Tuesday, May 01, 2012

INTERACTIVE LEARNING or DISCUSSION





ஒரு கருத்து பரிமாற்றத்தில் ஒருவர்  கருத்து வழங்குபவராகவும் மற்றவர்களும் பெறுபவர்களாக அதாவது கேட்பவர்களாகவும் இருப்பது மரபுவழி கருத்துரையாடல் அதே சமத்தில் கருத்துரைஞர் தானே பேசிக்கொண்டிராமல் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில் பெற்று அதன் மீது விரிவான விளக்கம் அளிப்பது மேலும்  பார்வையாளர்களை கேள்விக்கேட்க தூண்டி அதனடிப்படையில் விளக்கங்களை அளிப்பதும் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடல்  (INTERACTIVE LEARNING or DISCUSSION)எனப்படும் இது தான் தற்போதைய புதிய தலைமுறைக்கற்றல் ஆகும்.

பாரம்பரியமாக நமது கல்விக்கூடங்களில் ஆசிரியர் அவர்ப்பாட்டுக்கு பாடம் சொல்லிப்போவார் மாணவர்கள் கேட்பது ஒன்றே கடமையாக அமர்ந்திருப்பார்கள் ,கேள்விகளோ ,விளக்கங்களோ கேட்டால் அதிக பிரசங்கி ,போன மாதத்தேர்வில் என்ன மார்க் வாங்கின, என்ன ரேங்க் வாங்கின , பேச்சுக்கு மட்டும் குறையில்லை உட்காரு என்று மண்டையில் குட்டுவார்கள். அப்படித்தான் பதிவுகளும் இருக்கு யாரேனும் எழுதுவார் படிப்பவர்கள் நல்லப்பகிர்வு என்று தலையாட்டுவார்கள் ,அதற்கு கருத்துரையாடல் செய்ய முற்பட்டால் உனக்கு எல்லாம் தெரியுமா என ஏவுகணை விடுவார்கள்.

இது போன்ற ஒரு தலைப்பட்சமான கருத்து பரிமாற்றங்களை மாற்ற உத்தேசித்து புரட்சிகரமான ஒரு பதிவினை "INTERACTIVE LEARNING or DISCUSSION" ஆக ஒரு பதிவிட்டேன் அதற்கு பின்னூட்ட பதிவு எனவும் நாமகரணம் சூட்டினேன். ஆனால் மக்களுக்கு INTERACTIVE LEARNING or DISCUSSION என்பதில் இன்னும் சற்று குழப்பம் இருக்கிறது என நினைக்கிறேன் எனவே தெளிவாக விளக்க முனைவர் கவுண்டமணி .டாக்டர் ஆப் சிரிப்பாலஜி அவர்களை கவுரவ விரிவுரையாளராக அழைத்துள்ளேன் அவரது காணொளி மூலம் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடலின்  முழு பரிமாணத்தினையும் விளக்குவார் அதனைக் கண்டு களியுங்கள்!

பங்கேற்பு கற்றல்(அ) கலந்துரையாடல் விளக்கப்படம்:



தமிழ் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட எப்படி எல்லாம் பாடுபடுகிறான் இந்த வவ்வால் என இன்று யாரும் நினைத்துப்பார்க்காமல்  இருக்கலாம் ஆனால் நாளைய சரித்திரம் சொல்லும் "அன்றே வவ்வால் என்றொரு வல்லவன், நல்லவன்" சொன்னான் என"

ஹி...ஹி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை நீ எல்லாம் வல்லவன்,நல்லவானா இதெல்லாம் "கொளுத்துற வெயிலில்  கொரங்கு குல்லா போட்டுக்கிட்டு எவனாவது சூடான டீயா ஊதி ...ஊதிக்குடிச்சுக்கிட்டு இருப்பான்" அவன்க்கிட்டே போய் சொல்லு நம்புவான் ,இங்கே வேணாம் தம்பின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ...ச்சும்மா தமாசு :-))

பின்குறிப்பு: 

#நாம என்ன தான்  விஞ்ஞான ,தத்துவ கருத்து சொன்னாலும் எல்லாத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் வாழைப்பழ காமெடி ஆக்கிடுவாங்க மக்கள் :-))

#படங்கள்,காணொளி கூகிள்,யுடுயுப் ,நன்றி!

