Thursday, December 08, 2011

பெட்ரோல் விலை ரகசியம்!



பெட்ரோல் விலை ரகசியம்!


நண்பர் சூர்யஜீவா தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது.

உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூரில் இருந்து இறக்குமதி ஆகிறதா இல்லையா என தெளிவாக இன்னும் தெரியவில்லை) என அக்கட்டுரையில் கேட்கப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கான தங்கத்தின் விலை நிர்ணயம் துபாய் கம்மோடிடி சந்தையின் அடிப்படையிலேயே தீர்மானீக்கப்படுகிறது.MCX india துபாய் தலைமையகமாக கொண்டு தான் செயல்படுகிறது.

துபாயில் தங்க சுரங்கம் இல்லை, நாமும் அங்கிருந்து இறக்குமதி செய்யவில்லை, பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தான் பின் ஏன் துபாய் கம்மோடிடி பார்க்க வேண்டும்.காரணம் நியுட்ரலாக இருக்கும் துபாய் தங்க மார்க்கெட்.

மேலும் துபாய் கோல்ட் கம்மோடிடி பெரிய ஒன்று, , உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது, ஆசியாவில், இந்தியாவிற்கு அருகில் இருக்கு. அமெரிக்க கோல்ட் கம்மோடிட்டி என்பது ஆசிய நிலவரத்தை சரியாக காட்டாது, மேலும் இரண்டுக்கும் கொஞ்சம் விலையில் வித்தியாசம் இருக்கும்.

துபாய்ல தங்க உற்பத்தி இல்லை ஆனால் பெரிய தங்க வியாபார மையம், எனவே நமக்கு துபாய் கோல்ட் கம்மோடிடி மார்க்கெட் சரியாக பொருந்தும்.

அதே போல தான் பெட்ரோல் விலைக்கு சிங்கப்பூரை வைத்துக்கொண்டுள்ளோம். மேலும் உலக அளவில் சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் நல்லப்பெயர் கொண்டது..கச்சா உற்பத்தி இல்லை ஆனால் சுத்திக்கரிப்பு இருக்கு, ஆசியாவிலேயே பெரிய எண்ணை சுத்திகரிப்பு நாடு சிங்கப்பூர்(இது ஒப்பீட்டளவு என நினைக்கிறேன்), எனவே நியுட்ரல் ஆனது.

உ.ம் துபாயில் குருட் விலை சர்வதேச அளவுக்கு ஒரே போல இருக்காது, காரணம் துபாய் பெட்ரோலிய நாடுகளிடையே இருக்கு. அங்கு விலை எப்போதும் மற்ற நாடுகளை விட கம்மியாகவே டிரேட் ஆகும் , இந்த வித்தியாசம் கணக்கிட்டால் பைசா கணக்கில் வாரும் என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் பல மில்லியன் பேரல்கள் என வர்த்தகம் செய்யும் போது பெரிய தொகை ஆகிவிடும்.

நமக்கு விற்பவனும், வாங்கும் நாமும் நம்பி ஒத்துக்கொள்ளும் ஒரு சந்தையை வைத்தே விலைப்பேசி முன் ஒப்பந்தம் போட முடியும். நாளைக்கே ஒரு பெரிய எண்ணை நிறுவனம் வேறு ஒரு மார்க்கெட் விலை வைத்து ஒப்பந்தம் போட வேண்டும் என சொன்னால் அதற்கும் தயாராகவே இருப்போம்.

சந்தையில் பேசும் விலைக்கு குருட்/பெட்ரோல் ஐ ஒரு நிறுவனம் வாங்க முடியாது, காரணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலைக்கும் ஏற்றுமதி செய்யும் இடத்துக்கும் இடையே இருக்கும் தூரம் , மற்றும் ஆகும் போக்குவரத்து செலவு என்று ஒன்று இருக்கு. எனவே ஏதோ ஒரு இடத்தினைக்குறிப்பிட்டு இங்கு வைத்து எனக்கு என்ன விலைக்கு விற்பீர்கள் என பேச வேன்டும்.

இதனை டெர்மினல் கேட் பிரைஸ் என்பார்கள் அதாவது இந்த துறைமுகத்தில் வைத்து எனக்கு குருட் கைமாற்றி விட வேண்டும் அப்போது என்ன விலைக்கு தருவீங்க என்று விலை பேசணும்.

உ.ம் சிங்கப்பூர் கம்மோடிட்டியில் ஒரு பேரல் 100 சிங்கை டாலர் என வியாபாரம் படிகிறது என்றால் , சிங்கப்பூர் துறைமுகத்தில் டெலிவரி எடுக்கவேண்டும் நாம், அப்போது துறைமுகத்துக்கு கொண்டு வர ஆகும் போக்கு வரத்து செலவு அதில் அடங்காது , போக்குவரத்து செலவு +வரி எல்லாம் சேர்த்து துறைமுகத்தில் நமக்கு கொடுக்கும் விலையே டெர்மினல் கேட் பிரைஸ்.

வரி விஷயத்தில் சிங்கப்பூரில் இன்னொரு அனுகூலம் இருக்கு,அங்கே துறைமுக வரி கிடையாது, அது ஒரு ஃபிரி டிரேட் துறைமுகம்.எனவே தான் சிங்கப்பூர் துறைமுகம் உலக அளவில் பெரிய டிரான்சிட் துறைமுகமாக இருக்கு.(முதல் இடம் ரோட்டர் டேம் ஹாலண்ட் என நினைக்கிறேன்).

இந்தியாவுக்கு வரும் சரக்குகள் பெரும்பாலும் சிங்கை துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டு விடும், பின்னர் வேறு ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு வரும். இன்னொரு டிராண்சிட் துறைமுகம் இலங்கையின் கொழும்பு துறைமுகம்.

ஏன் இப்படி இறக்கி, பின் ஏற்றி என அலைச்சல் என்றால் அதன் பின்னால் நம்ம துறைமுகங்களின் செயல்படா தன்மை இருக்கு, அதை சொல்ல தனிப்பதிவே தேவைப்படும்.


துறைமுகத்துக்கும், கம்மோடிடி மார்க்கெட்டுக்கும், தூரம் அதிகம் இருந்தால் டெர்மினல் கேட் பிரைஸ் அதிகம் ஆகும்.நேரடியாக எண்ணை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் போதும் இப்படி டெர்மினல் கேட் பிரைஸ் பார்ப்பார்கள்.அதிலும் டெலிவரி என்று கொடுக்கிறார்களோ அன்று என்ன விலை என தீர்மானிப்பார்கள், முன்பு பேசிய தொகை ஒரு ஒப்பந்ததிற்காக மட்டுமே, துறைமுகத்தில் கப்பலில் ஏற்றும் அன்று தான் இறுதி விலை நிச்சயம் ஆகும்.இதனை ஸ்பாட் பிரைசிங் என்பார்கள்.

