Thursday, January 12, 2012

குமுதம் யாருக்கு சொந்தம்?



                                                    

          குமுதம் யாருக்கு சொந்தம்?




திரு எஸ்.ஏ.பி அவர்களால் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட குமுதம் வார இதழ், அவரது மறைவுக்கு பின்னர் பல சர்ச்சைகளின் மையமாக திகழ்கிறது என்பதை வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிவார்கள்.இப்போது மேலும் முற்றிய நிலைக்கு போய்விட்டது மிகவும் வருந்த தக்கது.

ஏனோ இந்த பிரச்சினைக்குறித்து ஊடகங்களும் ஒரு திருட்டு மவுனம் பூண்டு(வெங்காயம் மிஸ்ஸிங்கோ?) இருக்கின்றன. என்றே தோன்றுகிறது. வழக்கமாக சிறிய விஷயத்தையும் ஊதிப்பெரிதாக்கும் துப்பி எறியும் பத்திரிக்கைகளும் மவுனகுருவாக இருக்கின்றன. நடிகர்,நடிகையரின் அந்தரங்கம் என்றால் காணாததையும் கண்டதாக எழுதுவார்களாயிருக்கும். :-))

இதை விட ஆச்சர்யம் எல்லாத்துக்கும் கருத்து கண்ணாயிரமாக பதிவுப்போட்டுத்தள்ளும் பதிவர்களும் கோந்து அல்வா சாப்பீட்ட கோவிந்தனாக கம்மென்று இருக்கிறார்கள். ஒரு வேளை எல்லாம் எனக்கு தெரியாம  பதிவுப்போட்டு இருக்காங்களோ?

சரி இந்த வார குமுதம் பத்திரிக்கையில் வந்துள்ள பகிரங்க அறிக்கையில் இருந்து மேட்டர்(இது சமாச்சாரத்த சொன்னதுப்பா) என்னனு பார்ப்போம்...

திரு .ஜவகர் பழனியப்பன் த/பெ. எஸ்.ஏ.பி, அவர்கள் அமெரிக்க பிரஜ்ஜை என்பதால் குமுதம் நிறுவனப்பங்குகளுக்கு உரிமைக்கோர இயலாது, அது இதழியல்/ அச்சக சட்டங்களுக்கு முரணானது.

திருமதி.கோதை பழனியப்பன் ,தன்னிச்சையாக குமுதம் நிர்வாகத்திற்கு சேர்மன், மற்றும் நிர்வாக இயக்குநராக அறிவித்துக்கொண்டாராம்..மேலும் ஓரு இடைக்கால தடையும் வாங்கினாராம்.(எதுக்கான இடைக்கால தடை?) அந்த தடை நிர்வாகத்தினைப்பாதிக்கும் என வரதராஜன் நிறுத்தி வைக்க உத்தரவு வாங்கினாராம்.

பின்னர் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம் முறையாக அறிவிக்கப்பட்டு மூன்று முறைக்கூடியுள்ளதாம். இப்போது யார் நிர்வாக இயக்குநர்,, சேர்மன் என்ற சர்ச்சை நீடிக்கும் போது யாருக்கு கூட்டம் கூட்ட அறிவிப்பு கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது ஒரு நல்ல கேள்வி இப்போ நீங்க கேட்கணுமே? கேட்டாச்சா...சரி அடுத்துப்போவோம்.

முறையே 20-9-2011,10-10-2011, மற்றும் 2--01-2012 ஆகிய நாட்களில் கம்பெனி இயக்குநர்களின் நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில் திரு.ஜவகர் பழனியப்பன், திருமதி.கோதை பழனியப்பன் ஆகியோர் கலந்துக்கொள்ள தவறியதால் ,அவர்கள் இயக்குநர்கள் என்ற பொறுப்பையும் இழந்துவிட்டார்களாம். எனவே இனிமேல் மேற்கொண்டவர்களுடன் யாரும் குமுதம் தொடர்பாக தொடர்புக்கொள்ளக்கூடாதாம்.

