Tuesday, May 29, 2012

மாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)

(பட உதவி "தி இந்து",நன்றி)


ஏற்கனவே பெட்ரோல் விலையை வெற்றிகரமாக ஏற்றி மக்களுக்கு "பேரின்ப அதிர்ச்சி" கொடுத்த மத்திய அரசு இப்போ அடுத்து டீசல் விலையையும் ஏற்றலாமா என தீவிர சதியாலோசனையில் ஈடுப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

வழக்கமாக கச்சா எண்ணை சர்வதேச சந்தையில் விலை ஏறியதால் உள்நாட்டில் விலையேற்றம் என சொல்லும் அரசு இம்முறை அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது ,எனவே டாலர் வாங்க கூடுதல் பணம் செலவாகிறது எனவே நட்டம் அதை தவிர்க்கவே விலையேற்றம் என ஒரு காரணத்தினை சொல்லியுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவும் ,அதன் விளைவாக பெட்ரோல்,தங்கம் விலை ஏறும் என பெட்ரோல் விலையேற்றத்திற்கு முன்னரே ஒரு பதிவாக போட்டுள்ளேன்,அதனை இங்கு காணலாம்.


அப்பதிவில் சொன்னது தான்,மீண்டும் ஒரு முறை இங்கே,

ஒரு பொருளை இறக்குமதி செய்ய அதிக அன்னிய செலவாணிக்கு தேவை இருக்கும் நிலையில் ,அன்னிய செல்வாணிக்கு எதிராக ரூபாய் சரியும் போது, அதிகம் விலைக்கொடுக்க வேண்டும், எனவே அன்னிய செலவாணியின் அளவை குறைக்க அது கொண்டு வாங்கும் பொருளின் அளவை குறைக்க வேண்டும், நேரடியாக இறக்குமதி அளவைக்குறைக்காமல் மக்களின் நுகர்வை குறைக்க செய்ய ஒரு எளிய வழி விலையேற்றம் அல்லது இறக்குமதியின் மீது அதிக வரி விதிப்பது ஆகும்.

சந்தையில் ஒரு பொருளின் டிமாண்ட் & சப்ளை நெகிழ்வுடன் (எலாஸ்டிக்) இருக்கும் எனில் விலை உயர்ந்தால் மக்கள் தாங்களாக நுகர்வை குறைப்பார்கள், எனவே இறக்குமதி குறையும், அதனால் டாலர் தேவை குறையும். இதனை மார்ஷல்-லென்னர் தியரி அடிப்படையில் செய்கிறார்கள்.

ஆனால் இந்தியாவைப்பொறுத்த வரையில் என்ன தான் விலை ஏறினாலும் நாம் பெட்ரோல் பயன்ப்பாட்டினை குறைப்பதில்லை, தங்கம் வாங்குவதையும் நிறுத்துவதில்லை, எனவே சப்ளை& டிமாண்ட் நெகிழ்வற்றது( இன் எலாஸ்டிக்).எனவே மார்ஷல்-லென்னர் தியரி அடிப்பட்டு விடும்.

ஆனாலும் மத்திய அரசு விலை ஏற்றினால் தேவை குறையும் ,மேலும் நட்டம் குறையும் என பிடிவாதமாக ஏற்றியது.அப்படியும் தேவை குறைவது போல தெரியவில்லை,எனவே எண்ணை நிறுவனங்களே சப்ளையை குறைக்க முடிவு செய்து விட்டது ,எனவே தான் தற்போது பெட்ரோல்/டீசல் இல்லை என பங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன.பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாகவும் இருக்கிறது.

உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,

டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.

அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.

எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன.

பெட்ரோல் விலை உயர்வுக்கான உண்மைக்காரணம் முன்னர் 2011 டிசம்பரில் போட்டப்பதிவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது,


விரைவில் டீசல் விலையும் ஏறும் என்ற நிலையில் , அப்படி விலை ஏற்றினால் நமக்கு நாமே ஒரு மாற்று எரிப்பொருளை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் கவலை இல்லை அல்லவா, எனவே வீட்டிலேயே ஒரு வாகன எரிபொருள் இருப்பதையும் அதைப்பயன்ப்படுத்துவது எப்படி என்பதையும் சொல்லவே இப்பதிவு.

ஹி..ஹி இதைப்படிச்சுட்டு எல்லாம் வீட்டுக்கு வீடு
மூலிகைப்பெட்ரோல் விஞ்ஞானினு கிளம்பிடாதிங்க, இதெல்லாம் உலகம் அறிஞ்ச ரகசியம் :-))

வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிப்பொருளை கனிம எண்ணை(mineral oil) என்பார்கள், சமையலுக்கு பயன்ப்படுத்தும் எண்ணை தாவர எண்ணை (veg oil)ஆகும். கனிம எண்ணையை சமைக்க பயன்ப்படுத்த முடியாது.ஆனால் தாவர எண்ணையை வாகனத்திற்கு பயன்ப்படுத்த முடியும்.

சுத்தமான தாவர எண்ணை;

எந்த ஒரு சுத்தமான தாவர எண்ணையையும் எவ்வித மாற்றமும் செய்யாமல் நேரடியாக டீசல் வாகனங்களில் பயன்ப்படுத்த முடியும்,அல்லது டீசலுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தும் பயன்ப்படுத்த முடியும், அதனை பயோ டீசல் என்பார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பி-80 என்றப்பெயரில் விற்பது 20% தாவர எண்ணை கலந்த டீசல் ஆகும், அதே போல எத்தனால் கலந்தும் விற்கிறார்கள் சதவீதத்திற்கு ஏற்ப ஈ-85 என்பது போல விற்கிறார்கள்.

100% எத்தனால் அல்லது மெத்தனால் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும்.நாம் நாட்டில் குடிக்கமட்டுமே பயன்ப்படுகிறது, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாக பயன்ப்படுகிறது.



அதிக சர்க்கரை ஆலைகள் கொண்ட நம் நாட்டில் மொலாசஸ் அதிகம் கிடைக்கும் இதனை எத்தனாலாகவோ மெத்தனாலாகவோ மாற்றினால் நிறைய அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம்.ஆனால் அரசு அதனை செய்யாமல் இறக்குமதி, விலை ஏற்றம் என்ற பழைய பஞ்சாங்கமே பாடிக்கொண்டிருப்பதன் ரகசியம் என்னவோ?


இந்தியாவில் பயோ டீசல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என சொல்லி அரசே ஊத்தி மூடிவிட்டது.

சுத்தமான தாவர எண்ணையை எதனுடனும் கலக்காமல் வாகனத்தில் பயன்ப்படுத்த முடியும், ஆனால் ஸ்டார்ட்டிங்க் பிரச்சினை, நாசில் அடைத்துக்கொள்வது, குளிர்காலத்தில் எண்ணை கெட்டியாகிவிடுவது போன்ற பிறச்சினை வரும்.

