Wednesday, May 30, 2012

பவர் ஸ்டார் நல்லவரா ,கெட்டவரா? ஒரு சூடான அலசல்!



விஜய் தொ.காவின் நீயா,நானா நிகழ்ச்சி நங்கூரம் கோபிநாத் , தனது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆற்றல் விண்மீன்(பவர் ஸ்டார்) என்ற திரைபிரபலத்தை அழைத்து உரிய முறையில் நடத்தாமல், தேவையில்லாத கேள்விகள் கேட்டு அவமரியாதை செய்து விட்டதை வைத்து பலரும் பதிவுகள் போட்டுத்தாளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நானும் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வழக்கம் போல மொக்கையாக அறிவியல் ,பொருளாதாரம்னு ஜல்லி அடிக்கலாம், நமக்கு எதுக்கு இதெல்லாம் என வாளாவிருந்தேன்,அது நேற்று இரவு குமுதம் ரிப்போர்ட்டரை படிக்கும் வரையே, அதில் ஆற்றல் விண்மீன் பற்றி ஒரு செய்தி போட்டிருக்கிறார்கள்.

அதில் சொல்லப்பட்டிருப்பது என்னவெனில்,

#ஆற்றல் விண்மீன் மருத்துவப்படிப்பே படிக்கவில்லை, அவர் கல்வி தகுதிக்குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை உள்ளது,

#பலப்பேரிடம் கடன் வாங்கி தருகிறேன் எனச்சொல்லி கையாளும் கட்டணமாக கமிஷன் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.

தற்போது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் சுரேந்திரகுப்தா என்பவரிடம் 6 கோடிக்கடன் வாங்கி தருவதாக சொல்லி கமிஷனாக 26 லட்சம் பெற்றுள்ளார், அப்போது 2.75 கோடிக்கு டி.டி காட்டியுளார் ,அதை பின்னர் தருவதாக சொல்லியுள்ளார்,வங்கியில் விசாரித்த போது அது போலியானது என சொல்லியுள்ளார்கள்.எனவே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார், பல அலைச்சலுக்கு பின்னர் 17 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு ,மிரட்டியுள்ளார்,எனவே இப்போது சுரேந்திர குப்தா மாநகர ஆணையர் அலுவலகத்தில், ஆ.வி மேல் மோசடிப்புகார் கொடுத்துள்ளார்.

இதுவே கு.ரிப்போர்ட்டர் செய்தி, அப்படி எனில் இது போல பலரிடம் மோசடி செய்த பணத்தில் தான் படம் எடுத்து விளம்பரம் செய்துக்கொண்டுள்ளாரா ஆற்றல் விண்மீன் ?

பவர் ஸ்டார் நல்லவரா ,கெட்டவரா?

இப்போ கோயான் கோபிநாத்துக்கு வருவோம்,



ஒரு நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்/விருந்தினர் என்றால்,அவரது கருத்தை சொல்லத்தான் அழைக்கப்பட்டுள்ளார், அது ஒன்றும் அவரது நேர்காணல் அல்ல, அவரைப்பற்றி விமர்சிக்க,கேள்விக்கேட்க.எனவே எந்த நிகழ்ச்சியை எப்படி வடிமைக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு பின்னர் நிகழ்ச்சி செய்ய வரவும்.

பவர் ஸ்டாரை இப்படி எல்லாம் கேள்விக்கேட்க வேண்டும் என ஆசை இருந்தால் ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியை வைத்து அதில் கேட்டுக்கொள்ளுங்கள்.

நிகழ்ச்சி நங்கூரம்னா கோட்டு சூட்டுப்போட்டுக்க வேண்டும்னு விதி இருக்கா? ஆனானப்பட்ட கரண் தாப்பர் கூட கோட் போடாமல் நிகழ்ச்சி நடத்துனார்ப்பா, அப்படியிருக்க தமிழில் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு கோட்டு தேவையா?

