!

அவசரப்பட்டு புல்லட் புல்லட் கண்ணாடிப்போட வேண்டாம், இப்போ பந்து அடிச்ச பையன், சீக்கிரமே கோல்ப் கிளப் ஐயும் வீசுவான் அதையும் எடுத்துக்கிட்டா , ஒரு கோல்ப் செட் உங்க வசம் ஆகிடும்ல :-))

வவ்வால் said...

சின்னாம்மிணி,
நன்றி!
//வவ்வால் அண்ணாச்சி, உங்க பதிவுகள் எல்லாத்தையும் ஒரு புத்தகமாப்போடுங்க சீக்கிரம். //

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!

அப்படியே புத்தகம் போட்டாலும் உங்களை தவிர வேற யாரும் அதை சீண்டக்கூட மாட்டாங்க! :-))

வவ்வால் said...

ரவி,
நன்றி!

ஏதோ எனக்கு தெரிஞ்சத புரிஞ்சத பதிவா போட்டு வைத்துள்ளேன்.

வவ்வால் said...

இ.கொ,
நன்றி!

திரவம் , திடம் என்ன வேறு பாடு என்று பார்த்தால் ,

திரவத்தில் மூலக்கூறுகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். மேலும் படிக அமைப்பு இருக்காது.

எனவே தான் ஒளி பாயும் போது தடுக்காமல் ஊடுருவ அனுமதிக்கிறது.

உ.ம்: தண்ணீர்

திடப்பொருள்களில் மூலக்கூறுகள் அடர்த்தியா ,நெருக்கமாக இருக்கும், படிக வடிவம்(crystaline structure) இருக்கும். எனவே ஒளியினை பிரதிபளித்து விடும். ஊடுருவ முடியாது.

உ.ம்:இரும்பு

அதே சமயம் நீர் திரவம், அது உறைந்து ஐஸ் ஆகும் போது அதற்கும் படிக வடிவம் கிடைக்கும், அதனை திடப்பொருள் எனலாம், அப்போது கூட அதில் மூலக்கூறுகளின் அடர்த்தி திடப்பொருள் அளவுக்கு இருக்காது எனவே ஐஸ்க்கட்டியின் வழியே ஒளிக்கசியும்(opaque)

ஆனால் கண்ணாடி திட வடிவில் இருந்தாலும் மூலக்கூறுகள் அடர்த்தி குறைவாகவும், படிக வடிவில் இல்லாமலும் இருக்கும், அதாவது திரவத்தில் இருப்பது போல மூலக்கூறுகள் இருக்கும். அதனால் தான் கண்ணாடி ஒளி ஊடுருவும் வண்ணம் இருக்கிறது.எனவே கண்ணாடி ஒரு உறைந்த திரவம் என்ற வகையில் வைக்கப்படுகிறது.

பாரதி தம்பி said...

புதுசா, பயனுள்ளதா இருக்கு. thanks.

வவ்வால் said...

ஆழியூரான்,
நன்றி!
//புதுசா, பயனுள்ளதா இருக்கு. thanks.//

எல்லாம் புதுசுக்கண்ணா புதுசு தான் :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
இது பற்றி பாக்கியராஜா, பாக்கியாவில் பல வருடங்களுக்கு முன் விளக்கினார்; உங்கள் விளக்கம் பிரமாதம்.
விலை அதிகம் இல்லை ஆனால் இருக்கப் போகும் சொற்பகாலத்துக்கு இதெல்லாம் தேவைப்படாது.
அதனால் வாங்கும் உத்தேசம் இல்லை.

உண்மைத்தமிழன் said...

வவ்வால்ஜி.. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பொது அறிவை வளர்ப்பது போல் இருக்கிறது.. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..

//At 7:44 AM, துளசி கோபால் saidஸ
பக்கத்துவீட்டுப்பையன்( 10 வயசு) புதுசா கோல்ஃப் விளையாடக் கத்துக்கறான். ஒரு நாள் அடிச்ச பந்து நம்ம வீட்டு ஜன்னலுக்கு மேலெ உள்ள சுவத்துலெ அடிச்சு பயங்கர சத்தம். பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளே ஓடுனவனைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சு:-))) பந்து நம் வசம்:-)))))//

டீச்சர் பார்த்து.. பய, பத்து நாள் கோபத்தை வைச்சு நேருக்கு நேரா அடிச்சிடப் போறான்...

