dotEPUB

Saturday, January 14, 2012

புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!







தை-1 இல் புத்தாண்டு கொண்டாடப்படும் என அரசு அறிவித்தவுடன் வலைப்பதிவுலகில் பல்வேறு ஆதரவு , எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பிவிட்டது.ஆதரவு தெரிவித்தவர்கள் கூற்று நியாயமாக இருந்தது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதோ வறட்டு விவாதமாக ஒலித்தது.

மாற்றியது தவறு என சொன்னப் பலப்பதிவுகளிலும் , இது சரியான மாற்றம் தான் எனப்பல பின்னூட்டங்கள் இட்டு சொன்னப்போதிலும், அவை சரியானப்படி நிறையப்பேரை சென்றடையவில்லை , எனவே ஒருப்பதிவாக இட்டு எனது கருத்தைப் பதிவு செய்து வைக்கிறேன்.

தைப்புத்தாண்டு தேவையில்லை என்பவர்களின் வாதம்,

1) ஏப்ரலில் வருவது தான் சரி,
2) காலம் காலமாக வருவது
3)விஞ்ஞான முறைப்படி அது சரியானது.
4) தைப்புத்தாண்டு என்பது யாருக்கும் தெரியாத வழக்கில் இல்லாத ஒன்று, திடீர் என அரசு எதேச்சதிகாரமாக அறிவித்துள்ளது

இவை தான் முக்கியமான குற்றச்சாட்டாக எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது. அவர்கள் சொல்வது சரியல்ல என்பதை விளக்கவே இப்பதிவு.

ஏப்ரலில் புத்தாண்டு வருவது சரியா?

அப்போது தான் கோடைக்காலம் துவங்குகிறது அதனால் அப்போது வரவேண்டும் என்கிறார்கள், அது அப்படி இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம். எத்தனையோ பருவங்கள் இருக்க ஏன் கோடையில் வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கலில் இருந்தே கோடையின் துவக்கம் நமக்கு ஆரம்பிக்கிறது, அறுவடை எல்லாம் முடிந்திருக்கும் அப்போது.எனவே அப்பருவத்தின் துவக்கத்தினை புத்தாண்டாக வைத்தால் என்ன?

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனால் "summer solstice " மார்ச் 21 இல் வருவதை ஒட்டி புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாலாம் என்கிறார்கள்.(ஆனால் உண்மையில் இந்தியக்காலண்டர்கள் லுனி சோலார் காலண்டர்கள், தமிழ் காலண்டர் முழுக்க சூரியக்காலண்டர் )

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் வருடாந்திர பயணத்தின் அடிப்படையில் ஒன்று அதன் துவக்கத்தில் அல்லது இறுதியில் இருந்து ஆண்டை ஆரம்பிக்கலாமே, ஏன் இடையில். இதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சூரியன் என்பது நிலையானது , அது நகர்வதில்லை ஆனால் பூமியின் சுழற்சி, அதன் 23.5 கோண சாய்வு ஆகியவற்றால் நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, அதன் அடிப்படையிலே இரவு பகல், பருவக்கால மாற்றங்கள் ஏற்படுகிறது.

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது பூமியின் சுழற்சியால், இது தினசரி சூரியனின் நகர்வு நிகழ்வு எனக்கொள்ளலாம்,

இதே போல சூரியனின் வருடாந்திர நகர்வு நிகழுவும் இருக்கிறது, இதற்கு காரணம் பூமி அதன் அச்சில் 23.5 கோணாம் சாய்வாக சூரியனை சுற்றிவருவது.

பூமியை வடக்கு தெற்காக இரண்டு பாதியாக பூமத்திய ரேகை பிரிக்கிறது, பூமி மீது இது போன்ற வளையங்களாக செல்லும் கற்பனைக்கோடுகளே அட்ச ரேகைகள் எனப்படுகிறது.

இதில் முக்கியமான வளையங்கள் பூமத்திய ரேகை, மகர ரேகை, கடக ரேகை.

மகர ரேகை தென் கோளத்திலும், கடக ரேகை வடக்கோளத்திலும் வரும் இடையில் பூமத்திய ரேகை.

சூரிய ஓளி செங்குத்தாக பூமி மீது மகர ,கடக ரேகைப்பகுதிக்குள் மட்டுமே விழும்.

ஒரு ஆண்டில் சூரியன் இரண்டு வளையங்களுக்கும் இடையே சென்று வருகிறான்.பூமி சாய்வாக சுழல்வதால் அப்படி தோன்றுகிறது.

ஜூன் மாதத்தில் (ஜூன் 24) சூரியன் வடக்கோள கடக ரேகையில் இருந்து தென்கோள மகர ரேகைக்கு தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கி , இந்திய முறைப்படி ஜனவரி 14 இல் (சரியான தேதி என்றுப்பார்த்தால் டிசம்பர் 21)மகர ரேகைக்கு வந்து பின்னர் அங்கிருந்து கடக ரேகைக்கு வடக்கு கோளத்தை நோக்கி பயணிப்பான். அதாவது ஆறு மாதம் இந்தப்பக்கம் ஆறு மாதம் அந்த பக்கம் .

இந்த மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள் இதைப்புனிதமானது என்பார்கள்,அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.

எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அது ஏன் சூரியனின் பயணத்தில் இடைப்பட்டக்காலத்தில் ஏப்ரலில் வர வேண்டும்!

மகர ரேகை என்பது இந்தியாவிற்கு தெற்கே கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ளது அங்கிருந்து இந்தியா நோக்கி சூரியன் வரும் நாளை வருடத்தின் துவக்க நாளாக கொள்வது தவறில்லையே. அதாவது சூரியக்காலண்டர் அடிப்படையில் சூரியனின் பயணம் துவங்குவது முதல் நாள்!

இதனாலேயே ஒருக்காலத்தில் ஆங்கில முறையில் ஏப்ரலில் வந்த புத்தாண்டு கூட ஜனவரிக்கு இடம் பெயர்ந்தது.

wikki இல் இருந்து எடுக்கப்பட்ட உதாரணம்,

//France was one of the first nations to make January 1 officially New Year's Day (which was already celebrated by many), by decree of Charles IX. This was in 1564, even before the 1582 adoption of the Gregorian calendar (See Julian start of the year). Thus the New Year's gifts and visits of felicitation which had been the feature of the 1st of April became associated with the first day of January, and those who disliked or did not hear about the change were fair game for those wits who amused themselves by sending mock presents and paying calls of pretended ceremony on the 1st of April.//

தமிழர்கள் எந்த அளவுக்கு தீர்க்க தரிசனத்தோடு இருந்தால் அக்காலத்திலேயே வரப்போகும் சூரியனை வரவேற்று , சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக்கொண்டாடி இருப்பார்கள்!

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் ஏப்ரலில் வருவது, விஞ்ஞான ரீதியாக சரி என்று சொல்வதெல்லாம் தவறு என்று காட்டி இருக்குமே!

சித்திரை புத்தாண்டு காலம் காலமாக வருவது என்கிறார்கள், அக்காலத்தில் கூட காலம் காலமாக உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் எல்லாம் இருந்தது அதை எல்லாம் சட்டம் போட்டு ஒழிக்கவில்லையா? அதையும் புனிதமாக நினைப்பவர்கள் இருந்தார்கள் என்று அரசு ஆதரிக்க முடியுமா?

இப்போது அரசு திடீர் என்று மாற்றம் செய்து விட்டது என்று சிலர் சொல்கிறார்களே அது எப்படி ?

1921 இல் திருவள்ளுவர் கி.மு 31 இல் பிறந்தாரரென்ற கூற்றின் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்று உருவாக்கப்பட்டுள்ளது,அதில் தை இரண்டு அன்று புத்தாண்டு வருவதாக மறைமலை அடிகள், திரு.விக, கி.ஆ.பெ எல்லாம் இதுக்குறித்து பல தமிழ் ஆய்வுகள் செய்து தெரிவித்துள்ளார்கள், இதனை அரசும் ஏற்கும் விதமாக வெகு காலம் முன்னரே அரசு நாட்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டை ஏற்று வெளியிட ஆரம்பித்தது. சில தரமான தனியார் காலண்டர்களிலும் இந்த ஆண்டு முறை இடம் பிடிக்க ஆரம்பித்தது.

தற்போது ஏற்கனவே பலகாலமாக இருந்த ஒன்றுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வண்ணம் அரசாணை வெளியிட்டுள்ளது. தை இரண்டு என்பதற்கு பதில் முழுதாக தை 1 என்ற சிறிய திருத்தம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.


எனவே இந்த அறிவிப்பு ஒன்றும் திடீர் புரட்சி அல்ல, பலகாலமாக இருந்து வந்த தமிழறிஞர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது அரசு.


பின்குறிப்பு:

இது ஒரு மீள்ப்பதிவுங்கோ!!!

61 comments:

கோவை சிபி said...

மிகவும் எளிமையாக,அடிப்படை விசயத்தை எழுதி இருக்கிறீர்கள்.பொதுவாக சித்திரை மாதத்தை "பீடை மாதம் என்பதும்,நல்ல காரியங்களை தவிர்ப்பதும் இருக்க,தமிழன் எப்படி சித்திரையை புத்தாண்டாக கொண்டாடி இருக்க முடியும்?

வவ்வால் said...

கோவை சிபி,
நன்றி!

தமிழர்களின் தீர்க்க தரிசனத்திற்கு தை பொங்கலும் ஒரு எடுத்துக்காட்டு!

நீங்கள் கேட்பதும் சரியான கேள்வி, ஆனால் இதனைப்பலர் உணரவில்லை.

Unknown said...

ஆண்டு துவக்கம் என்பது ஏதாவது பருவ ஆரம்பத்தில்தான் இருக்க வேண்டும என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆங்கிலப்புத்தாண்டு பருவ ஆரம்பத்திலா வருகிறது. குளிர்காலத்தின் நடுவில் அல்லவா வருகிறது.

சாலிசம்பர் said...

//சூரியன் என்பது நிலையானது , அது நகர்வதில்லை//

வவ்வால்,
கேலக்ஸியின் மையத்தை (கருந்துளை?) மையமாக வைத்து நொடிக்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் வேகத்தில் சூரியன் சுற்றுகிறதாம்.கார்ல் சாகன் எழுதிய காஸ்மாஸ் நூலில் உள்ளது.

Mohandoss said...

வவ்வால், ஜாலிஜம்பர் சொல்வது சரிதான்.

The Sun orbits the center of the Milky Way galaxy at a distance of approximately 26,000 light-years from the galactic center, completing one revolution in about 225–250 million years. It's approximate orbital speed is 220 kilometers per second, plus or minus 20 km/s. This is equivalent to about one light-year every 1,400 years, and about one AU every 8 days. These measurements of galactic distance and speed are as accurate as we can get given our current knowledge, but will change as we learn more.

# ^ Kerr, F. J.; Lynden-Bell D. (1986). "Review of galactic constants" (PDF). Monthly Notices of the Royal Astronomical Society 221: 1023–1038.

இதைப் பற்றி நானும் படித்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

வவ்வால் சார்,

இந்த ரேகை எல்லாம் புரியல. ஒண்ணு மட்டும் புரியுது. தமிழுக்கு ஓடும் தீர்க்க(மான) ரேகை நல்லாவே ஓடுது.
:)

Anonymous said...

