Thursday, February 13, 2014

அஃதே இஃதே-9


(புதுசு புதுசா ஏதோ சொல்றானே ,ஆமாம் மின்னூல் தொட்டா ஷாக்கடிக்குமா?..ஹி...ஹி)

# வலைப்பதிவுகளை எளிதாக மின்னூலாக்கம் செய்தல்.


மின்னூல் என்பது வெறும் பிடிஎஃப் மட்டுமல்ல , உலாவ தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட "epub, mobi,azw3” (மேலும் பல மின்னூல் வடிவங்கள் உள்ளன)போன்றவையும் ஆகும். இதில் " epub” (version-2,3)என்பது திறமூல மின்னூல் வடிவம் ஆகும், இதனை பல மின்னூல் வாசிப்பு(ebook readers) கருவிகளிலும் வாசிக்க இயலும், ஆனால் " mobi,azw3” போன்றவை அமேசான் நிறுவனத்தால் அவர்களின் கிண்டில் கருவிக்காகவே உருவாக்கப்பட்ட மின்னூல் வடிவம் ஆகும், அவர்களின் கருவியை தவிர மற்ற கருவிகளீல் படிக்க இயலாது. mobi ,azw3” ஆகியவை பழைய வடிவம் ஆகும் தற்போது KF8- kindle format-8 என்ற புதிய மின்னூல் வடிவினை அமேசான் முன்னெடுத்து செல்கிறது. இதோடு இல்லாமல் கிண்டில் எக்ஸ்ரே என ஒரு முறையினையும் அறிவித்துள்ளார்கள்,எப்ப இந்தியா பக்கம் வரும்னே தெரியலை.

மின்னூல் என்பது ஏதோ ஒரு வடிவில், கையடக்க கருவிகளுகளில் மின்னூல் என்பது தற்சமயம் பலராலும் வாசிக்க பயன்ப்பட்டு வருகிறது. தமிழ் ஒருங்குறி உருவான பின் இணையத்தில் தமிழில் எழுதுவது எளிதானது போன்றே , கையடக்க கருவிகளுக்கான மின்னூல் உருவாக்கத்திலும் ஒருங்குறி மிகவும் கைக்கொடுக்கிறது

தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பட்டு ,நன்றாக கட்டமைக்கப்பட்ட (formatted) ஒரு கோப்பினை "மின்னூலாக்கம்" செய்யும் மென்ப்பொருளில் உள்ளீடு செய்தால் போதும் , சில நிமிடங்களில் மின்னூல் தயார்.

கேட்பதற்கு எளிதாக இருப்பினும் ,இதிலும் சில சிக்கல்கள் உள்ளன, அதனை பின்னர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக காணலாம். வணிக ரீதியில் விற்கத்தக்க தரமான மின்னூல் தயாரிப்பிற்கு தான் சிறிது மெனக்கெட வேண்டும், சும்மா பொழுதுப்போக்காக நண்பர்களுக்குள் படிக்க பரிமாறிக்கொள்ள எனில் மிக எளிதாக ஒரு வலைப்பதிவு இணைப்பு கருவி(blogger plug-in) மூலமே செய்ய இயலும்.

அதனை செயல் முறை பட விளக்கத்துடன் காணலாம்,

# கீழ் கண்ட ஜாவா ஸ்கிரிப்டினை பிரதியெடுத்துக்கொள்ளவும்,


//script src="http://dotepub.com/p/widget.php?lang=en&links=1&img=2" type="text/javascript"//

 டபுள் ஸ்லாஷ்களை மாற்றிவிட்டு,முன்னும் பின்னும்,"<" , ">"  என போட்டுக்கொள்ளவும்.


ஜாவாஸ்கிரிப்ட் மூலம்,


இணையத்தளம்,நன்றி!

குறிப்பு: கூகிள் குரோம் உலாவிக்கு நீட்சி/இணைப்பியாகவும்(browser extension) கிடைக்கிறது. உலாவியில் இணைத்துக்கொண்டால் அனைத்து தளங்களையும் மின்னூலாக சேமித்துக்கொள்ள இயலும், பிடிஎஃப் விட மிக சிறிய அளவே இடம் பிடிக்கும்.

# வலைப்பதிவுனுள் நுழைவு செய்யவும், வலைப்பதிவு மோதுப்பலகை ஹி...ஹி டேஷ் போர்டிற்கு(blogger dasgboard) செல்லவும்.

# டேஷ் போர்டில் இடப்பக்க வரிசையில்,கீழே "அடைவுகள்" -டெம்ப்ளேட் "எனக்காட்டப்படுவதை அழுத்தவும்.

# தற்போது கீழ் கண்டவாறு ஒருப்பக்கம் திறக்கும்.


இதில் , வலைப்பதிவு அடைவுகள், அலைப்பேசி அடைவுகள் என இருபகுதிகள் காட்டும், அதில் வலைப்பதிவு அடைவுகளில் , மீயுயர் திருத்தி( edit html) என்ற பட்டையை அழுத்தவும்.

