Wednesday, August 22, 2012

அஃதே,இஃதே-2 :சென்னை தினம்,பாலகுமாரன், விளக்கடுப்பு,ரஜினி.



மதராஸப்பட்டிணம்.

நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அந்நாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.

மேற்கொண்டுப்படிக்க செல்லவும்...


ஹி..ஹி சென்னை தினத்திற்கு தனியே பதிவு போட கொஞ்சம் சோம்பல் எனவே முன்னர் போட்ட பதிவுக்கு ஒரு விளம்பரம் :-))
********

பிடித்தால் படியுங்கள்:பாலகுமாரன் வலைப்பதிவு.



எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு காலத்தில் இதயம்பேசுகிறது, குங்குமச்சிமிழ், பாக்கெட் நாவல்,மாலைமதி போன்ற பத்திரிக்கைகள் மற்றும் மாத நாவல் புத்தகங்களின் அமுத சுரபியாக ,காதலும் வாழ்வும் கலந்த நாவல்களையும், அவ்வப்போது உடையார் என சரித்திரமும் எழுதி , சுஜாதா போன்ற அறிவியல் கலந்து எழுதும் ஜனரஞ்சகமான எழுத்தாளார்களுக்கு ஈடுக்கொடுத்து ஓடிய இரும்பு எழுத்துக்குதிரை.

அவரது இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள்,பயணிகள் கவனிக்கவும் போன்ற நாவல்களை படித்து அடடா என வியந்த விவரம் அறியாக்காலம் எல்லாம் கடந்து விட்டாலும் இன்றும் படிக்க தகுதியான நாவல்களே.

அவரது அனுபவங்களை தொகுத்து "பாலகுமாரன் பேசுகிறார்" என்ற பெயரில் வலைப்பதிவாக அவரது அனுமதியுடன் ஒரு வாசகர் வெளியிட்டுக்கொண்டிருந்தார் தற்சமயம் புதிதாக எதுவும் அதில் காணக்கிடைக்கவில்லை என்றாலும், பழையப்பதிவுகளே படிக்க சுவாரசியமாக இருக்கின்றன, ஆன்மீக கேள்விப்பதில்,சினிமா, அவரது எழுத்தனுபவம் என நிறையக்காணக்கிடைக்கிறது. தற்சமயம் அமரர்.யோகி.ராம்சுரத்குமார் (விசிறி சாமியார்) அவர்களின் சீடராக முழுக்க ஆன்மீகத்தில் பாலகுமாரன் அவர்கள் மூழ்கிவிட்டார் ,புதிதாக படைப்புகள் எதுவும் எழுதுவதில்லை.

தனக்கு கதை எழுத சொல்லித்தந்ததே சுஜாதா தான் என தன்னை அவரின் சீடர் என வெளிப்படையாக ஒருப்பதிவில் பகிர்ந்திருக்கிறார்

மேலும் படிக்க செல்லவும் ...

தற்சமயம் தமிழ்மணம் போன்ற பிரபலதிரட்டிகளில் குப்பையான பதிவுகளே இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால், இது போன்ற சுவாரசியமான பதிவுகள் பழைய சரக்காக இருந்தாலும் ஆயிரம் மடங்கு மேல் எனவே வாசித்து தான் பாருங்களேன்!

********

ஒளிமயமான எதிர்காலம்.



மகாராஷ்டிராவில் Phaltan என்ற இடத்தில் உள்ள Nimbkar Agricultural Research Institute (NARI) என்ற தன்னார்வ அமைப்பு கிராமப்புற இந்தியாவிற்கு தேவையான விவசாயம், சுகாதாரம்,மாற்று எரிப்பொருள் என பல வகையிலும் ஆய்வுகள் செய்து புதிய கண்டுப்பிடிப்புகளையும், முறைகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு செலவில்லா/குறைவான செலவில் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்ய உதவி வருகிறது.

அவ்வமைப்பினை சேர்ந்த பொறியாளார் -கண்டுப்பிடிப்பாளர் அனில் ராஜ்வன்ஷி புதிதாக ஒளிக்கொடுக்கும் அதே சமயத்தில் சமைக்கவும் பயன்ப்படும் அடுப்பு என ஒரு மண்ணெண்ணை விளக்கினை கண்டுப்பிடித்துள்ளார்.

