Wednesday, December 12, 2012

அஃதே,இஃதே-4: 27-11-2043(12-12-12)



# 12-12-12

 எல்லாருக்கும் 27-11-2043 என்ற அபூர்வ நாளில் அடியேனின் அதி அற்புத வாழ்த்துக்கள்!!!

ஹி...ஹி இன்னிக்கு 12-12-12 தானே என சிண்டை பிச்சுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் ,தலைப்பிலேயே நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரிந்து இருக்கும்.

ஆங்கில முறையில் கிரிகோரியன் காலண்டர் முறையில் தான் இன்று 12-12-12 என வரும், அதனை நூறாண்டுக்கு ஒரு முறை வரும் அதிசயம் என பலர் அதிசயமே அதிசயத்துப்போகும் வண்ணம் பதிவுலகில் பிரஸ்தாபித்து இருப்பார்கள் :-))

ஆனால் நம்ம தமிழ்நாட்டு தமிழர்களுக்கு என்றே ஒரு நாட்காட்டி முறை உருவாகி ரொம்ப காலமாச்சு , நிறைய பேரு இன்னும் தமிழ் நாட்காட்டி முறை என்றால் பிரபவ என துவங்கி 60 ஆண்டுகளை கொண்ட விக்ரம சாகா நாட்காட்டியினையே நினைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் அது வடமொழி நாட்காட்டி, அப்படியே சுட்டு இங்கே வைத்துவிட்டார்கள், இந்த 60 ஆண்டுகளும் நாரத பாகவதருக்கும் , ஊதாங்குழல் கிருஷ்ணாவுக்கும் பிறந்த புள்ளைங்களாம் :-))

அது எப்படி ரெண்டு பேரும் ஆம்பிளைங்களாச்சே என வாய எல்லாம் தொறக்கப்படாது, பகவான் எல்லாத்துக்கும் ஒரு இண்டெலிஜென்ஸ் பிளான் வைத்திருப்பார், எனவே நாரத பாகவதரின் ஸ்திரி மோகத்தினை தனிக்க கவர்ச்சி கன்னி அவதாரம் எடுத்துவிட்டார் எல்லாம் வல்ல ஊதாங்குழல் கண்ணன் :-))

எனவே இந்த கண்றாவி வட மொழி ஆண்டுக்கணக்கு வேண்டாம் என கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.

கார்த்திகை என்பது 11 ஆவது மாதம் ,இன்று கார்த்திகை 27 எனவே தான் 27-11-2043 என இந்நாளை குறிப்பிட்டேன் , எனவே 12-12-12 என்று நாள்,மாதம், ஆண்டு வருவது எல்லாம் சிறப்பு என சொல்வதில் எந்த பெருமையும் இல்லை ,ஏன் எனில் ஒவ்வொரு வகை காலண்டரிலும் ஒவ்வொரு நாள் இப்படி வர வாய்ப்புள்ளது, எனவே எல்லா நாளும் சிறந்த நாளே!

ஹி...ஹி ஆனாலும் சும்மா இருக்க முடியுமா , ஒரு பதிவைப்போட்டு கடமையாற்றுவது தானே நம்ம பொழப்பு என இப்பதிவைப்போட்டு இந்நாளை எனது பதிவுலக டைம் லைனிலும் பதிவாக்கிட்டேன் :-))

கடந்தாண்டு 11-11-11 அன்றும் இதே போல சேவை ஆற்றியுள்ளேன் ,அதனைப்படிக்க சுட்டியை தட்டிவிடவும்.

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: 11-11-11


#சின்னசாமி சுப்பிரமணிய பாரதியார்.



11-12-1882 இல் திருநெல்வேலி சீமையில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார் ,சிறு வயதில் சுந்தரமூர்த்தி என்ற பெயரில் அறியப்பட்டாலும் பின்னாளில் சுப்பிரமணிய பாரதியாராக மாறி  தனது 38 வயதிற்குள் பல புரட்சி மிகு , எழுச்சி கவிதைகளை பாடி தமிழர் மனதில் நீங்கா இடம் பெற்று ,செப்டெம்பர் -11,1921 ஆம் ஆண்டு காலமானார். அவர் மறைந்த போது அவர் வயதின் எண்ணிக்கையை விட குறைவாக வெறும் 32 நபர்கள்  மட்டுமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பதில் இருந்து ,நம் மக்களின் தமிழ் ஆதரவு நன்கு புலப்படும்.

நம்ம ஊரில் ஒரு சாமானியன் தமிழ், தமிழன் என்றால் பொழைக்க தெரியாதவன் ,அதே அரசியல்வாதி தமிழ், தமிழன் என்றால் பொழைச்சுப்பான் :-))

பாரதியின் நினைவில் ...இப்பாடலை ரசியுங்கள்!



