Monday, February 11, 2008
மோஹன் தாசுக்கு ஆப்படிக்கும் இந்திய கிரிக்கெட் அணி!
மோஹன் தாசுக்கு ஆஸ்திரேலிய அணி தான் கனவு அணி, ஆனால் இனிமே அது பழங்கனவு , பகல் கனவு! இந்திய பசங்க சும்மா பட்டைய கிளப்புறாங்க , சிங்கத்தை அதன் குகையில் போய் பிடறியை பிடித்து உலுக்குவதுனா அது இதான், நேத்து என்னமா ஆடுனாங்க பசங்க. அட டா சொல்ல வார்த்தைகள் இல்லை, ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
அதுவும் ஒரு புதுப்பையன் இஷாந்த் சர்மாவாம் பேரு , ஆளு என்னமோ ஊதினா பறந்துப்போறாப்போல ஈர்க்குச்சி போல இருந்தாலும் , சும்மா சொல்லக்கூடாது குத்தி ஏத்துறான் பந்தை ஆஸி பேட்ஸ்மென் விலாவுல, பந்து எல்லாம் சும்மா இறக்கை இல்லாமலே பறக்குது, ஆஸிப்பேட்ஸ்மேன் எல்லாம் பரத நாட்டியம் , குச்சிப்புடினு இஷாந்த் போடும் தாளத்துக்கு ஆடுறாங்க.
ஒன்றிரண்டு நோ பால் போட்டாலும், காரியக்காரன், விக்கெட்டை பக்கெட்ல அள்ளுறான். போதாததுக்கு நம்ம கதக்களி சிரிசாந்து வேற சந்துல சிந்து பாடி ஆப்படிக்கிறான். சமீப காலத்துல 200 ரன்னுக்கு கீழ ஆஸிய சுருட்டின அணி இந்தியா தான். லிட்டில் மாஸ்டர் சச்சின் பார்ம் என்பது நிரந்தரமல்ல கிளாஸ் தான்னு ஒவ்வொரு போட்டியிலும் காட்டுறார் அதுவும் ஒரே ஓவர்ல பிரட் லீயை புரட்டி எடுத்தார் , 3 ஃபோர் அடிச்சு.ரோஹிட் சர்மா அப்படி இப்படினு ஆடினாலும் தண்ணிக்காட்டிட்டான். மொத்தத்துல இளமையும், அனுபவமும் கலந்த ஒரு கலவையா இருக்கு நம்ம அணி. அப்புறம் என்ன ஜெயம் தானே!
ஆஸில எல்லாம் கிழட்டு பயலுகளாகிட்டாங்க ஒரு சிலரை தவிர எல்லாருக்கும் வயசு 30க்கு மேல , ஏதோ இருக்கிற கொஞ்ச நஞ்ச சக்திய லேகியம் சாப்பிட்டு தக்க வச்சுக்கிட்டு ஆடுறாப்போல இருக்கு.
ரிக்கி பாண்டிங்க் வாய்ப்பேசுர அளவுக்கு பேட் பேச மாட்டேங்குது. டெஸ்ட்ல சொதப்பினது இன்னும் தொடருது, இதுவே இந்தியாவா இருந்தா ஓய்வு பெறனும்னு நாளு பேர் வக்கணையாக எழுதுவாங்க, அங்கேலாம் யாரும் கண்டுக்கலை. டீம் ஆடுறத வச்சு இவர் தப்பிச்சுட்டு இருக்கார். அது எத்தனை நாளைக்கோ.
கில்லி ஓய்வு பெறப்போறார், ஹைடனுக்கு இடுப்பு வலி மூட்டு வலி, வருங்காலத்தில் வங்க தேசம் கூட ஆஸியை புரட்டி எடுக்கும்னு நினைக்கிறேன். அப்போவும் go ..aussie ..go னு நம்ம மோஹன் சொல்லுவராக்கும் :-))
chak de india...
Labels:
கிரிக்கெட்,
மோஹன் தாஸ் கனவு
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
:))))))))))))))
நான் கூடிய விரைவில் பாண்டிங்கின் ஓய்வு பெறும் அறிப்பை எதிர்ப்பார்க்கிறேன்.
ஆசி. ரொம்பவும், கடுமையான முடிவுகளை எடுக்க தயங்குவதில்லை. அடுத்த உலகக்கோப்பைக்கு பாண்டிங்க் தலைமை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டால், வெகு சீக்கிரம் கில்லி அனுப்பபட்டதுப் போல்.(ஆமாம், அப்படித் தான் சொல்லுகிறார்கள்) அனுப்பப்படுவார்.
மோஹன்,
என்ன வேகமா வந்து சிரிச்சுட்டு போய்டிங்க, இது இடுக்கண் வருங்கால் நகுகவா :-))
என்ன தான் சிரிச்சாலும் இனிமேல் ஆஸி டைம் ஓவர், இந்திய டைம் ஆரம்பம்!
-----------------------
tbcd,
நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ஆனாலும் பாண்டிங்க் அவ்வளவு சீக்கிரம் போய்ட மாட்டான் , பார்ப்போம்.
கில்லி ஜெண்டில் மேன் யாரும் சொல்லாமலே முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். நீங்க சொன்னாப்போல பிரஷ்ஷரும் தேர்வுக்குழு கொடுத்திருக்கலாம்.ஆஸில எல்லாம் காண்டிராக்ட் முறைத்தான் அடுத்த சீசனுக்கு உனக்கு காண்டிராக் எக்ஸ்டெண்ட் பண்ண மாட்டோம்னு சொல்லி ஆளைத்தொறத்திடுவாங்க. கில்லிக்கும் அப்படி சொல்லி இருக்கலாம்.
ஆஹா.. அடுத்த 'ஆப்பு' தம்பி மோகனுக்கா..?
ஸ்மைலி போட்டுத் தப்பிச்சிட்டான்..
இது 'ஒண்ணு' எனக்குத் தெரியாம போச்சே..
உண்மைத்தமிழர்,
//ஆஹா.. அடுத்த 'ஆப்பு' தம்பி மோகனுக்கா..?//
இது நான் அடிச்ச ஆப்பு இல்லை, இந்திய அணி அடிச்ச ஆப்பு :-))
சிரிப்பான் போடுவதை தவிர வேற வழி! பேச முடியுமா? நக்கல் பேசியவர்கள் வாயை அடைத்து விட்டார்கள் நம்ம பசங்க ஆஸில!