கவுண்டமணிப்புகழ் பெட்ரோமாக்ஸ் விளக்கே தான் ஆனால் அதன் மேல் புறம் வெளியேறும் வெப்பத்தினை பயன்ப்படுத்தும் "வெப்பக்கடத்தியை" அமைத்து அதன் மூலம் அடுப்பாக சமைக்கவும் பயன்ப்படுத்துமாறு "விளக்கடுப்பு"(lanstove' (lantern combined with cook stove)வடிவமைத்துள்ளார்கள்.எனவே மின்சாரம் ,கேஸ் என இல்லாதவர்கள் வீட்டில் விளக்கெறியும் போதே சமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் நிறைய மீதம் ஆகும், கிராமப்புற மக்களுக்கு செலவும் குறையும்.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள மின் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் விலை எப்போது வேண்டுமானாலும் ஏற்றப்படலாம் எனும் நிலையைக்காணும் பொழுது நாமும் ஒரு "விளக்கடுப்பு" வாங்கி வைத்துக்கொள்வது லாபகரமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

*******

பாட்டொன்று கேட்டேன்.



மீண்டும் ரியல் தல "சூப்பர் ஸ்டாரின்'" எளிமையான நடனத்துடன் ,எப்பொழுதும் அசத்தும் ஒரு பாடலின் காணொளி.இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் இப்பாடல் இடம்ப்பெற்றுள்ளது.


-----------------------

பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,யூடியூப், cnn-ibn news. இணைய தளங்கள் நன்றி!

*******


18 comments:

Katz said...

//தற்சமயம் தமிழ்மணம் போன்ற பிரபலதிரட்டிகளில் குப்பையான பதிவுகளே இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால், இது போன்ற சுவாரசியமான பதிவுகள் பழைய சரக்காக இருந்தாலும் ஆயிரம் மடங்கு மேல் எனவே வாசித்து தான் பாருங்களேன்!//

இது போல உண்மையை எழுதி கொண்டிருந்தால், கமென்ட்டோ லைக்கோ எதுவும் வராது. ;-)

வவ்வால் said...

Katz,

வாங்க,நன்றி!

எப்போவாது தான் நம்ம பக்கம் வரிங்க ,வரும் போதே இப்புடி மிரட்டினா அவ்வ்!

உண்மை தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் என் மண்டை சுக்கு ,இஞ்சி ,மிளகு நூறாக வெடிச்சிடும்னு சாபம் எனக்கு இருக்கும் போல ,அடிக்கடி இப்படி மனசாட்சி கொப்பளிச்சு ,குமுறி உண்மையை சொல்லிடுது :-))

கமெண்ட், லைக்குகள் எல்லாம் வாங்கி அடையார் போட் ஹவுசில் வீடு வாங்கலாம்னா நானும் ஆட்டத்துக்கு ரெடி :-))

கோவை நேரம் said...

சீக்கிரம் ஆட்டத்த ஆரம்பிங்க....தல....இருந்து கை தட்டி விசில் அடிச்சு உற்சாக படுத்றோம்...
உங்க பதிவு சுவாரசியம்னா உங்களுக்கு வர்ற கமெண்ட் , பதில் அளிக்கிற விதம் அதைவிட சுவாரஸ்யம்...

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தொகுப்பு! அருமை! பாலகுமாரனைப்பற்றியும் வலைப்பூ பற்றியும்,சென்னை தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல் என சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் நன்றி!

இன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

குட்டிபிசாசு said...

செந்தில்: அண்ணே! அண்ணே!
…இந்த விளக்கடுப்பு எப்படிண்ணே எரியுது!

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் குப்பையில பிராண்டி விளையாடிட்டு வந்தீங்க போல இருக்குதே:)

பாலகுமாரன்,ஜெயகாந்தன் போன்றவர்கள் ஒரு கட்டத்திற்கு பின் ஆன்மீகம் சார்ந்து எழுதாமல் போவதன் காரணம் என்ன?வயது சார்ந்த மரண பயமா?

இந்த விதத்தில் சுஜாதா,வாலி போன்றவர்களை பாராட்டலாம்.

ராஜ நடராஜன் said...

கொத்துப் பரோட்டா,இட்லி,வடை,சாம்பார்,வடகறின்னு தலைப்பு வெச்சு எழுதும் பதிவுகளை விட உங்க தலைப்பு நல்லாவே இருக்குது:)

வவ்வால் said...

