dotEPUB

Friday, August 10, 2012

காட்டுப்பொறியின் கோக்கோ மர வளர்ப்பு திட்டம்.(cocoa tree project)


ரொம்ப நாளா மக்களை கோடிஸ்வரன் ஆக்கும் பெரும் லட்சியத்துடன் இயங்கி வந்த ஈமு கோழி வளர்ப்பு குபேரத்திட்டம் திடீர் என சிக்குன் குனியா வந்தாப்போல சமீபத்தில சுருண்டுக்கொண்டதை செய்திகளிலும், வலைப்பதிவுகளிலும் படித்திருப்பீர்கள்.

இந்த ஈமு திட்டம் வந்தப்போ எல்லாருமே அற்புத பணம் கொட்டும் திட்டம் என்றே சொல்லி வந்தார்கள், ஊடகங்களும் போட்டிப்போட்டு பிரபலப்படுத்தின, நவீன வேளாண்மை, வளரும் வேளாண்மை, நீங்களும் செய்யலாம் ஏற்றுமதின்னு டிசைன் டிசைனா பேருக்கொண்ட பத்திரிக்கைகள் "கவர்" வாங்கிக்கொண்டு பிரமாதமான கவர் ஸ்டோரிகளை எழுதித்தள்ளின.

ஓய்வூதியம் பெற்ற திரை விண்மீன்கள் முக்கால் இஞ்ச் மேக்கப்பில் கூசாமல் பொய்களை அள்ளிவீசி ஆளை சுண்டி இழுத்தார்கள். பீப்பிள் தொலைக்காட்சி எல்லாம் விளம்பரம்னே தெரியாத வகையில் செயல் முறை விளக்கம் போல நிகழ்ச்சிகளை நடத்தின.

இப்போ குமிழி உடைந்து , முதல் போட்டவர்கள் மூலையில் உட்கார்ந்து விட்டத்தினை வெறித்துக்கொன்டிருக்கிறார்கள். ஊடகங்களும் பதிவர்களும் கடசியில் தான் கொஞ்சம் விழித்துக்கொண்டு உண்மையை எழுதினார்கள்,ஆனால் அதற்குள் தலைக்கு மேல் வெள்ளம் போயாச்சு.

சரி இதெல்லாம் தெரியும் இப்போ என்னாத்துக்கு இந்த இழுவைன்னு கொந்தளிக்காதீங்க, அடுத்து ஒரு சமாச்சாரம் வருது இருங்க.

அதே போல விவசாயிகளை கோடிஸ்வரன் ஆக்கியே தீர்வது என இன்னொரு திட்டம் ஓடிக்கிட்டு இருக்கு, அதைப்பற்றி பார்க்கலாம்.

முன் எச்சரிக்கை:

இப்போது சொல்லப்போகும் திட்டம் ஈமு போல இழுத்து மூடும் திட்டமாகவும் இருக்கலாம்,அல்லது அள்ளிக்கொடுக்கும் அட்சயப்பாத்திரமாகவும் இருக்கலாம், ஆனால் என்ன நடக்கும் என தற்போது தெரியாத ஒரு திட்டம், வருங்காலமே பதில் அளிக்க முடியும்,ஆனாலும் ஈமு பார்த்த பின் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதாலே ஒரு விழிப்புணர்வு நோக்கில் ஒருப்பதிவு. எனவே ஒரு நல்ல திட்டத்தினை குறை சொல்லிவிட்டேன் என யாரும் நினைக்க வேண்டாம்.ஏன் எனில் சந்தேகிக்க ஏராளமான சாத்தியங்கள் உள்ள ஒரு திட்டமே இப்போது நாம் பார்க்கப்போவது.

காட்டுப்பொறியின் கோக்கோ மரம்:
(கோகோ பழம்-பாட்)

நமக்கு வழக்கமாகவே வேளாண்மை மீது ஒரு ஈடுபாடு உண்டென்பதால் தூர்தர்ஷனின் வயலும் வாழ்வும் கூட அவ்வப்போது பார்த்து ரசிப்பதுண்டு(என்ன ஒரு ரசனைனு நினைக்காதிங்கோ) அதே போல தனியார் தொலைக்காட்சிகளில்" பீப்பிள் தொலைக்காட்சி" நிறைய பசுமையான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதால் அதனையும் முன்னர் சில காலம் பார்த்து வைத்தேன் ,அப்போது கண்ணில் சிக்கியதை இப்போ எடுத்து விடுகிறேன்.

பீப்பிள் தொலைக்காட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவது ஒரு நல்ல விடயம் என்றாலும் அவற்றில் பெரும்பாலும் தனியார் நிகழ்ச்சிகளே. சமூக நோக்கில் ஒளிப்பரப்புவது போன்று செயல் முறை நிகழ்ச்சியாக ஒளிப்பரப்ப படுகிறது. நிகழ்ச்சி துவங்கும் முன் இது ஒரு விளம்பரத்தாரர் நிகழ்ச்சி என்று போட்டு விடுவதன் மூலம் கம்பெனி பின் விளைவுகளுக்கு பொறுப்பாகாது என்று போடுவது கேள்விக்குறியை உண்டாக்குகிறது.

அப்படியான விளம்பர தாரர் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாவது மலரும் எர்த் என்ற நிகழ்சியாகும் இதில் பெரும்பாலும் ஈமு போன்ற குபேர முதலீட்டு திட்டங்களை விளம்பரம் என்றே தெரியாதவாறு ஒளிப்பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அதில் இப்போதெல்லாம் அடிக்கடி வருது தான் "காட்டுப்பொறியின் கோக்கோ மர வளர்ப்பு திட்டம்" ஆகும்.

கோகோ எனப்பொதுவாக அழைக்கப்படும் "Theobroma cacao also cacao tree and cocoa tree" எனப்படும் மரம் ஒரு தோட்டப்பயிர் ஆகும், தென் அமெரிக்காவினை தாயகமாக கொண்டது , நாடுக்கண்டுப்பிடிக்கப்போன "கிரிஸ்டோபர் கொலம்பஸால்" தென் அமெரிக்காவில் கண்டு அறியப்பட்டு உலக நாடுகளுக்கு அறிமுகமானது. பின்னர் ஸ்பானியர்கள் பெருவை பிடித்து ஆள முட்படும் போது ஐரோப்பியாவில் பயிரிட எடுத்து வந்து இப்போது உலகில் பல இடங்களில் பயிராகிறது.

கோகோ மரத்தின் பழங்களின் கொட்டைகளில் இருந்து தான் சாக்கலேட்டின் மூலப்பொருள் கிடைக்கிறது, மேலும் கோகோ கோலா குளிர்ப்பானத்திலும் பயன்ப்படுத்தப்படுகிறது.
(கோக்கோ கொட்டைகள்)

கோகோ கொட்டையில் இருக்கும் தியோபுரோமைன் என்ற அல்கலாய்டே சுவைக்கு காரணம், அது காபியில் உள்ள காபினுக்கு இணையானது.

சாக்கலேட் கோகோ அல்லாமல் இன்னொரு வகையில் இருந்து தான் உலகப்புகழ்ப்பெற்ற கோகைன் என்ற போதைமருந்தும் தயாரிக்கப்படுகிறது.

வரலாறுப்போதும் , நம்ம நாட்டில் என்ன நடக்கிறது எனப்பார்ப்போம்.

(கோக்கோ பவுடர்)

நம் நாட்டில் சாக்கலேட் தயாரிக்க பெரும்பாலும் இறக்குமதி கோகோவே பயன்ப்படுகிறது, இறக்குமதியை குறைக்க உள்நாட்டில் சாகுபடி செய்யலாம் என 1970 முதல் இந்திய தோட்டக்கலை துறையால் ஊக்குவிக்கப்பட்டு பயிரிடப்படுகிறது.

கேரளா, மற்றும் கர்நாடகா கோகோ சாகுபடியில் முன்னணியில் உள்ள் மாநிலங்கள் ஆகும் ஆனால் அம்மாநிலங்களில் பாக்கு, தென்னை, மிளகு,அல்லது ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இப்போ மலரும் எர்த் நிகழ்ச்சிக்கு வருவோம், அந்நிகழ்ச்சியில் காட்டுப்பொறியின் விளம்பர நிகழ்வாக கோகோ சாகுபடியை ஊக்குவித்து நடத்தும் நிகழ்சியில் என்ன சொல்லப்படுகிறது என்றால்,

காட்டுப்பொறி நிறுவனம் ,கோகோ நாற்றுகள் ,உரம் ,எப்படி பயிரிடுவது என்ற ஆலோசனை எல்லாம் வழங்கும் நாமும் சுமார் ஒரு லட்சம் அதற்கு கொடுத்து விட வேண்டும், பின்னர் மரம் வளர்ந்து காய்க்க துவங்கியதும் காய்களில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளை அவர்களே நல்ல விலைக்கு வாங்கிகொள்வார்கள்,அதுவும் நம் தோட்டத்திற்கே வந்து, விவசாயி தோட்டத்தினை விட்டு அங்கு இங்கு அலைய தேவையில்லை.இதைப்படிக்கும் போதே எங்கோ கேட்ட நினைவு வருமே :-))

ஆமாம் எல்லாம் ஈமு ஃபார்முலாவே தான், ஏன் இவ்வளவு ஆர்வமாக காட்டுப்பொறி செயல்ப்படுகிறது எனக்கேட்டால், அவர்கள் தான் இந்தியாவிலே ஸ்வீட் எடுக்கொண்டாடு என சாக்கலேட் தயாரிப்பதில் பெரியவர்களாம். எனவே அவர்களுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் டன்கள் கோகோ விதைகள் தேவைப்படுகிறதாம் ,பெருமளவு சர்வதேச சந்தையில் வாங்கியே தற்போது தயாரிக்கப்படுவதாகவும் , இனிமேல் உள்நாட்டில் உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து அவர்களே ஒப்பந்த முறையில் வாங்கி எல்லா விவசாயிகளையும் பெரும்பணக்காரர்கள் ஆக்க என ஒரு சிறப்பான திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக சொல்கிறார்கள்.