அதை விட கொடுமை கோட் ரொம்ப சின்னதா உடம்புக்கு பொருந்தாம , உடம்பே பிதுங்கிக்கிட்டு இருக்கும் ,வாடகைக்கு கோட் எடுக்கும் போதே கொஞ்சம் பெருசா எடுக்கப்படாதா :-))

-------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

குமுதம் ரிப்போர்ட்டர், கூகிள்,நன்றி.

*****

16 comments:

CS. Mohan Kumar said...

கமிஷன் உள்ளிட்ட சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தை கிடைக்க வில்லையா? :))

வவ்வால் said...

வாங்க மோகன்,

நன்றி!

தரகு என்ற சொல் இருக்கு கட்டணம்,கமிஷன்னு ஒரு
ஓட்டத்தில வந்திடுச்சு, எழுதிய பிறகு பிழை சரிப்பார்ப்பெல்லாம் செய்வது இல்லை, அப்படியே தட்டிவிடுறது தான் :-))

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

நல்ல பதிவு.

சால்மன் மீன் பிடிப்பவர் என்பதால் சாலமன் தீர்ப்பு போல் நடைமுறை நியாயங்களை விள்க்கி விட்டீர்கள்.

ஆனால் தொல்லிக் காட்சி நிகழ்ச்சிகளில் பிடிக்காத ஒன்று இது என்பதால் பார்ப்பது இல்லை.

ஊடகங்கள் கருத்து திணிப்பு செய்பவை என்று அறிந்த பின் அவைகள் மீது மதிப்பு போய் விட்டது.ஊடகத்தில் வரும் விடயங்களை கூடுமானவரை சரிபார்ப்பது நல்லது.

கோபிநாத்தின் செயல் " செல்லுமிடத்து சினம் " என்க் கூறலாம்.இதே போன்ற அல்லது இதை விட பெரிய பிரசினைகள் கொண்ட பெரும்புள்ளி எவரிடமும் கேள்வி கேட்க நினைத்துக் கூட பார்க்க மாட்டார்.

மற்றபடி அவர் கோட் போடுவது ஒரு நகைச்சுவை என இரசிக்கலாம்.அது அவர் விருப்பம்.

கோபிநாத் மட்டுமல்ல நிகழ்ச்சியின் இயக்குனரும் இதற்கு பொறுப்பாளி ஆவார்.

இதே போன்ற நிகழ்வுகள் முந்தைய நிகச்சிகளிலும் நடை பெற்று இருக்கலாம்.யாரும் கவனித்து இருக்க மாட்டோம்.டாகடர் சீனிவாசன் ஒரு நடிகர் என்பதால்தான் இப்பிரச்சினை பெரிய அளவில பேசப்படுகிறது.

மற்றபடி இதை ஒரு வாரம் கழித்து வழக்கம் போல் தமிழ் மக்கள் மறந்து விடுவார்கள்.

நன்றி!!!!!!!!!!!!!!!!

Unknown said...

விஜய் டிவி போன்ற மீடியாக்கள் ஒன்றுமே இல்லாத ஒருத்தன ஊதி பெரிய ஆளா காட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது .......பவர் ஸ்டாருக்கு விளம்பர செலவை மிச்சம் செய்துள்ளது ......கோபிநாத் நடந்து கொண்ட விதம் எப்டி இருந்துச்சுனா ..பவர் ஸ்டார் நல்லவர் கோபி கேட்டவர்னு மக்கள் மனசுல பதியுற மாதிரி இருந்துச்சு ...கோபியை நான் கேட்பது ஒன்றே ஒன்று தான் ..நீங்கள் உங்களை அறிவாளி என்று நிருப்பிக்க நூறு முட்டாள்கள் மத்தியில் நின்று கொள்வீர்களா ????

ராஜ நடராஜன் said...

முஷ்ரஃப்கிட்ட நேர்காணல் செஞ்ச ஆள் யாருன்னு எனக்கு நானே காலையிலிருந்து கேள்வி கேட்டுகிட்டே இருக்கேன்.நினைவுக்கே வரல கரண் தப்பாரின் பெயர்.நினைவுபடுத்தியதற்கு நன்றி.

