Thursday, April 05, 2012

என்ன கொடுமை சார் இது-4






என்ன கொடுமை சார் இது-4

மங்குனி உத்திரம்:

பங்குனி வெயில் பல்லைக்காட்டுது இதுல ஆறுமுகனுக்கு அரோகரானு ஒரு கோஷ்டி பால் காவடி ,பன்னீர் காவடினு தூக்கிக்கிட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடிக்கிட்டு போகுதுங்க ,கேட்டா பங்குனி உத்திரமாம், எனக்கு தெரிஞ்சு உத்திரம்னா ஓட்டு வீட்டுல நடுவில போடுற மர பீம் இவங்க எங்கே போய் பீம் போட போறாங்களோ :-))

என்னமோ செய்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு 2-3 நாளாவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி போட்டு லூர்து மேரி ராஜேஷ்வரி, தொளுகுவா மீனாட்சி சவுந்தர ராஜன் ஆகியோர் பாடிய பக்தி பழரச பாடல்களை உச்சஸ்தாயில அலரவிட்டு என் காது ஜவ்வுல கடப்பாரைய விட்டு ஆட்டிட்டாங்க மை லார்டு முருகா , இதெல்லாம் இல்லைனா நீ அருள் பாலிக்க மாட்டியா ? இதுக்கே மின் வெட்டினால் அவங்க பக்தி சேவை பாதிக்க கூடாதுனு ஜெனெரேட்டர் வேற வச்சு பாட்டுப்போடுறாங்க வேலைய்யா ,இது என்னய்யா நியாயம்.

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி ஒலி மாசு செய்வது என்று தடைசெய்தார்கள்னு சொல்றாங்க ,ஆனால் ஆன்மீக ,அரசியல் கூட்டங்களில் அதான் கிழியுது ,அதுக்கு காவல் துறை பாதுகாப்பு வேற, என்ன தடையோ ,சட்டமோ அது எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.

ஆறுமுகம்னு சொல்றாங்களே அந்த படம் எப்படி இருக்கும்னு தேடிப்பார்க்கலாம்னு தேடினா பாடாவதி சினிமாக்களான சின்ன தளபதி பரத்தின் ஆறுமுகம், குயிக் கன் முருகன், மூலக்கடை முருகன் போன்ற  படங்கள் தான் முதலில் வருது. மூலக்கூடை முருகன் படம் பவர் ஸ்டாரோடது ஸ்டில்லே செம டெர்ரரா இருக்குனா படம் எம்புட்டு டெர்ரரா இருக்கும் ,அத பார்க்கிறவன் உசுரோட வருவான்னு நினைக்கிறிங்க :-))



சரி சமாச்சாரத்துக்கு வருவோம், ஆறு தலையோட ஒரு படத்த பார்த்தேன், ஆனால் பாருங்க ஒரு கழுத்து தான் இருக்கு ,அதுக்கு இடப்பக்கம் ரெண்டு  தலை, வலப்பக்கம் மூன்று தலை. அடப்பக்தி பதருகளா நடுவில ஒரு தலைய வச்சு ஒரு பக்கம் 2, இன்னொரு பக்கம் 3 வச்ச எப்படியா பேலன்ஸ் ஆவும், ஒரு சைடுக்க இழுக்காதா? வச்சது தான் வச்சிங்க ஒரு 7 தலைய வைக்க என்ன கேடு? , ரெண்டுப்பக்கமும் தலா மூன்று தலைனு பேலன்ஸ் ஆகும்ல :-))

வாரத்துக்கு ஏழு நாள் , அதான் ஏழு தலை எனவே எங்க மதம் அறிவியல் மதம்னு இந்த மதவாதிகள் பதிவு போட உதவி இருக்குமே :-))

எனக்கு தெரிஞ்சது கூட கடவுளை கற்பனை செய்தவங்களுக்கு தெரியலையே என்ன கொடுமை சார் இது!

*****


பாக்தாத் கஃபே:

ஜெர்மனிய ஹாலிவுட் தயாரிப்பு படம் 1987 இல் வந்தது ,ஆஸ்கார் நாமினேஷேன் வரைக்கும் போன ஒரு ஃபீல் குட் படம்.


