Sunday, November 04, 2007

வளைவுகள் ஜாக்கிரதை!


படத்தில் இருப்பது ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு வட்டப்பாதையில் பயணிக்கும் போது ஏற்படுத்திய தடம், இதில் வளைவான பாதையில் ஒரு 4 சக்கர வாகனம் பயணிக்கும் போது ஒரு உள்வட்டம், ஒரு வெளி வட்டம் என உருவாக்குவது தெரிகிறது. உள்வட்டத்தின் ஆரம் குறைவு , எனவே அதன் சுற்றளவும் குறைவாக இருக்கும், அதே போல வெளி வட்டத்தின் ஆரம் அதிகம் சுற்றளவும் அதிகம், என்பது பொதுவாக அனைவருக்கும் தெரியும்.

இவ்வட்டத்தை வைத்து பார்க்கும் போது ஒன்று தெரிய வரும் ,ஒரு வாகனம் வளைந்தபாதையில் பயணிக்கையில் ,ஒரே சீரான வேகத்தில் செல்லும் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் உள்ள உட்புறமாக இருக்கும் சக்கரங்கள் குறைந்ததூரமும் , வெளிப்புறமாக வரும் சக்கரங்கள் அதிக தூரமும் கடக்க வேண்டும். ஆனால் வாகனம் ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும்! எஞ்சினின் வேகம் ஒரே சீராக இருக்கும், வாகனத்தின் இரு சக்கரங்கள் மட்டும் வேறு வேறு தூரம் கடக்கும், எப்படி அது சாத்தியம் ஆகும்?

இதற்கான விடையை சொல்லுங்கள் விளக்கம் தருகிறேன்!

இப்படி ஒரு மெக்கானிசம் இல்லை எனில் ஒரு நான்கு சக்கர வாகனத்தை வளைவான பாதையிலோ, அல்லது "U" வளைவு அடிப்பதோ சாத்தியப்படாது , பெயரை மட்டும் சொல்லுங்கள்(கூகிள் இருக்கும் போது என்ன கவலை) மேல் விவரங்களை நான் தருகிறேன்!

பின் குறிப்பு:
சர்வேசன் கியர் பற்றியும் சொல்லுங்கள் என்றார், அதான் கியர்களின் பயன்பாட்டில் சுவாரசியமான ஒன்றை வைத்து ஆரம்பித்துள்ளேன், (கியர்=தமிழில் பல்லிணை சக்கரம்) இதுவே ஒரு பெரிய "குளூ"(அதி மேதாவிகள் இதெல்லாம் ஒரு கேள்வியானு கேட்கக்கூடாது :-)) )

இதன் தொடர்ச்சி :

வளைவுகள் ஜாக்கிரதை-1

காணலாம்.

29 comments:

ராஜ நடராஜன் said...

நமக்கு தெரிந்ததெல்லாம் ஸ்டியரிங் வட்டம்தானுங்க.

ராஜ நடராஜன் said...

நமக்கு தெரிந்ததெல்லாம் ஸ்டியரிங் வட்டம்தானுங்க.

Sridhar V said...

கூகுளின் துணையில்லாமல் முயற்சிக்கின்றேன். தவறாக இருந்தால் விட்டுவிடுங்கள் :-))

நான்கு சக்கர வாகனம் ஒரு புறம் திரும்பும் பொழுது, உள்பக்க இருக்கும் சக்கரங்கள் குறைவான வேகத்தில் (RPM) சுற்றுகிறது; வெளிப்பக்கம் இருக்கும் சக்கரங்கள் அதிகமாக சுற்றுகிறது. இதனால் அந்த வாகனம் திரும்புகிறது. இதேதான் 'U' வளைவுக்கோ, முழு வளைவுக்கோ பொருந்தும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி கியருக்கும் இந்த விளைவுக்கும் என்ன சம்பந்தம் இருக்குமென்று தெரியவில்லை.

jeevagv said...

கேள்விக்கான விடை முதல் பத்தியிலேயே இருக்கிறதல்லவா! :-)

Doctor Bruno said...

When a "four-wheeler" turns in a circle, you will get 4 circles

What happened to the other two circles

யோசிப்பவர் said...

//கியர்=தமிழில் பல்லிணை சக்கரம்//
"பல் சக்கரம்" போதாதா?
;-)

குசும்பன் said...

ரொம்ப கஷ்டமா இருக்குப்பா!

நாஞ்சில் பிரதாப் said...

இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தக்கூடாது. நீங்களே சொல்லுங்க...

நாஞ்சில் பிரதாப் said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்... அந்த காலத்து மன்னர்கள் எல்லாம் எப்படி சவரம் செய்தார்கள்.? இப்போதுள்ளது போல் ரேசர் பிளேடு எல்லாம் அப்போது இல்லாதபோது எதைவைத்து சவரம் செய்தார்கள்... போயும் போயும் இதப்பற்றி சேந்தேகம் வந்திருக்கேனு நீங்க திட்டுறது தெரியுது...
கோவிச்சுக்காம சொல்லுங்க...)அப்புறம்...எலிகாப்டரில் மட்டும் பெரிய காத்தாடி உள்ளது போல் விமானத்தில் ஏன் இல்லை.

வவ்வால் said...

நட்டு,

வாழ்க்கையே ஒரு வட்டம் தாங்க! :-))
-----------------------

ஸ்ரீதர் வெங்கட்,

//உள்பக்க இருக்கும் சக்கரங்கள் குறைவான வேகத்தில் (RPM) சுற்றுகிறது; வெளிப்பக்கம் இருக்கும் சக்கரங்கள் அதிகமாக சுற்றுகிறது. //

உட்சக்கரம் குறைந்த தூரம் எனவே குறைந்த rpm என்பது வரைக்கும் சரி, அந்த குறைந்த rpm எப்படி சாத்தியம் ஆச்சு என்பது தான் கேள்வியே?

//கியருக்கும் இந்த விளைவுக்கும் என்ன சம்பந்தம் இருக்குமென்று தெரியவில்லை.//

நான் தான் தெளிவாக கியர் இருக்குன்னு சொல்லிட்டேனே , அப்புறமும் சந்தேகாமா? விடை விளக்கம் அடுத்த பதிவில்!
----------------

ஜீவா,

முதல் பத்தியில் இருப்பது கேள்விக்கான விளக்கம்? அதை வைத்து தான் கேள்வியே? :-))
----------------

புருனோ,

சரியா வளைத்து ஓட்டினால் இரண்டு வட்டம் தான் வரும், ஆனால் யாராலும் அப்படி அட்சர சுத்தாமாக ஓட்ட முடியாது , எனவே 4 வட்டம் வரும், ஆனால் கேள்விக்காக இரண்டு வட்டம் வரும் என்பதை உதாரணமாக வைத்துக்கொண்டேன்.
--------------

யோசிப்பவர்,
ஒரு சக்கரத்தில் பல் இருந்தால் அது பல் சக்கரம், அந்த சக்கரம் இன்னொரு பல் சக்கரத்துடன் பொருந்தி இருந்தால் பல்லிணை சக்கரம், அது தான் கியர்!

உங்களுக்கும் விடைக்கிடைக்கவில்லைய, இது ஒரு புதிரே கிடையாது, சும்மா கியர் பத்தி சொல்லுறதுக்கு முன்ன உங்கள் பாணியில் ஒரு புதிரா மாற்றி போட்டேன்! ஆர்வத்தை தூண்டி விடலாம்னு தான் :-))
------------

குசும்பன்,

ரொம்ப கஷ்டப்படாதிங்க , அப்புறம் பிராணிகள் வதை சங்கத்தில இருந்து என் மேல கேஸ் போட்றுவாங்க! :-))
-----------------

பிரதாப்குமார்,

என்ன இது , கியர் பற்றி சும்மா கட்டுரையா எழுத வேணாம் கேள்வி கேட்டு ஆர்வத்தை தூண்டி விட்டு
பிறகு எழுதலாம்னு பார்த்தா ஒருத்தரும் பதிலே சொல்ல மாட்டக்கிறாங்களே!

என்ன கொடுமை சார் இது!

கால்கரி சிவா said...

வட்டமான ரோடுகள் சமதளமாக இருப்பதில்லை. ஒரு பக்கம் பள்ளமாகவும் ஒரு பக்கம் மேடாகவும் இருக்கும். அதனால் கார் அன் -ஸ்டபிலிடி குறைவாக இருக்கும்.

எனக்கு தெரிந்த வகையில் சக்கரங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிப் பார்த்ததில்லை

வவ்வால் said...

