Thursday, January 19, 2012

பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?



பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?


முன் குறிப்பு:

இது யாருடைய பதிவுக்கும் எதிர்ப்பதிவல்ல, இந்திய விவசாயம் எப்படி ஒப்பிட இயலா வகையில் பல இன்னல்களுக்கிடையேயும் நிலைத்து நின்று சுமார் 120 கோடி மக்களுக்கும் பசிக்கு உணவளிக்கும் உன்னத வேலையை இந்திய விவசாயிகள் தங்களை வருத்தி செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு பதிவே.



இந்தியா விவசாய நாடு என்று பன்னெடுங்காலமாக கூறப்படுகிறது. பிற தேசங்களில் நாடோடிகளாக ,நாகரீக வளர்ச்சியின்றி ,வேட்டை ஆடி உண்டு வாழ்ந்து வந்த காலத்திலேயே நதிக்கரை நாகரீகம் மேம்பட்டு விவசாயம் செய்து ,அதிலும் பல திருத்தங்கள் செய்தவர்கள் இந்தியர்கள். இதில் குறிப்பாக தமிழர்கள் முன்னோடிகள் எனலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காடு திருத்தி கழனி கண்டார்கள், கரிகால பெருவளத்தான் விவசாயத்திற்கு நீரின் தேவை அறிந்து கல்லணை கட்டியது இன்றும் நிலைத்து நிற்கிறது.

இன்றைய நவீன இந்தியாவில் வேளாண் சார்ந்த இயற்கை வளம் என்ன எனப்பார்ப்போம்.

மழைக்காலத்தில் வயலிலும் நீர் நிற்கும் வாய்க்காலிலும் தண்ணீர் கரைப்புரண்டு ஓடும், வடிய வைக்க வடிகால் காணாது, கோடையில் வாய்க்காலில் தண்ணீர் அடியில் ஓடும் வயலுக்கு ஏற்ப மடைக்கட்டி ஏற்ற வேண்டும், அதுவும் போதவில்லை எனில் டீசல் எஞ்சின் வைத்து இறைப்பார்கள். ஆனால் தண்ணீர் என்பது விவசாயத்துக்கு பெரும்பாலும் கிடைத்து விடும். இது ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம் வகை.இவ்வகை பாசனமே மிக அதிகம், கிணறு,ஆழ்குழாய் கிணறுப்பாசன விவசாயம் சிறிய அளவே.இந்தியாவில் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம், வடிகால் என இரண்டும் செய்ய தக்க அளவு நீர் வளம் உண்டு.

இந்தியா ஒரு புவியியல் பார்வை:

மொத்த நிலபரப்பு = 3,287,260 ச.கி.மீ

விவசாயம் செய்ய தக்க நிலம்=179,900 ச.கி.மீ

விளை நிலம்=1 ,586 ,500 ச.கி.மீ (88.2% & 53.%,)

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 112 செ.மீ
( மிக குறைவாக ராஜஸ்தானில் பாலைவனப்பகுதியில் 10 செ.மீ மழையும், மிக அதிகமாக(உலகிலேயே) மேகாலாயாவில் உள்ள மவ்சின் ராம் =11,87.3 செ.மீ, சிரபுஞ்சி= 11,77.7 செமீ)


மழைப்பொழிவு மொத்த நீர்   =3,700,000

நிலத்தில் இழுக்கப்படும் நீர் = 800,000

ஆற்றில் பாயும் நீர் =1,700,000

ஆவியாகும் நீர்=1,200,000

( மில்லியன் கன மீட்டரில்)

இதில் நிலத்தில் உறியப்படும் நீரும், ஆற்றில் பாயும் நீரும் விவசாயத்தேவைகளுக்கு பயன்ப்படுகிறது.

மேலும் இந்தியாவில் உள்ள நீர் நிலைகளின் மொத்தப்பரப்பளவு=314,070 ச.கி.மீ
(ஆறு,ஏரி,குளம் ,நீர்த்தேக்கம் ஆகியவைப்பரப்பளவில்)

காண்க:
india

கோதுமை சாகு படி செய்யப்படும் பரப்பளவு= 278.17

உற்பத்தி ஆகும் கோதுமை(2010) = 80 மில்லியன் மெட்ரிக் டன்.

அரிசி உற்பத்தி (2010-11)=  94.11(நெல்=145 மி.மெ.ட)



இன்ன பிற உணவு உற்பத்தியில் உலகளாவிய அளவில் இந்தியாவின் இடம்:

கீழ்கண்ட பட்டியலில் உள்ள உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது:

Lemons and limes
Buffalo milk, whole, fresh
Castor oil seed
Safflower seed
Sorghum
Millet
Spices
Okra
Jute
Beeswax
Bananas
Mangoes, mangosteens, guavas Pulses
Indigenous Buffalo Meat
Fruit, tropical
Ginger
Chick peas
Areca nuts
Other Bastfibres
Pigeon peas
Papayas
Chillies and peppers, dry
Anise, badian, fennel, corian
Goat milk, whole, fresh


கீழ்கண்டவற்றில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

Per final numbers for 2009, India is the world's second largest producer of the following agricultural produce:[41]

Wheat
Rice
Vegetables fresh
Sugar cane
Groundnuts, with shell
Lentils
Garlic
Cauliflowers and broccoli
Peas, green
Sesame seed
Cashew nuts, with shell
Silk-worm cocoons, reelable Cow milk, whole, fresh
Tea
Potatoes
Onions
Cotton lint
Cottonseed
Eggplants (aubergines)
Nutmeg, mace and cardamoms
Indigenous Goat Meat
Cabbages and other brassicas
Pumpkins, squash and gourds


In 2009, India was the world's third largest producer of eggs, oranges, coconuts, tomatoes, peas and beans.[41]

மேற்கண்டவை எல்லாம் "ரொம்ப சாதாரணமான காய்ந்து போன வறண்ட இந்தியாவில் நடக்கும் ரொம்ப சாதாரண விவசாயத்தினை" விவரிக்கும் புள்ளி விவரங்கள்.

இனி வளம் கொழிக்கும் பாலாறும் தேனாறும் கரைப்புரண்டு ஓடும் பச்சைப்பசும் சோலைவனம் சவுதி அரேபியாவின்  விவசாயத்தினைக்காண்போம்.