இக் கட்டுரை முற்று முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் திகதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் `தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்படப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் திகதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப் படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் திகதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்த்துக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் திகதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) யேசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் கலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட `ஏரீஸ்'வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் திகதி முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் திகதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 திகதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது `மீன மேஷம் பார்த்தல்' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (`நாஞ்சிற்பனைக் கொடியோன்' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை `புஜங்கம புரஸ்ஸர போகி' எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் `தளவாய்புரச் செப்பேடு' குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்படுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது `சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து' மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 - 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா? தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை `அல்ல' என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண் மையே.
(தொடரும்)


thinakural.com

Anonymous said...

Christmas is a winter solstice ffestival. it was celebrated even bfor jesus was born. they couldnot do farming in winter in the west. they celebrated beginning of winter. read somewhere that pongal is also a solstice festival

Anonymous said...

நமது ஒருவருடம் தேவர்களின் ஒரு நாள் என்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும் போது எங்கள் முதல் ஆறு மாதம் (தை-ஆனி) அவர்களுக்கு பகல் பின் ஆறு மாதம் (ஆடி-மார்கழி) இரவு.

இரவிலே தூங்கிய சிவன், விஷ்ணுவை திருவெம்பாவை, திருப்பாவை பாடி துயில் எழுப்புகிறோம்.

அப்படிப் பார்க்கையில் தையுடன் அவர்களுக்கு விடிகிறது. நாள் ஆரம்பமாகிறது.
அதனால் நமக்கும் தையுடன் வருடமும் ஆரம்பம் வேண்டும்.

தைப்புத்தாண்டை இந்து, தமிழ் புத்தாண்டு என்று கூறுவதே சரியாகும்.

ஓகை said...

மகிழெம்பரே, பிரபஞ்ச ரீதியாகப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சூரிய குடும்பத்தில் (solar system) சூரியன் நிலையானது. அதற்குள்ளாக சூரியன் மட்டுமே நிலையானது. மற்றெல்லாமும் சூரியனைச் சுற்றி வருபவையே. ஆண்டுக் கணக்கு என்பதெல்லாம் சூரியனுக்கும் பூமிக்குமான இயக்கத்தை மட்டுமே கணக்கிலெடுப்பதால் பிரபஞ்சத்தில் சூரியன் நகர்கிறது என்கிற உண்மையை இவ்விவாதத்தில் பொருட்படுத்தத் தேவையில்லை.

Mohandoss said...

//ஆண்டுக் கணக்கு என்பதெல்லாம் சூரியனுக்கும் பூமிக்குமான இயக்கத்தை மட்டுமே கணக்கிலெடுப்பதால் பிரபஞ்சத்தில் சூரியன் நகர்கிறது என்கிற உண்மையை இவ்விவாதத்தில் பொருட்படுத்தத் தேவையில்லை.//

ரிப்பீட்டே!

வவ்வால் said...

உமையணன்,
நன்றி!
பதிவில் நீங்கள் சொல்வதைத்தானே சொல்லி இருக்கேன்.
-----------------------------
ஜாலி ஜம்பர்,
மற்றும் மோஹன்,

நீங்கள் சொல்வதையும் அறிவேன்,ஆனால்
நான் எந்த அர்த்தத்தில் சூரியன் நிலையானது என்று சொல்லவந்தேன் என்பதை ஓகையே விளக்கி விட்டார்
நன்றி ஓகை.

என்னை மடக்கி விட வேண்டும் என்று ரொம்ப முயற்சிப்பது தெரிகிறது, அதுக்குனு இப்படியா சாமி!

நம் பால் வெளி மண்டலம் சார்ந்து சூரியன் சுற்றுவதை மட்டும் தான் சொன்னீர்கள்,இன்னும் சொல்லப்போனால் சூரியனுக்குள்ளாக ஒரு சுழற்சி இருக்கிறது அதனை அதில் இருக்கும் கரும்புள்ளிகளின் இடப்பெயர்ச்சி மூலம் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

பல பால் வெளி மண்டலங்கள் சேர்ந்தது ஒரு குடும்பம் அதனை சூப்பர் கேலக்சி என்பார்கள் அவை தனியாக ஒரு அச்சை மையமாக வைத்து சுழலும், பின்னர் அவை எல்லாம் பிரபஞ்சத்தின் அச்சை மையமாக வைத்து ஒரு சுற்று சுழல்கிறது.

மேலும் பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைகிறது , என மொத்த அமைப்பிலும் 7 வகையான இயங்கங்கள் ஏற்படுகிறது.

நான் இங்கே செலஸ்டியல் ஆக்சிஸ் வைத்து நட்சத்திர மண்டலம் சுழல்வதையே சொல்ல வரவில்லை.

பூமியின் இயக்கத்தினால் ஏற்படும் ஒரு தோற்ற இயக்கம் என்பதை சொல்ல வந்தது.

இதெல்லாம் ஆண்டு தோறும் ஏற்படும் மகர , கடக ரேகை பயணத்தை விளக்க தேவையா :-))
-----------------------------

கோவி,
//இந்த ரேகை எல்லாம் புரியல. ஒண்ணு மட்டும் புரியுது. தமிழுக்கு ஓடும் தீர்க்க(மான) ரேகை நல்லாவே ஓடுது.
:)//

நன்றி, முற்றிலும் உண்மையே :-))

------------------------------
அனானி,

//இக் கட்டுரை முற்று முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. //

//இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 திகதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும்.//

ஜோதிட முறையில் சொல்வது எல்லாம் வரலாறா?

மேலும் ஏற்கனவே நானும் ஏப்ரலில் ஆங்கிலத்தில் புத்தாண்டு வழக்கம் இருந்தது , மார்றியமைக்கப்பட்டது என்றும் சொல்லி இருப்பதை கவனிக்கவில்லையா.

சித்திரையில் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்வதற்கான காரணங்களும் வலுவாக இல்லையே.

அதற்கு தையில் கொண்டாட நான் கொடுத்துள்ள காரணங்களே போதுமே.

ஆரம்பத்தில் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொள்வதால் கடைசி வரைக்கும் அப்படியேவா ஓட்டுகிறோம், மாற்றம் செய்தால் என்ன தவறு?
-----------------------

அனானி,
//தைப்புத்தாண்டை இந்து, தமிழ் புத்தாண்டு என்று கூறுவதே சரியாகும்.//

தையில் புத்தாண்டே கூடாது என்பீர்கள், ஆனால் அது நடந்து விட்டால் வேறு வழியில்லை என்று அதன் மீது இந்துத்வா சாயம் பூச வந்துடுவிங்களே!

நீங்கள் சொன்ன கடவுள் எழுப்புதல் எல்லாம் வழக்கத்திற்கு வரும் முன்னரே இங்கே பொங்கல் உண்டு அய்யா எனவே உமது கதை வேறு இடத்தில் அவிழ்த்து விடவும்!

----------------------

ஓகை,

தங்கள் விளக்கத்திற்கு நன்றி!

நானும் அப்படிப்பட்ட பொருளில் தான் சூரியன் நிலையானது என்று சொல்லி இருந்தேன்.

Mohandoss said...

//என்னை மடக்கி விட வேண்டும் என்று ரொம்ப முயற்சிப்பது தெரிகிறது, அதுக்குனு இப்படியா சாமி!//

எனக்கு அந்த ஆர்வம் இல்லை சொன்னால் நம்புவீர்களா தெரியாது!

பலரிடம் நான் இதைப் பற்றி பேசி இளக்காரமாகப் பார்க்கப்பட்டிருக்கிறேன். சூரியன் எல்லாம் சுத்துறதா எனத் திரும்பக் கேட்டு! அப்படி ஒரு கேள்வி வவ்வாலிடம் என்றதும் தான் அதைச் சொன்னேன்.

மற்றபடிக்கு நம்புறது உங்க இஷ்டம்!

Anonymous said...

Also, last year same mu.karunanidhi enjoyed tamil puthaandu Suntv sirappu nigazchigal in "April". All the jaalra kavingarkgal had a kaviarangam and Muka was the head -kavi for April thamizh puthaandu.

When Mu.ka cannot solve the real problems in tamilnadu , he will start something like this. now he cannot talk about ramar palam. they need something to divert people from real issues.

சாலிசம்பர் said...

//ஆண்டுக் கணக்கு என்பதெல்லாம் சூரியனுக்கும் பூமிக்குமான இயக்கத்தை மட்டுமே கணக்கிலெடுப்பதால் பிரபஞ்சத்தில் சூரியன் நகர்கிறது என்கிற உண்மையை இவ்விவாதத்தில் பொருட்படுத்தத் தேவையில்லை.//

ஓகை அண்ணா,ரிப்பீட்டே!

சாலிசம்பர் said...

//என்னை மடக்கி விட வேண்டும் என்று ரொம்ப முயற்சிப்பது தெரிகிறது, அதுக்குனு இப்படியா சாமி!//

வவ்வாலே சொன்னாலும் குற்றம் குற்றமே.:-))

வவ்வால் said...

மோஹன் ,

//எனக்கு அந்த ஆர்வம் இல்லை சொன்னால் நம்புவீர்களா தெரியாது!//

உங்களுக்கு மடக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து அப்படினு இல்லை, சும்மா triva nature இல் அப்படி சொல்ல வந்தீர்கள் என்று நினைத்தேன்.

ஆனால் இங்கே பலரும் அப்படி ஒரு ஆர்வத்தில் இருக்கிறார்கள் , சாதாரணமாக ஏற்படும் எழுத்துப்பிழைகளைப்பிடித்துக்கொள்வது, , வேறு அர்த்தத்தில் சொன்னதை இப்போது (சூரியக்குடும்பம் போல) அவர்கள் வேறுப்பார்வையில் அது தவறாச்சே என்று சொல்லி ஹா ..ஹா மாட்டினியா என்று பார்க்கிறார்கள், அதன் விளைவாகவே அப்படிக்கேட்டேன்.

எனக்கு தெரியும் நீங்கள் அப்படிலாம் ஆசைப்படுபவர் அல்ல என்று!

நான் கூட அப்படி சில தடவை சொல்லி இருக்கேன் சூரியனே சுற்றி வரும் என்று , அப்போது என்னை இவன் எல்லாவற்றுக்கும் ஒரு பதில் வைத்திருக்கான் என்ற ரீதியில் பார்ப்பார்கள்.

இந்த இடத்தில் ரொம்ப எளிமையான ஒன்றை சொல்லும் போது அதெல்லாம் தேவையற்றது என்று நினைத்திருந்தேன்.
-----------------------------

அனானி,
எது எப்படியோ பல காலமாய்ப்பேசி வந்ததுக்கு சட்டப்படி ஒரு அங்கீகாரம் அளித்துள்ளார், நோக்கம் எதுவோ பாராட்டுவோமே.

எல்லாவற்றையும் செய்ய வாய்ப்பு அல்லது செய்யலாம் என்ற முடிவை தீர்மானமாக எடுக்கும் போது தான் செய்ய முடியும்.

-----------------
ஜாலி ஜம்பர்,
நன்றி!
இப்போது புரிந்திருக்குமே!

Unknown said...

//உமையணன்,
நன்றி!
பதிவில் நீங்கள் சொல்வதைத்தானே சொல்லி இருக்கேன்.//

தெரியும். நீங்கள் உங்கள் இடுகையில் என்ன எழுதியிருந்தாலும் இதை மறுமொழியாக போடுவது என்று நினைத்துத்தான் உங்கள் பதிவைத் திறந்தேன். நீங்களும் அதையே சொல்லியிருப்பதால் இதை ஒரு பின்னூட்டக்கயமையாக எடுத்துக்கொள்ளுங்கள் :))))

Anonymous said...

