Wednesday, January 23, 2013

என்ன கொடுமை சார் இது-10

(ஹி...ஹி...WISHINGரூபம் இது)

#சட்டி சுட்டதடா!

டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் விஷ்வரூபம் வெளியாகும் என லோகநாயகர் சொன்னப்போது பல விசிலடிச்சான் குஞ்சுகளும் யதார்த்தம் புரியாமல் மானாவாரியாக பினாத்தி வந்த போது ,உண்மையான நிலையை ஆதாரப்பூர்வ அலசி வெளியிட்டது , புள்ளி விவர ஆய்வுகளுக்கு புகழ்ப்பெற்ற ஒரு கில்லாடிப்பதிவர் மட்டுமே(ஹி...ஹி), ஆனால் உண்மையான நிலவரம் புரியாமல் பலர் ,லோகநாயகருக்கும் , அந்த கில்லாடிப்பதிவருக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு போல புனைவுகளை சொல்லி திரிந்தது செம காமெடி.

டிடிஎச் இல் வெளியீடு பின்வாங்கப்பட்டு திரையரங்கத்தில் வெளியிடுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்தப்போதும் "மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல என்ப்படம் நான் தான் தேதி சொல்வேன் என தத்துப்பித்துவென பேசினார் லோக நாயகர்,ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் சொன்ன தேதி தான் இப்போ படம் வெளியாகும் தேதி என்பது சொல்ல மறந்த கதை. :-))

500  தியேட்டர்கள் தமிழ் நாட்டில் தர முன்வந்துள்ளார்கள் ,அதனால் தான் டிடிஎச் இல் முதலில் வெளியிடவில்லை என தானாகவே வேற சொல்லிக்கிறார், கார்த்தி படமே சுமார் 700 தியேட்டர்களில் தமிழ் நாட்டில் வெளியாகும் காலமிது.

படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து டிடிஎச் இல் வெளியாகும் என்ற நிலை வந்த பின்னும், என் வழி பின்னால் பொது வழியாகும்னு புதுமை படைச்சாப்போல இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பது அதை விட பெரிய காமெடி.

படம் வெளியான பின்னர் டிடிஎச் இல் நான்காவது நாளிலேயே இந்திப்படங்கள் வருகிறது( இதனையும் முன்னரே சொல்லியாச்சு), அப்படி இருக்கும் போது ஏற்கனவே இருக்கும் வழியில் போய்விட்டு தானே புது வழியினை முதன் முதலில்  உருவாக்கியது போல ஒரு மாயத்தோற்றம் உருவாக்கி சிற்றின்பம் அடைவதேன் :-))


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்து, யூ டீவி தயாரித்த "கிராண்ட் மாஸ்டர் " என்ற மலையாளப்ப்படம் மே -3,2012 அன்று திரையரங்கில் வெளியான அன்றே அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸிலும் 'ராச நடைப்போட்டு' வெளியானது.

அப்போதெல்லாம் மலையாள திரையுலகில் பெரிதாக கரைச்சல் இல்லை ஏன் எனில் , படத்தின் பட்ஜெட் மற்றும் தியேட்டரில் அதிகம் வெளியாகாத இடங்களில் மட்டும் மாற்று முறையான நெட்ஃப்ளிக்ஸ், டிடிஎச் என வெளியானால் யாருக்கும் இழப்பு இருக்காது என்பதால் ஆகும்.

பெருவாரியாக திரையரங்கில் வெளியாகும் இடத்திலும் ஒரு நாள் முன்னதாக டிடிஎச் இல் வெளியிடுவது கண்டிப்பாக திரையரங்க வசூலை பாதிக்கும் என்பதால் தான் தமிழகத்தில் எதிர்ப்பு, ஆரம்பத்தில் டிடிஎச் இல் பணம் கூறையைப்பிய்த்துக்கொண்டு கொட்டும் என மனக்கணக்குப்போட்டு செயல்ப்பட்டதன் ,பலன்  பொங்கல் அன்று வெளியிட முடியாமல் போனதே, பொங்கலை ஒட்டி சுலையாக ஐந்து விடுமுறை நாட்கள் கிடைத்தது ,படம் வெளியாகி இருக்குமானால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கும், அதனை இழந்தது தான் மிச்சம். படு மொக்கையான அலெக்ஸ் பாண்டியன் கூட பொங்கல் விடுமுறையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கல்லாக்கட்டியது. எனவே படம் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் சேதாரம் இல்லை.