// வருங்காலத்தில் வங்க தேசம் கூட ஆஸியை புரட்டி எடுக்கும்னு நினைக்கிறேன். அப்போவும் go ..aussie ..go னு நம்ம மோஹன் சொல்லுவராக்கும் :-))//
அதுபோல் ஒரு பொன்னான நாளுக்காக வெயிட்டீங், அதை விட சந்தோசம் வேறு எதுவும் இருக்க முடியாது:))
(ஆனாலும் ஒரு மேட்சை வெச்சு இப்படி சொல்ல முடியாது)
வவ்வால் அண்ணாச்சி
ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம்
every dog has its own dayன்னு சொல்லுவாங்க. அதனாலதான் ஆஸி எப்பவுமே ஜெயிக்குது :-)
அதனாலதான் மோகன் ஆஸியை எப்பவும் சப்போர்ட் பண்ரான் புரியுதா மேட்டர்? :-)
சாத்தான்குளத்தான்
ஆசி அணி ரொம்பவும் ரிசோர்ஸ்புல் அணி என்பதில் சந்தேகம் இல்லை. பல முறை இதுப் போன்ற ஒரு சில ஆட்டங்களில் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்.
ஆனால், மெக்ராத், கில்லஸ்பீ, மிடில் ஆர்டர் மார்டின், போன்றவர்கள் இல்லாமல், கொஞ்சம் தள்ளாடுவது உன்மை.
இந்தியாவிற்கு எதிராக எப்பவுமே கலக்கும் கில்லியும், சிமாண்ட்ஸுமே தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வுகிறார்கள்.
பாண்டிங்கின் வெகு மோசமான ஆட்டம் இந்த பருவத்தில் தான் வந்திருக்கிறது.
ஆக கடைசியாக, ஆசி அணி சற்றே, பின்னடைவான நிலையயை அடைந்து, மற்ற அணிகள் கொடுக்கும் சவால்களை சிரமம்ப்பட்டே சமாளிக்கும் நிலையயை அடைந்திருக்கிறது. ( முன்னர் அனாயசமாக செய்தததை)
///
ஆசிப் மீரான் said...
வவ்வால் அண்ணாச்சி
ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம்
every dog has its own dayன்னு சொல்லுவாங்க. அதனாலதான் ஆஸி எப்பவுமே ஜெயிக்குது :-)
அதனாலதான் மோகன் ஆஸியை எப்பவும் சப்போர்ட் பண்ரான் புரியுதா மேட்டர்? :-)
சாத்தான்குளத்தான்
///
விட்டுப் போனது:
மோகன் தாஸ் ஆசியின் திறமைக்காக ஜல்லியடிக்கலாம், ஜால்ரா அடிக்கலாம்..
அதற்காக ஆசியின் அனைத்துச் செயல்களுக்கும் (ஆன் தன் பீல்டு/ அவுட் சைட் த பீல்ட்/ ஸ்லெட்ஜிங்க்/ இத்யாதி இத்யாதி...) ஜால்ரா தட்டி, பதிவர்களை பதிவு போட வைத்திருக்கிறார். ;)
இசாந்த் சர்மாவின் பந்துவீச்சு கலக்கல் !! சூப்பரா ஸ்விங் ஆகுது!!!!
வவ்வால்,
Consistencyயா அப்படின்னா?
என்ற தலைப்பில் ஒரு பதிவெழுதப்போகிறேன் வவ்வால். நல்ல நாளுக்காகக் காத்திருக்கிறேன்(உங்களுக்குத் தெரியுமாயிருக்கும் அந்த நாள் எந்நாள்னு!) அப்ப சொல்றேன் நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில்.
//மோஹன்,
என்ன வேகமா வந்து சிரிச்சுட்டு போய்டிங்க, இது இடுக்கண் வருங்கால் நகுகவா :-))
என்ன தான் சிரிச்சாலும் இனிமேல் ஆஸி டைம் ஓவர், இந்திய டைம் ஆரம்பம்!//
குசும்பன்,
//அதுபோல் ஒரு பொன்னான நாளுக்காக வெயிட்டீங், அதை விட சந்தோசம் வேறு எதுவும் இருக்க முடியாது:))
(ஆனாலும் ஒரு மேட்சை வெச்சு இப்படி சொல்ல முடியாது)//
ஆஹா எத்தனைப்பேர் வெயிட்டிங்க்ல இருக்காங்க.... அந்த நாள் வெகு தொலைவில் இல்லை, ஆஸியின் ஆதிக்கத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதப்பட இருக்கிறது. அதுக்கு துவக்கம் ஏற்படுத்தியது இந்தியா தான்.
ஒரு மேட்ச் வைத்து முடிவு எடுக்க முடியாது என்றாலும் "they cant avoid the inevitable" ஒரே நேரத்தில ஹெய்டன், சைமண்ட்ஸ், லாம் சீக்கிரமே ஓய்வு பெறும் சூழல் வரும் அவர்களுக்கு மாற்று கண்டுப்பிடிப்பது கடினம், இன்னும் , லாங்கர், மெக்ராத், வார்ன் ஆகியோருக்கு இணையான மாற்று வீரர்களையே கண்டுப்பிடிக்கலையே!
----------------------------
வாங்க ஆசிப் அண்ணாச்சி,
//ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம்
every dog has its own dayன்னு சொல்லுவாங்க. அதனாலதான் ஆஸி எப்பவுமே ஜெயிக்குது :-)//
உணர்ச்சி வசப்படலைனா அப்புறம் பொணம் சொல்லிடுவாங்களே அதான் இருக்கிறப்பவே உணர்ச்சி வசப்பட்டுக்கிடுறோம் :-))
எப்பவுமே ஜெயிக்குதுனு சொன்னதுலாம் ஒரு காலம், இப்போ எப்போவாது தான் ஜெயிக்குது ஆஸி :-)) அதுவும் கஷ்டப்பட்டு. முன்னலாம் கேக் வாக்னு சொல்வாங்களே அப்படி ஜெயித்த அணிக்கு இது பின்னடைவு தானே.