சவுதி அரேபியா வேளாண் வளம்:

மொத்த நிலப்பரப்பு =2, 149, 690 ச.கி.மீ

மொத்த விவசாய செய்யதக்க நிலம்=1, 736, 250 ச.கி.மீ

விளை நிலம் =34 000(2.0% , &1.6%) ச.கி.மீ

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 10 செ.மீ(எப்போதாவது 30 செ.மீ)

நீர் நிலைப்பரப்பு = 0.0 ச.கி.மீ

காண்க:
saudi arabia

சவுதி அரேபிய அரசு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 1970 இல் ஒரு வேளாண் திட்டம் போட்டது ,அதன்படி ஒரு டன் கோதுமைக்கு அரசு கொள்முதல் விளையாக 3500 ரியால்களை நிர்ணயம் செய்தது இதனால் பெரிதும் கவரப்பட்ட விவசாயிகள் கோதுமை விளைச்சலில் குதித்தார்கள்.

இதன் விளைவாக 90 களில் சுமார் 4 மி.மெ.ட கோதுமை விளைந்தது.ஆனால் இதற்கான பாசன நீர் 2000 கி.மீ க்கு அப்பால் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது.ஒரு டன் கோதுமை விளைவிக்க சுமார் 1000 கன மீட்டர் நீர் தேவைப்பட்டது.

தொடர்ந்து நீரும், அதிக கொள்முதல் விலையும் கொடுப்பது அரசுக்கு பொருளாதார ரீதியாக இழப்பினை உருவாக்கவே 2008 இல் புதிய விவசாயக்கொள்கையாக , கோதுமை விவசாயத்தை ஆண்டுக்கு 12.5 சதவீதம் எனக்குறைத்து கொண்டு வந்து 2016 இல் முற்றிலும் நிறுத்தப்போவதாக அறிவித்து விட்டது. மேலும் அரசின் கொள்முதல் விலையை 1000 ரியால்கள் என அதிரடியாக குறைத்து விட்டது. இதனால் 40 சதவீத விவசாயீகள் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இதன் விளைவாக கோதுமை உற்பத்தி ஒரு மில்லியன் டன்னுக்கும் கீழே 946,000 டன் ஆக ஒரே ஆண்டில் உற்பத்தி சரிந்தது.இப்போது ஆண்டுக்கு 2 மி.மெ.ட அளவுக்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. 2016 முதல் முழுக்க இறக்குமதி செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளது சவுதி அரேபிய அரசு. மேலும் காய் கறி உற்பத்தியையும் உள்நாட்டு தேவைக்கு மட்டும் செய்ய சொல்லி, ஏற்றுமதி செய்ய தடை விதித்து விட்டது. இதன் மூலம் நீர் தேவையை குறைத்து ,அதற்கு ஆகும் செலவைக்கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இது தான் இன்றைய தேதியில் சவுதி அரேபியாவின் விவசாய கொள்கை, மற்றும் நிலை.

ஆனால் சவுதி அரேபியாவில் பாலாறும் ,தேனாறும் ஓடுவதாக பதிவுப்போட்ட விஞ்ஞானி 1990 களின் விவரத்தை மட்டும் கவனமாக சொல்லி இது போல பசுமை புரட்சி தொடர்ந்து சவுதி அரேபியாவில் பரவி வருவதாக சொல்லிக்கொண்டார்.அப்படி பரவி வருவதாக இருந்தால் இன்று ஏன் இப்படி ஆயிற்று சவுதி அரேபியாவில்.

காண்க:
விஞ்ஞானியின் பதிவு

அதுவும் மண் வளம் இல்லைனு களிமண் இறக்குமதி செய்து,,விதை இறக்கு மதி, தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சிக்கனமாக சொட்டு நீர், பசுமைக்குடில் வைத்து விவசாயத்தைப்பெருக்கிட்டாங்க, அதே போல இந்தியாவில் செய்யக்கற்றுக்கொள்ள வேண்டும்னு வேற சொல்லி இருந்தார்.

கோதுமை போன்றவற்றை நிலப்பயிர் (ஃபீல்ட் கிராப்) என்பார்கள் அதனை எல்லாம் பசுமைக்குடில் ,சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி செய்ய கடினம் என்ற அடிப்படை விவசாய புரிதல் கூட இல்லை அவருக்கு.

அவர் சொன்னது எப்படி இருக்கு என்றால் ஏற்கனவே கல்யாணம் செய்து 5 ஆண்டுகளில் 6 குழந்தைப் பெற்றவனிடம், கல்யாணம் ஆகி 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் , பின்னர் விந்து தானம் பெற்று செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பெற்றவன் சொன்னானாம் நீ எல்லாம் என்ன பிள்ளை பெற்றாய் என்னப்போல விஞ்ஞான முறையில் லட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைப்பெற்றுக்கொள் என்று.அந்த அதிசய குழந்தையோ இன்குபேட்டரில் இப்பவோ, அப்பவோனு இழுத்துக்கொண்டிக்கிறதாம்!

இவ்வளவும் சொன்ன அந்த விஞ்ஞானிக்கு தற்கால சூழலில் சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது என தெரியாமல் போனது ஏன்? ஒரு வேளை மொழிப்படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற கடந்த காலத்தில் வாழும் ஆசாமியோ அல்லது பொய் சொல்வது பாவம் இல்லை என மார்க்கத்தில் விதி விலக்கு இருக்குமோ என்னவோ :-))

சவுதி அரேபியாவின் இன்றைய விவசாயக்கொள்கை மற்றும் நிலையை கீழ்கண்ட சுட்டிகளில் போய் அறியலாம்:

1)கோதுமை சரிவு

2) சவுதி புதிய விவசாயக்கொள்கை

3) சவுதி அரேபிய 

4) கோதுமை இறக்குமதி

5) கோதுமை vs தண்ணீர்

இந்திய விவசாயத்தில் என்ன தான் பிரச்சினை,

இந்தியாவில் நதி நீர்ப்பங்கீடில் சில சில தாவாக்கள் இருந்தாலும் தண்ணீர் தக்கி முக்கி வந்துவிடும், இல்லை இயற்கையாக மழை கைக்கொடுத்து விடும், வானம் பொழிகிறது, விவசாயி அலுக்காமல் உழைக்கிறான், பூமி விளைகிறது. பசுமைக்குடில், சொட்டு நீர் போன்ற குட்டிக்கரணம், தந்திரம் எல்லாம் பெரும்பாலும் தேவை இல்லை இயற்கையாகவே நல்ல விளைச்சல் இருக்கு.