கோவை ஜீவா,

வாங்க நண்பா,நன்றி!

ஆக மொத்தம் ஒரு முடிவோட கிளம்பி இருக்கிங்க, இப்படி சொல்லி உசுப்பேத்திவிட்டு போயிடுங்க, நானும் பிராபல்யப்பதிவராக ஆகிடணும்னு ஆசையில் தினம் 3 பதிவு போட்டு கடைசியில எழுத சரக்கு இல்லாமல் கோழி முட்டைப்போட்டது ,காக்கா கூவியது ??!! என "அனுபவப்பதிவா" எழுதி எல்லாரையும் கொலையா கொன்னுக்கிட்டு இருக்கவா :-))

பதிவு மட்டும் சுவாரசியம்னு சொல்லாமல் பின்னூட்டமும்(அதானே நம்ம ஏரியாவே சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட மாட்டோம்) சுவாரசியம்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் சாதா நன்றி!

----------
சுரேஷ்,

வாங்க,நன்றி!

ஊக்கத்திற்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி!
--------

குட்டிபிசாசு,

வாங்க,நன்றி!

ஹி..ஹி என்னை கவுண்டமணியாவே ஆக்கிட்டிங்கலே, சரி கவுண்டர் ஸ்டைலில் சொல்லிடுவோம்.

//செந்தில்: அண்ணே! அண்ணே!
…இந்த விளக்கடுப்பு எப்படிண்ணே எரியுது! //

ஆல் இன் ஆல் வவ்வால்மணி: டேய் மண்டையா அப்படிக்கேளு, நான் ஒரு சிற்பி மாதிரி ,தட்டி தட்டியே வீல் பெண்ட் எடுப்பேனாக்கும்,

செந்தில்: அதெல்லாம் இருக்கட்டும்ணே ,இது எப்படி எரியுதுன்னு சொல்லுங்கண்ணே...

ஆல் இன் ஆல் வவ்வால்மணி: டேய் பேரிக்காய் மண்டையா, இதோ அடியில வெள்ளையா கோழி முட்டை மாதிரி இருக்கே இதுக்கு பேரு தான் "மேண்டில்' , டேங்கில மண்ணெண்னை ஊத்திட்டு பம்ப் அடிச்சு பத்த வச்சா நல்லா வெளிச்சமா எரியும்,அப்போ சூடா காத்தும் வரும் அதை குழாயில மேல கொண்டு போய் ஹீட் எக்ஸ்சேஞ்சர் வழியா விட்டு தோசைக்கல்லை சூடாக்கி தோசை சுடலாம் , எதாச்சும் புரிஞ்சுதா கொப்பரை வாயா?(புரிஞ்சிட்டாலும் ,சொன்ன எனக்கே புரியலை :-)))

செந்தில்: அண்ணே இதாண்ணே அப்படி வெளிச்சமா எரியுது ,அதுல தோசை வேற சுடலாம்னு சொல்றிங்க ...போங்கண்ணே நீங்க பொய் சொல்லுறிங்க...(கையால் மேண்டிலை அமுக்கி உடைச்சுடுறார்)

ஆல் இன் ஆல்:டேய் ஆமை வாயா உன்னை...

(குட்டிப்பிசாசு கமிங்)

குட்டிப்பிசாசு: ஏண்ணே இங்கே ஆல் இன் ஆல் வவ்வால் மணியாருண்ணே...

ஆல் இன் ஆல்: ஏன் ? நான் தேன்.

குட்டிப்பிசாசு: எங்க வீட்டுல கேசு தீர்ந்துப்போச்சு, கரண்டும் கட்டு, உங்க கிட்டே விளக்கடுப்பு இருக்குன்னு சொன்னாங்க ,சமைக்க வாடகைக்கு வேணும்,

ஆல் இன் ஆல்: விளக்கடுப்பே தான் வேணுமா, ஏன் விறகு, வறட்டி ,கும்ப்டி அடுப்பெல்லாம் வச்சு சமைக்க முடியாதா...

குட்டிப்பிசாசு: ஆங் ,அதெல்லாம் முடியாது,எனக்கு விளக்கடுப்பு தான் வேணும்...