பிரதாப் குமார்,

இதெல்லாம் ஒரு கேள்வியா என்று எதுவுமே இல்லை, நீங்கள் கேட்ட கேள்வி வெகு நாட்களுக்கு முன்னரே மதன் கேள்விப்பதிலில் கேட்கப்பட்டுள்ளது.அவர் சொன்னது சரியாக நினைவில் இல்லை, எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

சவரக்கத்தியினால் தான் சவரம் செய்துக்கொண்டார்கள். பிளேடு வருவதற்கு முன்னர் அதனை சலூனில் பார்த்து இருப்பீர்கள், தற்போதும் கூட சவரக்கத்தி வடிவத்தில் இருக்கும் கருவியில் அரைபிளேடு வைத்து சலூனில் பயன்படுத்துகிறார்கள்.

அக்கால சவரக்கத்தியில் இத்தனை சுத்தமான ஷேவிங்க் கிடைத்து இருக்காது, வலி வேறு பயங்கரமாக இருந்து இருக்கும்.நவீன பிளேடைக்கண்டு பிடித்தது துன்பத்திலிருந்து விடுதலை தந்தவர் "ஜில்லெட்" என்ற அமெரிக்கர்.

சவரக்கத்தி ரொம்ப நாட்களுக்கு முன்னரே கண்டு பிடித்து விட்டார்கள், ஆனால் சவரம் செய்யும் போது முகம் பார்க்க கண்ணாடி கண்டு பிடிக்க தான் ரொம்ப நாட்கள் ஆயிற்று , அப்போதெல்லாம் வெள்ளி போன்ற உலோகத்தகட்டினை பள பள வென்று வைத்துக்கொண்டு அதில் முகம் பார்ப்பார்களாம்.

ஹெலிகாப்டர் வளியியக்கவியல் வேறு விமானத்தினது வேறு!

லியனார்டோ டாவின்சியே ஹெலிகாப்டருக்கு மாதிரியை வரைந்து காட்டியுள்ளார், அவர் வைத்த பெயர் "ஏர்ஸ்க்ரு" இப்போதும் அந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் ஹெலி பறக்கிறது.

மேல் புறத்தில் பெரிய காற்றாடி இருப்பதால் வெர்டிகல் லிப்ட் கிடைக்கிறது. அந்த காற்றாடி எவ்வளவு காற்றினை இடப்பெயர்ச்சி செய்கிறதோ அவ்வளவு எடையை மேலே தூக்கும்.முன்னோக்கி செல்ல முன் புறம் சாய்வாக அந்த காற்றடி சுழலும், பக்க வாட்டில் செல்ல லேச பக்க வாட்டில் சாய்ந்து சுழலும்.காற்றாடியின் அளவைப்பொறுத்தே ஹெலிகாப்டரின் திறன் அமையும் இதனால் ஓரளவுக்கு மேல் பெரிய ஹெலிகாப்டர் செய்ய முடியாது. விமானத்தில் மிகப்பெரிய விமானம் எல்லாம் செய்து விட்டார்கள்.

ஹெலிகாப்டரின் வால்ப்பகுதியில் இன்னொரு காற்றாடி இருக்கும்(ஸ்டெபிளைசர்) அது வேலை செய்யவில்லை எனில் பம்பரம் போல ஹெலிகாப்டர் சுற்றிக்கொண்டு கீழே விழுந்து விடும்.

வவ்வால் said...

கால்கரி சிவா,

சாலை வளைவுகளில் இருக்கும் பாதையின் அமைப்பை கூர்ந்து கவனித்துள்ளீர்கள், அது வாகனம் குடை சாய்வதை தடுக்க, அப்படி ஒரு புறம் சாலையில் சற்று மேடாக இருப்பதை சூப்பர் எலிவேஷன் என்பார்கள்.

வாகனத்தினை திருப்பும் போது அது வரையில் பயணித்த நேர்க்கோட்டு விசை அதன் மீது செயல்ப்பட்டுக்கொண்டே தான்(நியூட்டன் விதி)இருக்கும், அதனால் வாகனம் திரும்பும் போது சாய நேரிடலாம் , அதனை தடுக்க சாலையின் விளிம்ப்பு லேசாக உயர்த்தி வைப்பார்கள்.

//எனக்கு தெரிந்த வகையில் சக்கரங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிப் பார்த்ததில்லை//

இப்போ பறந்த சம வெளியில் ஒரு "U" டர்ன் அடிக்கிறீர்கள் அப்போது எப்படி என்று தான் எனதுக்கேள்வி.

