Thursday, December 01, 2011

வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!



வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!


பதிவுலக நண்பர் சூர்யஜீவா வால்மார்ட், கம்மோடிட்டி மார்க்கெட் பற்றி ஒரு பதிவினைப்போட்டு அதன் வாயிலாக சில கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பி பதில் அளிக்குமாறு கேட்டு இருந்தார். அவர் பதிவில் விரிவான பின்னூட்டம் இட்டு இருந்தாலும், சரியாக விளக்கினேனா என தெரியவில்லை, எனவே இன்னும் கொஞ்சம் விரிவாக அதனைப்பதிவாக இங்கே போட்டுள்ளேன்.

ஏதோ என்னால் முடிந்த அளவு சொல்லி இருக்கேன், இது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல, முயன்றால் இணையம் கற்பிக்கும்.

கம்மோடிடி மற்றும் சில்லரை வர்த்தகம் சேர்ந்து செயற்கை தட்டுப்பாடு:

ஒன்று:

//ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.

பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..//

சூர்யா,

கேள்வி எல்லாம் ஹைப்போதெடிகலாக இருக்கு, இணையத்தில் தேடிப்பார்த்தாலே கிடைக்கும் பதில்கள். தினம் விதம் விதமாக பதிவுப்போடுறவங்க கூட பொருளாதாரம் பத்தி படிக்க பயந்துக்கிட்டு தலைசுத்தும் என ஓடுவது ஏன்,அப்போ உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படினு பதிவு போடுறது மட்டும் தான் அவங்க  செய்வாங்களா :-))

சரி எனக்கு தெரிஞ்சத வைத்து ஒரு ஜல்லி அடிக்கிறேன் புரிஞ்சா உங்கப்பாடு!

கம்மோட்டி, ல வாங்க விற்க மொத்தமாக பொருட்களை வெளிநாட்டினர் வாங்க என தற்போது எந்த தடையும் இல்லை, நீங்க ,அதுக்கு அனுமதிக்கொடுத்தப்ப இந்த கேள்விக்கேட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும், இப்போ அனுமதி கொடுத்தது சில்லரை வணிகம்,

மொத்தமாக பொருட்கள் ( அரிசி பட்டியலில் இருக்கா) வாங்கும் வசதி முன்னரே இருந்தும் , ஏன் யாரும் வாங்கி முடக்கவில்லை?. மேலும் கம்மோடிடி பட்டியலில் சேர்க்க நீக்க முடியும். எனவே எப்போது பாதகமான சூழல் வருதோ அப்போ நிக்கி பின்னர் நிலமை சீரானதும் சேர்க்கலாம்.

சரி நீங்க லேட்டாக கேட்டாலும் என்ன ஆகும்னு பார்ப்போம்.

யூக வணிகம் என்பது பங்கு வணிகம் என்று மட்டும் இப்ப வச்சுக்குவோம்,இதுல டிமாண்ட், சப்ளை , முதலீடு எப்படி இருக்கும் என பார்ப்போம்,

முதலீடு செய்ய capital asset pricing model என்பதை பயன் படுத்துவாங்க, ஒரு கம்பெனியின் செயல்பாடு 10% உயர்ந்ததாக காட்டினால் அதாவது லாபம் 10% என கணக்கு காட்டுவதாக சொல்லலாம்,அதன் பங்கு மதிப்பு சந்தையில் 15% ஏறும், எனவே அதுக்கு ஏற்ப டிமாண்ட் ஏற்படும்.இது ஒரு விதி

அதே போல ஒரு கம்பெனி 10% நட்டம் ஆச்சுனா பங்கு விலையில் 15% இறங்கவும் செய்யும்.

இதனால் ஒரு நிறுவனம் லாபகரமாக இருக்கும் போது விரைவாக பங்கு சந்தையில் உயரும், நட்டம் வர்ம்பொது விரைவாக சரியும்.

இந்த இடத்தில் ஒரு கம்பெனி பங்கு என்பது ஒன்றே அதே போல இன்னொரு மாற்று இல்லை ,இப்போது ஒரு நிறுவனமே பாலோவ் ஆன் பப்ளிக் ஆஃபர் அறிவித்தால் அவர்களது முந்தய அதே வகை பங்கின் விலை ஏறுவது நின்றுவிடும்.

எனவே கம்மோடிடிட்டியில் விலை ஏறும் பண்டம் என நினைத்து அதிகம் முடக்கினால் அதே பண்டம் வெளி சந்தையில் புதிய வரவாக வரும் போது விலை சரிந்து நட்டம் உருவாக்கும்.

ஏன் எனில் ஒரு பண்டம் என்பது தொடர்ச்சியாக உற்பத்தி ஆகிக்கொண்டே இருப்பது, ஆனால் பங்கின் அளவு ஒரு நிறுவனத்தால் நிலை நிறுத்தக்கூடியது.எனவே கம்மோடிட்டி யூக வணிகத்தில் மிக அதிகம் முடக்கி செயற்கை தட்டுப்பாடினை நீண்ட நாள் உருவாக்க முடியாது.

  ஆனால் பங்கு சந்தையில் காம்ளிமெண்ட் இருக்கும். இது வேறு,

காம்ப்ளீமென்ட் என்பது ஒரு ஆட்டொ மொபல் பங்கு ஏறினா, இன்னொரு ஆட்டோ மொபைல் கம்பெனி பங்கு ஏறுவது போல.எனவே தான் பங்கு வர்த்தகத்தில் பல தரப்பட்ட பங்கு வாங்கி வைப்பாங்க (portfolio management)ஒரே டைப் செக்டார்ல வாங்கினா கவிழ்த்துவிடும்.

இப்போ அரிசி விலை ஏறினா அதே போல பெரும்பான்மை உணவான கோதுமை விலை ஏறும்னு சொல்ல முடியாது. அதே போல வெங்காயம் விலை ஏறினா பிளைன் ஆம்லெட் சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க, அல்லது முட்டைக்கோஸ் கூட கலந்து வெங்காயம் கம்மி பண்ணிடுவாங்க, இப்படி உணவுப்பொருட்களில் உடனே மாற்றுக்கு போய்டுவாங்க.

இப்போ அரிசிக்கு வருவோம், அதன் விலை நுகர்வோர் சந்தைல 10% ஏறினா, கம்மோட்டி மார்க்கெட்ல 15% ஏறுது வைத்துக்கொள்வோம், அப்படியே விலை 10% இறங்கினா , 15% கம்மோடிட்டில இறங்கிடும்.

law of demand ஐ பார்ப்போம், விலை ஏறினா தேவை குறையும், விலையும், தேவையும் எதிர்விகித தொடர்புடையவை. pricing elasticity of demant (PED) என்ற சதவிகிதம் எப்போதும் எதிர் மறையாகவே(-) இருக்கும்.

உ.ம்: பஸ் டிக்கெட் விலை ஏறினா அடிக்கடி பயணம் செய்வதை மக்கள் குறைத்துக்கொள்வது போல.

பால் விலை ஏறினா ஒரு லிட்டருக்கு பதில் அரை லிட்டர் வாங்கி கொஞ்சம் தாராளமாக தண்ணி ஊத்தி காபிக்கு பதில் டீ யாக குடிப்பது.

giffens goods: அப்படி னு ஒன்னு இருக்கு இது தேவை விதிக்கு எதிரானது, விலை ஏறினாலும் தேவைக்குறையாது, ஆனால் அந்த பொருளுக்கு வேறு மாற்றே substituion goods இருக்க கூடாது.

கிப்பன்ஸ் குட் என்பது ஒரு கடை நிலை , மாற்று இல்லாத மலிவான ஒன்றாக இருக்க வேண்டும், பெரும்பாலும் அரிசி, உணவு ஆகியவற்றை சொல்வார்கள்.விலை ஏறினாலும் வாங்குவதை நிறுத்த முடியாது. ஆனால் விலைக்கம்மியா இருக்குனு அதிகமாக சாப்பிடவும் மாட்டார்கள்.

ஆனாலும் இந்தியா என்பது பல தரப்பட்ட மக்கள் , தட்ப,வெப்பம், உணவுப்பழக்க வழக்கம் கொண்ட நாடு, எனவே இங்கே ஒரே உணவு தான் சாப்பிடுவேன்னு யாரும் அடம் பிடிப்பதில்லை,substituion goods பயன்ப்படுத்துவார்கள். அரிசி இல்லையா கோதுமை , அதுவும் இல்லையா மைதா, அதுவும் இல்லையா கம்பு, சோளம் , கப்பக்கிழங்கு என போவார்கள்.எனவே கிப்பன்ஸ் குட்ஸ் தியரி கூட அடி வாங்கும் இந்தியாவில்.

இப்படி மக்கள் உணவுக்கு மாற்றுப்போவதால் செயற்கையாக நீண்ட காலத்துக்கு விலை ஏற்றி வைக்க முடியாது, தேக்கி வைத்தது போதும்னு வெளில விட்டுவிடுவார்கள், அரிசி விலை கீழ வரும்.