இப்போது என்னுள் சிலக்கேள்விகள்,

# கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கு இப்போது ஒரு நிர்வாகம் அதே பிரச்சினையின் மீதே இயக்குநர்கள் கூட்டத்தினை வைத்தே தீர்ப்பு சொல்ல முடியுமா? பின்னர் கோர்ட் எதுக்கு?

#மேலும் மிக குறுகிய காலத்தில் ஏன் மூன்று இயக்குநர்கள் கூட்டம் நடத்தப்பட்டது? அவர்கள் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதற்காகவா? இங்கு கவனிக்க வேண்டியது குமுதம் அலுவலகம் செல்ல காவல் துறைப்பாதுகாப்பினை இருவரும் கேட்டு மறுக்கப்பட்டுள்ள ஒரு சூழல்.

# சர்ச்சைக்குறிய நிலையில் இக்கூட்டத்தை கூட்டும் அதிகாரம், தலைமை தாங்கும் பொறுப்பு யாருக்கு?

# கணவரின் சொத்துக்கு மனைவி பாத்தியதை இல்லையா?

#தந்தையின் சொத்துக்கு மகன் பாத்தியதை இல்லையா, அவர் வெளிநாட்டில் வாழ்ந்து ,அங்கேயே குடியுரிமைப்பெற்றிருந்தாலும்.

#நியமிக்கப்பட்ட ,அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர்,ஆனால் அது அவரது சொத்து அல்ல என்றாலும் உரிமைக்கொண்டாட முடியுமா?

# இந்து பிரிக்கப்படாத குடும்ப சொத்துரிமை சட்டம் இதில் செல்லாதா?

இப்போ குமுதம் யாருக்கு தான் சொந்தம்? தெரிஞ்சா சொல்லுங்க யாராவது.


பின் குறிப்பு:

மேல் நிலைப்பள்ளி, கல்லூரிக்காலங்களில் பலப்பத்திரிக்கைகளுக்கும் அதிகம் எழுதி அனுப்புவேன்(5 ஆம் வகுப்பிலேயே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டேன், எப்போவாது கல்கண்டு, சூப்பர் நியூஸ் (சூப்பர் நாவல்,-சுபா வகை) அதில் வரும்) பெரும்பாலும் கிணறு-கல் தான். ஆனால் குமுதத்தில் மட்டும் அவ்வப்போது வரும், ஒரு நம்பிக்கையை தரும். பல பத்திரிக்கைகளிலும் பெரும்பாலும் வாசகர் கடிதம் வரும். பிலாக் ஆரம்பித்த காலத்திலிருந்து அனுப்புவதில்லை, நாம எழுதி, இவனுங்க என்ன பரிசீலனை செய்றது என்ற ஒரு எண்ணம் தான்(கொஞ்சம் ஓவர் குசும்பு உனக்குனு சொல்வது கேட்கிறது).அக்காலத்தில் அச்சில் அடிக்கடி நம்ம பேரைப்போட்ட குமுதத்தில் புகைச்சல் என்பது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக நெருடவே செய்கிறது.

25 comments:

சார்வாகன் said...

நல்ல பதிவு ந‌ண்ப‌ரே
உங்க‌ள் ப‌திவின் மூலமே இது எனக்கு தெரிந்தது.நல்ல கேள்விகள்!!!!!!!!!!!.நன்றி

நெல்லை கபே said...

இந்த பிரச்னை முடியவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இப்போது சண்டையை மக்களிடம் அறிவித்துவிட்டார்கள். அதனால் இனிமேல் பத்திரிகைகளும் வலைகளும் களைகட்டும்.

சிவானந்தம் said...