# super Star:



சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் ... கேட்கிறவன் கேணையனாகவே இருக்க வேண்டும், எனவே அவரைப்பற்றி நாம தனியாக சொல்லத்தேவையில்லை, தமிழ் திரைப்படத்தின் வணிக வலிமையை தமிழகம் தாண்டி உலகிற்கு நடைமுறையில் காட்டியவர் நம்ம "ரியல் தல" மட்டுமே!, அவரின் பிறந்த நாள் இன்று தான் என நான் வேற தனியாக சொல்லணுமா?

வாழ்த்துக்கள்!!!

பட்டைய கிளப்பும் இப்பாடலை ரசித்து மகிழுங்கள்!



#மரமும் மாணவர்களும்:



தமிழகத்தில் வனப்பரப்பு தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட 18 சதவீதத்திற்கும் குறைவாக 15 சதவீதம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொன்னாலும், அதெல்லாம் காகித எண்ணிக்கை என நினைக்கிறேன் ,அதைவிட குறைவாகவே வனப்பரப்பு இருக்க வேண்டும்.

மேலும் சாலை ஓரம் இருக்கும் மரங்களை எல்லாம் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் போடுவது என வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.  தானே புயல் வீசிய போது பல லட்சம் மரங்கள் வீழ்ந்து கிடப்பதை நேரடியாக பார்த்தவன், புயலால் கடலூர் மாவட்டத்தில் முன்பிருந்ததை விட மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும் சில ,பல அரசியல் கட்சிகள் மரம் வெட்டிப்போட்டே கட்சியை வளர்க்கிறார்கள்,இது போக சமூக விரோதிகளும் மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மரங்களே இல்லாத சூழல் உருவாகி, வெப்பம், சுற்று சூழல் மாசு அதிகரித்து, மழை பொழிவு குறையலாம், தற்சமயமே பெரும்பாலும் மழை பொழியாமல் ஏமாற்றிவிடுவதை அனைவரும் உணரலாம்.

அரசு ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அடிக்கடி மரம்நடுவிழா என நடத்தி பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பதை அடிக்கடி பார்க்கலாம், ஆனால் அப்படி நட்ட மரங்கள்(மரக்கன்று) என்னாச்சு என அதன் பின் யாரும் கவலைப்படுவதில்லை, புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவுக்கு வேர் ஊன்றி இருக்காது, எனவே தொடர்ந்து நீர் ஊற்ற வேண்டும், ஆனால் மரம் நட்டவர்கள், கைத்தட்டிக்கொண்டு வேற ஊருக்கு மரம் நடும் வேலையை செய்ய போய்விடுவார்கள், நம்ம மக்களும் மரம் வளர்ந்தால் நமக்கும் நல்லது தானே என சுயமாக தண்ணீரும் ஊற்றுவதில்லை,எனவே ஒரே வாரத்தில் மரக்கன்று காய்ந்து விறகாக ஆகிவிடும், அக்கம் பக்கம் மக்கள் அடுப்பெரிக்க பொறுப்பாக புடுங்கிக்கொன்டு போய்விடுவார்கள் :-))

இதான் மரம் நடும் விழாவின் உண்மையான நிலை, இப்படியே செய்துக்கொண்டிருந்தால் , எக்காலத்திலும் தமிழகம் பசுமையாக மாறாது.

இதற்கு ஒரு நல்ல தீர்வாக நான் நினைப்பது என்னவெனில் , பள்ளி மாணவர்களை இதற்கு பயன்ப்படுத்துவதே ஆகும்.

தமிழகத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை-5185

கடந்தாண்டு(2012) இல் 10.87 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்கள், அப்படியானல் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்டுக்கு இதே எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவர்கள் இருந்திருக்க வேண்டும்.

எனவே 5- 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை -

10.87*5=54.35 லட்சம் மாணவர்கள்.

ஒரு மாணவன் 5 ஆம் வகுப்பில் சேரும் போதே ஒரு மரக்கன்றை கொடுத்து நட்டு ,பராமரிக்க சொல்ல வேண்டும், ஏதேனும் ஒரு பொது இடத்தில் நட வைக்கலாம், மேலும் தினசரி ஒரு இரண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றினாலே போதும் சுமார் மூன்று மாதத்தில் மரம் நிலைத்துவிடும்.