திட்டத்தினைப்பற்றி கேட்கும் போதே ஜிவ்வுன்னு இருக்கவே நாமும் போட்டுப்பார்க்கலாமா என அப்போது ஒரு புரட்சிகரமான சிந்தனை எனக்குள்ளும் எட்டிப்பார்த்தது அப்புறம் வழக்கம் போலவே குப்புர அடிச்சு தூங்கிப்போச்சு :-))

இத்திட்டத்தில் இருக்கும் சில உள்குத்துக்களைப்பார்ப்போம்,

கோகோ நாற்று ,உரம், ஆலோசனைக்கு என நம்மிடம் முன்னரே பணம் வாங்கிவிடுவார்களாம், பணம் இல்லை எனில் நம் நிலத்தின் மீது வங்கிக்கடனும் பெற்று தர கருணையுடன் உதவுவார்களாம்.

அப்படி செய்தால் மட்டுமே நம்மிடமே மீண்டும் விதைகளை வாங்க்கிக்கொள்வார்கள், நாமாக எங்காவது கோகோ நாற்று வாங்கி நட்டு உற்பத்தி செய்யக்கூடாதாம் ,வாங்க மாட்டார்கள்.

மேலும் உரம் அவர்கள் தருவதை வாங்க வேண்டும் , அப்போ தானே கொடுத்த காசுக்கு கணக்கு வரும் :-))

கோகோ தேவை என்பவர்கள் விவசாயி அவனே நட்டு உற்பத்தி செய்தால் ஏன் வாங்க மாட்டேன்கிறார்கள்? என்ற கேள்விக்கு விடையில்லை.

எனது அவதானிப்பு என்னவெனில் நாற்று ,உரம் என விற்பதிலேயே பெரும் லாபம் கிடைக்கும் அதனை அடையவே இப்படி ஒரு ஒப்பந்தம்,ஆனால் அவர்கள் சொல்வது தரமான கலப்பின நாற்றுகள் அவர்களிடம் மட்டும் இருக்கிறதாம்,தரத்திற்காகவே அப்படியாம். நம்புறவங்க நம்பலாம்.

மரக்கன்று நட்டால் காய்ப்பு துவங்க சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும், அதுவரைக்கும் நாம் உரம் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும், வெளியில் உரம் வாங்கினால் செல்லாது. ஆகா நல்லா இருக்கே டீலிங். :-))

சரி 5 ஆண்டு ஆனப்பிறகு கோகோ விதையை திரும்ப வந்து வாங்குவாங்களா? அதுக்கு என்ன உத்தரவாதம் என்றால் நாங்க ரொம்ப பெரிய நிறுவனம் ஏமாற்ற மாட்டோம், நம்பணும் சொல்றாங்க.

மேலும் ஒரு கிலோ கோகோ கொட்டைக்கு சுமார் 175-200 ரூபாய் விலைக்கொடுப்போம் என்கிறார்கள். இதனையும் நம்பணும்.

இந்த இடத்தில் தான் எனக்கு இடிச்சது , தள்ளி உட்காருன்னு சொல்லாதிங்க.இணையத்தில் துழாவினேன் , செம போங்கு ஆட்டம் ஆடி இருக்காங்க.

ஒரு கிலோ கொட்டைக்கு 110-120 ரூபாய் தான் சராசரியா கோக்கோ விலைப்போகுதுன்னு போட்டு இருக்காங்க, அந்த விலைக்கு கூட சமயத்தில் வாங்க ஆள் இல்லை.
(கோக்கோ பரவல்)

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் இந்த காட்டுப்பொறி நிறுவனம் 2010 இல் கர்நாடகா மற்றும் கேரளாவில் 100-120 விலைக்கு கூட வாங்க மாட்டோம் என கையை விரித்து விட சுமார் 40,000 டன் கோகோ கொட்டைகள் வாங்க ஆள் இல்லாமல் கிடந்துள்ளது , கடைசியில் விவசாயிகளை காப்பாற்ற மாநில அரசின் கேம்ப்கோ என்ற கோகோ, பாக்கு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கி விவசாயிகளை காப்பாற்றியுள்ளது, அப்போது விவசாயிகளுக்கு போட்டக்காசு அளவுக்கு தான் கிடைத்துள்ளது.

கேம்ப்கோ அந்த கொட்டையை வச்சுக்கிட்டு என்ன செய்யுமாம் என அதனை விற்க முயன்றுள்ளது ஆனால் வாங்க ஆளே இல்லை. ஏன் என்றால் சர்வதேச கோக்கோ விலை கம்மியா இருக்குன்னு இந்தியாவில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் இறக்குமதி செய்துக்கொண்டன.

சரி சர்வதேச சந்தையில் விற்றுக்காசாக்கலாம்னு கேம்ப்கோ முயற்சித்தால் ,இந்திய கோகோ கொட்டைகள் தரமாக இருக்காதுன்னு யாரும் வாங்க முன்வரவில்லையாம்.

ஒரு தொ.கா விளம்பரத்தில் தரமான கோக்கோ விதைகளையே வாங்குவதாக காட்டுவதைப்பார்த்திருப்பீர்கள். அதே கதை தான் கேம்ப்கோவிற்கு கண்ணீர் விடாதக்குறை தான் , ஒருவழியாக கிடைச்ச விலைக்கு விற்று வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் காட்டுப்பொறி சொல்வது என்னவென்றால் ஒரு பத்து ஏக்கரில் கோக்கோ போட்டால் ஏக்கருக்கு லட்சம் லட்சமாக வருவாய் வரும் சில ஆண்டுகளில் கோடிஸ்வரன் தான் பின்னர் மும்பைக்கு போய் அசின் ஐ ஹீரோயினாப்போட்டு ஷாருக்கானை ஹீரோவகப்போட்டு ஹிந்திப்படம் தயாரிக்கலாம், உங்களுக்கு அதிஷ்டம் இருந்து படம் ஹிட் ஆச்சுன்னா கோடிகளில் அள்ளலாம், அசின் அம்மாவையே மாமியார் ஆக்கலாம்னு செமையா சாம்பிராணி போட்டுவிடுறாங்க அப்பிராணிகளுக்கு :-))

(ஹி..ஹி..மலபார் சாக்கோபார்)
கோக்கோ கொட்டைக்களின் விலை என்பது நிலையானதே அல்ல ஒரு சமயம் கிலோ ரூ 200 போகும், அதுவே குப்புற அடிச்சு 100 ரூ ஆகலாம் ,எல்லாம் சர்வதேச விளைச்சலைப்பொறுத்தே.

மேலும் இந்திய கோக்கோ தரம் இல்லைனு இன்னும் விலைக்குறைச்சு 50 ரூ எனவும் கேட்கலாம், ஏன் எனில் மரம் வச்சு 5 வருஷம் பணம் செலவு செய்து வளர்த்தாச்சு எனவே விளைச்சலை விற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஆகிவிடும்.

ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கொட்டைகளே விளைச்சல் ஆக வாய்ப்புள்ளது. அதிக பட்ச விலை 200 ரூ என வைத்தாலும் ஏக்கருக்கு 40,000 ரூ தான் வருமானம் இதில் செலவுகள் போக என்ன நிற்கும் என தெரியவில்லை.

சராசரி விலை 100-120 என வைத்துப்பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 25,000க்கு மேல் வருமானம் வர வாய்ப்பேயில்லை, அதற்கு நெல் போட்டாலும் அதானே வரப்போகுது, இதில் முதல் 5 வருடம் காய்ப்பு இல்லாமல் வெறும் மரத்தினை வளர்க்க வேண்டும்,அதற்கு காட்டுப்பொறி சொல்வது என்ன வென்றால் ஊடுபயிராக காய்கறிப்போட்டு வருமானம் ஈட்டலாம் என்கிறர்கள்.

ஒரு லட்சம் வேற கொடுத்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு கோக்கோ பயிரிட்டு கொடுக்கணுமா, இதை பணம் கொடுக்காமலே செய்ய தெரியாதா என்ன? லட்சங்களில் வருமானம்னு நம்பித்தானே எல்லாம் இரங்குறாங்க.

கேரளா .கர்நாடகாவில் பெரும்பாலும் கோக்கோவே ஊடுபயிர் தான் இங்கே கோக்கோவில் ஊடுப்பயிர் செய்ய சொல்றாங்க, இங்கும் தென்னையில் சிலர் ஊடுப்பயிர் செய்கிறார்கள்,அவர்களுக்கு ஓரளவு சமாளிக்க முடியும்,ஆனால் தனிப்பயிராக போட்டால் என்னாகும் என்று சொல்ல முடியாதே, அனேகமாக கடன் மட்டுமே நிகர பலனாக இருக்கும் :-))

இப்போ தமிழ் நாட்டில் மிக குறைந்த அளவே காட்டுப்பொறியினை நம்பி கோக்கோ போட்டு இருக்கிறார்கள், இன்னும் 4-5 ஆண்டுகளில் தான் இது இன்னொரு ஈமுவா என்பது தெரியும்.ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளாவில் 2010 இல் அல்வா கொடுத்துள்ளதை வைத்துப்பார்த்தால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பல விவசாயிகளின் கோவணங்கள் உருவப்படும் என்றே நம்பலாம்.

கோக்கோ உற்பத்தியில் உலகின் முன்னணியில் இருக்கும் நாடுகளைப்பார்த்தாலே தெரியும் கோக்கோ பயிரிட்டு கோடிஸ்வரன் எல்லாம் ஆக முடியாது என்பது.



நாடுகளின் பட்டியல்

1) ஐவரி கோஸ்ட்,

2) கானா,

3)இந்தோனேசியா

4)நைஜீரியா

5)பிரேசில்

6)கேமரூன்

7) ஈக்கவடார்

8)கொலம்பியா

எல்லா நாடுகளுமே சுமாரான பொருளாதார நாடுகளே, மேலும் கானா, கேமருன், ஐவரி கோஸ்ட் எல்லாம் வறுமையான நாடுகளே.