# படத்தில் காட்டியவாறு ,அடைவுகள் பக்கம் திறக்கும்.



கருவிகள் பட்டையில் குதிக்கவும்(jump to widget) என்பதெல்லாம் தேர்வு செய்ய தேவையில்லை, html ஆக காட்டும் அடைவுக்குறியீட்டுப்பகுதியில் (பெட்டியில்)சுட்டெலிப்புள்ளியை(mouse curser) வைத்து தேர்வு செய்யவும்,

பின்னர்,

விசைபலகையில் “ctrl+f “ அழுத்தினால் , அடைவுக்குறியீட்டுப்பெட்டியில் வலது மூலையில் தேடுதல் பெட்டி(serach box) தோன்றும்.

பதிவில் வலப்பக்கம்,இடப்பக்கம்,மேலே ,கீழே என பல கருவிகள் இணைத்திருப்போம், அதில் எந்த கருவிக்கு மேலாக மின்னூலாக்கம் செய்யும் கருவியின் பட்டை வர வேண்டும் என நினைக்கிறீர்களோ,அதன் பெயரை தேடுதல் பெட்டியில் கொடுத்து , எண்டர் தட்டவும்.

நான் செய்த முறை என்னவெனில்,

எனது பதிவில் சமீபத்திய வரவுகள் தான் ,வலப்பக்க வரிசையில் மேலாக முதலில் இருப்பதால் அதற்கு மேலாக மின்னூலாக்க கருவிப்பட்டையை வர வைக்க நினைத்தேன் ,எனவே "recent post” என தேடல் பெட்டியில் கொடுத்து தேடினேன், அதனை அடைவுக்குறியீட்டுப்பெட்டியில் கண்டுக்கொண்டேன்,

காண்கப்படம்.


"recent post” இன் குறியீட்டு வரைவு ஆக ஒரு கமெண்ட் உள்ளதை வட்டமிட்டு காட்டியுள்ளேன், அதன் கீழாக மின்னூலாக்க ஜாவா ஸ்கிரிப்டினை ஒட்டிவிட்டேன்.

அவ்ளவு தான், அடைவு மாற்றத்தினை சேமித்து விட்டு வெளியேறியாச்சு.

இப்பொழுது பதிவினை திறந்து பார்த்தால் , "recent post” தலைப்பிற்கு மேலாக மின்னூலாக்க கருவிப்பட்டை "e-book” என தெரியும்.




# எந்த பதிவினை மின்னூலாக்கம் செய்ய வேண்டுமோ அதனை திறந்து வைத்துக்கொண்டு , “ e-book” கருவிப்பட்டையை அழுத்தவும், இப்பொழுது ஒரு "துள்ளுப்பெட்டி" (pop-up box/window)தோன்றும், அதில் படங்களுடன் மின்னூலாக்கம் செய்யவா எனக்கேட்கும்,


ஆம் எனக்கொடுத்து விட்டால் தானியங்கியாக படங்களுடன் கூடிய மின்னூலை உருவாக்கி விடும்.

அதனை நமது கணினியில் சேமித்துக்கொள்ள வேண்டியது தான்.

கவனத்தில் கொள்க,

# இம்மின்னூல் நமது வலைப்பதிவின் மைய பகுதியில்- உள்ளடக்கத்தில்(body) உள்ளவற்றை மட்டுமே மின்னூலாக்கும்.

# அதிகமான படங்கள் இருக்குமெனில் அவற்றினை சேகரிக்க இயலாது ,குறிபிட்ட எண்ணிக்கையில் மட்டும் படங்களை சேகரிக்கும் என அறிவித்து விடும், அப்பொழுது அதற்கு ஏற்ப ,ஆம் இல்லை என தெரிவித்து மின்னூலாக்க வேண்டும்.

# மின்னூல் உலாவி(navigation), உள்ளடக்கப்பட்டியல்(Table of contents) ஆகியன , நமது பதிவில் உள்ளடக்கத்தினை எவ்வாறு தலைப்பிட்டு  வகைப்படுத்தியுள்ளோம் என்பதனை பொறுத்தே அமையும்.

# இம்மின்னூலினை கணினியில் ,அடோப் டிஜிட்டல் எடிஷன் , கிண்டில் கணினி படிப்பான் போன்ற மின்னூல் வாசிப்பு செயலிகளில்(applications) படிக்க இயலும். மேலும் அண்ட்ராயிட் அலைப்பேசி, நூக், கிண்டில் போன்ற கையடக்க கருவிகளிலும் படிக்க இயலும்.