//இந்துத்வா சாயம் பூச வந்துடுவிங்களே!//

சாயம் பூசுறது, காக்கா புடிக்கிறதெல்லாம் நமக்கு புடிக்காதுங்க. மனசில பட்டிச்சு எழுதினே.
உண்மைய அறிஞ்சு நாலு பேர் சந்தோசப் பட்டாக்க நல்லதுதானே.

//நீங்கள் சொன்ன கடவுள் எழுப்புதல் எல்லாம் வழக்கத்திற்கு வரும் முன்னரே இங்கே பொங்கல் உண்டு//

எப்போல இருந்துன்னு சொன்னீங்கன்ன நாங்களும் அறிஞ்சுக்கலாமே.

வவ்வால் said...

உமையணன்,
உங்க கடமை உணர்ச்சிக்கு தலை வணங்குகிறேன் :-))
--------------
அனானி,

அப்படியா சொல்லவே இல்லை :-))

இந்த திருபள்ளியெழுப்புதல் எப்போது இருந்து ஆரம்பித்தது, திருப்பாவை, திருவெம்பாவை பாடுவது எப்போ ஆரம்பித்தது என்று சொல்லலாமா?

அதை சொன்னா நாங்களும் அறிந்துக்கொள்வோம்ல!(அவை எல்லாம் எழுதியது ரொம்ப சமீபத்தில அதாவது பொங்கலை ஒப்பிடுகையில்)

கருப்பு said...

சமசுருகிருத மொழியினை தேவ பாசை என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கும், அவனது அடிவருடிகளுக்கும் தமிழ் புத்தாண்டைப் பற்றி அப்படி என்ன அக்கரை? அது சித்திரையில் நடந்தால் என்ன? தையில் நடந்தால் என்ன இல்லை மாசியில் நடந்தால்தான் என்ன?

நானும் தமிழன் என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவிட்டு தமிழைப் பழிக்கும் வந்தேறிக் கூட்டத்துக்கு சவுராஸ்டிர மற்றும் ஆசாரி நாய்கள் துணைபோவது இன்றைக்கு நேற்று ஒன்றும் புதிதல்ல. தமிழில் பாசுரங்கள் அத்தனை இருந்தும் இழிமொழியான தேவபாடையில் ஆண்டவனுக்கு மந்திரம் சொன்னால்தான் இனிக்கும் என்று புறம் பேசித்திரியும் பூனூல் போட்ட வெட்டிக் கூட்டத்துக்கு அடிவருடியே காலத்தைத் தள்ளியதுதானே இந்த இரண்டு சாதிகளும்!

தமிழ் வருடப் பிறப்பு எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியது தமிழகத்தின் முதுகெலும்பான தூய தமிழரான திராவிடர்கள்தான்.

நல்லவேளையாக காஞ்சி காமகேடி ஊத்தைவாயன் சுப்பிரமணியை மைசூர் மஹாராஜாவுக்கு கள்ள உறவில் பிறந்த ஜெயலலிதா கைது செய்தார். அதனால்தான் இந்த பார்ப்பனர்களும் குரு மூர்த்தியும் சோமாறி சொட்டைப்பயலும் மற்ற பார்ப்பன அடிவருடிகளும் ஊத்தைவாயனுக்கு மட்டுமே சப்போர்ட் செய்தார்கள். மறந்து ஜெயலலிதாவை அவர்கள் எதிர்க்கத் துணியவில்லை.

இதையே கருணாநிதி செய்திருந்தால் அத்தனை பன்னாடைகளும் ஒருசேர களத்தில் குதித்து இருக்கும்!

ஆடுமாடு வெட்ட தடை என்று யாரையும் கலந்து ஆலோசிக்காமல் விட்டேத்தியாக ஆணை கொண்டு வந்த ஜெயாவினை வான் அளவுக்கு புகழ்ந்த பரதேசி பன்னாடைகள்தானே இவர்கள்?

ஆரியன் நாட்டுக்குள் கள்ளத்தனமாக ஊடுருவியபோதே அசைவம்தான் சாப்பிட்டான், கள்ளுண்டான், கஞ்சா அடித்தான் என்பதற்கு போதிய ஆதாரங்களை நான் எனது பதிவிலே எழுதி வைத்திருக்கிறேன்.

கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து சித்திரைக்குப் பதிலாக மாசிதான் தமிழ் புத்தாண்டு என அறிவித்து இருந்தால் மகிழ்ந்திருக்குமோ இந்த ஆரிய அடிவருடிக் கூட்டங்கள்?

SurveySan said...

அரூமையான விளக்கங்கள்.

'சூரியன் நகர்வதில்லை'ன்னு படிச்சதும், 'ம்ம்ம்ம்மாட்னார்ர்ர்டான்னு', எனக்குத் தெரிஞ்ச அறிவாளித்தனத்த காட்லாம்னு வந்தா, எல்லாரும் ஏற்கனவே பிச்சு நூடுல்சாக்கியிருக்காங்க ;;)

புத்தாண்டு ஜனவரியில் வருவது வரவேற்க்கப்பட வேண்டியதே.

வவ்வால் said...

சர்வே,
நன்றி!, புத்தாண்டு மாற்றத்தை வரவேற்றமைக்கு!

//சூரியன் நகர்வதில்லை'ன்னு படிச்சதும், 'ம்ம்ம்ம்மாட்னார்ர்ர்டான்னு', எனக்குத் தெரிஞ்ச அறிவாளித்தனத்த காட்லாம்னு வந்தா, எல்லாரும் ஏற்கனவே பிச்சு நூடுல்சாக்கியிருக்காங்க ;;)
//

அடடா நிறையப்பேர் நான் எப்போ மாட்டுவேன்னு காத்திருக்காப்போல தெரியுதே,இனிமே உஷாராக இருக்கணும்!

சூரியன் நிலையாக இருக்குனு சொல்லாமலே நேரடியாக மகர ,கடக ரேகை நோக்கி நகர்கிறது சொல்லி இருந்தா அப்போ சூரியன் நிலையா இருக்கு எப்படி நகரும்னு கேட்டு இருப்பாங்க :-))

மொத்த பிரபஞ்சத்தையும் விளக்கி இதை சொல்லி இருந்தா ...யாருக்கு புரியும் :-))

Anonymous said...

பிரபஞ்சம் என்பதற்கு நல்ல தமிழில் 'புடவி' என்று நினைக்கிறேன். புலப்படும் அனைத்தின் தொகுதி என்பதாலோ...
நாம் இந்த சொல்லைப் பயன்படுத்தலாமே...

வவ்வால் said...

அனானி,
நன்றி!
//பிரபஞ்சம் என்பதற்கு நல்ல தமிழில் 'புடவி' என்று நினைக்கிறேன். புலப்படும் அனைத்தின் தொகுதி என்பதாலோ...
நாம் இந்த சொல்லைப் பயன்படுத்தலாமே...//

புடவி என்பது பிரபஞ்சம் என்பதற்கு இணைச்சொல் எனில் எனக்கு பயன்ப்படுத்துவதில் தயக்கமே இல்லை.

ஆனால் புடவி என்று போட்டு விட்டு பிராக்கெட்டில் பிரபஞ்சம் என்று எழுதும் நிலை இருக்கும் என்றே நினைக்கிறேன் :-))

நான் சொன்ன கருத்து மக்களுக்கு சென்று சேர்வதில் பிரச்சினை வரும், பின்னர் நான் அதனை விளக்க வேண்டி இருக்கும்( சாதாரணமாக சூரியன் பூமியைப்பார்க்கில் மையத்தில் நிலையாய் இருக்குனு சொன்னதுக்கே நான் எத்தனை விளக்கம் கொடுக்க வேண்டியது இருந்தைப்பார்த்தீர்கள் தானே "solar centric concept" என்பதை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள் நான் சொன்னதும் கேள்வியை தொடுத்தார்கள்)

எனக்கும் ஒரு புதிய தமிழ் வார்த்தையை அறிமுகம் செய்தமைக்கு நன்றி, அது சரியான சொல் , எனில் மேற்கொண்டு ஏன் அப்படி வந்தது என்பதையும் விளக்கினீர்கள் எனில் என்னை கேள்விக்கேட்கும் போது சொல்லப்பயன்படும்! ஏன் எனில் நான் அந்த சொல்லைப்பயன் படுத்தினால் எப்படி என்று என்னைக்கேட்பார்களே!

ஜமாலன் said...

விஞ்ஞானரீதியாகவும் தர்க்கரீதியாகவும் உள்ளது இந்த விளக்கம்.

குமரன் (Kumaran) said...

//1) ஏப்ரலில் வருவது தான் சரி,
2) காலம் காலமாக வருவது
3)விஞ்ஞான முறைப்படி அது சரியானது.
4) தைப்புத்தாண்டு என்பது யாருக்கும் தெரியாத வழக்கில் இல்லாத ஒன்று, திடீர் என அரசு எதேச்சதிகாரமாக அறிவித்துள்ளது//

இந்த நான்கு கருத்துகளுக்கும் தகுந்த பதில்களை வைத்திருக்கிறீர்கள் வவ்வால். பகலவனின் வடக்கு நோக்கிய பயணத்தில் தொடக்கத்தை வருடப்பிறப்பாகக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

காலம் காலமாக வருவதெல்லாம் நல்லவையும் இல்லை; புதுமைகள் எல்லாம் கெட்டதும் இல்லை. அதே போல் காலம் காலமாக வருபவை எல்லாம் கெட்டவையும் இல்லை; புதுமைகள் எல்லாமும் நல்லதும் இல்லை. நல்லதும் கெட்டதும் இரண்டிலும் உண்டு. காலம் காலமாக வருகிறது என்பதால் தமிழறிஞர்கள் புதியதோர் நாளை வருடப்பிறப்பு என்று பரிந்திரைப்பதும் அதனை அரசு ஏற்று ஆணையிடுவதும் தவறாகாது. மாற்றம் ஒன்றே மாறாதது. இது நிலைக்கும் மாற்றமா என்பதை ஒரு தனி மனிதரோ குழுவோ முடிவு செய்ய இயலாது. தமிழக மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் அந்த மாற்றம் வரும்.

மேஷம் இரிஷபம் என்று இராசிகளின் பெயர்கள் தொடங்குகிறது; சூரியன் இந்த இராசிகளில் இருக்கும் மாதங்கள் தான் சித்திரை முதலான மாதங்கள். மேஷம் தான் முதல் இராசி; அதனால் சித்திரை தான் முதல் மாதம் - என்று ஒரு வாதம் (இனி மேல் வரலாம். வந்துவிட்டதா என்று தெரியாது. பல இடங்களில் இது பேசப்படுகிறது. அனைத்தையும் படிக்கவில்லை).

பஞ்சாங்கம் சித்திரை முதற்கொண்டு தான் வருகிறது. அது குளறுபடி ஆகுமே. இது இன்னொரு வாதம்.

மேஷம், இரிஷபம் என்று தான் இராசிகளின் பெயர்கள் தொடங்க வேண்டுமா? தைக்குரிய இராசி முதல் இராசியாகக் கூடாதா? அப்படி ஆனால் தையிலிருந்து பஞ்சாங்கம் தொடங்கக் கூடாதா? என்று மாற்றுக் கேள்விகள் எனக்கு எழுகின்றன. அவை இராசிகளையும் பஞ்சாங்கங்களையும் பின்பற்றுவோர் கவலைப்பட வேண்டியவை. இந்த மாற்றுக் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதில் மாற்றம் செய்ய முடியும் என்பதே. எனக்கு இருக்கும் அரைகுறை புரிதலின் அடிப்படையில் அதனைச் சொல்கிறேன். மாற்றுவதும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வதும் இப்போது இவற்றைப் பின்பற்றும் மக்களின் விருப்பம். இவை எல்லாம் தை முதல் நாள் புத்தாண்டு என்பதற்கு எதிர்ப்பாக வைப்பதில் பொருள் இல்லை.