காட்டுப்பொறி சொல்வது போல ஏன் அவர்கள் கோடிஸ்வரர்கள் ஆகவில்லை என்று தெரியவில்லை.பற்றாக்குறைக்கு ஆசியாவில் முன்னணியில் இருந்த மலேசியா பல கோக்கோ தோட்டங்களை அழித்துவிட்டு எண்ணைப்பனை நட ஆரம்பித்து விட்டது என்றும் செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே தேக்கு வளர்ப்பு ,செம்மறியாடு வளர்ப்பு , ஈமு வளர்ப்பு என் பல டிசைன்களில் தமிழக விவசாயிகளை மொட்டை அடிச்சாச்சு இப்போ கோவணம் மட்டும் தான் மிச்சம் ,அது கொஞ்சம் பளிச்சின்னு கண்ணை உறுத்துது போல அதையும் உருவ காட்டுப்பொறி திட்டம் போடுதுன்னு நினைக்கிறேன், அதுக்கு பீப்பிள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன , கூடிய விரைவில் சினிமா ஸ்டார்கள் வந்து கோக்கோ போட வாங்கோன்னு கூப்பிடுங்க ,மக்களும் அலை அலையாய் போய் சிக்கத்தான் போகுதுங்க ,நம்ம சொன்னால் எவன் கேட்க போறான் :-))

பின்குறிப்பு:

# இணையம் மற்றும் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது உண்மையில் நல்ல திட்டம், கெட்ட திட்டம் என உறுதியாக சொல்ல இயலாது ,ஆனால் 2010 இல் கர்நாடகா மற்றும் கேரளாவில் குறைந்த விலைக்கு தான் வாங்குவேன் என சொல்லி புறக்கணித்த செய்தி கேம்ப்கோ இணைய தளத்தில் உள்ளது நீங்களே படித்து ஒரு முடிவுக்கு வரவும்.

CAMPCO= The Central Arecanut and Cocoa Marketing and Processing Co-operative Limited or CAMPCO was found on 11 July 1973 at Mangalore.

இது கேரள மற்றும் கர்நாடக தோட்டக்கலை துறைகளின் கூட்டு முயற்சியில் உருவான கூட்டுறவு அமைப்பாகும்.

சுட்டி:



# வேண்டுகோள்: சரியாக எதிர்காலம் தெரியாத இது போன்ற குபேர திட்டங்களில் ஈடுபடும் முன் ஒரு முறைக்கு பல முறை சிந்திக்க வேண்டும்,தேனூறும் வாக்குறுதிகளுக்கு நம்பக்கூடாது, எதுவும் நடந்த பின் புலம்புவதை விட முன்னரே யோசித்தால் தடுக்க முடியும்,எனவே பதிவர்கள்,தெரிந்த விவசாயிகள் இப்படியான திட்டங்களில் ஈடுப்படுவது தெரிந்தால் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கலாமே.

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்...

சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு
அதிஷ்டம் இல்லை என்பார்!!!

-----------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள்.

விக்கி,கூகிள்,கேம்கோ இணைய தளங்கல்,நன்றி!
****************

65 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பா,

//இப்போ கோவணம் மட்டும் தான் மிச்சம் ,அது கொஞ்சம் பளிச்சின்னு கண்ணை உறுத்துது போல அதையும் உருவ காட்டுப்பொறி திட்டம் போடு//
துன்னு நினைக்கிறேன், //

ஹா ஹா இதில் ஒரு முக்கிய விடயத்தை மறந்து விட்டீர்கள்.. இதெலாம் முடித்து (கோக்கோ) கொட்டை எடுத்து.................

போங்கப்பா சிரிப்பு வருது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

கோவை நேரம் said...

கோகோ....இதை நம்பி முதலீடு செஞ்சா தெருவுக்கு போகவேண்டியதை தான் கோ(go) ..கோ ......

Unknown said...

இன்று ஈமு நாளை கோக்கோ பாவம் விவசாயிகள் .....

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

சரியான அக்குறும்பு புடிச்சவரா இருக்கீர், ஹி..ஹி எனக்கும் எழுதும் போது கொட்டை அல்லது விதைன்னு எப்படி எழுதன்னு ஒரே கன்பியூஸ் ஆகிப்போச்சு :-))

இப்போ சிரிப்பு இன்னும் 4-5 ஆண்டுக்கு பின் எத்தனைப்பேரு புலம்புவாங்களோ இல்லை எத்தனையோ பார்த்தாச்சு எல்லாம் விதின்னு வந்த விலைக்கு விற்றுவிட்டும் போகலாம்.

கோக்கோ கொட்டைகள் விற்பனையாக கூடியதே ஆனால் காட்டுப்பொறி சொல்வது போல லட்சாதிபதி ஆக்காது, இவங்க ஓவரா ஊதிப்பெருதாக்குவதே இதில் இருக்கும் ஏமாற்று வேலை.

ஈமு வளர்ப்பு கூட உண்மையான விலை சொல்லி, அதற்கு உண்டான நியாயமான முதலீட்டில் செய்ய வைத்தால் பிராய்லர் கோழி போன்ற ஒரு தொழிலாக தொடர முடியும், ஆனால் பாவிங்க அது தங்க முட்டை போடுது ரேஞ்ச்சில் சொல்லி காசு அடிச்சு ஈமு வச்சு ஏமாத்திட்டாங்க.

கானா ,ஐவரி கோஸ்ட்ல லட்சக்கணக்கான ஏக்கரில் கோக்கோ விளையுது அங்கேயே எவனும் கோடிஸ்வரன் ஆகலையே இங்கே மட்டும் எப்படின்னு மக்கள் யோசிச்சாலே போதும்,மக்களின் அறியாமைக்கு விலை ஒரு லட்சம் :-))

ஒரு தென்னம் தோப்பில் இதனை விட நல்ல வருமானம் வரும், ஆனால் யாரும் தேங்காய் வாங்கிக்கிறேன் என ஒப்பந்தம் போட வரமாட்டேன்கிறாங்களே :-))

கோக்கோ போட்டால் ஆண்டுக்கு 25,000 தான் மொத்த வருமானம் வரும் என சொன்னாலே காட்டுப்பொறிக்கு ஆப்பு ஆக்கிடும்.

--------

கோவை ஜீவா,

வாங்க ,நன்றி!

உண்மையில் கோ கோனு ஓட வேண்டியது , வழக்கமான லாபம் தரும் விவசாயம் போன்றது தான் காட்டுப்பொறி ஊதி பெருசாக்கி அவன் கோகோ நாற்று உரம் விக்குது.

அப்புறம் இத்திட்டத்திலும் முன்னால போறது கோவை,ஈரோடு மாவட்டத்தார் தான் , 3-4 வருஷம் கழிச்சு யாராவது பொலம்பினா என்னை நினைத்துக்கொள்ளுங்கள் :-))

இதில் நான் நன்கு உணரும் அபாயம் என்னவெனில் நிறைய பேரை கோக்கோ சாகுபடியில் ஈடுப்படுத்திவிட்டு , நிறைய உற்பத்தி ஆனதும் கோக்கோ கொட்டை விலையை குறைச்சு கேட்கப்போறாங்க, 4-5 வருஷம் கஷ்டப்பட்டு மரம் வளர்த்தாச்சு இப்போ என்ன செய்ய என்று கேட்ட விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள் என்பதே. கேம்ப்கோ சுட்டிப்போனாலே உண்மை தெரியும்.

------------
ஶ்ரீனி,

வாங்க,நன்றி!

ரெண்டுமே வழக்கமான விலையில் விற்க கூடியவை தான் .பிரச்சினை அவற்றை ஆகா ,ஓகோ என ஏற்றி சொல்லி நம்மிடம் ஆரம்பத்தில் வசூலிக்கும் பணத்தில் இருக்கு. மேலே போட்ட பின்னூட்டங்கலையும் பாருங்க.

நம்ம மக்களுக்கு சரவணபவனில் வைக்கும் சட்னி அளவுக்கு மூளை இல்லைனா ஈமு, காட்டுப்பொறியின் கோக்கோ போல நாளைக்கு கடல் ஆமை வளர்ப்பு திட்டம், கரடி வளர்ப்பு திட்டம்னு புதுசு புதுசா கிளம்பி வருவானுங்க :-))

naren said...

வவ்வால்,
முதல் முறையாக உங்க பதிவில் ஒன்று புரியவில்லை “காட்டுபொறி” என்ன, யாராது.

உண்மையில் இது ஒரு கெட்ட திட்டம்தான். கோழி பண்ணைகளில், நாங்க குஞ்சு தர்றோம், தீவனம் தர்றோம் டாக்டரை வைப்போம் சரியாக பரிமாரித்தால், இத்தனை நாளுக்கு பிறகு இத்தனை விலைக்கு வாங்கப்போறோம், அதற்கு இவ்வளவு முன்பணம் கட்ட வேண்டும் என்று ஒரு திட்டத்தை, மாபெரும் கோழி நிறுவனங்கள் எடுத்து வந்து, கடைசியில் நாங்க சொன்னதை ஒழுங்காக செய்யவில்லை என்று அடிமாட்டு விலைக்கு வாங்கி ஏமாற்றிய கதைதான்.
ஆப்பிரிக்க தேசங்களில் குழந்தை தொழிலாளர்கள், கடத்தப்பட்ட அடிமைகளை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி மேற்கத்திய நாடுகளில் அங்கிருந்து வாங்குவதை தடை செய்துவிட்டனர். அதனால் திடீரென்று சில நாட்களுக்கு வேறு நாட்டு கோக்கோக்கு மவுசு இருந்தது. அதை நம்பி இந்த விளையாட்டு.
விவசாயி பார்க்க வேண்டியது, அவனே விவசாயம் செய்தால் இலாபம் கிடைக்குமா என்பதுதான், திட்டம் என்று வந்தால் வேலைக்கு உதவாது.

விவசாயி கண்டிப்பாக கணக்கு பார்க்க வேண்டும். புதிய முயற்சியாக, தான் அறுவடை செய்ததை, இடைதரகர்கள் இல்லாமல், அதிக விலைக்கு விற்கும் வழிகளை தேடலாம். கூட்டறுவு சங்கங்கள் எல்லாம், நாய் வழிக்கு போய்விட்ட பிறகு. மாற்று முயற்ச்சிகள் தேவை.