///நம்ம பேரைப்போட்ட குமுதத்தில்/// ஒரு பத்திரிகையில் நமது பெயர் வந்துவிட்டாலே அது குறித்த செய்திகளை ஆர்வமாக கவனிப்போம். எனவே அதை பற்றி மற்றவர்களை விட உங்களுக்குத்தான் அதிகம் தெரிந்திருக்கும், அதாவது அதிகம் கவனிப்பதால். எனவே நீங்களே கேள்வி கேட்டால் எப்படி?

ராஜ நடராஜன் said...

//இதை விட ஆச்சர்யம் எல்லாத்துக்கும் கருத்து கண்ணாயிரமாக பதிவுப்போட்டுத்தள்ளும் பதிவர்களும் கோந்து அல்வா சாப்பீட்ட கோவிந்தனாக கம்மென்று இருக்கிறார்கள். ஒரு வேளை எல்லாம் எனக்கு தெரியாம பதிவுப்போட்டு இருக்காங்களோ?//

கார்பரேட்காரன் பொட்டிக்கடைல நுழையறதுக்கும்,அண்ணாச்சிகளே கடை நடத்தறதுக்குமுள்ள வித்தியாசத்தை குமுதத்தோடு ஒப்பிட்டு விவசாயிகள் படும் பாடு-1 லேயே நான் கோடு போட்டேன்.அப்ப நீங்க ரோடு போடல நான் என்ன செய்ய:)

வவ்வால் said...

சார்வாகன்,

வணக்கம்,நன்றி,

இந்த செய்தி வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது,நானும் எழுதனும் என நினைத்து தள்ளிக்கொண்டேப்போய் இப்போ தான் முடிஞ்சது.வழக்கமா கற்பூரமாக பற்றிக்கொள்ளும் பதிவுலகம்
மந்தமாக ஆகிடுச்சோ?

--------------

மாயன்,

வணக்கம்,நன்றி,

ஆமாம் இப்போ பகிரங்கமாக பத்திரிக்கையிலேயே 2 பக்க எச்சரிக்கை நோட்டீஸ் விட்டு அறிவிக்கும் அளவுக்கு போய்டுச்சு. முடிவு என்ன? காத்திருப்போம் நல்லது நடக்க.

---------------

சிவானந்தம்,

வணக்கம்,நன்றி,

உங்க கடலூர் புயல்ப்பதிவு படிச்சேன். பின்னர் வந்து பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.நானும் புயல் பாதிப்புகளை படம் எடுத்து , பதிவேற்ற... படங்கள் ஒன்னும் சரியா இல்லை.இருப்பதை வைத்து இன்றோ,நாளையோ பதிவிடுகிறேன்.

ஆமாம் பேர போட்ட பத்திரிக்கைனு விடாம படிச்சுக்கிட்டு தான் இருக்கேன். கூடிய சீக்கிரம் சில விவரங்கள் தெரிஞ்சுக்கிட்டு தெளிவா பதிவுப்போடுகிறேன்.

ராஜ நடராஜன் said...

நான் போன வருசம் இந்தியா வந்தப்போ பழைய ஓசு பத்திரிகை படிக்கிற பழக்கத்துல அண்ணா கொஞ்சம் குமுதம் கொடுங்கன்னு விகடன் படிச்சிகிட்டிருந்த பக்கத்து இருக்கைக்காரரிடம் கேட்டு வாங்கி படிச்சதுல மெய்யாலுமே சொல்றேன் திருப்புன பக்கங்களின் படங்கள் பார்க்க அவ்வளவு கூச்சம்.கவித்து வச்சிட்டு பந்தான்னு நினச்சாலும் பரவாயில்லைன்னு நீராராடியா அட்டைப் படம் போட்ட அவுட்லுக்ல மூழ்கிட்டேன்:)

ராஜ நடராஜன் said...