வவ்வால் said...

யோகன் நன்றி!

நீங்கள் அயல்நாட்டில் இருந்தாலும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் படிப்பீர்கள் போல் இருக்கிறதே, ஆச்சரியமான ஒன்று! பாக்கியா போன்ற பத்திரிக்கைகளை தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டே, நானே அவ்வளவாக படித்தது இல்லை.(அது என்ன நானே என்றால் நான் கையில் கிடைக்கும் எதையும் படிப்பேன்)

நீங்கள் தீவிரமான படிப்பாளி போல தெரிகிறது யோகன்!

வவ்வால் said...

உண்மை தமிழர்,
நன்றி,
சும்மா மொக்கை அடிக்காமல் ஏதோ நான் படித்ததை பகிர்கிறேன்.

அது சரி எதுக்கு இப்போ டீச்சர்ரை மிரட்டுறிங்க , பாவம் பயந்துடப்போறாங்க! :-))

Anonymous said...

>>திரவம் , திடம் என்ன வேறு பாடு என்று பார்த்தால் ,

திரவத்தில் மூலக்கூறுகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். மேலும் படிக அமைப்பு இருக்காது.

எனவே தான் ஒளி பாயும் போது தடுக்காமல் ஊடுருவ அனுமதிக்கிறது.

உ.ம்: தண்ணீர்

திடப்பொருள்களில் மூலக்கூறுகள் அடர்த்தியா ,நெருக்கமாக இருக்கும், படிக வடிவம்(crystaline structure) இருக்கும். எனவே ஒளியினை பிரதிபளித்து விடும். ஊடுருவ முடியாது.

உ.ம்:இரும்பு

-----------------------------

நல்ல பதிப்பு. ஒரு விஷயத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒளி ஊடுருவுவதற்கும், பொருளின் அடர்த்திக்கும் சம்பந்தம் இல்லை. உதாரணமாக, மரக்கட்டை அல்லது பிளாஸ்டிக் தண்ணீரை விட அடர்த்தி குறைந்தது. ஆனால், மரக்கட்டையோ , (பெரும்பாலான) பிளாஸ்டிக்குகளோ ஒளியை ஊடுருவ விடுவதில்லை. ஒரு பொருள் ஒளியை விடுமா என்பதற்கு 'காம்ப்ளக்ஸ் ரிஃப்ராக்டிவ் இண்டெக்ஸ்' என்ற எண்ணைப் பார்க்க வேண்டும். (இதன் சரியான தமிழ் பதம் தெரியவில்லை). அதில் 'real' மற்றும் 'imaginary' பகுதிகள் இருக்கும். 'Imaginary' பகுதி பூஜ்யமாக இருந்தால், ஒளி ஊடுருவும். இல்லை என்றால் ஊடுருவாது. (எப்போது 'imaginary' பகுதி பூஜ்யமாகும் என்றால், பெரிதாக எழுத வேண்டும். ஏற்கனவே தட்டு தடுமாறி, தமிழில் 'type' செய்ய கை வலிக்கிறது :-_))

வவ்வால் said...

அனானி,
அருமையான தகவல்களை அனானியா வந்து சொல்லி இருக்கிங்களே, இயற்பியல் படித்தவர் போல இருக்கிறது.

ரெப்ராக்டிவ் இன்டெக்ஸ் பற்றி லேசாக நினைவு இருக்கிறது, பிரதிபளிப்பிற்கானது, நிறமாலை, ஒளி அலை நீளம் என்று தொடர்பில்லாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் அதற்கும் ஊடுவலுக்கும் தொடர்பு படுத்த வேண்டும் என்றே தோன்றவில்லை.

நல்ல விளக்கம்.ஆனால் ஒரு சந்தேகம்,
//'காம்ப்ளக்ஸ் ரிஃப்ராக்டிவ் இண்டெக்ஸ்' என்ற எண்ணைப் பார்க்க வேண்டும். (இதன் சரியான தமிழ் பதம் தெரியவில்லை). அதில் 'real' மற்றும் 'imaginary' பகுதிகள் இருக்கும். 'Imaginary' பகுதி பூஜ்யமாக இருந்தால், ஒளி ஊடுருவும். இல்லை என்றால் ஊடுருவாது.//

இந்த ரியல், இமேஜினரி பகுதி வரக்காரணம் என்ன? சொன்னால் பெரிதாகப்போகும் என்று சொல்லாமல் சுருக்கமாக சொல்ல முயற்சி செய்யுங்களேன்.