இதனையும் தவிர்க்க வாகனத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும், தாவர எண்ணைக்கு ஏற்ப நாசில், எண்ணை பில்டர், கூடுதல் திறன் உள்ள இக்னிஷன் காயில் ஆகியவை பொறுத்த வேண்டும்.கொஞ்சம் செலவு பிடிக்கும் வேலை.

இதனை தவிர்க்க இரட்டை டேங்க் முறைப்பயன்ப்படுகிறது.இம்முறையில் ஒரு டேங்கில் டீசலும்,இன்னொரு டேங்கில் தாவர எண்ணையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். முதலில் சிறிது நேரம் டீசலில் ஓட்டி எஞ்சின் சிலிண்டரை சூடாக்க வேண்டும், அதே நேரம் தாவர எண்ணையும் சைலண்சரின் வெப்பத்தின் மூலம் சூடாகும் படியாக தாவர எண்ணை டேங்க் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்பொழுது டீசல் டேங்கில் இருந்து எரிப்பொருள் செல்வதை அடைத்துவிட்டு தாவர எண்ணை டேங்கில் இருந்து வருமாறு மாற்றிவிட வேண்டும். மேலும் எஞ்சினை நிறுத்தும் முன்னர் சிறிது நேரம் டீசலில் ஓட விட்டு பின்னர் நிறுத்த வேண்டும்,அப்போது தான் மீண்டும் வாகனம் எளிதில் கிளம்பும்.

இன்னொரு முறையில் தாவர எண்னையை மட்டுமே பயன்ப்படுத்தலாம், டீசல் தேவையே இல்லை. ஆனால் அதற்கு தாவர எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் (transestrification)செய்ய வேண்டும். கொஞ்சம் கவனமாக செய்தால் அனைவரும் அவர்கள் கார் ஷெட்டிலேயே எரிப்பொருளை தயாரிக்க முடியும். வெளிநாடுகளில் பலரும் இப்படி செய்கிறார்கள்.

இம்முறைக்கு சுத்தமான தாவர எண்ணை pure veg oil)அல்லது ஏற்கனவே சமைக்கப்பட்ட எண்ணை (waste veg oil)என எதை வேண்டுமானாலும் பயன்ப்படுத்தலாம்.

சமைக்கப்பட்ட எண்ணை எனில், செலவு மிச்சம் ஆகும் சில உணவங்களை அணுகி சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையை இலவசமாக கேட்டுப்பெறலாம்.வெளிநாடுகளில் பல முறை ஒரே எண்ணையில் சமைக்க தடை எல்லாம் இருப்பதால் கொடுப்பார்கள், நம்ம ஊரில் எண்ணை சட்டி வறண்டு போகும் வரை விடாமல் சமைக்கப்பயன்ப்படுத்துவார்களே :-))

ஆனால் நட்சத்திர உணவகம்,சில தரமான உணவங்களில் மீண்டும் எண்ணைப்பயன்ப்படுத்தாமல் கழிவாக வீணாக்கலாம்,அவர்களிடம் கேட்டுப்பெறலாம் என நினைக்கிறேன்.

அப்படி சமைத்து முடிக்கப்பட்ட எண்ணையை ஒரு கலனில் ஊற்றி சில நாட்கள் அப்படியே வைத்தால் வண்டல் எல்லாம் அடியில் படிந்துவிடும் ,பின்னர் மேலாக உள்ள எண்ணையை மட்டும் எடுத்து நன்கு வடிக்கட்ட வேண்டும், அப்போது தான் உணவுத்துணுக்குகள் நீக்க முடியும்.

இப்போது அடிப்படையான எண்ணை கிடைத்து விட்டது ,

மேலும் தேவையான பொருட்கள்,

சோடியம் ஹைட்ராக்ஸைடு, (Naoh)
சிங்க்,வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் நீக்கப்பயன்படும் ரசாயனமே சோடியம் ஹைட்ராக்சைடு அதனைக்கடையில் வாங்கிப்பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.



மெதனால் எனப்படும் மீதைல் ஆல்ஹகால்.(methanol-ch3oh)


தேவையான அளவில் சில கண்ணாடிகுவளைகள், வடிக்கட்டி, கலன்கள்,டிரம்,

கலக்கி விட சமையலுக்கு பயன்ப்படும் பீட்டர் ,அல்லது கையால் விடாமல் கலக்க முடியும் எனில் மரத்தால் ஆன ஒரு கலக்கி.

செய்முறை:

முதலில் எண்ணையை 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடாக்க வேண்டும். நம் நாட்டில் ந்ல்ல வெயில் அடிப்பதால் வெயிலில் வைத்து சில மணி நேரங்கள் வைத்து கலக்கிவிட்டாலும் போதும்.

இது எதற்கு எனில் சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையில் நீர் அல்லது ஈரப்பதம் இருக்கும் அதனை நீக்கவே.ஈரப்பதமான எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்தால் எரிப்பொருளுக்கு பதில் சோப் கிடைத்துவிடும்.இதற்கு சோப்பானிபிகேஷன்(saponification) என்று பெயர்.

செய்முறை மாதிரிக்கு இப்போது ஒரு லிட்டர் எண்ணை என வைத்துக்கொள்வோம்.

ஒரு லிட்டர் எண்ணைக்கு 200 மி.லி மெத்தனால், 6.5 அவுன்ஸ் சோடியம் ஹைட்ராக்சைடு தேவை.

முதலில் 200 மி.லி மெத்தானாலை ஒரு கண்ணாடி குவளையில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது சிறிதாக சோடியம் ஹைட்ராக்சைடு பவுடரை கொட்டி கலக்க வேண்டும்.இவ்வேதி வினை ஒரு வெப்ப உமிழ்வு (exothermic)வினையாகும் எனவே சிறிய அளவிலேயே கலக்க வேண்டும். முடிவில் மெத்தாக்சைடு (methoxide)கிடைக்கும்.

இப்படிக்கலக்கும் போது உடலில் பட்டு விடாமல் கவனம் தேவை மேலும் வெளிவரும் புகையினை சுவாசிக்காமல் இருக்க முகத்தில் முகமூடி போல கட்டிக்கொள்ளவும் வேண்டும்.

இப்போது மீத்தாக்சைடை ஒரு லிட்டர் எண்ணை உள்ள குவளையில் கொட்டி நன்கு கலக்க வேண்டும், இப்படி சுமார் 30 நிமிடம் செய்ய வேண்டும், எனவே தான் பீட்டர் பயன்ப்படும் என்றேன்.

எண்ணையில் ஃப்ரி பேட்டி ஆசிட்(free fatty acid) உள்ளது அவை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் மூலம் esters of fatty acid ஆகவும், கிளைசெரால் (glycerol)என்ற உப பொருளாகவும் மாறும்.