புதிரை உடைத்து விடுவோம், வாகனத்தின் இரு சக்கரங்களும் வேறு வேறு வேகத்தில் அப்போது சுழலும் அதற்கென ஒரு கியர் உள்ளது."differential gear" என்று பெயர், இது வாகனத்தின் பின் புற அச்சில் ஒரு மண்டைப்போன்று உருண்டையாக இருக்கிறது அல்லவா அதன் உள் இருக்கும்."ABS" "anti brake locking system" என்ற நவீன மேம்பாடுகள் எல்லாம் இந்த கியருக்கு பின்னர் தான் வந்தது, இந்த கியருடன் இணைந்தது தான் அவை எல்லாம்.இவை எல்லாம் இருப்பதால் தான் வளைவுகளில் எளிதாக செல்ல முடிகிறது.

விரிவான விளக்கம் அடுத்தப்பதிவில்!

பினாத்தல் சுரேஷ் said...

differntial..

my students wont forgive me, if i did not post this answer..

btw, long back, i had written a post on skid steer loader and car differetial comparison and erased it by accident.. no copies saved..

if u need any animation on this, i will look for some or create one..

பினாத்தல் சுரேஷ் said...

http://www.mcnamaradiffs.com.au/difflockmech.html

almost good

வவ்வால் said...

வாங்க சுரேஷ்,
நன்றி!

சரியா பாயிண்டை புடிச்சிங்க!

"differential gear" பற்றி நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் பலருக்கும் இப்படி வளைவுகளில் சக்கரங்கள் மாறுபட்ட வேகத்தில் சுழலும் என்பதே அறிந்திருக்கவில்லை என்பதை தற்போது தான் அறிந்து கொண்டேன்.

//btw, long back, i had written a post on skid steer loader and car differetial comparison and erased it by accident.. no copies saved..//

என்ன கொடுமை சார் இது, நல்ல மேட்டரை எழுதிட்டு அழிய விட்டுடிங்களே, முடிந்தால் மீண்டும் எழுதி போடுங்கள், உபயோகமாக இருக்கும்.

என்னிடம் இணையத்திலிருந்து எடுத்த படங்கள் இருக்கிறது, அதுவே போதும் என நினைக்கிறேன். அனிமேஷன் செய்து ஏற்கனவே கைவசம் உங்களிடம் இருந்தால் போட்டு விடலாம், இல்லை என்றால் இதற்காக இனிமேல் சிரமப்பட வேண்டாம்.

வவ்வால் said...

சுரேஷ்,

நீங்கள் அளித்த சுட்டி அருமையாக உள்ளது, நன்றி!

இந்த கியர் "front wheel drive" எஞ்சினுக்கானது என நினைக்கிறேன், இந்திய வாகனங்கள் பெரும்பாலும் பின் புற இயக்கும் சக்தியுள்ளது.பின் புற டிபெரென்ஷியல் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்கும்.

Anonymous said...

//சரியா வளைத்து ஓட்டினால் இரண்டு வட்டம் தான் வரும்,//

I don't think so...

There will be four circles

Anonymous said...

//சரியா வளைத்து ஓட்டினால் இரண்டு வட்டம் தான் வரும்,//

We will get four circles

Of this the Front Inner will be less in Radius (and circumference) than the front outer and rear inner will be less than rear outer

Related questions

1. Why every one gets lost in Desert (without other guides)

2. Why Atheletic Track are run clockwise and not counterclockwise

//வட்டமான ரோடுகள் சமதளமாக இருப்பதில்லை//

That is because when a vehicle turn to one side, the centrifugal force pushes the vehicle outside

This is countered by two ways

1. In two wheelers the rider sways to the inner side (so that the gravity acts as a counter to the centrifugal)

2. In four wheelers and trains, the outer arc is elevated. This is called as banking

3. The banking angle (tan theta) is directly proportional to the
velocity and not related to the weight of the vehicle

That is the banking angle for an auto is same as that of a train

If the vehicle speeds more than the banking angle, it will be thrown out ("Upside" in colloquial language)

Anonymous said...

For more explanation about centripetal and centrifugal forces

Any object going in a circle has a centrifugal and centripetal force acting on that

If the forces are equal - then the circle is maintained

This is applicable to the satellites also... Only when the Centripetal force is equal to centrifugal force the satellite revolves

if the centripetal force is less - the satellite will start drifting away

if the centripetal force is more - the satellite will spiral towards the earth (Skylab - http://en.wikipedia.org/wiki/Skylab)

Similarly, when you tie a string to the ball and revolve that, the centripetal force is provided by the string and the centrifugal force pulls the ball out... When you increase the speed of revolution, the string will break away (as the centrifugal force exceeds the tensile force of the string)

ஓகை said...