ஒரு அணியை சப்போர்ட் செய்வதை யாரும் தப்பா சொல்லலை, அதீதமாக சப்போர்ட் செய்வதை தான் சொல்றோம். இப்போ இந்தியாவுக்கு கை மேலோங்கி இருக்கு நாங்களும் கொஞ்சம் கை தட்டிக்கிறோம்!
----------------------------------
tbcd,
//ஆக கடைசியாக, ஆசி அணி சற்றே, பின்னடைவான நிலையயை அடைந்து, மற்ற அணிகள் கொடுக்கும் சவால்களை சிரமம்ப்பட்டே சமாளிக்கும் நிலையயை அடைந்திருக்கிறது. ( முன்னர் அனாயசமாக செய்தததை)//
அதே தான் சரியா சொன்னிங்க, ஒவ்வொரு அணிக்கும் ஏற்றம் கொஞ்ச காலம் இருக்கும் , பின்னர் மெல்ல சரிவு துவங்கும், உதாரணமாக 80 களில் மேற்கிந்திய அணி, சும்மா எல்லா அணியையும் ஊதி தள்ளியது இப்போ அதன் நிலை என்னாச்சுனு ஊருக்கே தெரியும். அப்படிப்பட்ட காலம் ஆசிக்கு வராதுனு எப்படி சொல்ல முடியும்.
மேலும் அவர்களுக்கும் சரியான மாற்று வீரர்கள் கிடைக்கவில்லை. டெயிட்டை என்னமோ பிரம்மாஸ்த்திரம்னு சொன்னாங்க கடைசில பிரஷ்ஷர் தாங்கலைனு தானா விருப்ப ஓய்வு வாங்கிட்டான்.
----------------------------------
பொன்வண்டு,
//இசாந்த் சர்மாவின் பந்துவீச்சு கலக்கல் !! சூப்பரா ஸ்விங் ஆகுது!!!!//
ஆமாம் எல்லாரும் அவரை இன்னொரு ஸ்ரீநாத் சொல்றாங்க , பிட்னெஸ் மட்டும் இருந்துட்டா , இன்னொரு 10 ஆண்டுகளுக்கு களத்தில் நின்றாடுவார் போல இருக்கு.
-------------------------------
மோஹன்,
//Consistencyயா அப்படின்னா?
என்ற தலைப்பில் ஒரு பதிவெழுதப்போகிறேன் வவ்வால். நல்ல நாளுக்காகக் காத்திருக்கிறேன்(உங்களுக்குத் தெரியுமாயிருக்கும் அந்த நாள் எந்நாள்னு!) அப்ப சொல்றேன் நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில்.//
கண்டிப்பாக எழுதுங்க காத்திருக்கிறேன்.
கன்சிஸ்டண்சி தேவை தான், அது இப்போ ஆஸிக்கிட்டவே இல்லையே.
முன்னலாம் ஆஸி தோத்தாக்கூட ஒரு கவுரவமாக தோற்கும், இப்போ மற்ற அணிப்போல தானே தோத்தா மட்டமா தோக்குது ஜெயித்தா பிரமாதம்னு இருக்கு.
கப் யாருக்குனு பார்ப்போம். அனேகமாக இந்தியா ஆஸியை ஒரு வழிப்பண்ணிடும்னு நினைக்கிறேன்.
வவ்வால் சாஹேப், அவசரப்பட்டு வார்த்தைய விடாதீங்க. அப்பறம் மூஞ்சியக் கொண்டு போய் பீரோவுலதான் வைக்கணும்.
இந்தியா ஜெயிச்சப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துது. ஆனா அடுத்த போட்டில மோசமாத்தோக்காம இருக்கணுமேனு தோணாம இல்லை.
ஏன்னா டெஸ்ட் மேட்ச்ல அப்படித்தான ஆச்சு. ஆஸ்திரேலியா தலைல இருந்து கிரீடம் இறங்க இன்னும் ரொம்ப நாள் ஆகாதுன்னு நினைக்கறேன். ஆனாலும் இன்னத்த தேதிக்கு ஆஸ்திரேலியாதான் நம்பர் ஒன் அணிங்கறதையும் மறுக்க முடுயாது.
இந்தியாவை மிகவும் இலகுவாக இலங்கை வீழ்த்திவிட்டது. பாவம் ஸ்ரீ சாந்த் இன்றைக்கு அவர் தான் வள்ளல் ஒரு ஓவரில் 23 ஓட்டங்கள் கொடுத்தார். இந்திய அணியினரின் பந்துவீச்சு இன்றைக்கு எடுபடவேயில்லை.
பெரும்பாலும் ஆஸி'ல 3 பைனல்ஸ் மேட்ச் இருக்கும்.. ஆனா முதல் 2 மேட்சிலேயே ஆஸி ஜெயிச்சிடுவாங்க... இந்த தடவையும் 2பைனல்ஸ்தான் நடக்கும்.. இந்தியாவுக்குத்தான் கோப்பை... இப்படியெல்லாம் சொல்லனும்னு ஆசையா இருக்கு... பர்க்கலாம்..
-அபுல்
இன்னைக்கு நடந்த மேட்சை கணக்கிலேயே எடுக்க வேண்டாம்...
29 ஓவர் இந்தியாவும், 21 ஓவர் இலங்கையும் ஆடியது.. இந்தியாவின் பேட்டிங் நல்லாத்தான் இருந்தது... இலங்கையின் ஃபீல்டிங் அருமை..
வழக்கம்போல தன்னோட பந்தை அடிச்சி நொறுக்கின ஜெயசூர்யாவை அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா அவுட்டாகியது அருமை...
அடுத்த மேட்சில் இதே மாதிரி இலங்கை ஆஸ்திரேலியாவை ஜெயிக்குமா??
-அபுல்
உமையணன்,
என் மூஞ்சை பீரோவில் வைக்க அவ்வளவு ஆசையா, இந்திய அணி அப்படிலாம் என்னை இக்கட்டில் மாட்டாது என்று நம்புவோம், அப்படியே ஆனாலும் இந்திய அணியை சப்போர்ட் செய்வதால் தானே என்ன பெரிய நஷ்டம்!