கொஞ்சநாட்களாகவே பவர் ஸ்டார்ங்கிற பெயர் அடிபட்டுகிட்டேயிருக்குது.இதோ இந்த பின்னூட்டம் போடும் வரை இவர் யார்ன்னே இன்னும் தெரியலை.நான் முதலில் நீயா?நானா? பார்த்துட்டு வந்து கருத்து சொல்கிறேன்.

அதற்கு முன்பாக குமுதத்திற்கு பவர்ஸ்டாரின் தில்லுமுல்லுகள் என வங்கி கணக்கு வரையிலான தகவலை யார் சொன்னது?அதுவும் அவர் பெயர் ஹாட்டா இருக்கும் இந்த சூழலில்?

ராஜ நடராஜன் said...

வவ்வு!லத்திகான்னு ஒரு பெரிய படபோஸ்டரை பதிவுலக சினிமா பயில்வான்கள் ஒட்டியும் கூட பவர் ஸ்டாரின் முகம் யார்ன்னு எனக்குத் தெரியாது.இந்த பதிவைப் பார்த்து விட்டு தேடிப்பிடிச்சு பவர் ஸ்டாரின் உண்மையான கண்ணாடி போட்ட முகத்தைப் பார்க்க வைத்த புண்ணியம் இந்த மொக்கைப் பதி(வரை)வையே சாரும்:)இந்த வரிகளை நான் சிரிப்பான் போட்டதால பவரு மாதிரி எளிதாகவும் எடுத்துக்கலாம்.இல்ல ராஜ் நம்மைக் கலாய்க்கிறானேன்னு பவரு மாதிரி கண்ணாடி போடாமலும் கூட புலம்பலாம்:)

பவர் vs கோபிநாத்தில் என்ன சீரியஸான விசயமிருக்குதுன்னே எனக்குப் புரியல.கோபிநாத்துக்கு நங்கூரம்ங்கிற வார்த்தை கூட இப்ப தட்டச்சும் போதே புரிகிறது.வழக்கமான நங்கூரமாகத்தானே கோபிநாத் கேள்விகள் கேட்கிறார்?பவரின் காமெடியான பிம்பத்துக்கும் அப்பால் மருத்துவர்ங்கிற மறுபிம்பத்தைத்தானே நங்கூரம் கொண்டுவர முயற்சிக்கிறார்?பவரும் சிரிச்சிகிட்டுத்தானே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்!நிறைய பேர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.இல்லாட்டி காமிராவுக்கும் அப்பால் என்னென்ன நடந்ததுன்னு பக்கத்திலிருந்து பார்த்துவிட்டு பதிவு போடுவது போலவே பவரைக் கிள்ளி விட்டு பல...ர் பதிவுகள் போட பவரோ அல்லது அவரது நெருங்கிய ரசிகர் சிகாமணிகளில் யாரோ ஒருத்தரு போய் பவருகிட்ட வத்தி வச்சு அவர் இப்ப வருத்தப்படுகிறார்ங்கிற மாதிரி கூட பதிவுகள் வருது.எப்படியோ சும்மா இருந்த பேட்டரியை பவர் ரீசார்ஜ் செய்த புண்ணீயம் நீங்கள் உட்பட பதிவர்களையே சாரும்.சாரும் போட்டதும் அந்த சாரு பற்றி இப்ப எல்லோருமே மறந்துட்ட மாதிரி தெரியுதே!

நான் இன்னும் லத்திகா படம் கூட பார்க்கவில்லை.இங்கே யாரோ ட்ரெயிலர் ஓட்டுவது மாதிரி தெரிகிறது. அப்படி அதுல என்னதான் இருக்குதுன்னு பார்த்துட்டு வாரேன்.

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

ஊடகங்கள் சொல்வது தான் கருத்து, உண்மைனு நம்ப வேண்டிய சூழலில் உலகம் இருக்கு.நாலு ஊடகம் திரும்ப திரும்ப சொன்னா உண்மை ஆகிடும். ஹிட்லர், கோயபல்ஸ் காலத்து நடை முறை தான் இப்போவும்.

பெரும்ப்புள்ளி இல்லை சாதாரண புள்ளிக்கிட்டே கூட இப்படிக்கேட்க மாட்டார். இயக்குனரும் கூட்டு களவாணி தான்.