மேலும் அரிசி போன்ற உணவுப்பொருட்கள் சீசனுக்கு சீசன் விளைவிப்பார்கள் , மூன்று மாதத்திற்கு ஒரு நடவு, அறுவடை என புதிய விளைப்பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருக்கும். ஓவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு காலம், உ.ம் தமிழ்நாட்டில் அறுவடை முடிந்து சில காலம் பின்னர் கர்நாடகாவில் அறுவடை நடக்கும், இப்படியே ஆந்திராவிலும், எனவே தொடர்ச்சியாக பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருப்பதால் அனைத்தையும் முடக்குவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.

அப்படி வெளிசந்தைல அரிசி விலை கீழ வரும் போது , கம்மோட்டில அரிசி வைத்திருந்தா அதிகமா நட்டம் ஆகிடும்.காரணம் capital asset pricing model .

ரியல் மார்க்கெட்டிலும், கம்மோட்டிலவும் ஒரே ஆளே அதிகம் பணம் முதலீடு செய்திருந்தால் நட்டம் தான் வரும். ரியல் மார்க்கெட்ல பொருளை மக்கள் வாங்கிடுவாங்க, கம்மோட்டில என்ன பொது மக்களா வாங்குறாங்க அத இன்னொரு டிரேடர் தான் வாங்கணூம், எனவே அதிகமான பங்குகளை ஒரே நேரத்தில டிஸ்போஸ் செய்ய முடியாது, எனவே விற்பனை ஆகாம நட்டம் ஆகிடும் முடக்கி வைத்தவனுக்கு, ஏதோ ஒரு இடத்தில் மட்டும் லாபம் கிடைக்கும், கூட்டிக்கழித்துப்பார்த்தால் நட்டம் :-))

உதாரணமாகப்பார்த்தால் வெளிசந்தையில் விற்பனையாளார் என்பது சுமார் ஒரு கோடி வணிகர்கள் என வைத்துக்கொள்வோம், ஆனால் வாங்குபவர் நுகர்வோர் ஆகிய மக்கள் சுமார் 100 கோடி இருக்கும்.எனவே வெளிச்சந்தையில் பங்குப்பெறுவோர் எண்ணிக்கை மிக பெரியது.

ஆனால் கம்மோடிட்டி மார்க்கெட்டில் வாங்குபர், விற்பவர் என பங்குப்பெறுவோர் சில லட்சங்கள் இருந்தாலே அதிகம், அதுவும் அவர்கள் யாருமே நுகர்வோர் அல்ல அனைவருமே வியாபாரிகள்.லாப, நட்டத்திற்காக மட்டுமே வாங்குவார்கள், அங்கே நுகர்வு என்பதே இல்லை. நட்டம் வரும் என்றால் வாங்கவும் மாட்டார்கள் விற்கவும் மாட்டார்கள். ஒரு மணி நேரத்தில் பங்கு விலை சரிய ஆரம்பித்தா அடுத்து வாங்க ஆளே இருக்காது.

நீங்க ஹைப்போதெடிகலா கேட்டாலும் அரிசிக்கு ஒரு வகையில் பேச்சுக்கு சரி, அழுகும் காய்,கனிக்கு என்ன செய்வாங்க கம்மோடிட்டி மார்க்கெட்ல.

மேலும் கம்மோடிடி என்பது ஒரு கால நிர்ணயம் கொண்டது, ஒரு டெர்ம் 3 மாதம் அதற்குள் டெலிவெரி எடுக்க வேண்டும் அல்லது பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.எனவே வெளிசந்தையிலும் வாங்கிப்போட்டு, கம்மோட்டியிலும் வாங்கிப்போடுவதை ஒருவரே செய்தால் பலத்த நட்டம் வரும்.

ஒப்பந்த விவசாயமும், செயற்கை தட்டுப்பாடும்:

//இரண்டாவது:

மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,
மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...

விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்..//

பாஸ்மதி அரிசி, கோதுமையை தமிழ் நாட்டில பயிரிட முடியாது, கேரட்டை கடலூரில பயிரிட முடியாது, இப்படி நம்ம நாடு பல தட்ப வெப்பம், பருவ காலம், மண் வளம், கலாச்சாரம் கொண்டது.

இன்னும் ஏன், கோதுமைய மட்டும் பெருவாரியா சாப்பிட சொன்ன சாப்பிட மாட்டாங்க ,அரிசி சோறு கிடைக்கலைனா தான் சப்பாத்திக்கு போவாங்க..

அதனால அப்படிலாம் ஒரே வகையா விவசாயத்தை மாற்ற முடியாது.ஏன் இத சொல்கிறேன் என்றால் ஒரு குறிப்பிட்ட வகை நெல்லை விவசாயிகளிடம் அறிமுகம் செய்ய விவசாயத்துறை படாத பாடு பட வேண்டி இருக்கும்.இதற்காக முன்னோடி விவசாயி என ஊருக்கு 10 பேரை தேர்வு செய்து அவர்களை பயிரிட வைத்து ,விளக்கி எல்லாம் செய்தாலும் அடுத்த வருடம், புதிய முறைக்கு மாற ஒரு 2 பேர் தான் வருவாங்க.

உதாரணமாக அமெரிக்க மக்கள் தொகை சுமார் 32 கோடி ஆனால் அவர்களுக்காக உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி இருந்தாலே அதிகம். மேலும் அமெரிக்கா இந்தியாவை விட 3 மடங்கு நிலப்பரப்பு கொண்டது. எனவே ஒவ்வொரு விவசாயியும் சுமாராக 500 ஏக்கராவது நிலம் வைத்திருப்பார்.

ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு 60% மக்கள் உணவு உற்பத்தி செய்யும் தொழிலில் இருக்காங்க, அதாவது இங்கே எல்லாம் சிறிய விவசாயிகள், ஒவ்வொருவரும் சுமாராக 1 ஏக்கர் முதல் சில ஏக்கர்கள் தான் நிலம் வைத்திருப்பார்கள்.இந்தியாவில் நிலங்களை விட வரப்புகள் அதிகம் என நகைச்சுவையாக சொல்வார்கள்.

அமெரிக்காவில் ஒரு விவசாயியுடன் வால்மார்ட் ஒப்பந்தம் செய்தால் சுமார் 500 ஏக்கர் உற்பத்தி கைவசம் ஆகிவிடும், ஆனால் இந்தியாவில் 500 ஏக்கர் உற்பத்தியை கைப்பற்ற சுமார் 250 விவசாயிகளுடனாவாது ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

எனவே பெரிய அளவில் உற்பத்தியை கைவசம் கொண்டு வர நிறைய பேரை ஒப்பந்ததிற்குள் கொண்டு வர வேண்டியது இருக்கும், இதுவே நீண்ட கால செயல் ஆகும்.மேலும் அனைவரும் சிறு விவசாயிகள் என்பதால் வால்மார்ட் ஒப்பந்தம் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்றால் ..மயிராப்போச்சுனு ஒப்பந்ததை முறித்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். அதே சமயத்தில் அமெரிக்காவில் பெரிய அளவிலான ஒப்பந்தம் என்பதால் விவசாயி அவ்வளவு சீக்கிரம் முறித்துக்கொள்ள மாட்டான்.

இந்தியாவில் ஒப்பந்த விவசாயம் பெரிதாக வர விடாமல் தடுப்பது பல சிறு விவசாயிகள் இருப்பதும் ஒரு காரணம், ஆனால் பெரிய அளவிலான சில்லரை விற்பனை சீராக செல்ல ஒப்பந்த விவசாயம் தேவை என்பதால் வால்மார்ட் போன்றவர்கள் விவசாயிகளைப்பகைத்துக்கொள்ளாமல் செயல்படவே பார்ப்பார்கள்.

எனவே நீங்க சொல்வது நம்ம நாட்டில நடக்காது.

கொள்முதல் சதவீதக்கட்டுப்பாடு:

//மூன்றாவது:

முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.

அது ஏன் வெறும் முப்பது சதவிகிதம் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.//

இதுக்கு என்பதிவிலே சொல்லி இருந்தேன், இந்திய உற்பதியை அதிகம் வாங்க செய்ய வேண்டும் என்று. அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால் இந்த 30% கொள்கையில தான், ஏன் நாமளே குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்க கடைய தொறக்கலாம் ஆனால் இங்கே வாங்கி விற்க வேண்டும் என கட்டாயமாக சொல்ல அரசுக்கு ஏன் தைரியம் இல்லை.அரசாங்கம் உள்நாட்டுக்கொள்முதல் என்பதில் கண்டிப்பு காட்ட வேண்டும்.