இதே போல ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும். மாணவர்கள் நட்ட மரம் உண்மையில் இருக்கிறதா என்பதை ஆண்டு இறுதியில் ஆசிரியர் கணக்கெடுக்க வேண்டும், இவ்வாறு ஆண்டுக்கு ஒரு மரக்கன்றை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக கொடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள் ஊக்கத்துடன் மரம் நடுவார்கள்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மரக்கன்று நட்டு பராமரித்தை காட்டினால் 5 மதிப்பெண்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் கொடுக்கலாம், சமூக அறிவியல் பாடத்திற்கு கொடுத்தால் பொறுத்தமாகவும் இருக்கும். எத்தனையோ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சில மதிப்பெண்களில் தோல்வியடைவதுண்டு ,அவர்களுக்கு எல்லாம் போனஸ் மதிப்பெண் ஒரு வர பிரசாதமாக இருக்குமே.

போனஸ் மதிப்பெண்கள் கொடுத்தால் கல்வி தரம் குறையும் என்றெல்லாம் சிலர் சொல்லக்கூடும், ஆமாம் 5 மதிப்பெண் குறைவாக எடுக்க வைத்தால் மட்டும் கல்வித்தரம் கூடிவிடுமா? இதனால் யாருக்கு என்ன நட்டம் ,அனைவருக்கும் ஒரே சீராக 5 மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாதகமாகிவிடாது.

ஆண்டுக்கு 50 லட்சம் மாணவர்கள், 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக கொண்டால் பத்து ஆண்டுகளில் 5 கோடி மரங்கள், அவற்றில் 50% பிழைத்து மரமாக நின்றாலும் 2.5 கோடி மரங்கள், உருவாகி தமிழகம் பசுமையாகுமே!

மேலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு மரம் வீதம் 10 ஆம் வகுப்பு வரும் போது ஐந்து ஆண்டுகளில் ஐந்து மரம் நட்டு, உருவாக்கி இருப்பார்கள், இவை அம்மாணவர்களின் சொத்து , எனவே 10 ஆம் வகுப்பு முடித்து வெளியேறும் போது அம்மரங்களை அரசு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கிக்கொள்வது போல செய்ய வேண்டும், இதன் மூலம் மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி கல்வி முடிக்கையில் ஒரு ஊக்கத்தொகை கிடைத்தது  போல இருக்கும். மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் பசுமை சான்றிதழ் என ஒன்றை அளித்து அவர்களின் சேவையை கவுரவிக்கலாம். இது பின்னாளில் வேலைக்கு செல்லும் பொழுது அம்மாணவரின் சமூக பொறுப்புணர்ச்சிக்கு சான்றாக காட்ட உதவும்.

இது போல ஏதேனும் மாற்று வழியில் மரங்களை நட அரசு சிந்தித்தால் மட்டுமே தமிழகம் பசுமையாக மாறும், வழக்கம் போல அரசு எந்திரம் மூலம் மரம் நடுகிறோம் என செலவு கணக்கு காட்டிக்கொண்டிருந்தால் வருங்காலத்தில் தமிழகம் பாலைவனமாக தான் மாறும்.

------------------
பின் குறிப்பு:

தகவல் ,மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,விக்கி,யூடியூப்,தமிழ்நாடு அரசு இணைய தளங்கள்,நன்றி!
-----------------------

26 comments:

Dinesh Kumar said...

Everybody may have different opinion about Rajini's Political gym-mics. But his contribution to tamil cinema is immense. Nobody can deny that.He might not tried out different acting in his movies. But he has a very big heart to accept.He is also continuously encouraging and appreciating the new attempts made by others.
Happy birthday Rajini Sir.

நாய் நக்ஸ் said...

இனிய தலைவர் தின வாழ்த்துக்கள்.....

மரம் நடும் ஐடியா நல்லாத்தான் இருக்கு....அட போங்க பாஸ்...
ஆகுற கதையை பேசுங்க....அரசியல்வியாதிகளுக்கு ....
இருக்குற வளத்தை கொள்ளை அடிச்சி முடிக்கவே நேரம், இல்லையாம்...

இதுல இருக்குற வளத்தை இன்னும் அதிகப்படுத்துவான்கலாம்...

சூரியன் மேற்க்கே உதித்தால் பார்ப்போம்....



வர வர உங்க தள கமெண்ட் செக்சன் ஆங்கில தளமா மாறிட்டு வருது.
வருண் ப்ளாக்ன் வீச்சோ...??????????
:)))))))))))

இது போடலைனா குத்தம் ஆகிடும்.....
:))))))))))

நாய் நக்ஸ் said...

இன்னும் மல்லை விடமாட்டேன்குறீங்க.....

புதுசு நிறைய இருக்காங்க பாஸ்....

ஒரு வேலை வௌவால் வயசு....50 கிட்டயோ....????????
சரியா ஜி....????????

(புரிந்தது.உமக்கும்.எனக்கும்.)
:))))))))

Anonymous said...