ஜெர்மானிய சுற்றுலா பயணியான ஒரு பேரிளம் பெண் ஆன் தி வேயில் கணவனுடன் சண்டைப்போட்டுக்கிட்டு , அமெரிக்க மொகாவோ பாலை , சாலை வழிப்பயண சிற்றுண்டி விடுதிக்கு வருகிறார். அந்த சாப்பாட்டுக்கடைப்பேரு தான் பாக்தாத் கஃபே :-))

பாக்தாத் கஃபே ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கு, சரியான பராமரிப்பு இல்லை, போனா போவுதுனு சில பேர் வந்து பீர் ,காபி குடிக்கிறாங்க அத வச்சு  கணவனை பிரிந்த ஒரு பெண்மணி ஒரு மகனோடு வாழ்க்கையை ஓட்டுகிறாள்.



இப்படியான சூழலில் அங்கு வரும் கதாநாயகி அங்கே வேலைக்கு சேர்ந்து சுத்தம் செய்து வாடிகையாளர்களை அன்பாக கவனித்து வியாபாரத்தினை பெருக்குகிறாள்.கொஞ்சம் மேஜிக் வித்தையும் தெரியும் என்பதால் அனைவரையும் கவர்கிறாள்.இதுக்கு நடுவே அங்கே வரும் சினிமா செட் ஆர்டிஸ்ட் கு லேசா ஒரு காதல் வருது.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா ஹீரோயின் வயசான பெண்மணி, அதே போல ஆர்டிஸ்டும் தான். அதாவது மெச்சூர்டான லவ்வாம், காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை வயசும் இல்லைனு இயக்குநர் சொல்ல வரார் :-))

பாலைவனத்துல அழுது வடிஞ்ச சாப்பாட்டுக்கடை திடிர்னு ஜெக ஜோதியா ஜொலிக்குதேனு அந்த ஊர் ஷெரிப் சந்தேகப்பட்டு வந்துப்பார்த்தா ஜெர்மனிய பெண்மணி தான் காரணம்னு தெரியுது. சுற்றுலா விசா தான் வச்சு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னும் 24 மணி நேரத்துல நாட்டை விட்டு போகணும், இல்லை நானே நாடு கடத்துவேன் போல ஒரு மிரட்டல் .

நாட்டுக்கு திரும்ப போறதா ,இங்கேயே எப்படி இருப்பதுனு ஒரு குழப்பம்,அப்போ ஆர்டிஸ்ட் ஒரு ஐடியா குடுக்கிறார் ,என்னை கண்ணாலம் கட்டிக்கோ குடியுரிமை கிடைச்சிடும்னு, அப்புறம் என்னாச்சா போங்கப்பா போய் யுடியுப்பில் படம் இருக்கு பாருங்க ,இலவசமா தான்..

இந்த படத்தோட கதைய கேட்டதும் மாதவர் நடிச்ச நள தமயந்திக் கதை நியாபகம் வந்தா அதற்கு அடியேன் பொறுப்பல்ல,எல்லாம் ஒரு ஒத்த சிந்தனையா இருக்கும்னு எடுத்துக்கணும் :-))

இந்த பாக்தாத் கஃபே  படம் மெட்ராஸ் கஃபே, மெரினா கஃபே னு இன்னும் பல வடிவம் தமிழில் எடுக்கும்னு தோன்றுகிறது.

டிவிடி, இணைய படங்கள் எல்லாம் தடை செய்துட்டா தமிழ்ல படம் எடுத்துட்டு ஒலகப்படம் எடுத்தேன்னு சொல்லிக்கிறவங்களாம் காணாமல் போய்டுவாங்க :-))

தமிழ் சினிமாவில மட்டும் தான் தமிழ்ல நடிச்சுட்டு "லோக நாயகன்" எனப்பட்டம் போட்டுக்க முடியும், என்ன கொடுமை சார் இது!