இப்படி ஒரு சலுகை கொடுத்தாலும் இதனால் உணவுப்பொருளில் அவர்களால் தாக்கம் கொண்டு வரமுடியாது, காரணம் இந்தியாவை விட வெளிநாட்டில் உணவுகள் விலை அதிகம்,அதை வாங்கி இங்கே இறக்குமதி செய்து விற்றால் நட்டம் தான் ஆகும்.

முன்னர் வெள்ளைக்காரன் வணிகம் செய்ய இந்தியா வந்த போதும் நட்டம் தான் ஆனான், பொருட்கள் சரியாக விற்பனை ஆகவில்லை. அதை தவிர்க்க தான் வரி வசூலிக்க உரிமம் பெற்றான், கார்ப்பரேஷன் கக்கூஸ் டெண்டர் எடுப்பது போல நவாப்புக்கு பணம் கொடுத்து பெற்றான்.

இப்போ இருக்கிறவங்க வரிவசூலிக்கும் உரிமையை தாரை வார்க்க மாட்டார்கள் என நம்புவோம்.

மேலும் சில,

ஆனால் நீங்க முதலில்  கவலைப்படுவதாக இருந்தா டோல் ரோடு பத்திக்கவலைப்பட்டு இருக்கணும்,ஆனால் வழ வழ ரோடுனு சந்தோஷப் படுறிங்க போல :-))

விலைவாசி உயர்வுக்கு இந்த டோல் ரோட்களும் ஒருக்காரணம், முன்னர் இலவச சாலைகளாக இருந்தவையே இன்று டோல் ரோட்களாக மாறி இருக்கு. இலவச நெடுஞ்சாலையே இல்லை எனலாம்.

டீசல் விலை உயர்வு கூடவே சாலைகளில் செல்லக் டோல் கட்டணம் ஆகியவை சேர்ந்து உணவுப்பொருட்களை கொண்டு செல்ல ஆகும் செலவு கூடி விட்டது அதனை நுகர்வோர் தலையில் தான் வைப்பார்கள் வியாபாரிகள்.

அமெரிக்காவில் வால்மார்ட் போன்றவை செயல் பாட்டுக்கு வந்ததால் அங்கிருந்த சிறுவணீகர்கள் அனைவருமே அழிந்து விட்டார்கள் என பதிவர் ரெவரி சொல்லி இருந்தார் , இருக்கலாம், ஆனால் அதனால் என்ன நுகர்வு விலைவாசி உயரவில்லையே. மேலும் அமெரிக்காவிற்கும் அல்லது மேலை நாடுகளுக்கும் நமக்குமான ஒரு வித்தியாசத்தினை கவனிக்கவில்லை அவர்.

மேலை நாடுகளில் ஒரு நகரத்தில் ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதி இருந்தாலும் அங்கே கடைகள் இருக்காது. கடைகள் எல்லாம் மார்க்கெட் பகுதி என ஒதுக்கப்பட்ட ஒரு ஷாப்பிங் ஸோன் இல் மட்டுமே இருக்கும். சிறு வணிகராக இருந்தாலும் வால் மார்ட் ஆக இருந்தாலும் ஒரேப்பகுதியில் அக்கம்,பக்கமாக இருக்கும்.மக்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கொஞ்ச தூரமாவது காரில் பயணித்தே வாங்க முடியும்.

பொருட்களை வாங்க என வரும் நுகர்வோர் சிறியக்கடைக்கு பக்கத்தில் இருக்கும் பெரியக்கடைக்கு தான் முன்னுரிமை அளிப்பார், அங்கே பல சலுகைகளும் இருக்கும். இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்புறம் ஏன் சின்னக்கடைக்கு போகணும் என்ற மனோபாகவம் இருக்கும்.

ஆனால் இந்தியாவில் அப்படி மார்க்கெட் பகுதி என ஒதுக்கி அங்கே மட்டும் கடைகள் இருப்பதில்லை, தெருவுக்கு தெரு ஒரு கடை இருக்கும். பெரும்பாலும் 100 மீட்டர் தொலைவில் நடந்து செல்லும் தூரத்தில் ஒரு கடையைக்காணலாம். இப்போதும் சில பல சூப்பர் மார்க்கெட்கள் இருந்தாலும் அங்கே மாதத்திற்கு ஒரு முறை தான் செல்வார்கள், ஆனால் தினசரி தெரு முனைக்கடையில் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கான இடம் சந்தையில் எப்போதும் உண்டு. ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் அருகிலேயே பல சிறு கடைகளிலும் கூட்டம் அலை மோதுவதே இதற்கு உதாரணம்.யானை இருக்கும் காட்டில் கண்டிப்பாக எறும்பும் இருக்கும்.

வால்மார்ட்களால் இப்படி தெருவுக்கு தெரு கடை திறக்க முடியாது. எனவே வால்மார்ட்கள் வந்தாலும் சிறுவணிகர்கள் வியாபாரம் தடைப்படாது. என்ன அவர்களும் விற்பனை சதவீதத்தில் பங்கு எடுத்துக்கொள்வார்கள்.ஒரே அடியாக அவர்கள் வழக்கொழிந்து விட மாட்டார்கள்.

ஒரு காலத்தில் அம்பாசிடர் கார்கள் மட்டுமே போட்டியே இல்லாமல் இந்திய சாலைகளில் ராஜ்ஜியம் நடத்தியது, பின்னர் மாருதி வந்த பின் அம்பாசிடர் கொஞ்சம் அடி வாங்கியது.

அப்போதே பிர்லா குருப் சேர்ந்த ஹின்டுஸ்தான் மோட்டார்ஸ் தனது தயாரிப்பினை மேம்படுத்தி இருக்க வேண்டும் எதுவும் செய்யவில்லை. இன்று என்னாச்சு அந்தக்காரை வாங்க ஆள் இல்லை.

சமிபத்தில் கூட ஒரு புதிய அம்பாசிடர் காரில் போய்ப்பார்த்தேன், சென்ரலைஸ்ட் லாக் இல்லை, பவர் வின்டோ இல்லை, இன்டீரியர் மட்டமாக பழைய பாணியில், டேஷ் போர்டும் அப்படியே,கியர் அதே போல கடினமாக விழுகிறது,டீசல் எஞ்சின் அதே போல ரைஸ் மில் கணக்காக சத்தம் போடுகிறது(முன்பு விட கம்மி) 5 த் கியர் எனப்படும் ஓவர் டிரைவ் ஆப்ஷனாக சில மாடல்களில் மட்டும் இருக்கு, மற்ற எல்லாக்காரிலும் சாதாரணமாகவே இருக்கும். இதனால் ஆக்சிலேட்டர் போட்டு மிதி..மிதி என மிதிக்க வேண்டியது இருக்கு, பிக் அப் என்பது பற்றி எல்லாம் கேட்கவே கூடாது.இப்படி மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லாத ஒரு தயாரிப்பு எப்படி சந்தையில் இருக்கும். இத்தனைக்கும் அம்பாசிடரின் உறுதிக்கு முன்னால் இன்றைய கார்கள் நிற்க முடியாது. ஆனால் எத்தனைக்காலம் தான் ஸ்ட்ராங்கான பாடி என கார் வாங்குவார்கள்!

இப்போது இந்தியாவில் பல கார் தயாரிப்பாளர்கள் வந்து விட்டார்கள் ஆனால் மாருதி இன்னும் நடக்கிறது, மார்கெட் ஷேர் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம். ஆனால் அம்பாசிடர் இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறது யார் காரணம், மக்களா, அரசாங்கமா? இல்லை அம்ப்பாசிடர் கார் தயாரிப்பாளர்கள் தான் காரணம், எந்த நவீன மாற்றமும் செய்யாமல் நான் தயாரிப்பது தான் கார் , வாங்குவது உன் கடமை என்றால் யார் வாங்குவார்கள்.

இந்த உதாரணம் நம்ம ஊர் சில்லரை வர்த்தகர்களுக்கும் பொருந்தும்.அவர்களும் நவீனமாக மாறிக்கொள்ளவேண்டும், குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் வைத்து விற்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, அப்போது தான் எத்தனை வால்மார்ட்கள் வந்தாலும் சமாளிக்க முடியும்.

27 comments:

SURYAJEEVA said...

தோழர்,
அருமையான அலசல் என் பதிவிலும் வந்து பின்னூட்டமாக இதை போட்டதற்கு முதலில் நன்றி.
மொத்தமாக புரிந்து விட்டது என்று சொல்ல மாட்டேன், ஆனால் ஒரு அடித்தளம் கிடைத்திருக்கிறது..
உதாரணமாக 1:10 ratio ... இது எனக்கு புது தகவல்..
இணையத்தில் யாரும் இதை சரியாக விளக்க வில்லை என்பதே உண்மை...
இந்த பதிவை எழுதும் முன் நான் சுமார் இருபது வலை தளங்களில் தேடி இருப்பேன்..
அப்புறம் கமாடிட்டி மார்க்கெட் அஜெண்டாக உள்ள என் நண்பனிடம் சில விசாரிப்புகள்..
அவனும் முழு தகவலை சொல்லாமல் அவனுக்கு புரிந்த அளவில் எதோ சொல்லி, அதை நான் புரிந்து கொள்ள சிரமமாகவே இருந்தது.