கலக்கி முடித்து வினை முழுமை அடைந்ததும் குவலையை சில மணிநேரங்கள் அப்படியே வைத்திருந்தால் போதும் கிளைசெரால் அடியில் படிந்துவிடும், பின்னர் மேல்மட்டத்தில் உள்ள பயோ டீசலை உறிஞ்சு குழல் (syphon)முறையில் தனியாக பிரித்து எடுத்தால் வாகனத்திற்கு பயோ டீசல் தயார்.

இதே முறையை சுத்தமான தாவர எண்ணைக்கும் பயன்ப்படுத்தலாம், அதில் வடிக்கட்டுவது,சூடாக்கி ஈரப்பதம் நீக்குவது எல்லாம் செய்யாமல் நேரடியாக தயாரிக்கலாம் என்பது கூடுதல் வசதி.

வீட்டில் பயோ டீசல் தயாரிக்கும் அமைப்பின் படம்:

விலை அதிகமான சுத்தமான தாவர எண்ணையைப்பயன்ப்படுத்த தேவையில்லை, ஆமணக்கு, கடுகு எண்ணை என மலிவான எண்ணைகளே பெரும்பாலும் பயன்ப்படுத்தப்படுகிறது.

இந்த பயோடீசலை நேரடியாகவும் வாகனத்தில் பயன்ப்படுத்தலாம் அல்லது டீசலுடன் கலந்தும் பயன்ப்படுத்தலாம்.

இம்முறையில் உள்ள ஒரு சிக்கல் என்ன வெனில் 10 நாட்கள் வரைக்கும் பயோ டீசல் முழுத்திறனுடன் இருக்கும், பின்னர் படிப்படியாக திறன் குறைந்து 60 நாட்களுக்கு பின் எரிப்பொருள் திறனை இழந்துவிடும். எனவே பெரிய அளவில் தயாரித்து சேமிப்பது சிரமம்.

ஆனால் வீட்டில் வார இறுதியில் தயாரித்து தினசரிப்பயன்படுத்திக்கொள்ளலாம்.வெளிநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக பலர் வீடுகளிலே இவ்வாறு செய்கிறார்கள் அவர்களுக்கு இதெல்லாம் சிரமமே இல்லை ஏன் எனில் பலரும் அவர்கள் வாகனத்தினை அவர்களே பழுதுப்பார்க்கும் அளவுக்கு தேர்ச்சியுடன் இருக்கிறார்கள்,நம்ம ஊரில் தான் கார் டயர் மாட்டக்கூட மெக்கானிக் தேடுவோம்.

----------
பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,விக்கி, இணைய தளங்கள், நன்றி!


*****

21 comments:

ராஜ நடராஜன் said...

நான் மறுபடியும் மீன் பிடிக்கத்தான் வந்தேன்.ஆனால் மீனுக்குப் பக்கத்துல பயோ டீசல் வாசம் அடிக்கிற மாதிரி தெரியுதே!

மக்களின் நுகர்வைக் குறைக்க எளிய வழி விலையேற்றமா?

விலையேறினா மட்டும் டாஸ்காக்,வாகனத்துக்கு பெட்ரோல்,பால் காப்பி,சாம்பாருக்கு வெங்காயம்,பஸ் டிக்கட்ன்னு அவசியமானவற்றை மக்கள் விட்டு விடமுடியுமா என்ன?

எந்த ஒரு உற்பத்திப் பொருளுக்கும் கச்சாப்பொருட்களின் செலவு,உற்பத்தி செலவு மனித வள வருமானம்,இன்சூரன்ஸ் இன்ன பிற செலவுகள்,இவற்றிற்கும் மேலாக நிகர லாப சதவீதம்ன்னு கணக்குப் போட்டே ஒரு பொருளின் விலை சந்தையில் விற்கப்படுகிறது.இதில் மொத்த வியாபாரி,சில்லறை வியாபாரிகளில் வரவு செலவு லாபம் போகவே பொருளின் விலை ஏறும்.இறுதியில் பாரம் சுமக்கும் அடிமாடு யார்ன்னு பார்த்தால் மக்களே.எந்த கால கட்டத்திலும் உற்பத்தியாளர்கள்,வியாபாரிகள்,இடைத்தரகர்கள் லாப சதவீதம் குறையுமே ஒழிய பாரம் மட்டும் மக்கள் மீதே திணிக்கப்படும்.

இந்த விலையேற்றம் எப்படின்னு பார்த்தீங்கன்னா ஊசியில வாழைப்பழத்தைக் குத்துவது மாதிரி!எறும்பு மாதிரி கடிக்கும்.அதனால் இரண்டொரு முறை விலையேறியதும் மக்கள் பொருட்படுத்தவில்லை.எறும்பு கடிக்கிற இடத்துல எலி கடிச்சா எப்படியிருக்கும்?அதுதான் மக்கள் முணங்க ஆரம்பிச்சாட்டங்க.

ராஜ நடராஜன் said...

வவ்வு!நல்லா ஐடியா சொல்லிக்கொடுக்கிறீங்க போங்க.அமெரிக்காகாரன் அரபிகளுக்கு ஆப்பு வைக்க முடியுமாங்கிற நோக்கத்துல கோதுமை பயிரிட்ட இடத்துலேயெல்லாம் நீங்க சொல்ற பயோ எரிபொருளை ஆரம்பிச்சே ஏகப்பட்ட பிரச்சினை.இதுல நீங்க வேற தேங்காய்ல,மக்காசோளத்துல கூட வாகனம் ஓட்டமுடியும்ன்னு சொல்லிக்கொடுங்க.மீனைத் துரத்திட்டுப் போனதும் கூட காட் லிவர் ஆயிலை பயோவா மாற்ற முடியுமாங்கிற நோக்கத்தில்தான் போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

இதுல செய்முறை வேறயாஅவ்வ்வ்வ்வ்!மூலிகைப் பெட்ரோல் ராமன் கண்ணுல இந்த பதிவு பட்டது.அவ்வளவுதான் பேடன்ட் ரைட்ஸ் வாங்கிடுவாரு ஜாக்கிரதை!சொல்லிப்புட்டேன்.

ராஜ நடராஜன் said...

எனக்கு சால்மனோடு கொஞ்சம் பேச வேண்டியிருக்குது.பொறகால வாரேன்.

சார்வாகன் said...

வணக்கம் சகோ
கலக்கல் பதிவு.இந்த எரிபொருள் விலைஅ ஏற்றம் எல்லாம்,நாளை எரிபொருள் இல்லாமல் போகும் என்பதன் முன்னோட்ட்டமே.