*****
மின் வெட்டு அரசியல்:

மின்சாரம் குறித்து பதிவுகள் சில போட்டிருந்தாலும் , இன்னும் சொல்ல நிறைய இருக்கு, மின் வெட்டு அரசியல் பற்றி இன்னொரு பதிவு வரும், அதுக்கு முன்ன ஒரு டீசர் டிரெய்லர் இது :-))


ஒரு பதிவரின் வலைப்பதிவில் மின்வெட்டு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது , இப்போதைய மின் வெட்டுக்கு பெரிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படலை, 2-3 ஆண்டுகளில் புதிய தலைமை செயலகம் கட்ட காட்டிய வேகத்தில் ஒரு 1500 மெ.வாட் மின் திட்டம் கட்ட காட்டியிருக்கலாம்னு சொன்னேன்.

பிரகாசமான அரசியல் எதிர்காலம் உள்ளவரும் ,பிரபல பதிவருமான அண்ணன் எம்.எம்.அப்துல்லா திடிரென பிரசன்னம் ஆகி ,  இல்லை நிர்வாகம் செய்ய தெரியலை அம்மையாருக்குனு சொன்னார்.

நான்: 2001 -2006 காலத்தில்  தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது, ஆனால் 2006-11 காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது அதன் உச்சம் இப்போது எனவே கடந்த 5 ஆண்டுகாலமாக புதிய மின் உற்பத்தி செய்யாததே காரணம் என்றேன்.புள்ளி விவரங்களும் அளித்தேன்.

அதற்கு அப்துல்லா அண்ணன் சொன்னார் பாருங்க ஒரு பதில் அது போல பிரபல அரசியல்வாதிகளால கூட சொல்ல முடியாதுனா பார்த்துக்கோங்க,

2000 க்கு முன்னர் அய்யா காலத்தில போட்ட மின் திட்டங்களால் தான் 2001 -2006 இல் மின் தட்டுப்பாடு இல்லாம இருந்துச்சாம், ஆகா ...ஆகஃக்கா :-))

அப்போ மின் தட்டுப்பாடு இல்லைனா அது அப்போவே அய்யா செய்த சாதனைனு சொல்லிக்கிறார் சரி ஓ.கே வச்சுப்போம், இப்போ மின் தட்டுப்பாடுக்கு காரணம் முந்தைய காலத்தில் எதுவும் செய்யலைனா அப்போ மட்டும் எங்க ஆட்சி காரணம் இல்லைனா எப்படி?

2000க்கு முன்ன 5 ஆண்டுகளில் செய்தார் எனில் ஏன் 2006-11 இல் எதுவும் செய்யலைனு சொன்னா அதையும் ஒத்துக்க வேண்டாமா அப்போ மட்டும் இல்லைனா எப்படி அண்ணே.

எந்தக்காலத்தில் நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் நாங்க தான்னு பெருமை தேடும் போது கெட்டது நடந்தா மட்டும் இவங்க தான் காரணம்னு சொல்வது தான் கழக அரசியலா என்ன கொடுமை சார் இது :-))

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து வாங்கிய மின்சாரத்துக்கு பணம் கொடுக்காமல் உள்ள நிலுவை தொகை மட்டும் சுமார் 10000 கோடி, எனவே இப்போது  தேவைக்கு மின்சாரம் வாங்க முடியாமல் 150 மெ.வாட் மட்டுமே வாங்குகிறது மின்வாரியம். மேலும் காற்றாலை மின்சாரம் குறைந்து விட்டதால் மின் தட்டுப்பாடு 4000 மெ.வாட் ஆகும் எனவே அதிக மின்வெட்டு.

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் மின்சாரம் வாங்கிவிட்டு காசுக்கொடுக்காமல் டபாய்த்தால்,இப்போ மின்சாரம் வாங்க முடியவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. சுட்டி


மின்சாரக் கடன்


இப்போவும் கையில காசு கொடுத்தா மின்சாரம் கிடைக்கும் ,அரசு என்னமோ அன்னக்காவடிப்போல செயல்ப்படுது,  மின்க்கட்டணம் உயர்த்திய பிறகாவது மின் தடை நீங்குதா என பார்ப்போம்.

எனக்கு என்னவோ , மின் கட்டணம் உயர்த்தினா மக்கள் அதிக எதிர்ப்பு காட்டாமல், கூட வேண்டும்னா காசு தரோம் மின்சாரத்தை கொடுங்கனு சொல்ல கூடிய மன நிலைக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகவே கடுமையான மின்வெட்டினை செயல்படுத்தினார்களோ என்று தோன்றுகிறது.