நிர்வாகம் நடத்துற ஆளு முழு விபரம் எனக்குத் தெரியாது.அவர்கிட்டோ சொல்லுங்கோ பழனியப்பன் அப்பன் எஸ்.ஏ.பியோட உழைப்பாக்கும் குமுதம்.நான் இங்கேயிருக்கேன்னு, தெரிஞ்ச ஒருத்தர நிர்வாகத்த நடத்த விட்டா லவட்டிக்கிறதாக்கும்?நல்லாயிருக்குதே கதை.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,வணக்கம்,நன்றி,

//அண்ணாச்சிகளே கடை நடத்தறதுக்குமுள்ள வித்தியாசத்தை குமுதத்தோடு ஒப்பிட்டு விவசாயிகள் படும் பாடு-1 லேயே நான் கோடு போட்டேன்.அப்ப நீங்க ரோடு போடல நான் என்ன செய்ய:)//

உங்களுக்கு விரிவாக பதில் சொல்லணும் என்பதாலேயே ஒத்தி வைப்பேன், அது அப்படியே நின்றுப்போச்சு. விவசாயிப்படும் பாடு-1க்கு இன்னும் பதிலேப்போடலை :-))

தாமதத்திற்கு பொருத்தருள்க...கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு.

வவ்வால் said...

ராஜ்,

//பழைய ஓசு பத்திரிகை படிக்கிற பழக்கத்துல அண்ணா கொஞ்சம் குமுதம் கொடுங்கன்னு விகடன் படிச்சிகிட்டிருந்த பக்கத்து இருக்கைக்காரரிடம் கேட்டு வாங்கி படிச்சதுல மெய்யாலுமே சொல்றேன் திருப்புன பக்கங்களின் படங்கள் பார்க்க அவ்வளவு கூச்சம்.//

ஹி..ஹி பரதேசம் போனாலும் பழக்க தோசம் விடாதுனு சொல்றது இத தானா :-))

உங்களுக்கு இப்போ கூட கூச்சம் வருதா ;-))

சின்ன வயசில குமுதம் படிச்சத "கெட்ட புக்க்" படிக்கிறான் உங்க பையன்னு அவனால எங்க பைய்யன் கெட்டிருவான்னு எங்க அம்மாக்கிட்டே கம்ப்ளைண்ட் வரும் :-))

அப்போ இத்தனைக்கும் பொடவை கட்டின படங்கள் தான் இருக்கும் :-((

//எஸ்.ஏ.பியோட உழைப்பாக்கும் குமுதம்.நான் இங்கேயிருக்கேன்னு, தெரிஞ்ச ஒருத்தர நிர்வாகத்த நடத்த விட்டா லவட்டிக்கிறதாக்கும்?நல்லாயிருக்குதே கதை.//

அதான் கொடுமையே, உரிமையாளரையே கட்டம் கட்டி வெளியேத்தறாங்க.உழுதவனுக்கே நிலம் சொந்தம்னு சொன்னா விடுவாங்களா இங்கே?

ராஜ நடராஜன் said...

//ஆமாம் பேர போட்ட பத்திரிக்கைனு விடாம படிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.//

பத்திரிகைக்கு கார்டு போடறது,கதைகளை பைண்டிங்க் செய்றதெல்லாம் மாமிகள் டிபார்ட்மெண்டாச்சே:)
தலையங்கம்,சுஜாதா எழுத்து,அரசு கேள்வி பதில்,தொட்டுக்க ஊறுகாய் மாதிரி ஒரு கவர்ச்சிப்படம்ன்னு அதிகமா ஓசுல படிச்ச பத்திரிகைன்னா குமுதம்தான்.விகடன் துணுக்குக்கு மட்டுமே.

ராஜ நடராஜன் said...

//திரு .ஜவகர் பழனியப்பன் த/பெ. எஸ்.ஏ.பி, அவர்கள் அமெரிக்க பிரஜ்ஜை என்பதால் குமுதம் நிறுவனப்பங்குகளுக்கு உரிமைக்கோர இயலாது, அது இதழியல்/ அச்சக சட்டங்களுக்கு முரணானது.//

இந்திய அமெரிக்கர்கள் பெரும்பாலும் டுயல் சிட்டிசன்ஷிப்தான்.ஜவகர் பழனியப்பனும் அதையே பின்பற்றியிருப்பார் என நினைக்கிறேன்.

