Friday, December 16, 2011

விவசாயி படும் பாடு!-1


      விவசாயி படும் பாடு!-1








உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சொலவடை வால்மார்ட், யூக வணிகம் , அந்நிய முதலீடுகள் என்ற சொற்பதங்களை எல்லாம் நாம் கேள்விப்படும் காலத்திற்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் நிலவி வருவது.

எனவே இக்காலத்தில் விவசாயம் எந்த அளவு லாபகரமானது , அதை தொடர்ந்த்து விவசாயிகள் செய்ய ஏதுவாக இருக்கிறதா என இப்பதிவில் பார்க்கலாம்.

தற்சமயம் நாங்கள் விவசாயம் செய்வதில்லை என்பதால் தமிழ் நாட்டில் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும், என்ன வருமானம் கிடைக்கும் என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

கோவை வேளாண் பல்கலைகழக தளத்தில் கீழ்கண்ட விவரங்கள் கிடைத்தது. அத்தளத்தில் உள்ள தகவல்கள் எந்தக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.நடைமுறையில் இதே அளவு செலவு செய்து விவசாயம் செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!



COST OF CULTIVATION (ACRE) in Rs.

 Land Preparation ->1500 ரூ

Seeds & sowing  ->  2000 ரூ


Manures & Manuring ->2500 ரூ

Weeding after cultivation & Irrigation ->1620 ரூ

Plant protection -> 803 ரூ

Harvest and other Expenses (Rs.) -> 2300 ரூ

                                          ______________
       செலவு=                         Total 10723

வருமானம்:

Yield (Kg)  -> 2100

 Gross Income (Rs.):  ->15123-10723=4400 ரூ.


Net income (Rs.) : ->    4400


சுட்டி:

கோவை வேளாண்ப்பல்கலை

கோவை வேளாண்ப்பல்கலைக்கழக தகவல்கள்ப்படியே விவசாயம் செய்யப்பட்டிருந்தாலும் கிடைக்கும் நிகர லாபம் என்பது ரூபாய் 4,400 மட்டுமே என்பதைப்பார்க்கவும்.

 கால அளவின் படி நெல் வகைகள்:

#குறுகிய காலப்பயிர்: 110-125 நாட்கள்

#இடைக்காலம் முதல் நீண்டக்காலப்பயிர்: 120-170 நாட்கள்.

#நீண்டக்காலப்பயிர் : 170 நாட்கள்.

ஒரு குறுகிய கால நெல் சாகுபடி என்பது சுமார் 115- 125 நாட்கள் கொண்டது. அதாவது சுமார் நான்கு மாதங்கள் என வைத்துக்கொள்ளலாம்.

நான்கு மாதங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய் சுமார் 4,400 ரூபாய் மட்டுமே வருகிறது, ஒரு சிறு விவசாயிக்குடும்பத்தில் தாய்,தந்தை,மகன்,மகள் என நான்கு நபர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் நான்குப்பேரும் அந்த ஒரு ஏக்கரில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள், அதன் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள்.

அப்படியானால் ஒருவருக்கு என்ன வருமானம் கிடைக்கும் =4,400/4= 1100 ரூபாய்.

இந்த 1100 என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு நான்கு மாத உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி!

அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,

1100/4= 275 ரூபாய் மட்டுமே!

ஒரு தனி நபர் மாதம் 275 ரூ வருமானத்தில் என்ன வாழ்க்கை வாழ முடியும் இந்தியாவில்?

இது ஏதோ நானே கணக்கிட்டு மிகைப்படுத்தி சொல்லவில்லை, கோவை வேளாண்ப்பல்கலையில் காஸ்ட் ஆப் கல்டிவேஷன் என பட்டியல் இட்டு வைத்திருப்பதன் அடிப்படையில் சொல்கிறேன்.சந்தேகம் இருப்பவர்கள் அச்சுட்டியில்ப்போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.


மாநில வாரியா நெல் சாகுபடியில் ஏற்படும் நட்டம்:






சுட்டி:



நெல்சாகுபடிவருவாய்

  
அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது விவசாய செலவினை ஈடுகட்டுவதாக இல்லன என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள்.இந்த சுட்டியில் போய்ப்பார்த்தால் நிகர நட்டம் வருவதாகவே சொல்லி இருக்கிறார்கள்.அதில் உள்ள அட்டவணையையும் பார்க்கவும்.

திடீர் வெள்ளம், மழை இல்லா வறட்சி, பூச்சி தாக்குதல், குறைவான விளைச்சல் என இதில் ஏகப்பட்ட சோதனைகள் வேறு. அதை எல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே அந்த குறைந்த தொகையான 275 ரூபாயை ஒரு விவசாயிக்கண்ணால் பார்க்க முடியும் நம் நாட்டில்!

ஒரு மனிதன் 3 வேளையும் பசியாற நாளுக்கு 32 ரூபாய் போதும் என சொன்ன திட்டக்கமிஷன் அறிக்கையை விட இத்தொகை மிக குறைவு.

பலருக்கும் நன்றாகவே தெரியும் 32 ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ முடியாது என, அதனால் திட்டக்கமிஷனின் அறிக்கையை பலரும் கிண்டல் செய்தோம், ஆனால் யதார்த்த வாழ்வில் ஒரு விவசாயிக்கு மாதம் 275 ரூபாய் தான் வருமானம் வருகிறது.