வெட்டி பந்தா எதுக்குன்னு கேட்டு இருக்கார், தமிழ் நிகழ்ச்சியில் கோட்டுப்போடுவதும் வெட்டிப்பந்தா தானே,சகோ.

உப்புமா நடிக,நடிகையராக இருந்தாலும் சமூகம் உற்றுக்கவனிக்கும். வேற வேலை என்ன மக்களுக்கு.

உலகத்தில பாதி அழிஞ்சாலும் ஒரு வாரத்தில மறந்துடுவாங்க மக்கள் என்பது சகஜம் தானே, மக்களுக்கு மறதி இல்லைனா அரசியல்வாதிகள் பொழப்பு ஓடுமா? :-))

-------------
நாடி நாராயண்,

வாங்க், நன்றி,வணக்கம்,

பவருக்கு இலவச விளம்பரம் தான், கோபிநாத் எப்படி கலாச்சேன்னு காட்டிக்க போய் அது பவருக்கு வாட்ஸ் ஏத்திடுச்சு.

//நீங்கள் உங்களை அறிவாளி என்று நிருப்பிக்க நூறு முட்டாள்கள் மத்தியில் நின்று கொள்வீர்களா ????//

அதை தானே இத்தனை நாளா கோபிநாத் அண்ட் கோ செய்துக்கிட்டு இருக்கு.

ஆமாம் நீங்க நாடி சோசியம் பார்க்கிறவரா , படத்த பார்த்தா டைட்டானிக் கப்ப்ல் கேப்டன் போல இருக்கு :-))

----------

ராஜ்,

வாங்க, நன்றி,வணக்கம்,

பிலாவல் முஷரப் பேர சொன்னதும் உங்களுக்கு கரண் தாப்பர் நியாபகம் வந்துடுச்சோ?

பவர் பேரு ஹாட் ஆ அடிப்படவும் காற்றுள்ளப்போதே தூற்றிக்கொள் என கு.ரிப்போர்ட்டர் தேடிப்பிடிச்சு செய்திப்போட்டு இருக்கும்.

----
சினிமா பயில்வான்கள் ஒட்டின போஸ்டர்ல பவர் முகத்தில கருப்பு பட்டைய ஒட்டிட்டாங்கள, முகம் தெரியலை சொல்லுறிங்க.

இந்த மொக்கைக்கும் அப்புறமா தான் அந்த மொக்கை முகத்த பார்த்தீங்களா? வாந்தி,பேதீ எதுவும் ஆகலையே?

//வழக்கமான நங்கூரமாகத்தானே கோபிநாத் கேள்விகள் கேட்கிறார்?பவரின் காமெடியான பிம்பத்துக்கும் அப்பால் மருத்துவர்ங்கிற மறுபிம்பத்தைத்தானே நங்கூரம் கொண்டுவர முயற்சிக்கிறார்?//

தொ.கா பேச்சு நிகழ்ச்சி, நேர்காணல் எல்லாம் பார்ப்பது போல நிறைய சொல்லி இருக்கீங்க, மெய்யாலுமே பார்த்து தானே சொன்னீங்க?

பார்வையாளர்கள் பங்கு பெறும் அவர்களுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளரின் கருத்தை கேட்க தான் அழைக்கப்பட்டுள்ளார், எனவே பவ்ர் சொல்றத தான் கேட்டு வெளியிடணும், அவரை குறுக்கு கேள்வி கேட்க ,பவரின் நேர்காணல் அல்ல இது.

இதற்கு முன்னர் வந்த சிறப்பு அழைப்பாளர்களிடம் "இதைப்பற்றி என்ன நினைக்கிறிங்க என " அப்படித்தானே கேட்டார். இதுக்கு முன்னர் சாருவையும் இப்படி செய்துள்ளார், ஆனால் அதுக்கு கூட ஒரு காரணம் சொல்லலாம்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு வடிவம் இருக்கு, அதை விட்டு வெளியில் வந்து வேறு நிகழ்ச்சியாக ஆக்கி விட்டார் கோபி.