இயற்கை எரிபொருள் பற்ரிய விளக்கம் மிகவும் அருமை.இப்படி தயாரிப்பதற்கு மானியம் கொடுத்தால்,ஒவ்வொரு மாவட்டத்திலும் 100+ ஏக்கர் நிலம்+எரி பொருள் தயாரிப்பு கருவிகள் கொடுத்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மையப்படுத்தப்பட்ட உற்பத்தி&,விநியோகம் என்பதுதான் பல விதங்களில் பொருளாதார சிக்கல ஏற்படுத்துகிறது என்பது நம் கருத்து.

எப்படி எனினும் இந்த இயற்கை எரிபொருளுக்கு அனைவரும் வந்தாக வேண்டும்.இந்த மாற்றத்தை இபோதே ஆரம்பித்தால் எரிபொருள் இல்லாமல் போகும் போது இந்தியா பிரச்சினை இன்றி இருக்கும்.

இயற்கை எரிபொருள் பொருளாதாரத்தை வளர்க்கும்,வேலை வாய்ப்பு கொடுக்கும்,சுற்று சூழலை மாசு படுத்தாது,தன்னிறைவு அடைய வைக்கும்.

அது என்னமோ தெரியவில்லை நம்மை ஆள்பவர்கள் இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்கும் ஆட்களாகவே இருக்கிறார்கள்.

சூப்பர் பதிவிற்கு பாராட்டுகள்.

சரி ஒரு கேள்வி

இப்போது நம் நாட்டின் தேவைகள் அனைத்தையும் இறக்குமதி இன்றி நாமே
தீர்க்க இயலும் வகையில் இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம்.உபரிப் பொருள்கள் மட்டும் ஏற்றுமதி செய்கிறோம் எனில் நாணய மதிப்பு,நம் பொருளாதாரம் என்ன ஆகும்?அப்படி நடக்கும் வாய்ப்பு உள்ளதா?

மீண்டும் வாழ்த்துகள்,கலக்குங்க‌

நன்றி!!!!!

வவ்வால் said...

ராஜ்,

ராஜ்,

வணக்கம்,,நன்றி!

மீன்வாசத்தில பெட்ரோல் /டீசல் வாசமும் அடிக்குதா :-))

அதான் நம்ம நாட்டில டிமாண்ட் இன் எலாஸ்டிக்னு சொல்லி இருக்கேனே.

விலை நிர்ணயம் பத்திப் பலப்பதிவுகளிலும் சொல்லியாச்சு என்பதால் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கவில்லை.

ஊசியில வாழப்பழத்தை குத்துவீரா :-))

வாழைப்பழத்தில ஊசிக்குத்தணும் ஓய் :-))

எலிக்கடிச்சா பரவாயில்லை ,இது ஊழல் பெருச்சாளிகளின் கடி ....லெப்டோ ஸ்பைரோசிஸ் விட மோசமான வியாதி ஆகிடும் :-))

# அமெரிக்காவில ஏற்கனவே 20% இந்த எரிப்பொருளில் தான் ஓடுது.

பிரேசிலில் எத்தனால்னு சொன்னேன்ல எல்லாம் மக்காச்சோளம் மூலமே, அங்கே அதுக்கால்நடைத்தீவனம் மட்டுமே.

தென் ஆப்பிரிக்காவில் நிலக்கரியை பிஷ்ஷர் வினை மூலம் பெட்ரோல் ஆக்கி வண்டி ஓட்டுராங்க.

இந்தியாவில் மட்டும் தான் அன்னிய செலவாணி ,இறக்குமதி, விலை ஏற்றம் என்ற விளையாட்டெல்லாம். மற்ற நாடுகளில் இறக்குமதியை குறைக்க என்ன எல்லாம் செய்யமுடியுமோ எல்லாம் செய்யுறாங்க.

# கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறீங்களோ, ராமருக்கு முன்னவே இதெல்லாம் உலகம் அறிஞ்ச நுட்பம்னு பதிவில சொல்லி இருக்கேனே பார்க்கவில்லையா.

வெளிநாட்டில 1000 டாலருக்கு கிட் எல்லாம் விக்குறாங்க ,ஒரு பக்கம் சமையல் எண்ணையை ஊத்திட்டு அடுத்த பக்கம் பயோ டிசல் பக்கெட்டுல பிடிக்கலாம் :-))

மீனை மேஞ்சுட்டு வாங்க,பார்க்கலாம்.

-------------------

சகோ.சார்வாகன்,

வணக்கம், நன்றி!

நாளை எரிப்பொருள் இல்லாது போனால் என்ன செய்வது என்றே இத்தகைய கண்டுபிடிப்புகள்.

எங்கே அரசு மானியம் கொடுக்க பயோ டீசல் திட்டம் தோல்வி எனவே அதனை செய்ய முடியாது என நமது அறிவியல் துறை அமைச்சரே பாராளுமன்றத்தில் அறிக்கை வாசிக்கிறார்.

இவங்களுக்கு எல்லாம் கஷ்டப்படாமல் அல்வா போல ஒரு திட்டம் கிடைச்சா தான் செய்வாங்க புதுசா எதுவும் செய்ய தெரியாது.

நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே ,இதனையே நானும் அடிக்கடி சொல்லி வருகிறேன். புதிய வழிகளை இப்போதே காண வேண்டுமென.

மேலும் ராஜ் க்கு சொன்ன பதிலையும் பார்க்கவும்.

கண்டிப்பாக நம் நாணயத்தின் மதிப்பு உயரும் , உதாரணமாக பார்த்தால் இந்தியா சுதந்திரம் அடையும் போது டாலருக்கு எதிராக ருபாய் சுமார் 1.75 என்ற அளவிலே இருந்தது. அதுவும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ,அதற்கு முன்னர் ஒரு ரூ =ஒரு டாலர் நிலையாம், 1990 இல் கூட சுமார் 20-22 ரூ அளவில் இருக்கும். மன்னு மோகன் போன்ற மூதேவி பொருளாதார நிபுணர்களாலேயே எல்லாம் சரிந்தது. அப்படியே பழைய அமெரிக்க பொருளாதார கொள்கைகளை காப்பி அடிக்கிறார் மனுஷன். அமெரிக்காவே புது பொருளாதாரக்கொள்கையை தேடியலையும் நிலையில் இது எப்படி முன்னேற்றும் நாட்டை?

நாம் உபரி நாடாக மாறிவிட்டால் ,மலேசியா, சிங்கப்பூர் போல இந்திய நாணய மதிப்பும் உயரவே செய்யும். உபரி நாடு பற்றியெல்லாம் சரியும் இந்திய ரூபாய் பதிவில் காணலாம்.

வாழ்த்துகளுக்கு நன்றி!

ராஜ நடராஜன் said...

வாழைப்பழத்துல ஊசி குத்தறது எங்களுக்கு தெரியாதாக்கும்:)ஊசில வாழைப்பழம் சும்மா மாறுதலுக்காக ஈயடிச்சான் பழமொழியையே திரும்ப சொல்லவேண்டாமென்று.