அனானிமஸ் அன்பர் ஒருவர் அருமையான கருத்தையும் சொல்லியிருக்கிறார். தை முதல் ஆனி வரை தேவர்களுக்குப் பகல் என்பதும் மற்ற ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவு என்பதும் புராணங்கள் சொல்வது தான். அந்த வகையிலும் தை முதல் நாள் தான் ஆண்டுத் தொடக்கம் என்றால் ஏற்புடையது தானே? ஏன் நடு இரவில் இருந்து ஆண்டு தொடங்க வேண்டும்? :-) இதில் இந்து நம்பிக்கையைத் தான் அவர் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன் வவ்வால். இதனை இந்துத்துவா என்று ஏன் நீங்கள் சொல்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை இரண்டும் வெவ்வேறு. இந்துக்கள் பெரும்பாலானோர் (குறைந்த பட்சம் தமிழகத்தில்) எம்மதமும் நல்ல மதம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவாக்கள் அப்படி இல்லை.

சரி. இப்போது உங்களை மடக்க வேண்டும் என்ற என் தணியாத ஆவலின் பேரில் தலைப்பில் இருக்கும் எழுத்துப்பிழையைச் சுட்டுகிறேன். பின்னனி என்பது சரி தானா? பின்னணி என்றல்லவா இருக்க வேண்டும்? ஆஹா. மாட்டிக்கிட்டீங்களா மாட்டிக்கிட்டீங்களா? :-)

எது புடைத்துக் கொண்டு இருக்கிறதோ, புடைத்துக் கொண்டே இருக்கிறதோ அதனை புடவி என்று அழைக்கலாம். அந்த வகையில் உலகமும் புடவி தான்; பிரபஞ்சமும் புடவி தான். பிரபஞ்சம் என்ற சொல்லுக்குப் புடவி என்ற சொல்லை மாற்றாக நன்கு பயன்படுத்தலாம்.

குமரன் (Kumaran) said...

//எது புடைத்துக் கொண்டு இருக்கிறதோ, புடைத்துக் கொண்டே இருக்கிறதோ அதனை புடவி என்று அழைக்கலாம். //

இதை இன்னொரு முறை படிக்கும் போது விவகாரமான பொருள் வருகிறது. எந்தப் பொருளை எடுத்துக் கொள்வது என்பது அவரவர் விருப்பம்.

குமரன் (Kumaran) said...

எப்படி நீங்கள் நீள நீளமாகப் பின்னூட்டம் போடுகிறீர்கள்? எனக்கு இங்கே பின்னூட்டம் போட அரை மணி நேரம் ஆகியது.

வவ்வால் said...

குமரன்,
நன்றி!

//மேஷம் இரிஷபம் என்று இராசிகளின் பெயர்கள் தொடங்குகிறது; சூரியன் இந்த இராசிகளில் இருக்கும் மாதங்கள் தான் சித்திரை முதலான மாதங்கள். மேஷம் தான் முதல் இராசி; அதனால் சித்திரை தான் முதல் மாதம் - என்று ஒரு வாதம் (இனி மேல் வரலாம். வந்துவிட்டதா என்று தெரியாது. பல இடங்களில் இது பேசப்படுகிறது. அனைத்தையும் படிக்கவில்லை).

பஞ்சாங்கம் சித்திரை முதற்கொண்டு தான் வருகிறது. அது குளறுபடி ஆகுமே. இது இன்னொரு வாதம்.

மேஷம், இரிஷபம் என்று தான் இராசிகளின் பெயர்கள் தொடங்க வேண்டுமா? தைக்குரிய இராசி முதல் இராசியாகக் கூடாதா? அப்படி ஆனால் தையிலிருந்து பஞ்சாங்கம் தொடங்கக் கூடாதா? என்று மாற்றுக் கேள்விகள் எனக்கு எழுகின்றன.//

கண்டிப்பாக பஞ்சாங்கம் மாறும் , ஏன் மாறக்கூடாதா? மாறலாம், ஆனால் மகரம், மேஷம் பெயரின் பொருள் அதன் ராசி சின்னங்கள் என்ன வென்று தேடிப்பார்த்து இருக்கிறீர்களா?

மேஷம் என்றால் ஆடு , அப்போ மகரம் என்ன , அதுவும் ஆடு தான்! ஆனால் கடல் ஆடு!ஆடு உருவம் ,மீன் வால் இருப்பது தான் மகரம்,

tropic of capricon என்பதைப்பற்றி படித்தப்போதே பார்த்து விட்டேன், யாரும் மேஷம் தான் முதல் மாதம் ராசி என்று சொல்லாததால் சொல்லாமல் விட்டு விட்டேன்.
capricornus என்றாலே கொம்புள்ள ஆடு என்பது தான் அர்த்தம். ஏதோ ஒரு ஆபத்தில் கடலில் குதித்து மீன் போல நீந்தி அந்த ஆடு தப்பித்ததால் மீன் வாலைப்பெற்றது என்பது கிரீக் புராணம்.

சித்திரையை இந்திரவிழா என்று இங்கே சொல்கிறார்கள், இந்திய இந்திரனுக்கு நிகரான ஸியஸ் என்ற கிரேக்க கடவுளின் வளர்ப்பு தாய் தான் இந்த ஆடு!

இந்திரனுடனும் தொடர்பு ஆகிவிடுகிறது மகர ராசி!

எனவே நம்ம பஞ்சாங்கம் படிப்பார்த்தாலும் ஆட்டின் ராசியில் தான் பொங்கல் , தை வருகிறது எனவே ரொம்ப எல்லாம் மாற்றம் இல்லையே!

அனானி மொட்டையாக சொன்னார் , நீங்கள் விரிவாக சொல்லி இருக்கிறீர்கள்,
தேவர்களின் நாள் வைத்து சொல்வதானாலும் உத்தராயணம் பகல் தான் அப்போ பகலில் தான் தமிழ் மாதம் பிறக்கிறது, ஆனாலும், இப்படி மாற்றம் எதுவும் செய்ய விட மாட்டார்கள், கண்டனம் சொல்வார்கள் ,ஆனால் செய்தால் அதுக்கும் ஒரு இந்துத்வ காரணம் கொண்டு வருகிறார்கள் என்றே அப்படி சொன்னேன்.

இந்த குறிப்பிட்ட ராசியில் சூரியன் கிளம்புவது தான் முதல் மாதம் என்று சொன்னது யார் ? ஏன், விடை இல்லை,அப்படி இருக்கும் போது மகர ராசியில் சூரியன் கிளம்புவதை முதல் மாதம் என்றாலும் தவறில்லையே!

*புடவி என்பது கேட்க நன்றாக இருக்கிறது, அவர் சொன்னது சரியா என்று தான் அனானியையும் கேட்டேன்.ஆனால் புடைத்துக்கொண்டிருப்பது புடவி என்கிறீர்கள், பிரபஞ்சம் புடைத்துக்கொண்டிருக்கிறதா? பிரபஞ்சம் முழுவதும் மிக அதிக வெற்றிடம் தான் இருக்கிறது அதில் இருக்கும் பருப்பொருள்கள் மிக மிக சிறிதே!

சிறிது காலத்திற்கு முன் விகடனில் மதன் கூட பிரபஞ்சம் முழுவதும் எதுவும் இல்லாத இருள் சூழ் இடம் தான் அதிகம், அதை நோக்கையில் மற்றவை தூசு அளவு தான் என்றார்.

*பின்னனி , பின்னணி என்றே வர வேண்டும், மாட்டிக்கொண்டேன் ! :-)

பொதுவாக நான் தட்டச்சு செய்து விட்டு திரும்ப சரிப்பார்ப்பதே இல்லை, அதன் பலன் இது!

* நான் என்ன அத்தனை பெரிய பின்னூட்டங்களா போடுகிறேன்,நான் கொஞ்சம் விரைவாக தட்டச்சு செய்வேன், அதே வேகத்தில் அனுப்பிவிடுவேன்!
-----------------------

ஜமாலன்,
நன்றி!

TBCD said...

வவ்வால்,

இதனால், நான் அறிந்தது.

1) இந்த அறிவிப்பு, தமிழ் பேசும் மக்களிடையே, பகுத்தறிவை ஊட்டியிருக்கிறது. இந்தளவுக்கு பகுத்து ஆரய்ந்து ஒரு முடிவுக்கு வந்தே ஆகனும் என்று எல்லாரும் முடிவுக் கட்டி விவாதிக்கிறாங்க. ரொம்ப நல்லது.

2) இரண்டாவது வேற பதிவுல, ரொம்பவும், சாதரணமா நீங்க கேட்டது, அதற்கு எங்கேயும் யாரும் பதில் சொன்னா மாதிரி தெரியலை. " லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராமர் இருந்தார் என்பதை ஏன் கேள்வி எழுப்பவில்லை" "எப்போ நகர்ந்தது, விலகனது என்று எல்லாம், பேசும் போது, இதுப் பற்றியும், ஒரு ஆரோக்கியமான விவாதத்தைப் பார்க்க ஆவல்.

மற்றபடி, நான் வழக்கம் போல, வேடிக்கைப் பார்க்கிறேன். ;)

வவ்வால் said...

tbcd,
நன்றி!

ஆமாம் தமிழ் சார்ந்து ஒரு மாற்றம்னா அது எப்படினு எல்லாருக்கும் பகுத்தறிவு ரொம்ப வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது :-))

பகுத்தறிவுவாதிகளான நாம் அவர்களுக்கு உதவுவதில் தப்பில்லையே! எல்லாம் ஒரு சேவை தான்!

//" லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராமர் இருந்தார் என்பதை ஏன் கேள்வி எழுப்பவில்லை" "எப்போ நகர்ந்தது, விலகனது என்று எல்லாம், பேசும் போது, இதுப் பற்றியும், ஒரு ஆரோக்கியமான விவாதத்தைப் பார்க்க ஆவல்.//


நீங்க வேற ஒரே பாராவில வரக்கடைசி வரிக்கு மட்டும் ஏதோ உப்பு சப்பில்லாம பதில் சொல்லிட்டு அதான் சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன சொல்லி எஸ்கேப்பாகிடுறாங்க, கடைசில எது முக்கியமா நாம நினைத்து கேட்டோமோ அதுக்கு பதிலே வரமாட்டேங்குது, ஏன் வரலைனு கேட்ட 3 ஆம் வகுப்பா படிச்சனு கேட்கிறாங்க :-))

எனவே அது போல ஆணித்தரமான இந்துத்துவ நம்பிக்களை எல்லாம் கேள்விக்கேட்கலாகாது , கேட்டாலும் பதில் வராது! :-))

//நான் வழக்கம் போல, வேடிக்கைப் பார்க்கிறேன். ;)//

நான் அவர்களிடம் மாட்டிக்கிறனா , இல்லை தப்பிக்கிறனா என்று வேடிக்கைப்பார்ப்பதில் அப்படி என்ன ஆனந்தம் :-))

இலவசக்கொத்தனார் said...

நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி - http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

இதில் புடவி பற்றி தேடிய பொழுது கிடைத்தது.

A search found 1 entries with புடவி in the entry word or full text. The results are displayed using Unicode characters for diacritics and South Asian scripts.

புடவி (p. 717) [ puṭavi ] {*}, (corruption of Sans. பிருதிவி) the earth, பூமி.

அதாவது பூமிக்கு மட்டும்தான் புடவி எனச் சொல்கிறார்கள். அதில் எதோ ஒரு கெட்ட வார்த்தையில் இருந்து மருவி வந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் புவியில் இருந்து புடவி அல்லது புடவியில் இருந்து புவி வந்ததாக நாம் வைத்துக் கொள்ளலாமே!! :))

அப்புறம் எதோ பார்த்ததைச் சொன்னேன். எனக்கு இதுக்கு மேல கேள்வி கேட்டா எனக்குத் தெரியாது. அதனால நான் ரெண்டாம் கிளாஸ் அப்படின்னு சொன்னாலும் சரிதான்!! :))

Unknown said...

வவ்வால்,

மிக மிக அருமையாக, எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி!

வேறொரு சமயத்தில் சொன்னதுதான் ... 'இவ்வளவு சின்ன வயசுல இப்பிடி ஒரு ஞானமா'

கிண்டலுக்குச் சொல்லவில்லை. சீரியஸாத்தான் சொல்றேன்!

TBCD said...

அதானே...மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இவ்வளவு ஞானமா..

நானும் வியக்கிறேன்..;)

(ஏதோ புகையிற மாதிரி இல்ல.....)

///
தஞ்சாவூரான் said...
... 'இவ்வளவு சின்ன வயசுல இப்பிடி ஒரு ஞானமா'

///

Anonymous said...

நல்ல விளக்கம்...
தைபுத்தாண்டுக்கு மேலும் வலு சேர்க்கும்.

குமரன் (Kumaran) said...

வவ்வால்

விரிந்து கொண்டே இருக்கிறதல்லவா பிரபஞ்சம். அதனைத் தான் புடைத்துக் கொண்டே இருக்கிறது என்று சொன்னேன். பலூன் புடைப்பதைப் போல். அந்தப் பொருளில் உலகத்தையும் பிரபஞ்சத்தையும் புடவி என்று சொல்லலாம்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்/படித்த கொத்ஸ். நான்காம் வகுப்பு படிக்கும் நானும் இன்னொரு இணைய அகரமுதலியைத் தான் பார்த்தேன்.

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

அங்கே 'அதிர்வன புடவிகள்' என்றும் 'வீங்குதல்' என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அந்த பொருளின் அடிப்படையில் பிரபஞ்சத்தையும் புடவி என்று சொல்லலாம்.

நீங்கள் பார்த்த அகரமுதலிக்கும் சென்று பார்த்தேன் இப்போது. அங்கே பிருதிவியில் இருந்து புடவி மருவி வந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் கெட்ட வார்த்தை என்று சொன்னதன் பொருள் புரிகிறது.

குமரன் (Kumaran) said...

வவ்வால். உங்களை மடக்க வேண்டும் என்ற என் தணியாத ஆவலுக்கு இன்னொரு தீனி கிடைத்திருக்கிறது. நேற்று தலைப்பில் இருக்கும் சொற்குற்றத்தைச் சுட்டிக் காட்டினேன். இன்று பொருட்குற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறேன்.

தைப்புத்தாண்டு பின்னணியைப் பற்றி எதிர்த்துச் சொல்வது தானே மாற்றுப் பார்வையாக இருக்க முடியும்?! நீங்கள் இங்கே பேசியது ஆதரவுப் பார்வை தானே. எப்போதும் மாற்றுப் பார்வையே எடுத்துச் சொல்லி இதையும் மாற்றுப் பார்வை என்று எண்ணிவிட்டீர்களா? :-) இல்லை தலைகீழாகத் தொங்கிக் கொண்டே பார்ப்பதால் நேர்ப்பார்வையான இது மாற்றுப் பார்வையாகத் தெரிகிறதா? :-)

எப்படியோ என்னிடம் மாட்டிக் கொள்வதற்கு இவ்வளவு வழிகளை விட்டு வைக்கிறீர்களே. அது வரை மகிழ்ச்சி. :-)

குமரன் (Kumaran) said...

//இங்கு பதில் சொல்ல வருபவர்கள், இதைச் சற்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து இட்டால் ஒரு தெளிவு பிறக்கலாம்.//

இதற்குப் பதில்

//பேசுகிறவர்கள் அனைவரும் அறிவில்லாமல் பேசுகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ? அறிவுபூர்வமாக கருத்துக்களை மறுத்து இருந்தால் நன்றாக இருக்கும். தன்னை அறிவாளி என்று சொல்வதைவிட அடுத்தவரை முட்டாள் என்று சொல்வதால் தன்னிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்று சொல்வார்கள். //

//இந்த அறிவிப்பு, தமிழ் பேசும் மக்களிடையே, பகுத்தறிவை ஊட்டியிருக்கிறது.//

இதற்கும்

//பகுத்தறிவுவாதிகளான நாம் அவர்களுக்கு உதவுவதில் தப்பில்லையே!//

இதற்கும் அந்த பதிலையே தரலாம் என்று நினைக்கிறேன். வேறு பதிவில் அந்தப் பதிலைச் சொன்னவர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன். :-)

குமரன் (Kumaran) said...

வவ்வால்

மகரம் என்றால் சுறா மீன் என்றல்லவா நினைத்திருந்தேன் வவ்வால். அதனால் தானே தைக்கு (மகரத்தில் சூரியன் இருக்கும் மாதத்திற்கு) சுறவம் என்று பெயர் சொன்னார்கள் தமிழறிஞர்கள். நீங்கள் அது ஆடு என்கிறீர்கள்? காப்ரிகான் என்றால் மீன் வாலைப் பெற்ற ஆடாக இருக்கலாம். ஆனால் மகரம் என்பது ஆடு இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்திர விழாவைப் பற்றியும் இந்திர விழா ஆட்டிற்குத் தொடர்பாகிவிடுவதைப் பற்றியும் எனக்குத் தெரியாது.

உத்திராயணம் தேவர்களின் பகல் என்று சொன்னவர் தைப்புத்தாண்டிற்கு ஆதரவான கருத்தை உடையவர் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் 'இப்படி மாற்றம் எதுவும் செய்ய விட மாட்டார்கள், கண்டனம் சொல்வார்கள் ,ஆனால் செய்தால் அதுக்கும் ஒரு இந்துத்வ காரணம் கொண்டு வருகிறார்கள்' என்று சொன்னது அவருக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். இந்துத்துவ அடிப்படையில் தையில் புத்தாண்டு வருவதை எதிர்ப்பவர்கள் இந்தக் கருத்தைத் தவிர்க்கப் பார்ப்பார்கள்; அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அதற்கு வெகு நாட்களாகும்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

ஃஃ
விரிந்து கொண்டே இருக்கிறதல்லவா பிரபஞ்சம...
...

குமரன்,

இந்த தகவல் சரியானதா? மிகப்பெரிய கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிற ஒரு கருத்தாக்கத்தை எப்படி அறுதியிட்டு பிரபஞ்சம் விரிந்துக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள்?

அண்டவெளி(பிரபஞ்சம்) விரிகிறதா? அல்லது சுருங்குகிறதா? என்பதை பற்றிய ஐன்ஸ்டீன் உடைய கட்டுரைகள்.. அப்புறம் ஸடீபன் ஹாக்கிங் எழுதிய கட்டுரைகள் கொஞ்சம் வாசியுங்கள்...

நன்றி

Anonymous said...

//தை முதல் நாள் தான் ஆண்டுத் தொடக்கம் என்றால் ஏற்புடையது தானே?//

குமரனின் விளக்கம் கண்டு மிகவும் மகிழ்ச்சி.
புராணக்கதை எல்லோரும் அறிந்திருப்பார்கள் தானே என்று நினைத்தேன்.


இந்து மதம் என்பது சமயம் ஆகும்

இந்துத்துவா கட்சி என்பது அரசியல் ஆகும்.

குமரன் (Kumaran) said...

//
ஃஃ
விரிந்து கொண்டே இருக்கிறதல்லவா பிரபஞ்சம...
...

குமரன்,

இந்த தகவல் சரியானதா? மிகப்பெரிய கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிற ஒரு கருத்தாக்கத்தை எப்படி அறுதியிட்டு பிரபஞ்சம் விரிந்துக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள்?

அண்டவெளி(பிரபஞ்சம்) விரிகிறதா? அல்லது சுருங்குகிறதா? என்பதை பற்றிய ஐன்ஸ்டீன் உடைய கட்டுரைகள்.. அப்புறம் ஸடீபன் ஹாக்கிங் எழுதிய கட்டுரைகள் கொஞ்சம் வாசியுங்கள்...

நன்றி

//

பாரி அரசு.

Discover, National Geographic போன்ற மாத இதழ்களின் சென்ற இதழ்கள் வரை தொடர்ந்து படித்ததில் நான் புரிந்து கொண்டிருப்பது அது தான். ஐன்ஸ்டீன், ஹாக்கிங்க் இவர்கள் தியரிடிகல் விஞ்ஞானிகள் என்று வகைப்படுத்தப்படுபவர்கள் என்று எண்ணுகிறேன். அவர்களின் தேற்றங்களின் படி கணிக்கப்படுவது புடவி ஒரு அளவு வரை விரிந்து பின்னர் சுருங்கத் தொடங்கும் என்பது. அந்தக் கணக்குகளின் படி தற்போது விரிந்து கொண்டிருக்கும் புடவியின் விரிதல் வேகம் குறைய வேண்டும். ஆனால் இந்த இதழ்கள் வெளிவரும் காலம் வரை அப்படிக் குறையத் தொடங்குவதாகத் தெரியவில்லை. விரிதல் வேகம் அதிகரிக்கிறது என்று தான் அவதானத்தில் (Observation) தெரிகிறது. இதையெல்லாம் படித்ததாலும் தற்போது புடவி விரிந்து கொண்டிருக்கிறது (எதிர்காலத்தில் சுருங்கத் தொடங்கலாம் என்பது தான் கணிப்பு) என்பதாலும் அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டேன். என்னுடைய வாசிப்பின் அடிப்படையான கருத்து இது. நான் அனைத்தையும் படித்தவன் இல்லை. ஆனால் தற்கால விஞ்ஞானத்தில் எதையுமே படிக்காதவனும் இல்லை. அனைத்தையும் படிக்காத காரணத்தால் நான் சொன்னதில் குறை இருக்கலாம்.

பாரி மன்னனின் கதையை புறநானூற்றுச் செய்யுள்களின் அடிப்படையில் எனது கூடல் பதிவில் ஒரு தொடர்கதையாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பாரி அரசு என்ற உங்கள் பெயரைப் பார்த்ததால் அதனைச் சொல்லத் தோன்றியது. :-)

Anonymous said...

By the way, no one celebrates tamil new year in April except few elites in the city who celebrate vishu. Tamilnadu people in village celebrate pongal only, whether it is declared or not.

Balaji Chitra Ganesan said...

உங்களுடன் என்பதிவில் நடந்த விவாதம் சரியாகப் போகவில்லை! இங்க எப்படி போகுதுன்னு பார்க்கலாம்!!

//சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனால் "summer solstice " மார்ச் 21 இல் வருவதை ஒட்டி புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாலாம் என்கிறார்கள்.(ஆனால் உண்மையில் இந்தியக்காலண்டர்கள் லுனி சோலார் காலண்டர்கள், தமிழ் காலண்டர் முழுக்க சூரியக்காலண்டர் )

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் வருடாந்திர பயணத்தின் அடிப்படையில் ஒன்று அதன் துவக்கத்தில் அல்லது இறுதியில் இருந்து ஆண்டை ஆரம்பிக்கலாமே, ஏன் இடையில். இதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.//

1. மீண்டும் March 21 என்பது 'summer solstice' என்று தவறாக எழுதியிருக்கிறீர்கள். அது Spring Equinox.

ஏற்கனவே நீஙகள் குழம்பியிருப்பதால், மீண்டும் சொல்கிறேன். Northern Hemisphereஇல்
March 21 - Spring Equinox.
June 21 - Summer Solstice.
Sept 21 - Autumn Equinox.
Dec 21 - Winter Solstice.

நீங்கள் இந்தியா Southern Hemisphereஇல் இருப்பதாக் நினைத்துக்கொள்ளவேண்டுமென்று என் பதிவில் சொன்னீர்கள்!! வேணுமென்றால் அப்படியே வைத்துக்கொள்லுங்கல். எனக்குக் கவலையில்லை! Summer/Winter என்று நீஙகள் மாற்றிப்போட்டுக்கொள்ளலாம்!

2. நாள் என்றால் என்ன? ஒரு பகலும், ஒரு இரவும் சேர்ந்து வருவது ஒரு நாள். சரியா? அப்படியான ஒரு நாளில் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும் Equinox நாட்கள் முக்கியமானவையா இல்லை பகல் குறைவாக இருக்கும் Winter Solstice (Dec 21) முக்கியமானதா? கொண்டாடங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். நாட்காட்டி தயாரிப்பவர் பகலும் இரவும் ஒன்றாக இருக்கும் (March 21) நாளிலிருந்து தொடங்குவாரா இல்லை இருப்பதிலேயே சூரிய ஒளி குறைவாக இருக்கும் Dec 21 அன்றிலிருந்து தொடங்குவாரா? புத்தாண்டு ஒரு அரைகுறை நாளிலிருந்து தொடங்கவேண்டுமா?

3. சூரியன் நகருவதில்லை பூமிதான் நகர்கிறது என்று நீஙகளே சொல்லிவிட்டீர்கள். அப்படியிருக்க சூரியனும் பூமியும் ஆடாமல் steadyஆக இருக்கும் March 21 என்னும் நாள் ஆண்டை ஆரம்பிக்க சிறந்ததா? இல்லை பூமியார் ஒரு பப்பில் சாய்ந்துகிடக்க்கும் (Dec 21) நாள் புத்தாண்டை ஆரம்பிக்க சரியானதா?

4. ஒரு பெண்டுலத்தின் (pendulum) gravitational center என்கிருக்கிறது? ஓரத்திலயா? ஆண்டு ஏன் Equinox அன்று துவங்க வேன்டுமென்று இப்போது புரிகிறதா?

5. sept 21 equinox அன்றுகூட புத்தாண்டு கொண்டாடியிருக்கலாம். ஆனால் கோடை முடிந்து விளைச்சலே ஆரம்பிக்காத நிலையில் பண்டிகை கொண்டாட அன்றோ இன்றோ மக்களிடம் பணமிருக்குமா?

6. அறுவடை நாளாகவும், சூரியன் வடதிசை செல்ல ஆரம்பிக்கும் நாளாகவும் இருக்கும் தைத்திங்கள் முதல்நாள் கொண்டாப்பட வேண்யியதே. அதற்காகத்தானே தமிழன் பொங்கலைக் கண்டுபிடித்தான்.

7. பொங்கலே கொண்டாடாமல் தமிழன் சித்திரையில் மட்டும் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்தால், அறுவடை நாளான பொங்கலன்று புத்தாண்டை மாற்றலாம் என்னும் கோரிக்கை நியாயமானதே. தமிழன் இரண்டையுமே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஒன்றை அழித்து இன்னொன்றை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியமென்ன?

8. January பற்றி உங்கள் கருத்து தவறென்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். Julian காலண்ட்ர் Julius Caesar பெயரால் இருப்பது. அவர் கிறிஸ்துவுக்கும் முன்பே இருந்து மறைந்தவர். கிறிஸ்து பிறப்பதற்கும் முன்பே அவர்கள் புத்தாண்டை சனவரியில்தான் கொண்டாடினார்கள்.

9. French அழகான நாடுதான். பொன்னுங்களப் பத்திசொல்லவே வேண்டியதில்ல!! அதுக்காக அவர்கள் செய்த ஒன்றை நாமும் செய்யவேண்டியதில்லை! வெள்ளைக்காரன் எதாவது ஒரு கவர்னர் ஆடியில் பிறந்தாரென்று நம் புத்தாண்டை ஆடிக்கு மாற்றியிருந்தால், நாம் எப்படி அதை மீண்டும் சித்திரைக்கும் கொண்டுவந்திருப்போமோ, அது மாதிரிதான் பிரஞ்சு ஏற்கனவே இருந்த சனவரிக்கு புத்தாண்டை மீண்டும் கொண்டுவந்தனர். சனவரி ஒரு Feast கொண்டாடவும் பயன்பட்டது மேலும் ஒரு காரணம் அவ்வளவே. நமக்குதான் ஏற்கனவே தையில் பொங்கல் இருக்கே!

10. புத்தாண்டு தைக்கு மாறியதால் தைக்கு ஒரு கூடுதல் பெருமையுமில்லை. பொங்கல் ஏற்கனவே தமிழரின் மிகமுக்கிய திருநாளாகத்தானே இருக்கிறது?

TBCD said...

அட அது வவ்வாலுக்கு நான் சொன்னது...

நீங்க தான் வவ்வாலா..இல்லை..வவ்வாலுக்கு நீங்க பினாமியா..

இந்த அறிவிப்பு தமிழ் மக்களிடையே பகுத்தறிவு ஊட்டியிருக்கிறது என்பதில், எங்கே யாரை, முட்டாள் என்று சொல்லியிருக்கிறது. அப்படி சொல்லப்பட்டியிருப்பதைக் கூட கண்டுப்பிடிக்க முடியாத மூடன் ஆகிவிட்டேனே.

நான் சொன்ன இரண்டு புள்ளிகளும் தொடர்புடையவை..நான் சொன்னதை இப்பொழுதும் தற்காப்பு செய்ய முடியும். ஆனா, அதுலே, நீங்க என்ன தவறு கண்டீர்கள் என்று விளக்கினால், என் போன்ற அறிவிலிகளுக்கு விளங்கும்.

புரியல்ல.தயவு செய்து விளக்கவும்.

பி.கு:-

தனிப்பட்ட ஒருவருக்கு, எந்த சூழ்நிலையிலோ போடப்பட்ட பின்னுட்டம் , எல்லா நிலைகளுக்கும் பொருந்தும் என்றால், ரெம்பிளேற் போட்டு வைச்சிக்கோங்கய்யா..நீங்களும்.


/////
குமரன் (Kumaran) said...
//இங்கு பதில் சொல்ல வருபவர்கள், இதைச் சற்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து இட்டால் ஒரு தெளிவு பிறக்கலாம்.//

இதற்குப் பதில்

//பேசுகிறவர்கள் அனைவரும் அறிவில்லாமல் பேசுகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ? அறிவுபூர்வமாக கருத்துக்களை மறுத்து இருந்தால் நன்றாக இருக்கும். தன்னை அறிவாளி என்று சொல்வதைவிட அடுத்தவரை முட்டாள் என்று சொல்வதால் தன்னிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்று சொல்வார்கள். //

//இந்த அறிவிப்பு, தமிழ் பேசும் மக்களிடையே, பகுத்தறிவை ஊட்டியிருக்கிறது.//

இதற்கும்

//பகுத்தறிவுவாதிகளான நாம் அவர்களுக்கு உதவுவதில் தப்பில்லையே!//

இதற்கும் அந்த பதிலையே தரலாம் என்று நினைக்கிறேன். வேறு பதிவில் அந்தப் பதிலைச் சொன்னவர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன். :-)

5:43 PM

//////

வவ்வால் said...

இ.கொ.
நன்றி!

நல்லவிளக்கம், எனக்கு புடவினா என்னனு தெரியாது எனவே அப்படிப்பார்த்தா நான் 3 ஆம் கிளாஸ் கூட இல்லை! :-))
--------------------------------
தஞ்சாவூரார்,
நன்றி!
//வேறொரு சமயத்தில் சொன்னதுதான் ... 'இவ்வளவு சின்ன வயசுல இப்பிடி ஒரு ஞானமா' //

3 ஆம் கிளாஸ் படிச்சா சின்ன வயசு தானே :-))
--------------------------
tbcd,
//(ஏதோ புகையிற மாதிரி இல்ல.....)//

சரியா பத்த வச்சா புகையாதுல! :-))
----------------------------
நல்லவன்,
நன்றி!

நான் கூட நல்லவன் தான் எனக்கு நானே நல்லவன், சொல்லிலும் செயலிலும் வல்லவன் :-))
--------------------------

குமரன்,
நன்றி!

நல்ல விளக்கம்,

*விரிகிறதா என்று பாரிக்கேட்டிருக்கிறார், விரிந்து பின் சுருங்கும் என்பதை நீங்களே சொல்லிட்டிங்க!

*
//தைப்புத்தாண்டு பின்னணியைப் பற்றி எதிர்த்துச் சொல்வது தானே மாற்றுப் பார்வையாக இருக்க முடியும்?! நீங்கள் இங்கே பேசியது ஆதரவுப் பார்வை தானே.//

ஆதரவாகப்பேசியவர்களும் சொல்லாத விஷயத்தின் அடிப்படையில் கொஞ்சம் வழக்கிலிருந்து மாறுபட்டு சொல்வதால் "alternative view" என்பதை மாற்று பார்வை என்றேன்.

இந்த முறை மி த எஸ்கேப்பு!:-))

தலைக்கீழாக இருந்தாலும் பார்வையில் எல்லாம் நேராகத்தான் தெரியும், என்பது விஞ்ஞானம்!(சிரசாசனம் செய்துப்பார்த்து சொல்லவும்)

* ஏதோ வார்த்தை விளையாட்டு போல இருக்கே இது!

*
//மகரம் என்றால் சுறா மீன் என்றல்லவா நினைத்திருந்தேன்//

குமரன் இந்த சுட்டியில் உள்ள ராசிகளின் சின்னங்களை பார்க்கவும்.
http://jksalescompany.com/dw/zodiacsigns.html

ஏற்கனவே மீனம் இருக்கும் போது மீண்டும் ஏன் சுறா? ஆனால் மகரம் என்றால் மீன் என்று தமிழில் ஒரு பொருள் உண்டு என்பதையும் பார்த்தேன். ஆனால் நாம் ஆங்கில ராசிகளுக்கான சின்னத்தையே தானே பயன்படுத்துகிறோம், அப்படி எனில் அதன் பொருளில் உள்ளதையும் எடுத்துக்கொள்ளலாமே.

*
//ஆனால் செய்தால் அதுக்கும் ஒரு இந்துத்வ காரணம் கொண்டு வருகிறார்கள்' என்று சொன்னது அவருக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன்.//

அவர்களையும் அரவணைத்து செல்ல அப்படியும் ஒரு காரணம் இருக்கு என்பதை மிக சுற்றி வளைத்தே சொல்லவேண்டியது இருக்கிறது.