எனவே சர்வேதேச சந்தையில் டெர்மினல் கேட் பிரைசில், ஸ்பாட் பிரைசிங்கில் தான் கச்சா விற்பனை ஆகும். சிங்கப்பூர் நமக்கு மிக அண்மையில் உள்ளது சிறிய நாடு என்பதால் டெர்மினல் பிரைஸ், கம்மோட்டி விலை என பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே நமக்கு ஏற்ற கம்மோடிட்டி மார்க்கெட் சிங்கப்பூர் ஆகும்.எனவே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட சிங்கப்பூர் கச்சா/ பெட்ரோல் விலையை பென்ச் மார்க் விலையாக எடுத்துக்கொள்கின்றன.

மேலும் சிங்கப்பூர் ஆசியாவிலேயெ பெரிய கச்சா சுத்திகரிப்பு நாடு, ஆஸ்திரேலியாவின் எண்ணை தேவையில் 30 சத வீதம் சிங்கப்பூர் மூலம் தான் பூர்த்தி ஆகிறது.
இபோது ஏன் சிங்கப்பூர் பெட்ரோல் விலைக்கு பெஞ்ச் மார்க் ஆக இருக்கு என்பது புரிந்திருக்கும்.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு துறைமுகத்துக்கு என ஒரு டெர்மினல் கேட் பிரைஸ் வைத்திருப்பார்கள்.

அந்த கட்டுரை ஏன் சரியானதாக இருக்கவில்லை என நினைத்தேன் என்றால் டிசம்பர் 2 இல் ஒரு பேரல் 112 டாலர் என்பதாக சார்ட் போட்டிருந்தார்கள், சிங்கை டாலர் எனில் SGD போட்டு டாலர் குறியிடு வரும்.ஆனால் அதில் அமெரிக்க டாலர் குறியீடே இருந்தது.சிங்கப்பூர் கம்மோட்டிடி மார்க்கெட்டில் சிங்கபூர் டாலரிலே வர்த்தகம் நடை பெரும்.

one SGD =0.77 USD, அப்படி எனில் அதில் போட்டிருந்ததை வைத்து 112 சிங்கை டாலருக்கு ஒரு பேரல் பெட்ரோல் என்றால் ரொம்ப மலிவாக விலை வருமே. ஒரு பேரலில் 42 கேலன் அதாவது சுமார் 159 லிட்டர் எண்ணை இருக்கும். இல்லை அது அமெரிக்க டாலர் என்றால் அப்போதும் மலிவான விலை ஆகவே வரும்.

சிங்கபூரில் டிசம்பர் 4 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 1.4 சிங்கை டாலர் என போட்டு இருக்கான்,வரி இல்லாத விலை 1 டாலர் வருது,(வரி 0.41 சிங்கைடாலர்) அப்படி ஆனால் 159 லிட்டர் பெட்ரோல் ஐ 112 டாலருக்கு விற்பாங்களா? எனவே தான் அது கச்சா எண்ணையாக இருக்க வேண்டும் என சொல்லி இருந்தேன்.

அந்த அளவுக்கு மலிவா பெட்ரோல் விற்பனை ஆகி இருந்தால் இந்தியாவில் வரிகளுடன் சேர்த்து பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய் தாண்டாது.

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்க உண்மைக்காரணம் என்ன எனப்பார்ப்போம்.

ஒரு லிட்டர் கச்சா எண்ணை சுத்திகரித்தால் என்ன கிடைக்கும் எனப்பார்ப்போம்.

What Does One Barrel Of Crude Oil Make?

One barrel of crude oil contains 42 gallons
About 46% of each barrel of crude oil is refined into automobile gasoline
In the US and Canada an average of 3 gallons of crude oil are consumed per person each day
The US imports about 50% of its required crude oil and about 50% of that amount comes from OPEC countriesProduct Refined Gallons/Barrel


Gasoline 19.3

Distillate Fuel Oil (Inc. Home Heating and Diesel Fuel) 9.83
Kerosene Type Jet Fuel 4.24

Residual Fuel Oil 2.10
Petroleum Coke 2.10
Liquified Refinery Gases 1.89
Still Gas 1.81
Asphalt and Road Oil 1.13
Petrochemical Feed Supplies 0.97
Lubricants 0.46
Kerosene 0.21
Waxes 0.04
Aviation Fuel 0.04
Other Products 0.34

Processing Gain 2.47


42 கேலன் கச்சா சுத்திகரித்தால் 44.47 கேலன் உற்பத்தி பொருள் கிடைக்கும் கூடுதலாக 2.47 கேலன் கிடைக்கும்.





Source: EIA March 2004 Data

ஒரு அமெரிக்க கேலன் =3.79 லிட்டர், அப்படி எனில் 19.3 கேலன் என்பது ,

19.3*3.79=73.47 லிட்டர்,

159 லிட்டர் கச்சா எண்ணை சுத்திகரித்தால் 73.47 லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது.இது கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும்.

இப்போ 100 டாலர் விலையில் இருக்கும் கச்சாவில் இருந்து 50 சதவீதம் பெட்ரொல் எடுத்தால் விலையை சராசரியாக 2 டாலர் என வைக்க வேண்டி இருக்கும், ஆனால் அப்படி இல்லையே ஏன்? காரணம் கச்சா சுத்திகரிப்பில் கிடைப்பவை அனைத்துமே விலை போக கூடிய பொருட்கள், டீசல் , மண்ணெணை, பாரபின் மெழுகு, மேலும் கடைசிப்பொருளான அஸ்பால்ட்(தார்) என எல்லாமே காசு தான். எனவே மொத்த வருவாய், செலவு எல்லாம் கணக்கிட்டே விலை நிர்ணயம் செய்வார்கள்.

மேலும் 42 கேலன் சுத்திகரிச்சா 44.47 கேலன் பொருட்கள் கிடைக்கும் கச்சாவில , கூடுதலாக 2.47 கேலன் உப பொருள் கிடைக்கும். அப்படி கிடைப்பதை சுத்திகரிப்பு லாபம் என்பார்கள்.

ஒரு பேரால், 42 கேலன் கச்சா வாங்க ஆகிய செலவு, சுத்திகரிப்பு செலவு எல்லாம் கணக்கிட்டு , சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் மற்ற பொருட்களின் மதிப்புடன் ஒப்பிட்டு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு இவ்வளவுனு தீர்மானிப்பார்கள்.

இப்படி கணக்கிடப்படும்  பெட்ரோல் விலை சுத்திகரிப்பு விலை பெட்ரோல் விலை( refinary price)என்பார்கள்,

//Petrol price in Delhi today costs Rs 66.42 per litre as against Rs 44.88 a litre price in the US, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh told Rajya Sabha in a written reply to a question.//

மேல போட்டு இருப்பது சமீபத்தில பார்லிமெண்ட்ல பெட்ரோலிய இணை  அமைச்சர் சொன்ன விவரம், இதன் அடிப்படையில் விலை உயர்வுக்கு காரணம் பார்ப்போம்.