---------------------------
சின்ன அம்மிணி,
//ஆனா அடுத்த போட்டில மோசமாத்தோக்காம இருக்கணுமேனு தோணாம இல்லை.
ஏன்னா டெஸ்ட் மேட்ச்ல அப்படித்தான ஆச்சு. //
இலங்கை கூட தோத்துட்டாங்க, ஆனாலும் இது கவுரவமான தோல்வி தான் மழை குறுக்கீடு இல்லாத முழுமையான ஆட்டமாக இருந்திருந்தால் , கதை மாறி இருக்கும்.
//ஆஸ்திரேலியா தலைல இருந்து கிரீடம் இறங்க இன்னும் ரொம்ப நாள் ஆகாதுன்னு நினைக்கறேன். ஆனாலும் இன்னத்த தேதிக்கு ஆஸ்திரேலியாதான் நம்பர் ஒன் அணிங்கறதையும் மறுக்க முடுயாது.//
இன்றைக்கு நம்பர் 1 ஆக இருந்தாலும், இது ரொம்ப நாள் நீடிக்காது என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் சொல்ல ஆரம்பித்துட்டாங்க பார்த்திங்களா, இதுக்கு பிள்ளையார் சுழி போட்டதே இந்தியா தானே!
------------------------------
வந்தியத்தேவன்,
//இந்தியாவை மிகவும் இலகுவாக இலங்கை வீழ்த்திவிட்டது. பாவம் ஸ்ரீ சாந்த் இன்றைக்கு அவர் தான் வள்ளல் ஒரு ஓவரில் 23 ஓட்டங்கள் கொடுத்தார். இந்திய அணியினரின் பந்துவீச்சு இன்றைக்கு எடுபடவேயில்லை.//
ஆனாலும் இந்தியாவின் தோல்வி மோசமான தோல்வியா இல்லை, மழையினால் 20- 20 ஆட்டம் போல ஆகிவிட்டது,ஓவர் குறைவாக இருக்கும் போது ரிஸ்க் எடுத்து ஆடலாம். இல்லை எனில் முடிவு வேறாக இருந்திக்கலாம்.
------------------------
அபுல்,
//பெரும்பாலும் ஆஸி'ல 3 பைனல்ஸ் மேட்ச் இருக்கும்.. ஆனா முதல் 2 மேட்சிலேயே ஆஸி ஜெயிச்சிடுவாங்க... இந்த தடவையும் 2பைனல்ஸ்தான் நடக்கும்.. இந்தியாவுக்குத்தான் கோப்பை... இப்படியெல்லாம் சொல்லனும்னு ஆசையா இருக்கு... பர்க்கலாம்..//
இந்த தொடரிலும் 3 ஃபைனல் தான், இந்தியா பைனல் போனாலே ஆஸி சுற்றுப்பயணம் வெற்றி என்று சொல்வேன், மிகவும் அனுபவக்குறைவான அணி நமது, உங்கள் ஆசைப்போல் கோப்பையை கெலித்தால் அது மிகப்பெரிய வெற்றி.நடக்க வாய்ப்புள்ளது.
அபுல்,
//இன்னைக்கு நடந்த மேட்சை கணக்கிலேயே எடுக்க வேண்டாம்...
29 ஓவர் இந்தியாவும், 21 ஓவர் இலங்கையும் ஆடியது..//
அதனால் தான் சொன்னேன் இந்த தோல்வி , தன்னம்பிக்கையை சீர்க்குலைக்கும் ஒன்றல்ல, அடுத்த ஆட்டத்தில் சரி செய்து விடுவார்கள். யுவராஜ் தூக்கிட்டு ரெய்னா, கார்த்திக் வாய்ப்பு கொடுக்கலாம், யுவ்ராஜ் எக்ஸ்ட்ரா லக்கேஜ் போல அணியில் இருக்கார்.
//வழக்கம்போல தன்னோட பந்தை அடிச்சி நொறுக்கின ஜெயசூர்யாவை அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா அவுட்டாகியது அருமை...//
ஸ்ரீசாந்த் தவிர மற்ற எல்லாரும் கட்டுக்கோப்பாகவே பந்து வீசினார்கள், குறைவான ஓவர்கள் என்பதால் இலங்கைக்கு சாதகமாக ஆகிவிட்டது.
அடுத்தப்போட்டில் ஆஸியுன் இலங்கை ஆட்டம் எடுபடாது என்றே நினைக்கிறேன்.
நல்லா சொல்லி இருக்கீங்க!
ஆஸிக்கு...அனைத்து நாடுகளும் ஆப்பு அடித்தால்தான்
கர்வம்
அடங்கும்....!
நம்ம வீட்டுப்பக்கம் வந்துட்டுப்போங்க சார்..!
http://surekaa.blogspot.com
எல்லாம் சரிங்க வவ்வால்,
// ஒரு அணியை சப்போர்ட் செய்வதை யாரும் தப்பா சொல்லலை, அதீதமாக சப்போர்ட் செய்வதை தான் சொல்றோம்.//
இது உங்க வரி தான்.
// இப்போ இந்தியாவுக்கு கை மேலோங்கி இருக்கு நாங்களும் கொஞ்சம் கை தட்டிக்கிறோம்!//
கொஞ்சம் கைதட்டறா மாதிரி தெரியலையே. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பரங்கிப்பேட்டை கண்டோன்மெண்ட் எலக்ஷன்ல ஜெயிச்சாக் கூட வெற்றிவிழா கொண்டாடுன திமுக மாதிரில்லா இருக்கு?
அய்யா சாமி.. நீங்க புகழ்ந்த புண்ணிய்வானுங்க டவுசர் கிழியறத இன்னைக்கு கொஞ்சம் பாருங்க. இவனுங்க 1 ஃபோர் அடிச்சா 4 பக்கம் எழுதி பாராட்டற உங்கள மாதிரி நல்லவங்க இருக்கிறதால தான் இந்த புண்ணாக்கு பசங்க உருப்படாம கெடக்கறானுங்க.