இந்த மாதிரி நெறைய மரங்கள் வந்தால் உங்களுக்குதான் தொங்குவதற்கு வசதியாக இருக்குமே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த சாக்கோபாருக்கு ஏதாவது திட்டம் இருக்காண்ணே?

வவ்வால் said...

நரேன்,

வாரும்,நன்றி!

//முதல் முறையாக உங்க பதிவில் ஒன்று புரியவில்லை “காட்டுபொறி” என்ன, யாராது.//

எனக்கு கெட்ட கோவம் தான் வருது "சுவீட் எடு கொண்டாடு"ன்னு சொன்ன பிறகும் யாருன்னு கேட்டால், "போர்ன்விட்டா "குடிச்சு மூளையை சுறுசுறுப்பா ஆக்கி கொள்ளவும். நாட்டு நடப்பே தெரியாமல் "கழுகு" படம் போட்டுகிட்டு:-))

கை ,வாயெல்லாம் இலிப்பிக்கிட்டு சப்பி ,சப்பி சாக்கோலேட் சாப்பிட்டதே இல்லையா ,சரியான நாட்டுப்புறம்யா :-))

நீர் சொன்ன அதே "பகுணா சிக்கன்" கதை தான், எங்க பக்கமும் பகுணாவில் அல்வா கொடுத்தாங்க ,இன்னும் சிலர் பரவாயில்லை ,சும்மா இருப்பதற்கு ஏதோ வேலைன்னு செய்றாங்க, ஆனால் கூட்டி கழித்து பார்த்தால் அவர்கள் , "காஸ்ட் பிரைஸ் "க்கு தான் வேலை செய்கிறார்கள் என்பது புரியும். ஆனால் நாம சொன்னால் எவன் கேட்கிறான், நீ என்ன பெரிய கொம்பான்னு வவ்வாலுக்கு கொம்பு இருக்கான்னு கேட்கிறான் :-))

கோக்கோ விட நெல்லே நல்ல வரும்படியான விவசாயம் என நான் சொல்வேன் ஆனால் அதிலேயே நஷ்டம் என்னும் பொழுது கோக்கோவில் என்ன வரும்? அதை வளர்த்தவன் கணக்கு பார்த்து சொன்னால் உண்டு.
ஒரு ஏக்கரில் நம்ம ஊர் நெல் விவசாயம் செய்தால் உற்பத்தியாகும் விளைச்சலின் மதிப்பு:
நெல் 3 மாத பயிர் ,ஒரு ஏக்கருக்கு சுமார் 25,000 வரும் ரெண்டு போகம் செய்தால் 50,000 ஆயிரம் .

"Rice fallow pulse" என உளுந்து,பயிரு விதைத்தால் சுமார் 10,000 கிடைக்கும்.

எனவே ஒரு நாட்காட்டி ஆண்டில் ஒரு ஏக்கரில் 60,000 வருமானம்ம் உற்பத்தி செய்யக்கூடியது நெல் விவசாயம்.

அப்படி இருந்தும் நஷ்டம் என சொல்லக்காரணம் , உரம், ஆட்கூலி, என அனைத்தும் விலை ஏறிப்போனதே.

கொக்கோவில் 25,000 வருமானம் ஆண்டுக்கு வருமானம்,உரம் ,ஆலோசனை சுமார் 20,000 அப்போ மிச்சம் 5,000 ரூ வில் வேலையாட்கள் வைத்து எல்லாம் முடித்து ,லாபமும் எடுக்க வேண்டுமெனில் ஏக்கருக்கு என்ன லாபம் கிடைக்கும்?

நானும் கோக்கோ விவசாயி என்ற பட்டம் மட்டும் தான் கிடைக்கும் :-))

நரேன்,

இந்த மோசடி அரசுக்கு தெரியாமல் இல்லை அரசின் தோட்டக்கலையே வளர்க்க சொல்கிறது,கர்நாடாகா,கேரளாவில் நடந்த போதும் ஏன் நடவடிக்கை இல்லை, சர்வதேச நிறுவனத்திற்கு மூலப்பொருள் கிடைக்க வழி செய்யவே.

இந்தியாவில் மெஸ்ட்லே, காட்டுப்பொறி ரெண்டே பேரு தான் சாக்கோலேட் எச்சென்ஸ் உற்பத்தி செய்ய கூடியவங்க, அதாவது கோக்கோ கொட்டை- பவுடர் -பின்னர் உடனே பயன்ப்படுத்தும் சாக்கலேட் எசென்ஸ்.

அவங்க கொட்டையை வாங்கவில்லைனா இங்கே வாங்க ஆளே இல்லை,நீங்க மூட்டைக்கட்டிக்கிட்டு வெளிநாட்டுக்கு தான் போய்வித்து வரணும்,அவங்க இந்திய கோக்கோவா "we don't like poor coco" சொல்லிடுவாங்க :-))

வவ்வால் said...

ப.ரா,

நன்றி,வாங்க,

வாரும் ,என்ன ரொம்ப நாளா ஆளே காணோம் , யாராவது முகமூடி "வவ்வால்" பதிவு எல்லாம் படிக்க கூடாது சொல்லிட்டாங்களா?

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த சாக்கோபாருக்கு ஏதாவது திட்டம் இருக்காண்ணே?//

பதிவை சரியா படியும், சாக்கோ பாருக்கு போட்ட திட்டம் தான் கோக்கோ மரம் வளர்ப்பு திட்டம், 10 ஏக்கரில் கோக்கோ போட்டால் போதும் சில ஆண்டுகளில் சாக்கோ பாரின் மம்மி உமது மாமியார், சீக்கிரம் ஓடி வாரும் காம்பெடிஷன் ஹெவியா இருக்குது ஓய்.

ப.ரா ,காட்டுப்பொறிக்காரனுங்க உங்க ஊரு பக்கம் தான் அதிகம் திரியறாங்க, ஏன்னு தெரியலை ,ஒரு வேலை உங்க சைட் எல்லாம் துட்டுப்பார்ட்டிங்களோ இருக்க காசை எதாவது "இன்வெஸ்ட்" செய்து வைப்போம்னு அம்பானி திட்டம் போடுறாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே நான் கேட்ட சாக்கோபாரு மலபார் சாக்கோபாரு... ஹி....ஹி.....!

(கொஞ்சநாளா வனவாசத்துல இருக்கேன். அப்படியும் படிக்கிற சில ப்ளாக்குகள்ல இதுவும் ஒண்ணுங்ணா.....!)

வவ்வால் said...

ப.ரா,

நானும் அதான் சொல்றேன் ,மலபார் சாக்கோபார் வாங்க துட்டு வேணாமா, காட்டுபொறியில் சேர்ந்தால் சில ஆண்டுகளில் கோடிஸ்வரன் ஆகிடலாம்னு சொல்றானுங்க அதை சொன்னேன்.

ஓ வன வாசமா? யூ கோயிங் வித் சீதா?

ஆமாம் வனவாசம்னு கண்ணதாசர் போல புத்தகம் போடவா?

இங்கே சில அப்பாடாக்கர்கள் என் முகம் தெரியலை ,முதுகு தெரியலைனு புலம்பிச்சு அதான் கேட்டேன்.

என்னால பல பேரு கமென்ட் மாடரேஷன் வச்சுட்டாங்க ,என்ன கொடுமை ப.ரா?

என்னை பார்த்து ஏன் இம்புட்டு பயப்படுறாங்கண்னே தெரியலை :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் கண்டுக்காம நீங்க பாட்டுக்கு போய்ட்டு இருங்க பாஸ்......

”தளிர் சுரேஷ்” said...

நானும் பொழுது போகாமல் பீப்பிள்ஸ் தொல்லைகாட்சியில்?! இந்த நிகழ்ச்சி பார்த்ததுண்டு! இதெல்லாம் ஏமாற்றுவேலை என்று யாரும் உணர்வதாக தெரியவில்லை! என்ன செய்வது? ஆசைதான் காரணம்!

இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in

Anonymous said...

வவ்வாலு எடக்கு மடக்கு உங்களை அழைக்கின்றது!

முட்டாப்பையன் said...

ஏன் திராணி இல்லையா?
எனில் ஒத்துக்கொள்ளவும்.

முட்டாப்பையன் said...

இங்கே சில அப்பாடாக்கர்கள் என் முகம் தெரியலை ,முதுகு தெரியலைனு புலம்பிச்சு அதான் கேட்டேன்.

என்னால பல பேரு கமென்ட் மாடரேஷன் வச்சுட்டாங்க ,என்ன கொடுமை ப.ரா?

என்னை பார்த்து ஏன் இம்புட்டு பயப்படுறாங்கண்னே தெரியலை :-))/////

அங்க வந்தா தெரிஞ்சிட போகுது ? உங்க கருத்தை சொன்னா எங்களுக்கும் புரிஞ்சிட போகுது ?

முட்டாப்பையன் said...

என்னை பார்த்து ஏன் இம்புட்டு பயப்படுறாங்கண்னே தெரியலை :-))/////

உலக காமெடி.
நாங்க கூப்பிடுறோம். எங்க பயத்தை தெளியவைக்கவும்.

முட்டாப்பையன் said...

நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாடீங்க போல .

முட்டாப்பையன் said...

அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வீண் ஆசை?
இறக்கையை சுருட்டி வச்சிக்கிட்டு போக வேண்டியதுதானே.?

முட்டாப்பையன் said...

யோவ் சேட்டு-நீ அந்த பன்பராக்க முழுங்கிடுயா .

முட்டாப்பையன் said...

நீர் சொன்ன மாதிரி
உங்கள பத்தி போட்ட பதிவுக்கு அங்க வந்து பதில் சொல்லுங்க.
எங்களை பற்றி நீர் பதிவு போட்டால் நாங்கள் வருகிறோம்.

வாக்கு சுத்தம் வேனும்யா.
இன்னிக்கு கொஞ்சம் அதிகமா சரக்கு அடிப்பீர் போல.
அரசுக்கு வருமானம் தான்.

நீர் கவரிமான் பரம்பரை இல்லையா?
நாங்கதான் ஏமாந்துட்டோமா ?
இனி நீர் எங்கேயாவது போவ?
அந்த தகுதி வேணும்முன்னா எங்க கிட்ட வந்து பதில் சொலும்.