டோல் கேட் வரும் பொழுதே அதை எதிர்க்காமல் இன்று வந்து விட்ட பிறகு என்ன சொல்வது... இந்த டோல் கேட் பணம் மலேசியா அரசுக்கு செல்கிறதா இல்லை நம் அரசுக்கு செல்கிறதா என்றே நான் பல நாட்கள் குழம்பி உள்ளேன்.. இதில் நடந்த ஊழல் குறித்து சில நாள் பெரிதாக சத்தம் எழும்பி பின்பு அப்படியே அமுங்கியும் விட்டது... நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலில் கூட தான் டோல் கேட் பணம் உள்ளது...

மேலும் புரிந்து கொண்டு எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.. அந்த வகையில் எனக்கு சிறு உதவி புரிந்ததற்கு நன்றி

வவ்வால் said...

சூர்யா,

வாங்க, வணக்கம், நன்றி!

அதனை 1:10 விகிதம் என எடுத்துக்கொள்ளக்கூடாது, அது ஒரு உதாரணம், ஆனால் வெளிமார்க்கெட்டில் ஏறும் விலையைவிட வேகமாக பங்கில் ஏறும் அதே போல வேகமாக இறங்கும் என்பதற்கான உதாரணம்.பீட்டா என்ற பெருக்கும் காரணியின் அளவு என்னவோ அதுக்கு ஏத்தா போல மாறும்,பீட்டா என்பது கேபீட்டல் அசட் பிரைசிங் மாடலில் ஒரு காரணி எல்லாம் விளக்கினா ரொம்ப குழப்பும் என விட்டாச்சு.

manjoorraja said...

அன்பு நண்பரே மிகவும் பயனுள்ள பதிவு.

பல விசயங்களை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி.

சிவானந்தம் said...

ஜனாயகம் தேவை. அதேபோல் ஷேர் மார்கெட் என்ற தியரியும் தேவை. ஆனால் இரண்டுமே இப்போது கோடீஸ்வரர்களைத்தான் உருவாக்குகிறது.

அதேபோல் கம்மாடிட்டி என்பதும் ஒரு தேவையான நடைமுறையாக இருக்கலாம். ஆனால் எனது ஷேர் மார்கெட் அனுபவத்தை வைத்து சொல்லவேண்டுமென்றால், இதுவும் சில புரோக்கர்கள் பணம் சம்பாதிக்கத்தான் பயன்படும்.

என்னுடைய கருத்து என்னவென்றால் பால்ய திருமணத்தை போல் இந்தியாவில் இன்னும் சட்டங்களும் பல சீர்திருத்தங்களும் முழுமை பெறாத நிலையில் கம்மாடிடியும் ஒரு சூதாட்டக் களமாகத்தான் இருக்கும். இருந்தாலும் இந்த விஷயத்தில் எனக்கு முழுமையான புரிதல் இல்லை. எனவே இதையும் ஆராய்ந்து விடுகிறேன். இது ஒரு மேம்போக்கான கருத்துதான்.

வவ்வால் said...

வாங்க மஞ்சூர் ராஜா,

வணக்கம், நன்றி!

எளிமையாக ,விளக்கமாக இருக்குனு சொன்னதே எனக்கு நம்பிக்கையாக இருக்கு, ஏன் எனில் சரியா சொல்லி இருக்கேனா என எனக்கு குழப்பமாகவே இருந்தது.கொஞ்சம் பிழைகள் இருக்கலாம், அப்படியே போட்டுவிட்டேன் இனிமே தான் சரிப்பார்க்கணும் :))

------------

வாங்க சிவானாந்தம்,

வணக்கம், நன்றி!

//ஜனாயகம் தேவை. அதேபோல் ஷேர் மார்கெட் என்ற தியரியும் தேவை. ஆனால் இரண்டுமே இப்போது கோடீஸ்வரர்களைத்தான் உருவாக்குகிறது.//

திறந்த சந்தைப்பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாதது.

//கம்மாடிடியும் ஒரு சூதாட்டக் களமாகத்தான் இருக்கும். //

கண்டிப்பாக சூதாட்டமே தான், பங்குவணிகமும் அப்படியே, ஆனால் என்ன இதற்கு என சில விதிமுறைகள் இருக்கு ,புரிந்துக்கொண்டு ஆடினால் கெலிக்கலாம், 3 சீட்டு ஆடக்கூட ஒரு அறிவு தேவைத்தானே :-))

அப்படியே 2008 இல் பங்கு பந்தைப்பற்றி நான் போட்ட இந்த இரண்டுப்பதிவுகளையும் ஒரு பார்வைப்பாருங்க!

சென்செக்ஸ் ஒரு பார்வை


சென்செக்ஸ் பரமபதம்

அமர பாரதி said...

வவ்வால்,

ஒப்பந்த முறை விவசாயம் நமக்கு சரிப்படாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் ஒவ்வொரு விவசாயியிடமும் இருக்கும் குறந்த அளவு நிலம் (அரை ஏக்கர் மற்றும் ஒரு ஏக்கர்). அந்த நிலங்களை ஒப்பந்த முறையில் எடுத்து, ஏற்ற இறன்னக்க்னக்ள் நிறைந்த அதை நிரவுவதற்கே பெரும் பணம் தேவைப்படும்.

//ஹி..ஹி பசுமைக்குடில் பார்த்து இருக்கிங்களா// உங்களுடைய பின்னனி எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய பின்னை விவசாயம் தான்.

//இப்போ யாருங்க நம்ம நாட்டில உற்பத்தி கம்மினு சொன்னாங்க // யாரு சொன்னாங்க. பசுமைக் குடில் என்பது வருடம் முழுவதும் ஒரே தட்ப வெப்ப நிலையில் ஒரு குறிப்புட்ட பயிரை தொடைச்சியாக விளைவிப்பது. பசுமைக் குடிலில் நெள் விவசாயம் செய்ய முடியாது. ஆனால் வெயில் காலத்தில் தக்காளி கிலோ 60 ஊபாய்க்கும் மழைக் காலத்தில் கிலோ ஒரு ரூபாய்க்கும் விற்கும் நிலையை மாற்றி வருடம் முழுவதும் ஒரே அளவில் விளைச்ச எடுத்தால், ரூபாய் 50 - 1 போன்ற விலை மாறுதல் இருக்காது.

நான் சொன்னதில் "விவசாய மானியம்" கொடுக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தையே தொடாத உங்கள் நேர்மையை எண்ணி எண்ணி வியக்கிறேன். உங்களால் மனதளவில் கூட அதை ஒப்புக் கொள்ள முடியவில்லையோ?

விவசாயிகளுக்காக கவலைப் படும் உங்களுடைய பின்னனி என்ன? விவசாயம் செய்திருக்கிறீர்களா? தற்போது செய்து வருகிறீர்களா? விவசாயிகள் பயனடைவதற்கு உழவர் சந்தை போன்ற நல்ல வுஷயங்களை காழ்ப்புணர்வு பார்க்காமல் செயல் படுத்தினாலே போதும்.

விவசாயிக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றால் ஒரு தேங்காய் நூறு ரூபாய்க்கு விற்றால் நல்லது. அதைச் செய்ய முடியுமா? அனால் வால்மார்ட் போன்றவர்களின் கைக்கு ஒட்டு மொத்த உற்பத்தி மற்றும் வினியோகம் செண்றால் அது நடக்கும் தூரம் தொலைவில் இல்லை.

தக்காளி போன்ற பெரிஷபிள் பொருதளை மற்றும் பார்க்காதீர்கள். தக்காளி பதப் படுத்தப் பட்டு வேறு முறையில் உரு மாறினால் தக்காளி வருடம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விலைக்கு கிடைக்கும், ஆனால் தற்போது உள்ளதை விட அதிகமாத் தான் இருக்கும்.

அரிசி உற்பத்தி உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏறிய விலை இறங்காததை கவனித்திருக்கிறீர்களா?

இந்த விஷயங்களில் வால் மார்ட் போன்றவை வந்தால் விவசாயிக்கு பாதிப்பாகவே முடியும். அரசாங்கம், அரசாங்கம் மேலும் அரசாங்கம் மட்டுமே இதை மானியம் மூலம் சரி செய்ய இயலும்.

அந்த் மானியங்களின் மூலம் உணவுப் பொருட்கள் விலை கட்டுக்கும் வைக்கப் பட்டு அனைத்டு மக்களுமே பயன் பெறுவார்கள், கூடவே விவசாயியும் பயன் பெறுவான். இல்லையென்றால் அனைத்து மக்களும் பயன் பெற்று விவசாயி மட்டும் கஷ்டப் படுவான்.