விவசாயின் பெரும் பிரச்சினையே, விவசாயம் செய்ய ஆகும் செலவை விட குறைந்த விலைக்கு உற்பத்தியை விற்க வைக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவது தான்.

உரம் , விதை, மின்சாரம், டீசல், ஆட்கூலி எல்லாம் வேகமாக விலை ஏறுகிறது விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருள் கிடைக்க வேண்டும் என அரசு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை மிக குறைவாக வைத்துள்ளதே காரணம்.

குறைந்த பட்ச விலை தான் அது. அதற்கு மேல் விலை வைத்து வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று சட்டம் இல்லை ஆனால் அவர்களோ அடி மாட்டு விலைக்கு தான் கேட்பார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு பின் அரசு கொள்முதல் நிலையங்களை மூடி விடும், அல்லது சில சமயம் அளவைக் குறைத்து விடும் அது போன்ற சந்தர்ப்பங்களில் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் மிக குறைந்த விலைக்கே கேட்பார்கள். விவசாயிக்கு உள்ள பணத்தேவைக்கு குறைந்த விலைக்கு விற்பதை தவிர வேறு வழி இல்லை.

சவுதி அரேபிய அரசு சர்வதேச சந்தை விலையை விட 10 மடங்கதிகமாக அரசு விலையாக வைத்து விவசாயம் செய்ய தூண்டியது. காரணம் ஏராளாமாக இருந்த எண்ணைப்பணம்,ஆனால் அது போல நீண்ட காலம் செய்ய அவர்களுக்கு முடியவில்லை.

இந்திய விவசாயிகளுக்கு அது போல 10 மடங்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம், உற்பத்தி செலவை ஈடுகட்டும் வகையிலும் கொஞ்சம் லாபம் தரும் வகையில்  நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1500 ரூ என்று நிர்ணயித்தாலே போதும் பிச்சு உதறிடுவாங்க நம்ம விவசாயிகள்.

குறைவான கொள்முதல் விலை, ஆட்ப்பற்றாக்குறை, விளை நிலங்கள் வீட்டு மனை என மாறுவது போன்ற இக்கட்டான சூழலிலும் அரிசி, கோதுமை உற்பத்தியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலே இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.விரயம் இல்லாமல் சந்தைப்படுத்துதல் மற்றும் நியாயமான விலை மட்டுமே இன்றைய நிலையில் விவசாயிக்கு தேவை.

விவசாயம் குறித்த இப்பதிவுகளையும் பார்க்கவும்

1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2







16 comments:

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//பொய் சொல்லி என்ன சாதிக்கப்போகிறீர்கள், பொய் சொன்னால் உங்கள் மார்க்கத்தில் ஒன்றும் ஹராம் இல்லையா :-))
எனது இப்பதிவைப்பாருங்கள் உங்கள் முகமூடி கிழிந்து தொங்குகிறது.//

பொய் சொல்லி எனக்கு எந்த ஆதாயமும் வந்து விடப் போவதில்லை. புள்ளி விபரங்களை எனவேதான் வருடம் போட்டு குறிப்பிட்டுள்ளேன். கோதுமை பயிருக்கு தண்ணீர் அதிகம் தெவைப்படும். எனவெதான் கொதுமை உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு தண்ணீர் அதிகம் தேவைப் படாத பயிர்களை பயிரிடுகின்றனர். அதே விவசாயிகளைக் கொண்டு சூடானின் நிலங்களை குத்தகை எடுத்து விளைச்சலை இன்னும் அதிகமாக்குகின்றனர்.

ஆனால் நம் நாட்டில் நில வளம் நீர்வளம் அனைத்தும் சிறப்பாக இருந்தும் விளை நிலங்களை எல்லாம் மனைகளாகப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கத்தில் வந்த பதிவே இது. கோதுமை உற்பத்தியைக் குறைத்தாலும் அன்று என்ன விலைக்கு கோதுமை கிடைத்ததோ அதே விலையிலேயே சந்தையில் கொதுமையை அரசு பொது மக்களுக்கு கொடுககிறது. இத்தகைய நிர்வாகத் திறன் நமக்கு ஏன் வரவில்லை என்பதுதான் எனது கேள்வி.

//எனது இப்பதிவைப்பாருங்கள் உங்கள் முகமூடி கிழிந்து தொங்குகிறது.//

எனது முகமூடி எப்படியாவது போகட்டும். 'ஒளிரும் இந்தியா' என்று பாமர மக்களை இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள். விளைச்சல் குறைந்து அதனால் மழையும் பொய்த்து விட்டால் நம் நாட்டின் 120 கோடி மக்களின் நிலை என்னவாவது. இதற்கெல்லாம் நீண்டகால திட்டங்கள் நம் அரசிடம் உள்ளதா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

திரு.வவ்வால்,
மிக நல்ல ஆய்வுடன் கூடிய சிறந்த தரமான பதிவு.
வாழ்த்துகள்.

ஆனால்,

திரு.வவ்வால்,
உங்களின் இந்த அருமையான ஆக்கம்... சகோ.சுவனப்பிரியனை எள்ளி நகையாடும் நோக்கில் எழுதப்பட்டது ஒரு பெருங்குறை. அதனால் சில முக்கிய விஷயங்களை இங்கே கவனிக்க தவறுகிறோம்.

அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் சீனாவை விட இரண்டாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளது இந்தியா.

இப்போது சமவெளி குறைந்து
மலைகள் நிரம்பிய சீனாவை விட அதிக இடங்களில் இந்தியா விவசாயம் செய்தாலும், அரிசி, கோதுமை இரண்டிலும் சீனாவை விட 40 % இந்திய உற்பத்தி குறைவாக உள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயம் மட்டுமல்ல... கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சீனாவில் சமவெளிகள் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்திருந்தால் இன்னும் அதிகம் விளைச்சலை காட்டி இருக்கும்.
ஆனால்,
நாம் சமவெளிகளை --- விளையும் நிலங்களை மிக குறைந்த விலையில் வாங்கி பிளாட் போட்டு தரிசாக்கி... அதை அதிக விலைக்கு விலை நிலங்களாக்கி விற்பனை செய்யும்போது... விளைச்சல் அதிகரிக்குமா... குறையுமா..? இரண்டாம் இடம் என்று பெருமைப்படும் நேரத்தில் மூன்றாம் இடத்துக்கு போய் விடுவோம்..!
இதுதான் சகோ.சுவனப்பிரியன் கூறியதும்.