# ஒருப்பதிவில் எந்த அளவுக்கு ஒருங்குறியில்* சிறப்பாக உள்ளடக்கம் கொண்டுள்ளதோ அதைப்பொறுத்தே "சேதமில்லாமல்மின்னூல் உருவாகும்.

*
மின்னூலின் சிறப்பான வெளியாக்கத்திற்கு ஒருங்குறி(ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளூக்கு இது அவசியமாகும்),மீஉயர் மொழி(HTML), விரிவாக்க மீயுயர் மொழி( XHTML) ஆகியவற்றின் அடிப்படையில் , மின்னூலின் வடிவமைப்பு(formatting) மற்றும் கட்டமைப்பு (structure) சிறப்பாக இருக்க வேண்டும்.

இலவச மின்னூல் வாசிப்பு கருவிகள்,





# android -Moon+ reader என கூகிள் பிளேயில் ஆண்ட்ராய்ட் போனில் இருந்து தேடினால் ,கிடைக்கும்,அதனை நிறுவிக்கொள்ளலாம்.


நம்மப்பதிவை மின்னூலாக்கியதன் மாதிரிகள்,

அடோப் டிஜிட்டல் எடிஷனில்.


கிண்டில் கணினி படிப்பானில்.



கிண்டில் கருவியில் படிக்கும் பொழுது, e-ink, paper white ஆகியவற்றை மட்டும் தேர்வு செய்யவும், ஃபயர், எச்டி, எச்டி.டிஎக்ஸ் எல்லாம் உடைந்த வடிவில் காட்டும்.

இரு வகையிலும் மின்னூலாக்கியதில் "கிண்டில்" வடிவில் எழுத்துக்கள் தெளிவாக உள்ளன, ஈபுக்கில் கொஞ்சம் பிசிறடிக்குது.

android phone:



மேலும் மின்னூலுக்கு அட்டையாக "நிலையாக" பச்சைக்கலரில் அவர்களின் இணையத்தளப்பேரை போட்டுக்கொடுக்கிறாங்க, எனவே அட்டைப்படம் மாற்றுதல் மற்றும் மேலும் சில மேம்பாடுகளை , கேலிபர் எனப்படும் இலவச மின்னூல் உருவாக்கும் கருவியில் செய்துக்கொண்டேன்,




இந்த ஜவா ஸ்கிரிப்ட் பிளக்கினின் "epub" வடிவம் கொஞ்சம் பிசிறடித்தது, எனவே மொபி வடிவத்தினை , "கேலிபர்" மூலம் மீண்டும் "epub" ஆக மாற்றிக்கொண்டேன் ,அப்பொழுது நன்றாக எழுத்துக்கள் தெரிந்தன, முன்னரும் நன்றாக தெரிந்தது,ஆனால் வரிகளுக்கிடையே இடைவெளி குறைவாக,நெருக்கமாக தோன்றின.



வடிவம் மாற்றும் போதே அட்டைப்படமும் மாற்றிக்கொண்டேன் ,சும்மா பளிச்சுனு தெரிஞ்சது ,...ஹி ...ஹி மின்னூல் தான்!

அனேகமாக தமிழ் வலைப்பதிவுலக வரலாற்றில் மின்னூல் வலைப்பதிவை வெளியிட்டது அடியேனாக தான் இருக்கும் , ஹி...ஹி! ஓசி ஜாவா ஸ்கிரிப்டுக்கே இந்த அலப்பறையா என யாரோ தூரமா கூவுறாங்க போல அவ்வ்!

இப்படி வலைப்பதிவுகளை மின்னூலாக்கி வெளியிடுவதை "epublog”- மின்வலைப்பூ" என அழைக்கலாம் என நினைக்கிறேன்.

நேரம் கிடைப்பின் ,கேலிபர், சிஜில் போன்ற இலவச மின்னூலாக்க கருவிகளைக்கொண்டு தரமான மின்னூல் உருவாக்கும் முறையினையும் பதிவிடுகிறேன்.

அவல நகைச்சுவை குறிப்பு:

இந்த ஸ்கிரிப்டை சில நாட்களூக்கு முன்னர் பதிவில  இணைத்தேன்,இது வரைக்கும் வேறு எந்தப்பதிவிலும் காணாத ஒன்றுனு தான் இணைச்சேன்(எல்லாம் நினைப்புதேன்), வழக்கமாகவே ஆட் ஆன், பிளக்கின் சேர்க்க விரும்புவதேயில்லை. இதை வச்சு யாரும் மின்னூலாக உங்க பதிவை மாற்றினேனு சொல்லவேயில்லை என்பதால் ,ஹி...ஹி சுய விளம்பரமாக ஒரு பதிவை போட்டு தொலைச்சேன் அவ்வ்!

இம்புட்டு மொக்கையாக ஒருப்பதிவானு சபையில யாரும் கேட்டிரக்கூடாதுனு தான் இந்த பின் ஜாமீன் ஹி...ஹிi!


பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,


மற்றும்,

அடோப், கிண்டில்,கூகிள், இணையத்தளங்கள்,நன்றி!
-----------------------------------


18 comments:

Anonymous said...

நான் உங்க பதிவ எல்லாம், பயோநூலா (Bio-Book - இது நம்ம கண்டுபிப்பு. ஹி....ஹி....ஹி....) மாற்றி மூளையில் சேமிப்பது தான் வழக்கம். வித்தியாசமாக இந்த பதிவ மட்டும், மின்னூலா மாற்றி என் computer ல சேமிச்சி வச்சிருக்கேன்.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பதிவு! என் தொழில்நுட்ப அறிவுக்கு விளக்கங்கள் இன்னும் புரியவில்லை! இரண்டொரு முறை படித்தால் மின்னூல் ஆக்க முடியும் என்று நினைக்கிறேன்! நன்றி!

Amudhavan said...

ஆஹா எத்தனை உபயோகமான விஷயத்தை எவ்வளவு எளிதாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்று எழுத ஆசைதான். நமக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்துப் பார்த்துச்செய்ய இத்தனைப் பொறுமையும் கிடையாது.யாராவது நண்பர்கள் வரும்போது இந்தப் பதிவைக் காட்டி கணிணியில் நிறுவிக்கொள்ள வேண்டியதுதான்.

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!!

//நான் உங்க பதிவ எல்லாம், பயோநூலா (Bio-Book - இது நம்ம கண்டுபிப்பு. ஹி....ஹி....ஹி....) மாற்றி மூளையில் சேமிப்பது தான் வழக்கம். //

மஞ்சத்துண்டு இதயத்தில் இடமளிப்பேன் என சொல்லி அல்வாத்தான் கொடுப்பார்,ஆனால் மூளையில் இடம் கொடுத்த வள்ளலய்யா நீர்!

அச்சு நூல்,மின்நூல் எல்லாம் அழியலாம் ஆனால் பயோ நூல் நாம இருக்க வரைக்கும் இருக்கும்,ஹி...ஹி யாரும் ஓசிக்கேட்டும் தொந்தரவு செய்ய முடியாது :-))

வருங்காலத்தில கணினி போன்ற மின்னணு சாதனத்தில் இருக்கும் தகவல்களை நேராக மூளைக்கு வயர்லெஸ்ஸாக அனுப்பி படிக்கும் நிலை வரலாம், அப்போ எல்லார் தலையிலும் "வேற்றுகிரகவாசிகள்" போல ஆன்டெணா கொம்பு முளைச்சிடலாம் அவ்வ்!

டெலிபதி போல டெலி ரீடிங்,ரைட்டிங் ,டெலிபுக் என வரக்கூடும்,ஹி...ஹி அப்பவும் நான் இதே போல மொக்கை போடுவேனோ என்னமோ அவ்வ்!

#// வித்தியாசமாக இந்த பதிவ மட்டும், மின்னூலா மாற்றி என் computer ல சேமிச்சி வச்சிருக்கேன்.//

என் இனமய்யா ,நம்ம மனசு அறிஞ்சு மின்னூலாக மாற்றிட்டேன்னு சொல்றீர் :-))

படிக்கிறா போல நல்லா வந்திருக்கா? எனது கணீனியில் தமிழின் எந்த வடிவமும் சரியா காட்டிறும் ,ஜி...ஹி சுமார் 500 தமிழ் எழுத்துரு போட்டு வச்சிருக்கோம்ல அவ்வ்!

மலையாள ஸ்கிரிப்ட் கூட நல்லா காட்டுது...ஹி...ஹி ஒரு சிடில இருந்த இன்டிக் ஃபாண்ட் எல்லாம் போட்டதால் வந்த விளைவு!
---------------

சுரேஷ்,

வாங்க,நன்றி!

வலைச்சர பணியெல்லாம் முடிஞ்சுதா,நல்லா செய்தீங்கனு பொதுவாக சொல்லலாம் தான் ,ஆனால் முத நாளூக்கு அப்புறம் அந்தப்பக்கமே வரலை, சமீபநாட்களா அலைச்சல் அதிகமாகிடுச்சு அதான்.

எப்படியும் நல்லா தொகுத்திருப்பீங்கனு நினைக்கிறேன்,ஊருப்பட்ட பதிவ படிச்சு பின்னூட்டமிடுபவர் ஆச்சே (படிக்காமலேவா?), பாராட்டுக்கள்!