மேலும் டிடிஎச் புக்கிங்கில் பெரிய அளவு வருமானம் வரவில்லை, ரசிகர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், லோகநாயகருக்கு பெரிய ரசிகர்கள் பின்ப்புலம் இருக்கு என்ற மாயையும் உடைந்துப்போனது தான் மிச்சம்!

இதில் அல்வா வாங்கியது , லோகநாயகர் சொன்னதை நம்பி 1000 ரூவா பணங்கட்டிய சில,பல ஆர்வக்கோளாறு அப்பாவிகள் தான், படம் தியேட்டரில் வெளியான பின் டிடிஎச்சில் பார்க்க ஆயிரம் என்பது டைரக்ட் டு ஹோம் கொள்லை :-))

பெரிய பட்ஜெட்டில் லோகநாயகர் நடித்தால் விலைப்போகாத நிலை உள்ளது என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது, எனவே இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளரும் லோகநாயகரை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.

எந்த ஒரு நடிகருக்கும் படம் எளிதாக கேட்ட விலைக்கு போகும் நிலையை வைத்தே "மார்க்கெட்" உள்ளது என்பார்கள், எப்பொழுது ஒரு நடிகரின் படத்தினை சொன்ன விலைக்கு வாங்க ஆள் இல்லையோ அவர்களுக்கு மார்க்கெட் போய்விட்டது என்பார்கள் சுருக்கமாக "ஃபீல்ட் அவுட்" என்பார்கள்.

கிட்டத்தட்ட "ஃபீல்ட் அவுட்" நிலைக்கு லோகநாயகரே தன்னைக்கொண்டு போய் நிறுத்திக்கொண்டார் எனலாம், இனி தயாரிக்கவும், வாங்கவும் திரையுலகில் அனைவரும் தயங்குவார்கள், சொந்தமாக தயாரித்து, வெளியிட்டுக்கொண்டால் மட்டுமே களத்தில் நிற்க முடியும் என்ற நிலைக்கு தானே உள்ளாக்கி கொண்டு விட்டார்.

இத்தனை நாளும் லோகநாயகரின் படங்கள் எம்ஜியில் விலையானது , டிடிஎச் இல் பெரிதாக பணம்  வரும் என்ற நப்பாசையில் சதவீதத்தில் வெளியிடுகிறேன் என ஒப்புதல் வாக்கு மூலம் வேறு கொடுத்துவிட்டார், எனவே டிடிஎச் இல் வெளியாகாத நிலையிலும் இப்பொழுதும் சதவீதத்தில் தான் வெளியாகிறது, எனவே இனி வருங்காலத்தில் லோகநாயகர் படம் வெளியானாலும் சதவீதத்தில் வெளியிட சொல்வார்கள், இவ்வாறு வெளியிடுவது தயாரிப்பு தரப்புக்கு பெரிய " ரிஸ்க்" எனவே இனிமேல் வெளித்தயாரிப்பாளர்கள் யாரும் முன் வந்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.

எனவே விஷ்வரூபம் என்ற ஒரே படத்தின் மூலம் லோகநாயகரின் தமிழ் சினிமா பயணம் ஒரு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது  எனலாம், படம் வெளியாகி வெற்றிகரமாக தயாரிப்பு செலவினை மீட்டெடுத்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி மூச்சு விடமுடியும்.

ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல இஸ்லாமிய அமைப்புகள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டன  இந்த இடத்திலும் லோகநாயகரின் தப்புக்கணக்கே காரணம்.