Differntial gear - வாகனவியல் படிக்கும் மானவர்களே புரிந்து கொள்ள சற்று குழ்ம்பிப் போகும் பற்சக்கர அமைப்பு. நீங்கள் எப்படி விளக்குகிறீர்கள் என்று அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன். இது விளக்குவதற்கு சவாலானது என்றே கருதுகிறேன்.

நான்கு சக்கர வண்டிகளில் மட்டுமில்லாமல் தானிகளிளும் (auto-riksha) இவ்வமைப்பு உண்டு.


//வட்டமான ரோடுகள் சமதளமாக இருப்பதில்லை. ஒரு பக்கம் பள்ளமாகவும் ஒரு பக்கம் மேடாகவும் இருக்கும். அதனால் கார் அன் -ஸ்டபிலிடி குறைவாக இருக்கும்.

எனக்கு தெரிந்த வகையில் சக்கரங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிப் பார்த்ததில்லை//

சிவா, உங்கள் பின்னூட்டத்தின் முதல் பகுதி மைய ஈர்ப்பு விசை தொடர்பானது. இரண்டாவது பகுதியில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறு. இயக்கு சக்கரங்களில் ஒன்று சேற்றில் மாட்டிக்கொண்டு அதிவேகத்தில் சுழன்று சேற்றை வாரி அடிக்கும் போது அதன் அச்சின் மறு முனையிலுள்ள சக்கரம் அசைவதற்கு முக்குவதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம் Differntial gear தான்.

சென்னை கோளரங்கத்தில் இருக்கும் நிரந்தர அறிவியல் காட்சியகத்தில் Differntial gear இயங்கு விதம் அருமையாக மாதிரியில் செய்து வைத்திருக்கிறார்கள். அச்சின் ஒருமுனை சக்கரத்தை நிலயாக ஒருவர் பிடித்துக் கொள்ள மற்றொருவர் மறுமுனை சக்கரத்தை சுழற்ற முடியும். இரண்டு சக்கரங்களையும் எதிர் திசைகளிலே கூட சுழற்ற முடியும்.

வவ்வால் said...

அனானி மற்றும் ப்ருனோ,

ஒரு வளைவில் உள் புற சக்கரம், வெளிப்புற சக்கரம் பயண தூரம் மாறு படும் என்பது தான் இங்கே சொல்ல வருவது,நீங்கள் ஒரு வார்த்தை பின்னாடியே செல்வதால் என்ன பயன்.

முழு வட்டம் போடும் போது வேண்டுமானாலும் நீங்கள் சொல்வது போல அப்படி வரலாம், நான் சாதாரணமாக ஒரு சாலையின் வளைவில் திரும்பும் வாகனம் இரண்டு "ஆர்க்" குகள் மட்டும் போடுவதைப்பார்த்துள்ளேன்.

இங்கே "differential gear" பற்றி சொல்ல வருவதால் மற்ற விளக்கம் சொல்வது கவன சிதறல் ஆகும்.

-------------
ப்ருனோ,
நன்றி!

வளைவுகளில் நீங்கள் சொன்ன பேன்கிங்க் பற்றியும் பின்னூட்டதில் ஏற்கனவே சொல்லியுள்ளேன் பாருங்கள்.நீங்கள் சொன்ன மைய விளக்கு விசை, நோக்கு விசைகள் பற்றிய தகவல்களும் நன்றாக உள்ளது.அவை எல்லாம் கியர் பற்றி சொல்லும் இடத்தில் சொல்ல தேவை இல்லை என நினைத்து தவிர்த்தேன்.

உங்கள் கேள்விகளுக்கு:

1)பாலைவனத்தில் வழி தவறக்காரணம் , வானத்தை வைத்து திசை அறிய தெரியாமல் இருப்பது,இப்போதெல்லாம் கேம்பஸ், ஜி.பிஎஸ்,எல்லாம் இருக்கும் காலத்தில் வழி தவற வாய்ப்பு குறைவு தான்.

