பாடகி சின்மயி ஶ்ரீபதா மற்றும் துவித்தர்கள் இடையேயான வழக்கின் உண்மையறியும் நோக்கில் முந்தைய பதிவினை எழுதினேன்,அதிலும் முழுமையாக அலசவில்லை எனினும் ஓரளவுக்கு நினைத்ததை சொல்லி இருந்தேன் , எஞ்சியதை எழுத வேண்டாம் என நினைத்தாலும் சில பின்னவினத்துவ எழுத்தாள ஆளுமைகள் , தினத்தந்தி ,மாலை மலரில் வருவதை எல்லாம் அடிப்படையாக வைத்து , சொந்த கருத்தினையும் ஏற்றி மாபெரும் இணையக்குற்றத்தினை எதிர்ப்பது அறம் என்பது போல உண்மை தன்மைக்கு மாறாக கட்டமைப்பதை படிக்கையில் ,இதனை இன்னும் கொஞ்சம் ஆய்ந்து எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
எழுத்தாளர் திரு.மாமல்லன், திரு.மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நடு நிலையுடன் , மனித உரிமை மீறல் இவ்வழக்கில் மீறப்படுவதையும், எதிர்கால இணைய வளர்ச்சிக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் பூட்டுப்போடும் ஒரு முயற்சியின் துவக்க புள்ளி என்பதை உணர்ந்து , ஒரு எழுத்தாளராக ,கருத்தாளராக தத்தம் கருத்துக்களை பாரபட்சமின்றி வெளிப்படுத்தி ,கருத்து சுதந்திரத்தின் முக்கியத்தினையும், அதனை இழந்து விடக்கூடாது என்ற சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.
அதே சமயம் தங்களை உலக மகா எழுத்து சிற்பிகள் என பறை சாற்றிக்கொள்ளும் திரு.சாருநிவேதிதா மற்றும் திரு ஜெயமோகன் ஆகியோர் வாய் புளித்ததோ ,மாங்காய் புளித்ததோ என நானும் சொல்கிறேன் கருத்தென , கருத்து சுதந்திரம் ,அடிப்படை மனித உரிமைகளின் மீது ஒரு லாரி லோட் மண் அள்ளிக்கொட்டியிருக்கிறார்கள்.
ஜெயமோகன் அகவயமாக இந்து ஞான மறபின் அடிப்படையில் சிந்தித்து புறவயமாக இணையத்தில் எழுதி இருப்பார் போல :-))
இவர் ஏதோ ஒன்றுக்கு நிதி கொடுங்கள் என்றாராம் இணைய இளைஞர்கள் பைசா அவிழ்க்கவில்லையாம், ஆனால் இந்த "சோ கால்டு " இணைய போக்கிரிகளுக்கு வழக்காட 15 லட்சம் நிதி திரட்டப்பட்டு விட்டதாம் , ஏன் எனில் இணையத்தில் உலாவும் இளைஞர்கள் எல்லாம் ஆபாசமாக பேசுவதில் பெரு வேட்கை கொண்டு அலைபவர்கள் எனவே தம்மினத்தாரை காக்க கொடையளிக்கிறார்கள் என திருவாய் அருளியுள்ளார்.
அது எப்படி அய்யா அட்சர சுத்தமாக 15 லட்சம் என நாகர்கோவிலில் உட்கார்ந்து கொண்டே ஞான திருஷ்டியில் பார்க்க முடிகிறது?இனி இந்திய அரசு அன்னிய செலவாணி வழக்குகளில் உதவி கேட்டு நாகர்கோவிலுக்கு படை எடுக்கும் என்பது மட்டும் உறுதி. ஃபெரா,ஃபெமா வழக்குகளில் ஜெமோ வின் ஞானப்பார்வைக்கு நல்ல தீனிக்கிடைக்கும் :-))
அப்படியே சுவிஸ் வங்கிகளில் யார் ,யார் என்ன தொகையை பதுக்கி வைத்துள்ளார்கள் என கண்டறிந்து சொன்னால் , சென்னை மெரினா பீச்சில் சிலை வைத்து தொழுவார்கள் நாட்டு மக்கள் :-))
சில நாட்களுக்கு முன்னர் ஜெ.மோ தனது பரிவாரத்துடன் கூடன்குளம் சென்று வந்ததாக எழுதியுள்ளார், கூடங்குளத்தில் பெண்களின் மீது பாலியல் ரீதீயான தாக்குதல்களை அரசு எந்திரம் நடத்தியதாக அய்யா விரும்பி படிக்கும் மாலைமலர்,தந்தி வகையறாவில் கூட செய்தி வந்ததே, அங்கிருந்த மக்களும் சொல்லி இருப்பார்களே, எனவே அதனடிப்படையில் பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான அறச்சீற்றத்தினை அய்யா ஏன் இது வரைக்காட்டவில்லை?
அப்படி எல்லாம் பேசினால் கிடைக்கும் ஒன்றிரண்டு நூலக ஆர்டர்களும் காணாமல் போகும், நஷ்டம் வரும் என தெரியாதா இந்து ஞான மறபின் அடியொற்றி தோன்றிய வேத எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு :-))
ஜெ.மோவாவது ஞான மறபு, அறம் ,புறம்னு சொல்லிக்கொள்ள ஒரு கருத்தாக்கம் வைத்துள்ளார், ஆனால் இணையத்தில் ஊர் சுற்றிப்பார்க்க காசு கொடுங்கள், விருது வாங்கணும் மொழிப்பெயருங்கள் என சொல்லிக்கொண்டு ,கமா,ஃபுல் ஸ்டாப் இல்லாமல் காமசூத்திரம் எழுதும் சாரு நிவேதிதாவும் சொம்பெடுத்து கரகம் ஆடுவது நேற்று புதிதாய் தமிழ் வாசிக்க ஆரம்பித்தவர்களையும் நகைக்க வைக்கும்.
இதற்கே இணைய உரையாடலில் பாலியல் தொல்லைக்கொடுத்து வகையாக மாட்டிக்கொண்டவர். இதே இணைய வெளியில் அனைவராலும் கழுவி கழுவி ஊத்தப்பட்டவர் ,ஆனால் மறதி ஒன்றே மாறாதது மக்கள் மறந்திருப்பார்கள் என திடீர் பெண்ணியக்காவலராக அவதாரம் எடுத்து அருள் வாக்கு சொல்லும் கொடுமைகளை வர்ணிக்க தமிழில் சொற்கள் இல்லை.
பின்னவினத்துவ எழுத்து சிற்பிகளில் சிலர் இப்படி பொங்க அடிப்படை காரணம் என்னவெனில் இவர்கள் எல்லாம் ஆதிகாலத்தில் தங்கள் எழுத்துக்களை வெளியிட முட்டி மோதி மண்டையுடைத்துக்கொண்டவர்கள் , இலக்கிய பத்திரிக்கையில் எழுதினாலும் சன்மானம் கிடையாது, வாசிப்பவர்களோ விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். நூல் வெளியிட சொந்த காசை செலவு செய்து சூனியம் வைத்துக்கொண்டவர்கள். இத்தனை கஷ்டத்திற்கும் பிறகு எழுத்தாளர் என பேர் வாங்கினாலும் மொத்தமாக ஒரு ரெண்டாயிரம் பேருக்கு இவங்க பேரு தெரிந்தாலே அது ஒலக அதிசயம்.
ஆனால் இணையம், வலைப்பதிவு , முகநூல்,துவித்தர் என வந்த பின் பொழுது போக்காக எழுத ஆரம்பித்தவர்களும் நன்றாக எழுதுகிறார்கள், வெகு ஜன ஊடகமும் கவனிக்கிறது ,அவர்களும் இணைய எழுத்தாளர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள் ,பலருக்கும் நன்கு அறிந்தவர்களாக உருவெடுக்கிறார்கள். இதனை எல்லாம் காணும் "சோ கால்டு" பின்னவினத்துவ எழுத்து சிற்பிகளுக்கு அடிவயிற்றில் அமிலம் அபரிமிதமாக சுறக்க ஆரம்பித்ததன் விளைவே சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இணைய படைப்பாளிகளின் மீது சாணியடிக்க காரணம் எனலாம்.
இணையத்தில் எழுதுபவர்களுக்கு இரண்டு வரிகளுக்கு மேல் எழுத வருவதில்லை, அரைப்பக்கத்திற்கு மேல் படிக்க பொறுமை இருப்பதில்லை என்றெல்லாம் பொருமியுள்ளார், ஜெமோ. பொதுவாக அப்படி ஒரு தோற்றம் இருந்தாலும் நிலைமை அந்தளவு மோசமில்லை எனலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரே ரெண்டு வரியில , ஏழு சீர்களில் 1,330 குறள்களை எழுதி , உலக பெரும் அறத்தினை சொல்லியிருப்பதை ஜெமோ ஏனோ கவனிக்கவில்லை.
அவரைக்கேட்டால் திருவள்ளுவருக்கு ரெண்டு வரிக்கு மேல தமிழ் எழுத தெரியவில்லை என சொன்னாலும் சொல்வாராயிருக்கும் :-))
உலகின் முதல் துவித்தர் திருவள்ளுவர் என்று சொன்னால் மிகையில்லை, துவித்தரை ஆரம்பித்தவர்கள் திருக்குறளை படித்திருப்பார்கள் என நினைக்கிறேன், அதான் 140 சொற்களில் சுருங்க சொல்லி விளங்க வையென துவித்தர் சேவை துவக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
-----------------
அறம் ,பெண்ணியம், என சொல்லி தர்க்கம் செய்பவர்களுக்கும், சட்டம் தன் கடமையை செய்தது என்பவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட முறைகளில் செயல் படுத்தப்பட்டதா என அறிவார்களா?
இதனை சுருக்கமாக காணலாம்.
A &B என இருவருக்கும் ,C என்பவருக்கும் துவித்தரில் விவாதம் நடக்கிறது , ஒரு கட்டத்தில் C உடன் விவாதம் முற்றவே , C இருவரையும் தடை செய்து விடுகிறார், எனவே A&B வெளியிடும் செய்திகள் தெரியாது.