திட்டக்கமிஷன் பரிந்த்துரைப்படி ஒருவருக்கு மாத வருமானம் = 32 ரூX30 =960 rs  வரவேண்டும்.

ஆனால் அந்த தொகையை விட பல மடங்கு குறைவானதாக இருக்கே.

இப்படி எல்லாம் இருந்தும் விவசாயி எப்படி ஜீவித்திருக்கிறான், அவன் வயலில் வேலை செய்த நாட்களைப்போக பிற நாட்களில் கூலி வேலைக்கு போயே வாழ்கிறான்.மேலும் நமக்கெல்லாம் நயமான பொன்னியை விளைவித்துக்கொடுத்துவிட்டு புழுத்துப்போன அரசின் இலவச அரிசியே அவன்  பசியைப்போக்குகிறது.

இத்தனை சோதனைகளுக்கும் நடுவிலும் விவசாயத்தை விடாமல் யாருக்காக அவன் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறான்?


எல்லாம் நமக்காக தானே! உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்,
2010 ஆம் ஆண்டில் 132 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நமக்கு தேவை 128 மி.மெ.டன் தான். அதாவது விவசாயி எத்தனை கட்டம் வந்தாலும் அதை விட மனம் இல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் இருப்பதாலேயே   நமக்கு தேவைக்கு உணவு உற்பத்தி ஆகிறது. இது எத்தனைக்காலம் தொடரும்.

இப்பொழுதே கிராமப்புரத்தில் வறுமை, வேலை வாய்ப்பின்மையால் பலரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அங்கே விவசாய வேலை ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு.






ஆட்கள் தட்டுப்பாடால் நடவு முதல் , அறுவடைவரை எந்திரம் ஆகி விட்டது.

கட்டுமானத்தொழிலுக்கு வேலைக்கு போனால் குறைந்த பட்சம் 200 ரூ ஆனால் விவசாய வேலைக்கு அதிக பட்சமே 150 ரூ தான்! சம்பளம் அப்போ ஆட்கள் எங்கே வேலைக்கு போவார்கள்.


எவன் எப்படி போனா என்ன , எனக்கு வெளிநாட்டுக்காரன் நல்லா  சம்பளம் தறான் , வாங்கி தின்ன பொருட்கள் இருக்குனு இருக்கவங்க எல்லாம் , விவசாயம்னா என்னனு எனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு இருக்காங்க, ஒரு காலம் வரும் விவசாயம் செய்ய ஆளே இருக்காது, விளை நிலங்கள் எல்லாம் தரிசாக விடப்படும்,உணவுப்பொருட்கள் எல்லாம் பணக்காரர்களுக்கே ஆடம்பரம் ஆகும், அப்போ 120 கோடி மக்களுக்கும் எங்கே உணவுக்கு கை ஏந்துவார்கள்!


இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா  அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.

எனவே வெளிநாட்டில /இந்தியாவில் மென்பொருளில் போய் வேலை செய்து தனது  குடும்பத்தை மட்டும் வளமாக்குபவர்கள் சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய்!

ஆனால் ஆதி காலம் தொட்டே விவசாயிக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராம செய்தவங்க வெளிநாட்டுக்காரங்களா?  இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா அந்நிய மூல தன எதிர்ப்பை சொல்லுங்க மக்களே!




சிறு நகரங்களை சுற்றியுள்ள இடங்களோ வீட்டு மனைகளாக மாறி வருவதால் விளைநில பரப்பு சுருங்கி வருகிறது.

மேலும் அதிக பணம் வைத்திருப்பவர்கள் எதிர்கால முதலீடாக நிலங்களை வாங்கிப்போட்டு விவசாயம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இந்த வேலையை பெரும்பாலும் செய்வது அயல்நாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நில மூலதனம் செய்யவில்லை.

ஏன் எனில் சமிபத்தில் சென்னை நகரில் தான் வீடு வாங்க முடியவில்லை கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என புறநகர்ப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாம் என விசாரித்தேன் எல்லாம் 50-70 லட்சம் சொல்கிறார்கள் 1000-1200 சதுர அடி அடுக்ககத்தை.ஒரு கோடிக்கு கூட மகிந்திரா சிட்டியில் வைத்திருக்கிறார்கள். அருண் எக்செல்லோவில் 70 லட்சம்என பீதிக்கிளப்புகிறார்கள்.

ஏன் இப்படி புறநகரிலேயே இந்த விலை எனக்கேட்டதுக்கு கிரவுண்ட் விலையே ஏறிப்போச்சு, எல்லாம் எதிர்காலத்திற்காக சும்மா வாங்கிப்போட்டு இடத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கு மாடியில்  எல்லாம் மென்பொருள், அயல்நாடு வாழ் இந்தியர்கள் தான் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என குண்டைப்போட்டார் விற்பனை மேலாளர்.

நிலத்தின் மீது மதிப்பு ஏறுது ஆனால் அதில் விளையும் விளைச்சல் மீது எதுவும் ஏறவில்லை! இவங்க எல்லாம் வருங்காலத்தில என்ன விலைக்கு விற்றாலும் சாப்பிடுவாங்களோ?

இப்படி பல வகையிலும் விவசாயத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் விவசாயிகள் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் இருப்பார்கள்.