2) டிராக்கில் ஓடும்போதும் இதயம் இடப்புறம் இருப்பதால் மைய விளக்கு விசையினால் இதயத்தின் ரத்தம் செலுத்தும் விதம் பாதிக்கப்படும் எனவே தான் கடிகாரச்சுற்றில் ஓடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

சரி உங்களுக்கு ஒரு கேள்வி, வழக்கமாக கடிகாரச்சுற்று என்று சொல்வது தான் வழக்கமான ஒன்றாக இருக்கிறது, ஆனால் பூமி சுற்றுவதே எதிர் கடிகார சுற்றில் தான், ஏன் நாம் மட்டும் எதிரான பாதையை பழக்க படுத்திக்கொண்டோம்?

வவ்வால் said...

ஓகை ,
நன்றி!

நீங்களே பாதியை விளக்கி விட்டீர்களே, நான் அந்த சேற்றில் சிக்குவது எல்லாம் உதாரணமாக காட்டலாம் என்று இருந்தேன் :-))
நன்றாக விளக்கம் தந்துள்ளீர்கள்.

கியர் ரேஷியோ, உட்புற , வெளிப்புற சக்கரங்களின் வேகத்தின் விகிதம் என்று குழப்பாமல் சிம்பிளாக முடித்து விடுவேன் கவலைப்படாதீர்கள்!

Sundar Padmanaban said...

நாட்டாமை

//2. Why Atheletic Track are run clockwise and not counterclockwise//

கேள்வியை மாத்திக் கேளு! :-)They run counter-clockwise and not clockwise!

மனிதர்கள் மட்டும் என்றில்லை. கார், குதிரை என்று அனைத்து ஓட்டப்பந்தய தடங்களிலும் எதிர்கடிகாரத் திசையில்தான் ஓடுவார்கள்.

கார் பந்தயங்கள் ஏன் அப்படி என்று புரிந்து கொள்ள முடிகிறது - ஸ்டியரிங் இடப்புறம் இருப்பதால் கடிகாரத் திசையில் ஓட்டினால் விபத்துகளின் போது ஓட்டுனர் சுற்றுச் சுவரை இடிக்கும் வாகனத்தின் பக்கமிருந்தால் உயிர்ச்சேதம் ஏற்படுவதன் வாய்ப்பு அதிகம். இதன் படி பார்த்தால் நம்மூர் வாகனங்கள் (வலப்புற ஸ்டிரியங்) கடிகாரத்திசையில் ஓடலாம் என்று ஆகிறது. ஆனால் கார் ரேஸில் வலப்புற ஸ்டியரி்ங் வண்டிகள் ஓட்டப் படுகின்றனவா என்று தெரியவில்லை. இங்கிலாந்தில் என்ன செய்கிறார்களாம்?

இயற்கை கடிகாரத்திற்கு எதிர்த்திசையில் இயங்குகிறது என்பதுதான் இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமோ?(பூமிப்பந்து சுழல்வதும் கடிகாரத்திற்கு எதிர்திசையில்).

நிறைய துணைக்கேள்விகள்.

ஓட்டப்பந்தயங்களில் அவ்வாறு ஓடுவது இதயத்திற்கு (இடப்புறம் அமைந்திருப்பதால்) நல்லது என்று எங்கோ படித்த நினைவு (வலப்புறம் இதயம் அமைந்திருக்கும் ஆத்மாக்கள் என்ன செய்வார்கள்?).

பொழுது போக்கு பெளதிகம் என்று தமிழில் முன்பு பல புத்தகங்களை விழுந்து விழுந்து படிப்போம் - மிகவும் சுவாரஸ்யமான நடையில் எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும் - "நடத்தல் என்பது தொடர்ச்சியான முன்னோக்கி விழுதல்" - என்பது மாதிரியான நடையில்! :-)

நல்ல பதிவு. பாராட்டுகள்! அப்படியே அதிவேகப் பல்லிணைச்சக்கரத்தில் (Top Gear!) செல்லுங்கள். வாழ்த்துகள்.

வவ்வால் said...

சுந்தர்,

நன்றி!