A, மற்றும் B தங்களுக்குள் உரையாடுகிறார்கள் , தடை செய்தவர்கள் உரையாடுவதை ஏன் தொடர்ந்து போய் C கவனிக்க வேண்டும், ஆனால் கவனிக்கிறார், அவ்வப்போது அதனை விமர்சிக்கவும் செய்கிறார்.
பின்னர் தன்னை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள் என சில ஸ்கிரீன் ஷாட்டுகளுடன் சைபர் கிரைமில் புகார் செய்கிறார்.
புகாரினை விசாரிக்கும் காவல்துறை அதன் உண்மை தன்மை என்ன என விசாரிக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பையும் அறிய வேண்டும்.
அவதூறு சொல்லாடலின் ஸ்கிரீன் ஷாட்களின் உண்மை தன்மையை அறியவும், யாருடைய இணைய கணக்கில், ஐ.பியில் இருந்து அந்த தகவல்கள் இணையத்தில் ஏற்றப்பட்டது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
இன்னார் ஐ.பி என தெரியாத நிலையில் , துவித்தர் செர்வரில் இருந்து தகவல்கள் பெற வேண்டும்.
துவித்தர் அமெரிக்காவில் இருந்து இயங்குவதால் ,அவர்களை கேட்டதும் இந்தா எடுத்துக்கொள்ளுங்கள் என தகவல் கொடுக்க மாட்டார்கள் ,குறைந்த பட்சம் கோர்ட்டில் இருந்து ஒரு உத்தரவு பெற்று காட்ட வேண்டும்.
அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட துவித்தர் கணக்குகளின் log in விவரங்களை கொடுப்பார்கள்.
இதிலும் ஒரு தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, துவித்தரில் ஒருவரை லட்சத்திற்கு மேல் தொடர்பவர்கள் இருப்பார்கள், ஒரு செய்தி வெளியிட்டதும் அனைவருக்கும் துவித்தர் செர்வர் ரிலே (broadcast)செய்யும், எனவே செர்வர் சிறப்பாக இயங்க அதன் டேட்டா பேஸ் விரைவாக இயங்க வேண்டும், இதனால் எந்த துவித்தர் கணக்கிலும் 3,200 துவித்துகளுக்கு மேல் சேமிக்காது.
3,200 துவித்துகள் என்பதனை சிலர் 3 மாதங்களில் அடைந்துவிடுவார்கள் எனவே அவர்கள் இட்ட பழைய துவித்தர் விவரங்கள் அழிக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அழிக்கப்பட்டதை மீண்டும் எடுக்க ரெகவரி வேலை எல்லாம் செய்தால் தான் முடியும், எனவே துவித்தரிடம் சட்டப்படி விவரம் கேட்டு முறையிட்டாலும் உடனே தகவல் கிடைக்காது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
துவித்தரிடம் இருந்து பழைய துவித்துகள், மற்றும் ஐ.பி (internet protocol)விவரங்கள் மட்டுமே கிடைக்கும்.
ஐ.பி வைத்து பின்னர் முகவரி கண்டு பிடிக்க வேண்டும்.
ஒருவர் பல இணைய மூலங்களை பயன்ப்படுத்தினால் ,ஒரே துவித்தர் கணக்கிற்கு பல ஐ.பி, அதுவும் பல நேரங்களில் பதிவாகி இருக்கும்.
மேலும் ஐ.பியில் ஸ்டேட்டிக் ,I.p,டைனமிக் I.P என இரண்டு இருக்கிறது, டைனமிக் ஐ.பி ஒவ்வொரு முறையும் லாக்கின் செய்யும் போது மாறும். எனவே இந்த நாள் ,இந்த நேரத்தில் இந்த ஐ.பி ஐ பயன்ப்படுத்தியவர் பெயர் முகவரி கண்டுப்பிடித்து தாருங்கள் என , இணையம் வழங்கிய ஐ.எஸ்.பி (internet service provider)யிடம் கேட்டு பெற வேண்டும்.
இதுவே பல கணினிகள் ,ஒரே ஒரு இணைய இணைப்பு உள்ள அலுவலகம், பிரவுசிங்க் சென்டரில் இருந்து ,துவித்தரில் உரையாடி இருந்தால் ,இன்னார் என அடையாளப்படுத்துவது இன்னமும் கடினம், அப்பொழு கணினியின் MAC (Media Access Control address) எண் வைத்து தான் அடையாளப்படுத்தப்படும், இது physical address of the lan card ஆகும். அதன் மூலமே நாம் ஒரு உள் கணினி வலையில்(local network-intranet ) இணைந்து ரூட்டர்/மோடம் மூலம் உலக வலைக்கு(world wide web-internet) இணைப்பு பெருகிறோம்.
எனவே நெட் ஒர்க்கில் உள்ள குறிப்பிட்ட கணினியில் ,குறிப்பிட்ட நேரத்தில் யார் பயன்ப்படுத்தினார்கள் என அறிந்த பின்னரே , இன்னார் என முடிவுக்கே வர முடியும்.
எல்லாம் செய்து முடித்தாயிற்று,இப்போது குறிப்பிட்ட சில ஐ.பிகளின் முகவரி கிடைத்துவிட்டது,முகவரியும் அறியப்பெற்றாயிற்று ,
அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பை அறிய , எழுத்துப்பூர்வமாக ஒரு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வர சொல்ல வேண்டும்.
சம்மன் பெற்றுக்கொண்டவர்கள் நேரில் ஆஜராக உரிய விளக்கம் அளித்து ,அது திருப்திகரமாக இல்லை என்ற பின்னரே கைது செய்து , நீதி மன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் தள்ளமுடியும்.
மேற்சொன்ன நடை முறையினை படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளலாம் , அனைத்தினையும் சட்டப்படி செய்ய சில ,பல நாட்கள் பிடிக்கும் என்பது, ஆனால் தற்போதைய கைதில் என்ன நடந்தது?
புகார் கொடுக்கும் போதே இன்னார் ,இன்னார் , இந்த ஊரு, இங்க வேலை செய்யறார், என சொல்கிறார், அடுத்த நாளே கைதாகி சிறையில்.எப்படி சாத்தியம்?
காரணம் ,பெயர் ,முகவரி கொடுத்து, புகாரும் கொடுத்து அதன் மீதே கைது நடந்திருக்கிறது. கூடவே குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவுமே இல்லாததை வைத்தே இதனை அறியலாம்.
எனவே இவ்வழக்கில் தொழில்நுட்பமும் ,சட்டமும் பின் பற்றப்படவில்லை, சாமனியனை பிடித்துப்போட்டால் ஆதாரம் இருக்கா என்று கேட்டால் உடம்புக்கு சேதாரம் தான் என்பதால் எவ்வித எதிர்ப்பும் காட்ட இயலவில்லை.
புகாரில் அவதூறாக பேசியது , கொலை மிரட்டல்,பாலியல் தொல்லை, ஆபாசமாக படம்ம் வெளியிட்டனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது ஆனால் எதற்கும் முறையான ஆதாரங்கள் இல்லை, இனிமேல் தான் கண்டுப்பிடிப்பார்க்களாயிருக்கும்.
இதில் மிகவும் கொடுமையான விடயம் என்னவெனில் , லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்பவர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது, அவரோ நான் "ஜின்னாத்தா" என ஒருவருக்கு துவித்தரில் சொன்னேன் அதை தவிர எதுவும் செய்யவில்லை என்கிறார்.
துவித்தரில் பகடி செய்தவர்கள் "சின்னாத்தா" என புனைப்பெயர் சூட்டி செய்தார்கள், எனவே ஜின்னாத்தா என சொன்னதும் மன உளைச்சலை ஏற்படுத்தியது என்ற ரீதியில் குற்றம் சாட்டுக்கிறார்கள்.
சின்னாத்தா என்ற பெயர் காப்புரிமை பெறப்பட்ட பெயரா என்ன?
தி.மு.க தலைவரை கலைஞர் கருணாநிதி என அழைக்கிறார்கள், எனவே கலைஞர் என மற்ற யாரையும் குறிப்பிட கூடாது என சொல்லிவிட முடியுமா?
அப்படி சொன்னால் விஜயகாந்திற்கு புரட்சிகலைஞர் என பட்டப்பெயர் வைக்க முடியாது, மறைந்த நடிகர் ஜெய்சங்கரை "மக்கள் கலைஞர்" என அழைத்திருக்க முடியாது. இவ்வளவு ஏன் இசைக்கலைஞர்,நாட்டிய கலைஞர் என்று கூட எழுதிட முடியாது.
இவ்வளவு ஏன் விகடனில் லூசு பையன் என்ற பெயரில் ஒரு காமெடி கார்ட்டூன் தொடர் வருகிறது, அதில் குலைஞர், ஸ்காலின், போனியா என்றெல்லாம் பெயரில் கேரிகேச்சர் ஓவியங்களை வரைந்து காமெடி செய்வார்கள் ,அதுவும் குற்றமாகிவிடும் :-))
உண்மையில் ஆபாசமாக, வக்கிரமாக பேசி மன உளைச்சல் அளித்திருந்தால் முறைப்படி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கட்டும்,ஆனால் ஜின்னாத்தா என சொன்னதற்கு எல்லாம் மன உளைச்சல் அளித்தார்கள் ,அதுவும் ஆபாசம் தான் என இறங்கினால் ,நாட்டில் அனைவரும் சாப்பிடுவதற்கு தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாத வாய்ப்பூட்டு நிலையே ஏற்படும்.கொட்டாவி விட வாயை திறக்கலாமா என வழக்குரைஞர் ஆலோசனை கேட்க வேண்டியதாகும்.
--------------------
இணைய வெளியில் கட்டுப்பாடின்றி ஆபாசமாக பேசுவதற்கு ஒரு கடிவாளம் தேவை என நினைப்பவர்களுக்கு இப்பிரச்சினையின் ஆழம் விளங்கவில்லை எனலாம். அரசு எந்திரம், அதிகார வர்க்கம் ஒரு சட்டத்தினை முன்னெடுக்கும் போது அதனால் எத்தனை சதவீதம் நன்மை , தீமை என நோக்க வேண்டும்.