படம் தயாரிக்கப்பட்டு ரொம்ப நாட்களாகிறது , ஜனவரி 11 இல் வெளியாகும் என்ற நிலை இருந்தப்போது கூட படத்தினை போட்டுக்காட்ட எண்ணவில்லை,இத்தனை நாளாக போட்டுக்காட்டாதவர் திடீர் என ஏன் போட்டுக்காட்ட வேண்டும்? இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என நினைத்து போட்டுக்காட்டினார், ஆனால் அவர் எதிர்ப்பார்த்ததைவிட எதிர்ப்பு அதிகமாகி , வளைகுடா நாடுகளில் தடை என பிரச்சினை விஷ்வரூபம் எடுத்துள்ளதால் இப்பொழுது பின்னால் பற்றிக்கொண்டது :-))

மேலும் சமீபத்திய செய்தியாக , தமிழக அரசும் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஜெயா டீவிக்கு சேட்டலைட் உரிமம் கொடுத்துவிட்டதால் எதிர்ப்புகள் வராது என பலரும் சொன்ன நிலையில் , இச்செய்தி ஒரு திருப்பு முனை எனலாம், அனேகமாக டிடிஎச் ஒளிப்பரப்பில் சன் டிடிஎச் ஐயும் சேர்த்துக்கொண்டதன் பின் விளைவாக இருக்கலாம் என நினைக்கிறேன்.


தணிக்கை அறிக்கை:



http://cbfcindia.gov.in/html/uniquepage.aspx?lang=TAMIL&va=vishwaroopam&Type=search

படத்தில் ass, bitch, bastard, matherchood , போன்ற வசைச்சொற்கள் ஒலிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, வெடித்து சிதறுவது, கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் உட்பட 10 வெட்டுக்களுடன் U/A  கொடுத்துள்ளார்கள்.

அரசியலமைப்புள்ள ஒரு நாட்டில், சட்டப்பூர்வமாக இயங்கும் தணிக்கை அமைப்பால்  பொது மக்கள் பார்க்கலாம் என சான்றளிக்கப்பட்ட பின் , அதில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையது அல்ல ,வெளியிட கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது யதேச்சதிகாரம் ஆகும்.

இப்படி படத்தினை போட்டுக்காட்டாமல்,துப்பாக்கி பட பாணியில்  வெளியிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு காட்டினால் ,கொஞ்சம் கட் செய்து விட்டோம்னு சொல்லி ஒரு அறிவிப்பு விட்டு இருக்கலாம் , கூடுதலாக அடுத்த படத்தில் ஒரு இஸ்லாமியராக நடிப்பேன், ஒரு இஸ்லாமிய பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைப்பேன்னு சொல்லி சமாதானக்கொடியை ஆட்டியிருந்தால் துப்பாக்கி போல ஹிட் ஆகிடும்:-))



துப்பாக்கி படம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காரைக்காலில் ஷமினா என்ற தியேட்டரில் 25 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது, தியேட்டரும் இஸ்லாம்மியருக்கு சொந்தமானது ஆகும்.

எப்படி எனில் படத்தில அப்படி என்ன நம்மளைப்பத்தி தப்பா சொல்லி இருக்காங்கன்னு பார்க்க ஒரு தடவை படம் பார்ப்பாங்க, அப்புறம் சொன்னாப்போல காட்சிகள் நீக்கி இருக்கானு உறுதி செஞ்சுக்க இன்னொரு தடவை படம் பார்ப்பாங்க ,எனவே படம் கண்டிப்பா ஹிட் ஆகிடும் :-))

லோகநாயகர் இனியும் நிம்மதியா நல்ல முறையில் படம் எடுக்கணும் என்றால் அவரை சுற்றி இருந்துக்கொண்டு  தப்பா ஆலோசனை வழங்கும் விசிலடிச்சான் குஞ்சுங்க கூட்டத்தினை விரட்டிவிட்டாலே  போதும் அவரு பொழச்சுப்பார்.