இதில் நாம் கவனம் செலுத்தினால் அரிசி, கோதுமை இரண்டிலும் முதல் இடத்தில் வர முடியும்.

உங்கள் பதிவை படித்து இன்னொரு விஷயம் நான் அறிந்து கொண்டது என்னவெனில், நிலவளமும் இல்லை... நீர்வளமும் இல்லை... ஆனால், விவசாயம் செய்யும் ஆர்வமும், விவசாயிகளை ஊக்குவிக்கும் உத்வேகமும் சவூதி அரேபிய அரசிடமும் மக்களிடமும் உள்ளது. இந்த ஆர்வமும், உத்வேகமும் இந்தியாவிடமும் வேண்டும் என்றுதான் சகோ.சுவனப்பிரியன் சொல்கிறார்.

ஆனால், இதனை கோவி கண்ணனின் சிந்தை 'இந்தியாவை பாலைவனமாக்க வேண்டுமா' என்று திரித்தது.

டோண்டுவின் சிந்தை... 'இந்த பாலைவனத்தில் பயிரிடும் ஐடியாவை... சவூதிக்கு பதில் இஸ்ரேலிடம் கற்றுக்கொள்ளலாம் இந்தியா' என்றது..!

என்னமோ... ஆமையுடன்(saudi) முயலுக்கு(india) நீங்கள் ஓட்டப்பந்தயம் நடத்தினாலும் ... முயல்(india) தூங்கிவிடக்கூடாது என்பதே நம் அனைவர் விருப்பமும்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///மேற்கண்டவை எல்லாம் "ரொம்ப சாதாரணமான காய்ந்து போன வறண்ட இந்தியாவில் நடக்கும் ரொம்ப சாதாரண விவசாயத்தினை" விவரிக்கும் புள்ளி விவரங்கள்.///---இதனை வளமான இந்தியாவின் அசாதாரண விவசாயமாக மாற்ற ஆர்வப்பட வேண்டாமா..?

//இந்திய விவசாயத்தில் என்ன தான் பிரச்சினை,...//

இந்த தலைப்பின் கீழே நீங்கள் சொன்னவை அனைத்தும் அருமை. சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்துக்கள். சகோ.சுவனப்பிரியனின் ஆதங்க பதிவில் இருந்தது காட்டம்..! ஆனால், நீங்கள் இந்த பிரச்சனைகளை மயில் தோகையினால் வருடிக்கொடுப்பது போல சொல்வது... ஏதோ "இவைகள் எல்லாம் இருக்கட்டுமே" என்பது போல உள்ளது..! இவற்றுக்கு கடும் எதிர்ப்பை தங்களிடம் எதிர்பார்த்தேன்...!

சார்வாகன் said...

அருமையான பதிவு நண்பா,
புள்ளிவிவரங்கள் அருமை.விவசாயத்திற்கு மான்யமும்,குறைந்த பட்ச விலையும்,ஓய்வூதியமும் வழ‌ங்கப்ப்ட்டால் நம்மால் உலகிற்கே சோறிட முடியும்.இந்தியா ஒரு விவசாய வல்லரசு!!!!!!!!.சவுதியின் விவசாயம் என்பது இலங்கை ,பங்களா தேஷ் போன்ற சிறு நாடுகளுடன் கூட ஒப்பிடும் அளவு இல்லை.அதை போய் ஒரு விஷயம்னு!!!!!!!!!!!!!

சீனாவின் பரப்பு நம்மை விட‌ 3 மடங்கு அப்படி இருந்தும்,அரசு உதவி மிக குறைவு அப்படி இருந்தும் வல்லரசு சீனாவுடன் போட்டி போட செய்யும் விவசாயியை பற்றி இன்னும் பலர் எழுத வேண்டும்.அரசும் சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.

கோவி.கண்ணன் said...

//இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காடு திருத்தி கழனி கண்டார்கள், கரிகால பெருவளத்தான் விவசாயத்திற்கு நீரின் தேவை அறிந்து கல்லணை கட்டியது இன்றும் நிலைத்து நிற்கிறது.//

ஏன் ஆற்றில் அணை கட்டினார்கள், குளத்திலோ, கடலிலோ கட்டக் கூடாதா ?

ஆத்துல அணைக் கட்டுவது பற்றிப் பேசுகிறீர்கள், வளைகுடாவில் கடலுக்குள் மணல் கொட்டி நகரங்களை, மாபெரும் கட்டிடங்களை உருவாக்குகிறார்கள் தெரியுமா ? அதை பார்த்து இந்தியா வங்காளவிரிகுடாவில் வீடு கட்டுவது எப்போது ?

வவ்வால் said...

திரு.சுவனப்பிரியன்,
வணக்கம்,

//பொய் சொல்லி எனக்கு எந்த ஆதாயமும் வந்து விடப் போவதில்லை. புள்ளி விபரங்களை எனவேதான் வருடம் போட்டு குறிப்பிட்டுள்ளேன்.//

இதுவே 90 களின் புள்ளி விவரத்தைக்காட்டி இஸ்லாமியர்கள் கல்வி அறிவில் பின் தங்கியுள்ளார்கள் என ஒருவர் கட்டுரை போட்டால் அது 90 களின்

உண்மை என எடுத்துக்கொள்வீர்களா.அல்லது நிகழ்கால உண்மை எனக்கேள்விக்கேட்க மாட்டீர்களா?

20 ஆண்டுக்கு முந்தைய விவரத்தை சொல்லி பசுமை புரட்சி இன்றும் சவுதி அரேபியாவில் பரவுகிறது என்றீர்கள்.ஆனால் அங்கே விவசாயத்தை ஒட்டு மொத்தமாக மூட திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

கோதுமைக்கு மட்டும் இல்லை மற்றவற்றிலும் குறைக்க திட்டம் போட்டுள்ளத்உ சுட்டிகளைப்படித்தால் தெரிந்திருக்குமே.

//அதே விவசாயிகளைக் கொண்டு சூடானின் நிலங்களை குத்தகை எடுத்து விளைச்சலை இன்னும் அதிகமாக்குகின்றனர்//

2 மி.மெ.ட கோதுமை இறக்குமதி செய்கிறார்கள், மொத்த தேவை 2.9 மி.மெ .ட அப்படி எனில் 0.9 மி.மெ.ட மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள் என்பது வளர்ச்சியா இல்லை வீழ்ச்சியா?