ஆனால் வேண்டாம் என்று சொல்வார்கள் வேறு வழி இல்லை மாற்றம் தவிர்க்க முடியாதது என்றவுடன், இதுவும் அது தான் என்று சொல்வதை சொல்ல வந்தேன்!

தமிழ் கடவுள் முருகன் எப்படி , சிவன், பார்வதிக்கு மகன் ஆனானோ, அதே போல தான் இதுவும்! :-))
தமிழ்கடவுளின் தாய் தந்தையர் தமிழ் கடவுள் என்று போற்றப்படுவதில்லை என்ன ஒரு விசித்திரம் :-))

காரணம் இப்படி எல்லாவற்றையும் உள் இழுக்கும் இந்துத்துவ பசி!

------------------------
பாரி,
நன்றி!
//மிகப்பெரிய கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிற ஒரு கருத்தாக்கத்தை எப்படி அறுதியிட்டு பிரபஞ்சம் விரிந்துக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள்?
//

குமரன் உங்களுக்கு பதில் அளித்துவிட்டாலும் என் சார்பாக ஒரு விளக்கம்.

பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டு இருக்கிறது, ஆனால் ஒரு கட்டத்தில் அதன் பருப்பொருள்களின் பொருண்மையால் ஏற்படும் ஈர்ப்பு விசை மீண்டும் சுருங்க வைத்து ஒரு புள்ளியில் குவிக்கும் அப்போது எதுவுமே இல்லாத நிலை ஏற்படும் இதனை சிங்குலாரிட்டி என்கிறார்கள்.

பின்னர் அளவுக்கு அதிகமான நிறை ஒரே புள்ளியில் குவிவதால் ஏற்படும் அழுத்தத்தால் வெடிக்கும் , மீண்டும் யுக பெரு வெடிப்பு.

பிரபஞ்சம் விரிவடைவதை நிறமாலையில் ஏற்படும் சிவப்பு இடப்பெயர்ச்சி விளைவால் நிறுபிக்கப்பட்டுள்ளது.

எந்த புள்ளி வரையில் பிரபஞ்சம் விரிவடையும் ,பின்னர் சுருங்கும் என்று அதன் எல்லையை கண்டு சொன்னவர் அமெரிக்க வாழ் தமிழரான எஸ்.சந்திரசேகர் ஆவார். அதற்கு சந்திராஸ் எல்லை என்றே பெயர்.இவருக்கு நோபெல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் பெயரால் ஹப்பிள் என்ற விண்வெளி தொலை நோக்கிப்போல ஒன்றை அமெரிக்க நிறுவியுள்ளது.இவர் சர்.சி.வி.ராமனின் பேரன் முறை ஆவார்.
----------------------------
அனானி,

அறிந்திருப்பார்கள், சரி , ஆனால் இப்படி எல்லாவற்றுக்கும் ஒன்றை செயல்படுத்தியப்பின் , அதற்கு ஒரு காரணம் இந்துத்துவம் சார்ந்து சொல்வது தான் அரசியல்!

//இந்து மதம் என்பது சமயம் ஆகும் //

இல்லை, சமயம் என்பது மதத்தின் உட்பிரிவு, உம். வைணவம், சைவம் போன்றவை சமயம்.

சைவ சமயக்குறவர்கள் என்று அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோரை சொல்வார்களே!
----------------------
அனானி,
//Tamilnadu people in village celebrate pongal only, whether it is declared or not.//

ஆம் , அந்த வகையில் அனைவரும் தமிழ் புத்தாண்டு கொண்டாட வைத்துவிட்டது அரசு!எனவே யாரும் மறக்க மாட்டார்கள்!
----------------------

வவ்வால் said...

பாலாஜி,

உங்கள்ப்பதிவிலும் சரியாகத்தான் சென்றது,ஆனால் நீங்கள் சொல்வதை நீங்களே புரிந்துக்கொள்ளவில்லை அது தான் அப்படி தெரிகிறது :-))

ஒரு சிலவார்த்தைகள் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்ற அர்த்தத்தில் முழுசாக சொல்லாமல் தொட்டு செல்லும் போது , நீங்கள் எடுத்ததும் தவறு என்று புலிப்பாய்ச்சல் பாய்ந்ததால் அப்படி ஆச்சு!

//1. மீண்டும் March 21 என்பது 'summer solstice' என்று தவறாக எழுதியிருக்கிறீர்கள். அது Spring Equinox.//

விக்கியில் இருந்து எடுக்கப்பட்டது,

"There is either an equinox (autumn and spring) or a solstice (summer and winter) on approximately the 21st day of the last month of every quarter of the calendar year."

எனவே "solstice" எனவும் சொல்லலாம் தானே!

தென்பகுதியில் இருக்கிறது என்று சொல்லவில்லை, அன்மையில் என்று சொன்னேன், மேலும் தெற்கிலிருந்து நம்மை நோக்கி வருகிறது சூரியன் என்பதை சொல்லவும் அப்படி சொல்லி இருந்தேன்.

//நாட்காட்டி தயாரிப்பவர் பகலும் இரவும் ஒன்றாக இருக்கும் (March 21) நாளிலிருந்து தொடங்குவாரா இல்லை இருப்பதிலேயே சூரிய ஒளி குறைவாக இருக்கும் Dec 21 அன்றிலிருந்து தொடங்குவாரா? புத்தாண்டு ஒரு அரைகுறை நாளிலிருந்து தொடங்கவேண்டுமா?//

கோயெம்பேட்டில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து செல்கிறது , அது தி,நகர் வழி செல்கிறது, தி.நகரில் அதிகம் கடைகள் இருப்பதால் அதனையே அப்பேருந்தின் துவக்க இடம் எனலாமா?

சூரியனின் பயண துவக்கம் கடக ரேகை,மர்றும் மகர ரேகையில் என இரண்டு புள்ளிகளுக்கு இடையே தான் , ஏதோ ஒரு புள்ளியில் தான் ஆண்டையும் துவக்க வேண்டும்.மேலும் மந்தமான நிலையில் இருந்து சூரியன் உச்சமான வெப்பம் போகும் நிலைக்கு ஜனவரி தான் சரியாக வரும். ஒரு வளர்ச்சி நிலையைக்காட்டும், எத்தனை பல சாலி மனிதனும் குழந்தைப்பருவத்தில் தவழ்ந்து தான் இருப்பான், எனவே டிசம்பரில் இருட்டாக இருக்கும், குளிராக இருக்கும் எனவே ஜனவரியில் புத்தாண்டு வேண்டாம் என்பதா? இருளில் இருந்து வெளிச்சம் காணும் நாளே புத்தாண்டு!

//3. சூரியன் நகருவதில்லை பூமிதான் நகர்கிறது என்று நீஙகளே சொல்லிவிட்டீர்கள். அப்படியிருக்க சூரியனும் பூமியும் ஆடாமல் steadyஆக இருக்கும் March 21 என்னும் நாள் ஆண்டை ஆரம்பிக்க சிறந்ததா? இல்லை பூமியார் ஒரு பப்பில் சாய்ந்துகிடக்க்கும் (Dec 21) நாள் புத்தாண்டை ஆரம்பிக்க சரியானதா?

சூரியனின் அடிப்படையில் காலண்டர் அமைக்கப்படும் போது சூரியன் துவக்க கோடாக கொண்டு தனது ஆண்டு ஓட்டத்தை துவங்குவது எங்கு?

மகர அல்லது கடக ரேகையில் தானே,

கடக ரேகை நாளை வைத்தால் அது கொளுத்தும் கோடையாகி விடும்.


//4. ஒரு பெண்டுலத்தின் (pendulum) gravitational center என்கிருக்கிறது? ஓரத்திலயா? ஆண்டு ஏன் Equinox அன்று துவங்க வேன்டுமென்று இப்போது புரிகிறதா?//

விசைக்கும் துவக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

மேலும் டிசம்பர் -21 அன்று தென் துருவம் முழுவதும் 24 மணி நேரமும் சூரியன் இருக்கும்(அதே போல ஜூனில் வட துருவம்)

எனவே பூமியின் ஒரு உச்சியில் முழு விடியல், அது பின்னர் உலகம் முழுவதும் ஒளி பரவட்டம் என்று பாசிட்டிவ் எண்ணம் உருவாக்கும் அல்லவா?

//தமிழன் இரண்டையுமே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஒன்றை அழித்து இன்னொன்றை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியமென்ன? //

தனக்கான ஒன்றாக இல்லாததை பிழையாக கொண்டாடுவது ஏன்,பிழைகளை திருத்துவதும் இயல்பு தானே!

//January பற்றி உங்கள் கருத்து தவறென்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். Julian காலண்ட்ர் Julius Caesar பெயரால் இருப்பது. அவர் கிறிஸ்துவுக்கும் முன்பே இருந்து மறைந்தவர். கிறிஸ்து பிறப்பதற்கும் முன்பே அவர்கள் புத்தாண்டை சனவரியில்தான் கொண்டாடினார்கள்.//

நான் என்ன பிழையாக சொல்லிவிட்டேன், அதான் நானே தெளிவாக ஜூலியஸ் சீசர்லாம் சொன்ன பிறகும், அது என்ன தற்காலம் என்ற சொல்வார்கள்.

நான் சொன்னது ஏப்ரல் என்பதை அதிகாரப்பூர்வமாக மாற்றியதை, பிரான்ஸ் என்று இங்கே கொடுத்துள்ளேன்.

இப்போது கூட வெகு காலம் முன்னரே அரசு நாட்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டு வந்து விட்டது சட்டப்போட்டது இப்போது தானே.

//புத்தாண்டு தைக்கு மாறியதால் தைக்கு ஒரு கூடுதல் பெருமையுமில்லை. பொங்கல் ஏற்கனவே தமிழரின் மிகமுக்கிய திருநாளாகத்தானே இருக்கிறது?//

ஒரே நேரத்தில் இரண்டு சந்தோஷம் வரக்கூடாதா? புத்தாண்டு அன்று உங்கள் பிறந்த நாள் வந்தால் ஏன் தான் இன்னிக்கு போய் பிறந்தோமோ , ஒரே நாளில் இரண்டையும் கொண்டாட வேண்டி இருக்குனு வருத்தப்படுவிங்களா? :-))

உண்மையில் இப்படி எக்கசக்கமான பண்டிகைகள், அது இது என்று வந்து மக்களை அதிகம் படுத்துகிறது நம் நாட்டு வழக்கம். எனவே குறைந்தால் நட்டம் இல்லை.

---------------------------------
tbcd,

புரியல தயவு செய்து விளக்கவும்! :-))

திவாண்ணா said...

//விக்கியில் இருந்து எடுக்கப்பட்டது,

"There is either an equinox (autumn and spring) or a solstice (summer and winter) on approximately the 21st day of the last month of every quarter of the calendar year."

எனவே "solstice" எனவும் சொல்லலாம் தானே!//

இல்லை வவ்வால்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சோல்டைஸ் அல்லது ஈக்வினாக்ஸ் வருகிறது என்று சொல்லப்படுகிறது.
இரவு பகல் சமமாக இருப்பதுதான் ஈக்வினாக்ஸ்
அன்று சூரியன் வடக்கு பக்கமும் இல்லாமல் தெற்கு பக்கமும் இல்லாமல் நடுநிலை வகிக்கிறான். வாதப்படி பார்த்தால் இதுவும் பொருத்தம்தானே? தை பிறந்தும் காலை பொழுது விடிதல் சமநிலைக்கு வர இரண்டு மாதங்கள் மேல் ஆகின்றது.