Well written post about tree plantation. See the first comment, he does not comment about the important issue (tree plantation). Poor fellow.

----By, Maakkaan.

Dinesh Kumar said...

Anony,
Thanks for reminding me to write comment about Tree plantation.
I am not a CM or minister or Collector or HM (atleast) to implement the solutions proposed by Vovval. So what should I comment?

Anyways, Whatever the idea proposed by Vovval is a good one. But it is our fate that the people having wider vision like him never going to get the chance to rule.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அசினைப் படைத்த ஆண்டவன் மிக மிக பெரியவன். அவருக்கே எல்லா புகழும். காரணமில்லாமல் பெருவிரிவாக்க கொள்கை ஞாபகம் வருகிறது ஹி ஹி
***
நாள் காட்டி நாம் உருவாக்கியது. நாம் உருவாகியதில் சில ஒழுங்கு அமைவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மைதான். ஒரு நாட்காட்டி ஒழுங்கு அடுத்த நாட்காட்டியில் இருக்காது அவ்வளவுதான்.இதைப் போய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
**
பாரதியாரை அக்காலத்தில் அவர் சாதியினர் உட்பட பலர் கண்டுகொள்ளவில்லை.ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கு வேதம் கற்பித்து பூணூல் அணிவித்தது அக்காலத்தில் நிச்சயம் ஒரு புரட்சியே!!.

நம்ம தலை இராமானுஜத்தையும் கடல் தாண்டி போகக்கூடாதுன்னு சொன்னாங்களாம்!!


அவரு அங்கே போகாம இருந்து ஹார்டி அவரை புரியாமல் இருந்து இருந்தால்????????
***
திரு இரஜினிகாந்த் பிறந்த நாள் வழ்த்துக்கள்.

தளபதி படப் பாடல் அருமை. மணிரத்னம்,நான்,நீங்கள் மற்றும் இஸ்க்கான் ராதாநாத் சாமி ஆகியோருக்கு இம்மாதிரி பெண்கள் இந்திய பாரம்பர்ய உடைகளில் நடனம் சுற்றி சுற்றி ஆடுவது பிடிக்கும்!! ஹி ஹி என்னே ஒரு கண்டுபிடிப்பு!!
***
அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார் என்றால்,அந்த‌ மரங்களை வெட்டியது யார்? ஹி ஹி

நாம் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பது மரம் வெட்டுதலைக் குறைக்கும். அதீத நுகர்வைக் குறையுங்கள் என சொன்னால் அப்படின்னா என்ன?? என்பவர்களும் இருக்கிறார்கள்.

************

நன்றி!!
டிஸ்கி: என்ன அசின்படம் அடுத்து பதிவில் வரும்???
சிந்திக்க மாட்டீர்களா!!!

Unknown said...

வணக்கம் சகோ.

நல்ல யோசனைதான் ஆனால் இதை அரசு திட்டமாக்க வேண்டும்.அரசியல் வாதிகள் யோசிப்பார்களா என்பது சந்தேகமே,அவர்களுக்கு எங்கே இதற்கெல்லாம் நேரமிருக்கும்?வீண் பேச்சை மேடையில் பேசுவதற்கும்,தங்கள் தவறுகளை நியாயப்படுத்துவதற்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறதே!!
நன்றி சகோ.

Unknown said...

வணக்கம் சகோ.

நல்ல யோசனைதான் ஆனால் இதை அரசு திட்டமாக்க வேண்டும்.அரசியல் வாதிகள் யோசிப்பார்களா என்பது சந்தேகமே,அவர்களுக்கு எங்கே இதற்கெல்லாம் நேரமிருக்கும்?வீண் பேச்சை மேடையில் பேசுவதற்கும்,தங்கள் தவறுகளை நியாயப்படுத்துவதற்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறதே!!
நன்றி சகோ.

வவ்வால் said...

தினேஷ் குமார்,

வாங்க,நன்றி!

நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே,ஒரு வணிக நடிகராக , அவர் சார்ந்த தொழில் நலிவடையாமல் சிறப்பாக கொண்டு சென்றுள்ளார், அரசியல் நமக்கு தேவையில்லை, படம் பார்ப்பதோடு அவருக்கும், நமக்குமான பந்தம் முடிந்துவிடுகிறது.

ஹீரோவாக நடிப்பவர் தான் நாட்டை காப்பாற்றனும் என நான் நினைப்பதில்லை.
-------------

நக்ஸ் அண்ணாத்த,

வாங்க,நன்றி!

உங்களுக்கும் வாழ்த்துக்கள் தல!