மரக்கட்டை, மற்றும், பிளாஸ்டிக் அடர்தி குறைவாக இருந்தாலும், அதில் உள்ள அணுக்கள் ஒரு படிக வடிவத்தில் இருக்கும். மேலும் ஒவ்வொரு மூலக்கூறும் உறுதியாக பிணைக்கப்பட்டு இருக்கும், இதுவே அந்த ரியல் பகுதிகள் அதிகம் ஆக காரணம் என நினைக்கிறேன்.

தண்ணீர் விட ஐஸ்கட்டியின் அடர்த்திக்கூட குறைவு தான் ,நீரில் மிதக்கும், மேலும் ரெப்ராக்டிவ் இன்டெக்ஸ் தண்ணீரை விட குறைவு ஆனாலும் குறைவான ஒளியைத்தான் ஊடுருவ விடுகிறது, ஏன்?

தண்ணீர் :1.33
ஐஸ் கட்டி:1.31

ரெப்ராக்டிவ் இன்டெக்ஸ் காரணம் என்றாலும் படிக வடிவ கட்டமைப்பு அணுக்களின் இடம், பிணைப்பு , சங்கிலி தொடர் அமைப்பும் ஒளி ஊடுருவக்காரணமாக இருக்க வேண்டும்.

Anonymous said...

தெரிந்த வரை:
'real' மற்றும் 'imaginary' என்று பயன்படுத்தக் காரணம், அப்படி பயன்படுத்தினால், பல கணக்குகள் சுலபமாகின்றன. மற்ற படி, 'real' பகுதி நாம் பள்ளியில் படித்த ஒளி விலகல் எண் (refractive index). 'Imaginary' பகுதி, ஆங்கிலத்தில் 'absorbance' அல்லது 'extinction coeffient' எனப்படும். ஒளி ஒரு பொருளில் படும்பொழுது கொஞ்சம் திரும்பி (பிரதி பலித்து) வரலாம். கொஞ்சம் ஊடுருவி செல்லலாம். கொஞ்சம் பொருளால் கிரகிக்கப்படலாம் (absorb). ஊடுருவி செல்லும் அளவையும், கிரகிக்கபடும் அளவையும் ஒரே கணக்கில் கண்டுபிடிக்க 'complex refractive index' பயன்படுகிறது.

'real' பகுதி அதிகமானால், ஒளி விலகும் கோணம் அதிகரிக்கும். ஊடுருவும் அளவு மாறாது.
'imaginary' பகுதி அதிகம் ஆனால், ஒளி கிரகிக்கப்படும். இது மூலக்கூறுகள் பிணைந்து இருக்கும் விதத்தை (structure of the material, organization of molecules) பொறுத்தது. வெறும் பிணைப்பு சக்தியை (strength of bond)மட்டும் பொறுத்தது அல்ல. அதனால்தான் திடப்பொருள் ஒளியை தடுக்கும் / திரவம் ஒளியைத் தடுக்காது என்று சொல்ல முடியாது.

தண்ணீர் / ஐஸ் விஷயம் தெரியாது. Guess பண்ணி சொன்னால், சாதாரண மாக, தண்ணீரில் காற்று கரைந்து இருக்கும். அப்போது ஒளி ஊடுருவி செல்லும். ஐஸ் ஆக்கும் பொழுது காற்று சிறு குமிழிகளாக, ஐஸ்க்கு நடுவில் இருக்கும். (இது தண்ணீரில் பல சிறிய எண்ணெய் குமிழிகள் இருப்பது போல). அதனால், ஒளி பல முறை பிரதிபலித்து திரும்ப வந்து விடுகிறது அல்லது scatter ஆகிறது. மிகத்தூய்மையான தண்ணீரைக் குளிர வைத்து ஐஸ் செய்தால் ஒளியை ஊடுருவ விடும் என நினைக்கிறேன். நிச்சயமாக சொல்ல முடியவில்லை.

வவ்வால் said...

அனானி ,
நன்றி!