நாங்க யாரும் இல்லாதப்ப நாடு ராத்திரி வந்து பதில் சொல்லுவது ஆண்மையா?
உமக்காக ஏகப்பட்ட பழம் வைத்துள்ளோம்.

வவ்வால் said...

முட்டாப்பையர்,

இப்பவும் சொல்றேன் நான் கேள்விக்கேட்க தான் அடுத்த பதிவுக்கு போறேன் ,எனக்கு பதில் சொல்ல என் பதிவுக்கு வான்னு சொல்லி என் பதிவை விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டேன் புரியுதா?

இப்போ நீ என்ன செய்யுற யாரும் வரலைன்னு என்னை அன்ங்கே வான்னு சொல்ற ...இது எந்த ஊரு திராணி?

எனக்கு எப்போ டைம் இருக்கோ அப்போ தான்யா வருவேன், மிட் நைட் வந்தால் உனக்கு பயமா இருக்கும்னு சொல்லு வரலை :-))

//நீர் கவரிமான் பரம்பரை இல்லையா?
நாங்கதான் ஏமாந்துட்டோமா ?
இனி நீர் எங்கேயாவது போவ?
அந்த தகுதி வேணும்முன்னா எங்க கிட்ட வந்து பதில் சொலும்.//

நான் எங்கே வேண்டுமானலும் இனியும் போவேன் ஏன் எனில் நானாக தான் போரேன் , யாரும் கூப்பீட்டா போறேன்.

நீ கூப்பீட்டா கூப்பீட நேரத்துக்கு வர நீ எனக்கு இதுக்கு முன்னர் எப்போவாது பின்னூட்டம் போட்டா இருக்க.

என்னோட பின்னூட்டம் வாங்கி ஃபேமஸ் ஆகணும்னு உனக்கும் ஆசை. உன் ஆசையை இன்று நள்ளிரவு நிவர்த்தி செய்யறேன்.

வர்ரட்டா :-))

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி!

சில குப்பைகள் என்னை வச்சு பெரிய ஆளாக ஆசைப்பட்டு பின்னூட்டம் போட்டதில் உங்களைக்கவனிக்கவில்லை.

ஹி...ஹி நீங்களும் பீப்பிள் தொல்லைக்காட்சி பார்ப்பீங்களா, அதில விவசாய நிகழ்ச்சிகள் எல்லாம் போடுறான்னு பார்த்தேன்,ஆனால் அவர்கள் நழுவலா எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லனு முன்னாடியே ஒரு கார்ட் போட்டு எஸ்கேப் ஆகிடுறாங்க, அப்போ எதுக்கு அந்த நிகழ்ச்சியை போடுறாங்க.

இன்னும் சில ஆண்டுகள் கழிச்சு நான் கோக்கோ போட்டேன் அதை வாங்க ஆளே இல்லைனு பலர் பொலம்ப கூடும்,இப்போ சொன்னால் எவன் கேட்கப்போகிறான், அன்றே சொன்னான் வவ்வாலுன்னு சரித்திரம் சொல்லும் :-))

ஏதோ நம்மால் முடிஞ்சது முன் கூட்டியே சங்கு ஊதுவது தான்.

முட்டாப்பையன் said...

முட்டாப்பையர்,

இப்பவும் சொல்றேன் நான் கேள்விக்கேட்க தான் அடுத்த பதிவுக்கு போறேன் ,எனக்கு பதில் சொல்ல என் பதிவுக்கு வான்னு சொல்லி என் பதிவை விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டேன் புரியுதா?

இப்போ நீ என்ன செய்யுற யாரும் வரலைன்னு என்னை அன்ங்கே வான்னு சொல்ற ...இது எந்த ஊரு திராணி?

எனக்கு எப்போ டைம் இருக்கோ அப்போ தான்யா வருவேன், மிட் நைட் வந்தால் உனக்கு பயமா இருக்கும்னு சொல்லு வரலை :-))

//நீர் கவரிமான் பரம்பரை இல்லையா?
நாங்கதான் ஏமாந்துட்டோமா ?
இனி நீர் எங்கேயாவது போவ?
அந்த தகுதி வேணும்முன்னா எங்க கிட்ட வந்து பதில் சொலும்.//

நான் எங்கே வேண்டுமானலும் இனியும் போவேன் ஏன் எனில் நானாக தான் போரேன் , யாரும் கூப்பீட்டா போறேன்.

நீ கூப்பீட்டா கூப்பீட நேரத்துக்கு வர நீ எனக்கு இதுக்கு முன்னர் எப்போவாது பின்னூட்டம் போட்டா இருக்க.

என்னோட பின்னூட்டம் வாங்கி ஃபேமஸ் ஆகணும்னு உனக்கும் ஆசை. உன் ஆசையை இன்று நள்ளிரவு நிவர்த்தி செய்யறேன்.

வர்ரட்டா :-))//////


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
அறுக்க மாட்டாதவனுக்கு 58 அருவாலாம்.
யோவ்வ்வ்வ்..எது வழியாவோ காத்து வருதுயா.

தமிழ்சேட்டுபையன் said...

வணக்கம் வவ்வால்!

தமிழ்சேட்டுபையன் said...

மல்டி லெவல் பிசினஸ்,தேக்கு மரம், ஈமு,அடுத்தது கோக்கோ, இன்னும் புற்றீசல் மாதிரி வந்திட்டேதான் இருப்பாங்க....!நாம்தான் ஜாக்கிரதையா இருக்கனும்! நல்ல விழிப்புணர்வு பதிவு!

முட்டாப்பையன் said...

@ சேட்டு
சார் ரோம்ப துள்ளுறாரே. என்னான்னு கேளு.

தமிழ்சேட்டுபையன் said...

நல்ல ஆளுய்யா...!.வவ்வால்! எவ்வளவு அழகா எழுதியிருக்கிறார்!
இவர் நம்ம குரூப்ல இருக்க வேண்டிய ஆளு! டேய்! முட்டா ஆபசமா கமெணட் போடதடா...!நீ என்ன கேபிள் சங்கரா..?

தமிழ்சேட்டுபையன் said...

சாக்கலேட் கோகோ அல்லாமல் இன்னொரு வகையில் இருந்து தான் உலகப்புகழ்ப்பெற்ற கோகைன் என்ற போதைமருந்தும் தயாரிக்கப்படுகிறது.
////////////////////////
தலைவரே..!ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இதை விவசாயம் செய்தார்கள் கேகைன்! அதுவும் இதுவும் ஒரே வகையா..?

முட்டாப்பையன் said...

@சேட்டு
இவரும் நம்மளை வச்சி ஹிட்ஸ் ஏத்திக்க போறார்.சரி போகட்டும். அவராச்சும் அண்ணா நகர்ல வீடு வாங்கட்டும்.
அவரு நைட் வாராஆஆஆஆஆஆஆம்.
வா நாம போய் தூங்கிட்டு அவர் வந்ததும் வருவோம்.

முட்டாப்பையன் said...

வவ்வால்.
நாங்க இல்லாதப்ப வந்து உளறுவல்ல
அப்ப மெயில் SUBSCRIBE வச்சிக்க.
ஏன்னா நாங்க பதில் போடுறது உனக்கு தெரியனுமல்ல? அதுக்குதான்.

வவ்வால் said...

குட்டிப்பையர்,

வாய்யா வா..வா

எங்கே பயந்து போய் மீண்டும் வராம பூடுவிங்களோன்னு கொஞ்சம் கவலையா பூச்சே(பின்ன ஆடே கசாப்புக்கடைக்கு வந்தால் விட முடியுமா)

//யோவ்வ்வ்வ்..எது வழியாவோ காத்து வருதுயா.//

நாசமா போச்சு அதையா நீ மோந்து பார்த்த ரொம்ப கப்பு அடிக்குமே :-))
--------
ஆமாம்பா ரொம்ப துள்ளுவேன் , எனக்கு கேம் போட தானா ஆள் சிக்கிட்டா ஒரு குதுகலம் தான் ஓஹோ :-))

-------

என்ன கொடுமை முட்டாப்பையரே, நான் இல்லாதப்போ வந்து ஒளறிட்டு இப்படி சொல்லுறீர். அப்போ என் பதிவுக்கு சப்ஸ்கிரை செய்து இருக்கீர் , நல்லதா போச்சு ,நான் கமெண்ட் போட்டால் தெரியும்.

--------
தமிழ் சேட்டு,

வாரும் ,நன்றி,வணக்கம்.

இந்த பேருலவும் சில சமூக அக்கரையுள்ள பதிவுகள் உங்கள் தளத்துல போட்டு இருக்கீங்க ,பார்த்தேன் நல்லாத்தான் இருக்கு, அப்புறம் ஏன் இந்த வேலை?

எப்படியோ இருக்கட்டும் உங்க கேள்விக்கு வரேன்,

//தலைவரே..!ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இதை விவசாயம் செய்தார்கள் கேகைன்! அதுவும் இதுவும் ஒரே வகையா..?//

ஆப்கானில் பயிரிட்டது பாப்பி (நம்ம ஊரு கச கசா)அதில் இருந்து ஓபியம் தான் எடுத்தாங்க, அதுவும் போதை மருந்து தான்.

அங்கே கோக்கோ வளராது என நினைக்கிறேன், கோக்கோ மரம் எல்லாம் தென் அமெரிக்காவில தான் கோக்கைன் உற்பத்தி கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளில் ரொம்ப ஃபேமஸ், குடிசை தொழிலா செய்றாங்க.

முட்டாப்பையன் said...

தெளிஞ்சிடுச்சா?
வருண் வேற உனக்கு பதில் சொல்லி இருக்கார்.
வா.நாம மீண்டும் செத்து செத்து விளையாடுவோம்.

உனக்கு உப்புன்னா என்னான்னு தெரியுமா?

வவ்வால் said...

முட்டாப்பையர்,

வாய்யா ,என்ன இப்போ ,சரி தான் என் பேரை வச்சு நீ ஃபேமஸ் ஆகலாம்னு ஆசைப்பட்டியேன்னு போனாப்போவுதுன்னு உன்ப்பதிவுக்கு வந்து ஹெல்ப் செய்தேன் ,அடிக்கடி ஹெல்ப் செய்யணுமா :-))

சரி ..சரி எனக்கு போர் அடிக்கும் போதெல்லாம் வந்து உனக்கு ஹெல்ப் செய்றேன்.