அமெரிக்காவில் ஒரு கேலன் ,3.7 லிட்டர் விலை 3.2 அமெரிக்க டாலர், அங்கு பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி தேசிய சராசரி 16% , அங்கே அலாஸ்காவில் மிக குறைவாகவும் மற்ற மாகாணங்களில் வேறு வேறு விகித வரி உள்ளது.

அமெரிக்க மாகாணங்களில் வரி விகிதம் ஒரு கேலனுக்கு செண்ட் கணக்கில் ,
(100 செண்ட் =1 டாலர்)






இப்போ அமெரிக்காவில் ஒரு லிட்டர் 44.88 ரூ என்றால் அதில் 16% வரி ,

44.88x16/100=7.18 ரூ, இது தான் அங்கே விதிக்கப்படும் வரி.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்திய பெட்ரோலிய விற்பனையில் சதவிகித அடிப்படையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் செலவு,வரி, லாபம் ஆகியவற்றின் பட்டியல்,

Branded

Nov 28 $0.29 $2.73 $0.06 $0.02 $0.08 $0.36 $0.18 $3.72 (இறுதி விலை ஒரு கேலனுக்கு)

Unbranded $0.40 $2.73 -$0.06 $0.02 $0.08 $0.36 $0.18 $3.72 (ஒரு காலனுக்கு)

முழுப்பட்டியல் இங்கே,

http://energyalmanac.ca.gov/gasoline/margins/index.php

இந்த வரியை கழித்து விட்டால் எண்ணை நிறுவனம் பெட்ரோல் பம்ப்க்கு விற்கும் விலை வரும்.இந்த விலையில் பெட்ரொல் பம்ப் நடத்துபவரின் லாபம் அடக்கம்.

44.88-7.18=37.7 ரூபாய். இது தான் பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை. சுத்திக்கரிப்பு ஆலையில் ரிபைனிங் விலை என்று சொல்வது இதை விட குறைவாக இருக்கும்.

சுத்திகரிப்பு ஆலை விலை= கச்சா விலை +சுத்திகரிப்பு செலவு + ஆலை லாபம் + மூல தன முதலீட்டு லாபம் ஆகியவை அடங்கி இருக்கும்.

கனடாவில் சுத்திகரிப்பு செலவு பெட்ரோல் விலை காட்டும் பட்டியல்:




இந்தியாவிலும் என்ணை நிறுவனம் இதே போல பெட்ரோல் பங்குக்கு 37.7 ரூ அளவிற்கு தானே அளித்து இருக்கும், ஆனால் எப்படி 67 ரூபாய் ஆகிறது நாம் வாங்கும் போது?

காரணம் நம் மத்திய,மாநில அரசுகள் விதிக்கும் வரி, இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக 45% ஆகும்.அதாவது சுமார் 30 ருபாய் அரசுக்கு வரி வருவாயாக போகிறது.உலகிலே அதிக வரி விதிக்கும் நாடு யுனைட்டெட் கிங்க்டம், நாமும் அவங்க பக்கத்தில போக முயற்சிக்கிறோம்.

உலக அளவில் சில நாடுகளின் வரி விகிதம் , பெட்ரோல் விலை காட்டும் ஒரு பட்டியல்:







சில மாநிலங்களில் இருக்கும் வாட் வரி விகிதங்கள்,

ஆந்திரா =33%(இந்தியாவிலேயே மிக அதிக வாட்)

மேற்கு வங்கம்= 27

பஞ்சாப் =32.96%

கர்நாடகா =31.25%

உத்தரப்பிரதேஷ்=26.6%

ஒரிசா =19%

புதுவை =15%(இந்தியாவிலேயெ குறைவான வாட்)

தமிழ்நாடு =27%

மத்திய அரசு விதிக்கும் வரிகள் 20-25% வருகிறது. இப்படி தோராயமாக மொத்தமாக 45% பெட்ரோல் மீது வரி சுமை இருக்கு.

தமிழ் நாடு அரசுக்கு பெட்ரோலிய வரி வருவாய்,

//Tamil Nadu, for instance, charges a rather high 27% value added tax (VAT) on fuel.

The Tamil Nadu government has earned 15% more by way of taxes on fuel this year compared to last year, even though it lowered VAT to 27% from 30% after the decontrol of petroleum prices . Tamil Nadu's income on each litre of petrol sold is about 15.40 at current prices. With an average monthly petrol sales of 17 crore litres, the state earns close to 264 crore a month. That would amount to over 3,000 crore annually. Last year, TN earned about 13.40 per litre (at 30% VAT), when pump prices were 68 a litre.//

http://timesofindia.indiatimes.com/city/chennai/States-add-to-price-of-petrol-with-taxes/articleshow/10749952.cms

தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் 15.40 ரூபாய் வருமானம் போகிறது. மீதி 14.60 ரூபாய் மத்திய அரசுக்கு போகிறது.

ஒரு மாதத்திற்கு சுமார் 264 கோடி, என ஆண்டுக்கு சுமார் 3000 கோடி பெட்ரோல் விற்பனையில் மட்டும் தமிழக அரசுக்கு வரி வருவாயாக செல்கிறது.அப்புறம் டீசல் வேற இருக்கு.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு எங்கோ நடக்கிற கம்மோடிடி டிரேட் அல்லது கச்சா எண்ணை விலை காரணம் இல்லை, நம்ம மத்திய மாநில அரசுகள் தான் முக்கிய காரணம்.

உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஒப்பீடு,

Petrol Prices across the World Country $ per Gal. 2008 `/ ltr $ per Gal. 2009 `/ ltr $ per Gal. 2010 `/ ltr $ per Gal. 2011 `/ ltr % Deviation from India, 2011
Doha, Qatar -- -- -- -- -- -- 0.83 8.25 -87%
Saudi Arabia 0.61 5.71 -- -- -- -- 0.85 8.53 -86%
Kuwait -- -- -- -- -- -- 0.92 9.45 -85%
Kabul, Afghanistan -- -- -- -- -- -- 1.19 12.37 -80%
Nigeria -- -- -- -- -- -- 1.60 16.63 -74%
UAE 1.70 15.95 1.81 18.61 -- -- 1.82 18.14 -71%
Malaysia 2.31 25.49 -- -- 2.04 20.99 2.42 24.11 -62%
Iran -- -- -- -- 2.48 25.49 2.58 25.53 -59%
Hongkong -- -- -- -- -- -- 3.00 29.86 -53%
Dhaka, Bangladesh -- -- -- -- -- -- 3.35 36.12 -43%
Pakistan 3.23 30.54 -- -- 3.03 31.43 3.73 38.78 -38%
China -- -- -- -- -- -- 3.77 37.31 -41%
Vietnam -- -- -- -- 3.14 31.89 3.90 38.42 -39%
USA 1.69 17.57 2.40 25.59 2.55 26.25 3.99 39.64 -37%
SriLanka 5.73 54.12 -- -- 4.00 40.60 4.35 44.51 -29%
Nairobi, Kenya -- -- -- -- -- -- 4.54 45.55 -28%
Canada 2.62 26.59 -- -- 3.69 35.99 5.20 56.07 -11%
South Korea 3.69 39.25 -- -- -- -- 5.49 54.35 -14%
South Africa 4.58 44.08 5.00 52.58 -- -- 5.68 55.24 -12%
Bulgaria -- -- 5.34 54.79 -- -- 5.71 57.29 -9%
India 4.88 50.65 4.59 48.24 4.92 52.53 5.74 62.88 --
New Zealand 3.03 32.28 3.04 34.16 5.87 58.91 5.77 57.36 -9%
Australia 2.54 27.06 -- -- 4.32 43.84 6.20 62.46 -1%
Poland 8.15 77.35 -- -- 5.38 54.97 6.27 62.48 -1%
Spain 4.73 50.07 6.02 63.14 -- -- 6.48 64.58 3%
Cayman Islands -- -- -- -- -- -- 6.58 64.25 2%
Switzerland 7.56 66.44 -- -- 4.58 46.72 6.58 65.57 4%
Thailand -- -- -- -- 3.52 36.44 6.66 67.52 7%
Czech Republic 4.46 39.21 -- -- 5.87 59.98 7.10 70.76 13%
Japan 4.50 39.65 5.19 53.62 -- -- 7.23 70.75 13%
France -- -- 6.89 70.69 -- -- 7.51 74.84 19%
Sweden 8.13 76.29 -- -- 6.40 65.39 7.61 75.84 21%
Singapore 6.96 65.75 -- -- 4.92 49.97 7.61 75.07 19%
Finland 8.00 77.74 6.81 69.87 -- -- 7.76 77.33 23%
Denmark 9.27 86.46 -- -- 7.00 71.52 7.82 77.93 24%
Hungary 8.04 78.44 25%
Germany 8.19 79.61 -- -- 6.51 67.07 8.21 83.37 33%
Italy 9.19 86.27 -- -- 7.19 71.53 7.96 87.19 39%
UK 8.81 83.03 4.85 51.45 7.38 72.78 8.54 85.02 35%
Norway -- -- -- -- -- -- 9.00 90.30 44%
Netherland 8.85 85.96 -- -- -- 9.12 92.61 47%
Fiji -- -- -- -- -- -- 9.62 94.09 50%
Turkey -- -- -- -- 9.58 95.03 10.19 101.06 61%
Brazil -- -- -- -- 5.79 57.61
Bahrain 1.02 9.57 -- -- -- --
Lebanon 3.90 36.82 -- -- -- --
Kathmandu, Nepal 4.85 42.20 -- -- -- --
Egypt -- -- 1.35 14.20 -- --
Zimbabwe -- -- 4.54 46.38 -- --