இவ்வளவு உதாரணம் கொடுத்த போதும் விடாமல் அங்கே விவசாயம் செய்கிறார்கள் என்று கொடிப்பிடிப்பதை என்ன என்று சொல்வது. பேசாமல் நிலவில் போய் விவசாயம் செய்கிறார்கள் சொல்லுங்கள், யாரும் கேள்விக்கேட்கப்போவதில்லை :-))

//அன்று என்ன விலைக்கு கோதுமை கிடைத்ததோ அதே விலையிலேயே சந்தையில் கொதுமையை அரசு பொது மக்களுக்கு கொடுககிறது. இத்தகைய நிர்வாகத் திறன் நமக்கு ஏன் வரவில்லை என்பதுதான் எனது கேள்வி.//

ஹி..ஹி பெட்ரோல் விற்ற காசை இப்படி உணவு மாநியமாக செலவு செய்தால் இன்னும்ம் குறைவான விலைக்கும் விற்கலாம். சொல்லப்போனால் சர்வதேச விலை, உள்நாட்டில் உற்பத்திக்கு ஆவதை விட மலிவு ,பின் எப்படி விலை ஏறும்?

//விளைச்சல் குறைந்து அதனால் மழையும் பொய்த்து விட்டால் நம் நாட்டின் 120 கோடி மக்களின் நிலை என்னவாவது. இதற்கெல்லாம் நீண்டகால திட்டங்கள் நம் அரசிடம் உள்ளதா?//

அதை தான் பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறேனே. குறைந்த பட்ச ஆதரவு விலையை கொஞ்சம் உயர்த்தினாலே போதும் வேறு மாய மந்திரம் செய்ய வேண்டாம். உற்பத்தி இன்னும் பெருகும்.அரசு அதனை செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
-------------------

-------------

சகோ.ஆஷிக்,

வணக்கம்,

//அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் சீனாவை விட இரண்டாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளது இந்தியா.//

நீங்கள் சுட்டிக்காட்டியது சரியான உதாரணம். சீனாவினை கணக்கில் கொண்டு விவசாயத்தினை நாம் முன்னெடுக்கலாம், மேலும் ஆஸ்ஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் போன்றவை நல்ல உற்பத்தி திறனைக்காட்டுகின்றன.

மேலும் சீனா 29 மி.ஹெ. பரப்பில் கோதுமை சாகுபடி செய்கிறது, உற்பத்தி 117.9மி.மெ.ட.
இந்தியா 24 மி.ஹெ பரப்பு உற்பத்தி= 85.9 மி.மெ.ட இது 2011 இன் இறுதி நிலவரம்.

அதுவும் ஆஸ்திரேலியா வறண்ட சூழலில் நல்ல விளைச்சலை கட்டுப்படியாகும் முதலீட்டில் எடுக்கிறது.இப்போது நம் வேளாண் பல்கலைகள் ஆஸ்திரேலிய கோதுமை வகையில் ஆய்வு மேற்கொண்டு இந்தியாவுக்கு ஏற்ப மாற்ற இருக்கின்றன. முன்னர் பசுமை புரட்சியின் போதும் ஆஸி கோதுமை விதைகளாகப்பயன்ப்பட்டது.

ஆனால் விவசாயத்தை தலை முழுக திட்டம் போட்டு செயல்படும் ஒரு பாலைவன நாட்டின் விவசாயத்தை முன் மாதிரியாக சொல்வது எவ்வகையில் சரி,அதுவும் 20 ஆண்டுக்கு முந்தைய புள்ளி விவரக்கணக்கைக்காட்டி.

90 இல் அமெரிக்க டாலர் 22 ரூபாய் தான் இன்றும் ரூபாய் பலமாக இருக்கு என்றால் விடுவீர்களா?

//நிலவளமும் இல்லை... நீர்வளமும் இல்லை... ஆனால், விவசாயம் செய்யும் ஆர்வமும், விவசாயிகளை ஊக்குவிக்கும் உத்வேகமும் சவூதி அரேபிய அரசிடமும் மக்களிடமும் உள்ளது. //

எங்கே ஊக்குவிக்குறது அதான் ஊத்தி மூட திட்டம் போட்டு செய்வதை சுட்டியில் காட்டியுள்ளேனே, இன்னுமா இப்படி சொல்கிறீர்கள் :-))

//இந்த ஆர்வமும், உத்வேகமும் இந்தியாவிடமும் வேண்டும்//

இந்தியாவிடம் வேண்டும் , விவசாயிகள் தயார் அவர்களுக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேனே. நான் கொடுத்த எனது சுட்டிகளும் பாருங்கள் முழுவிவரம் தெரியும்.

வவ்வால் said...

சார்வாகன்,

வணக்கம்,நன்றி,

//விவசாயத்திற்கு மான்யமும்,குறைந்த பட்ச விலையும்,ஓய்வூதியமும் வழ‌ங்கப்ப்ட்டால் நம்மால் உலகிற்கே சோறிட முடியும்.இந்தியா ஒரு விவசாய வல்லரசு!!!!!!!!.//

இதைத்தான் நான் எப்பொழுதும் வலியுறுத்துவது. விவசாயின் உற்பத்திக்கு உரிய விலை இன்மையே,விவசாயத்துக்கு இங்கே தடை. நட்டத்தில் எத்தனைக்காலம் விவசாயம் செய்வான், கிடைத்த விலைக்கு நிலத்தை ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று விட்டு, நகருக்கு பிற கூலி வேலைக்கு செல்கிறான்.

கட்டுமானப்பணிக்கு கூலி வேலைக்கு சென்றால் தினம் 200 நிச்சயம். என்ற நிலை இருக்கு. பின் எப்படி கையை சுட்டுக்கொண்டு விவசாயம் செய்வான். விலையைக்கட்டுக்குள் வைக்கிற்றேன், வோட்டு கிடைக்கும் என அரசாங்கம் விவசாயிகளை வதைக்கிறது.