ஒரு நங்கூரமா அவர் நிகழ்ச்சியின் எல்லையை தாண்டியது கூட தெரியலை , இதுல ஆங்கில தொ.கா வேறப்பார்க்கிறிங்க :-))

லத்திகா பார்த்துட்டு , அப்புறமா வளைகுடா பவர் ஸ்டார் பேரவை தலைவர் ஆகணும்னு அடம்பிடிக்காதீங்க, அதுக்கு எல்லாம் ஏற்கனவே ஆளுங்க இருக்காங்க :-))

--------

ராஜ நடராஜன் said...

வவ்வு!ஒரு பதிவுக்கான சரக்கை இங்கே ஊத்த வச்சிட்டீங்களே!கரண் தபார் பெயரை நினைத்து மூளையைக் கசக்கிக் கொண்டது முஷ்ரஃப்க்காக அல்ல.சென்ற வாரம் கோத்தபய பிபிசிக்கு நேர்காணல் ஒன்று சொல்லியிருந்தார்.அதில் இலங்கையின் வடகிழக்குப் பகுதி தமிழர்களுக்கு சொந்தமல்ல.சிங்களவர்கள் இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் பட்டா போட்டுக்கொள்ளலாமென்று சொன்னார்.

http://www.bbc.co.uk/news/world-asia-18207198

எனக்கு ஒரு கெட்ட பழக்கமிருக்கிறது.ஏதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தால் அவர்கள் உதடு சொல்வதோடு தமிழில் பாடி லாங்குவேஸ் என்று சொல்லப்படும் முகபாவங்கள்,உடல் அசைவுகள் என்னவென்று பார்ப்பது வழக்கம்.

கோத்தபயவோடு நேர்காணல் கண்ட சார்ல்ஸ் கெவிலான்ட் (Charles Haviland) மனித உரிமை மீறல்களும்,ஆட்கள் கடத்தப்படுவது பற்றிய கேள்விக்கு கோத்தபயவின் வலது கரம் டேபிளை தாளம் போட்டுக்கொண்டிருந்து விட்டு பின் இரண்டு கைகளும் பென்சிலை உருட்ட ஆரம்பித்து விட்டது.இந்த உடல் அசைவுகள் அவருக்கான பயத்தையே காட்டுகிறது.

இதே போன்று முஷ்ரஃப் டெல்லி வருகையின் போது கரண் தபார் கொடுக்குப்பிடி போட முயன்றது நினைவுக்கு வந்தது.

இப்ப கரண்தபார் ஏன் என்று புரிகிறதா!

நான் பவர்ஸ்டார் vs கோபிநாத் நிகழ்ச்சியை பார்த்துட்டு சொல்றேன்னுதானே சொன்னேன்.அப்புறம் ஏன் மெய்யாலுமே பார்த்து தானே சொன்னீங்க? என்ற கேள்வி:)

நான் நிகழ்ச்சியை கணித்த மட்டிலும் கோபிநாத் பவரை கலாய்த்தமாதிரி தெரியவில்லை.அதேபோல் பவரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டுதான் பதில் சொன்னார்.இதில் நாரதர் வேலை செய்பவர்கள் பதிவர்களே:)எல்லோரும் டிஸ்டர்போமேனியா தொலைக்காட்சி நோயில் சிக்கியுள்ளீர்கள் என்பது மட்டும் புரிகிறது:)

ஒரு நிகழ்ச்சி எப்படி வெளிவரவேண்டுமென்று தீர்மானிப்பவர்கள் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும்,நங்கூரமும்,தொலைக்காட்சி நிறுவனமுமே.

நிகழ்ச்சியின் எல்லையென்று எப்படி தீர்மானிக்கிறீர்கள்?இப்ப பார்த்தீங்கன்னா உங்களுக்கு எல்லைகள் என்று தோன்றுவது அந்த நிக்ழ்ச்சிக்கு எல்லையே இல்லையென்று எனக்கு தோன்றுகிறதே!

வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இரண்டுபேர் மோதிக்கொண்டார்களே!பெயர் என்ன? அந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமென்றால் நீங்கள் எல்லைகள் வரையறுக்கலாம்.

மெய்யாலுமே நேற்று உங்களுக்கு பின்னூட்டம் போட்டுவிட்டே லத்திகா ட்ரெயிலர் பார்த்தேன்:)

இன்னுமொன்று Just for the record சொல்லிக்க விரும்புகிறேன்.

இன்னுமொரு நீயா?நான் நிகழ்ச்சியொன்று காண நேரிட்டது.அதில் சில நிமிடங்கள் மெட்ரோ பிரியாவை நங்கூரம் செய்ய கோபிநாத அழைத்தார்.அவர் அரங்குக்குள் வந்து உட்கார்ந்தும் கூட யாரும் கண்டுக்கலையாம்.ஒரு ஹலோ கூட சொல்லவில்லையென்று கூறினார்.கோபிநாத் கூட அந்தக்கால கட்டத்தை ஒரு நாள் நெருங்குவார்.அப்பொழுது இன்னுமொரு புதுமுகம் பற்றிய விவாதம் பேசப்படும்.

வவ்வால் said...

ராஜ்,

சரி விடுங்க, நேர்காணலுக்கும், இரு அணியாக பிரிந்து பார்வையாளர்கள் பட்டி மன்ற ரீதியில் பேசும் நிகழ்ச்சிக்கும் வித்தியாசம் என்னனு புரியும் போது ,நிகழ்ச்சி வடிவம்,எல்லை எல்லாம் புரியவரும்.

அது வரைக்கும் எல்லாமே ஒரு தொ.கா நிகழ்வு என்ற அளவில் பாருங்க, இதில் உடல் மொழின்னுலாம் சொல்றிங்க :-))

நான் தொ.காவே பார்ப்பதில்லை.நிகழ்ச்சியைப்பற்றி பதிவர்கள் சொன்னதின் அடிப்படையில், சரியான நங்கூரம் இல்லைனு சொன்னேன்.

பின்குறிப்பு:

நான் எழுதிய பதிவில் சிறிய,எளிய பதிவு(மொக்கை) அதையே முழுசா படிக்காம பேசுறிங்களே :-))

ராஜ நடராஜன் said...

என்னது!படமே பார்க்காமல் விமர்சனமா:)

பதிவர்களின் பதிவுகளின் கருத்தின் அடிப்படையிலேயே நீங்கள் மொக்கை போடுகிறேனென்று சொன்னாலும் கூட பதிவர்கள் சொல்வது சரியா என்று நான் பார்த்த மாதிரி நீங்களும் காணொளி கண்டு கருத்து சொல்வதுதானே நியாயமாக இருக்கும்?

இதை இப்படியே விடறதா இல்ல!எப்படியோ டாக்டரா இருந்து அங்கீகாரம் கிடைக்கலைன்னுதான் நான் சினிமாவுக்கே வந்தேன் என்றார் பவர்.இப்ப கோபிநாத மூலமாக அங்கீகாரம் கிடைச்சாச்சு.இனி அடுத்து நேரா ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி பவர் தான் பவருக்கு!

அங்கே வீடு சுரேஸ்ன்னு ஒருத்தர் மாங்கு மாங்குன்னு யோகநாதன்னு ஒருத்தருக்கு பதிவு போட்டுகிட்டிருக்கார்.முதலில் பதிவர்களை சமூக அக்கறை பதிவுகளா போடச்சொல்லி பதிவுலக பவர்ஸ்டார்களை நாலைந்து கமெண்டிட்டு வாங்க.நான் அப்புறமா வாரேன்.

வவ்வால் said...

ராஜ்,

//இப்ப கோபிநாத மூலமாக அங்கீகாரம் கிடைச்சாச்சு.இனி அடுத்து நேரா ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி பவர் தான் பவருக்கு!
//

விளங்கிடும் நாடு :-))

//பதிவர்களை சமூக அக்கறை பதிவுகளா போடச்சொல்லி பதிவுலக பவர்ஸ்டார்களை நாலைந்து கமெண்டிட்டு வாங்க.நான் அப்புறமா வாரேன்.//


புதுசா சலங்கை கட்டிக்கிட்டு ஆடினா பார்க்க ஜோராத்தான் இருக்கும், இதை எல்லாம் போய் சினிமா, காபி& பேஸ்ட், கில்மா, பதிவு எழுதுறவங்க கிட்டே சொல்லுங்க.