//என்ன தான் சிரிச்சாலும் இனிமேல் ஆஸி டைம் ஓவர், இந்திய டைம் ஆரம்பம்!//
இதுக்கு இவ்வளவு சீக்கிறம் பசங்க ஆப்படிச்சிருக்க கூடாது. ;P
சுரேகா,
உங்க வீட்டுப்பக்கம் அடிக்கடி வந்து போய்க்கிட்டு தான் இருக்கேன், பின்னூட்டம் , வரும் போது பின்னூட்டம் போட முடியாத நிலை(தமிழ் அந்த நேரத்தில் இல்லை)பிறகு போடலாம் என்று நினைத்து அப்படியே விட்டுப்போச்சு, நான் எல்லாம் அழையா விருந்தாளிங்க , வந்துடுவேன் கூப்பிடலைனாலும்! :-))
-----------------------------------
ரத்னேஷ்,
//கொஞ்சம் கைதட்டறா மாதிரி தெரியலையே. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பரங்கிப்பேட்டை கண்டோன்மெண்ட் எலக்ஷன்ல ஜெயிச்சாக் கூட வெற்றிவிழா கொண்டாடுன திமுக மாதிரில்லா இருக்கு?//
கிரிக்கெட்டில் அரசியல் புகுந்திடுச்சுனு சொல்றாங்களே அது இதானா :-))
கிரிக்கெட்டில் ஏகாதிபத்தியமாக இருக்கும் ஒரு நாடு ஆஸ்திரேலியா , அதனை ஆட்டிப்பார்க்கும் ஒரு வளரும் சக்தி இந்தியா, எடுத்ததும் "knock out" செய்யலைனாலும் கொஞ்சம் ரத்தம் சிந்த வச்சுட்டாங்க, போக போக அடிச்சு வீழ்த்தவும் செய்வாங்க, அடுத்த அணியை தூக்கி சுமப்பதை விட சொந்த அணியை பாராட்டுவதில் என்ன கஷ்டம், தாராளமாக பாராட்டுவோமே என்று தான் அப்படி செய்வது.
போக போக பாருங்க ...இந்திய அணி விஸ்வரூபம் எடுக்கும்.
------------------------
சஞ்ஜெய்,
//அய்யா சாமி.. நீங்க புகழ்ந்த புண்ணிய்வானுங்க டவுசர் கிழியறத இன்னைக்கு கொஞ்சம் பாருங்க. //
சண்டைல கிழியாத டவுசர் இருக்கா, சண்டைனு வந்தா டவுசர் கிழிய தான்யா செய்யும்.
ஆனாலும் இன்னிக்கு கிழிஞ்ச டவுசரை இலங்கைகாரன் கிட்டே கொடுத்து சூப்பரா தைச்சாங்க பார்த்தியாப்பு!ஆனா பாவம் இலங்கை டிரவுசரவே அவுத்துப்பூட்டாங்க நம்ம பயலுக :-))
அடுத்ததா பாருங்க ஆஸிக்கு கோமணம் கூட மிஞ்சாது :-))
//அடுத்த அணியை தூக்கி சுமப்பதை விட சொந்த அணியை பாராட்டுவதில் என்ன கஷ்டம்,//
வவ்வால் இது உங்கள் வாயிலிருந்து(indeed எழுத்திலிருந்து) வரணும் என்றும் வரும் என்றும் நினைத்திருந்தேன். பூனைக்குட்டியை அவிழ்த்து விட்டதற்கு நன்னி.
இனிமேல் தயவுதாட்சண்யம் பார்க்காமல் உங்களையும் ஆஸ்திரேலியா சப்போர்ட் விஷயத்தில் நிராகரித்துவிட்டு :) நகர்ந்துவிட முடியும்.
//அடுத்ததா பாருங்க ஆஸிக்கு கோமணம் கூட மிஞ்சாது :-))//
'வாழ்க்கை என்பது கவிதையோ கற்பனையோ அல்ல' என்றொரு கதை எங்கள் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில் துணைப்பாடப்பகுதியில் இருந்தது. அந்தக் கதைதான் நினைவுக்கு வருகுது.
மோஹன்,
//வவ்வால் இது உங்கள் வாயிலிருந்து(indeed எழுத்திலிருந்து) வரணும் என்றும் வரும் என்றும் நினைத்திருந்தேன். பூனைக்குட்டியை அவிழ்த்து விட்டதற்கு நன்னி.
//
இதுக்கு எதுக்கு நீங்க இத்தனை நாளா காத்திருக்கணும், பதிவே அதைப்பற்றித்தானே, நான் என்னமோ ஒளிச்சு மறைச்சு வைத்திருந்தது போலவும்,இப்போ தான் பூனைக்குட்டியை அவிழ்த்து விட்டார்ப்போலவும் சொல்றிங்க :-))
//இனிமேல் தயவுதாட்சண்யம் பார்க்காமல் உங்களையும் ஆஸ்திரேலியா சப்போர்ட் விஷயத்தில் நிராகரித்துவிட்டு :) நகர்ந்துவிட முடியும்.//
தாரளமாக செய்யலாம், எல்லாருமே எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பதில்லை, அப்படி சிலருக்கு சொன்னாலும் எல்லா இடுகைகளிலும் போய் சொல்வதில்லை.சில நேரங்களில் மட்டுமே சொல்வோம், அப்படி இருக்கையில் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. நீங்க இன்னும் நான் நல்லப்பதிவு போட்டேன் பின்னூட்டம் வரலை, மோசமானது போட்டேன் நிறைய பின்னூட்டம் வந்தது என்ற ஒப்பிடுகையின் துவக்க நிலையில் இருப்பதாகவே படுகிறது.
கூட்டத்திலும் தனித்திருப்பது, தனிமையிலும் பிறரின் அன்மையை உணர்வது போல இதெல்லாம் கைக்கூட உங்களுக்கு இன்னும் சிறிது நாட்கள் பிடிக்கலாம்.