ஹி...ஹி அப்படியே ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை வேண்டுமெனில் என்னைப்போன்றவர்களை அனுகலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
***********

# திருட்டு கரும்பு இனிக்கும்!

இந்த கொடுமையும் லோகநாயகரை முன் வைத்தே, டிடிஎச் இல் வெளியிடுவது திருட்டு டிவிடியை ஒழிக்கும் என ஆருடம் சொன்னார், ஆனால் மக்கள் திருட்டு டிவிடி தியேட்டரை விட விலை மலிவாக இருப்பதால் தான் பார்க்கிறார்கள் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டார்.

டிடிஎச் இல் பார்க்கும் கட்டணம், நியாயமானதாகவும், படம் நன்றாக இருந்தால் மட்டுமே டிடிஎச் இல் பார்ப்பார்கள், ஒரு படம் டிடிஎச் இல் வருகிறது என்பதற்காகவே அனைவரும் பார்க்க மாட்டார்கள்.

திருட்டு டிவிடியை ஒழிப்பது என்பது தயாரிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. சிங்கப்பூர் ,மலேஷியா, அமெரிக்காவிற்கு விற்கப்படும் திரைப்படங்களில் இருந்து தான் திருட்டு டிவிடி தயாராகிறது, அதனை திருட்டு டிவிடி என சொல்வதே தவறு , அய்ங்கரன், லோட்டஸ் ஆகிய நிறுவனங்கள் 5.1 இல் தரமான டிடிவிடிக்களை விற்கிறார்கள், அதுவும் பெயர், ,முகவரி தொலைப்பேசி எண் , இமெயில் எல்லாம் விலாவாரியாகப்போட்டு :-))



டிவிடியில் முகவரி...


அமெரிக்கா, சிங்கப்பூர் ,மலேஷியாவில் டிவிடி விற்கும் உரிமையா கொடுத்தார்கள், விநியோக உரிமைத்தானே கொடுத்தோம் என இந்த தயாரிப்பாளர்கள் ஏன் கேட்பதில்லை?

அப்படிக்கேட்டால் வெளிநாட்டு விநியோக உரிமையை ஒருத்தரும் வாங்க மாட்டாங்க ,எனவே வந்த வரை லாபம் என  கேள்வியே கேட்காமல் வெளிநாட்டுக்கு விற்கிறார்கள் ,அவர்களும் டிவிடி தயாரிச்சு உலகமெங்கும் விற்கிறார்கள், தமிழ்நாட்டில் ஒரு வாரத்திலேயே தரமாக 5.1 இல் டிவிடி கிடைப்பது இப்படித்தான்,இதில் படம் வந்ததும் ஹீரோவும், தயாரிப்பாளரும் திருட்டு டிவிடிஐ ஒழிக்க வேண்டும் என கமிஷ்னர் அலுவலம் போய் பேட்டிக்கொடுப்பதை பார்த்தால் உலகமகா நடிப்புடா சாமினு சொல்ல தோன்றும் :-))

இந்த கொடுமையில இன்னொரு கொடுமையும் சேர்த்தே சொல்லுறேன், டிடிஎச் இல் வெளியாகிறது என செய்தி வந்ததுமே  ,ஒரு கத்துக்குட்டி,300 கோடிக்கு புக்கிங் ஆகி சரித்திர சாதனைனு முகநூல் ,வலைப்பதிவு  போஸ்டர் ஒட்டியது , அப்படி புரளியக்கிளப்பிவிட்டவர் இதே போல பல புரளிகளை கிளப்பிவதில் வல்லவர், ஒரு காலத்தில் நடிகை சினேகவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் செய்யப்போவதாக ஒரு புரளியைக்கிளப்பியவர்.

