Monday, May 15, 2006

பின்னூட்டம் குறித்தான வலைப்பதிவரின் மனோ நிலை!

தருமி என்பவரின் வலைப்பதிவில் "நாமும் தமிழும், ஆங்கிலமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் படித்தேன்,சரி பின்னூட்டம் இடலாம் என்று போனால் பெயர், மின்னஞ்சல்,வலை மனை முகவரி எல்லாம் கொடுத்தால் தன் பின்னூட்டம் ஏற்கப்படும் என்பது போல் ஒரு அமைப்பில் உள்ளது அவரது வலைப்பதிவு!

எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின, இவர் எதற்காக யார்ப் படிப்பதற்காக வலைப்பதிவு போடுகிறார்? இவரது கருத்துகள் அப்படி என்ன தனித்தன்மை வாய்ந்தது என்று மறு மொழி இட இத்தனை கட்டுப்பாடுகள்.எல்லாரும் பின்னூட்டம் இட அனுமதித்தால் ஆபாசமாக திட்டி சிலர் இடுகிறார்கள் அதை தவிர்க்க என்றால்.அதற்கு தானே கமெண்ட்ஸ் மாடரேஷன் உள்ளதே. அதனையும் மீறி ஆபாச பின்னூட்டம் வர வாய்ப்பு உள்ளதா? அப்படியே வந்தாலும் அதனை எளிதில் நீக்க முடியுமே.எனக்கு எதற்கு வீண் வேலை நான் இப்படி தான் செய்வேன் என்றால் அத்தனை பயம் இருப்பவர் ஏன் இங்கே வந்து அவர் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டும்.பேசாமல் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பாக பக்கத்து வீட்டுக்காரர் உடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாமே!

தருமி இப்போது வேண்டுமானால் நான்கு பேருக்கு நன்கு தெரிந்தவராக இருந்து தேடி வந்து சிலர் பின்னுட்டம் இட்டு செல்லலாம். இவரின் துவக்க காலத்தில் ஒரு பின்னூட்டமாவது வராதா என்று காத்திருந்தவராக தான் இருக்க வேண்டும்.

இதனை தருமி என்ற தனி நபரை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை.இங்கே வலைப்பதிவு செய்யும் பெரும்பாண்மை மக்களுக்கு இருக்கும் மனோ நிலையை ஒட்டு மொத்தமாக கணக்கில் கொண்டே சொல்கிறேன்.சரி நீ ஏன் அவசியம் பின்னூட்டம் இட்டு தான் ஆக வேண்டுமா. அப்படி மறு மொழி கூறி தான் ஆக வேண்டுமெனில் நீ தைரியமாக மின்னஞ்சல் முகவரி தர வேண்டியது தானே என்று கேட்கலாம்.ஒரு வலைப்பதிவைப் படித்து அதை எழுதியவர்க்கு மறு மொழி சொல்வது ஒரு ஊக்கம் அளிக்கும் சேவை.அதனை செய்ய முன் வருபவர்க்கு ஏன் கட்டுப்பாடுகள் என்பது தான் என் வினா? மின்னஞ்சல் முகவரி தர முடியவில்லை என்றால் வேறு வேலைப் பார்த்து கொண்டு போகலாமே என்றும் கேட்கலாம்.எல்லோர்ப் பார்வையிலும் படும் வண்ணம் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டியில் வெளியிட்டப் பின் மாற்று கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமையுண்டு.அது பாரப்பட்சம் இன்றி அளிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்து.

ஒரு வலைப்பதிவு துவக்க வங்கி கணக்கு எண் தர வேண்டும் என்று சொன்னால் எத்தனை பேர் முன் வருவார்கள்.இலவசம் என்பதால் தானே ஆள் ஆளுக்கு வந்து கருத்து கந்தசாமிகளாய் மாறி தங்கள் வெந்ததும் வேகாததுமான கருத்துகளை அள்ளி இறைக்கிறார்கள்.இல்லை எல்லா வலைப்பதிவும் ஒரு தேர்வு குழு பரிசீலித்து அதன் பின்னரே வெளியிடப்படும் என்றால் எத்தனை தேறும்? இணையத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல வாய்ப்பளிக்க தான் இலவசமாய் பிளாக்குகள் உள்ளது.அப்புறம் என்ன தனியே ஒரு கருத்து சொல்வதில் பாகுபாடு!