ஆமாம் வருண் மாமாவும் உன் கூட்டத்தில ஒரு ஆளா? ஏன் என்னைப்பார்த்து பயந்து நிறைய பேர துணைக்கு கூப்பிட்டு வச்சுக்கிட்டு அலையுறப்பா, நீ தனியா வந்து பேசினாலும் உன்னை எதுவும் செய்ய மாட்டேன், ஏன்னா நீ அந்த அளவுக்கு ஒர்த் இல்லை ராசா :-))

முட்டாப்பையன் said...

இதுக்கு பேர் தான் பூனை கண்ணை மூடிக்கிறதா?
அடச்சே எனக்கு தெரியாம போச்சே.
தம்பி பயப்புடாத.நானும் உண்ண ஒண்ணும் செய்யமாட்டேன்.
இப்ப நீ அடுத்த கமெண்ட்ல இதே வார்த்தையை அப்படியே மாத்தி போடணும் சரியா.?

என்னா பயம் உனக்கு.?
பூட்டுன விட்டுக்கு முன்னாடிதான் சவுண்ட் விடுவியா?
திருடனுகதான் யாரும் இல்லாதப்ப வருவானுக.
நம்ம தளத்துல திருட கருத்து ஒண்ணும் கிடையாது.அறுப்ப தவிர.

வேணும்னா மிச்சம் மீதி கீழ கடக்கும் பொருக்கி எடுத்துக்க .

வவ்வால் said...

முட்டாப்பையர் ,

அய்யோ ,அய்யோ உன்னோடு ஒரே நகைச்சுவையப்பா...

இங்கே வா ..இங்கே வான்னு சொன்னேன்னு உன் இடத்துக்கே வந்தேன் உடனே ஓடிப்போயிட்டு எவன் எவனையோ கூப்பிட்டு வந்து பேசுற ... ஏன்யா இந்த பொழப்பு ... எச்ச சோறு திங்க இம்புட்டு ஆசைப்படுற.. சரி ..சரி என் பேற சொல்லி கொஞ்சம் நாள் பொழைச்சுக்கோ :-))

ரொம்ப பயந்துட்ட போல அது உன் பேச்சிலவே தெரியுது... தெகிரியமா வாய்யா உன்னை அதுக்குள்ள கெடா வெட்ட மாட்டேன் ..உன்னை வச்சு நிறைய காமெடி செய்ய வேண்டி இருக்கு :-))

முட்டாப்பையன் said...

இப்ப வவ்வாலுக்கு கண்ணு சிவக்கும் பாரேன்.கை நரம்பல்லாம் துடிக்கும் பாரேன்.அப்படியே இல்லாத முடியை
ரெண்டு கையாளையும் கசக்கிப்பாறு பாரேன்.
அந்த ரேகையை கிழிச்சிப்பாறு பாரேன்.

வவ்வால்.இப்ப நீ என்ன பண்ணுறே
இன்த கமெண்ட்ஐ அப்படியே மாத்தி நடுல நடுல மானே தேனே எல்லாம் போட்டு போடணும் சரியா?

முட்டாப்பையன் said...

@ ஆல் மக்காஸ்
ஒரு சீன்.உண்மையான சீன்.

நம்ம வவ்வால் விட்டுக்கு தள்ளாடிகிட்டே போறார்.மிஸ்ஸஸ் வவ்வால் பதறிக்கிட்டே
வந்து இப்படி சொல்லுறாங்க.

"ஏங்க வழக்கமா நீங்க உதை வாங்குற இடத்துக்குல்லாம் போய் சின்ன சின்ன
கீறல்கள் தான் வாங்கிட்டு வருவீங்க.இப்ப போன இடம் ரோம்ப பெரிய இடம் போலிருக்கு .படுபாவிங்க இப்படி பாளம் பாளமா வெட்டி விட்டிருக்காணுக.இனிமே
அங்க எல்லாம் போகாதீங்க."(மனசுக்குள்-"போய் சேறு சீக்கிரம்")

வவ்வால் said...

முட்டாப்பையர்,

அது..!

இப்படித்தான் டென்ஷன் ஆகணும் ...ஆகி அப்படியே சட்டைய கிழிச்சிக்கிட்டு அலையணும்... தொடர்ந்து வா... ஏர்வாடிக்கு டிக்கெட் போட்டு அனுப்பறேன் :-))


ஹை கும்தலக்கடி கொய்யா ...அப்படி போடு போடு..கொய்யாலே ... :-))

இந்த குத்து போதுமா இன்னும் கொஞ்ச்ம் வேணுமா...

மாயன் said...

கோழி, தேக்கு, ஈமு, கோகோ எல்லாம் வளர்க்கிறோம்னு சொல்லி காசு பிடுங்கிட்டாங்க... உண்மையில அவங்க வயித்த தான் வளர்க்கிறாங்கன்னு பணம் போடறவங்களுக்கு எப்போ தான் புரியுமோ... இன்னும் நகம் வளர்க்கிறேன், முடி வளர்க்கிறேன்னு தான் எவனும் காசு பிடுங்கலை.....

மனுஷ பயபுள்ள முடில இருந்து ப்ரோடீன் எடுக்கிறதா எங்கயோ படிச்சிருக்கேன்... அதுக்காக ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் போட்டு லட்சம் பேர் மண்டைல முடி வளர்க்கிறோம்.. 1௦௦௦ ரூபா போட்டா மாசத்துல 1 லட்சமா திருப்பி தரேன்னு எவனாவது கிளம்பிட போறான்....

ராஜ நடராஜன் said...

39 ஐ 40வது பின்னூட்டமாக்கிடறேன்.கான்டெக்ஸ்ல பேசுங்கன்னு எனக்கு மட்டும் புத்தி சொல்லுங்க.வாய்யா சண்டைக்குன்னு எடக்கு மடக்கு கூப்பிட்டதும் ரொம்ப நயமாகவே முதல் பின்னூட்டத்தைக் கையாண்டிங்க.வருண் வந்ததும் புத்திசாலித்தனமாக சண்டையிலேயிருந்து விலகியிருந்தா உங்க புத்திசாலித்தனத்தை பாராட்டியிருக்கலாம்.பதிவுலகில் எல்லோரையும் எல்லா நேரத்திலேயும் திருப்தி படுத்தி விட முடியாது.அதனால்தான் பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு அவ்வையார் அப்பவே பின்னூட்டம் போடுபவர்களுக்காகவே சொல்லி வச்சிருக்கார்:)பாசிட்டிவா இருந்தா விவாதத்தை கிளப்ப பின்னூட்டம் போடலாம்.விவாதத்தையும் தாண்டி சண்டைதான் பிரதானம் என்கிற போது வண்டிக்கு பிரேக் போடறதுதான் நல்லது.இல்லைன்னா வண்டி முக்குசந்து ரோட்டுல குட்டிச்சுவர்லதான் போய் முட்டிக்கும்.

உங்ககிட்ட விசயம் இருக்குது.சரக்கு!இருக்குது.பேசும் பொருள் (சப்ஜக்ட்) குறித்த ஆழ்ந்த பார்வையிருக்கும் போது கரடு முரடான பின்னூட்டம் ஏன் செய்றீங்கன்னு தெரியல.

வவ்வால் said...

மாயன்,

வாங்க ,நன்றி!

ஆமாம் அதே தான் , இதுல பெரிய கொடுமை என்னவென்றால், ஏமாந்து பணம் கட்டுறவன் ஆரம்பத்தில் கிடைக்கும் சில பலன்களை பார்த்து ரொம்ப நல்லவங்க நீங்களும் வாங்கன்னு அடுத்தவனையும் இழுத்துவிடுறாங்க, அப்போ நாம எதாவது சொன்னால் போய்யா உனக்கு விஷயமே தெரியாது,அது பெரிய கம்பெனி தெரியுமான்னு சொல்லுறாங்க, இந்த கோக்கோ கதையை ஒருத்தருக்கிட்டே சொன்னதுக்கு தான் அப்படி சொல்றாங்க.

உயர்ந்த பட்சமாக இருக்கும் விலையை சொல்லிட்டு ஒரு ஸ்டார் போட்டு அப்போதைய சந்தை நிலவரத்தினைப்பொறுத்துன்னு சொல்லி எஸ்கேப்பாகிடுறாங்க.

முன்னர் இன்ஸுரன்ஸ் பாலிசியில் மியுட்டுவல் ஃபண்ட் முதலீடுன்னு எல்லா பெரிய கம்பெனியும் இப்படி கல்லாக்கட்டிச்சு, 50,000 ஆய்யிரம் போட்டால் நான்கு ஆண்டுகளில் 5 லட்சம்னு எல்லாம் போட்டாங்க நான்காண்டுகளுக்கு பிறகும் 50,000 மட்டுமே காட்டிச்சு (ஹி..ஹி நானும் போட்டேன்ல, எனக்கு இன்னொரு கணக்கு இன்கம் டாக்ஸில் தள்ளுபடிக்கிடைக்கும்னு சொன்னாங்க)

போன் செய்ததும் வீட்டுக்கே வந்து காசு வாங்க்கிட்டு போனாங்க, இன்னும் நிறைய பேர சேர்த்துவிட சொன்னாங்க ,கொய்யாலே அவன அதுக்கு அப்புறம் பார்க்கவே முடியலை.

பேங்கில் போட்டு இருந்தால் குந்தினாப்போல 8% (அ)8.5% வட்டியாச்சும் கிடைச்சு இருக்கும் :-))

சரி போட்டக்காசு திரும்ப வந்துச்சேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டேன். இப்போ தான் அப்படியான விளம்பரம் வருவது இல்லை.