ஆல் இன் ஆல்: குட்டிப்பிசாசுன்னு பேரு வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் விளக்கடுப்பு தரமுடியாது...வந்துட்டாங்கய்யா குட்டிப்பிசாசுனு பேரு வச்சுக்கிட்டு விளக்கடுப்பு வாங்க, ஏன் ஜெகன்மோஹினி பேய்ய் போல காலை அடுப்புல விட்டு சமைக்கிறது ...:-))

(டேய்ய் தார் டின் தலையா உன்னை கொளுத்திட்டு தான் மறு வேலை... என செந்திலை தொறத்துகிறார்)

----------------
ராஜ நடராஜர்,

வாங்க,நன்றி!

குப்பையை கோழி கிண்டினால் தான் ஆகாரம் கிடைக்கும், வவ்வால் கிண்டினால் பலகாரம் கிடைக்குமா?

சுஜாதா எல்லாம் ரொம்ப காலம்ம் முன்னரே நாவல் எழுதுவதை விட்டு பத்தி எழுத்தாளர் ஆகிவிட்டார், ராமானுஜரின் நூலுக்கு பாஷ்யம் எழுத ஆரம்பித்து முடிக்கவில்லை, வாலி எல்லாம் எப்போதோ ஆன்மிகத்தில் தானே இருக்கார்..

அஃதே..அஃதே!
-----------

தி.தமிழ் இளங்கோ said...

வவ்வால் சார்! “ மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் “ என்று விவரமாக உங்கள் பாணியில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். சுருக்கமாக முடித்து விட்டீர்களே?

வவ்வால் said...

தி.தமிழ் இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

சென்னை தினம் முன்னர் போட்ட பதிவு, அதற்கான சுட்டியில் போய்ப்பார்த்தீர்களா, முழு விவரமும் இருக்கும்.

முன்னரே போட்டாச்சேன்னு இப்போ புதுசா பதிவுப்போடலை.

அஞ்சா சிங்கம் said...

என்னது சென்னைக்கு பிறந்தநாளா .? அப்பாட இன்னைக்கு காரணம் கெடச்சிருச்சு .....
சியர்ஸ் ஹாப்பி பர்த்டே டூ யு ........................

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

ஆனாலும் இம்புட்டு சுறு சுறுப்பு ஆகாது சாமி, நேத்து தான் சென்னைக்கு பொறந்த தினம், சரி ஒரு நாள் லேட்டா ஆனாலும் லேட்டஸ்டா சொன்னதா எடுத்துப்போம், ச்சியர்ஸ்!

hi...hi கறுப்பு எம்சிஆருக்கு வர்ர 25 ஆம் தேதி பொறந்த தினமாம் ,மறக்காம டைம்க்கு சியர்ஸ் சொல்லிடுவோமா :-))

நாய் நக்ஸ் said...

வவ்வால் வாங்க...ஆடு சிக்கிக்கிச்சி...
மனிதாபிமானி போஸ்ட்-க்கு உடனே வாங்க...

இன்னிக்கு எல்லாத்தையும் சமைச்சிடலாம்...
உங்களுக்கு வேற பதில் சொல்லி இருக்கார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஆஷிக்...

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

கொஞ்சம் லேட் ஆகிடுச்சு எல்லாம் கமெண்ட் மாடரேஷன் வச்சு பட்டியை குளோஸ் செய்துட்டு போயிட்டாங்க.

அடுத்த கெடா வெட்டுக்கு பாத்துக்கலாம்.

ச்சியர்ஸ்!

குறும்பன் said...

பாலகுமாரன் முன்னர் பறவை மொழியையும் அறிந்த பீடி குடிக்கும் சாமியார் பக்தராகவும் இருந்தார் என நினைக்கிறேன். விலைகுறைந்த குக்கர் ஒன்னு கூட கண்டுபிடிச்சாங்க, அது பற்றி இப்ப தெரியலை.

ராஜ நடராஜன் said...

இங்கே கூட்டம் சேரலன்னு ஊர் சுத்தப் போய்ட்டீங்க போல இருக்குதே!பல கடைகளும் கல்லா கட்டுற மாதிரி தெரிகிறதே:)

சமுத்ரா said...