மூலப்பொருட்கள் ஆன உரம், பூச்சி மருந்து, விதை நெல் , மின்சாரம் , டீசல் ,மேலும் விவசாய தொழிலாளர் சம்பளம் என அனைத்தும் வேகமாக விலை ஏறி வருகிறது ஆனால் அதே வேகத்தில் அவன் விளைச்சளுக்கு ஆன விலை ஏறுவதில்லை.

இடைத்தரகர்களும், கமிஷன் மண்டிக்காரர்களும் அரசு என்ன குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கிறதோ அதன் மீது ஒரு 10 ரூபாய் குவிண்டாலுக்கு வைப்பார்கள்.

சமயத்தில் அரசின் தமிழ்நாடு வாணிபக்கழகம் போதுமான நெல்லை கொள்முதல் செய்யவில்லை, அல்லது அப்பருவத்திற்கான கொள்முதலை நிறுத்தி விட்டால் , தரகர்கள், கமிஷண் மண்டிக்காரர்கள் வைப்பதே விலை.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை:


4. Accordingly, the Government hereby permit the Tamil Nadu Civil
Supplies Corporation to procure paddy under the Decentralized Procurement
System, during the Khariff Marketing Season 2011-2012, i.e. from 01.10.2011 to
30.9.2012, at the price of Rs.1180/- per quintal for Grade ‘A’ paddy and Rs.1130/-

for Common variety of paddy by opening adequate number of procurement
centers in the Cauvery delta region and other paddy growing areas in the State, in
consultation with the District Collectors on need basis.


சுட்டி:

tngov.msp for paddy

எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரை என்னவெனில் குறைந்த பட்ச ஆதரவு விலை என்னவோ அதனுடன் 50% விலை அதிகம் வைத்து நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என உள்ளது.

தமிழ்நாட்டில் இடுப்பொருட்களின் விலை விவரம்:

யூரியா ஒரு மூட்டை= 310 ரூ

டிஏபி ஒரு மூ= 900 ரூ

பொட்டாஷ் ஒரு மூ =620

சூப்பர் காம்ப்ளக்ஸ் ஒரு மூ= 870 ரூ.

மேற்சொன்ன விலை ஒரு விவசாய இடுப்பொருட்கள் கடையில் நேரடியாக விசாரித்துபோட்டுள்ளேன்.

#அரசு நிர்ணயம் செய்துள்ள உரங்களின் விலை, இந்து செய்தித்தாளில் இருந்து,

//The government has fixed Rs. 278.88 as the price per 50 kg bag of urea, Rs. 312 for IPL Potash, Rs. 315 Zuari potash, Rs. 624 for Iffco DAP, Rs. 630 for Zuari DAP, Rs. 656 for Spic DAP, Rs. 488.50 for Factamfos 20:20:20:0, Rs. 520 for Iffco 20:20:20:13 and Rs. 567.60 for Zuari 10:26:26, a press release says.//


சுட்டி:

the hindu


நடைமுறை விலை மற்றும் அரசு நிர்ணயத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.

விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,
ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ

பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)

விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,

சுட்டி:

அரசு சம்பளநிர்ணயம்


பின்னர் பூச்சி மருந்து தேவைக்கு ஏற்ப எப்படியும் ஒரு ஏக்கருக்கு 1000 ரூ, விதை நெல் ஒரு 1000 ரூபாய் வரும்.

இப்படி அனைத்து இடுப்பொருட்களின் விலையும் வருடா வருடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏறி வருகிறது ஆனால் ,விளைச்சலுக்கான விலை மட்டும் மெதுவாக நகர்கிறது.

இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார் என்பதை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

தொடரும்...


.
50-70

19 comments:

SURYAJEEVA said...

தோழர்,
விவசாயம் குறித்து தெரிந்து கொள்ள சந்தேகம் கேட்கிறேன்..

விவசாயிக்கு மொத்த வருமானமும் நிகர வருமானத்தையும் வைத்து மாதம் 275 ரூபாய் ஊதியம் என்று வரையறை செய்கிறீர்கள்
உண்மையில் அது பொருள் மூலதனத்துக்கான வருவாய் மட்டுமே.. [இது எந்த வித இடையூறும் இல்லாமல் விவசாயம் நடந்தால் மட்டுமே. வெளிக் காரணிகள் பிழைப்பில் மண் அள்ளி போட்டால், நஷ்டம் தான்]

விவசாயி போட்ட உழைப்பு மூலதனத்திற்கு எந்த பணமும் அவனுக்கு கிடைப்பதில்லை... அதை பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட அவனுக்கு இல்லை அல்லவா?

நான் இங்கு பேசும் விவசாயிகளிடம் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை கணக்கு செய்யாமல் இது பெரிய லாபம் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டால்.. ஏங்க வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிரீர்கள் என்று கூறி அமைதியாகி விடுகிறார்கள்.

மேலும் சென்ற ஆண்டு பங்கு வணிகத்தில் மஞ்சளின் விலை உயர்ந்ததை தொடர்ந்து நம் விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்து அதன் விலை நான்கு மடங்கு கீழே விழுந்து, போட்ட மூலதனத்திற்க்கான வருமானமும் இந்த வருடத்தில் இழந்ததை குறித்தும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது..

விவசாயம் குறித்து எதுவும் தெரியாமல் எழுதுகிறீர்கள் என்று கூறி விடுவீர்களோ என்ற பயத்தில் தான் இதையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்....

SURYAJEEVA said...

அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் விவசாயி அழியப் போவதில்லை.. ஆனால் அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் அவன் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லாதீர்கள் என்று தான் சொல்கிறேன்... நமக்கு விடிவு வரும் விடிவு வரும் என்ற கற்பனையிலும், ஜெயித்த அரசியல்வாதிகளில் இவன் காப்பாற்றுவானா இவன் காப்பாற்றுவானா என்று ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஏமாந்து நொந்து போய் இருப்பவர்களை ... மீண்டும் ஏமாற விடாதீர்கள் என்று தான் கூறுகிறேன்

SURYAJEEVA said...

http://suraavali.blogspot.com/2011/10/1.html

இவர்கள் ஒரு கணக்கு கொடுத்து இருக்கிறார்கள், அதற்க்கு நான் ஒத்துக் கொள்கிறேன்... உங்கள் நிலைப்பாடு என்ன என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

manjoorraja said...

நண்பரே
உங்கள் பதிவுகளை சமீபகாலமாக தொடர்ந்து படித்துவருகிறேன் என்றாலும் பின்னூட்டம் அதிகம் போட்டதில்லை.

சில வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பியாவில் ஒரு சில நாடுகளில் விவசாயிகள் தங்கள் விவசாயம் மூலம் அதிக பயன்பெறுகிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.
அதைப் பற்றி விளக்கவும். அதே முறையை நாம் இந்தியாவில் கொண்டுவரமுடியாதா?

அதைப் பற்றி விளக்கவும்

வவ்வால் said...

சூர்யா,

வாங்க,நன்றி!
//விவசாயிக்கு மொத்த வருமானமும் நிகர வருமானத்தையும் வைத்து மாதம் 275 ரூபாய் ஊதியம் என்று வரையறை செய்கிறீர்கள்
உண்மையில் அது பொருள் மூலதனத்துக்கான வருவாய் மட்டுமே.//

நீங்களாவே அப்படி முடிவு செய்துக்கொண்டால் எப்படி?

தமிழக வேளாண்ப்பல்கலை கழகம் கொடுத்துள்ள கணக்கின்படி கூட விவசாயிக்கு லாபம் என்றால் அல்ப,சொல்பமாக ஒரு தொகைத்தான் வருது அப்படி ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறதது என சொல்லி கீழே வருவதையும் பதிவில் சொல்லி இருந்தேன்.
//ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.//

அரசாங்கம் கொடுத்த சூப்பர் கணக்கே உதவாத கணக்குனு காட்டத்தான் அந்த உதாரணம்.மேலும் இடுப்பொருட்கள் , இன்ன பிற விலை எல்லாம் போட்டு இருக்கேன், நீங்களா கூட்டிக்கழித்து கண்டுப்பிடிக்கலாம் என்ன தான் விவசாய வருமானம் என.

ஒரு சுட்டியும் கொடுத்திருந்தேன், அதில் லாபமே இல்லாமல் எவ்வளவு நட்டம் வருகிறது என்றும் சொல்லி இருக்கிறது.

ஆந்திர நெல் விவசாயம் இதை விட மோசம் அவர்களூக்கு 6000 நட்டம் என கணக்கும் வைத்துள்ளேன் அதையும் போடவா, அப்போவும் பொருள் முல தனம் கிடைக்கிறது என்றே சொல்வீர்களா?

//விவசாயி போட்ட உழைப்பு மூலதனத்திற்கு எந்த பணமும் அவனுக்கு கிடைப்பதில்லை... அதை பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட அவனுக்கு இல்லை அல்லவா?//

யார் சொன்னா விழிப்புணர்வு இல்லைனு, வேற வழி இல்லை, அவங்களா அவங்களுக்கு ஒரு வேலையை உருவாக்கிக்கொள்ள விவசாயம் மட்டுமே தெரியும், விட்டு விட்டு வெளியேற மனமில்லாமல் உழல்கிறார்கள். மேலும் சுய கவுரவம்னு பார்ப்பவர்கள் விவசாயிகள்.அத்தனை லேசில் ஒதுங்க மாட்டாங்க. இதனால் தான் நமக்கு உணவுத்தட்டுப்பாடு இல்லாம கிடைக்குது!

நீங்க பொருள் மூல தனம் கிடைக்குதுனு சொல்வது எப்படினே தெரியலை, தக்காளி போட்டு , வாங்கா ஆள் இல்லாமல் போய் ரோட்டில கொட்டிடு வரும் போது பஸ் டிக்கெட் கு காசு கூட கிடைப்பதில்லைனு ஏன் தெரியவில்லை.

நீங்க உங்களுக்கு தேவையான சில இடங்களை மட்டும் பதிவில் படிக்கிறிங்கனு நினைக்கிறேன்.கொஞ்சம் நிறுத்தி படிங்க.

வவ்வால் said...

சூர்யா,

//மேலும் சென்ற ஆண்டு பங்கு வணிகத்தில் மஞ்சளின் விலை உயர்ந்ததை தொடர்ந்து நம் விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்து அதன் விலை நான்கு மடங்கு கீழே விழுந்து, போட்ட மூலதனத்திற்க்கான வருமானமும் இந்த வருடத்தில் இழந்ததை குறித்தும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது..//

இப்படி கேள்வி மட்டும் உங்க மனதில் ஓடுது ஆனா அதுக்கான பதில் என்னனு சொல்வதில்லை ,இல்லை தேட முடியாத என்ன?