சூரியன் மேற்கே உதிக்குமாம், அதாவது உலகம் அழியும் போது என மார்க்க பந்த்துக்கள் சொல்லுறாங்க,அப்போ மரம் நடுவாங்களா அரசியல்வியாதிகள் ...அவ்வ்வ் :-))

நாட்டை சுரண்டுவதை நிறுத்தப்போவதில்லை, அட்லீஸ்ட் சுரண்ட நாடும்,மக்களும் இருக்கனுமே என்றாவது மரம் நட மாட்டாங்களான்னு தான் சொல்லி வைக்கிறேன்.

# பின்னூட்டத்தில் நான் எப்பவும் தமிழில் தான் பேசுறேன்,வருகையாளர்கள் சில சமயம் ஆங்கிலத்தில் பேசுவதை எப்படி தடுக்க, அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக தமிழுக்கு மாறிவிடுவார்கள் என நம்புகிறேன்.

# ஏன் ஐம்பதோடு நிறுத்திட்டிங்க, நூறுன்னு சொன்னா குறைஞ்சா போயிடும், ஏனிந்த கஞ்சத்தனம்? செஞ்சுரி அடிக்க கூடாதுன்னு ஒரு கெட்ட எண்ணம் தானே :-))

நல்ல வேளை எனக்கு 50னு சொன்னதோட விட்டிங்க,மலபாருக்கு 50னு சொல்லி இருந்திங்க, ரத்தம் குடிக்கிற வவ்வால மாறியிருப்பேன் :-))
----------------------------
மாக்கான்,

நன்றி!

மரம் நடுவது உட்பட நான்கு செய்திகள் சொல்லி இருக்கேன், அவருக்கு பிடித்ததை படித்து கருத்து சொல்கிறார் என எடுத்துக்கலாம்.

எல்லாருக்கும் எல்லாம் பிடிப்பதில்லையே. சினிமா தான் எளிதில் மக்களை கவரும் ...ஹி ஹி ..அதனால் தான் நான் கூட படம்ம் எல்லாம் போட்டு பதிவில் மசாலா சேர்க்கிறேன் :-))
------------------

தினேஷ் குமார்,

நன்றி!

கூல் ...கூல். நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை சரியா சொன்னீங்க, குறைந்த பட்சம் கருத்தாவது சொல்வோம்னு சொல்லி வைக்கிறேன், அஃதே!

நமக்கு பரந்த பார்வை இருக்கு என சொன்னதற்கு நன்றி!

தமிழ்நாட்டை ஆளனும் என்றால் குறைந்த பட்சம் ஒரு சினிமாவில் பொணமாவது நடித்து இருக்கனும் :-))

ஊதுகின்ற சங்கை ஊதிவைப்போம்!
--------------

சகோ.சார்வாகன்,

நன்றி!

#ஹி..ஹி இயற்கையின் படைப்பில் இறைவனை காண்போம்!
பெரு விரிவாக்க கொள்கையினால் பெருமூச்சு அதிகமாகுது போல :-))

#எல்லாம் நாட்காட்டியினை பொறுத்தே எண்களும்,நாட்களும் ஒழுங்கமைவில் வருகின்றன ,என்பதை சொல்வதே நமது நோக்கம்,சரியா புரிஞ்சுகிட்டிங்க.

# பாரதியார்,ராமனுஜத்தை எல்லாம் துஷ்டனாக நினைத்தார்கள் அக்காலத்தில்.

ராமனுஜம் கடலை தாண்டக்கூடாதுன்னு சொன்ன அம்பிகள் எல்லாம் இப்போ அமெரிக்க தூதரக வாசலில் நின்றபடி தவம் இருக்கிறர்கள்,

காசே தான் கடவுளடா ...அது கடவுளுக்கும் புரியுமடா...டொட்டடொய்ங்!

# ரியல் தலவுக்கு வாழ்த்துக்கள்.

ஹி...ஹி..சுற்றி சுழன்றாடும் காரிகைகளை காண கண்கோடி வேண்டும் என்ற தத்துவத்தில் நாம் அனைவருக்குமே நம்பிக்கை இருக்கிறதே :-))

ஆனால் ராதாநாத் சாமியாரின் இசையும், நடனமும் ...ஏகாந்தமானவை :-))

ராத்திரி நேரத்து பூஜையில் மெட்டில் அருமையாக இருக்கிறது!

# அசோகர் அரசர் ,அரசாட்சியில் மரம் நட்டார், மக்களாட்சியில் ஆண்டவர்கள் வெட்டினார்கள். இது மக்களால் ,மக்களுக்கா ,மக்களே உருவாக்கியதல்லவா :-))

காகிதப்பயன்பாடு, பொதுவான மிகை நுகர்வு எல்லாம் இயற்கையை பலியாக்குகின்றன, அதனை எல்லாம் சொன்னால் நீ மட்டும் யோக்கியமானு நம்மையே பிறான்டுவாங்க :-))

#கூகிளாண்டவர் சித்தம் என் பாக்கியம் , அதனைப்பொறுத்தே படமும் அமையும் :-))
-----------------
இனியவன்,

நன்றி!