சுத்தமான தண்ணீர் கூட வேண்டாம் தண்ணீரை கொதிக்க வைத்து விட்டால் போதும், காற்று எல்லாம் வெளியேறிவிடும்.

எஇயல்,இமாஜினரின என்ன , எதால் ஆனது தான் கேள்வி, இப்போ தண்ணீரில் அணு எல்லா இடத்திலும் இருக்காது, அது இல்லாத இடத்திலும் இருக்கும் வெற்றிடம் தான் அப்படி இருக்க வேண்டும், ஆனால் எல்லாம் ஒன்றாக இணைந்தே இருக்கிறது தானே. அப்படி அணுக்கள், மூலக்கூறுகள் அடுக்கப்பட்டு இருக்கும் முறை தான் ஒளி விலக , ஊடுருவ காரணம்.

மாயன் said...

நல்ல பதிவு...கலக்குங்க... வாழ்த்துக்கள்

Sundar Padmanaban said...

எதிரே அசுரவேகத்தில் வரும் அரைப்பாடி லாரியில் மாட்டிக்கொள்ளாமல் ஆட்டோமாட்டிக்காக அப்பீட் ஆகிக்கொள்ளும் (எத்தனை அ,ஆ!) "அரைப்பாடி ஃப்ரூப் கார்" என்று யாராவது கண்டுபிடித்திருக்கிறார்களா? :-)

பயனுள்ள பதிவு. நன்றி வெளவால்!

தென்றல் said...

பயனுள்ள பதிவு..!

//அப்படியே புத்தகம் போட்டாலும் உங்களை தவிர வேற யாரும் அதை சீண்டக்கூட மாட்டாங்க! :-))
//
வவ்வால்.. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... ;)

நான் படித்தவரை(!?) தமிழிலில் "சேது சமுத்திர திட்டம்:எதிர்ப்புகளும்,காரணங்களும்... " இவ்வளவு தெளிவாக சொன்னதில்லை.. அருமையான விவாதங்களும், விளக்கமும்...
உங்களின் உழைப்பு தெரிகிறது.

நன்றிகளும், வாழ்த்துக்களும்!!

[Google reader மூலமாக உங்கள் பதிவுகளை படிப்பதுண்டு!]

கோபி said...

http://உதாரணம்.பரிட்சை/முதற் பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

கோபி said...

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

வவ்வால் said...

மாயன்,
நன்றி! கொஞ்ச நாளாக உங்களை காணோமே?
------------------

சுந்தர்,

அரைப்படி வண்டி,மீன்பாடி வண்டில மாட்டிக்காம தப்பிக்கணும்னா பாடி கார்ட் முனிஸ்வரன் கிட்டே பெட்டிஷன் போட்டாத்தான் உண்டு! :-))

நைட் 10க்கு மேலே புறநகர்ல(மெயின்லவும் தான்) மண்ணு லாரிங்க ராஜ்யம் தான் , எவனையும் எதுவும் கேட்க முடியாது எல்லா வண்டியும் மினிமம் ஒரு எம்.எல்.ஏக்கு சொந்தமாம்! என் கிட்டே மட்டும் ஒரு கன் கிடைச்சா ஆன் தி ஸ்பாட் தீர்ப்பெழுதுவேன்!
-------------------

தென்றல்,
நன்றி!

கூகிள் ரீடர் இருக்கும்வரைக்கும் என்பதிவைப்படிங்க! :-))
மிக்க நன்றி!

//வவ்வால்.. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... ;)//

அப்போ நீங்களும் படிப்பேன்னு சொல்றிங்களா? ஆஹ்ஹா இப்படியே உசுப்பேத்தி ...உசுப்பேத்தி நம்மை ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க போல இருக்கே, சூதனமா இருந்துக்கோடா வவ்வால்! :-))
--------------------------------

கோபி,
நன்றி,
ஆமாம் என்ன சொல்லவறிங்கனு இங்கவே சொல்றது, எதுவுமே சொல்லாமா, அங்கே வந்து பார்டானு சொன்னா,எப்படி?

கோபி said...

:-)

Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

Sundar Padmanaban said...

//எல்லா வண்டியும் மினிமம் ஒரு எம்.எல்.ஏக்கு சொந்தமாம்//

அதாவது எல்லா எம்மெல்லேக்களுக்கும் மினிமம் ஒரு வண்டி சொந்தமாம்-னு சொல்ல வந்தீங்க - சரியா?