வவ்வால், பல்சுவைப் பதிவு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

உங்கள் பின்னூட்டங்களை நிறைய ப்ளாக்-களில் படித்திருக்கிறேன்.
அந்த ஆளுமை உங்கள் பதிவுகளில் கொஞ்சம் குறைவதாக தோன்றுகிறது.
sounds little immature
. எனிவே, பின்னூட்டம் போடுவது சுலபம். யோசித்து எழுதுவது கஷ்டம் என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு suggestion , என்ன சொல்லியிருக்கிறோம் என்பதை தலைப்பிலேயே போடாதீர்கள். பதிவைப் படிப்பவர்களுக்கு ஒரு சின்ன சஸ்பென்ஸ் இருக்க வேண்டும். மேலும் , வீடியோக்களை பதிவில் இணைப்பதைக் குறையுங்கள்.
it looks traditional ..எல்லாரும் அதையே செய்கிறார்கள்.

இன்னும் அஃதே இஃதே creative ஆக எழுதுங்கள்.முடிந்தவரை செய்திகளை சொல்வதைத்
தவிர்க்கவும். சில பேர் கதம்பம் என்று பெயர் கொடுத்து விட்டு அன்று செய்தித்தாளில்
வந்துள்ளவைகளை அப்படியே சொல்வார்கள். அதற்கு பேப்பரே படித்துக் கொள்ளலாமே?

//குப்பையான பதிவுகளே இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால்,//
எதுவும் குப்பை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. திறமையான வாசகன் குப்பையிலிருந்தும்
கூட ஏதாவது கற்றுக் கொள்வான்.

வவ்வால் said...

சமுத்ரா,

வாங்க,நன்றி!

வாழ்த்துக்கு மிக்க நன்றி!

//. எனிவே, பின்னூட்டம் போடுவது சுலபம். யோசித்து எழுதுவது கஷ்டம் என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//

உண்மையத்தான் சொல்லி இருக்கீங்க, இதை நானே பல இடங்களில் சொல்லி இருக்கிறேன், எனக்கு பதிவு எழுத சோம்பல்னு.2006 இல் அனானியா கமெண்ட் போட சிலர் விடலைனு பிளாக் ஆரம்பிச்ச ஆளு நான் :-))

பின்னூட்டம் போடும் போது ஒரு லீட் பதிவில் இருந்து கிடைக்குது அதை வைத்து என்னோட நினைவு தூண்டப்படுது "like a brain storming" எனவே எனக்கு எளிதாக வருகிறது.

நல்லப்பதிவுன்னா நல்லக்கமெண்ட் வரும், மோசமா பேசினால் மோசமா வரும், எல்லாம் நான் படிக்கும் பதிவைப்பொறுத்து.

நீங்க சொன்னது போல சொல்லாமல் இருக்கலாம், மேல கமெண்ட் போட்டு இருக்காரே அவரு புதுசா பதிவு போட்டாலும் என்ன மீள்பதிவா என்கிறார்?

இதுவாவது பரவாயில்லை போனவாரம் இவரா 2007க்கு போய் ஒருப்பதிவைப்படிச்சிட்டு ஏன் மீள்ப்பதிவு போட்டிங்கன்னு கேட்டு வச்சிருக்கார் :-((

அதை வேற எனக்கு குறிப்பால் உணர்த்துறார் :-))

செய்தித்தாளில் இருந்து செய்திப்போட்டால் அதனை அலசுவேன்,மேலும் தெகல்கா,சிஎன்.என் , போன்ற தமிழில் அதிகம் படிக்காத செய்திகளை தரலாம் என நினைப்பேன்.

வீடியோ சும்மா கேப் ஃபில் செய்ய.

கிரியேட்டிவ்வா கதை தான் எழுதனும்,மற்றப்படி மக்கள் அதிகம் கண்டுக்கொள்ளாமல் விட்ட, மேலும் தெரியாத செய்திகளை பகிர நினைக்கிறேன்.

நான் சொன்ன குப்பை வேறு மதக்குப்பை, மற்றும் சினிமா கிசு கிசு குப்பைகள்.

குப்பையில் இருந்து மின்சாரம்,எத்தனால் தயாரிப்பது போல் நல்ல விஷயமும் எடுக்கலாம்னு சொல்லுறிங்க ,நானும் எடுத்துக்கிட்டு தான் இருக்கேன்,அதையே படிச்சு போர் அடிக்காம இருக்க மாற்று வேண்டுமில்லையா,அதை சொன்னேன்.

நன்றி!