மேற்படி நபர் ,மச்சக்காரன் படத்திற்கு சிங்கப்பூர் ,மலேஷிய விநியோகம் வாங்கிவிட்டு திருட்டு டிவிடி தயாரிக்க முயன்றப்போது கையும் களவுமாக மாட்டி உதைக்கூட பட்டார்னு செய்தியுண்டு, திரையுலகில் இருப்பவர்களுக்கு எப்படி திருட்டு டிவிடி உருவாகிறது ,யார் செய்கிறார்கள் என தெரியும், ஆனாலும் எந்த முயற்சியும் செய்யாமல் ,புதுசு புதுசா ஒரு காரணம் சொல்வதே வாடிக்கையாகப்போய்விட்டது.

செய்தி:

Nag Ravi Corporate Chief or Thief
Posted by Editor on November 9th, 2007
Nag Ravi Corporate Chief or Thief

Insight Media has offices in Singapore, Canada, New Zealand, Malaysia, UAE, USA and Mauritius with Head Quarters in Chennai.. Insight’s local and overseas distributions include Sivaji, Kireedam, Veerappu and the forthcoming, Bommalattam, Machchakkaran and Vambusandai. Besides Tamil film audio, the company has also brought out a VCD titled Padmini .

The Legend on the legendary actor and educational CDs at rock bottom prices to contain piracy. The ostentatious Nag Ravi, also known as Sneha’s former lover was caught in the act of taking a camera print of Machakaran at Devi Sridevi preview theatre. Ravi was beaten up by the producer Nanthagopal but he managed to escape and is now absconding, while the manager of the preview theatre Eknath and the operator was also beaten up. Ravi and his Insight Media were the overseas distributors of Machakaran. They had taken seven prints of the film from the Lab, but only dispatched six of them on Tuesday evening mainly to Malaysia and Singapore.

http://www.kollywoodtoday.net/news/nag-ravi-corporate-chief-or-thief/

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!

என்ன கொடுமை சார் இது!

*******************

# அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

அஞ்சா நெஞ்ச அண்ணனும், காமாண்டர் தம்பியும் அக்னி நட்சத்திரமாய் அவ்வப்போது உரசிக்கொள்வது வழக்கம், அடுத்த தலிவரு தம்பித்தான்னு சொன்னதும் சங்கரமடமா இதுனு அண்ணன் சாமியாடினார்.

அதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னர் , எனது எதிரிகளை இயற்கை பார்த்துக்கொள்ளும்னு சாபம் எல்லாம் விட்டது நினைவிருக்கும். இதனை வைத்து சில அரசியல் வதந்திகளும் அப்போது உலவியது, ஆனால் அதில் உண்மை இருக்குனு  நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒரு தகவலும் உலாவுது(எந்த அளவுக்கு நம்பகம்னு தெரியாது கேள்விப்பட்டதை சொல்கிறேன்),  இளையவர் இப்பொதெல்லாம் அடிக்கடி லண்டன் பயணமாவதே மருத்துவ சோதனைக்கு தான் எனவும் ,அவருக்கு ஆரம்ப நிலை இரத்தப்புற்று நோய் எனக்கண்டுப்பிடித்திருப்பதாகவும், அதற்கு ரகசிய சிகிச்சை எடுக்கவே ஏதேனும் ஒரு காரணத்தினை முன்னிட்டு லண்டன் செல்வதாக சொல்கிறார்கள், ஒராண்டுக்கு முன்னர் இருந்தே சிகிச்சை நடக்கிறதாம்.இப்பொழுது அரசல் புரசலாக பலருக்கும் தகவல் கசிந்து , கட்சியின் மேல்மட்டத்திலேயே சூடாகப்பேசப்படும் வதந்தி இது தான்.

இதனை நம்புவதா வேண்டாமா என தெரியவில்லை!

என்ன கொடுமை சார் இது!
-------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

CBFC.gov.in,kollywoodtoday.net, wiki, google,இணைய தளங்கள் நன்றி!
---------------------

34 comments:

ராஜ நடராஜன் said...

நான் தான் போணியா?

ராஜ நடராஜன் said...

நானேதான்!இப்ப ஆட்டத்தை துவங்கிடலாம் மிஸ்டர் புள்ளி விபரம்.