சட்டத்தின் செயல் முறையில் அதன் வீச்சு கடலில் மிதக்கும் பனிப்பாறை போல அதன் ஒரு சிறு முனை தான் வெற்றுப்பார்வைக்கு காண கிடைக்கும் , மறைந்திருப்பதே பெரும்பகுதி.
உதாரணமாக அமெரிக்காவில் அறிவுசார் காப்புரிமைக்கு என அறிவு திருட்டினை தடுக்க ,
"The Stop Online Piracy Act (SOPA) and PIPA/PROTECT IP Act"
என இரண்டு சட்ட முன் வரைவுகளை இவ்வாண்டு ஜனவரியில் அமெரிக்க அரசாங்கம் முன் மொழிந்தது, அதனை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும் ஆதரித்தன ,ஆனால் இணைய ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் என விக்கிப்பீடியா, கூகிள், மோசில்லா, என பல அமைப்புகளும் எதிர்த்தன , ஒரு நாள் முழுவதும் " பிளாக் அவுட்" செய்து கண்டனம் செய்தன.
விவரங்கள் அறிய:
#http://en.wikipedia.org/wiki/Stop_Online_Piracy_Act
#http://www.bbc.co.uk/news/technology-16596577
#http://www.1stwebdesigner.com/design/how-sopa-pipa-can-affect-you/
#http://www.pcworld.com/article/248298/sopa_and_pipa_just_the_facts.html
சோபா&பிபா வுக்கு மாற்றாக ,ஓபன் என்ற ஒன்றினை பரிந்துரைத்தார்கள்.
Online Protection and Enforcement of Digital Trade Act (OPEN)
http://en.wikipedia.org/wiki/Online_Protection_and_Enforcement_of_Digital_Trade_Act
மேல் விவரங்களை சுட்டியில் அறியவும்.
சோபா மற்றும் பிபா நடைமுறைக்கு வந்தால் என்ன ஆகும்.
# காப்புரிமை பெற்ற படைப்பினை பகிரும் இணைய தளங்கள் முடக்கப்படும், மேலும் அவர்களோடு யாரும் வர்த்தக உறவுகள் வைத்திருக்க கூடாது. விளம்பரங்கள் அளிக்க கூடாது.
காப்புரிமை பெற்ற பொருளை பகிரும் இணைய தளம் என அறியாமல் ,நமது தளத்தினை அதில் விளம்பரம் செய்தால் நமது தளமும் முடக்கப்படும்.
விளம்பர வருவாயை பெற்று அளிக்கும் ஒரு அமைப்பு இருந்தால் அதன் மீதும் வழக்கு பாயும்.
ஒரு சமூக வளைதளம் , பல பகிர்வுகளை செய்கிறது ,அதில் யாரோ ஒருவர் காப்புரிமை பெற்ற படைப்பினை பகிர்ந்துவிட்டால் , அதற்கும் அத்தளம் முடக்கப்படும்.
உதாரணமாக நமது வலைப்பதிவில் , காப்புரிமை பெற்ற படைப்பினை பகிரும் சுட்டியை போட்டு விட்டால் , நமது பதிவு முடக்கப்படும், ஏன் பின்னூட்டப்பகுதியில் யாரோ ஒருவர் சுட்டியை போட்டுவிட்டாலும் , வலைப்பதிவு முடக்கப்படும்.
# மைக்கேல் ஜாக்சன் பாட்டு நல்லா இருக்குன்னு அதனை நாமே பாடி வலைப்பதிவு ஏற்றம் செய்தாலும் , காப்புரிமை மீறல் என தளம் முடக்கப்படும்.
மெல்லிசை கச்சேரி செய்பவர்கள் கூட மேடையில் திரைப்பாடல்களை, தனி ஆல்பத்தில் உள்ள பாடல்களை பாடி நிகழ்ச்சி நடத்த முடியாது.
பொது இசை கச்சேரி செய்யும் பாடகி சின்மயி கூட இசை நிகழ்ச்சிகளில் பாடுவது சட்ட விரோதம் என கருத்து சொல்லி இருக்கிறார், நம் நாட்டில் சரியாக காப்புரிமை சட்டத்தினை பின்ப்பற்றவில்லை என்பது அவருக்கு வருத்தமாம்.
அப்படியான சட்டம் நடைமுறைக்கு வந்தால் வருமான இழப்பு அவருக்கு தான் என்பதனை கூட உணரவில்லை.
படம்:-1
---------------------
பாடகி தரப்பினர் ஆரம்பகாலத்தில் இருந்தே இணையத்தில் அனைவரையும் சந்தேகித்தே வந்துள்ளார்கள், பாடகியின் தாயார் எழுதும் வலைப்பதிவில் இசைக்குறித்து சந்தேகம் இருந்தால் மின்னஞ்சலில் கேளுங்கள் என்கிறார், கேட்டவர்களை உங்க ஐ.பி பார்த்தேன் இரண்டு ஐ.பியில் இருந்து ஏன் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் , இரண்டு கேள்விகளை கேட்டவரும் ஒருவரே என கண்டுப்பிடித்துவிட்டேன் என துப்பறியும் சாம்புவாக கேள்விக்கேட்கிறார் :-))
படம்:-2
பாடகி 2009 இல் ஒரு பதிவில் , எனக்கு அனாமதேய கால்கள் வருகிறது, அதை எல்லாம் நோட் செய்து வைத்துள்ளதாகவும், அனாமதேயமாக துவித்தரில் கருத்து சொல்பவர்களின் ஐ.பி எல்லாம் தெரியும் சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என எழுதியுள்ளார்.
இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவரோடு விவாதம் செய்தால் சைபர் கிரைம் என சொல்வதை ஆரம்பத்தில் இருந்தே வழக்கமாக வைத்துள்ளார்.அதனை எல்லாம் அவதானித்து உரையாடி இருந்தால் மாட்டிக்கொண்டவர்கள் சூதனமாக உரையாடி இருப்பார்கள், பிரச்சினையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.
படம்:-3
உண்மையில் துவித்தரில் அனாமதேயமாக கருத்து சொல்லி , தொந்தரவு கொடுப்பதாக நினைத்தால் எடுத்ததும் காவல் துறை செல்ல வேண்டிய அவசியமே இல்லை, பிளாக் செய்யலாம் அப்படியும் கோபம் தீரவில்லையா, துவித்தருக்கு "ஸ்கிரீன் ஷாட்" உடன் ,அந்த ஐ.டியை பற்றி மின்னஞ்சல் அனுப்பி முடக்க சொல்லலாம். இது போன்ற நடவடிக்கைக்கே தொல்லை கொடுப்பவர்கள் புரிந்து கொண்டு ஒதுங்கிவிடுவார்கள். அதையும் தாண்டி தொடர்ந்தால் மேல் நடவடிக்கையாக காவல் துறையை அணுகலாம்.
ஆனால் அப்படியான நிதானமான அணுகு முறையே இல்லை, மேலும் மிகப்பெரும் குற்றச்சாட்டினை சொல்லிய அளவுக்கு ஆதாரங்களும் இது வரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை காணும் போது , இந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை, மீனவர் பிரச்சினை, இட ஒதுக்கீடு ஆகிய விவாதங்களின் போது ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என்றே நினைக்க தோன்றுகிறது.
காரணங்கள் வேறாகவும் இருக்கலாம், ஆனால் சட்டப்படி நடவடிக்கை என சட்டத்தின் நடை முறை வழிகாட்டிகள் தனி மனித கருத்து சுதந்திரத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
-------------
மேலும் இந்நிகழ்வு குறித்து எழுத்தாளர் மாமல்லன் எழுதிய பதிவுகளையும் படித்துப்பார்த்தால் இப்பிரச்சினையின் இன்னொரு பரிமாணம் புலப்படும்.
# ஸ்கிரீண் ஷாட்டில் எடிட் செய்து திரிப்பு வேலைகள் செய்ததை விளக்கும் பதிவு:
http://www.maamallan.com/2012/10/blog-post_23.html
#சோ கால்டு தாழ்த்தப்பட்டவர்கள், மாட்டு சாணி போன்ற பதங்களுடன் கூடிய பாடகியின் துவித்தரை அலசும் பதிவு.
http://www.maamallan.com/2012/10/blog-post_28.html
# இயக்குனர் ராஜமவுலியின் வர்ணாசிரம பற்றினை , ரீட்டீவ்ட் செய்து மகிழ்வதை அலசும் பதிவு.
http://www.maamallan.com/2012/10/blog-post_26.html
நன்றி எழுத்தாளர் திரு.மாமல்லன்.
-------------
பின்குறிப்பு:
#தகவல் உதவி மற்றும் படங்கள்,
கூகிள் விக்கி, துவித்தர், மற்றும் பிபிசி. இணைய தளங்கள்,நன்றி!
# ஆபாசமாக உரையாடுதல்,மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் ,ஆனால் போலியான புகார்கள் மற்றும் பழிவாங்கல் ,தனிமனித காழ்ப்புணர்ச்சிகளும், கண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவு எழுதப்பட்டுள்ளது.
#இக்கட்டுரையின் நோக்கம் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ கலங்கப்படுத்தவோ,காயப்படுத்தவோ அல்ல, அப்படியே யாரேனும் பாதிக்கப்படுவார்கள் எனில் அது அறியாமை அல்லது புரியாமை என கருத வேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். பின்னூட்டமிடுபவர்களின் கருத்துக்கு இப்பதிவு பொறுப்பாகாது.
# டிஸ்கிளைமர் எப்படி எழுதுவது என தனியா ஒரு பயிற்சி எடுக்கணும் போல இருக்கே ...அவ்வ்வ் :-((
-----------------------------
33 comments:
Excellent post...
By, Maakkaan.
வணக்கம் நண்பரே,
நல்ல பதிவு.
பல் விடயங்களை தெளிவாக அவதனிக்க முடிந்தது. ஒரு சின்னப் பிரச்சினை என்னமோ உலக மகா விடயம் போல் முன்னெடுக்கப்பட்ட விதம் கண்டு அதிர்ச்சி மட்டுமே!!.