பின்னூட்டமாக சொல்ல நினைத்ததை இங்கே நானே ஒரு வலைப்பதிவாக வெளியிட்டுள்ளேன்.இது எந்த தனி நபரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டது அல்ல.முதலில் தங்கள் எழுத்துகளை யாரேனும் படித்தால் போதும் என்று இருந்து காலப்போக்கில் வலைப்பதிவு வெளியிடுவோரிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றத்தை சுட்டிக் காட்டவே.எனது வலைப்பதிவில் மறுமொழியிட எந்த வகைக் கட்டுபாடும் விதிக்கவில்லை என்பதை கவணத்தில் கொள்ளவும்!


வணக்கம் தருமி!

//1. அங்கலாய்த்தல் - இதிலிருந்துதான் கலாய்த்தல் என்ற சொல் வந்திருக்குமோ? (எப்படி நமது ஆராய்ச்சி?)//

கலாய்த்தல் என்று சொல்வது நடைமுறையில் இருந்தாலும் .. சரியான சொற்பதம் கலாசுதல் தான்.இது ஒரு தூய தமிழ்ச்சொல்.சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அகராதில் உள்ளது.

"கலாசுதல் என்றால் உரக்க சத்தமிட்டு பேசுவது ,பெரும்பாலும் பொருள் அற்ற பேச்சு என்று போட்டுளார்கள். மிகவும் பொருத்தமான வார்த்தை தான்.சென்னையில் பெரும்பாலும் சாதாரண வாய் சண்டைக்கு கூட "போடாங்கோ டுபுக்கு தட்டுனா தாரந்துருவ... எங்க ஏரியா பக்கம் வந்துருவியா நீ மவனே செத்த" என்று "ஓவரா சவுண்டு" வேறு விடுவாங்க அதை நம்ம கைல ராங்க் காட்டினான் நல்ல கலாசிடேன்னு பெருமையா சொல்லிப்பாங்க! இதனை கொஞ்ச நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட விவாதத்திற்காக தேடி எடுத்தேன்.தற்போது தான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன்.. நம்ம ஆராய்ச்சிய வெளிக்காட்டிக்க ஒரு வாய்ப்பா போச்சு (எப்படி நம்ம வெட்டி ஆராய்ச்சி!??)

28 comments:

துளசி கோபால் said...

அதென்னங்க 'தருமி'யை மட்டும் சொல்லிட்டீங்க? நிறைய இடங்களிலே இதுதானே நடை முறையா இருக்கு.
அதான் மின்னஞ்சல் பப்ளிஷ் ஆகாதுல்லே?

இதுலே என்ன சங்கடமுன்னு எனக்குத் தெரியலீங்களே.

வவ்வால் said...

வணக்கம் துளசி கோபால்,
தங்கள் மறுமொழிக்கு நன்றி!. நன்றாக மீண்டும் ஒரு முறைப் படித்துப் பார்க்கவும் . தெளிவாக சொல்லியுள்ளேன்.தருமி அவர்களை மட்டும் குறித்தல்ல என்று.பொதுவாக வலைப்பதிவு இடுவோரின் மனோபாவம் குறித்து என்று,அவர் பதிவை உதாரணமாக சொல்ல காரணம் அங்கே தான் எனக்கு பின்னூட்டம் இடுவதில் இடர் ஏற்பட்டது.மேலும் மின்னஞ்சல் கேட்காமல் பின்னூட்டம் இடுவது தான் நடைமுறையில் பெரும்பாலும் உள்ளது என்பது தெரியாதது போல் கூறுகிறீர்கள்.

Vassan said...

பின்னூட்டம் இடலாம் என்று போனால் பெயர், மின்னஞ்சல்,வலை மனை முகவரி எல்லாம் கொடுத்தால் தன் பின்னூட்டம் ஏற்கப்படும் என்பது போல் ஒரு அமைப்பில் உள்ளது அவரது வலைப்பதிவு!

தருமி பயன்படுத்தும் பதிவு சேவை - < weblogs.us > பயனர்களுக்கு இலவசமாகத் தரும் வார்ப்புருக்களின் பின்னூட்ட படிவ அமைப்புகள் " வலை மனை, மி.அ. முகவரி போன்றவற்றை கொடுத்தால்தான் பின்னூட்டம் செய்ய முடியும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது".