பின்னூட்டம் போடுவது இடத்துக்கு தகுந்த மாதிரி வித்தியாசப்படும்.சில சமயம் தொடர்ந்து படிச்சிகிட்டே வந்து இறுதியா பின்னூட்டம் போடத்தோன்றும்.இன்னும் சில சமயம் பதிவையும் மீறி பின்னூட்டத்துக்கு கை குறுகுறுக்கும்.பின்னூட்டம் போட்டு விட்டு மறுபடியும் விட்ட இடத்துலருந்து தொடரும் டெக்னிக் இது.தொழில் ரகசியங்களையெல்லாம் இப்படியா பொதுவா கேட்பாங்க:)

பெட்ரோலிய பொருளாதாரத்தின் மீதே அனைத்து உலகநாடுகளின் மேம்பாடுகளும் சிந்திக்கப்படும் நிலைக்கு இப்பொழுது உலகமயமாக்கல் தள்ளப்பட்டிருக்குது.காற்று,நீர் மாதிரி பரவலாக இல்லாமல் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பெட்ரோல் எரிபொருள் இருப்பதும் அதனை சார்ந்தே உலகம் இயங்குவதும் என்றாவது ஒரு நாள் உலகளாவிய வில்லங்கத்தை கொண்டு வரும்.அந்த விதத்தில் மாற்று எரிபொருளுக்கான வழிகளை ஆராய்வது அவசியமே.

முன்பு சமையல் எரிவாயு,வீட்டுக்கு மின்சாரம்,குளிர் சாதனப் பெட்டி,தொலைக்காட்சியென்ற நிலையிலிருந்து உபரி நுகர்பொருளாக பல மின்பொருட்களை உபயோகிக்கிறோம்.இதன் பயன்களை குறைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு என்ன தீர்வாக நீங்க சாலமன் மீன் தேடி படகை எடுத்துக்கொண்டு பயணிப்பதை விட நானோ கார் என்று பயப்படுத்துவதை விட

நேற்று என்பது
பழங்கதை!
நாளை என்பது
விடுகதை!

என விடுகதை போடலாம்.விடுகதை போரடிச்சா

அரட்டை அரங்கம்
நடத்தியது விசு

கொரட்டை விடும் மனிதனை
கடிப்பது கொசு!

இப்படி அகநான்கு வரி பாடலாம்.

பொருளாதாரம்,இந்திய ரூபாய் ஏன் வீழ்ச்சின்னு ரோசனை செய்யாம

ஆராரோ ஆறு யாரோ ....என்று தாலாட்டும் பாடலாம்.மூளையைக் குழப்பிக்கொள்ளவும் செய்யலாம்.

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில் என
கண்ணதாசன் பாடல்களைக்கூட படிச்சிகிட்டு உட்காரலாம்.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி,

ரொம்பத்தான் வித்தியாசம் :-))

அப்போ அப்போ கைத்துறுதூத்து முந்திக்கிட்டு பின்னூட்டம் போடுறேன்னு கவுத்து விடுது போல!

பெட்ரோலியம் ஒரே இடத்தில் அதிகம் இருந்தாலும் வற்றாத ஊற்று அல்ல ,எனவே எதிர்காலத்திற்கு மாற்று கண்டாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பழைய பதிவை எல்லாம் கிண்டுனிங்களாக்கும், அதை இங்கேயே கொண்டுவந்து இறக்குமதி வேற. அந்த மாதிரி மொக்கையே போடாம ஏன் இந்த மாதிரி மொக்கைன்னு சொல்றிங்களா?
எல்லாம் பரிணாம வளர்ச்சி தான் , பரிணாமத்தில சந்தேகம் இருந்தால் சகோ.சார்வாகனை கேளும் :-))

பழைய மொக்கை தான் உங்களுக்கு ஒத்து வருது என்றால் போய் இன்னொரு ரவுண்டு படிங்க :-))

வவ்வால் said...

ராஜ்,

ஒரு பிழை திருத்தம்,

//பிரேசிலில் எத்தனால்னு சொன்னேன்ல எல்லாம் மக்காச்சோளம் மூலமே, அங்கே அதுக்கால்நடைத்தீவனம் மட்டுமே.//

அமெரிக்காவில் 20% எத்தனால் கலந்த எரிபொருள்னு சொல்லிட்டு அப்படியே பிரேசிலுக்கு வரும் போது அமெரிக்கா ஒட்டிக்கிச்சு போல, அமெரிக்காவில் தான் அதிக எத்தனால் மக்காச்சோளம், சோளம், கோதுமையில இருந்து தயாரிக்கிறாங்க.

பிரேசிலில் பெரிய அளவில் கரும்பிலிருந்தும், சிறிய அளவிலேயே மக்கா சோளம்,சோளத்திலிருந்து தயாரிக்கிறாங்க. அதுக்கே அங்கே இதனால் கோதுமை,மக்கா சோளம் விலை உயர்கிறது என இப்போ எதிர்ப்பு இருக்கு

அடுத்த பதிவில் மாற்று எரி பொருள் வரிசையில் எத்தனால் தான் (இதில் பெரிய அரசியலே இருக்கு),கிக்கா இருக்கும் :-))

Unknown said...

மார்ஷல்-லென்னர் மட்டுமல்ல நம்ம நாட்டுக்கு யார் தியரியும் செல்லாது .....

Unknown said...

அமெரிக்கா தன் சொந்த எண்ணெய் வளத்தை ஒரு போதும் பயன்படுத்துவது இல்லை ...எல்லாவற்றையும் சேமித்து வைத்துள்ளது ..எதுக்கு தெரியுமா ???உலகம் என்ணெயில்லாம் இருக்கும்போது அப்ப அவனோட எண்ணெய பயன்படுத்துவான் ........உலகத்துக்கு சேமிக்க சொல்லி தந்தது நாம் ........அட போங்கடா ..........................

வவ்வால் said...

நாடி,

வணக்கம்,நன்றி!

நம்ம மக்கள் விதி விலக்கானவங்கன்னு சொல்றிங்களா :-))

அமெரிக்கா பல எண்ணை ஆதாரங்களைக்கண்டு பிடிச்சு வச்சு இருக்கு. இப்போ ஒரு 50% அளவுக்கு உள்நாட்டு கச்சா பயன்ப்படுத்துக்கிறது என்றே நினைக்கிறேன்.