அமர பாரதி said...

வவ்வால்,

ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக். மன்னிக்கவும். நான் உபயோகிக்கும் சுரதாவில் இவ்வளவு செய்ததே அதிகம்.

அமர பாரதி said...

வவ்வால்,

கள் இறக்குவதற்கு அனுமதி கொடுக்காதன் மாரணம் தேங்காய் விலை கடுமையாக ஏறும் என்பதற்காக கூட இருக்கலாம். தற்போதைய நிலையில் ஒரு தென்னை மரம் குத்தகை அடிப்படையில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 500 ரூபாய்க்கு அடை படுகிறது. வருடத்துக்கு 160 முதல் 200 காய்களைக் கொடுக்கும். அதைக் குத்தகைக்கு எடுப்பவர் இன்னொரு 500 ரூபாய் சம்பாதிக்க முடியும். 500 ரூபாய் லாபத்துக்கு அவர் முதலிலேயே 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு முறை தேங்காய் போடும் போதும் ஆட்கள் கூலி மற்றும் போக்குவரத்து செலவு செய்ய வேண்டும். காய்கள் குறைந்தாலும் கொடுத்த பணம் கொடுத்ததே. வால் மார்ட் வந்தால் குத்தகை தாரரின் இடத்தில் வால் மார்ட் இருக்கும், வேறு ஒரு வித்தியாசமும் இல்லை. இதில் பாதகமான அம்சம் என்னவென்றால், உற்பத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் வால் மார்ட் கைகளுக்கு செல்லும் போது அவர்கள் வைப்பதுதான் விலை.

உடனே ஒரு தேங்காயின் உற்பத்தி விலை 3 ரூபாஇய்கான், நாண் எதற்கு 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சென்னையில் இருப்பவன் கேட்டால் உன்றும் செய்ய முடியாது.

வவ்வால் said...

அமரப்பாரதி,

வாங்க,வணக்கம், நன்றி!

எழுத்துப்பிழை பற்றிக்கவலைப்பட வேண்டாம், புதிய ஈகலப்பையில் எனக்கும் நிறைய பிழைகள் வருது, மேலும் நானும் இப்போதெல்லாம் எழுதிப்பின் படித்து திருத்தம் செய்வதில்லை!

//ஒப்பந்த முறை விவசாயம் நமக்கு சரிப்படாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் ஒவ்வொரு விவசாயியிடமும் இருக்கும் குறந்த அளவு நிலம் (அரை ஏக்கர் மற்றும் ஒரு ஏக்கர்). அந்த நிலங்களை ஒப்பந்த முறையில் எடுத்து, ஏற்ற இறன்னக்க்னக்ள் நிறைந்த அதை நிரவுவதற்கே பெரும் பணம் தேவைப்படும்.//

நீங்க சொன்னாப்போல விவசாய மாநியம் என்பதைக்கவனிக்க மறந்துவிட்டேன், மானியம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே, மேலும் நீங்க என்னோட 2-3 வருடங்களுக்கு முந்தைய பழையப்பதிவுகளை படிக்கவில்லை என நினைக்கிறேன், என்னோடப்பதிவிலும், பிறப்பதிவிலும் மானியம் அதுவும் நேரடியாக விவசாயிகளூக்கு செல்ல வேண்டும் என சொல்லி இருப்பேன்,

இப்போ வேற ஒரு கருத்து என்பதால் அதற்கு மட்டும் முக்கியத்துவம், அதனை சொல்லவில்லை, நீங்க சொல்லி இருக்கிங்க.

நேர்மைப்பத்திலாம் பேசறிங்க , என்ப்பதிவை முழசா படிக்காமல் அங்கே அங்கே கொஞ்சம் பார்த்துவிட்டு பேசுவதேன்? நீங்கள் சொன்ன எல்லா விசயங்களும் பேசப்பட்டுள்ளது.

//ஒப்பந்த முறை விவசாயம் நமக்கு சரிப்படாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் ஒவ்வொரு விவசாயியிடமும் இருக்கும் குறந்த அளவு நிலம் (அரை ஏக்கர் மற்றும் ஒரு ஏக்கர்). அந்த நிலங்களை ஒப்பந்த முறையில் எடுத்து, ஏற்ற இறன்னக்க்னக்ள் நிறைந்த அதை நிரவுவதற்கே பெரும் பணம் தேவைப்படும்.//

நிலங்கள் சிறிய அளவாக இருப்பதால் பலவீனம் தான் ஆனால் அதுவே ஒரு பலம் ,அது என்ன என்றும் சொல்லி இருக்கேன் பார்க்கவில்லையா?மேலும் ஒப்பந்த விவசாயம் செய்ய உள்ள சாத்தியங்களையும் பட்டியலிட்டுள்ளேன்.ஒரு சுட்டிக்கூட போட்டேன் பார்க்காமல் பேசுவது தான் உங்கள் நியாயமா?

//ஆனால் வெயில் காலத்தில் தக்காளி கிலோ 60 ஊபாய்க்கும் மழைக் காலத்தில் கிலோ ஒரு ரூபாய்க்கும் விற்கும் நிலையை மாற்றி வருடம் முழுவதும் ஒரே அளவில் விளைச்ச எடுத்தால், ரூபாய் 50 - 1 போன்ற விலை மாறுதல் இருக்காது.//

இப்போ மழைக்காலம் தான் ஆனால் ஒரு ருபாய்க்கு விற்கிறதா?

//யாரு சொன்னாங்க. பசுமைக் குடில் என்பது வருடம் முழுவதும் ஒரே தட்ப வெப்ப நிலையில் ஒரு குறிப்புட்ட பயிரை தொடைச்சியாக விளைவிப்பது.//

நீங்களே சொல்றிங்க நம்ம நாட்டில எல்லா விவசாயியும் அரை ஏக்கர், ஒரு எக்கர் னு, அப்புறம் அவங்கள பசுமைக்குடில் வைக்க சொல்றிங்க, ஒரு டிராக்டர், ஏன் குபேட்டா அல்லது விசைத்தெளிப்பான் சொந்தமாக வாங்கவே தடுமாறுகிறான் என்பதை ஏன் உணரவில்லை.

பசுமைக்குடில் அமைக்க என்ன செலவாகும் என தோராயமாக சொல்ல முடியுமா?அதற்கு நிதி கிடைக்குமா? வங்கிக்கொடுக்கும் எனில் எனக்கு வாங்கிக்கொடுங்க, பசுமைக்குடில் அமைக்கிறேன் எங்கக்கிட்டே இப்போ சுமார் 3.5 ஏக்கர் நஞ்சை இருக்கு ஒரு காலத்தில் 10 ஏக்கர் இருந்தது. மீதி எல்லாம் வித்தாச்சு.ஆனால் சொந்தமாக டிராக்டர் ,விசை தெளிப்பான் என எதுவும் இல்லை.

நம்நாட்டில் நல்ல உற்பத்தி இருக்கு, அதனை சரĬ7;யாகப்பயன்ப்படுத்திக்கொள்வதில்லை , நிறைய சேதாரம், விரயம் ஆகிறது என்பதே பிரச்சினை.

வவ்வால் said...

தொடர்ச்சி....

//விவசாயிகளுக்காக கவலைப் படும் உங்களுடைய பின்னனி என்ன? விவசாயம் செய்திருக்கிறீர்களா? தற்போது செய்து வருகிறீர்களா?//

நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான் , அதை எல்லாப்பதிவிலும் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டுமா? என் கடந்த காலப்பதிவுகளைப்பார்த்தாலே தெரிந்திருக்கும்.

அப்புறம் விவசாயம் செய்யவில்லை என்றால் கவலைப்பட கூடாதா, சில்லறை வர்த்தகர்களுக்காக கவலைப்படும் நீங்கள் அப்போ சில்லறை வர்த்தகரா :-))

//விவசாயிக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றால் ஒரு தேங்காய் நூறு ரூபாய்க்கு விற்றால் நல்லது. அதைச் செய்ய முடியுமா? //

இது தான் விதண்டாவாதம் என்பது, அப்புறம் எப்படி நீங்க விவசாயம் செய்வதாக சொல்லிக்கொள்கிறீர்கள்.யார் இங்கே 100 ரூ க்கு ஆசைப்படுறாங்க , இல்லை அவ்வளவு விலைக்கு மார்க்கெட்டில் வித்தா தான் விவசாயிக்கு லாபம் போய் சேருமா?

நுகர்வோர் தரும் பணத்தில் எவ்வளவு விவசாயிக்கு போய் சேரும் இப்போது, முறையான சில்லரை வர்த்தகத்தில் எவ்வளவு போய் சேரும் என்பதனையும் பதிவில் சொல்லி இருக்கேன் பாருங்க.