தருமிக்கும் இதற்கும் எதும் சம்பந்தமில்லை !!!!!

வவ்வால் said...

வணக்கம் வாசன்,தங்கள் தகவலுக்கு நன்றி!

//தருமி பயன்படுத்தும் பதிவு சேவை - < weblogs.us > பயனர்களுக்கு இலவசமாகத் தரும் வார்ப்புருக்களின் பின்னூட்ட படிவ அமைப்புகள் " வலை மனை, மி.அ. முகவரி போன்றவற்றை கொடுத்தால்தான் பின்னூட்டம் செய்ய முடியும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது".
//

எனக்கு அந்த அளவு தொழில் நுட்ப ரீதியாக பிளாக்கர் சேவைகள் பற்றி தெரியாது.எனினும் அத்தகைய வடிவமைப்பு முதன் முறையாக வலைப்பதிவு உலகத்திற்கு வரும் வாசகனின் ஆர்வத்திற்கு தடையாக இருக்குமேயன்றி.. தூண்டு கோளாக இருக்காதே! வாசிப்பவர்களை மென்மேலும் வர வைக்கும் வகையிலேயே ஒரு வலைப்பதிவு இருக்க வேண்டும் என்பது எனது எளிய கருத்து! எனது வலைப்பதிவு அனுபவத்தின் பகிர்வாக தான் இதனை வெளியிட்டுள்ளேன்.வேறு எந்த தனிப்பட்ட நோக்கமும் இல்லை!

மாயவரத்தான்... said...

எனக்கு ரஜினிதான் பிடிக்கும். அதிமுக பிடிக்கும். அதிமுக வாழ்க! திமுக ஒழிக!!

வவ்வால் said...

வணக்கம் மாயவரத்தான்!
//எனக்கு ரஜினிதான் பிடிக்கும். அதிமுக பிடிக்கும். அதிமுக வாழ்க! திமுக ஒழிக!! //

இது என்ன கலாட்டா ! இந் பின்னூட்டம் எந்த வகையில் இந்த பதிவோடு சம்பந்த பட்டுள்ளது.ஒரு வேலை நான் கலாய்கிறதுனா என்ன என்று போட்டதால் ,நடை முறையில் கலாசி காட்டுறிங்களா !

Anonymous said...

//தனி மடல்//

மாயவரத்தான் பின்னூட்டம் போலி மாயவரத்தான் பின்னூட்டம். நீக்கவும்

Thekkikattan|தெகா said...

1) இதில் என்ன இருக்கிறது, அவர் பயன்படுத்தும் சேவையில் அது போன்று வடிவமைத்திருந்தால் அது அப்படியே பயன் படுத்தப் பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம்.

2) அப்படி ஈமெயில் ஐ.டி கொடுத்து தாங்களுக்கு பின்னூட்டமிட மன்மில்லையெனில், the choice is yours.

3) பின்னூட்டமென்பது ஒரு addictive விசயமல்ல என்பதனை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும், தெரிந்தவர்களின் பதிவுகளை மட்டுமே படிப்பது பின்னூட்டமிடுவது, புதியவர்களாக இருப்பின் நல்ல விசயங்களை முன் நிறுத்தினாலும் கண்டுக்கொள்ளமல் விட்டுவிடுவது, இது போன்ற விசயங்கள் அடி வடிகட்டிய பசலித்தனம் எனலாம்.

4) ஒரு நல்ல விசயத்தை படித்ததும் மனதில் என்ன முதலில் தோன்றுகிறதோ அதனை அப்படி இங்கே கொட்டி பகிர்ந்து கொள்வதின் மூலம் எழுதியவருக்கும் வாசிப்பவருக்குமிடையே கருத்து பரிமாற்றதின் மூலம் தன்னை உட் நோக்கி பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.

5) இங்கு இருக்கும் சில சீனியர் எழுத்தாளர்கள் எல்லா இடங்களில் சிக்கியுள்ள அரசியல், Image பிரட்சினைகள் போல மாட்டிக் கொண்டு உலண்டு கொண்டுள்ளாதாகப் படுகிறது.