இப்படி இருக்கும் போது சில முக்கியமான விவரங்களை புரியாம விடுவதால் தான் விவசாயம்னா என்னனு தெரியாம எப்படி ஆழமான கருத்துக்களி புரிந்துக்கொள்ள முடியும்னு கேட்க தானே செய்வாங்க.

பல இடத்திலும் சொன்னது தன் தற்போது உள்ள சந்தையில் நாளைக்கு என்ன விலைப்போகும், எவ்வளவு தேவைனு கூட கணிக்கமுடியாது, கட்டுப்பாடு இல்லாத சந்தை இதுனு.

நம்ம ஊரில் ஈரோட் மஞ்சள் சந்தை போன்ற எல்லா இடத்திலும் விலை எப்படி நிர்ணயம் செய்றாங்க என்றால் இன்று எவ்வளவு பொருள் சந்தைக்கு வருது என்பதைப்பொறுத்தே. வரும் அளவு வியாபாரி வாங்க நினைத்த அளவுக்கு இருக்க வேண்டும்.

உண்மையில் மக்கள் தேவை 100 டன் ஆக இருந்தாலும் அங்குள்ள வியாபாரிகள் ஒவ்வொரு ஒரு நாளுக்கு 10 டன் என வாங்க உத்தேசித்து இருப்பார்கள். ஆனால் 15 டன் சந்தைக்கு வந்தால் விலை வீழ்ச்சி அடையும்.

அதிகமாக உற்பத்தி ஆகலைனாலும் இப்படி விலை குறைக்கப்படும். அதிகம் உற்பத்தி ஆனால் அடி மாட்டு விலைக்கே போகும். எனவே தான் அறுவடையின் போதே விற்காமல் காலம் தாழ்த்தி விற்க வேண்டும், ஆனால் விவசாயிக்கு இருக்கும் பணத்தேவையால் அப்படி செய்ய முடிவதில்லை.

வவ்வால் said...

சூர்யா,

/அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் விவசாயி அழியப் போவதில்லை.. ஆனால் அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் அவன் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லாதீர்கள்//

இங்கே யாரும் அப்படி சொல்லவில்லை, குறிப்பாக நான் சொல்லவில்லை, ஆனால் இப்போது இருப்பது போல என்ன விலைக்கு போகும், வாங்குவார்களா என்ற நிச்சயமற்ற தன்மைப்போகும் என்பதையே நான் சொல்லி வருகிறேன்.

எனக்கு ஒன்று புரியவில்லை , இத்தனை காலம் அந்நியர்களா விவசாயிகளை தலை நிமிர விடாமல் செய்தார்கள், அப்போ இப்போ மட்டும் அவங்க வந்தா மட்டும் விவசாயம் உருப்படுமானு கேட்கறிங்க.

கொள்ளையடிக்கும் உரிமை உள்நாட்டுக்குக்காரனுக்கே னு இதில் ஒரு தேசபக்தி :-))

வவ்வால் said...

மஞ்சூர் ராஜா,

//சில வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பியாவில் ஒரு சில நாடுகளில் விவசாயிகள் தங்கள் விவசாயம் மூலம் அதிக பயன்பெறுகிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.
அதைப் பற்றி விளக்கவும். அதே முறையை நாம் இந்தியாவில் கொண்டுவரமுடியாதா?

அதைப் பற்றி விளக்கவும்//

நான் வெளிநாட்டுக்கு எல்லாம் போனதில்லை, படித்து மற்றும் சிலரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டது தான், அதை வைத்து வேண்டுமானால் விளக்கலாம்.ஆனால் பின்னூட்டத்தில் சாத்தியமில்லை.

இபோது சுருக்கமாக பார்ப்போம்.
ஏன் மேல் நாடூகளில் லாபகரமாக இருக்கு எனில்,
1) பெரிய அளவிலான பண்ணையம் மற்றும் முறைப்படுத்தப்பட்ட விவசாயம்

2)அதிக அரசு மானியம்

3)உபரி உற்பத்தி சேமிப்பு மற்றும் பிற்காலத்தில் விற்பனை.

4)சந்தைபடுத்துதல், தேவைக்கணிப்பு ,(marketing and forecasting)என அனைத்தும் முறையாக உள்ளது.

5) yield potentilal அதிகம்.

இது போல பல காரணங்கள் இருக்கு

SURYAJEEVA said...

பதில் கூறியதற்கு நன்றி தோழர்... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

வவ்வால் said...

சூர்யா,


//http://suraavali.blogspot.com/2011/10/1.html

இவர்கள் ஒரு கணக்கு கொடுத்து இருக்கிறார்கள், அதற்க்கு நான் ஒத்துக் கொள்கிறேன்... உங்கள் நிலைப்பாடு என்ன என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்//


இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிங்க,நீங்க சொன்ன சுட்டிக்கு போய் பார்த்தேன் , அதில் எல்லாம் கட்டமைக்கப்பட்ட பிழையான தகவல்களாக இருக்கு. ஆனால் அது குறித்து நீங்கள் கேள்வியே எழுப்பாமல் ,புரட்சி ஓங்குக என்பது போல பின்னூட்டம் போட்டு விட்டு ஓடி வந்திட்டிங்க, ஏன் அங்கே கேள்விக்கேட்டா கடிப்பாங்களா? :-))


அங்கே ஆதாரமே இல்லாமல் எல்லாவற்றுக்கும் பைசா சுத்தமாக ஒரு கணக்கு போட்டுக்காட்டுறாங்க ,ஆனால் அதை என்னிடம் சொல்லி அதற்கு ஒத்துக்கொள்கிறேன், நீங்க என்ன நினைக்கிறிங்க என கேள்வி வேற?