நான் பதிவில் சொல்லி இருப்பதெல்லாம் விவசாயம் செய்ய ஆகும் செலவுக்கு இணையாகவாது அவர்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டும். மேலும் விளைச்சல் விற்குமா ,விற்காதா என்ற நிச்சயமற்ற தன்மை போக வேண்டும் என்பது.100 ரூபாய்க்கு விற்க வேண்டும் அல்ல, அப்படி விற்றால் தான் விவசாயிக்கு நன்மை கிடைக்கும்னு நீங்க கற்பனை செய்வதே அபத்தம்.

நீங்கள் என்றாவது நிலக்கடலை, நெல் ஆகியவற்றை விற்க தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் சென்று இருக்கிறீர்களா? வாடகை டிராக்டரில் எடுத்துப்போய்விட்டோம் என்பதற்காக விற்று விட்டு வருவோம், அல்லது இப்போ எடுக்க மாட்டேன் நாளைக்கு தான் என்று சொல்லும் போது ஏற்படும் மன உளைச்சலை அனுபவித்தவன். அதுவும் ஈரப்பதம் அதிகம் காய வச்சு எடுத்து வா , இல்லைனா இன்று கொள்முதல் அளவு எடுத்தாச்சு என்று சப்பையான காரணம் சொல்வார்கள்.

இந்த நிச்சயமற்ற தன்மை போக வேண்டும்.

அழகாத பொருளுக்கே இதான் நிலமை, அப்படியானால் தக்காளி போட்டவன் என்னாவான்.

நம் மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதம் சில்லரை வியாபாரிகள் இருப்பார்களா, அவர்கள் பாதிக்கபடக்கூடாது என நினைப்பவர்கள் 60% விவசாயிகளைப்பற்றி கவலைப்பட காணோம். ஏன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்ம உள்நாட்டு வியாபாரிகள் தானே எல்லாம் , ஏன் விவசாயி உருப்படவில்லை. இனிமே வர வால் மார்ட் தான் அழித்துவிடுமா? இன்னும் கொஞ்சம் நாள் விட்டால் இவர்களே அழித்து விடுவார்கள்.

இப்போ சூரிய காந்தி எண்ணை என்ன முழுக்க உள்நாட்டிலா உற்பத்தி ஆகுது, இறக்குமதி செய்து விற்கிறார்கள், உள்நாட்டில விவசாயிகளை ஊக்கப்படுத்தி விளைச்சல் அதிகம் ஆக்க எந்த இந்திய வியாபாரி முயற்சி செய்தான்.

நாட்டில விற்கிற பொம்மை எல்லாம் சீன தயாரிப்பு தான் ஏன் நம்மாளுக்கு பொம்மை செய்ய தெரியாதா ஏன் செய்யாம இறக்குமதி செய்து விற்கிறான். வியாபாரிக்கு தேவை பொருள் , எங்கே இருந்து வேண்டுமானாலும் வாங்கி விற்பாங்க, ஆனால் அவன் வியாபாரத்துக்கு போட்டி என்றால் சுதேசம் பேசுவாங்க!

விவசாயியோ, உள்நாட்டு தொழிலோ கவலை இல்லை! அவங்க வாங்கி ,விற்கப்பொருட்கள், அதில் லாபம் இது ஒன்றூ தான் வர்த்தகர்கள் குறிக்கோள்!

வவ்வால் said...

continue...

கள் இறக்கினா தேங்காய் விலை ஏறுமா எப்படி, கள் இறக்கும் மாநிலமான ,கேரளாவில், பாண்டியில் எல்லாம் தேங்கா விலை ஏறிடுச்சா? குத்து மதிப்பா பூச்சாண்டி காட்டுறிங்க விலை ஏறிடும்னு :-))

கள் இறக்க அனுமதி இருந்தாலும் அந்த மாநிலத்தில விவசாயி கள் இறக்க உரிமம் வாங்கணூம் , எனவே எவ்வளவு ஏக்கர் தென்னைக்கு அனுமதி கொடுக்கலாம்னு கணக்கு செய்தே கொடுப்பார்கள். இருக்கிற எல்லா மரத்திலும் கள் இறக்க முடியாது.

ஈரியோ பைட் அப்படினு ஒரு சிலந்தி தாக்கும் தென்னையை அதோட லைப் சைக்கிள் பிரேக் செய்தால் போதும் அதன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், தென்னை குறுத்துல முட்டை இடும், எனவே பாலையை சீவிட்டு கள் இறக்கினாலே போதும் முட்டை இட இடம் இல்லாமல் ஈரியோ பைட் இனப்பெருக்கம் கட்டுக்குள் வரும்.

கடந்த பல வருடங்களாக கள் இறக்காமல் இருப்பதால் தமிழ் நாட்டில ஈரியோபைட் தாக்குதல் அதிகம் இருக்கு. இதுக்கு மருந்து போட்டே விவசாயிகள் தென்னையைக்காப்பாத்துறாங்க.தென்னை வைதிருப்பவர்களைக்கேட்டால் சொல்வாங்க.

இப்போ சாராயம் தயாரிப்பது பெரிய முதலாளிகள் எனவே அவங்களுக்கு வரும் வருமானம் போகும், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில் லஞ்சம் கொடுப்பாங்க. ஆனால் கள் இறக்கினா அதன் வருமானம் விவசாயிக்கு போகும் அவங்க என்ன லஞ்சமா கொடுப்பாங்க? மேலும் பல அரசியல்வாதிகள் சாராய ஆலை வச்சு இருக்காங்க, அவங்க நஷ்டப்படுவாங்களா??

Anonymous said...

//இப்போ சாராயம் தயாரிப்பது பெரிய முதலாளிகள் எனவே அவங்களுக்கு வரும் வருமானம் போகும், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில் லஞ்சம் கொடுப்பாங்க. ஆனால் கள் இறக்கினா அதன் வருமானம் விவசாயிக்கு போகும் அவங்க என்ன லஞ்சமா கொடுப்பாங்க? மேலும் பல அரசியல்வாதிகள் சாராய ஆலை வச்சு இருக்காங்க, அவங்க நஷ்டப்படுவாங்களா??//

Spot on.

ராஜ நடராஜன் said...

//அதே போல வெங்காயம் விலை ஏறினா பிளைன் ஆம்லெட் சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க, அல்லது முட்டைக்கோஸ் கூட கலந்து வெங்காயம் கம்மி பண்ணிடுவாங்க, இப்படி உணவுப்பொருட்களில் உடனே மாற்றுக்கு போய்டுவாங்க.//

வெங்காயத்தோடு முட்டைக்கோஸும் சேர்ந்து விலையேறினா மக்கள் என்ன செய்வாங்க தெரியுமா? முட்டைல காலிபிளவரை முக்கியெடுத்து வருத்தாலும் ருசியாக இருக்கும்:)

ராஜ நடராஜன் said...

//ஆனாலும் இந்தியா என்பது பல தரப்பட்ட மக்கள் , தட்ப,வெப்பம், உணவுப்பழக்க வழக்கம் கொண்ட நாடு, எனவே இங்கே ஒரே உணவு தான் சாப்பிடுவேன்னு யாரும் அடம் பிடிப்பதில்லை,substituion goods பயன்ப்படுத்துவார்கள். அரிசி இல்லையா கோதுமை , அதுவும் இல்லையா மைதா, அதுவும் இல்லையா கம்பு, சோளம் , கப்பக்கிழங்கு என போவார்கள்.எனவே கிப்பன்ஸ் குட்ஸ் தியரி கூட அடி வாங்கும் இந்தியாவில்.//

கிப்பன்ஸ் தியரி ஒப்பீடு அழகோ அழகு.நான் சொல்ல வந்தது கிப்பன்ஸ் தியரியைப் பார்த்துத்தான் கப்பைன்னு பேர் வந்ததோ!ஏன்னா அரிசிப்பஞ்சம் வந்ததால்தான் கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் கப்பையை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

கேரளான்னு சொன்னவுடன் மலையாளச் சேனல்கள் முல்ல(லை)ப் பெரியார் உடையப்போகுதுன்னு 24/7 விளம்பரப்படுத்திகிட்டிருக்காங்க.தமிழ்மணத்துல என் கண்ணில் ஒரு பதிவரையும் இரண்டு நாளாப் படவேயில்லையே!

ராஜ நடராஜன் said...