//என் கிட்டே மட்டும் ஒரு கன் கிடைச்சா ஆன் தி ஸ்பாட் தீர்ப்பெழுதுவேன//

அது சரி. போற வழில நெறய ஆணிங்களைப் போட்டு வச்சு அவங்களையெல்லாம் ஆணி புடுங்க வச்சாப் போதாது? கன்-லாம் ரொம்ப ஜாஸ்தி.

டூ வீலர்ல போம்போது கண்ல மண்ணள்ளிப் போட்ட எத்தனையோ மணல் லாரிங்க நினைவுக்கு வருது :-(

சகிக்கவே முடியாத அளவுக்கு நாமள்ளாம் சகிப்புத்தன்மையோட உலாவிக்கிட்டு இருக்கோம்னு சொல்லுங்க.

ILA (a) இளா said...

நல்ல தகவல்(வழக்கம் போலவே)

வவ்வால் said...

சுந்தர்,
அபப்டி எம்.எல்.ஏனும் சொல்லலாம் ஆனா மந்திரிங்க , அவங்க பினாமிங்கனு எல்லாம் மண்ணு லாரி வச்சு இருக்காங்களே அதான் அப்படி சொன்னென்.

//அது சரி. போற வழில நெறய ஆணிங்களைப் போட்டு வச்சு அவங்களையெல்லாம் ஆணி புடுங்க வச்சாப் போதாது? //

அந்த ரோட்ல நம்மை போல பொது ஜனமும் 2 சக்கர வாகனத்துல போவுதே , ஆணிய போட்டு எல்லாருக்கும் ஆப்பு வைக்கலாமா?

//சகிக்கவே முடியாத அளவுக்கு நாமள்ளாம் சகிப்புத்தன்மையோட உலாவிக்கிட்டு இருக்கோம்னு சொல்லுங்க.//

இதாங்க உண்மை, எல்லாத்தையும் சகிச்சு போரோம், வேற வழியே தெரியலை.

எதையுமே கேட்க முடியாது கேட்டால், கும்பலா வரும் அவர்களுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது!

சென்னையில் ஒரு தனி மனிதனை 4-5பேர் போட்டு அடிச்சாக்கூட யாருமே என்னனு கேட்க மாட்டாங்க, அதுவும் இரவு நேரத்தில் என்றால் இன்னும் மோசம், நாம தான் பத்திரமா போய் வந்துக்கணும்.இதான் யதார்த்தம்.

அப்படி ஒரு சம்பவத்தை என்னனு கேட்கப்போய் என்னை கைப்புள்ள வடிவேல் போல ஆக்கிட்டாங்க! சட்டை கிழியும் அளவுக்கு அடி மட்டும்தான் வாங்கலை,ஆனா கார்னர் பண்ணிட்டாங்க! வெளியில் சொன்னா வெட்கக்கேடு என்று சொல்லிக்கொள்வது இல்லை அதை எல்லாம்!

இங்கே நான் பேசுவது வேறு, இதைப்பேசி வேறு எங்கோ போக வேணாம்!

ராஜ நடராஜன் said...

கோவை பீளமேட்டுல ஒரு தடவை குண்டு சோடா பாட்டில்களை சுத்துறதப் பார்த்தேனுங்க!சுத்தறதுன்னா சென்னைப் பக்கம் மாதிரி இல்லீங்கோ!சூட்டுல இருந்து திரவமாகவும் இல்லாம திடமாகவும் இல்லாம வளைவு நெளிவுகளோட தண்ணிக்குள்ள போட்டு ஒரே முக்கு.அந்த அழகப் பார்த்துகிட்டே இந்த ரசாயன மாற்றம் பற்றியெல்லாம் தெரிஞ்சுக்குற ஆர்வம் இல்லாமப் போய்ருச்சு.இப்ப பாருங்க வாத்தியார்கள் சொல்லிக் கொடுக்காததெல்லாம் மண்டையில நல்லாவே சுருக்குன்னு படுது.நன்றிகள் பல.

G.Ragavan said...