ரொம்ப ஓவரா இருக்கே உங்க பாராட்டு, நான் ஏதோ சும்மா என் கண்ணில் படுவதை , பட்டதை பகிர்ந்து கொள்கிறேன்(வெறுமனே காபி, பேஸ்ட் செய்வதை விட இது மேல் என நினைக்கிறேன்)

அப்புறம் ஓட்ட பந்தய மைதானங்களில் கடிகாரச்சுற்றில் தான் ஓடுகிறார்கள்.புருனோ சொல்வது சரிதான், எங்கள் கல்லூரியில் கூட அப்படித்தான் டிராக் போட்டு இருந்தார்கள். நீங்கள் சொன்ன இதயம் மேட்டரை தான் நானும் சொல்லி இருக்கேன் பாருங்க!(எனக்கு வேறு சில காரணங்கள் தோன்றினாலும் பெரும்பாலும் சொல்வதை சொல்லி வைத்தேன், நீங்கள் சொல்வதை போல இதயம் வலப்புறமாக இருந்தால்(பெண்களுக்கு வலப்புறமாக இருக்கும், ஆனால் யாருக்கும் இதயம் இடம், வலமாக மாறி இருப்பதில்லை,சற்று ஏறத்தாழ மையமாகத்தான் இருக்கும், மார்பு கூட்டின் அகலம் ஒரு பக்கம் அதிகமாகவும், இன்னொரு பக்கம் குறைவாகவும் இருக்கும் என்பதே உண்மை)

//ஆனால் கார் ரேஸில் வலப்புற ஸ்டியரி்ங் வண்டிகள் ஓட்டப் படுகின்றனவா என்று தெரியவில்லை. இங்கிலாந்தில் என்ன செய்கிறார்களாம்? //

பார்முலா 1 பந்தயங்களில் எல்லாம் ஒரே இருக்கை தான் மையமாக இருக்கும், கார் பந்தயங்களில் கடிகாரச்சுற்றில் வைக்க காரணம், அது ஒரு மரபாக இருப்பதால் தான், நீங்கள் சொன்ன அந்த சுற்று சுவர் இடிப்பு என்பதால் அல்ல, இடம், வலம் இரண்டு பக்கமும் சுற்று சுவர் , மாறி மாறி வரும்.

ஏன் கடிகாரச்சுற்று அப்படி இருக்கிறது என்பதற்கு என்னிடம் ஒரு சொந்த விளக்கம் இருக்கிறது தனியாகப்பதிவிடுகிறேன்.

Anonymous said...

First An BIGGGG Apology

Athletic Track is run Counterclockwise :) :) :) :)
-----
பாலைவனத்தில் வழி தவறக்காரணம் .....

Muscles of Human body does not have equal power on both sides. Either the Left or Right has more power (depending on the handedness). (Try throwing a stone with Right and left hand. You would have seen that some gloves which are tight fitting on one hand are more tight on the other hand)

So, when you are walking, the thrust given by both legs are NOT Same. One leg gives more thrust than the other. As a result, a person walks in a circle (a big circle), when he is made to walk on his own with no inputs from Eyes.

This is exactly why guys left alone in a desert gets lost as they go round and round and not in a straight line.
---
That is

Right Leg = Left Leg --> Move Straight
Right Leg > Left Leg --> Move (turn)to Left
Right Leg < Left Leg --> Move(turn) to Right

Now coming to the next question

For majority of individuals, the power of heel rise and push off of right leg and foot is more than the left leg and foot.

So the body's natural rhythm moves them in the counter clockwise manner as Right leg which has more power can easily compensate when you want to turn to left.

When a right hander wants to turn towards right (while going in a clockwise direction), he has to reduce the force of push off in the right less than that of the left. So the athelete performs below his maximum potential.

So a right hander will need MORE time to run a 400 meter circular or elliptical track clockwise than what he needs to run counterclockwise

because

When he is running counterclockwise
Left Leg - Maximum Power (say 10 x)
Right Leg - Maximum Power (say 11 x)
Average power is 10.5 x

When he is running clockwise
Left Leg - 10 x
Right Leg - 9x (than only he can turn)
Average Power is 9.5 x

This is just a simplification (in fact over simplification)

---
This does not apply to Cycle or Car Race
---

வவ்வால் said...

ப்ருனோ என்னமோ சொல்றிங்க இதை நம்ப எனது பகுத்தறிவு இடம் தரவில்லை.இது எதாவது ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதா?

இதில் இரண்டு கால்களில் ஏதேனும் ஒரு கால் தரையில் அழுத்தம் அதிகம் தரும் என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அதற்கும் , இடது ,வலது கை பழக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை.

//So a right hander will need MORE time to run a 400 meter circular or elliptical track clockwise than what he needs to run counterclockwise//

மேலும் அதனால் ஓடும் போது திரும்ப ஏற்படுவதால் நேரம் விரயம் ஆகும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, காரணம், மேலை நாட்டவர்கள் அனைவருமே இடது கை பழக்கம் உள்ளவர்கள், இந்தியர்கள் அனைவரும் வலது கை பழக்கம் உள்ளவர்கள், அப்படி எனில் நம்மாட்கள் தான் எல்லாப்போட்டியிலும் வெற்றிப்பெற வேண்டும்!