//தக்காளி போன்ற பெரிஷபிள் பொருதளை மற்றும் பார்க்காதீர்கள். தக்காளி பதப் படுத்தப் பட்டு வேறு முறையில் உரு மாறினால் தக்காளி வருடம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விலைக்கு கிடைக்கும், ஆனால் தற்போது உள்ளதை விட அதிகமாத் தான் இருக்கும். //

அமரபாரதி!படிச்சுகிட்டே வந்தேன்.நீங்க மல்லுக்கட்டுறதைப் பார்த்தேன்:)தக்காளி பதப்படுத்தல் தியரிக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும்.நடைமுறையில் சூப்,கெட்சப்,பிசா சாஸ்ன்னு மாறதுக்குள்ளே மூச்சு வாங்கிடும்.உள்ளூர் உபயோகிப்பாளர்களும் கம்மி.ஏற்றுமதி செய்து விடலாமென்றால் ஸ்பெயினில் தக்காளியில் குளிக்கிற திருவிழாவே நடத்துறாங்க. டாஸ்மாக்ல பிளடிமேரி செய்யலாமேன்னு பார்த்தா அதுவும் பெண்கள் பானம்.உங்க தியரி எனக்கு சரிப்பட்டு வரல.

ராஜ நடராஜன் said...

//இப்போ சாராயம் தயாரிப்பது பெரிய முதலாளிகள் எனவே அவங்களுக்கு வரும் வருமானம் போகும், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில் லஞ்சம் கொடுப்பாங்க. ஆனால் கள் இறக்கினா அதன் வருமானம் விவசாயிக்கு போகும் அவங்க என்ன லஞ்சமா கொடுப்பாங்க? மேலும் பல அரசியல்வாதிகள் சாராய ஆலை வச்சு இருக்காங்க, அவங்க நஷ்டப்படுவாங்களா??//

இது நம்ம ஏரியா அதனால தாராளமா பின்னூட்டலாம்.ஒரு நிமிசம் அமரபாரதி சொல்றமாதிரி அரசியல்வாதிகள் புத்தர்களாயிட்டாங்களோன்னு திகைத்தேன்.கள் இறக்க தடைக்கான காரணம் நெத்தியடியா அரசியல்வாதிகள்தான் காரணம்.

வவ்வால் said...

//வெங்காயத்தோடு முட்டைக்கோஸும் சேர்ந்து விலையேறினா மக்கள் என்ன செய்வாங்க தெரியுமா? முட்டைல காலிபிளவரை முக்கியெடுத்து வருத்தாலும் ருசியாக இருக்கும்:)//

ராஜ் ,

வாங்க ,வணக்கம், நன்றி!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரிங்க , உங்களுக்கு பதில் சொல்ல தனிப்பதிவே போட வேண்டி வரும் போல இருக்கே? (ஏற்கனவே எனக்கு ஒரு பதிவு போடவே திராணியில்லை)

ஆஹா ..நல்லா தான் இருக்கும் காலிஆம்ப்ளேட், நான் கேரட், உருளை கிழங்கு, பீன்ஸ் எல்லாம் போட்டு பொடி மாஸ் செய்து சாப்பிட்ட ஆள்! இன்ன காய் தான் போடனும்னு விதி இருக்கா என்ன?

//கிப்பன்ஸ் தியரி ஒப்பீடு அழகோ அழகு.நான் சொல்ல வந்தது கிப்பன்ஸ் தியரியைப் பார்த்துத்தான் கப்பைன்னு பேர் வந்ததோ!ஏன்னா அரிசிப்பஞ்சம் வந்ததால்தான் கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் கப்பையை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் என நினைக்கிறேன்.//

நன்றி ராஜ்,

கப்பலில் அப்போ மரவள்ளி கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது கப்பல் கிழங்கு என்பதே கப்ப கிழங்கு ஆச்சு!

நம்ம ஊரு சந்தையை வெளி ஆள் வந்து நாசம் செய்ய வேன்டாம் நம்மாட்களே செய்வாங்க!

அரிசி ஆலைகள், விவசாயிகளிடம் முன் ஒப்பந்தம் செய்து நெல் வாங்குவதை பார்த்து இருக்கிங்களா?
எங்க பகுதில உண்டு, விதை விதைக்கும் போது, செலவுக்கு கொஞ்சம் பணம் தருவாங்க, பின்னர் அறுவடை போது லாரியோட வந்து உட்கார்ந்துப்பாங்க, அரசு நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஆதரவு விலையை விட கம்மியாக வாங்குவாங்க, முன்னர் கொடுத்த பணத்துக்கு வட்டிலாம் போடு கழித்துக்கொண்டு ஏதோ கையில் கொஞ்சம் தருவார்கள்.

அவங்க எல்லாம் என்ன வெள்ளைக்காரங்களா?

//கேரளான்னு சொன்னவுடன் மலையாளச் சேனல்கள் முல்ல(லை)ப் பெரியார் உடையப்போகுதுன்னு 24/7 விளம்பரப்படுத்திகிட்டிருக்காங்க.தமிழ்மணத்துல என் கண்ணில் ஒரு பதிவரையும் இரண்டு நாளாப் படவேயில்லையே!//

நிறைய பேர் போட்டுகிட்டு இருக்காங்களே பார்க்கலையா? ஆனால் எல்லாம் ஏதோ மேடை பேச்சுப்போலவே பதிவு போடுறாங்க! :-))

நானும் போடலாம்னு பார்க்கிறேன் , கை ஓட மாட்டேன்கிறது, சோம்பல் தான்!

//அமரபாரதி!படிச்சுகிட்டே வந்தேன்.நீங்க மல்லுக்கட்டுறதைப் பார்த்தேன்:)தக்காளி பதப்படுத்தல் தியரிக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும்.நடைமுறையில் சூப்,கெட்சப்,பிசா சாஸ்ன்னு மாறதுக்குள்ளே மூச்சு வாங்கிடும்.உள்ளூர் உபயோகிப்பாளர்களும் கம்மி.ஏற்றுமதி செய்து விடலாமென்றால் ஸ்பெயினில் தக்காளியில் குளிக்கிற திருவிழாவே நடத்துறாங்க. டாஸ்மாக்ல பிளடிமேரி செய்யலாமேன்னு பார்த்தா அதுவும் பெண்கள் பானம்.உங்க தியரி எனக்கு சரிப்பட்டு வரல.//

ஹி..ஹி அவர் எல்லா விவசாயிகளும் பசுமை குடில் விவசாயம் செய்யணும் சொன்னத விட இது ஒன்றும் மோசமில்லை!

டிராக்டர் வாங்கவே காசு இல்லாத விவசாயியை பசுமை குடில் ஏக்கர் கணக்கில் அமைக்கனும் சொல்ரார் அமர பாரதி :-))

-------------

//கள் இறக்க தடைக்கான காரணம் நெத்தியடியா அரசியல்வாதிகள்தான் காரணம்.//

அதே தான் ராஜ், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நிதி சாராய முதலைகளிடம் இருந்தே வருது அந்த காலத்தில் எம்ஜிஆருக்கே துளசி வாண்டையார் தான் பணம் சப்ளை(கோல்டன் ஈகிள் பீர், ராமசந்திரா மெடிக்கல் காலேஜ்)

இப்போ எத்தன பேரு சாராய ஆலை வச்சு இருக்காங்க விடுவாங்களா?

சாராயம் குடிக்கிற நாட்டில கள் என்ன போதைப்பொருளா? குடிச்சா கெட்டுப்போய்டுவாங்களா? பீர் குடிக்கிற குடிமகன்கள் கள்ளுக்கு மாறிடுவாங்க , சாராய ஆலைகளுக்கு வருமானம் போய்டும் அவளோ தான்!

thiagu1973 said...

லேட்டா வந்ததுக்கு வெரி சாரி தல

//நம் மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதம் சில்லரை வியாபாரிகள் இருப்பார்களா, அவர்கள் பாதிக்கபடக்கூடாது என நினைப்பவர்கள் 60% விவசாயிகளைப்பற்றி கவலைப்பட காணோம். ஏன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்ம உள்நாட்டு வியாபாரிகள் தானே எல்லாம் , ஏன் விவசாயி உருப்படவில்லை. இனிமே வர வால் மார்ட் தான் அழித்துவிடுமா? இன்னும் கொஞ்சம் நாள் விட்டால் இவர்களே அழித்து விடுவார்கள்.//

நச்சு பாயிண்டு

வவ்வால் said...

தல,

வாங்க நன்றி!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரீங்க, முக்கியமான அம்சத்தை சரியா பார்த்து இருக்கீங்களே!

SURYAJEEVA said...

தோழர்,
விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேச விவசாயியாக தான் இருக்க வேண்டும் என்பது போல் தியாகுவின் வலை பூவில் எனக்கு பதில் அளித்து இருந்தீர்கள்...
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து விதர்பா விவசாயி ஒருவரின் கட்டுரையின் சுட்டி இது..

http://www.frontline.in/stories/20111230282602200.htm

வவ்வால் said...

சூர்யா,

வாங்க,நன்றி!,

//தோழர்,
விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேச விவசாயியாக தான் இருக்க வேண்டும் என்பது போல் தியாகுவின் வலை பூவில் எனக்கு பதில் அளித்து இருந்தீர்கள்...//

விவசாயீயாக இருக்க வேண்டும் என சொல்லவில்லை, விவசாயம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். அப்போ தான் சில விஷயங்கள் ஓரளவாவது புரியும்.