மற்ற நாட்டில் எண்ணை தீர்ந்த பிறகும் அமெரிக்காவில் சில காலம் எண்ணை இருக்கும் படி தான் திட்டம் போட்டு அமெரிக்கா செயல்படுகிறது என்பது உண்மையே.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||
ஒரு பொருளை இறக்குமதி செய்ய அதிக அன்னிய செலவாணிக்கு தேவை இருக்கும் நிலையில் ,அன்னிய செல்வாணிக்கு எதிராக ரூபாய் சரியும் போது, அதிகம் விலைக்கொடுக்க வேண்டும், எனவே அன்னிய செலவாணியின் அளவை குறைக்க அது கொண்டு வாங்கும் பொருளின் அளவை குறைக்க வேண்டும், நேரடியாக இறக்குமதி அளவைக்குறைக்காமல் மக்களின் நுகர்வை குறைக்க செய்ய ஒரு எளிய வழி விலையேற்றம் அல்லது இறக்குமதியின் மீது அதிக வரி விதிப்பது ஆகும்.

சந்தையில் ஒரு பொருளின் டிமாண்ட் & சப்ளை நெகிழ்வுடன் (எலாஸ்டிக்) இருக்கும் எனில் விலை உயர்ந்தால் மக்கள் தாங்களாக நுகர்வை குறைப்பார்கள், எனவே இறக்குமதி குறையும், அதனால் டாலர் தேவை குறையும். இதனை மார்ஷல்-லென்னர் தியரி அடிப்படையில் செய்கிறார்கள்.

ஆனால் இந்தியாவைப்பொறுத்த வரையில் என்ன தான் விலை ஏறினாலும் நாம் பெட்ரோல் பயன்ப்பாட்டினை குறைப்பதில்லை, தங்கம் வாங்குவதையும் நிறுத்துவதில்லை, எனவே சப்ளை& டிமாண்ட் நெகிழ்வற்றது( இன் எலாஸ்டிக்).எனவே மார்ஷல்-லென்னர் தியரி அடிப்பட்டு விடும்.
||

இது எல்லா நிலையிலும் பயன்படாது.இந்தியா போன்ற நாடுகளில் பொதுப் போக்குவரத்தை மக்கள் 40 சதம் தான் நம்ப இயலுகிறது..

எனக்குத் தனியான போக்குவரத்து தேவையில்லை அல்லது அதைப் பயன்படுத்த சுயமாக விரும்பவில்லை என்ற நிலையில் கூட எனது பயணத்தைப் பாதிக்காத அளவில் பொதுப் போக்குவரத்து வாய்ப்புகள் இந்தியாவில் சுத்தமாக இல்லை.

அதனால்தான் எவ்வளவு உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி விதித்தும் மக்கள் சொந்த வண்டிகளை வாங்கிக் கொண்டு பெட்ரோலுக்கு அலைகிறார்கள்..

மற்றபடி உங்கள் பயோடீசல் பற்றிய களநிலை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்தியா போன்ற படிப்பறிவு குறைவாக பெருவாரியானவர்கள் இருக்கும் நாட்டில் இது எந்தளவுக்கு உதவி செய்யும் என்பதும் கருத வேண்டிய விதயம்..

மற்றபடி பயோ டீசல் பற்றிய மிக விளக்கமான பதிவு..நீங்கள் வேதியியல் துறையில் பணி செய்கிறீர்களா என்ன ?!

Thenammai Lakshmanan said...

மிக அருமையான விரிவான பகிர்வு வவ்வால்.. படித்து மிரண்டு விட்டேன். வேதியல் படித்திருக்கிறேன்.. இவ்வளவு டீப்பா படித்ததில்லையேன்னு வருத்தமாயிருச்சு..நன்றி சகோ முழுமையான பகிர்வுக்கு.. ஹ்ம்ம் அரசாங்கம் சீக்கிரம் இந்த மாற்று எரிபொருளை ஏதோ ஒரு விதத்தில் கொண்டுவந்தால் தேவலாம்..

வவ்வால் said...

அறிவன்,

வாங்க,நன்றி!

என்ன இப்படி சொல்லிட்டிங்க, இந்தியாவில் தான் மக்கள் அதிகமா பொது போக்குவரத்தினை நம்பி இருக்காங்க.

இந்தியாவில் படிப்பறி குறைவுனு சொல்வது சதவீதத்தின் அடிப்படையில். அமெரிக்க மக்கள் தொகை 32 கோடி எனப்பார்த்தால் நம் நாட்டில் 32 கோடிக்கும் மேல் பட்டதாரிகளே இருப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள்.

நம் நாட்டிலும் சாத்தியமுண்டு.ஆனால் நம் மக்களிடம் தன் முனைப்பு குறைவு. (சரக்கு காய்ச்ச சொன்னா எல்லாம் ஓடி வருவாங்க, ஹி..ஹி நானே ஒரு காலத்தில் முயற்சி செய்யப்பார்த்தேன்)எனவே அரசு தான் செய்ய வேண்டும். பெரிய அளவில் ஒரு இடத்தில் தயாரித்து நாடு முழுக்க விநியோகம் என பார்க்காமல் மாவட்ட அளவில் என அங்கே செய்து அங்கேயே விநியோக்கலாம். இதனை சார்வாகன் கூட சொல்லியிருப்பதைப்பாருங்கள்.

ஹி..ஹி நாம எல்லாத்துறையிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சு வச்சு இருக்க கத்துக்குட்டி

வவ்வால் said...

தேனம்மை லஷ்மணன்,

வாங்க மேடம், நன்றி, வணக்கம்,

//மிக அருமையான விரிவான பகிர்வு வவ்வால்.. படித்து மிரண்டு விட்டேன்.//

ஹி..ஹி அப்படியா நானே ரொம்ப எளிமைப்படுத்தி தான் எழுதினேன், இப்படி ஒன்று இருக்குனு தெரிஞ்சா போதும்னு.யாராவது வேதியல் படிச்சவங்க திட்டுவாங்களோனூ கூட நினைச்சேன் ஏன் எனில் மெத்தனால் வைத்து எழுதிவிட்டு சமன்ப்பாட்டில் எத்தனால் வைத்து உதாரணம் காட்டியிருப்பேன்,விக்கியில் அந்தப்படம் தான் இருக்கு :-))
(இப்போ நானா உளரிட்டேனோ)

இதில் டிஸ்டில்லேஷன் பிராஸஸ் மூலமும் சுத்திகரித்து பயோ டீசல் செய்யலாம், அது செலவு பிடிக்கும் அமைப்பு என்பதால் சொல்லவில்லை.நீங்கள் ரயிலில் பயன்ப்படுத்தினார்கள் என சொன்னீர்களே அந்த பயோ டீசல் அப்படியானது தான்.லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருக்கும் போது கொண்டு வ்ந்த திட்டம்,அவருக்கு பின் கிடப்பில் போடப்பட்டு இப்போது ஊத்தி மூடியதாக அறிவித்தும் விட்டார்கள்.

கண்டிப்பாக அரசு எதாவது செய்யணும்,ஆனால் தூங்கு மூஞ்சியாக இருக்கே அரசு. அதுக்கு பின்னால் ஒரு அரசியல் சதியே இருக்கு என நினைக்கிறேன்.