நாம எப்பொழுதும் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையே பதிவிடுகிறோம், உங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியாமல் போய் இருக்கலாம்.


மற்றவர்களை உருப்படியா எழுதுனு சொன்னா , செருப்படி தான் கிடைக்கும் , (அப்படியும் சொல்லி வாங்கிக்கட்டியிருக்கேன்)அதனால நம்மாள முடிஞ்சதை தான் செய்யனும்.

உங்கள் "பார்வையில்" எதுவும் தெரியவில்லை எனில் எதுவும் நடக்கவில்லைனு நினைத்துக்கொண்டால் யார் பொறுப்பு.

ராஜ நடராஜன் said...

சால்மன் மீன் கூட வேகமாக ஓடுற மாதிரி தெரியுதே:)

ஒரு மொக்கை இத்தனை பின்னூட்டம் வாங்குதா!எல்லாம் பவரின் பவர்:)

இதுவே திரட்டில இணைத்திருந்தா போட்ட பின்னூட்டங்கள் சும்மா அதிருமில்ல!பவர் பதிவர்கள் நாலு பேராவது தேறமாட்டாங்க?

கண்ணுல படறதைத்தானே பார்க்க முடியும் சாமி!

ராஜ நடராஜன் said...

சால்மன் மீன் கூட வேகமாக ஓடுற மாதிரி தெரியுதே:)

ஒரு மொக்கை இத்தனை பின்னூட்டம் வாங்குதா!எல்லாம் பவரின் பவர்:)

இதுவே திரட்டில இணைத்திருந்தா போட்ட பின்னூட்டங்கள் சும்மா அதிருமில்ல!பவர் பதிவர்கள் நாலு பேராவது தேறமாட்டாங்க?

கண்ணுல படறதைத்தானே பார்க்க முடியும் சாமி!

வவ்வால் said...

ராஜ்,

சால்மன் மீன் "தண்ணில" இருப்பதால ஓடாது :-))

யார்ப்பா இவரு ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு திரட்டியாம் போலவே பேசிக்கிட்டு, ஒரே விஷயத்தை எத்தன முறை சொல்ல...நான் வேற வாகனத்தில் ஏறியாச்சுன்னு.

கண்டதே காட்சி ...கொண்டதே கோலம்:-))

வேகநரி said...

//தமிழில் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு கோட்டு தேவையா?
அதை விட கொடுமை கோட் ரொம்ப சின்னதா உடம்புக்கு பொருந்தாம உடம்பே பிதுங்கிக்கிட்டு இருக்கும்.வாடகைக்கு கோட் எடுக்கும் போதே கொஞ்சம் பெருசா எடுக்கப்படாதா//
நியாயமான கேள்வி வவ்வால்.

Thuvarakan said...

இப்போதுதான் இந்த பதிவை வாசிக்கிறேன்... பவர் ஸ்டார் பற்றி அறிவதில் எந்த விருப்பமும் இல்லாததால் அந்த நிகழ்ச்சியை இப்போது கூட பார்க்க விரும்பவில்லை....ஆனால் கோபிநாத் ன் பல மேடைப் பேச்சுக்களை கேட்டவன் என்ற முறையில் அவரின் பேச்சுக்களுக்கு காரணம் பல இருக்கலாம்....சிலரை கேள்வி கேட்க சில சந்தற்பங்களே கிடைக்கும்..... கோர்ட் போட்டு பேசுவது தொலைகாட்சி சம்பிரதயங்களிலோன்று..... வெளிப்பேச்சுக்களில் அவர் பெரும்பாலும் அப்படி வருவதில்லை....

தவறுகளிருப்பின் மன்னிக்கவும்.......

துவாரகன் ( www.vtthuvarakan.blogspot.com )