# இதுல என்ன தொழில் நுட்பத்த சொல்லிட்டேன்? சும்மா சேர்க்கணும் அதை வச்சு ஒரு பதிவ தேத்தி இருக்கேன்ன் அவ்ளோ தான் அவ்வ்!

ஒரு தடவை முயற்சித்து பாருங்க, பாதிப்பெல்லாம் வராது, சரியா வரலைனா "ரெவெர்ட் சேஞ்சஸ்" என டெம்ப்ளேட் ல கொடுத்தால் முன்ன இருந்தா போல பதிவு ஆகிடும்.
------------------------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

உங்க சமீப பதிவ படிச்சேன்,அதுக்கு கருத்து சொல்லலாம்னு நானும் பார்க்கிறேன் ,இன்று போய் நாளை வா போல இழுத்துக்கிட்டே போகுது ,வாரமும் ஆகிடுச்சுனு நினைக்கிறேன் அவ்வ்!

# சிக்காலாக எதுவும் இதுல இல்லை,எளிதாக செய்யலாம், இதை வச்சு எப்படி ஒரு பதிவ போடுறதுனு தான் நானே ரொம்ப யோசிச்சேன் அவ்வ்!

உங்களுக்கே பொறுமை கிடையாதுனு சொன்னா என்னெல்லாம் என்னனு சொல்வீங்க, அவசரக்குடுக்கைனா அவ்வ்!

நமக்கும் பொறுமைக்கும் ஒத்து வரவே வராது , பதிவு எழுதக்கூட பொறுமையா உட்கார முடியலைனா என்னாத்த சொல்ல!

அதனால ரொம்ப பிசி ,வானத்தை தோளில் சுமக்கிறேன்னுலாம் நினைச்சுடாதிங்க :-))

எல்லாம் ஒரு சோம்பேறித்தனம் தான் ஹி...ஹி!

# சும்மா நீங்களே முயற்சிக்கலாம், சரியா வந்தா லாபம்,வரலைனா போகட்டும் கழுதைனு போகலாம். டெம்ப்ளேட்டில் என்ன மாற்றம் செய்தாலும் பிடிக்கலைனா "ரெவெர்ட் அல்லது ரிஸ்டோர் டிபால்ட்" என மீண்டு விடலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜோதிஜி மின்னூல் வெளியீட்டிற்குப் பிறகு நானும் ஆர்வத்தி காரணமாக மின்னூல் உருவாக்க முயற்சி செய்தேன். BLOGsmith வலை தளத்தின் மூலம் எனது 10 பதிவுகளை மட்டும் எடுத்து மின்னூலாக்கும் முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை.
பின்னர் zinepal தளத்தில் 5 பதிவுகளை வைத்து மின்னூலாக்கம் செய்ததில் ஓரளவிற்கு வெற்றி கிடைத்தது. pdf, epub, வடிவங்கள் தெளிவாகவே அமைந்தது. ஆனால் comments ம் கூடவே இடம் பெற்றிருக்கிறது. அதே தளத்தில் கிடைத்த quik ebook டூல்பாரை இணைத்துள்ளேன்
முன்னதாக Script ஐ இணைத்ததாக சொல்லி இருக்கிறீர்கள். எப்போது என்று தெரியவில்லை நான் கவனிக்கத் தவறி விட்டேன் என்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால் உடனேயே முயற்சி செய்திருப்பேன்.நாளை இதையும் சோதனை செய்து பார்த்து விடுவேன்.
வார இதழ்கள் வெளியிடும் flip வடிவத்தில்
மின்னூல் அமைப்பது எப்படி அதற்கான குறிப்புகள் கொடுக்கவும்.
(கூகிளில் தேடிப் பெறுவதில் எனக்கு பயிற்சி போதவில்லை. இத்தகைய plugin என் கண்ணில் படவில்லை)
தெளிவான விளக்கம் அளித்திருக்கிறீர்கள். வவ்வால். எழுதுபவர்களில் மிகச் சிலரே இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். எல்லோரும் செய்ய முடியும் என்பதை தெளிவாக்கி இருக்கிறீர்கள் நன்றி

வவ்வால் said...

முரளி,

//ஜோதிஜி மின்னூல் வெளியீட்டிற்குப் பிறகு நானும் ஆர்வத்தி காரணமாக மின்னூல் உருவாக்க முயற்சி செய்தேன். BLOGsmith வலை தளத்தின் மூலம் எனது 10 பதிவுகளை மட்டும் எடுத்து மின்னூலாக்கும் முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை.
பின்னர் zinepal தளத்தில் 5 பதிவுகளை வைத்து மின்னூலாக்கம் செய்ததில் ஓரளவிற்கு வெற்றி கிடைத்தது. pdf, epub, வடிவங்கள் தெளிவாகவே அமைந்தது. ஆனால் comments ம் கூடவே இடம் பெற்றிருக்கிறது. அதே தளத்தில் கிடைத்த quik ebook டூல்பாரை இணைத்துள்ளேன்//

ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல , கமுக்கமா செய்து பார்த்து இருக்கீங்க அவ்வ்!