அரசியல்வாதிகள் என்னிக்கு பொது மக்களைப்பற்றி சிந்தித்தார்கள் ,அவர்கள் மக்கள் நலன் என்றால் அவர்கள் பெற்ரெடுத்த மக்கள் என்றல்லவா பொருள் :-))

அரசியல்வாதிகள் தங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதெல்லாம் ,முன்னர் செய்த ஊழலை எப்படி மறைப்பது, அடுத்த ஊழலை மாட்டிக்காமல் எப்படி செய்வது என்பதற்காக மட்டுமே :-))
---------------------

Anonymous said...

வவ்வால், இந்த நடைமுறை ஜப்பானில் உள்ளது. என் குழந்தை படித்த ஜப்பானிய துவக்கப்பள்ளியில், பள்ளியில் சேர்ந்த சில வாரங்களில் பெற்றோரிடம் தங்கள் குழந்தை பேர் பொறித்த ஒரு பூந்தொட்டி கொண்டு வரச்செய்து அதில் அக்குழந்தைக்கு பிடித்தமான செடி (பூ அல்லது மரம்) நடச்செய்து ஒவ்வொரு விளையாட்டு வகுப்பின்பொழுதும் குழந்தை கையினால் நீர் ஊற்றி வளர்க்கசெய்வார்கள். ஆண்டு முடிவில் தத்தமது வீடுகளுக்கு எடுத்துச்சென்று வளர்த்துகொள்ள்ளலாம்

KeeYes

வவ்வால் said...

KeeYes,

நன்றி!

நல்ல தகவல் சொன்னிங்க,நான் சொன்னது சாத்தியமில்லாத கற்பனை இல்லைனு உங்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன்.

அட டா ...நாம ஒன்றை கண்டுப்பிடிக்கவே விட மாட்டேங்கிறாங்களே இந்த சப்பான்காரங்க.

ஆனாலும் அவங்க மூளைக்காரங்க, முன்கூட்டியே கண்டுப்பிடிச்சுட்டாங்க, நம்மாட்களும் இருக்காங்களே, அவங்களாவும் எதுவும் செய்ய மாட்டேங்கிறாங்க, அடுத்தவங்க சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க.

ஜப்பான் எப்படி வேகமாக முன்னேறுகிறது என்பதற்கு உங்கள் சொன்ன தகவலே சான்று!

எங்கம்மா கூட சொல்லுவாங்க எனக்கு சப்பான்காரங்க போல மூளைன்னு :-))

ம்ம் நான் மட்டும் நியுட்டன் போறக்கிறதுக்கு முன்னாடி பொறந்திருந்தா , ஆப்பிள் விழுவதை வைத்து புவியீர்ப்பு விசையிருக்குன்னு கண்டுப்பிடிச்சு இருப்பேன்ல :-))

இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு நீங்க சொல்லுறது கேட்குது, திட்டுறதுக்கு முன்ன முடிச்சுப்போம்!!!

ராஜ நடராஜன் said...

ஊய்!வவ்சு!நான் உங்களை அங்கே தேடிகிட்டிருந்தா இங்கே வந்து உட்கார்ந்துகிட்டீங்களாக்கும்:)

இப்படியெல்லாம் பொது சேவை,பொது அறிவு பதிவுகள் போட்டால் நான் ஏன் ஒட்டக வாயை திறக்கப்போறேன்:)

//இந்த 60 ஆண்டுகளும் நாரத பாகவதருக்கும் , ஊதாங்குழல் கிருஷ்ணாவுக்கும் பிறந்த புள்ளைங்களாம் :-))//

இது பெரியார் டயலாக்காச்சே!எப்படியோ பெரியார் பேரு சொல்றதுக்கும் சிலர் இருப்பது வரவேற்க தக்கதே.

ராஜ நடராஜன் said...

சின்னசாமி சுப்ரமணி பாரதிக்கும்,அவரின் கவிதைகளுக்கும்,புரட்சிகளுக்கும் இந்த பின்னூட்டம் சமர்ப்பணம்.

ராஜ நடராஜன் said...

மூளை மட்டுமா சப்பான் இல்ல மூக்குமா:)

ராஜ நடராஜன் said...