இப்போ எனக்கு சில சந்தேகங்கள்,


அந்தப்பதிவை முன்னரே படிச்சு இருக்கீங்க, அப்படி இருக்கும் போது எப்படி விவசாயிக்கு பொருள் மூல தனம் கிடைத்து விடுகிறது, உழைப்பு மூல தனம் கிடைக்கவில்லைனு பேசிக்கொண்டு இருந்தீர்கள்.

அப்பதிவை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் நீங்க , பொருள்,உழைப்பு என இரண்டு மூல தனமும் விவசாயீக்கு கிடைக்கவில்லை என்று தானே பேசி இருக்க வேண்டும்.



அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது உற்பத்தி செலவை ஈடு செய்யவில்லை, அப்படி இருக்கும் போது அவர்கள் , எம்.எஸ்பி , ஒரு ரூபாய் கூடுதலாக இருக்குனு எப்படி சொல்றாங்க?


கடைசில 40000 க்கு கணக்கு காட்டுறாங்க , என்ன முடிவில தான் அவங்க் அக்கட்டுரையை எழுதினாங்க நீங்களாகவது சொல்லுங்க!
------------------------------------------


//விவசாயிக்கு மொத்த வருமானமும் நிகர வருமானத்தையும் வைத்து மாதம் 275 ரூபாய் ஊதியம் என்று வரையறை செய்கிறீர்கள்
உண்மையில் அது பொருள் மூலதனத்துக்கான வருவாய் மட்டுமே..//

அப்புறம் இப்பதிவில் நான் சொல்லி இருக்கும் 275 ரூ என்பது பொருள் மூலதனம் அல்ல , அது உழைப்பு மூல தனமே, அதான் செய்யப்பட்ட செலவினை எடுத்தது போக கிடைத்த பணம் என கோவை வேளாண்பல்கலை கணக்கு காட்டி இருக்கே.

மேலும் நீங்கள் பிழையாக புரிந்துக்கொண்டாலும் உங்கள் பதிலில் அதான் மாதம் 275 ரூ வருமானம் வருதே என்பதாக ஒரு தொனி இருக்கு. ஏதோ கொஞ்சம் அவன் உழைப்பிற்கான மூல தனம் மட்டும் தான் வராம தவறிடுச்சு, அதன் மீது கவனம் செலுத்தவில்லை அவன், விழிப்புணர்வு இல்லை, அதனால் என்ன அதை சரி செய்திடலாம்னு சொல்வதாக இருக்கு.

ஒரு நபருக்கு மாதம் 275 ரூ வருமானம் என்பது என்ன நிலை என்று எண்ணிப்பார்ப்பதாகவே தெரியவில்லை.

மேலும், உழைப்பு,+பொருள் இரண்டும் சேர்த்து தான் விளைப்பொருள் அதற்கு என சந்தையில் விலை நிர்ணயம் செய்கிறார்கள். நீங்க தங்க நகை வியாபாரம் போல செய்கூலி, சேதாரம் என தனியா கணக்கிட்டு வாங்கி கொடுக்கலாம் என திட்டம் வைத்துள்ளீர்களா :-))

SURYAJEEVA said...

//மேலும் நீங்கள் பிழையாக புரிந்துக்கொண்டாலும் உங்கள் பதிலில் அதான் மாதம் 275 ரூ வருமானம் வருதே என்பதாக ஒரு தொனி இருக்கு. ஏதோ கொஞ்சம் அவன் உழைப்பிற்கான மூல தனம் மட்டும் தான் வராம தவறிடுச்சு, அதன் மீது கவனம் செலுத்தவில்லை அவன், விழிப்புணர்வு இல்லை, அதனால் என்ன அதை சரி செய்திடலாம்னு சொல்வதாக இருக்கு.//

தோழர்,
இதை மறுக்கிறேன்..

பணத்தை மூலதனமாக போட்டு, உழைப்பையும் மூலதனமாக போடும் ஒரு மனிதனாக விவசாயி என்பவரை நான் காண்கிறேன்.. ஆனால் இங்கு விவசாயி குறித்து எந்த பதிவாக இருந்தாலும் எதோ ஒரு மூலதனத்தை மட்டுமே வைத்து கணக்கு போடுகிறீர்கள்... நீங்களே அது உழைப்புக்கான மூலதனம் மட்டுமே, அவனுக்கு திரும்ப கிடைக்கிறது என்கிறீர்கள்... நீங்கள் கணக்கு போட்டு காட்டியுள்ளது அவன் முதலீடு செய்த பணத்தை தான்.. ஆனால் அவன் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் வேலை செய்யும் மணி நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை... இதாவது கிடைக்கிறதே என்று நான் சொல்லவில்லை... ஒரு வேளை எழுத்தில் விளக்குவதற்கு அறிவு போதவில்லை போல் இருக்கிறது... நான் கொடுத்த சுட்டியில் உள்ள கட்டுரையில் இரண்டுக்கும் கணக்கு போட்டு இருந்தார்கள்... அதனால் தான் நான் உடன்படுகிறேன் என்று கூறி இருந்தேன்...