ஆகக்கூடி கண்ணாடின்னு சொன்னாலும் அது முழுக்கக் கண்ணாடி இல்ல. ஆனா வெலை மட்டும் எக்கச்சக்கம். உயிரைக் காப்பாத்துதே. அதான் இந்த வெலை. உயிருக்கு வெலை ஏது?

வவ்வால் said...

இளா,
நன்றி! வழக்கம் போல படித்தற்கு!
---------------------------
நட்டு,
நன்றி!
அந்த காலத்திலேயெ நேராக எல்லாம் பார்த்து இருக்கிங்க, பெரிய ஆள்தான்.
வாத்தியார் சொல்லித்தராததை வாழ்க்கை சொல்லி தரும் சொல்வாங்க! :-))
----------------------------
இராகவன்,
நன்றி!

ஆமாம் பின்ன வி.ஐ.பி னா சும்மாவா, எவ்வளவு செலவு ஆனாலும் அவங்க உசுரக்காப்பாத்திக்க எத்தனை உசுர வேணா காவுக்கொடுப்பாங்களே!

சுதந்திர இந்தியாவில் சுதந்திர தின உரையை கூட குண்டு துளைக்காத கண்ணாடிக்கூண்டில் இருந்து தானே பேசுவாங்க!

குமரன் (Kumaran) said...

இங்கே எங்க அலுவலகத்துல எல்லாம் கட்டிடங்களுக்கு, சாளரங்களுக்கு கண்ணாடி போட்டிருக்காங்களே. அது ரொம்ப தடிமனா இருக்கு. அதுவும் அவ்வளவு எளிதா உடைஞ்சுடாதுன்னு சொல்றாங்க. கனடா டொரொன்டோவுல (Toronto ) இருக்குற சி.என்.என். டவர்ல மேல் மாடியில கண்ணாடி தரை இருக்கு. அந்தக் கண்ணாடி தரையில ஏறி நின்னு குதிச்சாலும் ஒன்னும் ஆகாம இருக்கு. இதெல்லாம் கூட நீங்க சொல்ற மாதிரி கடினமாக்கப்பட்ட கண்ணாடிகள் தானா வௌவால்?

வவ்வால் said...

குமரன்,
நன்றி,

பல வகையிலும் கடினமான(மிக கடினமான கண்ணாடி நொறுங்கும், ஆனாலும் கடினத்தன்மையுடன் கொஞ்சம் அதிர்வு தாங்கும் தன்மை, எலாஸ்டிக் தன்மை சேர்த்தால் தான் வலிமையான கண்ணாடி) வலிமையான கண்ணாடிகள் செய்கிறார்கள்.

கண்ணாடியின் பயன், விலை, எந்த இடத்தில் பயன்படுத்தபோகிறார்கள் என்பது பொறுத்து தான் வலிமையான கண்ணாடியை தேர்வு செய்வார்கள்.

சாதாரணமாக உயரமானக்கட்டிடங்களில் "reinforced, tempered, laminated" கண்ணாடிப்பயன்படுத்துவார்கள்.

கண்ணாடியின் தடிமன், அதில் உள்ள கண்ணாடி லேயர்களின் எண்ணிக்கை, மேலும் சில ரசயான பூச்சுகள்(டைட்டானியம் டை ஆக்சைடு) கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தும் ரசாயனம் பொறுத்து வலைமை மாறும்.

சோடியம்ஹைட்ராக்சைடுக்கு பதிலாக பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தினால் கண்ணாடியின் வலிமை அதிகம் ஆகும்.

உயரமானக்கட்டிடங்களில் உள்ளக்கண்ணாடிகள் வலிமையாகவும், நெகிழ்வு தன்மையோடு, வெப்பம் , அல்ட்ராவயலட் காப்புத்தன்மையுடன் இருக்கும்.குண்டுத்துளைக்காதக்கண்ணாடிகள் மூன்றுவகையாக இருக்கிறது, டைப்1,2,3 என , உயரமானக்கட்டிடங்களில் உள்ளக்கண்ணாடி எல்லாம் கிட்டத்தட்ட டைப்1 வகையில் இருக்கலாம்.

அமெரிக்க சூப்பர் மார்கெட்களில் உள்ளக்கண்ணாடிக்கதவுகள் குண்டு துளைக்காத கண்ணாடிகள் தான் என்று போட்டு இருக்கிறார்கள்.