6) அது போல ஒரு மாயை வலையில் சிக்கியிருப்பது நல்ல படைப்பாளிகளை நாம் இழப்பதற்கு வழிகோனலாம். சில நல்ல உள்ளங்களும் இங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.

7) இந்த பின்னூட்ட விசயம் பொருத்து ஒரு தனிப் பதிவிட வேண்டுமென்பது எனது அன்மை காலத்திய எண்ணம், நீங்கள் இங்கு தனிப் பதிவிட்டிருப்பதால் இங்கும் தனிப்பதிவாகவும் (மேலும் சில கருத்துகளுடன் என் பதிவிலும் விட்டுச் செல்கிறேன்.) சீனியர்களும் இமெஷ்யை சற்று ஒரங்கட்டி வைத்துவிட்டு, எல்லோரையும் வளர்த்து தானும் வளர வேணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் பெயரளவில் உள்ள காட்டான்.

தெகா.

Unknown said...

ஈமெயில் கேட்பதில் என்னங்ண்ணா பிரச்சனை?கும்தலக்கா@gmail.com என்று fictitious இமெயில் ஐடி தந்தால் கேசா போடப்போகிறார்கள்?இமெயில் கேட்பது வெப்லாக்ஸில் டிபால்ட் ஆப்ஷன் .இதுக்கு ஒரு பதிவு அவசியமும்ங்களா அண்ணா?

வவ்வால் said...

வணக்கம் தெற்கத்திகாட்டான்,நன்றி.

தங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே. நான் சொல்ல வருவது எத்தனை பின்னூட்டம் வருகிறது என்ற எண்ணிக்கை விளையாட்டை குறிக்க அல்ல. இப்படி தடைகள் உள்ளமையால் ஒரு தரமான தேவையான பின்னூட்டம் பதிவு பெறாமலே புறக்கணிக்க படும் நிலையை எண்ணியே பதிவிட்டுள்ளேன்.ஒரு வலைப்பதிவில் ஏதேனும் தவறாகக் கூறப்பட்டிருந்தால் அதனை வழக்கமாக வருபவர்கள் எப்போதும் போல முகஸ்துதி பாடி குறிப்பிடாமலே போகலாம்.புதியவர்கள் நேர்ப்பட உண்மைக் கருத்தை கூற விரும்பினாலும் இது போன்ற இத்தியாதி ... இத்தியாதி சம்பிரதாய வேலி கண்டு விலகிப் போகலாம்.

Anonymous said...

"முதன் முறையாக வலைப்பதிவு உலகத்திற்கு வரும் வாசகனின் ஆர்வத்திற்கு தடையாக இருக்குமேயன்றி.. தூண்டு கோலாக இருக்காதே! வாசிப்பவர்களை மென்மேலும் வர வைக்கும் வகையிலேயே ஒரு வலைப்பதிவு இருக்க வேண்டும் என்பது எனது எளிய கருத்து!!".

திரு வவ்வால் அவர்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.ஆரம்பத்தில் நான் கூட அனைத்து வலைபதிவர்களது பதிவுகளையும் படித்துவந்தேன். நமது கருத்தை எழுதலாம் என செல்லும்போது பல வலைபதிவர்களது
களத்தில் பிளாக்கர்களுக்கு மட்டுமே கருத்து கூறும் வாய்ப்பு உள்ளது.புதிய வாசகர்கள் (அனானிஸ்) கருத்து கூறும் வாய்ப்பு இல்லை.தற்போது அத்தகைய வலைபதிவர்களது களங்களுக்கு நான் செல்வதே இல்லை. மதியாதார் தலைவாசல் மிதிய வேண்டாம் என்பதே காரணம்.

அன்பு வலைபதிவர்களே!!பிளாக்கர்கள் கருத்து மட்டும் போதுமென்றால் மிக குறுகிய வட்டத்தில் தான் நீங்கள் வலம் வரமுடியும்.விமர்சனங்கள் தாங்குபவர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரமுடியும். எந்த ஒரு எதிர்கருத்தும் தங்கள் பார்வைக்கு வந்த பின்னர் தான் கள்த்திற்கு வரமுடியும். எனவே ஏன் இந்த தயக்கம்???????.

அன்பு வாசகர்களே!!எதிர்கருத்துக்களை
பண்பான வார்த்தைகளில் கூறி பதிவர்களை உற்சாகபடுத்துவோம்.