மேலும் வெளிநாட்டுலருந்து ஸ்வராஜ் பால்(முன்னாடி லார்ட் பால் இப்ப ஜோதிஜி க்ளைவ் பதிவுல சொன்ன பேரன் பதவிக்கு!(Baron ன்னு வாசிக்கனும்:)தாண்டிட்டார். இவரிடம் நிறுவனப்பங்குகளை வாங்கு,வாங்குன்னு கெஞ்சின காலமெல்லாம் இந்தியாவில் உண்டு.அதிலும் கூட அதிகப் பங்குகளை வாங்கிட்டார்ன்னு சட்ட சிக்கல்கள் வந்தது.

இப்ப நம்ம கணக்குப்புள்ள (பிரைம் மினிஸ்டர்)எனக்கெல்லாம் ஓட்டுரிமை வேற கொடுத்திட்டாரு தெரியுமா:)

ராஜ நடராஜன் said...

//வழக்கமா கற்பூரமாக பற்றிக்கொள்ளும் பதிவுலகம்
மந்தமாக ஆகிடுச்சோ?//

இன்றைக்கு வாரக்கடைசி வேற!கும்மியடிச்சுட வேண்டியதுதான்.

அய்யோ பத்திகிச்சே!பத்திகிச்சேவெல்லாம் ஒரு மார்க்கமா சண்டை போடறவங்களுக்குத்தான்:)

சகோக்களா!குமுதம் பங்காளிகளையும் சேர்த்துதான்...No hard feelingu.

(இப்பவெல்லாம் உ போட்டாத்தான் இங்கிலிபீசாமே!)

ராஜ நடராஜன் said...

//அக்காலத்தில் அச்சில் அடிக்கடி நம்ம பேரைப்போட்ட குமுதத்தில் புகைச்சல் என்பது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக நெருடவே செய்கிறது.//

புகைச்சலுக்கெல்லாம் நமக்கு மருத்துவம் கட்டுபடியாகாது(சும்மா ஒரு கமல் எஃபக்ட்).ஏன்னா நான் தம் அடித்ததேயில்லை:)வேணா...(இதையும் வேணுமின்னா ன்னு படிக்கனும்.எப்படியெல்லாம் தமிழ் சிதையுதுங்கிறதுக்காக)மீன் முள்ளுக்கு மருத்துவம் சொல்றேன்.

மருத்துவத்துல இரண்டு வகை இருக்குதுங்க வவ்(யாரோ ஒருத்தரு வவ்ஸ் போட்டாரு நான் இன்னும் சுருக்கிட்டேன்)

ஒன்று மெல்லினம்!இன்னொன்று வல்லினம்!

மெல்லினம்ன்னா நீர்,சர்பத்,காபின்னு ஏதாவது திரவப்பொருளை ஊத்துனா முள் தொண்டையிலிருந்து கீழே ஓடிடும்.எப்படா எல்லை கடக்குமோன்னு காத்துகிட்டே இருக்குற உணவுக்குழாய் முள்ளை சுருட்டினாலும் சுருட்டும்.உத்தரவாதமில்ல.

இன்னொன்று அதிரடியா ஒரு கவள சோற்றை அப்படியே முழுங்குறது.நிச்சயம் முள் சுருண்டுக்கும்.

ஜவகர் ரெண்டு முறையும் முயற்சி செய்து பார்த்துட்டுத்தான் இனி கோர்ட் விட்ட வழின்னு சோர்ந்துட்டார் போல.

ராஜ நடராஜன் said...

//மெல்லினம்ன்னா நீர்,சர்பத்,காபின்னு ஏதாவது திரவப்பொருளை ஊத்துனா முள் தொண்டையிலிருந்து கீழே ஓடிடும்.//

நான் போட்டதாக்கும்.எனக்கு நானே சொறிஞ்சிக்கிறேனே!