தோழர்,
கற்றது கை மண் அளவு என்று எண்ணுபவன் நான்... மேலும் கற்றுக் கொள்ளவும், இது வரை தெரிந்து வைத்துள்ளதில் சந்தேகம் எழுவதால் கேள்வி கேட்கிறேன்... உங்கள் விளக்கங்களுக்கு நன்றி... எந்த வார்த்தை விளையாட்டும் எனக்கு தெரியாது.. நான் அறிவு ஜீவி என்று நிரூபிக்க முயற்ச்சிக்கவில்லை.. என்று இங்கு பதிவு செய்கிறேன்...

வவ்வால் said...

சூர்யா,

வாங்க , நன்றி!

நான் இன்னும் கற்றுக்கொண்டே தான் இருக்கேன், அது ஒரு முடிவில்லாப்பயணம் என நினைக்கிறேன்.

//இங்கு விவசாயி குறித்து எந்த பதிவாக இருந்தாலும் எதோ ஒரு மூலதனத்தை மட்டுமே வைத்து கணக்கு போடுகிறீர்கள்... நீங்களே அது உழைப்புக்கான மூலதனம் மட்டுமே, அவனுக்கு திரும்ப கிடைக்கிறது என்கிறீர்கள்... நீங்கள் கணக்கு போட்டு காட்டியுள்ளது அவன் முதலீடு செய்த பணத்தை தான்.. ஆனால் அவன் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் வேலை செய்யும் மணி நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை...//



செலவு= Total 10723

Gross Income (Rs.): -> 15123(

நிகர வருவார்ய்= 15123-10723=4,400


10,723 ரூபாய் செலவு என்பது அவனது பொருள் மூல தன முதலீடு,, அதனை எடுத்து விடுவதாக வேளாண்பல்கலை கணக்கு உள்ளது, எஞ்சிய தொகை 4,400 என்பது விவசாயியின் உழைப்பு வருவாய். அதாவது உழப்பு மூல தன வருவாய்.

உங்களுக்கு பொருள் மூல தனம், உழைப்பு மூல தனம் என்ற சொற்பதங்களை பயன்படுத்தவில்லை என்றால் புரியாது என்பது இப்போது தான் எனக்கு புரியுது :-))

//இந்த 1100 என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு நான்கு மாத உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி!

அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,

1100/4= 275 ரூபாய் மட்டுமே//

நான்கு மாத உழைப்பிற்கு என சொல்லியும் இருக்கேன், அப்படி 4 மாதம் என சொல்லாமல் தினசரி 8 மணி நேரம் என நான்கு மாதம் உழைத்தான் என சொல்லி இருந்தால் உங்களுக்கு சந்தோஷம் என்பது தெரிகிறது.

ஒரு மணி நேரத்துக்கு எத்தனை பைசா சம்பாதித்தான் என்று சொல்லவில்லை தான் மன்னிக்கவும், இனிமேல் அப்படியே செய்து விடுகிறேன்!

வார்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொருளுக்கு கொடுங்கள்.

நான் என்ன கம்யூனிச இலக்கியமா படைக்கிறேன், அதே போன்ற பொருள் மூல தனம் , உழைப்பு மூல தனம் , உழைப்புச்சுரண்டல், வர்க்க குணாம்சம், என்ற சொல்லாடல்களை பயன்ப்படுத்த.ஏதோ எனக்கு தெரிந்த எளியத்தமிழில் தெரிந்ததை பகிர்கிறேன்.


//நான் கொடுத்த சுட்டியில் உள்ள கட்டுரையில் இரண்டுக்கும் கணக்கு போட்டு இருந்தார்கள்... அதனால் தான் நான் உடன்படுகிறேன் என்று கூறி இருந்தேன்//

அடிப்படையே இல்லாமல் சும்மா குத்துமதிப்பாக கணக்கு காட்டி, அரசின் ஆதரவு விலை உற்பத்தி பொருளின் விலையை விட 1 ருபாய் அதிகம் என்றெல்லாம் சொல்வது எப்படினு கேட்கத்தோனாது உங்களுக்கு :-)) ஏதோ கணக்கு காட்டினார்கள் ஏற்புடையது!

SURYAJEEVA said...

10723 rupees is investment...
4400 rupees is the profit for investment...

பலரும் இப்படி தான் எடுத்துக் கொள்கிறார்கள்...

இங்கே அவன் உழைத்த மனித்துளிக்கான சம்பளம் நிர்ணயிக்கப் படவே இல்லை... அதை தெளிவுப் படுத்துவதும் இல்லை... நீ போட்ட பணத்திற்கு லாபம் வந்து விட்டது என்று தான் இங்கு சுட்டி காட்டுகிறார்கள்... ஒரு நாளைக்கு பத்து முதல் பதினான்கு மணி நேரம் அவன் உழைக்கும் மணித் துளிக்கு சம்பளம் நிர்ணயிக்கப் படவே இல்லை என்பது தான் உண்மை... குடும்பத்தில் உள்ள அனைவரும் உழைப்பதையும் மறந்து விடுகிறார்கள்...

நான் ஒரு விவசாயியுடன் பேசிய பொழுது அவர் கூறிய கணக்கும் சூறாவளி தளம் கொடுத்த கணக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்ததால் நான் கேள்வி கேட்கவில்லை...

என்னால் என் என்னத்தை சரியாக புரிய வைக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.. மன்னிக்கவும்..