சின்மயி போன்ற மேட்டுக் குடி மக்களை வாழ்வில் மட்டுமல்ல இணையத்தில் கூட தவிர்த்தல் நல்லது எனப் புரிந்தது.
இதில் ஜெ.மோ சாரு என பின் நவீனத்துவ துருவங்களின் கருத்தும் ஒரே புள்ளியில் சந்தித்தது கூட வியப்பு இல்லை!!!
நித்தி சிஷ்யன் சாரு ஆபாசத்தை எதிர்க்கிறார்!!! ஹி ஹி ஹி
நாமும் கவலைப்படுவது இந்த கட்டுப்பாடு மற்றும் காப்புரிமை என்பது பதிவு எழுதுவதை கடுமையாக் பாதிக்கும்.அந்த வாய்ப்புகளையும் சுட்டியது அருமை
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மாற்று ஊடகமாக மக்கள் கருத்து பரிமாற்றங்கள் பிடிகாதவ்ர்களுக்கு இது நல்ல வாய்பு!!
நன்றி!!!
வவ்வால்!டுவிட்டர் பக்கம் போகாமல் பதிவுகளிலும்,பின்னூட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதால் ட்விட்டுகளின் முழுபரிமாணமும் இன்னும் புரியவேயில்லை.மாதக்கணக்கில்,வருடக்கணக்கில் இங்கொன்றும் அங்கொன்றும் கோர்வையில்லாமல் இருக்கும் நிகழ்வுகளில் ஒரு சார்பில் கிண்டலும்,கொச்சையும்,மறுசார்பில் பழிவாங்கும் குணமும் எஞ்சியிருப்பதை உணர முடிகிறது.
ரோமன் போலன்ஸ்கி பற்றிய wanted and desired என்ற ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது.ரத்தம் சூடான வயதில் பதின்ம வயது பெண்ணை பாலியல் உறவு செய்து அமெரிக்காவில் வழக்கு இழுபறியாகி அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ்க்கு குடியேறி இப்பொழுது முதுமை,அனுபவ வயதில் தான் செய்தது தவறு என்று கூறுகிறார்.
ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் சிறுகதை,அந்த கதையின் முடிவுக்கு அக்ரஹாரத்தில் எதிர் விமர்சனங்கள் கிளம்பியதால்
http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_31.html
கதையின் முடிவை மாற்றியிருந்தால் எப்படி நிகழ்வுகள் உருவாகியிருக்கும் என சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை எழுதினார்.
//வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ -// என்ற வரிகளையெல்லாம் உள்வாங்கி கொள்ளாமல் இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் தாயும்,மகளும் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருக்கிறது.இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்.பிரச்சினையின் பின் தாக்கத்தை உணராமல் அவசரமாகவும்,சினத்தோடு கூடிய திட்டமிடலும்,இவற்றுக்கு பின்புலமாக சகுனித்தனம் செய்வதற்கும் கூட யாராவது துணை செய்திருக்க வேண்டும்.பாதிப்பு என்னவோ ஒரு பெண்ணின் எதிர்காலம்.
கருத்துரிமை ஒரு புறமும் அதே நேரத்தில் கருத்துக்களுக்கும் கடிவாளமிடும் தருணங்கள் இருக்கின்றன என்பதை தற்போதைய பரபரப்புக்கள் உணர்த்துகின்றன.இந்தப் பிரச்சினை இரு தரப்பு சண்டைகளையும் மீறி அரசியல்,பிரபலங்கள் என விசுவரூபம் கொள்கிறது.
ஜெயமோகனுக்கு கூட இந்தப் பிரச்சினையில் கருத்து சொல்லும் தகுதியிருக்கிறது.ஆனால் சாரு?
மொத்த மனிதர்களின் சார்பு,எதிர் வாதங்களை விட முக்கியமானது இதில் பாதிக்கப்பட்ட இரு தரப்பின் எதிர்காலமும் அவர்களது வாழ்க்கையும்.ஏதாவது ஒருவிதத்தில் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வும் முற்றுப்புள்ளி வைப்பதுமே நல்லது.பதிவுலகம் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளது.ஒவ்வொன்றும் கால ஓட்டத்தில் பின்னோக்கிப் போய் விட்டன.இதுவும் கடந்து போகட்டும்.
வவ்வால்!டுவிட்டர் பக்கம் போகாமல் பதிவுகளிலும்,பின்னூட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதால் ட்விட்டுகளின் முழுபரிமாணமும் இன்னும் புரியவேயில்லை.மாதக்கணக்கில்,வருடக்கணக்கில் இங்கொன்றும் அங்கொன்றும் கோர்வையில்லாமல் இருக்கும் நிகழ்வுகளில் ஒரு சார்பில் கிண்டலும்,கொச்சையும்,மறுசார்பில் பழிவாங்கும் குணமும் எஞ்சியிருப்பதை உணர முடிகிறது.
ரோமன் போலன்ஸ்கி பற்றிய wanted and desired என்ற ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது.ரத்தம் சூடான வயதில் பதின்ம வயது பெண்ணை பாலியல் உறவு செய்து அமெரிக்காவில் வழக்கு இழுபறியாகி அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ்க்கு குடியேறி இப்பொழுது முதுமை,அனுபவ வயதில் தான் செய்தது தவறு என்று கூறுகிறார்.
ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் சிறுகதை,அந்த கதையின் முடிவுக்கு அக்ரஹாரத்தில் எதிர் விமர்சனங்கள் கிளம்பியதால்
http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_31.html
கதையின் முடிவை மாற்றியிருந்தால் எப்படி நிகழ்வுகள் உருவாகியிருக்கும் என சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை எழுதினார்.
//வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ -// என்ற வரிகளையெல்லாம் உள்வாங்கி கொள்ளாமல் இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் தாயும்,மகளும் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருக்கிறது.இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்.பிரச்சினையின் பின் தாக்கத்தை உணராமல் அவசரமாகவும்,சினத்தோடு கூடிய திட்டமிடலும்,இவற்றுக்கு பின்புலமாக சகுனித்தனம் செய்வதற்கும் கூட யாராவது துணை செய்திருக்க வேண்டும்.பாதிப்பு என்னவோ ஒரு பெண்ணின் எதிர்காலம்.
கருத்துரிமை ஒரு புறமும் அதே நேரத்தில் கருத்துக்களுக்கும் கடிவாளமிடும் தருணங்கள் இருக்கின்றன என்பதை தற்போதைய பரபரப்புக்கள் உணர்த்துகின்றன.இந்தப் பிரச்சினை இரு தரப்பு சண்டைகளையும் மீறி அரசியல்,பிரபலங்கள் என விசுவரூபம் கொள்கிறது.
ஜெயமோகனுக்கு கூட இந்தப் பிரச்சினையில் கருத்து சொல்லும் தகுதியிருக்கிறது.ஆனால் சாரு?
மொத்த மனிதர்களின் சார்பு,எதிர் வாதங்களை விட முக்கியமானது இதில் பாதிக்கப்பட்ட இரு தரப்பின் எதிர்காலமும் அவர்களது வாழ்க்கையும்.ஏதாவது ஒருவிதத்தில் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வும் முற்றுப்புள்ளி வைப்பதுமே நல்லது.பதிவுலகம் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளது.ஒவ்வொன்றும் கால ஓட்டத்தில் பின்னோக்கிப் போய் விட்டன.இதுவும் கடந்து போகட்டும்.
வவ்வால் அண்ணே இந்தப்பதிவ பேஸ்புக்ல ஷேர் பண்ணி இருக்கேன் இதில உங்களுக்கு ஆட்ணேபனை இல்லைல ராமகிருஷ்ணன்
சார்வாள்/ மேடம்வாள்(வவ்வால்'ல பொம்பள வவ்வாலும் இருக்குல்ல?)!
சரியான மேட்டருக்கு வந்து இருக்கீர் ஓய்!
அதுலயும் சாணி(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை, இதனால யாரும் மனஉளைச்சலுக்கு ஆளானா, எம்மேல சி.பி.பி.பி. ய கைது செய்யப் பணிக்கலாம்)பேசியிருக்கும் பெண்ணியத்துவம் எதுல சேத்தின்னு தெர்ல(சார், சாணி அடிக்கரதுன்னா ரெம்ப இஷ்டம்).
ஆங்.. அப்பாலிக்கா ஒண்ணே ஒண்ணு...
"ஏலேய் வெளங்காதவனே, கருத்தியலா பேசலாம்; உரையாடலாம்; முடிந்தால் போராடலாம், வா"ன்னு மட்டும் கூப்புட்டுடாதீரும்.
ஏன்னா, நானெல்லாம்
ஹி ஹி
"வாய்ச்சொல் வீரன்"
நன்னி!
மாக்கான்,
நன்றி!
--------------
சகோ.சார்வாகன்,
நன்றி!
மேட்டுக்குடி மக்களில் மனமுதிர்ச்சி அற்றவர்கள், விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களாக நினைப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.
மேலும் ஆரம்ப காலத்தில் இருந்தே அனைவரையும் சந்தேகத்துடன் நோக்குவதும், மன உளைச்சல் உண்டாக்குகிறார்கள், சைபர் கிரைமில் புகார் செய்வேன் என பேசிக்கொண்டிருப்பதை அவதானித்தாலே தெரியும், அவர்களிடம் பேசுவது அபாயம் என்பது.
தாங்கள் செலிபிரிட்டி என்ன சொன்னாலும் பாராட்டணும் என்ற மனக்கூற்று கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது, எனவே அவர்களோடு பேசுவதை ,தற்போது பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்து இருக்கலாம்.
இப்பிரச்சினையை இணையத்தில் புழங்கும் செலிபிரிட்டிகள் அனைவரும் , இணையத்தில் சாமானியர்கள் சுதந்திரமாக அனைவரையும் விமர்சிப்பதை கட்டுப்படுத்த ஒரு வாய்ப்பாக கருதுவதாக நினைக்கிறேன். அதனால் தான் சில செலிபிரிட்டிகள் , பாடகிக்கு ஆதரவு நிலை எடுக்கிறார்கள்.