*************

11 comments:

குரங்குபெடல் said...

டிவி யில் டாக் ஷோ நடத்துற ஆளுக இதை பார்த்தா

கண்டிப்பா அதையெல்லாம் ஸ்டாப் பண்ணிடுவாங்க . .

நல்ல மாறுபட்ட பார்வை

நன்றி

வவ்வால் said...

குரங்குப்பெடல் ,

குரங்கு பெடல் அடிச்சுக்கிட்டே இவ்வளவு தூரம் வந்ததுக்கு நன்றி!

தொ.கா ஆசாமிங்க இதுக்கு எல்லாம் அசர மாட்டாங்க,விடாம அரைச்ச மாவ அரைப்பாங்க!

Anonymous said...

நீங்க ட்விட்டருக்கு வாங்க...டிஸ்கஸன், இன்டர்ஆக்டிவ் எல்லாம் சூடா பண்ணலாம்...;))))

Anonymous said...

என்ன ஓய் ஐதிங்க்க்

அறிவியல் மேட்டர் எல்லாம் அலுத்து போய் இப்போ அரசியல் சினிமா கவர்ச்சி ன்னு முன்னூட்டம் பின்னூட்டம் எல்லாம் போடுறீர்... நல்ல சரக்கு அடிக்கிரீரா இல்ல எரிசாராயம் கள்ள சாராயம் னு கண்றாவி யா? சரக்குக்கு வேணும்னா ஒரு பதிவு போடும், நிமிடத்துக்கு ஒரு பின்னூட்டம் வரும்... சிலது தள்ளாடவும் செய்யும்.. (நான் சொன்னது திரவநிலையில இருக்கிற சரக்கு.. நீர் வேற ஏதும் குழம்பிட போறீர்)

முரட்டுக்காளை

வவ்வால் said...

புல்ஸ் வாரும் வாரும்,

நலமா,மேய்ச்சல்,பாய்ச்சல் எல்லாம் சரிவர நடக்கிறதா?

எங்கே ஓய் உம்ம தலையே காணோம் கொஞ்ச நாளா ,எதாவது வங்கியில் தலையை அடகு வைத்து விட்டீரா :-))

பொலிட்டிகல் சயின்ஸ், சோசியல் சயின்ஸ் எல்லாம் கேள்விப்பட்டது இல்லையா ? நாம் ஒரு வலையுலக விஞ்ஞானி எல்லாவற்றையும் அறிவியல் கண் கொண்டு தான் பார்ப்போம் :-))

இது பரவாயில்லை சுவாமி சிலர் கானாசூத்ரா, குர்ரான் எல்லாம் அறிவியல்னு சொல்லி ஜல்லியடிக்கிறாங்க அந்த கொடுமையை என்னான்னு சொல்வேன் :-))

அடுத்தது தலால் ஸ்ட்ரீட் க்கு ஆப்பு வைக்க ஒரு மேட்டர் ரெடி செய்திருக்கேன், அது மட்டும் வரட்டும் இந்தியாவில் ஆக்குபை தலால் ஸ்ட்ரீட் நடக்கும் சுவாமி!

அப்போ இந்த முரட்டுக்காளை எங்கே ஓடும்னு பார்க்கிறேன் :-))

ஓய் மோந்து பார்க்கிறது, மூடில ஊத்திக்குடிக்கிற உமக்கு என்ன சரக்க பத்தி கவலை ...தனி ஒருவனுக்கு நல்ல சரக்கு கிடைக்கவில்லை எனில் டாஸ்மாக்கை அழித்திடுவோம்னு குடிமகன்களுக்காக குரல் கொடுக்க என்னை விட்டால் யார் இருக்கா?