இதய ரத்த ஓட்டம் என்று ஒன்று சொல்கிறார்கள் அது தான் காரணமாக இருக்க வேண்டும்.

உங்கள் பாலைவன வழிதவறல் கூட அந்தளவு பொருத்தமாக இல்லை.உங்கள் கூற்றுப்படியே வழிக்காட்டி இருந்தால் அவர் கால்களும் அப்படித்தானே செயல் படும், மேலும் வாகனத்தில், ஒட்டகத்தில் செல்லும் போதும் வழி தவற வாய்ப்புள்ளதே, நான் சொன்னது போல் வானியல் வைத்து (சூரியனின் நிலை, இரவில் நட்சத்திரங்களின் நிலை) வழிக்கண்டுப்பிடிக்கத்தெரியாததே காரணமாக இருக்க வேண்டும்.

Anonymous said...

//இதய ரத்த ஓட்டம் என்று ஒன்று சொல்கிறார்கள் அது தான் காரணமாக இருக்க வேண்டும்.//

There is no proof for this. I am very sure

//உங்கள் கூற்றுப்படியே வழிக்காட்டி இருந்தால் அவர் கால்களும் அப்படித்தானே செயல் படும், மேலும் வாகனத்தில், ஒட்டகத்தில் செல்லும் போதும் வழி தவற வாய்ப்புள்ளதே, நான் சொன்னது போல் வானியல் வைத்து (சூரியனின் நிலை, இரவில் நட்சத்திரங்களின் நிலை) வழிக்கண்டுப்பிடிக்கத்தெரியாததே காரணமாக இருக்க வேண்டும்.//

You are not getting the point here....

DO you need வானியல் (சூரியனின் நிலை, இரவில் நட்சத்திரங்களின் நிலை) to go from Tambaram to Meenambakkam. You use your "Landmarks"

In Desert there are no known landmarks..... WHen you see in all directions you see only sand

No a novice goes in circle THINKING that he is going in a straight line

On the other hand, the guides who are able to interpret the direction with வானியல் are able to avoid this problem

//இதில் இரண்டு கால்களில் ஏதேனும் ஒரு கால் தரையில் அழுத்தம் அதிகம் தரும் என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அதற்கும் , இடது ,வலது கை பழக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை.//

Then which leg will give more thrust !!!!

//மேலை நாட்டவர்கள் அனைவருமே இடது கை பழக்கம் உள்ளவர்கள், இந்தியர்கள் அனைவரும் வலது கை பழக்கம் உள்ளவர்கள்,//

I don't think so.....

Vinod Kambli
Flintoff

வவ்வால் said...

புருனோ,

//On the other hand, the guides who are able to interpret the direction with வானியல் are able to avoid this problem//

இதைத்தானே நானும் சொல்றேன், நான் சொன்னதை இல்லைனு சொல்லிட்டு , அப்புறமா அதையே ஆங்கிலத்தில் சொல்றிங்க! தமிழ் புரியாதோ?

//Vinod Kambli
Flintoff//

ஓ இவங்க எல்லாம் தடகள வீரர்களா , எனக்கு தெரியாம போச்சே, நீங்க தடகளத்தில் ஓட்டப்பந்தயம் பற்றி விளக்கம் சொன்னதாக எனக்கு நினைவு.

அதை விட மேல் நாட்டினர் எல்லாம் இடது கையால் தான் எழுதுவார்கள், மற்ற வேலைகளை செய்வார்கள், கார்கல் கூட இடது கை ஓட்டுதல் தான்,ஆனால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை வலதுகையால் ஆடுகிறார்கள்.

எனவே அவர்களின் இயல்பான கை பழக்கம் இடது கை பழக்கம் என சொல்கிறேன். நீங்கள் சொன்ன கை பழக்கத்திற்கு ஏற்ப காலில் அழுத்தம் மாறும் என்பது இதனால் சரியான ஒரு விளக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மேலும் உங்களுக்கா ஒரு கூடுதல் தகவல் , இதுவும் கிரிக்கெட்டில் இருந்து தான்,

சச்சின் வலது கை மட்டையாளார் ,ஆனால் அவர் எழுதுவது இடது கையால் தான்.