//.சவுதியின் விவசாயம் என்பது இலங்கை ,பங்களா தேஷ் போன்ற சிறு நாடுகளுடன் கூட ஒப்பிடும் அளவு இல்லை.அதை போய் ஒரு விஷயம்னு!!!!!!!!!!//

நீங்க வேற இப்போது சவுதியின் விவசாயம் அந்த அளவுக்கூட இல்லை. இருப்பதும் அரசு தரும் அதிக மாநியத்துக்காக.அவர் சொன்னது எல்லாம் பழங்கதை 5 ஆக ஒரு சுட்டி இருக்கும் படித்து பாருங்கள் தெரியும். தண்ணீருக்கான பட்ஜெட்டே பில்லியன் டாலரில் போகுது அங்கே.

//சீனாவின் பரப்பு நம்மை விட‌ 3 மடங்கு அப்படி இருந்தும்,அரசு உதவி மிக குறைவு அப்படி இருந்தும் வல்லரசு சீனாவுடன் போட்டி போட செய்யும் விவசாயியை பற்றி இன்னும் பலர் எழுத வேண்டும்.அரசும் சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.//

கண்டிப்பாக நாம் முன்னால் செல்பவரை தான் பார்க்க வேண்டும், பின்னால் அல்ல. மேலும் சீனர்கள் மிக அதிக உரம் ,பூச்சி மருந்து பயன்ப்படுத்துகிறார்கள். அங்கே மலிவு அவை.நம் நாட்டில் அதிகம்.மேலும், பொட்டாஷ், பாஸ்பேட் உரங்கள் பெருமளவு இந்தியாவில் இறக்குமதி என்பதால் தட்டுப்பாடு வேறு.

--------------------
கோவி,

வணக்கம், நன்றி,

//ஏன் ஆற்றில் அணை கட்டினார்கள், குளத்திலோ, கடலிலோ கட்டக் கூடாதா ?//

பெட்ரோல் காசு எக்க சக்கம் இருந்தால் சாக்கடையில் கூட அணைக்கட்டலாம் புதுமையாக இருக்கும்.அமெரிக்காவில் சாக்கடையில் விவசாயம் செய்கிறார்கள் ஆனால் அதனை அமெரிக்காவில் விற்க FDA தடைவிதித்துள்ளது. அதெல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ரகம் :-))

//ஆத்துல அணைக் கட்டுவது பற்றிப் பேசுகிறீர்கள், வளைகுடாவில் கடலுக்குள் மணல் கொட்டி நகரங்களை, மாபெரும் கட்டிடங்களை உருவாக்குகிறார்கள் தெரியுமா ? அதை பார்த்து இந்தியா வங்காளவிரிகுடாவில் வீடு கட்டுவது எப்போது ?//

ஹி...ஹி முடியல விடுங்க அவர் ஏதோ உயர்த்தி பேச வேண்டும் என பழங்கதைப்பேசி மாட்டிக்கொண்டார். இன்னும் போட்டு ஏன் கும்மிக்கொண்டு.

ஆனால் நீங்கள் கொஞ்சம் இணையத்தில் தேடி பார்த்து பதிவுப்போட்டு இருந்தால் அப்போதே அடங்கி இருக்கும். இப்போது பாருங்கள் கொஞ்ச காலமேனும் அவர் விவசாயப்புரட்சி செய்து விட்டார் பாருங்கள் :-))

Anonymous said...

I heard some story that they can get any amount of best water in the world from a place in saudi.
The water is called jamjam.

If so why they have spend billions of riyals on water?

Hi Hi What is the truth?

ராஜ நடராஜன் said...

வவ்!அதானே பார்த்தேன்.விவசாயப் பதிவெல்லாம் போட்டா யார் வரப் போறா?

//மேகாலாயாவில் உள்ள மவ்சின் ராம் =11,87.3 செ.மீ, சிரபுஞ்சி= 11,77.7 செமீ)//

சிரபுஞ்சி மட்டும் ஏன் பெயர் விளம்பரமானது.மவ்சின் பேர் யாரும் அறியாத ஒன்று.

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டம் போட்டு விட்டு உங்க பதிவை நன்கு உள்வாங்கிக் கொண்டு பின்னூட்டத்தில் பதிவர் சுவனப்பிரியன் பெயர் பார்த்த பின்பே உங்க தலைப்புக்கான டிஸ்கி புரிந்தது>)

இந்தியா,சவுதி அரேபிய ஒப்பீடே தவறு.ஆனால் சுவனப்பிரியன் பதிவில் ஒரு உண்மை ஒளிந்திருக்குது.இப்ப சவுதியில் விவசாய விளைச்சல் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.காரணம் குவைத்,லெபனான் போன்ற காய்கறிகள்(தக்காளி,உருளை,பீன்ஸ்) அரை தினார்க்கு மேல்,சுமார் ரூ.85-90க்கு விற்றதை சவுதி காய்கறிகள் 45-50 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டது.ஒரு வேளை ஏக விளைச்சல் மகிழ்ச்சியில் அவர் பதிவு போட்டிருக்கலாம்.கூடவே விளைநிலங்களை வீட்டு நிலங்களாக மாற்றும் நிலையும் நம்மிடம் பரவி வருகிறதே.அந்த விதத்தில் he is scoring a point:)

ராஜ நடராஜன் said...

//குறைவான கொள்முதல் விலை, ஆட்ப்பற்றாக்குறை, விளை நிலங்கள் வீட்டு மனை என மாறுவது போன்ற இக்கட்டான சூழலிலும் அரிசி, கோதுமை உற்பத்தியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலே இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.விரயம் இல்லாமல் சந்தைப்படுத்துதல் மற்றும் நியாயமான விலை மட்டுமே இன்றைய நிலையில் விவசாயிக்கு தேவை.//

விளைநிலங்கள் வீட்டுமனையாவதை அரசே ஊக்கப்படுத்துகிற மாதிரிதான் தொலைக்காட்சிகள் ஒன்னு வாங்கினா இன்னொன்னு இலவசம்ன்னு விளம்பரம் செய்றாங்க.இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

நீங்க சொன்ன கல்லணை வரிகள் படிக்கும் போது மனசுல அப்படி ஒரு பெருமிதம் எனக்கு.அப்புறம் யோசிச்சா யதார்த்தமாக கல்லணையின் நிலையென்ன என்ற கேள்வியும் உருவாகிறது.

நீங்க சொன்ன மாதிரி விவசாயத்துக்கு ஊக்குவிப்பு சலுகைகள் கொடுத்தா நம்ம விவசாயிகள் பிச்சுப்புடுவாங்க என்பதில் சந்தேகமேயில்லை.