முடி வளர்க்க சொல்லி வரலாம் , முடியில் இருந்து கெராட்டின்,ஜெலாட்டின் எல்லாம் எடுக்கிறாங்க அதனை ஐஸ்கிரீம்,சாக்கலேட் தயாரிப்பில் பயன்ப்படுத்துறாங்க ,நாம ருசிச்சு சாப்பிடுறதுல எவனோட மயிரோ இருக்கு :-))
போனமாசம் தான் பழனியாண்டவ்வர் கோவில் முடியை ஏலத்துக்கு விட்டாங்க இது போல கம்பெனிக்கு, புதுவை ,வில்லியனுர் பக்கமாக ஒரு கம்பெனி இருக்கு மக்கள் அதனை மயிர் கம்பெனி என்றே சொல்வாங்க :-))

------------
ராஜ்,

வாங்க,நன்றி!

கான்டெக்ஸ்ட்ல பேசுவது உங்களைப்போன்ற நல்லப்படியாக பேசுபவர்களுக்கு மட்டுமே, மற்றபடி கூமுட்டைத்தனமாக பேசுபவர்களை அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்.

நீங்க தமிழ் சினிமா ஒன்னியுமே பார்க்கலையா , அதில கதை,காதல்,காமெடி இருக்கும் அப்புறம் நடுவிலே போரடிக்கும்னு ரெண்டு பைட் கூட இருக்கும்.

அது போலத்தான் எனக்கு போரடிக்காம இருக்க அப்போ அப்போ சிக்கிரவங்களை வச்சு ஒரு "action block" வச்சுப்பேன் ,நம்மை யாரும் ரொம்ப்ப நல்லவன்னு நினைக்கணும்னு எதிர்ப்பார்ப்பதில்லை ,அப்புறம் என்னாதுக்கு அறிவு ஜீவிப்போலவோ, புத்தர் போலவோ இருந்துக்கிட்டு, சில நேரங்களில் சில மனிதர்கள் , எனவே அப்போ என்ன நினைக்கிறோன்னோ அதுவே செய்வேன் , இது என்ன அரசாங்கமா ஒரு ஐந்தாண்டு திட்டம் தீட்டி செயல்ப்பட.

உங்களுக்கு புடிச்ச லோகநாயகர் வசனந்தேன்
"கடவுள் பாதி ,மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான் ,
உள்ளே மிருகம் ,வெளியே கடவுள் ,
விளங்க முடியாத கவிதை நான்"

நீ முழுசாவே மிருகம் தான்னு சொன்னாலும் மகிழ்ச்சியே ,ஏதோ உயிருள்ள ஒன்றாக சொன்னீர்கலே :-))

//உங்ககிட்ட விசயம் இருக்குது.சரக்கு!இருக்குது.பேசும் பொருள் (சப்ஜக்ட்) குறித்த ஆழ்ந்த பார்வையிருக்கும் போது கரடு முரடான பின்னூட்டம் ஏன் செய்றீங்கன்னு தெரியல.//

உங்களின் மேலாண மதிப்பீட்டிற்கு மிகவும் நன்றி!

ஆனால் இப்படிலாம் நீங்க சொல்றதை பிராபல்யங்கள் பார்த்தாங்க உங்களை துரோகின்னு சொல்லிடுவாங்க :-))

என்ன செய்யுறது நான் இன்னும் கிராமத்தானாகவே இருக்கேனே, வாய்க்கா ,வரப்பு , எறுமை மாடு, கோழி ,பன்னின்னு பார்த்துட்டு இங்கே வந்தால் நிஜமான அனிமல் பிளானட்டே இங்கே தான் இருக்கு ஆனால் இங்கிலீப்பீசு பேசிக்கிட்டு :-))

நான், ஒரு நாள் நண்டுப்பிடிக்கிறேன்னு வாய்க்காலில் இருந்த பொந்துக்குள் கைய விட்டு பாம்பை புடிச்சுட்டேன் (ஆமாம் இவரு பெரிய படையப்பரு)நல்லவேளை அது தண்ணீ பாம்பாக இருக்கவும் இப்போ உங்க கூட பேசிட்டு இருக்கேன் :-))

நல்லப்பாம்பையே கழுத்தில போட்டுக்கிட்டவருன்னு நீங்க சொன்னாலும் சொல்வீங்க :-))

அதனால சலசலப்புக்கு எல்லாம் அஞ்சற பழக்கமே கிடையாது .

முட்டாப்பையன் said...

இன்னும் சற்று நேரத்தில் இந்திய நேரப்படி வவ்வாலின் முகத்திரை எங்கள் தளத்தில் கமெண்ட்ல் கிழிக்கப்படும்.

மொத்த டேட்டாஸ் கவசம் இருக்கு.
வவ்வால் நீ இல்லாதப்ப வந்துட்டேன் என்று சொல்ல பிடாது.

முட்டாப்பையன் said...

ஆறு மணிக்கு மேல்

முட்டாப்பையன் said...

ஆறு மணிக்கு மேல்

வவ்வால் said...

முட்டாப்பையர்,

வாய்யா, எனக்கு இலவசமா விளம்பரம் கொடுப்பதற்கு நன்றி, என்னையும் பிராபல்ய பதிவராக ஆக்கி விடுவது என்ன உன்னோட லட்சியத்தினை பாராட்டுகிறேன்,ஆனால் உன் தளத்துக்கு இங்கே விளம்பரம் போடாதே, உன்னோட வேலை எனக்கு விளம்பரம் செய்றது தான் புரியுதா, எனவே எதுவா இருந்தாலும் அதை இங்கே வெளியிடு :-))

வேண்டுமானால் நான் ஒரு தனிப்பக்கம் திறக்கிறேன் அதில உன் டேட்டா எல்லாம் போடு , அப்படியே எல்லாருக்கும் போய் சொல்லணும் இத மாதிரி "வவ்வால் தளத்தில் நாங்க விளம்பரம் செய்றோம் வாங்கோனு"

சரியா அப்ரண்டீஸ்களா :-))

முட்டாப்பையன் said...

வாங்க வவ்வால்.
வந்துட்டோம்.

முட்டாப்பையன் said...

யோவ்.வா இரண்டு இடத்துலயும் கமெண்ட் போடுவோம்

முட்டாப்பையன் said...

இப்ப ஒரு சின்ன விஷயம்
ஜேம்ஸ் பாண்ட் யார் தெரியுமா?

நம்ம வவ்வால் தான்.
பக்கா ஆதாரம் இருக்கு,.

முட்டாப்பையன் said...

சரியா அப்ரண்டீஸ்களா :-)) ///

யாரு நாங்களா.??
உனக்கு பின்னாடி சத்தம் வருதா?
பாரு.
நீ சொன்னத பார்த்ததும் உனக்கே வருது பாரு சத்தம்.

முட்டாப்பையன் said...

யோவ் வவ்வால் இதுக்கே திகைச்சி நின்னா எப்படி?

முட்டாப்பையன் said...

@ கும்மி குரூப்ஸ்
இது போய் இல்லை.
டைப் pad account ஓபன் பண்ணி ஏகப்பட்ட வேளை பார்த்திருக்கார் நம்ம ஒம்போது .

பாவாட சாமி said...

இந்த பச்சிலை புடுங்கி இதெல்லாம் பண்ணி இருக்கா

முட்டாப்பையன் said...

சரி அதை விடுவோம்.நம்ம ஆள் என்ன பண்ணுறாரு தெரியுமா?
தினமும் கில்ல்மா சைட் தான் பாக்குறாரு.என்ன என்ன சைட் பாக்குறாரு தெரியுமா?
அது அடுத்த கமெண்ட்ல்

பாவாட சாமி said...

இந்த பச்சில புடுங்கி யார் யாருக்கோ மெயில் அனுப்பறாராம்..?அதுவும் எட்டு பேருக்கு மட்டும் ..உண்மையா..?

வவ்வால் said...

ஆல் அப்ரண்டீசுகளா இந்தப்பதிவில என்னய்யா பண்றிங்க , இதுல ஏற்கனவே 50 க்கு போயிடுச்சு பின்னூட்டம் ,நீங்க என்ன செய்றிங்க , இப்போ என்னோட லேட்டஸ்ட் பதிவு அஃதே ,இஃதேவுக்கு வாரிங்க, அங்கே இன்னும் 50 அடிக்கலை ஆர அமர பேசிக்குவோம், சரியா,

ஓடி வாங்க, வவ்வால் கவுண்ட் ஸ்டார்ட்ஸ் நவ்..1...2..3 ...

பாவாட சாமி said...

உனக்கு 12 வயசுல புள்ள இருக்காமே...அத பத்தின டீடெயில் வேணுமா..வா எங்க ஏரியாவுக்கு....எடக்கு மடக்கு...

முட்டாப்பையன் said...

மக்களே பார்த்துக்கோங்க.இந்த உத்தமரின் திருவிளையாடல்களை.
தினம்தோறும் பார்ப்பது கில்மா சைட் .சாட் பண்ணுவது பெண்களிடம் அதுவும் வேறு பேரில் .
இந்த உத்தமர் என்னும் கருணாநிதி & ஜெயலலிதா (மனைவி)இதுக்கும் துணை போகுது.

நன்றி! எடக்கு மடக்கு தொழில் நுட்ப்ப வல்லுனர்கள்.

முட்டாப்பையன் said...

பாவாட சாமி said...

உனக்கு 12 வயசுல புள்ள இருக்காமே...அத பத்தின டீடெயில் வேணுமா..வா எங்க ஏரியாவுக்கு....எடக்கு மடக்கு.../////

என்ன பாவாடை சாமி ?
அதுக்குள்ளே உண்மைய உடைச்சிட்ட..
இப்ப பாரு வவ்வால் எனக்கு ஆண்மையே இல்லை.
எனக்கு மகன் பிரக்கலை. அது யாருக்கோ பிறந்ததுன்னு பதில் போடுவார் பாரு.
அப்படி இல்லாட்டி வாதம் பண்ண திறமை இல்லாததை இந்த ப்ளாக் உலகத்துக்கு வேற ஏதாவது சொல்லி நிரூபிப்பார்.
அதாவது நம்மளை ஒட்டுராராம்.

முட்டாப்பையன் said...

எடக்கு மடக்கு எதையும் ஆதாரம் இல்லாம செய்யாது.

முட்டாப்பையன் said...

உன் மகன் பேர் என்ன?படிக்கும் பள்ளி பேர் இன்னும் விவரம் வேணுமா?
எங்களை தொடர்பு கொள்ளவும்.