படம் தடைக்கு ஜெயலலிதா சரி சொன்னதுக்கு காரணம் சன் தொலைக்காட்சி என்பதை விட இஸ்லாமிய தேர்தல் கூட்டணியரை சமாதானப்படுத்தவும்,வரும் பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய வாக்கு வங்கியை சிதைக்காமல் இருப்பதற்காக என்பது இன்னும் யதார்த்தமாக இருக்குமே!

கமலின் நடிப்புக்கு யாரும் விசில் அடிப்பதில்லை என்பதும் மூளை உணர்வுகள் சார்ந்தது என்பதுவே கமலுக்கான அங்கீகாரம்.

அலெக்ஸ் பாண்டியனுக்கெல்லாம் திருடாத டிவிடி கேட்கும் ரசனை சார்ந்ததல்ல கமலின் திரைப்படங்கள்:)

ராஜ நடராஜன் said...

எப்பவோ ஞாநி போட்ட நாடகத்துக்கான தீர்ப்பு இப்பொழுதுதான் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்குது.

The ban on screening the film came on a day the Madras High Court ruled that the State government had no power to prohibit plays or insist on prior police permission to stage them.

எப்பொழுது தணிக்கை குழு ஒரு படத்தை ஏதாவது ஒரு முத்திரையுடன் வெளியிடலாமென முத்திரை குத்துகிறதோ அந்தப் படம் வெளியாவதே சரியான ஜனநாயக முறையாகும்.

நீங்க தப்பிச்சுகிட்டீங்க.இல்லைன்னா தடை செய்!தடை செய்!வவ்வாலை தடை செய் என தமிழ்மணத்துக்கு பிராது கொடுத்திருப்பேன்.

இங்கே தொடர் பின்னூட்டங்கள் போடும் நக்ஸ்,நந்தவனத்தான் யாரையாவது நானும் தமிழ்மணத்திடம் போட்டுக்கொடுக்கலாம்ன்னு பார்த்தால் அந்தப்பக்கமா வருவதே காணோம்:)

மாட்டுனா சார்வாகன்,ஸிங்கத்தை கவனிக்கலாம்ன்னு பார்த்தால் சேக்காளிகளா இருக்காங்க:)

வவ்வால் said...

ராச நட ,

வாரும்,நன்றி!

போணியோட ,3 பின்னுட்டமும் :-))

//இஸ்லாமிய தேர்தல் கூட்டணியரை சமாதானப்படுத்தவும்,வரும் பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய வாக்கு வங்கியை சிதைக்காமல் இருப்பதற்காக என்பது இன்னும் யதார்த்தமாக இருக்குமே!//

உமது அரசியல் அவதானிப்பு கத்துக்குட்டி தனமா இருக்கு ஓய்,

அம்மையாரை எப்பொழுதும் இந்துத்வா ஆதரவாளராகத்தான் சிறுபான்மையினர் பார்ப்பார்கள், எனவே இது போல சித்து வேலையை வைத்து முடிவெடுக்க மாட்டார்கள், மேலும் மத்தியில் தேர்தலுக்கு ஒராண்டுக்கு மேல் உள்ளதால்ல் இப்போது செய்வதை அது வரையில் நினைவில் வைத்திருக்க வாய்ப்பும் இல்லை, அதற்குள் எத்தனையோ காட்சிகள் அரங்கேறலாம்.

காங்கிரசை வீழ்த்துவது அம்மையாரின் நோக்கம், ஆனால் காங்கிரஸ் தான் இருக்கவேண்டும் என்பது சிறும்பான்மையினரின் ஆசை, மத்தியில் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் அம்மையாரின் ஆதரவை கேட்டால் பிஜேபிக்கு தான் கொடுப்பார் ,அல்லது பிஜேபி ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆசைப்படுவார் என்பதே தற்போதை அரசியல் நிலவரம், இது எதுவுமே சிறுபான்மையினரின் விருப்ப அரசியல் அல்ல.