ஈபுக்னு ஒன்ன போட்டுவிட்டு அத படிங்கனு விளம்பரம் செய்துக்கொண்டு அலைவதெல்லாம் நமக்கு ஒத்து வராதுனு தான் அதை எல்லாம் செய்வதில்லை, இந்த பிளக்கின் பற்றிக்கூட பதிவு போட காரணம் ஆஃப்லைனில் படிக்க உதவும்னு தான்.

ஈபுக் போடணும்னா நேரா அமேசான்ல கிண்டில் டைரக்ட் பப்ளிகேஷன்ல டைரக்ட்டா ஈபுக் போடுவோம்ல, அப்படி செஞ்சாலும் அதுக்கு விளம்பரம் செய்துக்கிட்டு அலையணும்,பதிவை கூட விளம்பரமா திரட்டிகளீல் இணக்க நமக்கு சோம்பல் இதுல எங்கே இருந்து ஈபுக்கு விளம்பரம் செய்ய அவ்வ்!

//முன்னதாக Script ஐ இணைத்ததாக சொல்லி இருக்கிறீர்கள். எப்போது என்று தெரியவில்லை நான் கவனிக்கத் தவறி விட்டேன் என்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால் உடனேயே முயற்சி செய்திருப்பேன்.//

நம்ம பதிவை வழக்கமா படிக்கிறவங்க கண்ணுக்கே தெரியாத இடத்தில "லின்க் போட்டுவிட்டேன்" எப்போவாது படிக்குற உங்களூக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை அவ்வ்!

ரெண்டு மூனு இடத்தில சேர்த்து ,சரியா தெரியலைனு (மக்கள் கவனத்தை ஈர்க்காத இடங்கள்) இப்போ இருக்காப்போல சேர்த்துட்டு ,பதிவ போட்டேன்.எல்லாம் டிரையல் & எர்ரர் தான் :-))

தலைப்பின் மேலே இடப்புறம் கூட இன்னும் பழைய லின்க் இருக்கு,அதே போல பதிவின் கீழ போட்டேன்,அதை நீக்கீட்டேன்.

ஹி..ஹி உங்க சமீபத்திய பதிவு கூட படிச்சேன் (பின்னூட்டம் கூட போட்டேன், என்ன கொடுமைடா இது த.ம-1னு ஓட்டுபோட்டேன்னு சொல்வது போல சொல்லிக்க வேண்டியதா இருக்கு அவ்வ்)ஆனால் நீங்க சொன்ன அந்த டூல்பார் எனக்கு தெரியலையே ஏன்?

#//வார இதழ்கள் வெளியிடும் flip வடிவத்தில்
மின்னூல் அமைப்பது எப்படி அதற்கான குறிப்புகள் கொடுக்கவும்.//

அது ஃப்ளாஷ் வடிவம். அடோப் இன்டிசைனில் எளிதாக செய்யலாம், இலவசமாக செய்ய முடியுமா எனதெரியவில்லை, டிரையல் மென்பொருள் கிடைக்குது,நானே செய்து பார்த்துள்ளேன்.

மேலும் சில கையடக்க கருவியில தான் அம்முறை வேலை செய்யும்,என சிக்கல்லாம் இருக்கு.

//தெளிவான விளக்கம் அளித்திருக்கிறீர்கள். வவ்வால். எழுதுபவர்களில் மிகச் சிலரே இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். எல்லோரும் செய்ய முடியும் என்பதை தெளிவாக்கி இருக்கிறீர்கள் நன்றி //

நன்றி!

காரிகன் said...

வவ்வால்,
உங்க பைக் எல்லா பாதையிலும் போகும்போல. எந்த தலைப்பா இருந்தாலும் விடாது எழுதி திகைக்க வைக்கிறீர்கள்.

குறும்பன் said...

அமேசான் பயர்+ல ஒருங்குறி ஆதரவு இல்லை. இதுல மின்நூலை தரவிறக்கம் செய்து முயன்று பார்க்கிறேன்.

வவ்வால் said...

காரிகன்,

வாங்க,நன்றி!

நம்ம வண்டி "M(A)TV=Multi (All)Terrain Vehicile" போல காடு,மேடு சேறு,சகதி என எல்லா இடத்திலும் ஓடும் :-))

வண்டி ஓடும் வரை ஓடட்டுமே!
----------------------

குறும்பன்,

வாங்க ,நன்றி!

அதுக்கு தான் மத்தவங்களுக்கு எப்படி படிக்க வருதுனு தெரிஞ்சிக்க கேட்டேன்.

என்னிடம் கிண்டில்,நூக்னு எதுவும் இல்லை எல்லாம் கணினி படிப்பானில் படிப்பது தான், ஃபாண்ட்ஸ்லாம் கணீனியில் இருப்பதால் எல்லாமே நல்லா காட்டுது அவ்வ்!