ஆனால் நம்மை போன்ற சாமானியர்களோ, ஆபாசமாக பேசுவது தவறு என ஏற்றுக்கொண்டு, அதனை வைத்து பொதுவாக கட்டுப்பாடு விதித்து இணைய கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட கூடாது என கருத்தியல் ரீதியாக பேசுகிறோம் ,இதனையும் சிலர் தவறாக பெண்களுக்கு எதிரானவர்கள் என சித்தரிக்கலாம் :-))
//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மாற்று ஊடகமாக மக்கள் கருத்து பரிமாற்றங்கள் பிடிகாதவ்ர்களுக்கு இது நல்ல வாய்பு!!
நன்றி!!!//
ஆம் அதே தான் புதுவையை சேர்ந்த ஒருவர் , ப.சியின் மகன் ஊழல் செய்துள்ளார் என துவித்தரில் சொன்னதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் சுப்ரமணிய சாமி ,ஊடகங்களில் பல ஊழல் புகார்களை வாசிக்கிறார், ஏன் கைது செய்து காட்ட வேண்டியது தானே :-))
பிரபலங்களுக்கு எதிராக சொல்லவும் ஒரு பிரபலத்துக்கு தான் உரிமை உண்டு என்கிறார்கள் போல :-))
--------------------
ராச நட ராசர்,
நன்றி!
நாமும் இந்த பாழாப்போன பிலாக்கர் விட்டு எங்கும் போனதில்லை, பிரச்சினை உருவான பின்னரே அனைத்தும் படித்து தெரிந்து கொண்டோம்.
நீங்கள் சொன்னது போல அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கிறது, ஆனால் இதனை நன்கு முற்ற விட்டு , தூண்டி விட்டு பிடித்தார் போல தெரிகிறது. பேசியவர்களுக்கும் மன முதிர்ச்சி அல்லது சுயகட்டுப்பாடு இல்லை என்பது தெரிகிறது.
யாரிடம்ம் பேசுகிறோமோ அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் கவனித்து மேற்கொன்டு உரையாட வேண்டும், அனைவரும் ஒன்று போல எடுத்துக்கொள்வார்கள் என கருத முடியாது.
சமீபத்தில் ஒரு மார்க்க பந்து "கும்மி அடிக்கிறீர்கள்' என சொன்னதற்கே உங்கள் நாகரீகம் எனக்கு தெரிகிறது, மோசமாக பேசுவதாக என்னை சொன்னார் :-))
எனவே அது போன்றவர்களிடம் பேசுவதை ஆரம்பத்திலேயே தவிர்த்து விட்டால் பிற்காலத்தில் சிக்கல் வராது.
the life of gale என்ற திரைப்படத்தில் நாயகன் தூக்கு தண்டனைக்கு எதிராக போராடும் வழக்கறினர், ஆனால் ஒரு விருந்தின் போது மது போதையில் தானாக உறவுக்கு அழைத்த பெண்ணிடம் உறவு கொண்ட நாயகன் ,பின்னர் அப்பெண்ணை வேறு ஒருவன் கொலை செய்து விட,, நாயகனே கற்பழித்து கொன்றதாக ஃப்ரேம் செய்யப்பட்டு ,கைது செய்யப்பட்டு , தூக்கு தண்டனையும் விதிக்கப்படும், அவனைப்பேட்டி எடுக்கும் பத்திரிக்கையாளர் உண்மையை கண்டுப்பிடித்து , தூக்கு தண்டனையை நிறுத்த போவதற்குள் அனைத்தும் முடிந்துவிடும்.
இப்படத்தின் கதையை உருவி விருமாண்டியும், தாம் தூமும் எடுக்கப்பட்டது.
எனவே சந்தர்ப்பமும்,சூழலும் யாரையும் குற்றவாளியாக்கிவிடும்.
-------------------
ராம கிருஷ்ணன்,
நன்றி,
தாரளமாக பகிரலாம், ஓசியில விளம்பரம் குடுப்பதை வேன்டாம்னா சொல்ல போறேன் :-))
-------------
வெளங்காதவர்,
ஓய் மேடம்வாள்னு ஒரு ஆணை அழைத்து மன உளைச்சல் உண்டாக்கினால் எங்கே புகார் கொடுக்கணும் ?
உமக்கு என்ன கை,கால் ,மூளை என எதாவது வெளங்காம போயிடுச்சா?
ஓய் செலிபிரிட்டி சாணி அடிச்சாலும் மணக்குமய்யா, அதெல்லாம் சந்தனம் என்றே பூஜிக்கனும்.
உமக்கு வாயிலயாவது வீரம் இருக்கே , அப்போ கண்டிப்பா நீர் ஒரு இணைய சேகுவேரா தான் :-))
-----------------------
வவ்வால்,
இந்த பிரச்சினை எனக்கு ரோஷோமன் படத்தை தான் ஞாபக படுத்தது. அந்த படத்துல ஒரு குற்றம் நடந்து இருக்கும், 3 பேர் அந்த குற்றத்தை விவரிப்பாங்க..அவங்க அவங்க பார்வையில் இருந்தது தங்களை மட்டும் நல்லவங்களா காமிச்சு கதை சொல்லுவாங்க, அது தான் மனித இயல்பு, எல்லோரும் அதை தான் பண்ணுவாங்க. அதை தான் சின்மயி மற்றும் ராஜன் நண்பர்கள் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
உண்மை என்கிறது உலகத்துல எதுவுமே கிடையாது, உண்மைக்கு பக்கத்துல வேணா நெருங்கலமே தவிர இது தான் 100% உண்மைன்னு யாருமே சொல்ல முடியாது. உங்களனையும் சொல்ல முடியாது, என்னாலயும் சொல்ல முடியாது. நீங்க சின்மயி வரலாற்றை ஆராய்ந்த அளவுக்கு ராஜன் வரலாற்றை ஆராய்ந்து இருக்கனும்..அவரோட ஆரம்ப கால பதிவுகளை பாருங்க. எடக்கு மடக்கு தோத்து போயிருவாங்க. அவரோட 2009 பதிவுகளை பாருங்க.
http://www.rajanleaks.com/2009/12/blog-post_15.html
நான் படிச்சதலே உண்மைக்கு ரொம்ப பக்கத்துல வந்த பதிவுனா அது இது தான். நீங்களும் நேரம் இருந்தா படிச்சு பாருங்க.
http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post.html
"ராஜன்லீக்ஸ்" ட்விட்டர் ஐடி முடக்க/அழிக்க பட்டு உள்ளது..இப்ப அவரோட ஐடி ஓபன் ஆகுறது இல்ல. ஆனா அவர் எழுதிய எல்லா ட்வீட்ஸ் இங்க பார்க்கலாம் : http://topsy.com/twitter/rajanleaks
அழிச்ச ட்வீட்ஸ் எடுக்கிறது பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்ல... :) சும்மா சின்மயி ட்வீட்ஸ் எல்லாம் அழிச்சடாங்கன்னு சொல்ல முடியாது..நோன்டுனா நம்மாலே கண்டு பிடிச்சுடலம்...
/////துவித்தருக்கு "ஸ்கிரீன் ஷாட்" உடன் ,அந்த ஐ.டியை பற்றி மின்னஞ்சல் அனுப்பி முடக்க சொல்லலாம். இது போன்ற நடவடிக்கைக்கே தொல்லை கொடுப்பவர்கள் புரிந்து கொண்டு ஒதுங்கிவிடுவார்கள். ////
ஏங்க, ஒரு ஐடி யில இருந்தது வந்தா முடக்கலாம், 100 கள்ள ஐடி create பண்ணி வந்தா, நீங்க சொல்லுறது ரொம்ப கஷ்டம பாஸ்..////தொல்லை கொடுப்பவர்கள் புரிந்து கொண்டு ஒதுங்கிவிடுவார்கள்.//////இது எல்லாம் இணையத்துல நடக்க வாய்ப்பே இல்லை.
அப்புறம் SOPA torrents மற்றும் Piracy அடக்க தான் கொண்டு வர முயற்சி செய்தார்கள்..அது நம்ம லோக்பால் மாதிரி..வரவே வராது...
பொதுவான கருத்து:
நேத்து கூட இதே போன்ற ஒரு கைது புதுவையில் நடந்து இருக்கு http://sudarnila.com/1486/ , ஆனா யாரும் இந்த ரவிக்கு ஆதரவா பதிவு போட மாட்டாங்க..ஏனா அவர் ராஜன் கிடையாது. ராஜன் மட்டும் இங்க கைது செய்ய படாமல் இருந்தது இருந்தால், இதை யாருமே கண்டுகமாட்டாங்க...
அப்புறம் இது தொடர்ந்துகிட்டே தான் இருக்கும். நம்ம கபில் சிபில் கூட நேத்து "இணைய கண்காணிப்பு" பற்றி ஒரு மாநாடு போட்டு இருக்கார். கண்டிப்பா "இணைய கண்காணிப்பு" ன்னு ஒன்னு வர தான் போகுது. அதை யாராலையும் தடுக்க முடியாது...இணைய புரட்சியாளர்கள்க்கு அப்புறம் யார் தான் கடிவாளம் போடுறது.
நான் சீனா போயிருந்த அப்ப பார்த்தேன்..அங்க பிளாக்கர், பேஸ் புக், ட்விட்டர் எதுவுமே ஓபன் ஆகாது..அங்க கேட்டப்ப அவங்க சொன்னது இது தான்..."பிளாக்கர், பேஸ் புக், ட்விட்டர் எல்லாம் இருந்தா புரட்சி வெடிச்சிடும் மக்களுக்கு மன மாற்றம் ஏற்பட்டு கேள்வி கேட்ட ஆரம்பிச்சுடுவாங்க" அதனால் தான் அரசாங்கம் இதை எல்லாம் பிளாக் பண்ணிட்டாங்க...இது தான் வரும் முன் காப்போம்..