//வாழ்க்கை என்பது கவிதையோ கற்பனையோ அல்ல' //
கண்டிப்பாக அப்படி அல்ல, ஆனால் அதற்காக அதுவே உண்மையும் அல்ல, கற்பனையோ, கவிதையோ என்று சொல்வதே "liquidcrystal" என்பது போன்ற oxymoran தான்(அப்படி சொல்லலாமா? இங்கே கவிதை ,கற்பனை இரண்டும் ஒரே நிலை சொற்கள்), கற்பனை இல்லா கவிதை ஏது? :-))
கற்பனை தேவை இல்லை என்றால் , அவனுக்கு வாழ்வின் ரசிக்க தகுந்த தருணங்கள் வாய்த்ததேயில்லை என்றாகும். கற்பனை மட்டும் தீர்ந்து விட்டால் கவலை நம்மை தின்று விடும்னு ஒரு பாட்டில் வரும். வாழ்க்கையில் கற்பனைக்கும் கொஞ்சம் இடம் உண்டு,, நீங்களும் கொடுத்திருப்பிங்க , உங்களுக்கே தெரிந்திருக்காது போல :-))
//நீங்க இன்னும் நான் நல்லப்பதிவு போட்டேன் பின்னூட்டம் வரலை, மோசமானது போட்டேன் நிறைய பின்னூட்டம் வந்தது என்ற ஒப்பிடுகையின் துவக்க நிலையில் இருப்பதாகவே படுகிறது.//
எனக்கு உண்மையிலேயே புரியலை நீங்க எங்கிருந்து இந்த கருத்தமைவிற்கு :) வந்தீர்கள் என்று.
ஆனால் என் நிராகரித்தல்கள் ஒருவகையில் பின்னூட்டம் சார்ந்தது தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து என் நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வந்திருக்கு(நிறையவே) மோசமான பதிவிற்கு பின்னூட்டங்கள் வந்ததில்லை. அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் :).
//நான் என்னமோ ஒளிச்சு மறைச்சு வைத்திருந்தது போலவும்,இப்போ தான் பூனைக்குட்டியை அவிழ்த்து விட்டார்ப்போலவும் சொல்றிங்க :-))//
இது என் பதிவில் நீங்க போட்ட ரிப்ளை, "நீங்கள் ஆஸி அணியை ஆதரிப்பதிலோ, உங்கள் தேசப்பற்று குறித்தோ கேள்விக்கேட்கவில்லை"
எனவே நான் நினைத்தேன் நீங்கள் தேசப்பற்று காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை சப்போர்ட் செய்யவில்லை என்று.
தேசப்பற்று என்பதும் ஒரு கிணறுதான். :)(குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை)
நான் ஆஸ்திரேலியை அதீதமாக சப்போர்ட் செய்வதற்கும் நீங்கள் இந்திய அணியை அதீதமாக சப்போர்ட் செய்வதும் தேசப்பற்று காரணமாக வித்தியாசமாகத் தெரியலாம்.
//தாராளமாக பாராட்டுவோமே என்று தான் அப்படி செய்வது.//
தாராளமாக நீங்க சப்போர்ட் செய்யலாம் நான் செய்யக்கூடாது ஏனென்றால் நான் பிறந்தது இந்தியாவில் - இந்தியாவிற்கென்று ஒரு கிரிக்கெட் அணி உண்டு(இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு, இந்திய அணி என்று நாம் சொல்வது இந்தியாவிற்காகவா இல்லை BCCIற்காகவா என்பதில்) அதை விடுத்து ஆஸ்திரேலிய அணியை சப்போர்ட்(அதீதமாகவோ இல்லாமலோ) செய்வது தவறு என்று நீங்கள் சொல்வது. இந்தியா என்பது உங்களுக்கு ஒரு புனிதப்பிம்பம் என்ற எண்ணத்தையே எனக்கு அளிக்கிறது.
இதற்குப் பெயர் தான் ஆப்பா.? தெரியாமப் போயிடுச்சே :)
மோஹன்,
//எனக்கு உண்மையிலேயே புரியலை நீங்க எங்கிருந்து இந்த கருத்தமைவிற்கு :) வந்தீர்கள் என்று.
//
இந்த கருத்தமைவு என்பது நேரடியாக நிராகரித்தல் என்பதற்கு எடுத்துக்கொள்ளாமல் அதற்கு இது போல என்று கூறப்பட்ட உதாரணமாக பார்க்கவும். எப்படி அதிகம் பின்னூட்டம் வரவில்லை என்று கவலைப்படுவது சரியல்லவோ அப்படியே இதுவும்.
//எனவே நான் நினைத்தேன் நீங்கள் தேசப்பற்று காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை சப்போர்ட் செய்யவில்லை என்று.//
இப்போதும் தேசப்பற்றின் அடிப்படையில் இதனை செய்யலாம்/ செய்யக்கூடாது என்று சொல்லவரவில்லை.
நீங்கள் ஒரு அணியை சப்போர்ட் செய்வது போல நானும் செய்கிறேன், ஆனால் நான் செய்வதற்கு கூடுதல் காரணம் நாம் இருக்கும் நிலப்பகுதியை பிரதிநிதிப்படுத்தும்(தேசம் என்று கூட சொல்லவில்லை பாருங்க!!) ஒரு அணி என்பது கூடுதல் காரணம் அஃதே!
நம்ம ஊர்க்காரங்க என்று ஒரு வாஞ்சை ஏற்படும் இல்லை அது போல.
மற்றப்படி எல்லாருக்கும் எதையும் ஆதாரிக்கவோ நிராகரிக்கவோ உரிமை உண்டு, நீங்கள் கொண்டாட ஒரு காரணம் நான் கொண்டாட ஒரு காரணம். இதில் என்ன இருக்கு.
//செய்வது தவறு என்று நீங்கள் சொல்வது. இந்தியா என்பது உங்களுக்கு ஒரு புனிதப்பிம்பம் என்ற எண்ணத்தையே எனக்கு அளிக்கிறது.//
இதில் சரி தவறு என்பதற்குள் நான் செல்லவே இல்லையே.
அதே போல புனித பிம்பம் என்று அணிக்கு கட்டமைக்கவும் இல்லை. அப்போ நீங்கள் ஆஸி அணியை புனித பிம்பம் ஆக பார்க்கிறீர்களா?
டேவிட் vs கோலியாத் சண்டையில் எப்படி வலுத்தவனை விட இளைத்தவன் ஹீரோ ஆகிரானோ அப்படி ஒரு பார்வையில் இந்தியா ஆஸி போட்டியை பார்த்தால் ஏன் நான் தாரளமாக இந்திய அணியை(bcci) பாராட்டுகிறேன் என்பதும் புரியும்.