Petrol Prices in IndiaCity 2008 Price (`) 2009 Price (`) 2010 Price (`) 2011 Price (`)
Agra -- -- -- -- -- -- 18-Sep-11 70.53
1-Nov-11 71.13
Ahmedabad 30-Sep-11 71.20
-- -- -- -- -- -- 22-May-11 67.52
-- -- -- -- -- -- 12-Feb-11 62.24
-- -- -- -- -- -- 25-Jan-11 52.28
Ajmer, Rajasthan -- -- -- -- -- -- 20-Sep-11 70.04
Allahabad -- -- -- -- -- -- 5-Jun-11 67.00
Ballia, Ghazipur/ UP -- -- -- -- -- -- 2-Mar-11 60.91
Bangalore -- -- -- -- -- -- 5-Nov-11 77.00
-- -- -- -- -- -- 3-Nov-11 74.82
-- -- -- -- -- -- 19-Oct-11 75.00
-- -- -- -- -- -- 29-Jun-11 73.00
23-May-08 55.00 14-Mar-09 52.17 16-Dec-10 63.45 22-May-11 71.00
11-Nov-08 57.17 -- -- -- -- 3-Apr-11 65.00
-- -- -- -- -- -- 17-Jan-11 65.45
Belgaum, Karnataka -- -- -- -- -- -- 14-May-11 65.00
Bhopal -- -- -- -- -- -- 10-Sep-11 68.49
Bhubaneswar, Orissa 27-Oct-11 66.72
Chennai -- -- -- -- -- -- 5-Nov-11 72.73
-- -- -- -- -- -- 23-Oct-11 71.10
-- -- -- -- -- -- 19-May-11 67.00
11-Jun-08 55.00 2-Jul-09 48.58 20-Aug-10 58 15-May-11 68.38
2-Jul-08 59.20 29-Jan-09 44.24 2-Jul-10 57 8-May-11 63.00
-- -- -- -- -- -- 8-Feb-11 65.00
-- -- -- -- -- -- 16-Jan-11 63.36
Cochin -- -- -- -- -- -- 20-Sep-11 69.70
Coimbatore -- -- -- -- -- -- 24-Oct-11 71.00
-- -- -- -- -- -- 13-Jun-11 67.05
9-Jun-08 58.91 -- -- -- -- 15-May-11 67.03
Dehradun -- -- -- -- -- -- 30-May-11 65.81
Faridabad -- -- -- -- -- -- 2-Feb-11 59.31
Gujarat 26-Jun-08 53.48 -- -- -- -- 5-Feb-11 62.10
Gurgaon, Haryana -- -- -- -- -- -- 15-May-11 61.98
-- -- -- -- -- -- 8-Feb-11 59.00
Guwahati( Assam) -- -- -- -- -- -- 25-May-11 66.65
Hyderabad -- -- -- -- -- -- 1-Nov-11 76.75
22-Apr-08 55.00 -- -- 14-Jul-10 57.91 16-Sep-11 74.48
30-May-08 51.10 -- -- -- -- 15-May-11 70.70
11-Jun-08 60.00 -- -- -- -- 21-Mar-11 65.15
13-Jun-08 56.65 -- -- -- --
25-Nov-08 56.00 -- -- -- --
Indore -- -- -- -- 6-Aug-10 55.17
Jaipur, Rajasthan -- -- -- -- -- -- 16-May-11 67.45
-- -- -- -- -- -- 5-May-11 62.64
Jalgaon/Maharashtra -- -- -- -- -- -- 15-May-11 69.00
Kanpur, UP -- -- -- -- -- -- 6-Jul-11 67.25
Kerala -- -- -- -- -- -- 19-Sep-11 70.00
-- -- -- -- -- -- 9-Jun-11 66.89
-- -- -- -- -- -- 26-Apr-11 61.96
-- -- -- -- -- -- 4-Feb-11 65.00
-- -- -- -- -- -- 18-Jan-11 61.31
Kolhapur -- -- -- -- -- -- 5-Nov-11 76.50
Kolkata -- -- -- -- -- -- 5-Nov-11 73.15
-- -- -- -- -- -- 16-Sep-11 71.15
4-Jun-08 48.95 2-Jul-09 48.25 -- -- 15-May-11 67.31
-- -- 29-Jan-09 44.05 -- -- 28-Feb-11 62.50
Lucknow -- -- -- -- -- -- 16-Sep-11 70.02
-- -- -- -- -- -- 5-Feb-11 62.61
Mangalore -- -- -- -- -- -- 23-May-11 71.00
-- -- -- -- -- -- 22-Jan-11 64.55
Margao /Goa -- -- -- -- 8-Jul-10 52.11 9-Mar-11 58.31
Mumbai -- -- -- -- -- -- 5-Nov-11 73.81
-- -- -- -- -- -- 31-Oct-11 71.92
-- -- -- -- -- -- 24-Sep-11 71.62
-- -- -- -- -- -- 12-Jun-11 68.33
8-Mar-08 56.00 2-Jul-09 48.76 7-Jul-10 55.20 15-May-11 68.32
4-Jun-08 50.51 4-Mar-09 44.00 -- -- 22-Feb-11 65.00
-- -- 29-Jan-09 44.55 -- -- 16-Jan-11 63.08
Muzaffarpur, Bihar -- -- -- -- -- -- 21-Jun-11 65.00
Mysore 1-Nov-11 74.06
Nagpur 23-Apr-08 54.25 -- -- -- -- 7-Feb-11 65.00
Nashik -- -- -- -- -- -- 17-Sep-11 71.75
New Delhi -- -- -- -- -- -- 5-Nov-11 68.64
-- -- -- -- -- -- 21-Sep-11 66.84
-- -- -- -- -- -- 15-May-11 63.41
24-May-08 47.00 2-Jul-09 44.63 4-Jul-10 51.43 16-Jan-11 58.37
Noida -- -- -- -- -- -- 19-Sep-11 70.77
Pondicherry -- -- -- -- -- -- 15-May-11 61.64
Pune 4-Jun-08 45.52 6-Jul-09 48.00 19-Dec-10 60.47 17-Sep-11 72.00
15-May-11 69.63
29-Feb-08 51.46 29-Jan-09 40.62 11-Jul-10 52.00 14-Apr-11 63.00
15-Jul-08 54.95 26-Jan-09 53.00 2-Feb-11 64.00
Punjab -- -- -- -- 13-May-10 53.00 20-Sep-11 73.87
Rajkot -- -- -- -- -- -- 1-Nov-11 70.68
Raipur,Chhattisgarh -- -- -- -- -- -- 21-Feb-11 59.89
Kashmir -- -- -- -- -- -- 18-Oct-11 69.85
-- -- -- -- -- -- 2-Feb-11 62.96
Simla 5-Nov-11 71.84
Surat 1-Nov-11 71.16
-- -- -- -- -- -- 17-Sep-11 71.00
Thane -- -- -- -- -- -- 3-Feb-11 41.41
Tamil Nadu -- -- -- -- 13-Jul-10 55.92 16-Jan-11 63.01
Tirupati -- -- -- -- -- -- 20-Sep-11 73.45
Trivandrum -- -- -- -- -- -- 17-Sep-11 70.00
-- -- -- -- -- -- 23-Jul-11 67.00
-- -- -- -- -- -- 16-Jun-11 65.91
Vadodara, Gujarat -- -- -- -- -- -- 1-Nov-11 70.36
-- -- -- -- -- -- 16-May-11 68.00
-- -- -- -- -- -- 18-Feb-11 61.51
Visakhapatnam -- -- -- -- -- -- 5-Nov-11 75.00
-- -- -- -- -- -- 27-Sep-11 73.00



Note:

மேற்கண்ட விலை ஒப்பீடு http://kshitij.com/research/petrol.shtml என்ற தளத்திலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை அதனையே சாரும். நன்றி!

எனவே பெட்ரோல் விலை உயர உண்மையான காரணங்கள் என நான் கருதுவது,

# மத்திய மாநில அரசுகளின் வரி மொத்தமாக 45 %

#எண்ணை சுத்திகரிப்பு நிலையத்துக்கும், விற்பனை நிலையத்துக்கும் இடையே கொண்டு செல்ல ஆகும் செலவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலும் குழாய்கள் வழிக்கொண்டு செல்லப்படும், நம் நாட்டில் அதிகப்பட்சமாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிரது. குழாய் வழி விநியோகம் குறைவே.

#எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு, வெளிநாட்டில் 100 பேர் செய்யும் வேலைக்கு இங்கே 1000 பேர் வேலை செய்ய இருக்காங்க, மேலும் அதிக சம்பளம், போனஸ், என 6 மாதத்துக்கு ஒரு முறை அள்ளி விடுவது, ஆனால் செயல் பாடு அதே அளவுக்கு இல்லை. அதாவது எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டே லாபத்தொகையை குறைக்கின்ற இப்படி பட்ட செலவீனங்கள் மூலமாக.
எந்த எண்னை நிறுவனமும் நட்டம் என பேலன்ஸ் ஷீட் காட்டவில்லை, ஆனால் ஏன் நட்டம் என்கிரார்கள், அவர்கள் 10000 கோடி லாபம் எதிர்பார்க்க 2500 கோடி லாபம் வந்தால் உடனே நட்டம் என்கிறார்கள், அதாவது லாபத்தில் நட்டம்!