அடுத்து எத்தனால் வச்சு மாற்று எரிபொருள் பதிவில் அதனை விளக்கலாம் என இருந்தேன். நேரம் கிடைக்காமல் அப்படியே கிடக்கு.

நன்றி!

ராஜ நடராஜன் said...

முதல் முறை படித்து விட்டு பின்னூட்டம் போட்டு விட்டு இப்ப மறுபடியும் ஒரு முறை கொஞ்சம் தீவிர வாசிப்புடன் இந்த பின்னூட்டம் மறுபடியும்.

பயோ டீசல்,சூர்ய ஒளி,மின்சார பேட்டரியென பலவிதமான எரிபொருள் சாத்தியங்கள் இருக்கின்றன.ஆனால் இரு நூற்றாண்டுகளாய் படிப்படியாக வளர்ந்த எண்ணைப் பொருளாதாரம் மட்டுமே இன்று உலக வாழ்வை நிர்ணயிக்குமளவுக்கு வளர்ந்து விட்டதால் மாற்று எரிபொருள்கள் மீதான தீவிர ஆராய்ச்சிகளோ,பெரும் முதலீடுகளோ யாரும் செய்வதில்லையென்பதால் மட்டுமே மாற்று எரிபொருளுக்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கிறது.

இந்தியா விவசாய நாடாக இருந்தாலும் பயோ ஆய்வுகளையெல்லாம் தீவிரப்படுத்தும் பொருளாதார கொள்கை நம்மிடம் இல்லையென்பதால் மேற்கத்திய நாடுகள் ஏதாவது ஒரு புதிய புரட்சியைக் கொண்டு வந்தால் மட்டுமே பயோ டீசல் சாத்தியம்.

Fuel என்ற டாகுமென்டரி பார்த்த பின்பே இந்த பதிவின் தரம் எனக்குப் புரிய ஆரம்பித்தது.பயோ டீசல் மீதான ஆர்வத்தில் ஒருவர் KFC யில் வறுத்த கோழிகளின் பின் வீசப்படும் எண்ணையை அனைத்து இடங்களுக்கும் சென்று வாங்கி அதில் நீங்கள் பதிவில் சொல்லும் படியான சில வேதியல் பொருட்களை கலந்து (டாஸ்மாக் சரக்கு உட்பட) ஓட்டும் வாகனத்துக்குப் பெயரே வெஜ்ஜி வேன்.

பழைய ஸ்கூட்டர்,பைக் மூலமாக நீங்கள் சொல்லும் செய்முறையை யாராவது முயற்சி செய்து பார்க்கலாம்.

நீங்களே கூட செய்முறை செய்து பார்த்துட்டு வவ்வால் பயோடீசல் ன்னு பேடன்ட் ரைட்ஸ் வாங்கிக்கலாம்.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

இப்போ இதுக்கு நான் பதில் சொல்லணும் ?

உள்ளூர் இட்லி,சாம்பார் நல்லா இருக்குன்னு வெள்ளைக்காரன்ன் சொன்னா தான் மக்களுக்கே தெரியும் போல இருக்கு :-))

//மாற்று எரிபொருள்கள் மீதான தீவிர ஆராய்ச்சிகளோ,பெரும் முதலீடுகளோ யாரும் செய்வதில்லையென்பதால் மட்டுமே மாற்று எரிபொருளுக்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கிறது.//

இதை ஒபாமா உங்கக்கிட்டே மட்டும் சொல்லிட்டுப்போனார் போல இருக்கே :-))

சில,பல மூன்றாம் உலகநாடுகளை தவிர எல்லா நாட்டிலும் பல மில்லியன் டாலர்கள்/ஈரோ/பவுண்டு/சுவிஸ் குரோனர் என செலவிட்டு ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சில வெற்றியும் அடைந்துள்ளது, அதனை மாஸ் புரடக்‌ஷனாக ,மலிவாக தயாரிக்க வழி தேடுதலும் ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு.

இப்படி ஒன்றை உருவாக்கி பின்னர் அதில் இருந்து ஆற்றலை பெறுவதற்கு பதில் சூரிய சக்தியே சிறப்பு என அதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.சூரிய சக்தி கார் பந்தயம் எல்லாம் ஆண்டு தோறும் நடக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் பச்சை தண்ணியில் கார் ஓட வைக்க எல்லாம் ஹோண்டா புரோட்டோ டைப் செய்துவிட்டது. நீரில் இருந்து ஹைட்ரஜன் பிரித்து ஓட்ட முடியும்.

அதை கவனிக்காமல் உலக அளவில் செலவு செய்ய ஆள் இல்லைனு ஜோசியம் சொல்லிக்கிட்டு.

என்சைம் மூலமாக கரிம பொருட்களை பெட்ரோலாக மாற்றும் முறைக்கூட கண்டுப்பிடிச்சு லேப்பில் இருக்கு , பெரிய அளவில் செய்ய முயற்சி நடக்குது.

இதை எல்லாம் பதிவாக போடாமல் இருக்க காரணம் எல்லாமே செய்தியாக மட்டுமே போடுறாங்க,என்ன எப்படினு சொல்வதில்லை,அது ரகசியம்(விரிவா 10 பக்கத்துல பதிவு போட்டாலும் செல்லாதுனு தானே சொல்வீங்க). எனவே அதை அப்படியே சொல்வது நல்லா இருக்காது என்பதால் இதுவரை பதிவாக்குவதில்லை.

வல்லரசு கனவில தூங்கிக்கிட்டு இருக்க நாடு இந்தியா மட்டுமே :-))

ராஜ நடராஜன் said...

பரவாயில்லையே!வவ்வால் நல்லாவே பறக்குதே!துளைப்பானுக்கு பின்னூட்டம் போட்டுட்டு இங்கேயும் ஒரு பின்னூட்டம் போட்டேன்.வவ்வால் நல்லாவே பறக்குது.வாழ்த்துக்கள்.

இந்த கணம் வரை கடந்த இரு நூற்றாண்டுகளாய் பெட்ரோலிய பொருளாதரமே உலகளாவிய அளவில் விளங்குகிறது.வளைகுடா நாடுகளைத் தவிர உலகம் முழுவதும் பெட்ரோலின் விலை அதிகமென்ற போதிலும் தொழில் நுட்பங்கள் இருந்தாலும் தற்போதைய நிலையில் பெட்ரோலே விலை குறைவான எரிபொருள் என்பது பலருக்கும் முரண்பாடாக தோன்றலாம்.காரணம் மாஸ் புரடக்சன் என்னும் பெருமளவில் ஏனைய எரிபொருள் இல்லாத காரணம் கொண்டும் மாற்று மின்சார கார் தயாரிப்புக்களுக்கான சாத்தியங்கள் இருந்த போதும் பல காரணிகள் இன்னும் பெட்ரோலிய எரிபொருளைச் சார்ந்தே இருக்கின்றன.ஆனாலும் குறைந்த பட்சம் வாகனங்களுக்காவது மாற்று எரிபொருள் உபயோகிப்பது அவசியம்.