அரசு நினைத்தார் போல தான்  இப்போ நடந்திருக்கு, மக்களும் ரொம்ப பெருசா எதிர்ப்பு காட்டவில்லை.இதற்கு பெயர் தான் அரசியல் இராஜ தந்திரமா?

 என்ன கொடுமை சார் இது!

---------------
பின்குறிப்பு: படங்கள் ,செய்திகள் உதவி கூகிள்,விக்கி,IMDB,இணைய தளங்கள்,நன்றி!


8 comments:

naren said...

////லூர்து மேரி ராஜேஷ்வரி, தொளுகுவா மீனாட்சி சவுந்தர ராஜன்////
LOL

ஆறுமுக கடவுள் படத்தில் ஒரு தவறு!!
ஆறு தலைகளும் நேராக இருக்காது. வட்ட வடிவில் இருக்கும். அதன் நடுவில் கழுத்து மாட்டியிருக்கும். இப்படித்தான் படம் இருக்கும். ஆனால் இரண்டு முகம் தெரியாதது என்பதால், நேராக காண்பிக்க படுகின்றன. இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் -:) (எல்லாம் மத அறிவியல் தந்த அனுபவம் தான்).

இதிலிருந்து என்ன தெரிகிறது..

@ six face and one body = 7. அதனால் ஒரு லட்ச வருஷத்திற்கு முன்பே என் அப்பன் முருகன், வார நாட்கல் ஏழு, கண்டங்கள் ஏழு என்று சொல்லிவிட்டார்.

@ gymக்கு போனால் six pacs தான் வரும் என்று அப்பவே சொல்லிவிட்டார்.

@தலை முகங்கள் நடுவில் இருப்பதால், அப்பவே என் அப்பன் முருகன் wheel, ball bearing எப்படி தயாரிப்பது என்பதை சொல்லிவிட்டார். geometry சொல்லிதந்ததும் அவரே.

ஹா...

.....இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா. பனை மரத்திலே வவ்வாலாஆ...(fill in the blanks).

Bhagdad cafe : கமல் எந்த படத்திலிருந்து காப்பி அடிக்கிறார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு, அரசு தனியாக கலைமாமணி விருது வழங்கலாம். -:))))))))) #காப்பிகமல்

மின்சாரம்- i am in shock, in no condition to speak about it.

சார்வாகன் said...

வண்க்கம் சகோ,

நீங்க என்ன நாத்திகர் மாதிரி பேசுரீங்க?அப்ப்டி பேசினால் ஒருத்தரும் மதிப்பதில்லை.மதத்தை உயர்த்திப் பிடிக்கனும்,தாங்கிப் பிடிக்கனும்.

.பாருங்க நான் விள்க்குகிறேன்.இந்த ஆறுமுகம் என்பது ஆறு பரிமாணங்களையும்[dimensions] ஆளும் இறைவன் முருகன் என்பதையே குறிக்கிறது. அதென்ன் ஆறு பரிமாணம் என்கிறீர்களா???????

நாம் அறிந்த பரிமாணம் நீளம்,அகலம்,உய்ரம் ,நேரம் ஆக மொத்தம் நான்கு. இப்போது ஸ்ரிடிங் தியரியில் 10 பரிமாணமென்று ஏன் சொல்கிறரகள்?

4+6=10 சரியா????????.

நம்முடைய குறைவான சக்தி நான்கு பரிமானத்திற்கு அப்பால் உள்ள 6 பரிமாணங்களிலும் விரவி நிற்பவர் அழகன் முருகன் என்ற தத்துவம் புரியலையே உங்களுக்கு??????

இத்னை தவறென்று நிரூபிக்க முடியுமா??????.

அகவே நாத்திகம என்பதை விட்டு விட்டு மதத்தில் அறிவியல் வளக்கும் பணியில் ஈடுபடுங்கள்.
Xxxxxx
அப்புறம் சகோ மதம் போன்றதுதான் அரசியல்!!!!!!!!!!!!!!!.

ஒன்றை ஏதோ ஒரு காரணத்தில் பிடித்து விட்டால் எதையாவது சொல்லி நியாயப்படுதனும்.