நம்ம இந்திய goverment ரொம்ப பரவாயில்லை, இதை எல்லாம் பிளாக் பண்ணாம, இணைய புரட்சியாளர்களுக்கு வெறும் கடிவாளம் மட்டும் தான் போடணும் என்று நினைகிறார்கள். அதை நினைச்சு நாம சந்தோஷ தான் படனும்..
2012: Ravi arrested for saying X has amassed more wealth than Y, on Twitter. --> இது இப்ப குற்றம் ஆகி விட்டது.
1990: Ravi spoke in a public gathering here in Puducherry and alleged that X has amassed more wealth than Y. --> இது குற்றம் இல்லை..
@ராஜ நடராஜன்
##இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் தாயும்,மகளும் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருக்கிறது.இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்.பிரச்சினையின் பின் தாக்கத்தை உணராமல் அவசரமாகவும்,சினத்தோடு கூடிய திட்டமிடலும்,இவற்றுக்கு பின்புலமாக சகுனித்தனம் செய்வதற்கும் கூட யாராவது துணை செய்திருக்க வேண்டும்.பாதிப்பு என்னவோ ஒரு பெண்ணின் எதிர்காலம்##
அவர்கள் இப்பிரச்சனையின் தாக்கம் உணராமல் இதைச் செய்யவில்லை... நீண்டகாலமாக ராஜன் மற்றும் நண்பர்களைப் பின்தொடந்து சர்ச்சைக்குரிய விடயங்களைத் தெரிவிக்கும் போது ஸ்க்ரீன்சாட் எடுத்து வைத்துக்கொண்டு, தாங்கள் தெரிவித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகளையும் அழித்துவிட்டே விவரமாகப் போலீசுக்குப் போயிருக்கிறார்கள்....
##இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்## அவ்வாறு இரக்கம் கொள்ளும் முன் ராஜனின் தரப்பையும் பார்க்க வேண்டும்.. சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்து அநாதையாக, தன் விடா முயற்ச்சியின் மூலம் படிப்பை முடித்து அரசாங்க வேலையும் பெற்று, தன்னைப் போன்ற ஓர் அனாதைப் பெண்ணையே தேடித் திருமணம் முடித்துக் கொண்ட ராஜன் இன்று இந்த வழக்கால் தன் வேலையையும் இழந்து நிற்கிறாரே.. அவருக்கு நீங்கள் கூறும் நீதி என்ன...? சின்மயி தரப்பு வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்கில் தான் இப்புகாரைக் கொடுத்தது... இதன் மறுபக்கத்தையும் விசாரிதது சின்மயிக்கும் தண்டனை அளிக்க வேண்டும்...
மற்றபடி வவ்வால் அண்ணே...நல்ல நேர்மையான கட்டுரை..நன்றி...
//கண்டிப்பா நீர் ஒரு இணைய சேகுவேரா தான் :-))///
lol!!!
விடும்வோய்! வீரத்த வச்சு மட்டும் ஒண்ணும் பண்ணமுடியாது வோய்!!!
அப்புடியே, செலிபிரட்டி'ன்னு ஒரு இது வேணும்... அப்பத்தான் கடை தொறந்து ஆத்து ஆத்துன்னு ஆத்த முடியும்...
#கருத்தெல்லாம் பேசணும்னா நேரம் வேணும்வோய்... நேரமில்லாததால எக்கேடோ கேட்டுத் தொலைன்னு வுட்டுட்டுப் போயிடறது... மாடு மேய்க்கணுமில்ல? ஆங்...
:))
தேன்மதுரன்!இதுவரை கருத்துரிமை,பக்கசார்பான கைது என்ற நிலையில் ராஜன் சார்ந்த பரிதாபமே எஞ்சிய கருத்துக்கள் வெளியிட்டிருக்கிறேன்.தாயும்,மகளும் முடிவெடுக்கத் தெரியாமலோ அல்லது முடிவெடிக்க முயற்சி செய்து பலனில்லாமலோ தங்கள் மீதே பூமராங்க் வந்து தாக்குமென்று உணராமல் பிரச்சினையை பெரிது படுத்தி விட்டார்கள்.இது போன்ற பிரச்சினையை எப்படி அணுகியிருக்க முடியுமென்ற அனுபவ ரீதியிலேயே கருத்துக்கள் வெளியிடுகிறேன்.கோப்பியம் ராஜ் தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் பரிதாபமாக நிற்பது ராஜன் மட்டுமல்ல தாயும்,மகளும் ரோட்டு சேற்றோடு வாழ்க்கை சேற்றையும் சேர்த்து பூசிக்கொண்டார்கள்.
கருத்துக்கு மாற்று கருத்து சொன்னதற்கு நன்றி.
//அவரைக்கேட்டால் திருவள்ளுவருக்கு ரெண்டு வரிக்கு மேல தமிழ் எழுத தெரியவில்லை என சொன்னாலும் சொல்வாராயிருக்கும் :-))//
வவ்வால் டச்..
//நம்ம இந்திய goverment ரொம்ப பரவாயில்லை, இதை எல்லாம் பிளாக் பண்ணாம, இணைய புரட்சியாளர்களுக்கு வெறும் கடிவாளம் மட்டும் தான் போடணும் என்று நினைகிறார்கள். அதை நினைச்சு நாம சந்தோஷ தான் படனும்..//
You should be **** kidding Raj...Next you will compare Indian regime with Srilanka's...
Useful content and awesome design you got here! I want to thank you for sharing your solutions and taking the time into the stuff you publish! Sublime work!
:(
I stopped blogging 5 years back when I realised that I want to do something real than blogging about issues.
IMHO, change can happen only one man at a time and it has to start from you.
I dont call mine writing because I have / had great respect for writers. Its about thinking through, analysing the subject from different perspectives and conveying it in words in such a way that readers are glued to the words.
If J.Mo writes based on opinion of four ppl in his group and if thats what a writer can churn up, I think I respect bloggers better.
On a different note, I love History and I think I have a lot to read on your blog :) My wish is for you to translate your posts also into English, if it is possible. The only reason for it is the data here will reach more people. Even if it is not your intention, I would be glad if it did.
வவ்வால், கார்த்தி சிதம்பரம் பற்றி (ஊழல்காரர் என்பதுபோல) வெறும் 16 ஃபாலோயர்களுக்கு ட்வீட் செய்த சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ளார். அவர் ட்வீட் வெகு சாதாரணம்! 'காட் ரிப்போர்ட்ஸ்' என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர தன் கருத்தாகக் கூட அல்ல. இப்படியே போனால் நாளை குறுஞ்செய்திகளையும் நோண்டலாம்! மண்ணுமோகன் என்று எழுதும் யாரும் கைது செய்யப்படலாம் (சுவாமி, மோடிக்கெல்லாம் விதிவிலக்கு). மண்ணுமோகன் என்று ஒரு பத்து நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 வருஷம் ஜெயில்! கண் மண் (இது வேறு மண்!) தெரியாமல் காரை ஓட்டி ஆளை அடித்துக் கொன்றுவிட்டால் சிறை 2 வருடம் மட்டுமே! அதே ஆளைப்பற்றி ட்வீட் செய்தால் 3 வருஷமாம்! இதைக் கண்டித்தும் எழுதுங்கள் வவ்வால்.
சரவணன்
Saravanan
If you follow Ravi who was arrested and KarthiC, you will see that Karthik had been voicing opinions about the IAC movement very blatantly...and Ravi had been a supporter of the same movement and all his tweets share the details of IAC.
I dont have to explain further on how the politics of the men related to power are....
ராஜ்,
வாங்க,நன்றி!
ரோஷமான் சொல்வதை பலரும் தவறாகத்தான் புரிந்து கொள்கிறார்கள், உண்மை என்பது இல்லை என சொல்லவில்லை, அதனை பலரும் அவர்களுக்கு பாதகமில்லாமல் சொல்ல முயற்சிப்பார்கள் என்பதே.
இப்போ உங்களை போல, ஏன் என்னையும் போல தான் :-))
ஆபாசத்தினை கண்டும் காணாமலும் இருப்போம், நமக்கு அதனால் பாதிப்பெனில் ஆபாசம் என்போம், யாராவது மாட்டினால் ஆபாசமாக பேசினால் மாட்டத்தான் செய்வார்கள் என்போம்.
நீங்க ராஜனின் பழைய பதிவை ஆராய சொல்வதில் அர்த்தமே இல்லை.
புகார் கொடுத்த பாடகியின் குற்ற சாட்டுக்கும், ராஜனின் பிற சொல்லாடல்களுக்கும் என்ன சம்பந்தம், பொதுவாக அவர் யாரை என்ன சொன்னால் இவர்களுக்கு என்ன?
பாடகி சுமத்திய குற்றசாட்டின் அடிப்படைக்கு ஆதாரமிருக்கா? அவ்வளவு தான் கேள்வி?
பாடகி சின்மயி அன்ட் கோ என்ன மொத்த சமூகத்துக்கும் மாரல் போலிஸ் வேலை செய்ய கிளம்பிட்டாங்களா?
நீங்க அதெப்படி இணையத்தில் ஆபாசமாக எழுதுவதை சரி என சொல்லலாம் எனக்கேட்டால் , உங்களுக்கு பிடிச்ச லோகநாயகர் ,வசனந்தேன் ...முதல்ல அவங்களை நிறுத்த சொல்லுங்க ,நான் நிறுத்தறேன் :-))
இப்போ இணையத்தில் மக்கள் எப்படி பட்ட மன நிலையில் இருக்காங்க என ஒரு உதாரணம் பார்ப்போம், ஆபாசமாக அடல்ட் ஜோக் எழுதறவங்க, எல்லா பதிவுலயும் ..த்தா ...ங்ம்மா ... தே ...பாடு என இனிமையாக எழுதறவரையும் யாரும் எதுவும் சொல்வதே இல்லை ரசிக்கிறாங்க, அவங்களை தான் பதிவர் மாநாடு நடத்தினா மேடையில ஏத்தி பேச வச்சு ரசிக்கிறாங்க, நீங்களும் அத எல்லாம் வேடிக்கை தானே பார்க்கிறிங்க, இப்போ ராஜன் மட்டும் எடக்கு மடக்கை விட மோசம் என்றால் எப்பூடி? இப்படி சொல்ல காரணம் ராஜன் வழக்கில் மாட்டிக்கிட்டார், எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
அடல்ட் ஜோக் எழுதுறவரு, த்தா என எல்லா பதிவிலும் எழுதுறவங்க கிட்டே இதெல்லாம் ஆபாசம்னு போய் சொல்லித்தான் பாருங்களேன் ...அப்புறம் தெரியும் கதை ஹா ஹா ...:-))
புதுவையை சேர்ந்தவர் மாட்டிக்கிட்டது பற்றியும் எனது பின்னூட்டத்தில் சொல்லி இருக்கேன், முழுசாக விவரம் அறிந்தால் எழுதலாம் என நினைக்கிறேன்.