இங்கே எகிப்தியர்கள் மொகந்திஸ் எனும் உச்சரிப்பில் எஞ்சினியர் என சர்டிபிகேட் வைச்சிருக்காங்க்.ஆளாளுக்கு இப்படி சர்டிபிகேட் வச்சிருக்காங்களேன்னு துருவப் போக எகிப்தில் விவசாயம் பார்த்தவங்களாம்.பார்க்கும் வேலைக்கும் சர்டிபிகேட்டுக்கும் சம்பந்தமேயில்லைங்கிறதால நண்பர்கள் சிரிச்சு வைப்போம்.

இந்தியாவின் முதல் வேளாண் எஞ்சினியர் விவசாயிதான்.

ராஜ நடராஜன் said...

விவசாயத்தில் சீனாவும் கூட இந்தியாவுடன் எட்டிப்பார்க்க முடியாது.ஆடை,மின்பொருட்கள் வேண்டுமானால் தலை நிமிரலாம்.ஆடைகள் கூட இந்திய காட்டன் தரமானவை.ஆனால் மார்க்கெட்டிங்க்,இடைத்தரகர்,கை மாறி கை மாறி பயனாளிக்குப் போய்ச் சேர்வதென விலையேற்ற்த்தில் பின் தங்கி விடுகிறோம்.

அதே போல் ச்வுதியும்,உள்ளூர் சுய தேவை பூர்த்தியில் ஓரளவுக்கு சிறந்து விளங்கலாம்.அதே போல் உணவுப்பொருட்களின் தரம்,பால்,ப்ழரசங்கள் போன்றவற்றில் சவுதி அரேபியா சிறந்தே விளங்குகிறது.

சவுதியின் மத கோட்பாட்டுக்கு மண்டையில் தட்டுவோம்.உணவு தரக்கட்டுப்பாட்டுக்கு தோளில் தட்டுவோம்:)

வவ்வால் said...

அனானி,

ஓவர் நக்கல்லு :-)) ஜம்ஜம் கூட முகமது நபி தோண்டியது இல்லை. இஸ்மயில் னு ஒருத்தர் ரொம்ப காலம் முன்னரே தோன்டியது. ஆனா அவரும் ஒரு இறைத்தூதர்னு சொல்லிட்டாங்க. அவரோட காலம் இஸ்லாமுக்கு முந்தைய காலம்.7 ஆம் நூற்றாண்டுல உருவாக்கிட்டு , அதுக்கு முன்னர் நடந்த எல்லாம் நாங்க தான் செஞ்சோம்னு சொல்லிகிறதுல ஒரு பெருமை தான். ஏசுவையே இஸ்லாமியர்னு ஈசானு சொல்லும் போது இதெல்லாம் சகஜமப்பா :-))

ஹி..ஹி ஜம் ஜம் கு அடில பாதாள கங்கை ஓடுது எவ்வளவு இறைச்சாலும் தண்ணி வரும்னு சொல்வாங்க, கேள்விலாம் கேட்கப்படாது :-))

வவ்வால் said...

ராஜ்,

விவசாயத்த பத்தி பேசினா எவன் வருவான், அதுவே இந்து விவசாயிகள் சிறப்பாக விவசாயம் செய்கிறார்கள்னு இந்த பதிவுக்கு தலைப்பு வச்சு இருந்தேன்னு வச்சுக்கோங்க, முக்காடு, காவி, சிலுவைனு , ஜொராஷ்ட்ரியன்னு ஒருத்தர்விடாம வந்து ரணகளம் ஆக்கி இருப்பாங்க :-))

சிரபுஞ்சி பலகாலமா முதல் இடத்தில் இருந்தது டான் பிராட்மேன் போல மவ்சின்ராம் 90'சில் முன்னுக்கு வந்துச்சு மழை அளவுல சச்சின் போல. இன்னும் சொல்லப்போனால் 95 -96 ல என நினைக்கிறேன்.(அப்போ ஒரு மாவட்ட இண்டர் ஸ்கூல் குயிஸ் புரோக்கிராம்ல புதுசா இந்தப்பேர சொல்லி கெலிச்சேன்,எல்லாம் சிரபுஞ்சி சொன்னாங்க, அதே போல பெட்ரோல் முதலில் எடுத்தது அஸ்ஸாம்ல டிக்போய்,னு சொல்லத்தெரியாம பல்பும் வாங்கினேன்..ஹி..ஹி மாநிலத்து பேர சொல்லிட்டேன் அஸ்ஸாம்னு)

------------

விடிய விடிய கதைக்கேட்டுடு ரஜினி பொண்ணு ஷ்ருதினு சொல்வீங்க போல :-))

விலைக்குறைவாக் இருப்பதால் உற்பத்தி இருக்குனு பொருள் இல்லை. சவுதி விவசாயம் 2009,10 இன் நிலைமைகளை காட்டும் 5 சுட்டிகள் போட்டும் படிக்காம வந்தா எப்பூடி.

சவுதி அரசு அதிகம் மாநியம் தருவதால் விவசாயிகள் கள்ளத்தனமாக இறக்குமதி செய்து உற்பத்த்இனு மாநியம் வாங்குவதை தடுக்க முடியவில்லைனு சவுதி விவசாய அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கார்.

மேலும் நீர் சுத்திகரிப்பு செலவு, மாநியம் கொடுத்து விவசாயம் செய்வது பொருளாதார ரீதியாக அறிவுடையது அல்லனு அரசு முடிவு எடுத்து , விவசாயம் செய்வதைக்குறைத்துள்ளதாகவும் சொல்லி இருக்கார்.


//Production dipped below one million tones last year and is expected to be far lower this year following the decision to stop subsidizing local production. In the next two years, output could dip further and the country will become almost totally reliant on imports, mainly from the West.

“The decision we took two years ago to halt local wheat output is final and clear…there is no going back,” said Fahd Balghaneem, Saudi Minister of Agriculture and Head of the Grain Silos and Flour Mills Organization (GSFMO).//

//So for the period July-October 2011 Ukraine is moving to Saudi Arabia 1.31 million tons of barley, 147,000 tons of wheat and 54,000 tons of corn.//

//In the 1970s, the government started a programme to encourage farmers to produce wheat, guaranteeing them at the time a massive 3,500 riyals ($933.5) for every tonne.