சோலார் பவருக்கும் முன்னால் C Power ன்னு சூரிய ஒளி,வீட்டு மின்சார ஒளியென எந்த பேட்டரி,மின்சார இணைப்பும் இல்லாமல் இயங்கும் சப்பான் கேசியோ கால்குலேட்டர் இன்னும் பழுதுமில்லாமல் தொடர்ந்து இயங்குவது மட்டுமே சப்பான் மூளை என்பேன்:)

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் ரஜனி ரசிக வாடை அடிக்கிற மாதிரி இருக்குதே!அதுனாலதான் லோகநாயகர் மேல அந்த பாய்ச்சலா?

//ஹீரோவாக நடிப்பவர் தான் நாட்டை காப்பாற்றனும் என நான் நினைப்பதில்லை.//

நம்மளும் சேம் பிள்ட்தான்!ஆனால் பஞ்ச் டயலாக் பேசி பாமர ரசிகர்களை உசிப்பேத்தி விட்டு ஏமாற்றுவது தவறுதானே!

சீமான்,ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம் தமிழர்கள் மட்டும்தான் இனி ஆளப்பிறந்தவர்கள்ன்னு புது ரூட்டு போடுறாங்க.ஆனால் தமிழ் மொழி பற்றும்,தமிழ் உணர்வும் இருப்பவர்கள் அனைவருமே தமிழர்கள் என்ற இலக்கண அடையாளத்துக்குள் வருகிறார்கள்.

தமிழகத்திலிருந்து அரசியலில் ஆளும் சந்தர்ப்பம் வந்து நழுவ விட்டவர்கள் மூன்று பேர் எனலாம்.

1. காமராஜ் - பிரதமர் பதவி
2. மூப்பனார் - பிரதமர் பதவி
3. ரஜனி - முதல்வர் பதவி.

அஞ்சா சிங்கம் said...

நல்ல யோசனை தான் .பார்க்கலாம் நமக்கு குடுப்பினை இருந்தால் இத்தாலிய அன்னை மாதிரி ஒரு சப்பானிய ஆத்தா நமக்கு கிடைக்காமலா போயிடும் . அப்போது இந்த திட்டமும் அறிமுக படுத்த படலாம் ..........எல்லாம் ராகுல் கையில இருக்கு . பாரத் மாத்தா கீ ஜெய் ....................சோனியா ஆத்தா கீ ஜெய் ...............

ராஜ நடராஜன் said...

பசுமை தமிழகம்ன்னு சிலர் ரப்பர் ஸ்டாம்ப் வைச்சிகிட்டிருந்தாலும் கூட உண்மையிலேயே மரங்கள் மீதான அக்கறையும்,பொறுப்பும்,சமூக உணர்வும் கொண்டவர்கள் நிறைய பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

பள்ளியிலும்,கல்லூரியிலும் ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்பு திட்டம் என்ற பதிவின் சாரமும்,பின்னூட்டத்தில் KeeYes குறிப்பிட்ட ஜப்பான் பள்ளி நடைமுறையும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

ராஜ நடராஜன் said...

சுட்டியெல்லாம் படிப்பதேயில்லைன்னு வேற வழக்கு போடுவீங்க!

11-11-11 க்கு ஒற்றைப் பின்னூட்டமும்,உங்களை மாதிரியே ஊரை விட்டு தள்ளி வச்ச சி.பி மட்டும் கொசுறா இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே.

பதிவுகளுக்கு இணையா இப்ப நண்பர்களின் பின்னூட்டங்கள் களைகட்டுவது ஒட்டக சவாரி மாதிரி மகிழ்ச்சியளிக்கிறது:)

Dinesh Kumar said...

Hi Vovval,
Now a days, why you are not commenting anything about cable's nonsense materials. Earlier we used to see some honest comments of you in every article of cable. any reason?

Two days back he written a very vulgar article about serial shooting. I dont know what kind of man he is?,. He insulted his own colleague who acted with him in that serial. In my opinion, he should be punished under article 66A for writing such a vulgar and nuisance materials.
Thanks

வவ்வால் said...

ராச நட வாரும்,

நன்றி!

ஒட்டகம் வாய சும்மா சும்மா தொறந்தா ,வாயில சூடு தான்ன் வைக்கணும் :-))

போட்டோ ஓல்டிக் பேனல் என்றால் என்னு வேற விளக்கணும் போல இருக்கே? கால்குலேட்டர், சோலார் பேனால் எல்லாம் ஒரே வகையில் செயல்படுது, அளவு தான் வேற , தொழில்நுட்பத்திற்கும் உங்களுக்கும் ஸ்நானப்பிராப்திக்கூட இல்லையே :-))

சப்பான் மூளை திராவிட மூக்கு :-))

லோகநாயகர் செய்யிற காமெடியை சொல்ல ரசினி ரசிகராத்தான் இருக்கணுமா?