அப்படியிருக்க இதனை வோட்டு அரசியல் என சொல்ல இயலாது. மேலும் சேட்டலைட்ஸ் உரிமை வாங்கியப்போது இப்படம் என்ன மாதிரியானது என தெரியாமலா வாங்கினர்கள்?

படத்தினை போட்டுக்காட்டாமல் இருந்தால் , படம் வெளியாகி இருக்கும், படத்தினை பார்த்த பின் எதிர்ப்பு பலமாக இருக்கவும், ஏற்கனவே டிடிஎச் இல் சன்னை கூட்டு சேர்ந்த கடுப்பும் சேர்ந்துக்கொள்ள தடையை போட்டாச்சு.

ஓசி விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு உள்ளதும் போச்சுடா கதையாகிடுச்சு :-))

#ஹி...ஹி லோகநாயகர் படத்த பார்த்தப்ப்பிறகு விசில் அடிச்சா வெரும் காத்து தான் வருமாம் :-))

# பதிவை சரியாக என்னிக்கு தான் படிப்பீங்களோ, முக்கா கண்ணால படிப்பிங்க போல :-))

நானும் என்ன சொல்லி இருக்கிறேன் சட்டப்பூர்வமான தணிக்கை அமைப்பால் சான்று அளிக்கப்பட்ட படத்தினை வெளியிட தடை விதிப்பது எதேச்சதிகாரம்னு தான் சொல்லி இருக்கிறேன்.

நம்மை எல்லாம் தடை செய்ய யாராலும் முடியாது ஏன்னா நான் அதுக்கு முன்னர் அவங்களை தடை செய்துடுவேன் :-))

திரட்டிகளின் தரவரிசை ,ஹிட்ஸ்க்காக எழுதுபவர்கள் தான் உங்க பூச்சாண்டிக்குலாம் கவலைப்படுவாங்க :-))

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல ..நான் தான்டா என் மனசுக்கு ராஜா ....:-))

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் ரசம் சாதம் ஒரு பிடி பிடிச்சேன்.இப்ப உங்களையும் ஒரு புடி புடிக்கலாம்.

நீங்கதானே டி.விக்கு முன்னாடி உட்கார்ந்துகிட்டே திருட்டு வீடியோ புடிக்கலாம்ன்னு ஆலோசனை சொன்னது.அந்த லட்சணத்துல மார்க்க பந்துக்களுக்கும் முன்னாடியே படம் போட்டுக்காண்பித்திருந்தால்ன்னு ஐடியா கொடுக்கிறீங்களே!

இதுவும் போதாதுன்னு மதுரை,திருச்சி,கோயம்ப்த்தூர்,சென்னை என லாட்ஜ் போட்டு வைத்தியம் பார்க்கும் பாணியில்

//ஹி...ஹி அப்படியே ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை வேண்டுமெனில் என்னைப்போன்றவர்களை அனுகலாம் :-))//

என பதிவில் வேற விளம்ப்ரம்.

என்ன கொடுமை சார் இது:)

ராஜ நடராஜன் said...

கிசு கிசு பாணியில் தினத்தந்தியின் கடைசி பக்கத்துல கொஞ்சம் அரசியல் பேச வேண்டியது.அப்புறம் அடுத்தவனுக்கு கத்துக்குட்டி பட்டம் கொடுக்க வேண்டியது.

என்ன கொடுமை நடராஜா:)

ஜெயலலிதாவின் கனவே சிந்தாம சேதாரமில்லாமல் 40/40.நீங்க வனவாசம் போன காலத்துல சன் டிவி கூட சேர்ந்துகிட்டே உள்குத்து வேலை செய்வதாக வலையுலக கிசு கிசு.இதுல சண்டிவிக்கு கொடுத்த கடுப்புன்னா? கதையப் பாரு கதையை.

வவ்வாலின் கண்ணுக்கு புலப்படாமல்,ராஜபார்வைக்கும் தப்பியும் கூட சில பின்புலங்கள் இருக்கலாம்.அவை காவல் துறை ஆணையாளர் ஜார்ஜ் போன்றவர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாக கூட இருக்கலாம்.