புதுவை என்று ஒரு பிரதேசம் இல்லை எனில் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து போயிருப்பேன் ஆனால் அதற்கும் சோதனையாக அங்கும் விலையேற்றிவிட்டார்கள் ,என்ன கொடுமை சார் இது !

சாக்கு பத்தி பதிவு போட ஏகப்பட்ட சரக்கு கைவசம் இருக்கு ஆனால் சிலப்பேர் என்னை ரொம்ம்ப்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க அதான் சும்மா இருக்கேன் :-))

சுறா பானம்,சோம பானம் கண்டுப்பிடிக்க சூத்திரம் வகுத்த தமிழ்குடிமகன் பரம்பரை வழி வந்த நான் குழம்புவதா..."நெவெர் சே நெவெர் அகெய்ன் "

வவ்வால் said...

பீர்,

நானும் துவித்தர் வரலாம்னு பார்க்கிறேன் ,கால நேரக்கோளாறுகள் சுத்தியடிக்குது.பார்ப்போம் எப்படியும் அந்த பக்கம் வந்துவிடுவேன் ஆனால் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்க்கே தெரியாது :-))

ராஜ நடராஜன் said...

அந்த சிவப்பு எழுத்து குரங்கு குல்லாய்க்கு என்ன அர்த்தம்?ஏன் எல்லோரும் குரங்கு குல்லாயென்றே அழைக்கிறார்கள்?

இந்தா ஒருத்தரு குரங்கு பெடல் போட்டுகிட்டே வந்து நிக்கிறார்:)

கவுண்டமணி,செந்தில் வீடியோவுக்குள்ள போகவேயில்லை.அதுதான் இன்னொரு வாழைப்பழம்.

பீர் கொடுத்தா துவித்தர் போயிடுவீங்களாக்கும்!நாலே நாலு வரில கருத்து சொல்றது நடக்கிற காரியமா:)என்னால முடியல!மீனவர் பிரச்சினைக்கு அப்புறம் திரும்ப ஒடியாந்துட்டேன்.

அதென்ன நைன பாசை பேசுறீங்க இரண்டு பேரும்.சரக்குல கூட ரெண்டு சரக்கு இருக்குதா?கத்துக்க வேண்டியது நிறையா இருக்கும் போல தெரியுதே:)

வவ்!சுறா பானம்,சோம பான பரம்பரையின் வாரிசே!நீர் போற்றி!நீர் நடந்த நிலம் போற்றின்னு கூட பாடலாம்.என்னை தண்ணியில்லாத காட்டுல தள்ளி விட்டாலும் கூட சோம பானம் பற்றிய புரிதல் நன்றாகவே இருக்கிறது.ஜெயகாந்தன் எப்படி குடிப்பது என்பதற்காகவே விருந்துகளில் குடிக்கிறேன் எனறு சொன்னது நினைவு வருகிறது.விதி விலக்காக உங்களைப் போல் சிலர் இருக்கலாம்.மது அருந்தும் கலை பற்றி தமிழகத்தில் நிறைய பேர் அறிந்து வைக்காமலே இருப்பதால் டாஸ்மாக் தமிழகத்துக்கு தேவையில்லையென்றே கருதுகிறேன்.எனி தலைகீழ் ஆர்க்யுமெண்ட்:)

நெவர் சே நெவர் எகெய்ன் ரொம்ப பழைய படமாச்சே!

வவ்வால் said...

ராஜ்,

அதெல்லாம் ஒரு ஃப்ளோல சொல்றது அர்த்தம் கேட்டுக்கிட்டு ,சரி எவ்வளோவோ செய்துட்டோம் இத செய்ய மாட்டோமா செய்வோம், வெயில்ல டீ குடிச்சாலே வேர்க்கும் ,இதுல குரங்கு குல்லா வேற போட்டுக்கிட்டா...எப்படி இருக்கும்...கேணத்தனமா செய்றத சொன்னேன்.