அவரு பஞ்ச் டயாலாக் பேசினா அதை நம்ம்ப யாரு சொன்னா?

உங்களை கூட அமெரிக்க அதிபராக கூப்பீட்டாங்களே, நீங்க கூட வேன்டாம்னு சொன்னீங்களே :-))

பசுமை தமிழகம் ரப்பர் ஸ்டாம்பு வேண்டும்னா , உருளுனு ஒருத்தர் வருவாரு அவரைப்புடிங்க :-))

பள்ளி அளவில் மரம் வளர்ப்ப்பு கொண்டு சென்றால் குறைவான செலவில் ,பசுமை சாத்தியமாகும்.

படிக்க வேண்டிய சுட்டிய படிக்காதிங்க. நாமத்தான் தள்ளி வச்சிருக்கோம். நம்ம ஆட்டம் எப்போதுமே நின்னு ஆடுவது தானே, போக போக தான் சூடு பிடிக்கும்.
----------------

அஞ்சா ஸிங்கம்,

வாரும் நன்றி!

தமிழ்த்தாய் நினைத்தாலே செய்ய கூடியதற்கு ராகுல் புண்ணியத்தில் சப்பானிய தாய் வரனுமா?

யாராவது செய்தால் சரி தான். கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா போதும் :-))
------------------
தினேஷ் குமார்,

நன்றி!

நாம குடுத்த குடைச்சலைப்பார்த்து மிரண்டு போய் கமெண்ட் மாடரேஷன்ன் வச்சு ,என் கமெண்ட்ஸ் வெளியிடுவதில்லை, அதனால தான் அங்கே ஒன்னும் வரலை :-))

சுவாரசியமாக எதையாவது எழுதினால் தானே கூட்டம் வரும், அதற்கு என்ன வேண்டுமானாலும் எழுதுவாங்க,கண்டுக்காம போக வேண்டியது தான்.

அஞ்சா சிங்கம் said...

தமிழ் தாய் தான் நமக்கு போதுமான வரைக்கும் செஞ்சாச்சே ......
இன்னும் செய்யணும்ன்னு எதிர்பார்கிறீங்க . உங்களுக்கு இரும்பு மனசுதான் .
அவங்க செய்யிறதுக்கு தயார்தான் அதை தாங்கி கொள்ள நீங்களும் நானும் தயாரா .......?

ஜோதிஜி said...

வலைதள என் தொடக்க நிலையில் வேர்ட்ப்ரஸ் ல் எழுதிக் கொண்டிருந்த போது பாரதி படத்தை என் படம் போல வைத்திருந்தேன். ஆனால் அவரின் உண்மையான பெயராக சுந்தரமூர்த்தி என்பதை இன்று தான் தெரிந்துகொண்டேன்.

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

தமிழ்த்தாய் கேட்காமலே நிறைய கொடுப்பாங்க ,கேட்டால் கொடுக்கமாட்டாங்களான்னு ஒரு நப்பாசை தான் :-))

மின்சாரம் கொடுக்கவில்லைனு சொல்லாம மின்வெட்டு "கொடுத்திருக்காங்க"ன்னு பாசிட்டிவா யோஜிக்கணும்னு ஜென் தத்துவ ஞானி போல நம்மை சிந்திக்க வைத்தவர்கள் தமிழ்த்தாய் மட்டுமே :-))
-----------

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

உங்க தமிழ்ச்செடியை படிச்சிட்டு ,அப்புறமா பின்னூட்டம் போடலாம்னு நினைச்சிட்டு வந்துட்டேன், நல்ல முயற்சி, இன்னும் சிறப்பாக கொண்டு செல்லுங்கள்.

#ஒஹோ அப்படியா, தெ.கா கூட அதான் உங்களை முண்டாசுனு சொல்றாரா?

இப்போ கூட ஒரு முண்டாசு கட்டி மீசையை முருக்கினா பாரதியார் போலத்தான் இருப்பீங்க!!!

முரட்டுக்காளை said...

என்னய்யா ஐதிங்க் சாமியோவ்

யாஹூ பொது அரட்டை அறைகள் மூடியாச்சாம்ல ! இப்ப என்ன பால்டாக் , மோர்டாக் , தயிர்டாக் னு சுத்துறீரா ஹி ஹி ஹி...

வவ்வால் said...

புல்ஸ் சுவாமி,

வாரும்,ஷேமமாக்கீறீரா?

என்னாச்சு சங்கு ஊதிட்டாங்களா? எனக்கு இணைய இணைப்பு சரியா இல்லை, அதான் அந்தப்பக்கம் வரமுடியலை, அதுக்குள்ள நீர் குண்டு போடுறீர்?

என்ன ஆச்சுன்னு அப்டேட் கொடுக்கவும்.