ஒரு கமா (நீர்,) செய்யுற சித்து விளையாட்டுப் பாருங்களேன்.

தமிழே!தமிழே!ஐ.நா க்காரனே சாபம் விட்டாலும் நீ நிலைத்து நிற்பாய்!

வவ்வால் said...

ராஜ்,

//இன்றைக்கு வாரக்கடைசி வேற!கும்மியடிச்சுட வேண்டியதுதான்.//

ஒஹோ அதான் துடிக்கும் கரங்களுடன் பின்னூட்ட புயலா வீசுறிங்களா :-))

//பத்திரிகைக்கு கார்டு போடறது,கதைகளை பைண்டிங்க் செய்றதெல்லாம் மாமிகள் டிபார்ட்மெண்டாச்சே:)//

கார்டு போடுறது மட்டும் தான், பைன்டிங் எல்லாம் இல்லை. அப்புறம் முக்கீயமான ஒன்று பெரும்பாலும் மாமாக்களே மாமி பேருல கார்டு போடுவாங்க நன்கு அறிந்த உ.ம்: சுஜாதா ரெங்கராஜன் :-))

//தொட்டுக்க ஊறுகாய் மாதிரி ஒரு கவர்ச்சிப்படம்ன்னு அதிகமா ஓசுல படிச்ச பத்திரிகைன்னா குமுதம்தான்.///

ஓஹோ அந்த கவர்ச்சிப்படம் எல்லாம் கிழிக்கும் பழக்கம் உண்டா அப்போ? படிக்கைய்யில என் கிட்டே பசங்க ஓசு வாங்கிப்போவாங்க திரும்ப வரும் போது, படம் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும்(அந்தப்படம் தான் அவங்களுக்கு "கைத்துணை" :-))

//அதிலும் கூட அதிகப் பங்குகளை வாங்கிட்டார்ன்னு சட்ட சிக்கல்கள் வந்தது.//

டுயல் சிட்டிசனாகக்கூட ஜவஹர் இருக்கலாம், ஆனால் லார்டுக்கு வந்தது போல சட்டசிக்கல் இருக்கு போல.மேலும் பத்திரிக்கைகளுக்கு என கொஞ்சம் மாறுபட்ட சட்டம் இருக்கு, முழு விவரம் தெரியலை.முதலீடு 70% இருக்கலாம், தலைவர் இந்தியராக இருக்கணும் நினைக்கிறேன்.

//இப்ப நம்ம கணக்குப்புள்ள (பிரைம் மினிஸ்டர்)எனக்கெல்லாம் ஓட்டுரிமை வேற கொடுத்திட்டாரு தெரியுமா:)//

கொடுக்கப்போறதா பேச்சு தானே? அதுக்கே பொங்கலா :-))

இதுவே ரொம்ப லேட்டுஉ... புதுவை பிரதேச சொல்தாக்கள் பிரான்ஸு அதிபர் தேர்தலுக்கு புதுவைல ஓட்டு குத்துவாங்க.

வவ்வால் said...

ராஜ்,

//.ஏன்னா நான் தம் அடித்ததேயில்லை:)//

உங்களை சுற்றியுள்ள 3 பேரு தம் அடிச்சா நீங்க ஒரு தம் அடிச்சாப்போல இதுக்கு "இயங்கா புகைப்பு "என்று பெயர்.(passive smokingu)

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படக்கூடாதுனு நானே தம் அடிச்சுடுவேன் :-))

//வேணா...(இதையும் வேணுமின்னா ன்னு படிக்கனும்.எப்படியெல்லாம் தமிழ் சிதையுதுங்கிறதுக்காக)//

வேணா-> வேணுமின்னா -> வேண்டுமென்றால் ...