மேலும் எல்லா நாட்டிலும் அல்லது பெரும்பாலும் கிரிக்கெட் அணி என்பது தனி ஒரு போர்டு அணியாக தான் இருக்கிறது எனவே இதற்கு அந்த நாட்டுக்கு சொந்தமா என்று குழப்பிக்கொள்ள தேவையில்லை.
-----------------------
ஜியோவ்,
ஹி ..ஹி இப்போவாது ஆப்பு என்ன என்று தெரிந்ததா :-))
//ஆனால் நான் செய்வதற்கு கூடுதல் காரணம் நாம் இருக்கும் நிலப்பகுதியை பிரதிநிதிப்படுத்தும்(தேசம் என்று கூட சொல்லவில்லை பாருங்க!!) ஒரு அணி என்பது கூடுதல் காரணம் அஃதே!
நம்ம ஊர்க்காரங்க என்று ஒரு வாஞ்சை ஏற்படும் இல்லை அது போல.//
இதைத்தான் நான் கிணறு என்றேன்.
//அதே போல புனித பிம்பம் என்று அணிக்கு கட்டமைக்கவும் இல்லை. அப்போ நீங்கள் ஆஸி அணியை புனித பிம்பம் ஆக பார்க்கிறீர்களா? //
நான் வைப்பது மாற்றுக் கருத்து நீங்கள் இருப்பது பொதுப்புத்தி சார்ந்த ஒரு விஷயம்(ஹிஹி நல்லாயில்லை? இது! :))
நீங்கள் இல்லையென்று சொன்னாலும், தோபார்டா நம்ம நாட்டை சப்போர்ட் செய்யாமல் வேற நாட்டை சப்போர்ட் செய்யுறான் என்பது மாதிரியான ஒரு மனநிலைதான் உங்களிடம் வெளிப்படுகிறது,
//அடுத்த அணியை தூக்கி சுமப்பதை விட சொந்த அணியை பாராட்டுவதில் என்ன கஷ்டம//
இதில். இது மிக நிச்சயமாக பிற்போக்குத்தனமான ஒன்று தான், நீங்கள் நிச்சயம் நகர வேண்டிய இடம் இது. இதே மனநிலையை உங்களிடம் கட்டபொம்மன்(Indeed புதுக்கோட்டை மன்னர்கள்) பற்றிப் பேசும் பொழுது/ பார்த்திருக்கிறேன்.
//கூட்டத்திலும் தனித்திருப்பது, தனிமையிலும் பிறரின் அன்மையை உணர்வது போல இதெல்லாம் கைக்கூட உங்களுக்கு இன்னும் சிறிது நாட்கள் பிடிக்கலாம்.//
இதை நான் என்னைப் பற்றிய முன்முடிவு என்று வைத்துக் கொள்கிறேன் இதை நான் தவறென்று சொல்லமாட்டேன். முன்முடிவுகள் இல்லாமல் எதையும் நான் அணுகுவதில்லை என்பதால். ஆனால் இந்த முன்முடிவுகளைப் பிடித்துக் கொண்டு தொங்கமாட்டேன், அதேபோல் முன்முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வரும்பொழுது முன்பு ஒரு வார்த்தை சொல்லியிருந்தோ என்று நினைக்காமல் நான் அந்தச்சமயம் நினைப்பதை ஒப்புக்கொள்ளும் மனநிலை எனக்கு உண்டு :).
மோஹன்,
//இதைத்தான் நான் கிணறு என்றேன்.//
குடத்தில் இருப்பதை விட கிணறு ஒன்றும் மோசமில்லை :-))
//நான் வைப்பது மாற்றுக் கருத்து நீங்கள் இருப்பது பொதுப்புத்தி சார்ந்த ஒரு விஷயம்(ஹிஹி நல்லாயில்லை? இது!//
பொதுப்புத்தி என்பது என்ன ரொம்ப கேவலாமா? பொதுப்புத்தி என்ன என்று தெரிந்தால் தானே தனிப்புத்தி என்னவென்று உணர முடியும்.
நிகழ்வுகளின் தொகுப்பில் விளையும் அனுபவத்தின் வழி வருவதே புத்திசார் செயல்கள்.
தனி சிறப்பு புத்தியுடன் செய்யலாம் ஆனா ஒரு லாஜிக் இருக்கணும்.
இல்லைனா இப்படி ஆகிடும்,
பேண்ட்க்கு உள்ள ஜட்டிப்போடுவது பொதுபுத்தி நான் பேண்ட் மேல ஜட்டிப்போடுவது தனிப்புத்தினு ஆகிடும் :-))
//நீங்கள் இல்லையென்று சொன்னாலும், தோபார்டா நம்ம நாட்டை சப்போர்ட் செய்யாமல் வேற நாட்டை சப்போர்ட் செய்யுறான் என்பது மாதிரியான ஒரு மனநிலைதான் உங்களிடம் வெளிப்படுகிறது,//
கால்ப்பந்து உலக கோப்பைகளின் போது பிரேசில் , அணியை சப்போர்ட் செய்துக்கொண்டு தான் இருந்தேன்.
நான் சொன்ன கோலியாட்த் மேட்டர் வைத்து பார்த்தால் தெரியும் ஏன் ஆஸியை பலரும் வெறுக்கிறார்கள் என்று, அது பொதுப்புத்தி எனலாம். ஆனால் அது உண்மை.
//இதில். இது மிக நிச்சயமாக பிற்போக்குத்தனமான ஒன்று தான், நீங்கள் நிச்சயம் நகர வேண்டிய இடம் இது. இதே மனநிலையை உங்களிடம் கட்டபொம்மன்(Indeed புதுக்கோட்டை மன்னர்கள்) பற்றிப் பேசும் பொழுது/ பார்த்திருக்கிறேன்.///
கொஞ்சம் பிற்போக்கோ? பரவாயில்லை, முற்போக்கு என்று வலிந்து எதையும் செய்யாமல் மாற்றம் , தேவை கருதி செய்துக்கொண்டால் போச்சு, ஆனால் மாற்றம் வருகையில் வந்தே தீரும், மாறியும்கொள்வேன்,ஆனால் அது இப்படி மாற வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரால் இருக்காது என்னளவில்.