அன்புடன்
துபாய் ராஜா.

Anonymous said...

"முதன் முறையாக வலைப்பதிவு உலகத்திற்கு வரும் வாசகனின் ஆர்வத்திற்கு தடையாக இருக்குமேயன்றி.. தூண்டு கோலாக இருக்காதே! வாசிப்பவர்களை மென்மேலும் வர வைக்கும் வகையிலேயே ஒரு வலைப்பதிவு இருக்க வேண்டும் என்பது எனது எளிய கருத்து!!".

திரு வவ்வால் அவர்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.ஆரம்பத்தில் நான் கூட அனைத்து வலைபதிவர்களது பதிவுகளையும் படித்துவந்தேன். நமது கருத்தை எழுதலாம் என செல்லும்போது பல வலைபதிவர்களது
களத்தில் பிளாக்கர்களுக்கு மட்டுமே கருத்து கூறும் வாய்ப்பு உள்ளது.புதிய வாசகர்கள் (அனானிஸ்) கருத்து கூறும் வாய்ப்பு இல்லை.தற்போது அத்தகைய வலைபதிவர்களது களங்களுக்கு நான் செல்வதே இல்லை. மதியாதார் தலைவாசல் மிதிய வேண்டாம் என்பதே காரணம்.

அன்பு வலைபதிவர்களே!!பிளாக்கர்கள் கருத்து மட்டும் போதுமென்றால் மிக குறுகிய வட்டத்தில் தான் நீங்கள் வலம் வரமுடியும்.விமர்சனங்கள் தாங்குபவர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரமுடியும். எந்த ஒரு எதிர்கருத்தும் தங்கள் பார்வைக்கு வந்த பின்னர் தான் கள்த்திற்கு வரமுடியும். எனவே ஏன் இந்த தயக்கம்???????.

அன்பு வாசகர்களே!!எதிர்கருத்துக்களை
பண்பான வார்த்தைகளில் கூறி பதிவர்களை உற்சாகபடுத்துவோம்.

அன்புடன்
துபாய் ராஜா.

வவ்வால் said...

வணக்கம் செல்வன்,
குன்சா ஒரு டுபாக்கூர் மின்னஞ்சல் தருவது சப்பை மேட்டருங்கண்ணா.நமக்கெல்லாம் மானவாரியா ஐ.டி இருக்குங்கண்ணா.நாம சொல்ல வரது என்னனா பால் மணம் மாறாம பச்ச புள்ள கணக்கா புச்சா உள்ள ஒருத்தர் வரார்ருனு வச்சுகோங்கண்ணா அவர் இத எல்லாம் பார்த்தா மெர்செல் ஆகிட மாட்டாராங்கண்ணா.நாம பொது சனத்துகாக கொரல் தரோம் அவ்வளவு தாண்ணா!

வவ்வால் said...

வணக்கம் துபாய் ராஜா ,
ஒத்த கருத்தை கொண்டுள்ளீர்கள்.விமர்சனங்களை தாங்கினால் தான் எழுத்து மெருகேறும்.தீயில் இட்டால் தான் தங்கம் மிளிறும்.நன்றி!

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
மெயில் ஐடி கேக்காம பின்னூட்டம் போட அனுமதிச்சா வரக்கூடிய தொல்லைகளுக்கு ஒரு ப்ராக்டிகல் விளக்கம் தரத் தான் மேல ஒருத்தர் ரஜினி, அதிமுக பத்தி எல்லாம் சொல்லி இருக்காரு..

உங்களுக்கு இன்னும் இந்த போலி, எலிக்குட்டி விவகாரம் எல்லாம் தெரியலை. அதான் இப்படிக் கேக்கறீங்க.. :(

Chellamuthu Kuppusamy said...

பின்னூட்டம் பற்றிய பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் உள்ளதை விட பெரிதாக ஒன்றும் சொல்லிக் கிழிக்கப் போவது இல்லை. இருந்தாலும் நல்ல விஷயத்தைப் பாரட்ட வேண்டும் எனத் தோன்றியது.

-குப்புசாமி செல்லமுத்து

வவ்வால் said...

வணக்கம் பொன் ஸ்,நன்றி!