பாரத் பெட்ரோலியத்தின் லாப நட்ட கணக்கு அதன் பேலன்ஸ் ஷீட்டில் இருந்து,

Profit loss account Mar ' 11 Mar ' 10 Mar ' 09 Mar ' 08 Mar ' 07
Income
Operating income 1,50,838.33 1,20,216.99 1,34,073.43 1,10,208.13 96,556.85
Expenses
Material consumed 1,38,971.98 1,09,894.18 1,23,567.17 1,02,136.48 88,539.75
Manufacturing expenses 886.02 621.84 414.26 291.29 310.08
Personnel expenses 2,802.85 2,141.12 1,884.88 1,297.21 1,003.70
Selling expenses 2,854.80 2,585.47 2,426.14 2,052.39 1,875.82
Adminstrative expenses 1,812.07 1,489.82 1,240.35 1,279.79 1,109.72
Expenses capitalised - - - - -
Cost of sales 1,47,327.72 1,16,732.43 1,29,532.80 1,07,057.16 92,839.06
Operating profit 3,510.61 3,484.56 4,540.63 3,150.97 3,717.79
Other recurring income 1,395.95 1,679.64 1,491.16 982.98 768.63
Adjusted PBDIT 4,906.56 5,164.20 6,031.79 4,133.94 4,486.42
Financial expenses 1,100.78 1,010.95 2,166.37 672.47 477.35
Depreciation 1,655.40 1,242.32 1,075.53 1,098.21 904.11
Other write offs - - - - -
Adjusted PBT 2,150.38 2,910.93 2,789.89 2,363.26 3,104.96
Tax charges 776.24 823.75 261.12 1,010.00 955.33
Adjusted PAT 1,374.14 2,087.18 2,528.77 1,353.26 2,149.62
Non recurring items -74.91 -489.45 -1,789.90 108.65 -217.64
Other non cash adjustments 247.45 -60.11 -2.97 118.65 -126.50
Reported net profit 1,546.68 1,537.62 735.90 1,580.56 1,805.48
Earnigs before appropriation 1,727.74 1,613.99 735.90 1,580.56 4,488.39
Equity dividend 506.16 506.16 253.08 144.62 578.47
Preference dividend - - - - -
Dividend tax 71.08 72.77 31.45 9.16 91.87
Retained earnings 1,150.50 1,035.06 451.37 1,426.78 3,818.05

Mutual Fund Selector
Find the fund that is right for you
Market Astrology
Stock market predictions by Satish Gupta

1546 கோடி இறுதி லாபம் எனக்காட்டியுள்ளார்கள், இதில் ரிடெய்ன்ட் எர்னிங்  1150 கோடி சேர்த்தால் 2696 கோடி லாபம் ஈட்டியதாக கணக்கில் கொள்ள வேண்டி இருக்கும்.






மேலும் லாபத்தை ஆங்காங்கே தொழில்நுட்ப ரீதியாக பரவ விட்டு பதுக்குவார்கள். கணக்கில் நேரடியாக காட்ட மாட்டார்கள்.


15 comments:

thiagu1973 said...

தல பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி உங்கள் பதிவு பல்வேறு தரவுகளை கொண்டுள்ளது இதை எல்லாம்படித்து விட்டு கேள்விகளை கேட்கிறேன்

SURYAJEEVA said...

என் பழைய கட்டுரையில் போட்டிருந்தது பழைய விலை படி, அதை இன்றைய தேதியில் திருத்தினால் நீங்கள் சொன்ன விலைக்கு நிகராக வருகிறது... வரி விதிப்பு இருக்கிறது, ஆனால் அந்த வரிவிதிப்பு நிலையானது தானே... அப்புறம் எப்படி விலை ஏறுவதும் இறங்குவதும் என்பது தான் இந்துவில் வெளிவந்த கட்டுரை; அதை ஒட்டி என் கட்டுரை... ஆனால் நீங்கள் மிகவும் விலாவாரியாக எழுதி இருக்கிறீர்கள்.. நன்றி...

ராஜ நடராஜன் said...

விலாவாரியாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.விலா எலும்புவாரியாக இப்பொழுதுதான் பார்க்கிறேன்:)

நீங்கள் குறிப்பிட்டவற்றில் எண்ணை வள நாடுகள் சேர்ந்து இயங்கும் OPEC என்ற நிறுவனம் நிர்ணயிக்கும் விலை விட்டுப்போயுள்ளது. பெட்ரோலுக்கு உள்ள இன்னுமொரு சந்தை வித்தியாசம் Fluctuation market கூட.2008 கணக்கு ஏன் காண்பிக்கிறீங்க?நேரா 1990க்கே கூட போய் விடலாம்.உதாரணமாக சதாம் டாலரில் விறகமாட்டேன் என்று முரண்டு பிடித்ததால் அமெரிக்கா நோண்ட,போர் வருமோ என்ற பயத்தில் விலை கிடு கிடுப்பதும்,இஸ்ரேல்காரனும்,ஈரானும் சண்டை போடுவார்களா,அல்லது ஈரானைக் கடந்தே எண்ணை கப்பல்கள் பயணம் செய்ய வேண்டிய காரணங்கள் கூட உலக விலைச்சந்தையை நிலையாக வைத்திருப்பதில்லை.கூடவே இப்பொழுது சீனா,இந்திய வளரும் பொருளாதார நாடுகளின் எண்ணைத் தேவையும் depand and supply என்ற பொருளாதார அ,ஆ வன்னாவும்,உலகின் எந்த அவசர செய்திகளும் பெட்ரோலை கிடுகிடுக்க வைக்கின்றன.மதுரைல கேட்டாக,கோயம்புத்தூர்ல கேட்டாக மாதிரி பங்களாதேஷ்ல பெட்ரோல் கிடைக்குது,இலங்கையில பெட்ரோல் கிடைக்குதுன்னு செய்தி மட்டும்தான் வருகிறது.கிடைக்கிறபாடாய் காணோம்.கிடைத்தால் அமெரிக்காகாரன் புது ஆட்டம் போடுவதை வேடிக்கை பார்க்கலாம்.

எனக்கு 60 fils ,65 fils 90 fils என்று unlead பெட்ரோல் கிடைக்கின்றன.நான் ஊத்தறது 65 fils.5 குவைத் தினார் முழு டப்பா.நீங்க முன்னாடி சொன்ன அமெரிக்கா குண்டு குண்டா கார் தயாரிப்பதால் கிராண்ட் செரோக்கி 5.2 எஞ்சின் வேகம் உள்ள பழைய ட்ப்பா.கிடைக்கும் இரண்டு சல்லிசான விலை பெட்ரோலும்,குப்புஸ் ரொட்டியும்.

ராஜ நடராஜன் said...

ஊக வணிகம் என்ற சொற்பதம் தலையில் உட்கார்ந்து கொண்டு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டதால் முந்தைய பின்னூட்டத்தில் விடுபட்டு விட்டது.ஊகவணிகத்தின் அடிநாதமே பெட்ரோல் விலை ரகசியம் எனலாம்.