மொபைல் போன் எல்லாரும் பயன்ப்படுத்த ஆரம்பித்த காலத்தில் கூட நான் வாங்காமல் காலம் தள்ளினேன்(போன் கூட வாங்க முடியாதா என்று நக்கல் விட்டாங்க) எனக்கு அது அத்தியாவசியம்னு தேவைப்பட்டா வாங்கிக்க போறேன்னு சொல்லிவிடுவேன்.பின்னர் தேவை என்று உணர்ந்த போது வாங்கிக்கொண்ட்டேன்.
//அதேபோல் முன்முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வரும்பொழுது முன்பு ஒரு வார்த்தை சொல்லியிருந்தோ என்று நினைக்காமல் நான் அந்தச்சமயம் நினைப்பதை ஒப்புக்கொள்ளும் மனநிலை எனக்கு உண்டு :).//
அப்படியே ஆகட்டும் :-))
சரியான "காரணங்கள் முன்வைக்கப்பட்டால்" நான் கடவுளையும் நம்ப தயாராக இருப்பவன் :-))
////அடுத்ததா பாருங்க ஆஸிக்கு கோமணம் கூட மிஞ்சாது :-))////
இந்திய அணியை உடுபேத்திவிடும் சங்க நிரந்தரத் தலைவரே... கிழியப் போவது யார் கோவணம்னு பொறுத்திருந்து பார்ப்போம். இவனுங்க ஒரு போட்டி ஜெயிச்சா அடுத்து ஒரு தொடர் முஉழுசும் தோக்கற ஆளுங்க. இவனுங்களாவது ஆஸி கோவணத்த அவுக்கறதாவது. போங்க சார்.. போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க.
சஞ்ஜெய்,,
//இவனுங்க ஒரு போட்டி ஜெயிச்சா அடுத்து ஒரு தொடர் முஉழுசும் தோக்கற ஆளுங்க. இவனுங்களாவது ஆஸி கோவணத்த அவுக்கறதாவது.//
கூல்...மசித்தக்கட்டி மலையை இழுக்கிறோம், வந்தா மலை போனா மசிறு அம்புட்டுத்தேன்.
ஆனாலும் ஆஸிக்கு இப்போவே ஜன்னி வந்திருக்கும்!
//போங்க சார்.. போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க.//
ஆமா ஆஸி வெற்றிப்பெற்றா அவங்க வந்து புள்ளைக்குட்டிங்களை படிக்க வைப்பாங்களா :-)) இது தெரியாம போச்சே, நானும் ஒரு கல்யாணத்த பண்ணி, நாலஞ்சு பெத்துப்போட்டு இருப்பேன் :-))
//இது தெரியாம போச்சே, நானும் ஒரு கல்யாணத்த பண்ணி, நாலஞ்சு பெத்துப்போட்டு இருப்பேன் :-))//
கல்யாணத்த பண்ணா நாலஞ்சு தான். இப்போ வவவாலுக்கு மரத்துக்கு மரம் புள்ளைங்க இருக்கிறதா ஒரு ஆந்தை சொல்லிசே. அந்த வவ்வால் நீங்க தான?:)))
வவ்வால்,
//இல்லைனா இப்படி ஆகிடும்,
பேண்ட்க்கு உள்ள ஜட்டிப்போடுவது பொதுபுத்தி நான் பேண்ட் மேல ஜட்டிப்போடுவது தனிப்புத்தினு ஆகிடும் :-))//
சூப்பர் மேனுக்கு அதுதான் வசதின்னா பொதுப்புத்தி மக்கள் அப்படி செய்யலையே என்று யோசித்துக் கொண்டிருக்க முடியாது! பேண்டை போட்டு ஜட்டி போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்க வேண்டியது தான்.(சூப்பர் மேனுக்கு எதற்காக அப்படி ஒரு வசதியை உருவாக்கினவங்க வைச்சாங்கன்னு எனக்குத் தெரியாது! :))
வெச்சாங்கல்ல ஆப்பு :))))))))))
மோஹன் மாப்பு...
எல்லாரும் சேந்து வச்சுட்டாய்ங்கையா ஆப்பு...
நாம தோத்துட்டோம்யா தோத்துட்டோம்
மோஹன் சார்..
ஹர்பஜன் மூக்கு சொறிஞ்சது குரங்கு சேஸ்டை பண்ணத்தான்னு நான் சட்னி ஹெரால்டுக்கு நியூஸ் குடுத்துடட்டுமா ?
தாமதமான பதிலுக்கு மாப்பு ,
சஞ்ஜய்,
//ஒரு ஆந்தை சொல்லிசே. அந்த வவ்வால் நீங்க தான?:)))//
அந்த ஆந்தை'யார்' ?
ஆஸியின் கோவணம் உறுவப்பட்டதை பார்த்தீங்களா, அதனால் தான் சிம்பாலிக்கா அதைக்காட்ட ஃபைனல் மேட்ச் நடந்த அன்னிக்கு ஒருத்தன் நிர்வாணமா ஓடினான் :-))
----------------------
மோஹன்,
சூப்பர் மேன்களால் வார்னர் பிரதர்ஸ்க்கு வேண்டுமானால் பலன் இருக்கலாம், நாட்டுக்கு என்ன பலன், (ஆனாலும் பிஸ் அடிக்க சூப்பர் மேன் ரொம்ப கஷ்டப்படுவாரே :-)) )
அப்புறம் ஆஸி ஆப்பு வாங்கியது பார்த்து ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன், என்ன இருந்தாலும் ஆப்பு வாங்குறது வேற ஆப்பு மேல தேடிப்போய் உட்காருவது வேறல்லவா :-))
அடுத்ததா தென் ஆப்பிரிக்காவுக்கா ஆப்பு வாங்கும் காட்சியை காணத்தயாராகுங்கள்!
-----------------
அனானி, சைமண்டு??!!, பாண்டிங்க்??!! உங்களுக்கு எல்லாம் இப்போதைக்கு நன்றி மட்டும் சொல்லிக்கிறேன்.
Post a Comment