Saran said...

this post really an eye opener. please check this following link. how these political people are making fun of agriculture. everybody is dyeing owing to more loans. here they are checking accounts of states how many people died.

http://dinakaran.com/News_detail_2011.asp?Nid=11444

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

//இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார்//

வேறு யார்? இடைத்தரகர்கள்தான். புள்ளி விவரங்களைச் சொல்லி அசத்துகிறீர்கள்.அடுத்த பதிவினை எதிர் பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

விவசாயம் குறித்த ஆழ்ந்த பார்வையில்லையென்ற போதிலும் நிலம் மூலதனங்களில் கொட்டி வைக்கும் நம்பிக்கையில்லாத காரணத்தால் நில விலையேற்றத்துக்கு நானும் ஒரு காரணகர்த்தா என்ற குற்ற உணர்ச்சியில்லாமல் பின்னூட்டம் போடுறேன்.நீங்கள் சொல்வது போல் வாங்கும் திறனும் உபரித்தொகையின் காரணமாக வெளிநாட்டில் பணி செய்பவர்களும் ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை.இருந்தாலும் நிலம் அபகரிப்பு பெரும் கொள்ளைக்காரர்களையெல்லாம் விட்டுட்டீங்களே.பெங்களூரில் நிலம் விலை உயர்வுக்கு வெளிநாட்டில் பணி புரியும் சேட்டன்களும் காரணம் என்பதையும் அறிவேன்.கூடவே கேரளாவிலும்.இது ஒரு தவிர்க்க இயலாத பொருளாதார மாற்றம் எனலாம்.ஆனால் தமிழகத்தில் நிகழ்வதோ விவசாய நிலங்களே வீட்டு மனைகளாகப் போகும் துயரம்.இதில் தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் வேறு.

முதலாவதாக கிராமப்புற சமூக கட்டமைப்பும்,நகர்ப்புற நகர்தல் என்ற பொது மாற்றத்துக்குட்பட்டும்,பொருளாதார மாற்றங்கள் கொண்டும் கிராமத்தில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லையென நினைக்கிறேன்.
கிராம விவசாயக் கூலியாக இருந்தவர்கள் திருப்பூர் போன்ற இடங்களுக்கு சென்றார்கள்.இப்பொழுது திருப்பூர் ஆடைத்தொழில் சுணங்குவதால் மீண்டும் விவசாயம் பார்க்க செல்கிறார்களா அல்லது இன்னொரு நகர்ப்பெயர்ச்சி செய்கிறார்களா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

ராஜ நடராஜன் said...

//இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.//

இதுல இருக்கும் பயம் ஒருவரே விவசாயம் பார்ப்பதற்கும் பார்டனஷிப்ல செய்யலாம் என்பதற்குமுள்ள வித்தியாசம்.குமுதம் குழு விவகாரம் தமிழகம் அறிந்ததுதானே.மேலும் சுதந்திர இந்தியாவில் இதுவரையில் நடைமுறைப் படுத்தாத ஒன்றாகவும் மறுபடியும் உங்க பின்னூட்டம்,ஜோதிஜி,ராபர்ட் கிளைவ்,ஜார்ஜ் கோட்டையெல்லாம் நினைவுக்கு வருகிறது.சிறு வியாபாரத்தில் வெளி மூலதனம் என்பதில் காலப்போக்கில் கார்பரேட்தனமாகி விடுமோ என்ற அச்சம் காரணமே.

வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனா அவனுக்குப் பிடிக்கலைன்னாலும்,நமக்குப் பிடிக்கலைன்னாலும் மேசை மேல கடிதாசிய வச்சா முடிஞ்சது.அசையா சொத்தை என்ன செய்றது?

தமிழக விவசாயம் பற்றி இன்னுமொன்னு தோணுது.முக்கோணமா ஆந்திரா,கர்நாடகா,கேரளா தண்ணி தரமாட்டேன் என்பதாலும் தமிழக ஆட்சி முறையும் விவசாயம் பின் தள்ளி தொழில் சார் தமிழக சட்டங்களுக்கு முன்னுரிமை தருவதாலும்(தி.மு.க+அ.தி.மு.க இரண்டுமே),நகர்ப்புற நகர்வுகள்,பொருளாதார,சமூக மாற்றங்கள் காரணமாக விவசாயம் படலாம் இன்னும்.

உண்பதிலும் நாம விதி விலக்காக இருந்தாலும் இன்னுமொன்னு சொல்லிக்கிறேன்.ஊர் விட்டு வந்தாலும் அரிசிச் சோறும்,காய்கறியும்,மசாலா மணக்க பிரியாணியுமே சாப்பிடுவேன்னு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அடம் பிடிக்கிறதால விவசாயம் இன்னும் வாழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை:)

arasan said...

அன்பரே வணக்கம் ..
இன்றிய விவசாயத்தின் நிலையினை .. விவசாயி அடையும் இன்னல்களை
அட்டவணையில் அழகாய் அவர்களின் நிலையினை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் ...

சில கணக்கீடுகள் உள்ளத்தை உருக்குகின்றது ,,,
இந்நிலை மாறவில்லையெனில் நிச்சயம் உணவுக்கு பஞ்சம் வரும் .. உழைத்தவன் தெருவில் நிற்கும் நிலை வரும் ...

Anonymous said...

இயற்கை விவசாயம் செய்

1. உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்

2.மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.

3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.

4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்


5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.


6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை


7. உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்


8. எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?


9. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.

yours
the Future Farmer