எப்படியெல்லாம் தமிழ் பரிமாண வளர்ச்சி அடையுது பாருங்க :-))

////மெல்லினம்ன்னா நீர்,சர்பத்,காபின்னு ஏதாவது திரவப்பொருளை ஊத்துனா முள் தொண்டையிலிருந்து கீழே ஓடிடும்.//

நான் போட்டதாக்கும்.எனக்கு நானே சொறிஞ்சிக்கிறேனே!

ஒரு கமா (நீர்,) செய்யுற சித்து விளையாட்டுப் பாருங்களேன்.//

இது நீர் செய்யும் சித்து விளையாட்டு :-))

நீர் தான் தனி மனித சுய உதவிக்குழுவின் பிதாமகன் :-))

உமது வல்லினம், மெல்லினம் எல்லாம் வலியினம் ஆகிடும் போல :-))

முள் போன வழியா வெளியில் வருவதே மதியினம், இல்லைனா குரல் நாண்(ரொட்டி அல்ல) கீஞ்சுடுமாம்.

//தமிழே!தமிழே!ஐ.நா க்காரனே சாபம் விட்டாலும் நீ நிலைத்து நிற்பாய்!//

கண்டிப்பாக தமிழன் தமிழ் படிக்காம போய்ட்டாலும் நிலைத்து இருக்கும், ஐ.நா வோட நைனா சாபம் விட்டாலும் செல்லாது ஏன்னா இப்போ வெள்ளைக்காரங்க எல்லாம் தமிழ் படிக்க வராங்களாம்.

சென்னைப்பல்கலைல ஒரு கனடா நாட்டுப்புள்ள படிக்க வந்திருக்குனு அதன் இ.வே. பேட்டி கொஞ்ச நாள் முன்னர் படிச்சேன்.

ராஜ நடராஜன் said...

////.ஏன்னா நான் தம் அடித்ததேயில்லை:)//

உங்களை சுற்றியுள்ள 3 பேரு தம் அடிச்சா நீங்க ஒரு தம் அடிச்சாப்போல இதுக்கு "இயங்கா புகைப்பு "என்று பெயர்.(passive smokingu)//

தம்மென்ன!ஹாஸ்டல்ல நண்பன்கிட்ட மட்டும்தான் பிளேயர் இருந்துச்சு.பாட்டுக்கேக்க எல்லாப் பயலும் எங்க ரூமுக்கு பொகப் போட வந்துடுவானுங்க.அதுவும் கஞ்சா பொக.மெட்ராஸ்ல பொட்டிக்கடை கஞ்சா பொட்டணம் தெரியும் தானே!சம்மணம் போட்டு பார்த்துகிட்டிருப்பேன் பசங்க கூத்தை:) இயங்கா புகைப்பு ரொம்பத்தான் ஏறியிருக்கும் போல எனக்கு:)

ராஜ நடராஜன் said...

//முள் போன வழியா வெளியில் வருவதே மதியினம், இல்லைனா குரல் நாண்(ரொட்டி அல்ல) கீஞ்சுடுமாம்.//

நாணே கீஞ்சிடாமாத்தான் போடுவாங்க:)
நான் பேசறது ஒற்றை வழிப் பாதை.நீங்க U Turn போடச்சொன்னா எப்படி?

(இந்த எப்படி மூடுல எப்பூடின்னு ஒரு பதிவும் போட்டுட்டேன்:)

ஜோதிஜி said...

இதைப்பற்றி நிறைய வலையில் வந்து விட்டது வவ்வால். தினந்தந்தி போல இந்த பத்திரிக்கையும் நிறைய பேர்களை படிக்க வைத்தது என்பது மட்டும் உண்மை. நான் வாங்கியே ஏழெட்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஜவஹர் கலைஞரை அவர் வீட்டில் வைத்து பேட்டி எடுக்கும் போதே நினைத்தேன். ஏதோவொன்று இதற்கு பின்னால் இருக்கிறது என்று. நாலைந்து நாட்களில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

ILA (a) இளா said...