மேலும் ராஜன் வழக்கினை முன்னுதாரணமாக வைத்தே இவ்வழக்கும் பதிய பட்டிருக்கிறது எனலாம்.
சுப்ரமணியம் சாமி சொல்லாத குற்றச்சாட்டையா ரவி என்பவர் சொல்லிட்டார், சாமியை புடிக்க போனால் அது பாம்ம்பு புற்றில் கைவிட்ட கதையாகிவும் ,எனவே அப்பாவிகளை அமுக்கிப்போட்டு வீரம் காட்டுகிறார்கள் ***** அரசியல் புலிகள்.
-----------------
தேன் மதுரன்,
நன்றி!
ராச நட ராசர் , நெம்ப நடுநிலையா பேசுவார் அதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படலாமா? பதில் சொல்லிட்டார் ராச நடை படியுங்கோ.
-----------------
வெளங்காதவன்,
பிராபல்ய எயுத்தாளர்களே சொல்லிகிறாங்கோ ,இணையத்தில எயுதுறவங்க எல்லாம் காயித பிலிங்க்கோ, இணைய சேகுவாரங்கோன்னு.
வீரம் வெளைஞ்ச மண்ணுய்யா ..அதுல மொளைச்சுட்டு இப்டிலாம் பேசினா எப்பூடி?
------------------
ரெவரி,
வாங்க, நன்றி!
வள்ளுவரே சொல்லிக்கீறார் பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை அருள் இல்லாருக்கு எவ்வுலகும் இல்லைனு , பொருள் ,புகழ், பதவி ,செல்வாக்கு இல்லாதாருக்கு சொல்வாக்கு ஏன் என சொல்கிறது இணைய காவல்துறை :-))
ராஜ் க்கு இன்னும் புரியலை , புரியும் போது அதனை பகிர அருகில் யாரும் இருக்க மாட்டார்கள் ,ஏன் எனில் எல்லாம் இணையத்தை விட்டு ஓடி இருப்பார்கள் :-))
sopa and pipa law டோரண்ட்ஸ் ஒடுக்க மட்டுமே என நம்புகிறார் எனில் என்ன சொல்ல?
---------------------
ஆரவ்ஸ்77
நன்றி!
எழுதுவதை விட நேரடியாக செய்ய நினைப்பது நல்லதே, நேராக இயங்க நேரமும், பொருளும் இல்லாதோருக்கு எழுதுவதே இமாலய சாதனை தானே.
நீங்கள் செயலில் செய்ய இறங்கியதற்கு வாழ்த்துகள்.
வரலாற்றினை அவ்வப்போது எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன், இனி தொடர்கிறேன்.
ஹி..ஹி முதன் முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத முயன்றேன் , எல்லாம் சின்ஸ் ஐம் சபரிங் ஃப்ரம் ஃபீவர் போல இருக்கவே ச்சீ ச்சீ இங்கிலிப்பீசு புளிக்கும்னு தமிழுக்கு ஓடிவந்தேன் :-))
-----------------
சரவணன்,
நன்றி!
பொது மக்கள் எதுவும் பேசிடக்கூடாதுன்னு அதிகார மட்டம் நினைக்குது என்ன செய்ய?
ஆனாலும் ஆயிரம் சைபர் சட்டம் போட்டாலும், டீக்கடை வாசலில் நின்னு அரசியல் பேசுற தமிழர்களை ஒன்னியும் செய்ய முடியாது :-))
// மண்ணுமோகன் என்று ஒரு பத்து நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 வருஷம் ஜெயில்! கண் மண் (இது வேறு மண்!) தெரியாமல் காரை ஓட்டி ஆளை அடித்துக் கொன்றுவிட்டால் சிறை 2 வருடம் மட்டுமே! அதே ஆளைப்பற்றி ட்வீட் செய்தால் 3 வருஷமாம்! இதைக் கண்டித்தும் எழுதுங்கள் வவ்வால்.//
ஏன் நான் சுதந்திரமா உலாத்துறது புடிக்கலையா :-))
Dear Voval, i read your previous post and this,both are interesting, regards to you. aravi
மக்கள் தங்கள் கருத்தை பரிமாற கிடைக்கும் கிடைக்கும் ஓரே இடத்தையும் முடக்க இதை நல்ல வாய்ப்பாக அரசும் பிரபலங்களும் பயன்படுத்துகிறார்கள். சின்மயி-6 திவித்தர்கள் சிக்கலில் முகவரி, தொலைபேசி எண் கொடுத்த (நிறையபேர் அறிந்த) இரண்டு பேரை மட்டும் கைது செய்து பூச்சாண்டி காட்டி மற்றவர்களை பயமுறுத்துகிறார்கள். இதில் நிறைய பேர் பெண்ணுரிமை ஆபாசம் என்று கருத்து பொழிகிறார்கள். திரைப்படத்திலும், தொலைக்காட்சியிலும், வார இதழ்களிலும் இல்லாத ஆபாசமா? கருத்து பொழியும் பிரபலங்கள் அங்க தான குப்பை கொட்டறாங்க. நல்ல வேளை நான் என் நண்பர்களிடம் பேசியது எதையும் இணையத்தில் எழுதவில்லை :)) இல்லாவிடில் நானும் ஆபாசமாக பேசியவனாகி இருப்பேன் ;) மயிருன்னு சொன்னா கூட சிலர் அதை கெட்டசொல் என்கிறார்கள் என்ன பண்றது.
please ....
dharumi.blogspot.com/2012/11/600.html
ஒரு அவசர அழைப்பு ... என்ன செய்யப் போகிறோம்??
ராஜ், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பின்னூட்டம் போட வந்து விட்டீர்.
சீன கம்யூனிச அங்கு வழமையாகவே பேச்சு சுதந்திரம் இல்லை. அப்போ எப்பிடி இணைய சுதந்திரத்தை வழங்குவார்கள்.
அனால் இந்தியா ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அடிப்படை உரிமை.
இதெல்லாம் தெரியாமல் சீனாவையும் இந்தியாவையும் முட்டாள் தனமாக ஒப்பிட வந்திருக்கிறீர்.
அரவிந்தன்,
உங்களைப்போன்றோரின் ஊக்கமே நாம் தொடர்ந்து இயங்க உந்து சக்தி, நன்றி!
--------------
குறும்பன்,
அதே, முதலில் ஏதோ பாத்இக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் போல உருவாக்கிவிட்டு , மாற்று கருத்து சொல்வோரை முடக்கவே இது போன்ற சட்டங்கள் பயன்ப்படுத்தப்படும்.
இணையத்தில் உண்மையாக ஆபசமாக இயங்குபவர்கள் ஒருவரும் இதனால் முடக்கப்படவில்லை என்பதற்கு எண்ணற்ற ஆபாச தளங்கள் இயன்ங்குவதே சாட்சி.
எத்தனையோ நடிகைகளின் மார்ஃப் செய்யப்பட்ட முழு ஆபாச படங்கள் தாங்கிய தளங்களை என்ன செய்தது இந்த இணைய சட்டம்?
ஆனால் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை கூறிய ஒருவரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசியவருக்கு சிறை.
ஹி...ஹி நீங்க ரொம்ப உஷார தான் இருக்கிங்க போல :-))
நன்றி!
--------------
அனானி,
அதே தான் அடிப்படை புரிதல் இல்லை அவருக்கு. காலப்போக்கில் புரிந்து கொள்வார் என நம்புவோம்.நன்றி!
-----------
தருமிய்யா,
உங்கப்பதிவில் பின்னூட்டம் போட்டாச்சு, நீங்கள் முன்னெடுத்து செல்ல்வதை வழி மொழிய தயாராக உள்ளோம்.
குறித்து கொண்டேன்,தொடர்பு கொள்கிறேன். நன்றி!
--------------
வவ்வால் நல்ல பதிவு,
//பின்னூட்டமிடுபவர்களின் கருத்துக்கு இப்பதிவு பொறுப்பாகாது.//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)
புரட்சிமணி,
நன்றிங்க்ண்ணா,
வன்மிஅயாக கண்டிக்கிஉறின்களா ,ஏன் கண்டிக்க மாட்டிங்க , ஊரில இருக்கவன எல்லாம் கலாய்ச்சு வச்சு இருக்கேன், எப்போ வேண்டும்னாலும் ,இதான் சாக்குன்னு முட்டை மந்திரம் வச்சாலும் வைப்பாங்கன்னு தான் :-))
இதுல ஒரு அல்சர் பார்ட்டி 3 மாதம் முன்னரே நான் மார்க்க பந்துகளை கலாய்ச்சுட்டேன்னு சைபரில் புகார் கொடுப்பேன்னு மிரட்டிச்சு, இத்தனைக்கும் அவருகும் எனக்கும் வேற ஒரு முட்டல் ,ஆனால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னை மார்க்க பந்து மேட்டரில் மாட்டிவிடுவேன்னு சொன்னார் ,சரி மெண்டல் ஆகிட்டார் போலன்னு நினைச்சேன் ,இப்போ பாடகி கதை எல்லாம் பார்க்கும் போது மெண்டல்களால் தான் ஆபத்துன்னே புரியுது :-))
//உங்களைப்போன்றோரின் ஊக்கமே நாம் தொடர்ந்து இயங்க உந்து சக்தி, நன்றி!//
ஒண்டியாவே இந்த ஆட்டம் போட்டா இன்னும் கூட்டத்துல வந்து சேர்ந்துகிட்டா எப்படியிருக்கும்?