நக்ஷத்திரங்களின் கூட்டத்தை பார்த்து கற்பனை செய்து நம் முன்னோர்களும் கிரேக்கர்களும் மேற்கத்தியர்கலும் உருவங்களை கற்பனை செய்தார்கள். அது கற்பனைதான். நிச்சயம் அல்ல. கிரேக்கர் நினைத்தபடிதான் நாம் நினைக்க வேண்டும் என்று இல்லையே!

Anonymous said...

தை இரண்டு அன்று புத்தாண்டு வருவதாக மறைமலை அடிகள், திரு.விக, கி.ஆ.பெ எல்லாம் இதுக்குறித்து பல தமிழ் ஆய்வுகள் செய்து தெரிவித்துள்ளார்கள்,

veeLaaLa arinjarkaL enRu seerththuch chollavum.. athuthaan sari.

வவ்வால் said...

திவா,
ஈக்னாக்ஸ் என்று தான் பாலாஜியின் பதிவிலும் சொல்லி இருப்பேன், எனவே மார்ச் -21 ஈக்னாக்ஸ் வராது என்று சொல்லவில்லை, பின்னர் இப்பதிவு எழுதும் போது டிசம்பர் 21 இல் புத்தாண்டு வருவது போல மார்ச்சில் வரவும் இப்படி ஒரு காரணம் இருக்கலாம் என்று வைத்து கொஞ்சம் மாற்றி இருக்கிறேன், அவ்வளவே, நீங்கள் எனது மற்றப்பின்னூட்டங்களைப்பார்க்கவில்லை, போலும், அதே போல டிசம்பர் 21 ஒரு நாள் மாற 3000 வருடம் ஆகும் என்று பெனாத்தல் சுரேஷ் பதிவில் வந்து அடித்து சொன்னார் ஒரு அனானி , அதை வைத்துக்கொண்டு ஆகா மாட்டிக்கொண்டார் என்று எல்லாம் சொன்னிங்க, ஆனால் நான் சொன்னது காலண்டர் ரீதியான மாற்றங்களை,காலண்டர் கணிப்பவர்கள் எப்படி நாட்களை மாற்றி சொல்லி வைத்தார்கள் என்பது, வானியல் ரீதியாக அல்ல , இதில் இன்னும் ஒரு காமெடி அப்படி ஒரு நாள் மாற 3000 வருடங்கள் அல்ல 70 வருடங்கள் தான் ஆகிறது என்று விக்கியில் இருக்கு. அதை விட ஈக்னாக்ஸ் மாற 4 வருடங்களே போதும் என்றும் உள்ளது.

// * The instances of the equinoxes are not fixed but fall about six hours later every year, amounting to one full day in four years, but then they are reset by the occurrence of a leap year. The Gregorian calendar is designed to follow the seasons as accurately as is practical. It is good, but not perfect. Also see: Gregorian calendar#Calendar seasonal error.

* Smaller irregularities in the times are caused by perturbations of the Moon and the other planets.

* Currently the most common equinox and solstice dates are 20 March, 21 June, 22 September and 21 December, the four year average will slowly shift to earlier times in the years to come. This shift is a full day in about 70 years (largely to be compensated by the century leap year rules of the Gregorian calendar). But that also means that as many years ago the dates of 21 March, 22 June, 23 September and 22 December were much more common, as older books teach and older people still remember.//

நான் வழக்கமாக சொல்வதை சொல்லிவிட்டு தான் பின்னர் மாற்றி சொல்லி இருக்கிறேன், அதுக்கே ஆஹா அது எப்படினு கேட்கும் நீங்கள் , அந்த அனானிப்போன்றவர்கள் அள்ளிவிட்ட தகவல்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றது எப்படி?
------------------------
அனானி,
இது விவாதத்திற்கு தேவையற்றது.பூர்வீக தமிழர்கள் தானே அவர்களும்!

Anonymous said...

// Currently the most common equinox and solstice dates are 20 March, 21 June, 22 September and 21 December, the four year average will slowly shift to earlier times in the years to come. This shift is a full day in about 70 years (largely to be compensated by the century leap year rules of the Gregorian calendar). But that also means that as many years ago the dates of 21 March, 22 June, 23 September and 22 December were much more common, as older books teach and older people still remember.//

இதெல்லாம் ரொம்ப புரிஞ்சுதான் நம்ம அரசியல்வாதிகள் முடிவெடுகிறார்களாக்கும்!

ச்சும்மா லூஸ்ல உடுங்க. அடுத்த ஆட்சியில் இந்த முடிவு மறுபடியும் மாறும். அதுவரைக்கும் தமாஸ ரசிங்க, ஆராய்ச்சி பண்ணாதீங்க..!

ராஜ நடராஜன் said...

நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லலாம்ன்னு வந்தா பதிவிலும்,பின்னூட்டத்திலும் எல்லாரும் அடிச்சு ஆடி பட்டையக் கிளப்பிட்டு இருக்காங்க.எனவே மீண்டும் ஒரு சிறந்த பதிவுன்னு சொல்லிகிட்டு பார்வையாளனாக விசில் அடிக்கிறேன்.

RATHNESH said...

எவ்ளோ புதிய செய்திகள். அப்பப்பா! எங்கெங்கோ புரட்டி எவ்வளவோ நேரம் செலவழித்து அறிந்து கொள்ள முடிகிற செய்திகளை ஒரே பதிவில் அள்ளித் தந்திருக்கும் வவ்வாலுக்கும், பின்னூட்டங்களில் கூடுதல் தகவல்கள் தந்துள்ள அனைவருக்கும் நோகாமல் நுங்கு தின்ற ஏப்பத்துடன் (நுங்கு தின்றால் ஏப்பம் வருமா என்பது குறித்துக் கூட வவ்வால் எழுதுவார்) நன்றி.

ஒரே ஒரு விஷயம் தான் புரியவில்லை. எங்கோ புடவி (பிரபஞ்சம்) யில் நிலையாக இருக்கும் சூரியனைப் பர்றியும் அதை மையமாக வைத்து வருடப் பிறப்பின் தேதி என்னவாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஆய்வுகளும் சரிதான்; இங்கே தமிழகத்தில் 2011-ல் ஒரு சூரியப் பெயர்ச்சி நிகழுமே; அப்போது வருடப் பிறப்பும் இடம் பெயர வாய்ப்பு இருக்குமா என்கிற ஆராய்ச்சி நடைபெறுகிறதா?

வவ்வால் said...

அனானி,
//ச்சும்மா லூஸ்ல உடுங்க. அடுத்த ஆட்சியில் இந்த முடிவு மறுபடியும் மாறும். அதுவரைக்கும் தமாஸ ரசிங்க, ஆராய்ச்சி பண்ணாதீங்க..!//

சும்மா இருப்பதே சுகம்னு இருக்கலாம் தான், ஆனால் அந்த சுகத்தை விட , உழைப்பது இன்னும் அதிக சுகம் தானே, அவ்வப்போது நம்மக்குள்ள தூங்கிட்டு இருக்க தமிழ் சிங்கத்தை தட்டி எழுப்பிடுறாங்க :-))

ஆட்சிகள் மாறலாம் , காட்சிகள் மாறலாம், ஆனால் உண்மை என்றும் உறங்காது!
--------------------------------

நட்டு,
நன்றி!
//எனவே மீண்டும் ஒரு சிறந்த பதிவுன்னு சொல்லிகிட்டு பார்வையாளனாக விசில் அடிக்கிறேன்.//

விசிலடிப்போம் கொண்டாடுவோம் :-))
----------------------------------
ரத்னேஷ்,
நன்றி!
சிலம்பாட்டத்தை பார்த்து தலை சுற்றிப்போய் ஜோடா குடிச்சிங்களோ :-))

//(நுங்கு தின்றால் ஏப்பம் வருமா என்பது குறித்துக் கூட வவ்வால் எழுதுவார்) நன்றி.//

எதையும் லபக்குனு முழுங்கினா தான் ஏப்பம் வரும், நல்லா பொறுமையா மென்று திண்ணா வராதாம்! :-))

//தமிழகத்தில் 2011-ல் ஒரு சூரியப் பெயர்ச்சி நிகழுமே; அப்போது வருடப் பிறப்பும் இடம் பெயர வாய்ப்பு இருக்குமா என்கிற ஆராய்ச்சி நடைபெறுகிறதா?//

சூரியனை இலை மறைக்குமா என்பதை பொருத்தே அது அமையும். புதுசா வியாபாரம் தொடங்குற எல்லாருமே 2011 எனக்குத்தான்னு சொல்லிக்கிறாங்க அது வேற தனி(சோக, காமெடி)கதை :-))

ezhil arasu said...

நீங்கள் கொடுத்த விளக்கங்கள் மாற்று கருத்துகொண்டுள்ளோரையும் நிச்சயம் சமாதானப்படுத்தும்.தர்க்கரீதியான புள்ளிவிபரங்கள்.
தமிழன்னையின் தவப் புதல்வர் என உங்களைப் பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள்.
தொடர்க உமது தமிழ்த்தொண்டு.

வவ்வால் said...

எழில் அரசு,

வாங்க வணக்கம்,நன்றி!

ஆகா எப்போ இந்த பின்னூட்டம் போட்டிங்கனே தெரியல, இது மீள்ப்பதிவா இப்போ போடும் போது தான் பார்க்கிறேன்.

ஆனாலும் நீங்க என்னை ரொம்ப புகழ்றிங்க :-)) (வவ்வாலுக்கு புகழ்சிக்கு பிடிக்காதாம் ரொம்ப ஓவரா இருக்கேனு சொல்வது கேட்குது) நன்றி!

Unknown said...

வணக்கம் வௌவால்,
உங்களடைய மீள் பதிவைப் படித்தேன்.
மிக அற்புதமாக மற்றும் சிம்பிளாகவும் எழுதியிருக்கிறிர்கள்.
நன்றி.
இதை தமிழக முதல்வரும் பார்வைக்கு அனுப்பி வைக்கலாம்.

Unknown said...

முதல்வரின் பார்வைக்கு என்பது பிழையாகிப் போனது.

அவரது பிழையோடு ஒப்பிடும் பொது இது சிறு பிழைதான்..

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! நமது நாட்டில் எல்லாமே அரசியலாகப் போய் விட்டது. தமிழ்ப் புத்தாண்டு விஷயத்தில் ஆரியர் – தமிழர் என்ற அரசியல் உள்ளே நுழைந்து விட்டது. அரசியலில் யாரும் பழசை நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. இப்போதைய கதை என்ன என்றுதான் கேட்பார்கள். சென்ற கலைஞர் ஆட்சியின் போது தாங்கள் தங்கள் வலைப்பதிவில் குறிப்பிட்ட,

//எனவே இந்த அறிவிப்பு ஒன்றும் திடீர் புரட்சி அல்ல, பலகாலமாக இருந்து வந்த தமிழறிஞர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது அரசு.//

என்ற கருத்தினை இப்போது ஆட்சியில் உள்ள, ஜெயலலிதா எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார் என்று சொல்ல முடியாது. மீள் பதிவு என்றாலும் நினைவூட்டல் தவறில்லை. நல்ல பதிவு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Anonymous said...

வெளவால், உங்கள் பதிவுகள் பலவற்றில் பிழைகள் காணப்படுகின்றன.

மறுமொழியிடும் தமிழனின் நிலை அதைவிடக் கேவலம் என்பது பெரும் சோகம்.