ஊகவணிகம் சொற்பத அகராதி வால்மார்ட் பதிவுக்கு நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

உங்களை போல எண்ணை அதிபர்களை வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியது இருக்கு :-))

//கேள்விப்பட்டிருக்கிறேன்.விலா எலும்புவாரியாக இப்பொழுதுதான் பார்க்கிறேன்:)//

என் விலா எலும்பு கூட இதில தெரியலாம், சொந்த வண்டிலவும் போக முடியலை இப்போ பேருந்திலும் போக முடியலை... :-))

//நீங்கள் குறிப்பிட்டவற்றில் எண்ணை வள நாடுகள் சேர்ந்து இயங்கும் OPEC என்ற நிறுவனம் நிர்ணயிக்கும் விலை விட்டுப்போயுள்ளது.//

இதை விட்டுடேன் எனக்கும் தெரிஞ்சது, மேலும் ஆயில் ரிசர்வ் பூல் எல்லாம் சொல்ல முடியவில்லை, ரொம்ப பெரிசா போயிடுச்சு பதிவு.(தியாகு பதிவில பின்னூட்டமாக சொன்னேன் அதை)

இஸ்ரேலுக்காகவும் சேர்த்தே அமெரிக்கா ஆயில் பூலில் கச்சா வாங்குகிரது, அவங்களுக்குள்ள ஒப்பந்தம் அப்படி,ஒரு வருடம் யாரும் எண்ணை கொடுக்கவில்லை என்றாலும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு எண்ணை தருமாம், ஒப்பந்தம் இருக்கு ,ஏன் அப்படினு விளக்கம் இல்லை.

2008 அடிபடையிலா என கேட்கறிங்க வேற எதுவும் விளக்கமா இணையத்தில இல்லையே, எல்லாம் சதவீதம் போட்டா இப்போ இருக்க விலைக்கு வரும் தானே.

சதாம் செய்ததுல ஊழலும் இருக்கு, அவங்க உணவுக்கு பெட்ரோல் ஸ்கீம்ல அடிச்சாங்கனு படிச்சு இருக்கேன், இப்போ இருக்க நட்வர்சிங், பிரணாப் முகர்ஜிலாம் காசு பார்த்தாங்க அப்போ.(கேள்வி தான் ஆதாரம் கேட்டு சேதாரம் பண்ண வேண்டாம்)

வவ்வால் said...

தல,

நிதானமா படிங்க, உங்க கிட்டே இருந்து நிறைய கேள்விகளை எதிர்ப்பார்க்கிறேன் :-))

-------------------

சூர்யா,

நன்றி,

நானும் அதான் நினைத்தேன். வரி விகிதங்கள் நிலையானவை அல்ல,அவ்வப்போது மாறுவதே, அதிகம் கறக்கும் கறவை மாட்டிடம் அதிகம் கறப்பதைப்போல மக்களிடம் பெட்ரோல் மூலம் மத்திய மாநில அரசுகள் அதிகம் கறக்கின்றன. சர்வதேச கச்சா விலை, கம்மோட்டி எல்லாம் விலை உயர்வுக்கு சிறிய காரனங்களே.அதே சர்வதேச விலைகள் அமெரிக்காவுக்கும் உண்டு தானே அவர்கள் எப்படி 44 ரூ க்கு தருகிறார்கள், காரணம் குறைவான வரி விகிதம்.

முரட்டு காளை said...

அய்யா ஐதிங்க் பெரியவரே,

நீர் சொல்வது போல ஒரு எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெட்ரோல் மட்டும் தயாரிப்பதில்லை, மற்ற எரிபொருள்கள் ஆகிய கெரோசின், டீசல், விமான எரிபொருள் (ஏவியேஷன் டர்பைன்), நாப்தா, பரபீன் வாக்ஸ், எல்.பி.ஜி. ப்ரொபிலீன், ஆரோமடிக்ஸ் என்று நிறைய கிடைக்கின்றன. நீர் வெறும் பெட்ரோல் விலையை மட்டும் ஒப்பிடக்கூடாது. கெரோசின், டீசல் மற்றும் எல்.பி.ஜி. யில் தரப்படும் மானியம், மற்ற எரிபொருள்கள் விற்பதால் ஏற்படும் லாப நட்டம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் லாபத்தில் ஒரு வருடம் இயங்கினால் அதே போல அனைத்து நிறுவனங்களும் இயங்க வேண்டும் என்றில்லை. தொழிற்சாலையின் திறன், இயந்திரங்களின் இயக்கம், என்று பல காரணிகள் உள்ளன. விலை ஏற்றதை நியாயப்படுத்த நான் இதை எழுதவில்லை. பொது மக்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதான கணக்கு அல்ல இது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். மேலும் பெட்ரோல் விலை நிர்ணயிக்க உம்மை போல ஒரு அறிவு ஜீவிகளை கொண்ட உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

அது சரி, அடக்க விலை பத்து ரூபாய் கூட வராத ஒரு குவார்டர் ஐ நீர் எண்பது ரூபாய்க்கு வாங்குறீரே அப்போ யோசிக்கிறீரா? இதனை சிரமப்பட்டு பெட்ரோல் தயரிக்கிறவங்களையும் அரசாங்கத்தையும் குறை சொல்வதற்கு முன் மற்ற பொருள்கள் விலையேற்றத்தையும் சற்று யோசியும் சாமியோவ்.

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா, எவ்ளவ் டீட்டெயில்டு போஸ்ட்.. செம

வவ்வால் said...

//இப்போ 100 டாலர் விலையில் இருக்கும் கச்சாவில் இருந்து 50 சதவீதம் பெட்ரொல் எடுத்தால் விலையை சராசரியாக 2 டாலர் என வைக்க வேண்டி இருக்கும், ஆனால் அப்படி இல்லையே ஏன்? காரணம் கச்சா சுத்திகரிப்பில் கிடைப்பவை அனைத்துமே விலை போக கூடிய பொருட்கள், டீசல் , மண்ணெணை, பாரபின் மெழுகு, மேலும் கடைசிப்பொருளான அஸ்பால்ட்(தார்) என எல்லாமே காசு தான். எனவே மொத்த வருவாய், செலவு எல்லாம் கணக்கிட்டே விலை நிர்ணயம் செய்வார்கள்.//

//ஒரு பேரால், 42 கேலன் கச்சா வாங்க ஆகிய செலவு, சுத்திகரிப்பு செலவு எல்லாம் கணக்கிட்டு , சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் மற்ற பொருட்களின் மதிப்புடன் ஒப்பிட்டு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு இவ்வளவுனு தீர்மானிப்பார்கள்.//

வாரும் புல்ஸ்,

எங்கே கொஞ்ச நாளா அந்தகாரத்தில மூழ்கிட்டிங்களா, ஆளே காணோம்? சரி பதிவைப்படிக்கும் போது நீல பட்டியல் ,சிவப்பு பட்டியல்னு ஏதாவது தீர்த்தம் சாப்பிட்டு இருந்திங்களா?

//நீர் வெறும் பெட்ரோல் விலையை மட்டும் ஒப்பிடக்கூடாது.//

இப்படி சொல்லி இருக்கிங்க, நான் தான் மற்ற உப பொருள் , அதன் வருவாய் என் அனைத்தையும் கணக்கில் எடுப்பாங்க என்று பதிவில் சொல்லி இருக்கேனே, உங்களுக்காக காபி பேஸ்ட் பாருங்க.