ஒரு படைப்பாளிக்கு தேவை தான் வெளியிடும் கருத்திற்கான எதிர் கருத்தினை தாங்கிக் கொள்ளும் பக்குவம். 1000 பேர்க் கல் எறியக்கூடும். ஆனால் ஒரு சிலர் உண்மையிலே அக்கரை கொண்டு செறிவுள்ள கருத்தினை பதிய வரலாம் அவர்களுக்கு எந்த தடையும் வர கூடாது என்பதே எனது கருத்தே,அதுவே அனைவரின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறான/ஆபாச பின்னூட்டம் வந்தால் அதனைப் பார்த்து நீக்கி விட்டால் போகிறது.ஒரு குறுகிய காலத்திற்கு அது என் வலைப்பதிவில் தோன்றுவதால் எனது செங்கோல் வளைந்து விடாது.கிரீடம் விழுந்து விடாது!அவர்களால் எனது எழுத்து சாம்ராஜ்யத்திலிருந்து!!?? ஒரு செங்கல்லையும் உருவிட முடியாது!

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடக் கூடாது என்பது நமது அரசியல் அமைப்பு சட்டதின் மேன்மை.அது போல் ஒரு நேர்மையான வாசகனின் கருத்து வெளிவராமல் நசுக்கப்பட கூடாது என்பதின் அடிப்படையிலேயே நான் இயங்குகிறேன்.மின்னஞ்சல்/பிளாக்கர் கணக்கு என்பது போன்ற எவ்விதக்கட்டுப்பாடும் விதிக்க மாட்டேன்.விருப்பம் இருப்பின் எவர் வேண்டுமானாலும் இந்த குளத்தில் கல் எறிய வரலாம்!

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Anonymous said...

Vanakkam ithink ayya avargale

Tamil font il eppadi comment (pinnoottam ?!) ezhuthuvathu endru enakku satru vilakkam allikkavum. minnanchal mugavari vendum endru solvathu kuritha aaraichiyil irangi viteer. etho ketkiraar. Oru murai neengal sonna athe karuthu ninaivukku varugirathu. ippadi patta valai thalangalukkagave dubakoor email id uruvakki kolla vendum endru aalosanai thantheer. (umathu ninaivagam (memory) valuvaanathu, enave gnabagam irukum). thanthu vitu pongalen, enna irukirathu ithil.

kalaikirathu patri potirukireer. sila aandugalukku mun kalaikkal ku enna porulo athe pol piliruthal endru oru sol payan paduthapattathu (chennai yil kelvi pattirukiren, kalapokkil kanamal poyirukalaam) yaanaiyai pola pilirugiraan, kalakkugiraan eppadi vendum endralum vaithukkollalaam. ithu yen kanamal ponathu endru oru aaraichi seyyavum...

மாயவரத்தான்... said...

ஜெயலலிதா வாழ்க! அதிமுக வாழ்க!

மாயவரத்தில் அதிமுக தொண்டர்களுக்காக அற்புதமாக விருந்து வைத்த என் அம்மா வாழ்க!

வவ்வால் said...

வணக்கம் புல்ஸ்,
தங்கள் வருகைக்கு நன்றி!பின்னூட்டம் இடுவது என்பது ஒரு வலைப்பதிவாளர்க்கு வாசகன் செய்யும் உபகாரம்.உபகாரம் செய்ய வருவோர்க்கு உபத்திரம் தரலாமா? மின்னஞ்சல், பிளாக்கர் பெயர் எல்லாம் கொடு என்று!ஒரு டுபாக்கூர் மின்னஞ்சல் தருவது சப்பை மேட்டர் என்று மேலே ஒரு பின்னூடத்திற்கு பதிலாக சொல்லியுள்ளேன் பாருங்கள்.

தமிழில் பின்னூட்டமிட ஈ.கலப்பை என்ற யுனிகோட் தமிழ் செயலி உபயோகிக்கவும்.
சுட்டி(link)
http://www.tamil.net/newtamil/eKalappai_demo.html

கலாய்த்தல் போல பிளிருதல் உண்டா இது எல்லாம் சில கல்லூரி வளாகத்தில் மட்டும் புழங்கி வந்த சொற்களாக இருக்கலாம்.எனவே வெகுவாக பரவி இருக்காது.எதற்கும் தங்களது வேண்டுகோளை சிரம்மேற்கொண்டு ஆராய்ந்து பார்க்கிறேன்.வேறு யாருக்கேனும் தெரிந்தாலும் சொல்லுங்கள்!