ஹ்ம்ம், காசு அதிகமா இருக்கிறதால படிக்கிறதேயில்லை. யார் வெச்சிருந்தா என்னங்க(சொப்பன சுந்தரி)

வவ்வால் said...

இளா,

//ஹ்ம்ம், காசு அதிகமா இருக்கிறதால படிக்கிறதேயில்லை. யார் வெச்சிருந்தா என்னங்க(சொப்பன சுந்தரி)//

காசு கம்மியா இருந்தா அடுத்தவங்க எழுத்த வாங்கிப்படிக்கிறாங்க, காசு அதிகமா இருந்தா அவங்க எழுத்த அடுத்தவங்களை வாங்கி படிக்க வைப்பாங்க -

ஹி..ஹி அதனால தான் நீங்க எழுதி அடுத்தவங்களைப்படிக்க வைக்குறிங்களா :-))

(ஹி ஹி சொப்பன சுந்தரியோட கார் உங்க கிட்டே இருக்கா)

வவ்வால் said...

ராஜ்,

//இயங்கா புகைப்பு ரொம்பத்தான் ஏறியிருக்கும் போல எனக்கு:)//

ரொம்பத்தான் ஏறி இருக்கும் போல :-)) மனுச பொகை மட்டும் இல்லாம எந்திரப்பொகையும் இயங்கா புகைப்பா ஏறுது :-))

இப்போ போகியன்னிக்கு வேற மக்கள் நெறய பொக மூட்டம் போடுவாங்கோ :-))

//நான் பேசறது ஒற்றை வழிப் பாதை.நீங்க U Turn போடச்சொன்னா எப்படி?//

குக்கல் எவ்வழியோ மக்கள் அவ்வழி இதில், செருமி, அல்லது உறுமியாவது இல்லை வாந்தி எடுத்தாவது வெளித்தள்ளிடனும், இல்லைனா மருத்துவரிடம் போய குறடு விட்டாவது எடுக்கணும்.அதான் பாதுகாப்பானதுனு எப்போவோ படிச்சேன்.

பத்மா said...

kumuthathila entha perula ezhuthuveenga vavvaal?

வவ்வால் said...

ஆஹா பத்மா .... வாங்க வாங்க,

அட டா ...என்ன ஆச்சர்யம்...பிரபஞ்ச புகழ் கவிதாயினி எல்லாம் நம்ம பதிவுக்கு வந்திருக்காங்களே, இன்னிக்கு நரி முகம் விழிப்போ எனக்கு :-))

நலமா, எங்கே பார்க்கவே முடிவதில்லை, நான் இல்லாதப்போ வந்து பார்க்குறிங்க, நான் உலா வரும் போது ஓடிப்போயிடுறிங்களே ....நல்லா இருக்கு கண்ணாம்ப்பூச்சி :-))

புத்தக சந்தையில் அமோகமா அள்ளிட்டிங்களா புத்தகங்களை( ஆம்னி பஸ்ஸில் (யுனிவர்சல்?)லக்கேஜுக்கு பாதி காசு புடுங்கிட்டானா?)

//kumuthathila entha perula ezhuthuveenga vavvaal?//

என்ப்பெயரில் தான் எழுதினேன் பின்ன பக்கத்துவீட்டுக்காரன் பெயரிலா எழுதுவாங்க :-))

இப்போவும் குமுதத்தில் என் பேரு இருக்கு , புத்தகம் வாங்கினதும் அட்டைல எழுதிடுவேன் :-))

வவ்வால் said...

ஜோதிஜி,

வணக்கம்,நன்றி!

அது எப்படி உங்க பின்னூட்டதை மிஸ் செய்தேன், வலையில் வந்திருக்கா? நான் சரியா பார்க்கவில்லை போல. ஆமாம் அரசியல் ரீதியா தீர்க்க முயற்சி. இன்னும் இழுத்துக்கிட்டு ஓடுது.