SURYAJEEVA said...

நாம் எங்கேயும் விவசாயம்னா என்னன்னு பேசல தோழர்... அப்புறம் எப்படி எனக்கு விவசாயம்னா என்னனு தெரியல என்று முடிவு செய்தீர்கள்? விவசாயம்னா என்னன்னு தெரியாத அவ்வளவு பெரிய தற்குறி என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் அப்படி தானே?

வவ்வால் said...

//நாம் எங்கேயும் விவசாயம்னா என்னன்னு பேசல தோழர்... அப்புறம் எப்படி எனக்கு விவசாயம்னா என்னனு தெரியல என்று முடிவு செய்தீர்கள்?//

இதற்கு என்ன பொருள் சூர்யா?

விவசாயம், விவசாயி பற்றிப்பேசுவது என்றால் , நெல்லுக்கு எத்தனை செண்டிமீட்டர் இடைவெளி விடனும், நீர்ப்பாச்சனும்னு பேசுவதா? விவசாயி அடையும் கஷ்டம் பற்றிப்பேசுவதும் விவசாயம் பற்றிப்பேச்சு தானே? (நான் மாய்ந்து ,மாய்ந்து குறைந்த பட்ச ஆதரவு விலை, கொள்முதல்,சந்தைப்படுத்துதல், சேதாரம், என விவசாயத்தோட கூறுகளைப்பேசுவது உங்களுக்கு வேற என்னமோ போல தெரிஞ்சு இருக்கே)

கடைசில சில்லறை வர்த்தகர்கள், இடைத்தரகர்களுக்கும் விவசாயத்துக்கும் என்ன தொடர்பு, விவசாயி யாரோ எவரோ அவனுக்கு அவங்களால எந்த பாதிப்பும் இல்லைனு சொல்லிடுவிங்களோனு தோன்றுகிறது :-))

சரி இப்போவாது நாம என்னத்த பற்றிப்பேசுவதாக நீங்க நினைக்கறிங்கனு சொல்லிடுங்க :-))

உங்களுக்கு தெரியாதுனு சொல்லவில்லை சரியாக தெரியவில்லை அல்லது புரியவில்லை என நினைக்கிறேன். நான் சொன்னதில் சரியா விவசாயம்னா என்னனு சொல்லி இருக்க வேண்டுமோ?

SURYAJEEVA said...

விவசாயம்னா என்னன்னு தெரியாம பேசுவதாக குறை கூறியது நீங்கள் தான் தோழரே... எனக்கு விவசாயம் குறித்து தெரியவில்லை என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் என்று தான் கேட்டேன்? நீங்க விவசாயி என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்...
சரி அதை விடுங்க..
எனக்கு எந்தளவு விவசாயி குறித்து தெரியும்னு சொல்லிடுறேன்...
பொருள் மூலதனமும் போட்டு, உழைப்பு மூலதனமும் போட்டு, வருடம் முழுக்க கூழோ கஞ்சியோ குடித்து, ஆடம்பர வாழ்வு வாழாமல் வாயை கட்டி வயித்தை கட்டி தன் உழைப்பு முழுவதையும் என்றோ ஒரு சில பண்டிகைகளில் மட்டும் செலவு செய்து பொருள் மூலதனத்துக்கான லாபத்தை மட்டும் பார்த்து விட்டு, உழைப்பு மூலதனத்தை குறித்த எந்த கவலையும் இல்லாமல் வெள்ளந்தியாக ஒரு மனிதன்.. பிற மக்களின் கவலைகளை சோகமாக பார்த்து... ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஏமாந்து கொண்டிருப்பவன்... பங்கு வர்த்தக வணிகத்தால், உற்பத்தி அதிகம் செய்து நொந்து போகின்றவன்... எதையும் கூர்ந்து நோக்கி கெட்டியாக பிடித்துக் கொள்ளக் கூடியவன்...

பெரும்பாலான விவசாயிகளிடம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வேன் தோழர்...
ஊடகங்களை நம்புவதில்லை..
எந்த மண்ணுக்கு எந்த பயிர் என்றெல்லாம் தெரியாவிட்டாலும்.. விவசாயிகளின் வாழ்வு குறித்து தெரிந்து வைத்திருக்கிறேன்..
அது போதும் என்பது என் கருத்து...
விவசாயம் குறித்தும் தெரிந்து கொண்டு தான் விவசாயி குறித்தும் பேச வேண்டும் என்றால் கஷ்டம் தான்...

வவ்வால் said...

சூர்யா,

//விவசாயம்னா என்னன்னு தெரியாம பேசுவதாக குறை கூறியது நீங்கள் தான் தோழரே... எனக்கு விவசாயம் குறித்து தெரியவில்லை என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் என்று தான் கேட்டேன்? நீங்க விவசாயி என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்...//

அடேங்கப்பா என்னா ஒரு கண்டுப்பிடிப்பு முடியலை ... அவ்வ்வ்வ்!

நீங்க ஒரு விஞ்ஞானி என்பது இத்தனை நாளா எனக்கு தெரியாமப்போய்டுச்சே!

//பொருள் மூலதனத்துக்கான லாபத்தை மட்டும் பார்த்து விட்டு, //

இதாங்க பிரச்சினையே அவன் ப்பொருள் மூலதனத்திற்கான லாபம் பார்த்ததை எப்படி கண்டுப்பிடிச்சிங்க?

முதலுக்கே மோசம் வருது விவசாயத்தில ,உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று ஏதோ கம்மோட்டிடி மார்க்கெட் காலத்தில சொன்னது இல்லை, ஆண்டாண்டாக சொல்லப்படுவது.பட்டுக்கோட்டை பாட்டு இருக்கு ,

" காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்று அந்த காலம் முதல் இப்போ வரைக்கும் அதான் நிலைமை.

விவசாயம் லாபகரமாக இருந்தால் விவசாயி நல்லா இருப்பான், அப்புறம் தனியாக இங்கே விவசாயி எனப்பேசனுமா?

அடிப்படையிலேயே உங்க சித்தாந்தம் ஓட்டையாக இருக்கே!

இதனால தான் விவசாயம் பற்றி தெரிந்தா என்ன நடக்குதுனு புரியும் சொன்னேன். உங்களை விவசாயம் கூட செய்துப்பார்க்க சொல்லவில்லை, படித்து ,பார்த்து தெரிந்துக்கொண்டால் கூட போதும் என்று தானே சொன்னேன். ஆனால் எனக்கு தேவை இல்லைனு சொல்வீங்க, ஆனா தப்பு தப்பா கருத்துரை செய்வீங்க.

இப்போ கம்மோட்டி மார்க்கெட் பற்றி பதிவு போடுறிங்க அதை செய்தாப்பார்த்திங்க , குறைந்தப்பட்சம் படித்து, விசாரித்து தானே எழுதுறிங்க. அதைக்கூட விவசாயம் பற்றி பேசும் போது செய்யமாட்டேன், எனக்கு என்ன தோன்றுகிறதோ அதான் கருத்து என்றால் எப்படி?

//விவசாயம் குறித்தும் தெரிந்து கொண்டு தான் விவசாயி குறித்தும் பேச வேண்டும் என்றால் கஷ்டம் தான்...//

"இதே போல பங்கு வணிகம் குறித்து தெரிந்துக்கொண்டு தான் பங்கு வணிகம் குறித்து பேச வேண்டும் என்றால் கஷ்டம் தான்"

என வெளிப்படையாக சொல்வீர்களா? சொல்ல மாட்டிங்க ஏன் எனில் அதப்பற்றி பேச விஷயம் தெரியும் எனக்காட்ட வேண்டும் இல்லை என்றால் அறிவுஜீவி முகமூடி கிழிந்து விடும் இல்லையா? தெரியாத விஷயத்தை எப்படி குறை சொல்ல வந்தாய்னு பங்குவணிகம் தெரிந்தவர்ங்க பட்டென்று கேட்டு விடுவாங்க, ஆனால் இங்கே விவசாயிக்கேள்விக்கேட்க மாட்டான் என்ற தைரியம். ஏன் எனில் அவனுக்கு இணையம் வர வாய்ப்பில்லையே! :-))

SURYAJEEVA said...

சரிங்க தோழர்,
விவசாயி கஷ்டப் படுகிறான் என்று கூறியதை எல்லாம் விட்டு விட்டு, மீண்டும் உங்களுக்கு தேவையான பதிலை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள்.. நான் மேலும் வாதம் செய்வதால் மட்டும் விவசாயியின் கஷ்டம் தீரப் போவதில்லை... உங்கள் புது பதிவு பார்த்தேன், படிக்கிறேன்... ஆனா நான் அறிவு ஜீவி எல்லாம் கிடையாது... கற்றது எப்பொழுதும் கை மண் அளவு தான் என்று நம்பும் மனிதன்... அவ்வளவு தான்...

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html