அதான் ஊரெல்லாம் வேறு கலாய்ச்சு வெச்சிருக்கேன்னு வேற சொல்றீங்களே:)
என்னைப் போன்றவர்களுக்காகவது கூகுள் ப்ளஸ் ல் உங்கள் பதிவுகளை இணைத்து விடலாமே?
சின்மயி விசயமாக மாமல்லன் நீங்க சொன்ன மாதிரி மிக சிறப்பாக குறிப்பாக தெகா உரையாடிய போது சொன்ன மாதிரி
படிக்கும் போதே ஒரு குற்ற உணர்ச்சி வரும் அளவுக்கு
சிற்பபாக எழுதி உள்ளார்.
உங்கள் பதிவில் இந்த பதிவு ஒரு கல்வெட்டு.
நீங்க சொன்ன மின்சாரம் குறித்து தேட உள்ளே வந்தேன்.
இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் தாயும்,மகளும் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருக்கிறது.இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்.பிரச்சினையின் பின் தாக்கத்தை உணராமல் அவசரமாகவும்,சினத்தோடு கூடிய திட்டமிடலும்,இவற்றுக்கு பின்புலமாக சகுனித்தனம் செய்வதற்கும் கூட யாராவது துணை செய்திருக்க வேண்டும்.பாதிப்பு என்னவோ ஒரு பெண்ணின் எதிர்காலம்.
மிகச் சிறப்பான கருத்து. இதை விட எளிமையாக சொல்லிவிட முடியாது.
வளர்ப்பு முக்கியம். அதை விட வளர்ப்பு கொடுத்த தாக்கம் அதனை விட முக்கியம்.
ஒரே ஒரு பிள்ளை என்கிற ரீதியில் உள்ளவர்கள் படும்பாடு பல இடங்களில் சொல்லி மாளமுடியல.
வவ்ஸ், இந்த பக்கம் ரவுண்ட் கட்டி அடிச்சிருக்கீரே!
இப்போத்தேய்ன் உட்கார்ந்து படிச்சி முடிச்சேய்ன்.
என்னாத்தை சொல்ல நம்ம புள்ளகதான் கொஞ்சம் கவனமா இருந்துருக்கோணும். எங்கே போயி என்னாத்தை சொல்லி முட்டிக்கிட்டு நிக்கோம்னு.
அவிங்களுக்கு தெரியாத ஒலக நடப்பா? எங்கிட்டோ வலி பொறந்தாத்தேய்ன் வழி பொறக்குமாமா பெரியவிங்க சொல்லி இருக்காய்ங்க.
எழுத்து யாவரிங்க கூட்டத்தோடு சேர்ந்து குறுக்கால கையை விட்டு நாமும் ஒரு குத்து குத்துவோம்னு குத்தி சந்தோஷப்பட்டுக்கிட்டாங்க, காலம் இருக்குவோய். வெளுத்துப் போக!
எல்லாம் அவஞ்செயல் :) ...
ஒழைப்புக்கு நன்றிம்மேய்!
வவ்வால் said...
// ஊரில இருக்கவன எல்லாம் கலாய்ச்சு வச்சு இருக்கேன், எப்போ வேண்டும்னாலும் ,இதான் சாக்குன்னு முட்டை மந்திரம் வச்சாலும் வைப்பாங்கன்னு தான் :-))//
ஹி ஹி
//இதுல ஒரு அல்சர் பார்ட்டி 3 மாதம் முன்னரே நான் மார்க்க பந்துகளை கலாய்ச்சுட்டேன்னு சைபரில் புகார் கொடுப்பேன்னு மிரட்டிச்சு, இத்தனைக்கும் அவருகும் எனக்கும் வேற ஒரு முட்டல் ,ஆனால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னை மார்க்க பந்து மேட்டரில் மாட்டிவிடுவேன்னு சொன்னார் ,சரி மெண்டல் ஆகிட்டார் போலன்னு நினைச்சேன் ,இப்போ பாடகி கதை எல்லாம் பார்க்கும் போது மெண்டல்களால் தான் ஆபத்துன்னே புரியுது :-))//
ஹி ஹி உங்க நெலம நல்லா புரியுது.
உங்கள குறி வச்சிட்டானுங்க போல.
உங்களுக்கு ஏதாவதுனா சொல்லுங்க கோதாவுல குதிச்சுடுவோம். இனி இணையத்தில் யார் மேலயும் கை வைக்க முடியாத மாதிரி ஏதாவது செய்யனும்.
ராச நடராசரே,
கும்பலில் கோவிந்தா போட முடியாமல் தானே ஓரங்கட்டி குந்தி இருக்கேன்.
நமக்கு கொஞ்சம் ஓட்டை வாயி அதான் எல்லாரையும் கலாய்ச்சு வச்சிருக்கேன், ஆனால் அதை கலாய்ப்பாக நினைக்காமல் வன்மாக எடுத்துக்கொள்ளும் போது முற்றி மோதல் ஆகிறது.
துவித்தர்கள் நிலையும் அப்படி தான்.
----------
ஜோதிஜி,
நன்றி!
எழுத்தாளர்.மாமல்லன் ஆரம்பத்தில் இருந்தே துவித்தரில் நேரடியாக பங்குப்பெற்றதால் ,நடந்ததை உணர்ந்துள்ளார், சரியாக எழுதியுள்ளார்.
நீங்க சொன்ன சிங்கில் மதர், பெண் போன்ற காரணங்கள் கணக்கில் கொள்ளப்பட வேன்டும், அவதூறாக பேசுவது சரியல்ல தான்.
ஆனால் அவர்கள் கொடுத்த புகாரில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளும், அவரை தவிர பொதுவாக அரசியலை விமர்சித்ததையும்)ஆபாசமாக இருப்பினும்) கூடுதல் குற்றசாட்டாக வைத்து வன்மமாக அல்லவா வழக்கு போட்டுள்ளார்கள்.
நீங்கள் சொன்னது போல எதிர்கால பாதிப்பு பாடகிக்கு பெரிதாக இருக்கப்போவதில்லை.
இக்காலத்தில் பாடகிகள் தினம் ஒருவர் வருகிறார்கள், முன் போல பாடகி/பாடகர்களுக்கு நீண்ட கால கேரியர் இல்லை.
ரொம்ப பிசியான பாடகி எனில் 10 பாட்டு கிடைத்தாலே அபூர்வம் என டிரெண்ட் மாறிப்போச்சு.
அதனால் தான் டப்பிங், ஸ்டேஜ் ஷோ, டீ.வி என பணம் செய்ய போகிறார்கள்.
சினிமா பாடகி என்ற புகழ் அடையாளம் வைத்துக்கொண்டு மற்ற துறையில் சம்பாதிப்பார்கள்.படமே இல்லைனாலும் வருமானம் கிடைக்கும்.
இதில் எங்கே எதிர்காலம் போய்விட்டது என சொல்ல? திருமண வாழ்வு பாதிக்கும் என சொன்னால், திரையுலகில் கிசுகிசு, இது போல அவதூறுகள் எல்லாம் இதை விட அதிகம், எனவே இதனை எல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை.
ஆனால் மாத சம்பளக்காரராக வேலி செய்து ,இடை நீக்கம் செய்யப்பட்டு , பின்னர் எப்போது பணியில் சேர்வது என தெரியாத நிலையில் உள்ளவ்ரின் குடும்ப சூழலை நினைத்தால் என்ன சொல்வீர்கள்.
இந்த மாத சம்பளம் வந்தால் தான் சாப்பாடு,வீட்டு வாடகை எனில் இன்னும் கஷ்டம்.
கணநேர நிதானமிழ்ப்பால் ,பலான பலான குற்றச்சாட்டில் சிக்கி , மீண்டும் சகஜமாக நடமாட சாமானியனுக்கு ரொம்ப கஷ்டம்.
பத்திரிக்கைகள் எல்லாம் என்னமோ ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு காசு சம்பாதித்தவர்கள் போல சித்தரித்து விட்டனவே? இதனை இல்லை என யார் போய் மக்களுக்கு சொல்வார்கள்.
இதில் இன்னொரு காமெடி இணைய சட்டம் 2000 இல் செக்ஷன் 66ஏ என்பது கணினியை ஹேக் செய்தால் பதிவு செய்ய வேண்டிய செக்ஷன் :-))
-----
தேடிப்பாருங்க என சொன்னது இணையத்தில், நீங்க ந்ம்ம பதிவை தேடுறிங்களா, அதுவும் நல்லது தான் :-))
---------
தெ.கா,
வாங்கோ, நன்றி!
நம்ம கடை விலாசம் மறக்காம இருக்கிங்களே அது போதும்.
அவிங்களுக்கு பாடம் சொல்ல போய் பாடம் கத்துக்கிட்டாங்கன்னு தான் சொல்லணும்.
இதில பத்திரிக்கைகள் பின்னிய கதை தான் ரொம்ப மோசம். அடிப்படையே இல்லாமல் ஆபாச படம் போட்டாங்க, பணம் கேட்டு மிரட்டினாங்க என்றெல்லாம் குற்ற்ச்சாட்டினை பாடகி சொன்னாங்களா ,பத்திரிக்கைகளே புனைவா போட்டுச்சானே தெரியலை.
நன்றி!
---------
புரட்சிமணி,
ஹி...ஹி அதே தான், சட்டத்தின் பேரால் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் குறைந்தால் நல்லது.
வெளியில இருக்க விலைவாசிக்கு உள்ள போனால் கூட தேவலாம் போல இருக்கு, என்ன கொசு தொல்லை, சரக்கு கிடைக்காதேன்னு யோசிக்கிறேன் :-))
விளிம்பு நிலை மனிதர்கள் அடிக்கடி குற்றம் செய்துவிட்டு உள்ளே போக வெளியில் வாழ வருமானம் இல்லாதது தான் பெரிய காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Post a Comment