கிண்டில் பயரில் கூட நானே "HTML எழுதி Fonts embed" செய்து கிண்டில் ஜென்னில் மின்னூல் உருவாக்கினால் நல்லா காட்டுது.

ஃபான்ட்ஸ் எம்பெட் செய்வதில் தான் பிரச்சினை இருக்கு, அதை செய்ய கொஞ்சம் எச்டி.எம்.ல் தெரியனும் , கேலிபரில் உள்ள ஃபாண்ட் எம்பெடிங் முறையையும் செய்து பார்த்து இருக்கேன்,ஆனால் கேலிபரில் உருவாக்கின மின்னூலை பல சமயம் கிண்டில் ஜென் ரிஜெக்ட் செய்யுது அவ்வ்!

எனவே நானே எல்லாத்தையும் "கையால செய்து" மின்னூல் உருவாக்கி பார்த்திருக்கேன் ,அதை மக்களுக்கு சொன்னால் அடிக்க வருவாங்க அவ்வ்!

பால கணேஷ் said...

டியர் வவ்வால்...

அருமையான ஒரு விஷயத்தை அழகா சொல்லியிருக்கீங்க... (நல்லவேளை... தமிழ் மொழிபெயர்த்த தொழில்நுட்ப வார்த்தைகளின் அருகிலேயே ஆங்கிலத்தையும் குடுத்தீங்களோ, பிழைச்சோமோ... அதென்ன... மோதுபலகையா? ஹா... ஹா... ஹா...)

* இதை ஆட் விட்ஜெட் ஓப்பன் பண்ணி ஜாவா ஸ்கிரிப்ட்டா வெச்சுக்க முடியுமா? இல்ல டெம்ப்ளேட்ல சேஞ்ச் பண்ணினாத்தான் வருமா?

* நான் இன்டிசைனில்தான் வொர்க் பண்ணிட்டிருக்கேன். இருந்தாலும் ப்ளிப் டைப் உருவாக்கறது எப்படின்றது எனக்குத் தெரியல. (சொல்லித் தந்தவங்க கத்துக் கொடுக்கலை). உங்களுக்குத் தெரிந்திருக்கிறதால் உடனே அதை மின்னஞ்சல் மூலமோ, பதிவாகவோ போட்டு விளக்கிடுங்க குருவே!

வவ்வால் said...

அன்பின் பாலகணேஷர்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி தமிழை வளர்க்கணும்ல!

# விட்கெட்ல சேர்க்க இயலாது,டெப்ளேட்டில் பதிவில் சொல்லி இருப்பது போல சேர்த்துவிடுங்க.

ஒரு வரி ஸ்கிரிப்ட் மட்டும் தான்.

# அடோப் இன்டிசனில் பிடிஎஃப் கோப்பை திறந்துக்கொண்டு ,எக்ஸ்போர்ட் ஆப்ஷனில் சேவ் அஸ் swf என கொடுக்க சொல்லுறாங்க, விவரங்களுக்கு அடோப் தளத்தில் இந்த லின்க் பாருங்க,

http://forums.adobe.com/thread/489045

# வலையுலக வாத்தியாருக்கே குருவா,இதெல்லாம் ரொம்ப ஓவரு அவ்வ்!

படிக்கிற காலத்துலவே அவுட் ஸ்டாண்டிங்க் ஸ்டூடண்ட் ...ஹி...ஹி கிளாஸுக்கு வெளியில நிப்பேன் அவ்வ்!

பால கணேஷ் said...

டியர வவ்வால்...
எக்ஸ்போர்ட்ல இந்த ஆப்ஷன் பாத்திருக்கேன்... ட்ரை பண்ணதில்ல. இப்ப நீங்க குடுத்த லிங்க்ல இருக்கற விளக்கத்தையும் படிச்சுட்டேன். உடனே தயார் பண்ணிப் பாத்துடறேன் ஒரு கை! (மின்னல் வரிகள்ல சில நகைச்சுவைக் கதைகளை மட்டும் தொகுத்து இந்த மாதிரி நண்பர்களுக்கு ப்ரஸண்ட் பண்ணனும்னு ஆசை. அதேங்...!) அப்புறம்... எந்த ஒரு விஷயமா இருந்தாலும் கத்துக்கறவன் சிஷ்யன், சொல்லித் தர்றவர் குரு. இதான் முறை. அந்த வகைல இந்த விஷயத்துல உங்களைக் குருன்னு சொன்னது நியாயமே! (அடேங்கப்பா... அவுட்ஸ்டாண்டிங்ன்றதுக்கு இப்படியொரு விளக்கமா? அசத்திட்டேள் போங்கோ...)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//எப்போவாது படிக்குற உங்களூக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை அவ்வ்!//
என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உங்கள் பதிவுகளை விடாம படிச்கிக்கிட்டுதான் வரேன்.நம்ம அறிவுக்கு எட்டியதாக இருந்தாத்தான் கம்மென்ட் போடுவேன். மிக நீளமான் பதிவுகளில் ஒரு பகுதியை ஸ்கிப் செய்துகொண்டு போவதுண்டு. விவகாரமான பதிவுகளுக்கு கம்மேன்ட்டை தவிர்த்து விடுவேன்.
ஆமாம் அந்த பதிவு என்னன்னு கடைசி வரை சொல்லவே இல்லையே...
//////////////////////
நான் இணைத்துள்ள டூல் பார் பதிவின் உட்புறம் இல்லை.அலெக்சா டூல் பார் போல அட்ரஸ் பாருக்கு கீழாக அமைந்துள்ளது. உங்கள் கணினியில் தெரிய வாய்ப்பில்லை .
அந்த தளத்தின் ஒரு க்ளிக்கின் மூலம் தானாக இணைக்கப் பட்டது.