நல்லது எல்லாம் எங்களுது,எங்க ஆள் செய்தார்,!!!

கெட்ட்து எல்லாம் அவர்கள்,அவர்களின் செய்ல்களே!

ஆகவே செய்தவனை பொறுத்தே,விமர்சிப்பவனை பொறுத்தே நல்லது கெட்டது வரையறுக்கப்படும் போது.நம்ம கூவி கூவி கத்தினாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க!!!.

இதில் இயற்கையை பாதிக்காது சூழலுக்கேற்ற வாழ்தலும் நுகர்தலும் செய்து ,த்ன்னிறைவு அடைவோம் என்றால் யார் கேட்பார்?

என்னை விமர்சித்தால் அப்ப நீ அவன் ஆளு

அவ்வளவுதான் ஹா ஹா ஹ ஹா

மாறி மாறி கூவுவோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொக்கரக்கோ கோ!

என்னைக்கு பிரியாணி போடுவாங்களோ!!!!! ஹி ஹி ஹி

நன்றி

சார்வாகன் said...

இன்னும் தொடர்வோம்

நம்ம அக்கா எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் பாட்டை எப்படி குறை சொல்லலாம்.இபோது திரைப்படங்களில் வரும் குத்துப்பாடல்கள் அனைத்துமே அக்காவின் பாடலகளில் இருந்து சுட்டது என அறிந்து இருக்க்லாம்!

கற்பூர நாயகியே கனகவல்லி என்பது கருப்பான கையாலே என்னை பிடித்தான் என்று பரிணாம் வளர்ச்சி அடையவில்லையா!

மனம் போன போக்கிலே வாழலாமா? என இசை முரசு திரு நாகூர் அனிஃபா அவர்களும் இதே மெட்டில் பாடவில்லையா?

அப்புறம் ஆதாஹே சந்தமா ராத்து ஆஜி என்னும் ஹிந்தி பாடலும் இதே மெட்டு .அப்ப அக்காவும் மெட்டு சுட்டுருச்சா!!!!!!

ஒன்னும் பிரியலை த்லை!!!!!!!

Manimaran said...

//அடப்பக்தி பதருகளா நடுவில ஒரு தலைய வச்சு ஒரு பக்கம் 2, இன்னொரு பக்கம் 3 வச்ச எப்படியா பேலன்ஸ் ஆவும், ஒரு சைடுக்க இழுக்காதா? வச்சது தான் வச்சிங்க ஒரு 7 தலைய வைக்க என்ன கேட? //,
ரொம்ப தைரியமான ஆளு சார் நீங்க.ரொம்ப சிந்திக்க வேண்டிய விஷயம்.இதுபோல கிளறனா... எல்லா சாமி கிட்டேயும் ஒரு தமாசான விஷயம் இருக்கும்.பகுத்தறிவ பேசுனா நாத்திகன்னு இங்க சொல்றாங்க.என்ன செய்வது?

வவ்வால் said...

நரேன்,

வாரும்,வணக்கம்,நன்றி!

கடவுளையே ரி -டிசைன் செய்யும் மஹானுபவர் நீர்:-))

வவ்வாலுக்கே சவாலா எனக்கு சவால் எல்லாம் இருட்டுக்கடை அல்வா போல , ஒரு வெட்டு வெட்டுவேன் :-))

முருகாவும் சிக்ஸ் பேக்ஸ் சிங்கார வேலர் ஆகிடுவார் , இனி வரும் ஓவியர்கள் காலத்துக்கு ஏற்ப மாற்றிடுவாங்க :-))
பால் பேரிங்கா அப்போ பால் பேரிங்க் பாலமுருகனா :-))
---

கமல ஹாசர் செய்த அது காப்பி இல்லைங்கண்ணா காப்பியம் :-)) ஏன்னா அவருக்கு மட்டும் தான் சினிமா கலை தெரியுமாம் :-))

அந்த மாமாமணி அவார்ட வாங்க இத வேற செய்யனுமா ?
*****
சகோ.சார்வாகன்,

மத விஞ்ஞானிகளோட சாவகாசம் வச்சுக்ககூடாதுனு இதுக்கு தான் சொல்றது,இப்போ பாருங்க சாவகாச தோஷம் நீங்களும் விஞ்ஞானியாகிட்டிங்க :-))