அந்த குல்லா போடுக்கிட்டு குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பாருங்க ஒரு குரங்கு லுக் கிடைக்கும் அதான் குரங்கு குல்லானு பேரு வந்துச்சசு :-))

நானெல்லாம் குல்லா போடாமலே அந்த லுக்கு தான் :-))
-----
குரங்கு பெடல் இன்னும் வளரலை போல கால் எட்டலை ... காம்ப்ளான் குடிச்க சொல்லுங்க!
----
ஹி..ஹி நானும் நாலு வரில என்னத்த சொல்லணு தான் இன்னும் போகாம இருக்கேன்...நான் மேட்டருக்குள்ள போகவெ நாலுவரிக்கு மேல ஆகிடும் :-))

வீட்டுப்பாடம் போல பிவிட்டர்னு செய்து பார்த்தேன்...ஒரு நம்பிக்கை வெளிச்சம் தெரிஞ்சது !பார்ப்போம்.
----
அவர் உண்மைல நைனா தான் யாஹு நைனா... நம்ம தோஸ்த் தான்...என்ன கலாய்க்கிறது அவரது லட்சியமாம்...ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகலை.

அப்படியே ஒர் வெண்பா என் மீது பாடி தமிழ் இலக்கியத்தில் இடம் பெற செய்திடுங்க :-))

உங்களுக்கு ஒரு 1/4, கோழி பிரியாணி உண்டு!
ஜெயகாந்தனுக்கு சரக்கு அடிக்க ஆசை அதுக்கு ஒரு பொயட்டிக்கா ஒரு காரணம் சொல்லிக்கிறார் என்ன இருந்தாலும் படைப்பாளி அல்லவா.

நீங்க வேற தமிழ் நாட்டு மக்களுக்கு சரக்கடிக்க தெரியலை எதுக்கு டாஸ்மாக்குனு சொன்னது அம்மா காதுல விழுந்துது அப்புறம் டாஸ்மாக் பாரில் பயிற்சி வகுப்பும் துவங்கி அதுக்கு தனியா காசு வாங்கிடுவாங்க :-))

தமிழ் நாட்ட நம்பெர் ஒன் ஆக்க இதெல்லாம் செய்ய வேண்டாமானு கேட்பாங்க...ஹி..ஹி நல்ல சரக்கும்,சம்பளமும் கிடைத்தால் நானும் பயிற்சியாளார போயிடுவேன்...நம்ம திறமைக்கு அங்கே தலமை பயிற்சியாளாராவே போகலாம் :-))

பழைய படத்த தானே இப்போ எல்லம் புது கலர் அடிச்சு ஓட்டுறாங்க :-))

Graybvru said...

டிவி யில் டாக் ஷோ நடத்துற ஆளுக இதை பார்த்தா கண்டிப்பா அதையெல்லாம் ஸ்டாப் பண்ணிடுவாங்க . . நல்ல மாறுபட்ட பார்வை நன்றி

Rudxlss said...

என்ன ஓய் ஐதிங்க்க் அறிவியல் மேட்டர் எல்லாம் அலுத்து போய் இப்போ அரசியல் சினிமா கவர்ச்சி ன்னு முன்னூட்டம் பின்னூட்டம் எல்லாம் போடுறீர்... நல்ல சரக்கு அடிக்கிரீரா இல்ல எரிசாராயம் கள்ள சாராயம் னு கண்றாவி யா? சரக்குக்கு வேணும்னா ஒரு பதிவு போடும், நிமிடத்துக்கு ஒரு பின்னூட்டம் வரும்... சிலது தள்ளாடவும் செய்யும்.. (நான் சொன்னது திரவநிலையில இருக்கிற சரக்கு.. நீர் வேற ஏதும் குழம்பிட போறீர்) முரட்டுக்காளை

Millersijg said...

பீர், நானும் துவித்தர் வரலாம்னு பார்க்கிறேன் ,கால நேரக்கோளாறுகள் சுத்தியடிக்குது.பார்ப்போம் எப்படியும் அந்த பக்கம் வந்துவிடுவேன் ஆனால் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்க்கே தெரியாது :-))