வவ்வால் said...

அன்பின் "பால கணேஷர்"

வாங்க,நன்றி!

அவசியம் செய்து பார்த்துவிட்டு சொல்லவும்!

# நாம தெரிந்துக்கொண்டதை பகிர்கிறோம்,அதுக்கெல்லாம் "குருவாகிட" முடியுமா? நீங்க என்றும் வாத்தியார் ,நாம பயிலும் மாணவன் தான்!

# இலவச மென்ப்பொருட்கள் பல இருக்கு ,ஆனால் அதெல்லாம் சரியா எல்லாருக்கும் "அவுட் புட் தரலை",சிலருக்கு அவற்றை சொல்லிட்டு "சரியா வலைனு "நான் தான் குட்டு வாங்கினேன் அவ்வ்!

அது என்னமோ தெரியலை நமக்கு நல்லா வருவது அடுத்தவர்களுக்கு நல்ல வர மாட்டேங்குது,அதே போல நமக்கும் ஹி...ஹி!
---------------------------
முரளி,

வாங்க,நன்றி!

எப்போவாது படிக்கிறிங்கனு தப்பா நினைச்சுட்டேன் போல ,மன்னிக்கவும்!

//விவகாரமான பதிவுகளுக்கு கம்மேன்ட்டை தவிர்த்து விடுவேன்.//

அப்போ எப்பாவது தான் கமெண்ட் போடுவீங்க ,சரி,சரி அவ்வ்!

#//ஆமாம் அந்த பதிவு என்னன்னு கடைசி வரை சொல்லவே இல்லையே...//

எந்த பதிவு?

எதுவும் மறைக்கவேயில்லையே?

//நான் இணைத்துள்ள டூல் பார் பதிவின் உட்புறம் இல்லை.அலெக்சா டூல் பார் போல அட்ரஸ் பாருக்கு கீழாக அமைந்துள்ளது. உங்கள் கணினியில் தெரிய வாய்ப்பில்லை .
அந்த தளத்தின் ஒரு க்ளிக்கின் மூலம் தானாக இணைக்கப் பட்டது.//

அப்படினா அது உங்க பிரவுசரில் இணைக்கப்பட்ட ஆட் ஆன் , நமக்கு தெரியாது தான்.

பதிவுல இணைச்சதா சொன்னதா நினைச்சு கேட்டுவிட்டேன்.

மத்தவங்க பதிவு எப்படி ரெண்டரிங் ஆகுதுனு தெரிய முயற்சிக்கலாம்னு நினைச்சேன்,ஏன் எனில் சிலரின் பதிவுகளை "ஆன் லைன் ஈ - புக்" கன்வெர்ட்டரில் நானாக கொடுத்துப்பார்த்துள்ளேன் , எழுத்துக்கள் உடைஞ்சே வந்தது.

ஹி...ஹி என்ப்பதிவுகள் சரியா வந்துடுச்சு ,என்ன வித்தியாசம் என அறிய நினைச்சேன் ,உங்கப்பதிவையும் கொடுத்து கன்வெர்ட் செய்துப்பார்த்துட்டு சொல்கிறேன்!

Anonymous said...

'"சந்தியாராகம்" சப்பானிய படம் காப்பினு உண்மைய போட்டு உடைப்பேன்,"
அடே முட்டாள் வவ்வால்,
முடிந்தால் ஜப்பானிய பட காபி என்று நிரூபியடா பார்ப்போம் . ஒரு அப்பனுக்கு பிறந்தா நிரூபியடா

அப்பாதுரை said...

எத்தனை விவரங்கள்.. வாவ்வால்!

DEVAPRIYA said...

பயனுள்ள தகவல்கள்.
நன்றி.

Nanjil Siva said...

நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள் !!!