Anonymous said...

seriya soneenka voval...ellarudaiya vimarsanankalaiyum ethukkare pakkuvam vendum padaipaalarkalukku...illai enraal nalla vimarsanankal koode nammai vanthu seraamal poivide vaaippu ullathu...email vendum id,pass word vendum enpathu ellam erichalai than tharukirathu...ithan adutha kattam pay panna than comments kudukalaamnu solluvanka pola...

வவ்வால் said...

வணக்கம் ,கீதா,
தங்கள் வருகைக்கு நன்றி,அடிக்கடி வந்து ஆசிர்வாதம் தாங்க.உங்கள் கருத்து என்னுடைய கருத்தோடு மிகவும் ஒத்துப் போகிறது. எழுத்தாளர்கள் வளரும் வரை வாசகர்களை தேடுவார்கள் வளர்ந்த பின் நம்மை தேட வைப்பார்கள்.இபோது பிளாக்கர்கலும் அது போன்ற மகுடம் தறித்தவர்கள் ஆகப் பார்க்கிறார்கள். நீங்கள் சொன்னது போல கட்டணம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

Anonymous said...

Interesting site. Useful information. Bookmarked.
»

வவ்வால் said...

வணக்கம் அனானி,
தங்கள் வருகைகு நன்றி.அடிக்கடி வாங்க!

மஞ்சூர் ராசா said...

அன்பு வவ்வால்
நீங்கள் சொல்வது சரிதான். சில இடங்களில் நான் பின்னூட்டம் இட முயலும் போது பல கேள்விகளுக்கு பதில் போடவேண்டி வருவது உண்மைதான். இந்த நேரத்தில் நமது கணினி ஏதாவது மக்கர் செய்யும். அது நமது பொறுமையை சோதிக்கும்.. அட போடா இதுக்கு பின்னூட்டம் எழுத இவ்வளவு கஸ்டப்பட வேண்டுமா என்று தோன்றும். நாமும் அடுத்த பதிவிற்கு தாவி விடுவோம். அதனால் ஒரு பின்னூடடம் அந்த பதிவிற்கு குறைந்துவிடுகிறது. இதே அனுபவம் பலருக்கும் ஏற்படுகையில் நஸ்டம் யாருக்கு என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி.

தம்பி செல்வன் சொல்வது போல பல முகவரிகள் மூலமாகவும் பின்னூட்டங்கள் இடலாம் எனும் போது இதனால் பெரிய ப்யன் ஒன்றும் கிடைத்துவிட போவதில்லை.

சரி வவ்வாலின் சுய உருவத்தை காட்டினால் நன்றாக இருக்குமே..

வவ்வால் said...

வணக்கம் மஞ்சூர் ராஜா!

தங்கள் வருகைக்கு நன்றி.ஆம் நாம் அவர்கள் படைப்பை படிக்க நமக்கு கட்டுப்பாடு தடையற்ற அனைவருக்கும் எழுத்து சுதந்திரம் தர தான் பிளாக்குகள் தோன்றியது அங்கே மீண்டும் தேவையற்ற கட்டுப்பாடு தடை என பிற்காலத்திற்கே போக வைக்கிறார்கள்.எனக்கென்ன நதி மூலம் ரிஷி மூலம் நான் ஒரு நாடோடி போல வாழ்கையின் பக்கங்களிள் அலைந்து திரிகிறேன்.அவ்வபோது மனதில் தோன்றுவதை பதிந்து வைக்கவே இப்பதிவு!

வவ்வால் said...

வணக்கம் சத்யம்!

தங்கள் வருகைக்கு நன்றி. பதிவுபோடும் பொறுமை உள்ளோர் ஏன் தவறான பின்னூட்டம் வந்தால் அதனை நீக்கவும் அதே அளவு பொறுமையைக் கையாலக்கூடாது எனவே தான் இது போன்ற கட்டுப்பாடுகள் போட்டு கருத்து சுதந்திரத்தை முடக்கவேண்டாம் என கூறிவருகிறேன். தங்கள் கருத்தும் இதுவே என அறிந்ததில் மகிழ்ச்சி!