இன்னும் நிறைய விஷயம் இருக்கு.போது வெளியில் பகிர நாங்கள் விரும்ப வில்லை.
நாங்கள் நாகரீகமானவர்கள்.

இன்னும் உன் புகை படம் முதல் கொண்டு எங்களிடம் இருக்கு.
நீ அனானி என்பதால் நாங்கள் குறைந்தபட்ச நாகரீகம் கடைபிடிக்கிறோம்

முட்டாப்பையன் said...

புரட்சிக்காரன்

வவ்வலை கதற கதற கற்பழித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் தளத்தை ஆரம்பம் முதலே பார்த்து கொண்டு வருகிறேன். அது உங்களுக்கும் தெரியும். நீங்கள் இந்த தளத்தில் கிழித்து தொங்க விட்ட ஆட்கள் சாம் அன்டர்சன், மத வெறியர்கள், இப்பொழுது டம்மி பதிவர்கள். டம்மி என்று முன்று பேரை (திரு.வவ்வால்,
திரு.மோகன்குமார், திரு.ஜாக்கி சேகர்) சொல்லி, அதில் வவ்வலை மட்டும் கதற கதற கொதறி விட்டீர்கள். மானம் இருந்தால் வவ்வால் இந்த நேரம் தூக்கில் தொங்கி இருக்கும்.
பதிவுலகில் அலையும் சில தரம் கெட்டவர்களை/உங்கள் பாஷையில் டம்மி பதிவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய பிராது தான் இது. நான் பிராது குடுபவர்கள் உங்கள் குரூப்பில் கூட இருக்கலாம்.
1) முதலில் நீங்கள் கதற விட்டவர் சாம். சொன்னா காரணம் அவர் பிரபல பதிவர்களை ஸ்பூப் செய்கிறார். சரியான காரணம், அவர் யார் என்று தெரியாமலே அவரை கிழித்தீர்கள். பக்கி-லீக்ஸ் (http://mokkaiblog.blogspot.com) பிரபல பதிவர் (http://padhivar.blogspot.in), இந்த இரண்டு தளங்களை பற்றி நீங்கள் கண்டிப்பாய் அறிவீர்கள். இந்த இரண்டு தளங்களில் அதிகமாக தாக்க பட்டவர் ஜாக்கி சேகர் தான். இதில் பக்கி-லீக்ஸ் தளத்தில் "Philosophy Prabhakaran" என்ற பதிவர் தான் எழுதினர். அவர் பெயரில் ஒரு பதிவு கூட வந்தது. அது அப்படி எழுதியது தப்பு என்று நான் சொல்ல வில்லை. யார் என்று தெரியாத சாம்மை ஸ்பூப் செய்கிறார் என்று கிழித்த நீங்கள் ஏன் Philosophy Prabhakaran பற்றி எழுத வில்லை. அந்த தளத்தை நடத்தி வருபவர் கருந்தேள் மற்றும் கொழந்த கணேஷ் தான் என்பது FB பயன்படுத்தும் அனைவர்க்கும் தெரியும். அவர்களை (Prabhakaran,கருந்தேள்,கொழந்த) நீங்கள் சாம்மை கிழித்தது போல் கிழிப்பேர்களா.

2) அடுத்து நீங்கள் தாக்கிய ஆள் சிபி, காரணம் கில்மா போஸ்ட், மற்றும் காப்பி பேஸ்ட். அதே வேலையை செய்யும் இன்னும் உள்ளார்கள். கில்மா போஸ்ட் எழுதும் நிருபன், இன்னும் தமிழ்மணத்தில் உள்ளார். மத சண்டையை முட்டி விடும் ஆள். இன்று கூட உள்குத்து பதிவு போட்டு உள்ளார்.
புதிய தலைமுறையில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யும் யுவ கிருஷ்ணா, இவரை தமிழ்மணம் நீக்கி விட்டது, காப்பி பேஸ்ட் காரணத்தால் அவரை நீக்கி விட்டது, இவர்களை பற்றி நீங்கள் எழுதுவீர்களா?



***முட்டாப்பையன் said...

பாவாட சாமி said...

உனக்கு 12 வயசுல புள்ள இருக்காமே...அத பத்தின டீடெயில் வேணுமா..வா எங்க ஏரியாவுக்கு....எடக்கு மடக்கு.../////

என்ன பாவாடை சாமி ?
அதுக்குள்ளே உண்மைய உடைச்சிட்ட..
இப்ப பாரு வவ்வால் எனக்கு ஆண்மையே இல்லை.***


guys: Nobody has any right to criticize one's family. They have nothing to do with this. You should never talk about vavvaal's family members, ever.

Secondly, I am not sure how you guys accuse vavvaal as jamesbond (some ip research?). I really does n't care even if he is.

You can only talk about his behavior as a blogger. I dont think anybody has any right to comment vavaal or anybody what site he visits. he has the freedom to visit anywhere he wants. It is wrong to get into one's personal life. You should not get into his privacy wWRONG!

Take him on as a blogger, his posts, his responses. That is all you can do. Otherwise you might run into some legal trouble- I am serious. You do not have any right to watch anybody's personal activities and disclosing that in public. Moreover, it has nothing to do with his post and responses.

I have to tell you this becos I have got involved in discussion here. Whether you listen to me or not, does not matter. But I need to tell this.

Bye!

புரட்சிக்காரன் தாங்கள் எங்கள் தளத்திற்கு தொடர்ந்து வருவதை நாங்கள் அறிவோம்.

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் நாங்கள் எழுதும் பதிவுகள் எங்கள் குழுமத்தினராலே ஒன்று சேர்ந்து முடிவு செய்யப்படும்.

எங்கள் தளத்தில் பகிரப்படும் விழிப்புணர்வு பதிவுகளும் எங்கள் குழும விருப்பப்படியே எழுதி வருகிகிறோம் என்பதை இந்த நேரத்தில் சொல்கின்றோம்.

***புரட்சிக்காரன் said... blah blah***

ஒரு பின்னூட்டத்துல இத்த்னை பேரு தலைய உருல வச்சாலும், குற்றச்சாட்டு என்பது வேற உண்மை என்பது வேற!இந்தத் அனானிமஸ் தளம் நடத்துரவரு இவருதான் என்றெல்லாம் நீங்க சொல்வதெல்லாமே "பொய் குற்றச்சாட்டுகள்"தான். இதில் உண்மை இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். அம்புட்டுத்தான்.

@
யோவ் வௌவாலு.
இதுக்கு மேல நீ ___போகலாம்யா .

ராஜ நடராஜன் said...

@முட்டாப்பையன்!ஓரளவுக்கு சார்பு நிலையற்றே மேலே காணப்படும் பின்னூட்டம் தெரிகிறது என்ற போதிலும் எனக்குத் தெரிந்த வரை வவ்வாலும்,வருணும்தான் முட்டிக்கொள்வது வழக்கம்.புதிதாக நீங்கள் எங்கே வவ்வாலுக்கு எதிராக முளைத்தீர்கள் என்று தெரியவில்லை.வருணுக்கும் எனக்கும் கூட மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் விவாதம் குறித்த உரையாடல்கள் நிகழ்வே செய்கின்றன.ஆனால் வவ்வாலின் பின்னூட்டங்கள் சில நேரங்களில் கரடு முரடாக இருந்தாலும் கூட பொது தளத்தில் எப்படி சொற்பிரயோகம் உபயோகிப்பது என்பதை அமெரிக்கா போயும் வருண் கற்றுக்கொள்ளவில்லை என்பதில் வருத்தமே.

எல்லோரும் முகமூடி போட்டுக்கொண்டே பதிவுலக களையெடுக்க முயற்சி செய்வது பதிவுலக முரண்:)

வவ்வால் தமிழ்மணம் போன்ற திரட்டியில் இல்லை.அப்படியிருந்தும் அவரது பதிவுகளுக்கு அவரை சகபதிவர்கள் அவரை நாடி வருவது அவரது விசய ஞானம் குறித்த அறிவு திறமையினால்.அவரது பதிவுகள்,பின்னூட்டங்கள் குறித்த எதிர் விமர்சனங்களை முன் வையுங்கள்.விட்டால் ஒருவரின் வங்கிக்கணக்கு தகவல்கள் கூட எனக்குத் தெரியுமாக்கும் என்று வாக்குமூலம் தருவர்ர்கள் போல இருக்குதே!வவ்வாலின் குடும்பம் பற்றி விவாதிப்பதும் எந்த தளத்திற்கு செல்கிறார் எனப்தெல்லாம் தேவையற்ற ஒன்றே என்பதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

ஏனைய ஊடகங்களில் கிடைக்காத கருத்து சுதந்திரம் கிடைக்கிறது என்பதற்காகத்தானே பதிவுலகம் வருகிறோம்.அதற்காக இந்த மாதிரியான கருத்து சுதந்திரத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்.

இத்தோடு விட்டு விடலாமே!வவ்வாலின் பதிவுகள் குறித்த ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறேன்.மீண்டும் நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

உங்க எல்லாரோடையும் ஒரே அக்கப்போரா போச்சு ,புதுசா ஒரு பதிவுப்போட்டப்பிறகு ஏன் கண்ணுக்கு தெரியாம பழையதிலேயே பேசிக்கிட்டு இருக்கிங்க, மெயில் உள்ளே போனாத்தான் பழைய பதிவுல போட்ட பின்னூட்டமே தெரிய வருது.

அந்த அப்ரண்டீசுகள் தான் வேணும்னே முந்தையப்பதிவுல போய் பின்னூட்டம் போட்டா நீங்களுமா?

வாங்க அஃதேவுக்கு அதை பாப்புலர் ஆக்கலாம் :-))

Anonymous said...

பீப்பிள் தொலைக்காட்சிய எதாவது சொன்னா அருளு அருளு வந்து உருளு உருளுன்னு உருண்டுட்டுப் போவாரு. உனக்கேன்யா வம்பு.

வவ்வால் said...

அனானி,

யாருப்பா இது ,எவ்வளவோ பார்த்துட்டோம் ,அவரு உருளுவதையா பார்க்கமாட்டோம், இது இரத்த பூமி உருண்டா உடம்புந்தேன் ரத்தமாகும் :-))