ஆறு (முகம் )*2 (பொண்டாட்டி) பெருக்கினா 12 வருது ஆண்டுக்கு 12 மாதம்னு சொல்லாம விட்டிங்களே! என்ன கொடுமை சகோ இது :-))

உண்மைய ,தர்க்க ரீதியா சொன்னா அதற்கு பெயர் நாத்திகமா , அப்போ நாம எல்லாம் நாத்திகரே.
---
சரியா சொன்னிங்க.
மதம் அபின் என்றால் அரசியல் கள்ள சாராயம், நுகர்ந்தவன் அடிமையாகி பினாத்துவான். நல்லதுனா அப்பவே அவர் தீர்க்க தரிசனமா செய்தார் , கெட்டதுனா ஹெல்லோ சிக்னல் கிடைக்கல்ல என்ன சொல்றிங்க புரியலைனு சொல்லிட்டு ஓடிருவாங்க :-))
---

ஹி..ஹி நமக்கும் கோழி பிரியாணி,குவார்ட்டர் கொடுத்த அய்யாவோ/அம்மாவோ வாழ்க சொல்லிட்டு ஜோதில அய்க்கியமாகிடலாம் :-))
****
ஓ இந்தி பாட்டெல்லாம் வேற தெரியுமா ,வாங்க அப்போ என்ன என்ன எங்க்கே இருந்து சுட்டாங்கனு விக்கி லீக்ஸ் போல துப்பறிஞ்சு பீதிய கிளப்பலாம் ,

எது எடுக்கப்பட்டதோ எல்லாம் இங்கிருந்தேனு தத்துவமா இருக்கிறதே 7 சுரம் அப்படி தான் ஒன்று போல இருக்கும்னு காப்பிய இசையமைப்பாளர்கள் சொல்வாங்க.

*****
மணி மாறன்,

வாங்க, வணக்கம், நன்றி!

ஹி..ஹி அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா னு வாழ்கிறவங்களுக்கு என்ன பயம்? எல்லா நாயும் சொர்க்கத்துக்கு போகும்னு ஆங்கிலத்தில சொல்வாங்க அப்படி இருக்கும் போது என்ன கவலை ,நமக்கு சொர்க்கம் ஒரு புட்டில விக்குது :-))

எல்லா கடவுளுமே மனித அபிலாஷைகளின் வெளிப்பாடே , எல்லாத்தையும் ஆராய்ந்தா நிறைய தமாசான மேட்டர் கிடைக்கும்(கிளூ கிளுப்புக்கும் பஞ்சம் இருக்காது).நாத்திகன்னு சொன்னா சொல்லிட்டுப்போறாங்க.

தப்பு செஞ்சுட்டு உண்டியலில் காசுப்போட்டா கடவுள் கண்டுக்க மாட்டார்னு நினைக்கும் ஆத்திகன விட நாத்திகன் எவ்ளோ மேல். கடவுளையே சரிக்கட்ட நினைப்பவன் தான் கடவுளை கேவலப்படுத்துறான் , நாத்திகன் உண்மைய தான் பேசுறான், எனவே கவலைப்படாதிங்க சாரே!

goma said...
This comment has been removed by the author.
goma said...

என் அறிவுக்கு எட்டிய பெயர் காரணம்,இதுவாக இருக்கலாமா
ஆறுமுகம்:
அன்பு,பக்தர்களுக்கு
வீரம் சூரனுக்கு
பணிவு,அண்ணனுக்கு
கோபம்,மாம்பழத்துக்கு
குறும்பு ஔவைக்கு
காதல் வள்ளிக்கு

கூட்டிக் கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்

வவ்வால் said...

கோமா,

வணக்கம்,நன்றி!

தெய்வானை என்ன பாவம் செய்தாள் என கழட்டி விட்டுடிங்க? அவங்களுக்கும் ஒரு முகம் சேர்த்துக்கிட்டா 7 முகம் என் கணக்கு வந்திடுதே :-))

கூட்டிக்கழிச்சுப்பாருங்க,கணக்கு சரியா வரும் :-))