The kingdom even ended up with a large enough surplus in the early 1990s to export some to the ex-Soviet Union and donated a portion of it to Syria, said Abdulrahman al-Qahtani, a Saudi agriculture expert.

Faced with criticism for overpaying farmers, the government gradually cut the price to 1,000 riyals per tonne.

Global prices, in contrast, have soared in//

தொடரும்....

வவ்வால் said...

ராஜ்,

//விளைநிலங்கள் வீட்டுமனையாவதை அரசே ஊக்கப்படுத்துகிற மாதிரிதான் தொலைக்காட்சிகள் ஒன்னு வாங்கினா இன்னொன்னு இலவசம்ன்னு விளம்பரம் செய்றாங்க.இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.//

எப்படி தடுத்து நிறுவது? விவசாயிக்கு உரிய விலைக்கொடுப்பது ஒன்றே வழி.

விளைச்சல் இருக்கு ஆனால் விற்றால் போட்ட முதலை விட குறைவா வருமானம் வருது, எனவே விவசாயம் செய்யாமல் தரிசாகப்போட்டால் அப்போ ரியல் எஸ்டேட் காரன் வந்து விலைப்பேசுறான். விவசாயின் ஒரே மூலதனம் நிலம். குடும்பத்தேவை, மகளுக்கு கல்யாணம் , மகன் கல்வி, என்ன செய்வான் ஈன விலைக்கு நிலம் கைமாறுது. பிளாட் ஆகுது, வெளிநாட்டிலும், ஐடியிலும் சம்பாதித்தவர்கள் போட்டி போட்டு வாங்குகிறார்கள்.

நிலத்துக்கு டிமாண்ட் இருப்பதை பார்க்கும் ரியல் எஸ்டேட்காரர்கல் விற்காத விவசாயியையும் ஆசைக்காட்டியோ, மிரட்டியோ வாங்குவதும் நடக்கிறது.

மிச்சம் சொச்ச விவசாயிகள் செய்யும் உற்பத்திக்கே நாம் உணவு உற்பத்தியில் தன்னிரைவு, அரசு உரிய விலை தரும் பட்சத்தில் உண்மையான பசுமை புரட்சி இனி ஏற்படும்.

//நீங்க சொன்ன கல்லணை வரிகள் படிக்கும் போது மனசுல அப்படி ஒரு பெருமிதம் எனக்கு.அப்புறம் யோசிச்சா யதார்த்தமாக கல்லணையின் நிலையென்ன என்ற கேள்வியும் உருவாகிறது.//

அப்துல் கலாமே கல்லணை இன்றும் உறுதியாக இருக்குனு சொல்லி இருக்கார் பாருங்க. கல்லணை மீது புதிதாக கட்டி வலுவாக்கி உள்ளார்கள் ,உள்ள இருக்கும் கோர் கரிகாலன் கட்டியது.

திருச்சி முக்கொம்பு போனால் பார்க்கலாம், அங்கிருந்து தான் கொள்ளிடத்துக்கு தண்ணீர் பிரிகிறது. கல்லணை வழிந்தால் கொள்ளிடத்தில் நீர் பாயும், கொள்ளிடம் ,காவிரியின் வெள்ளம் வடிய பயன்படும் கிளை ஆறு. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் கொள்ளிடம் வாங்கிக்கொள்ளும் "கொள்ளும் இடம் =கொள்ளிடம்"


//இந்தியாவின் முதல் வேளாண் எஞ்சினியர் விவசாயிதான்.//

ஆமாம் உலகின் முதல் உற்பத்திக்கூடம் வயல் தானே அப்போ அவங்க தான் எஞ்சினியர்.

நிலத்தில் விளைவதை உண்டான், பின்னர் தேவை அதிகம் ஆக விதைத்து உண்டான், பின்னர் உழுது விதைத்தால் அதிகம் விளையும் என தற்செயலாக கண்டான், ஆடு, மாடுகளின் மேய்ச்சலுக்கு பின்னர் ஏன் அதிகம் விளைகிறது என யோசித்து , சாணம் உரம் என உணர்ந்து "கிடை" அடித்தான், பின்னர் சாணத்தை சேகரித்தும் உரமிட்டான் என அனுபத்தின் அடிப்படையில் புதிய கண்டுப்பிடிப்புகள் செய்த விவசாயி ஒரு விஞ்ஞானி தானே. யார் அவனுக்கு வேளாண் பல்கலை ஆரம்பித்து சொல்லி தந்தார்கள்.

எனவே உலகின் முதல் விஞ்ஞானி, எஞ்சினியர் விவசாயி தான். ஆடம் ஏவாள் வழி மானிடம் வளர்ந்தது என்று சொல்பவர்களும் மறுக்க முடியாது. ஏன் எனில் அவர்களின் இளைய வாரிசு ஏபேல் தான் முதல் கால் நடை வளர்ப்பாளர், மூத்தவன் கெய்ன் தான் முதல் விவசாயி (ஆடமே முதலில் விவசாயம் செய்திருந்தாலும்). இருவருக்கும் ஆடம் அப்போதே தொழில் பிரித்துக்கொடுத்தார் :-))

இந்த ஆடம், ஏவாள் கதையை வைத்து அடுத்த குண்டுப்போட்டு கலாய்க்கப்போறேன் , :-))
ஒரு கும்பலே வந்து கும்மி அடிக்கப்போவுது பாருங்க :-))

//உணவு தரக்கட்டுப்பாட்டுக்கு தோளில் தட்டுவோம்:)//

அதெல்லாம் சாத்தியமாக ஒரே காரணம் எண்ணை விற்பதன் மூலம் கிடைக்கும் உபரி பொருளாதாரம்.

சவுதியில் கிடைக்கும் உணவுப்பொருள் அனைத்திற்கும் 75% மாநியம் அரசு அளிக்கிறது.அதாவது 100 ரூ மதிப்புள்ள பொருளை 25 ரூக்கு விற்க சொல்கிறது அரசு, 75 ரூ அரசு ஏற்றுக்கொண்டு கொடுக்கும். வழக்கம் போல இதனையும் உலகவங்கி தவறான உற்பத்திக்கொள்கைனு விமர்சித்தும் இருக்கு.

Anonymous said...

I enjoy what you guys tend to be up too. This sort of clever work and exposure!
Keep up the amazing works guys I've incorporated you guys to our blogroll.

Look into my webpage buy twitter followers