கொஞ்சம் வேலையிருக்கிறது.இந்தப் பின்னூட்டத்தை வந்து பார்த்துக்குறேன் மறுபடியும்.

ராஜ நடராஜன் said...

பரோட்டா,பவர் ஸ்டார்ன்னு தேடிப்புடிச்சு பயோடீசலுக்கு வர்றது எவ்வளவு கஷ்டம்ங்கிறதாலதான் கிடைச்ச சந்துல பின்னூட்ட சிந்து பாடறது.நல்லவேளை சாலமன் மீன் பின்னாடி ஓடி வருது.

அதென்னமோ உண்மைதான்.இட்லியும் கூட வெள்ளைன்னு வெள்ளக்காரன் சொன்னால்தான் உண்மைன்னு உலகமே நம்பும்.நானும் அப்படித்தான்.அதுபாட்டுக்கு வெயிலில் காஞ்சுகிட்டிருந்த மஞ்சளைக் கூட அமெரிக்காகாரன் காப்புரிமை கொண்டாடத்தானே நாம் லபோ திபோன்னு குதிச்சோம்.

ஒபாமா இப்ப காசு கொடுத்ததால்தான் மின்சார கார்களுக்கான உற்சாக பானம் ஊக்கிவிக்கப்பட்டிருக்கிறது.நம்மூர் ஓட்டு அரசியல் மாதிரி மறுபடியும் ஜனாதிபதியாவதற்கு கொடுத்த மானியமான்னு தெரியல.

9/11க்குப் பின்னாடி ஜார்ஜ் புஷ் பெட்ரோலிய எரிபொருளுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் ஆராய்ச்சிக்காக மானியம் வழங்கப்படும் என்று சொன்னபோது நானும் கூட ஷேக்குகளுக்கு ஆப்பு வைக்கத்தான் என நினைச்சேன்.ஆனால் மாற்று எரிபொருளாக மின்சார கார்கள் வந்து விடக்கூடாது என்ற சுயநலத்தால் திசை திருப்பும் விதமாகவே ஹைட்ரஜன் எரிபொருள் பற்றி சொல்லியிருக்க கூடும் என்பது காலம் கடந்த எனது ஞானதோயம்.காரணம் அமெரிக்க பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குதாரர்களாய் ஜார்ஜ் புஷ்,டிக் செய்னி இன்னும் பிற ரிபப்ளிக்கன்கள் இருந்தார்கள்.இருக்கிறார்கள்.இவர்களது லாபியும்,ஷேக்குகள் சார்ந்த அமெரிக்க லாபியும் வலுவானது.

சூர்ய சக்தி பந்தயமெல்லாம் சகாரா பாலைவனத்துக்கு சரி!அன்டார்டிகாவுக்கு மாற்று வழியென்ன?

முன்னாடி வேணுமின்னா செல்லாது நாட்டமை தீர்ப்பை மாத்துன்னு சொல்லியிருப்பேன்.ஆனால் இந்த பதிவின் ஆழம்,புரிதல் எனக்கு வெள்ளைக்காரன் இட்லி சுட்ட பின்புதான் புரிகிறது.

அப்துல் கலாமின் இந்தியா வல்லரசு 2020 புத்தகத்தை சூடா இருக்கும் போது வாசித்தேன்.அவரது தியரிகள் இந்தியர்கள் அனைவரும் இணைந்து செயல்படும் போது சாத்தியமே.ஆனால் யதார்த்தம் என்னவென்றுதான் அரசியலும்,இந்திய நடப்புக்களும் நமக்கு காட்டிக்கொடுக்கின்றனவே.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க உங்களுக்கு எல்லாமே காலம் கடந்து தான் புரியுது. மாஸ் புரொடக்‌ஷன் என்பது பெட்ரோலியத்துக்கு செய்யவும் பல காலம் ஆச்சு. குருட் அஹ் எடுத்து வெறுமனே தீப்பந்தம் எரிக்கவும், விளக்கெரிக்கவும், போரில் அம்பு நுனியில் நெருப்பு வைக்கவும், பாறை எரியும் கவனில் பாறையில் நெருப்பு வைத்து அக்கால வெடிக்குண்டாகவும் வீசத்தான் பயன்ப்பட்டது.

குருட் இப்போதைய பயன்ப்பாட்டிற்கு வர ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆன் வரலாற்றை மறந்து விட்டு ,அடுத்த மாற்று எரிப்பொருள் மாஸ் புரோடக்‌ஷனுக்கு உதவாது என ஆரம்பத்திலெயே சொல்லுங்க,வரலாறு முக்கியம் தலைவரே :-))

எனவே இப்போதிலிருந்து மாற்று சக்திக்கு முயற்சித்தால் தெளிவான வழிக்கிடைக்கும். நோகாம நொங்கு தின்ன நினைக்கும் இந்திய மனப்பான்மை நல்லா தெரியுது!

ஒபாமா மானியம் அளிப்பது சரிந்து வரும் ,அமெரிக்க வாகனத்துறையை மீட்கவே.வாரண்டி முடிந்ததும் புது காருக்கு மாறிவிடும் அமெரிக்கர்கள் அப்படி இப்போது செய்வதில்லை எனவே தான் அங்கே வாகனத்துறை தள்ளாடுகிறது.

இனிமேல் வழக்கமான காருக்கு மார்க்கேட் இல்லை என்பதால் இப்படி புது நுட்பத்தில் வர வைக்க மாநியம் எல்லாம். ஹோண்டாவே ஆண்டுக்கு 2பில்லியன்ன் டாலர் புது நுட்ப கார் மேம்பாடுக்கு செலவிடுகிறது அப்போது தான் வருங்காலத்திலும் சந்தையில் நிற்க முடியும்.

சீனியர் புஷ் அவர் குடும்பத்தொழிலே பெட்ரோலியம் தான் ,டெக்சாஸ் ஆயில் நிறுவனம் அவர்களோடது.அமெரிக்க அம்பானி அவர்கள்.டிக் செனி தான் அப்போ ceo,
இப்போ நிறுவன பொறுப்பில் இல்லாமல் பினாமியா நடத்துறாங்க புஷ் குடும்பம்.அப்புறம் லாபி செய்யாம லாலி பாப் ஆ செய்வாங்க.

இந்தியாவில் பனி மழை கொட்டுது இங்கேலாம் சூரிய சக்தியே பயன்ப்படாது. இதுக்கும் வெள்ளைக்காரன் காணொளி காட்டினா தான் உண்டு :-))