//அது மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் லாபத்தில் ஒரு வருடம் இயங்கினால் அதே போல அனைத்து நிறுவனங்களும் இயங்க வேண்டும் என்றில்லை.//

தொடர்ந்து லாபமாகவே எண்ணை நிறுவனங்கள் செயல்ப்படுவது பங்குசந்தை வித்துவான் உங்களுக்குதெரியாதா?

இந்த ஆண்டுக்கான போர்ப்ஸ் ஃஃபார்சூட்ன் 500 பட்டியலில் முதலிடம் ஐஓசி, என அடுத்து அடுத்து எண்ணை நிறுவனங்களே இடம் பிடித்து இருக்கு பார்க்கவும்.

அதாவத்உ விற்றுக்கொள்முதல் 1,50,000 கோடி வரும் ஒரு எண்ணை நிறுவனம் நிகர லாபமாக 10% 15,000 கோடி எதிர்ப்பார்க்கிறது, ஆனால் 1500 கோடி மட்டும் வருகிறது என்றால் நட்டம் சொல்லி விடுவார்கள், இதான் எண்ணை நிறுவனங்கள் புலம்பக்காரணம்.

பொதுத்துறை எண்ணை நிறுவங்களின் மூலதனம் மக்கள் பணம் தானே எனவே மக்களுக்கு குறைவான லாபத்தில் விற்றால் என்ன தப்பு?

//அது சரி, அடக்க விலை பத்து ரூபாய் கூட வராத ஒரு குவார்டர் ஐ நீர் எண்பது ரூபாய்க்கு வாங்குறீரே அப்போ யோசிக்கிறீரா?//

நான் அதை எல்லாம் யோசிச்சா தமிழ்நாட்டுக்கு நிதித்தட்டுப்பாடு வந்திடுமே, அப்புறம் ஒரு யூனிட் மின்சாரம் 100 ரூ விலை வைப்பாங்க அம்மா , ஓ.கேவா, புல்சாமி நான் உங்களுக்காக டாஸ்மாக் ல பணம் தியாகம் செய்யும் தியாகிய்யா!

//மற்ற பொருள்கள் விலையேற்றத்தையும் சற்று யோசியும் சாமியோவ்.//

டீசல் 1 ரூபாய் விலை ஏறினா அரிசி ,காய்கறி எல்லாம் 5 ரூபாய் ஏறும் என்பதை ஏன் மறந்து விட்டீர். ஆனால் அரிசில 1 ரூ ஏறினா மற்ற விலையுர்வை ஏற்ப்படுத்தாது. பெட்ரோலியம் என்பது கேயாஸ் விளைவை ஏற்படுத்தும்.

வவ்வால் said...

//அடேங்கப்பா, எவ்ளவ் டீட்டெயில்டு போஸ்ட்.. செம//

சிபி,

வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி!

முரட்டு காளை said...

சுருக்கமா ஒரே வரியில சொல்லவா? எத்தனை முறை, எவ்வளவு விலை ஏற்றினாலும் விற்கக்கூடிய பெட்ரோலை அரசாங்கம் குறி வைக்குறாங்க... போதுமா..?

நீர் தியாகி அது இதுன்னு தம்பட்டம் அடிக்காதேயும்... அப்புறம் பென்ஷன் கேட்டு கோர்ட் கோர்ட் ஆ அலையறதுக்கு இப்பவே முன்னுரை எல்லாம் போடகூடாது...

வவ்வால் said...

வாரும் புல்ஸ் சாமியோவ்,

என்ன வேகம்!

நீர் சுருக்கமாக சொன்னத தான் நான் இப்படி சொல்லி இருக்கேன்,

//அதிகம் கறக்கும் கறவை மாட்டிடம் அதிகம் கறப்பதைப்போல மக்களிடம் பெட்ரோல் மூலம் மத்திய மாநில அரசுகள் அதிகம் கறக்கின்றன. சர்வதேச கச்சா விலை, கம்மோட்டி எல்லாம் விலை உயர்வுக்கு சிறிய காரனங்களே.//

முரட்டுக்காளையா இருக்கலாம் ஆனால் இப்படி கண்னு மண்ணு தெரியம படிக்கக்கூடாது நிதானமாக படிக்கவும்! சரி வலைல தான் கீறீரா?

ஜோதிஜி said...

விலாவாரியாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.விலா எலும்புவாரியாக இப்பொழுதுதான் பார்க்கிறேன்:)

கிட்டத்தட்ட புத்தகத்தை படிக்கும் அளவுக்கு புள்ளி விபரங்கள். கொஞ்சம் (நீங்க சொன்ன கவர்ச்சி) படிக்க உகந்த நடையில் எழுத மாட்டீங்களா? வெறுமனே விபரங்கள் விபரங்கள் என்றால் திகட்டி விடாதா?

பாதி இடங்களில் கட் அண்ட் பேஸ்ட் கணக்கா?

இந்த பெட்ரோல் பற்றி கிழக்கு பதிப்பகம் ஒரு பத்திரிக்கை கொண்டு வருவதால் என்னிடம் ஒரு கவர் ஸ்டோரி எழுதி வாங்கி இருக்காங்க. எப்போதும் போல என் நடை(?) தான். ஆனால் இதை படித்தவுடன் எனக்கே தலைசுத்துது.

வவ்வால் said...

ஜோதிஜி,

வாங்க , வணக்கம், நன்றி!

கவர்சியாக எழுதினாப்படிக்க நன்றாக இருக்கும், பயன் இருக்காது. வெற்று மேடைப்பேச்சாக இருக்கும்.

நான் என்ன கூட்டத்தை திரட்டும் எழுத்துக்கு சொந்தக்காரனா :-))

//பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளை கொல்லும் புனிதப்பணியை துவங்கினார்.

ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.//
மேற்கண்டது உங்கள் பதிவில் உள்ளது, ஒரு நாளைக்கு 50000 மாடுகள் வீதம் ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி மாடுகள் வெட்டப்பட்டதுனு எழுதுறிங்க, உங்கள் கூற்றுப்படியே கணக்குப்போட்டால் 1.8 5 கோடி மாடுகள் ஆண்டுக்கு வரும். இது போல கவர்ச்சியாக எழுதி என்ன ஆகப்போகிறது :-))

பசுவதை தான் இரசாயன் உர விவசாயத்துக்கு காரணம் என உண்மைக்கு புறம்பாக கட்டமைப்பதை விட தகவல்கள் அடிப்படையில் நம்பகத்தன்மையோடு எழுதுவது பிழையா?

கட்&பேஸ்ட் ஆக வருவது எல்லாம் தரவுகளே , கருத்துகள் தமிழில் என்னால் எழுதப்பட்டவைத்தானே! ஸ்கீர்ன் ஷாட் போடுவது போல அது.

தனி ஒருவன் said...

இவ்வளவு சிக்கல் இருக்கும்போது அரசு ஏன் ஏற்று நடத்தக் கூடாது ....????