சேருவதே நாலு தொடர் மொக்கையன்கள்.இதுல வேற தடை ஆசையாக்கும்:)

ராஜ நடராஜன் said...

நீங்க அய்ங்கரன்,லோடஸ் டிவிடிக்கள் பற்றி சொல்லியது எப்படி திருட்டு வீடியோக்கள் தரத்தில் கிடைக்கின்றன என்ற உண்மையை சொன்னாலும் இன்னும் சில தமிழ்ப் படங்கள் இவர்களையும் நம்பாமல் டோரண்ட்டில் தரமிறக்கி விடுகிறார்கள்.இதுவாவது பரவாயில்லை.சைனாக்காரனுக்கும் சரத்குமார் படம் வெளியாவதற்கும் முன்பே இணையத்தில் வெளியானதிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இந்துத்வாக்களின் அகண்ட பாரதம்,இஸ்லாமிய உலகமயமாக்கல் கனவு முடியுதோ இல்லையோ விரிந்த கண்ட திருட்டு வீடியோக்கள் மட்டும் சாத்தியமாகிறது.

இடது சாரி சிந்தனைகள் கொண்டோ அல்லது சமூக சிந்தனைகள் சார்ந்தோ பொது ஊடக மொக்கைப்பார்வைகளுக்கும் வெளிப்படாத ஆன்லைன் திரைப்படங்கள் கையில காசு வாயில தோசை என கிடைக்கின்றன.ஆனால் நெட்பிளிக்ஸின் துரித வேக தரவிறக்கத்தை அடைய முடியவில்லை.

அம்மாம் பெரிய இசைத்தட்டுகள் வேண்டாம்ன்னுதான் வீடியோ + இசை டேப் ரெக்கார்டர் வந்தது.அதையும் 8எம் எம்ன்னு சோனிக்காரன் இன்னும் சுருக்கினான்.கிழிஞ்சு போகுதேன்னே கவலையில்தான் வி.சி.டி வந்தது.கொள்ளளவு பத்தாதுன்னு டிவிடி வந்தது.உரிய நேரத்தில் வாடகை டிவிடியை திருப்பிக்கொடுக்கவில்லையென்ற காரணத்தால்தான் நெட்பிளிக்ஸ் டிவிடி கட்டாமலே வச்சுக்கலாம் (அபராதம்)தொழில்நுட்பம் வந்தது.கெரகம் எத்தனை டிவிடியை வாங்கி அடுக்குறதுன்னுதான் நெட்பிளிக்ஸ் ஆன்லைன் முறையும் வந்தது.

நெட்பிளிக்ஸை மீறிய குறும் பட,செய்தி,இசை தயாரிப்புக்களுக்காக இன்னும் கூட புதிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன.டி.டி.ஹெச் அதனோடு இணைந்த ஒன்றாக இருக்குமென நினைத்தால் கமலின் மீது பாயும் கணைகளை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.





நாய் நக்ஸ் said...

Walking king.....

Comp.....4 days ...ppm....
Come after.....

By
mobi........

Naan ellaam 6 vathu
pathivu podum pothey-----

very starting....period...

TM-i thookki pottavan....
He...he...

Athuvum..TM vs KUMMI
ppm appa....3 days....
Vidaamal....comment
pottavan.....

Valarum pothey.....
Naangal ellam....
Appadi......

He...he....

Come back after......!!!!!!

வவ்வால் said...

அன்பின் சரஸ்வதி டீச்சர் w/o பிரம்மா,

தங்களுக்கு அனேகக்கோடி நமஷ்காரங்கள் உரித்தாகட்டும்.ஒரு அவசரக்கால உதவியாக உடனடியாக நல்ல தமிழை ராச நடைக்கு கற்றுக்கொடுக்கவும் இல்லை எனில் அவருக்கு விளங்கும் தமிழை எனக்கு கற்றுக்கொடுக்கவும், இதனால் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

இப்படிக்கு

அடியார்க்கு நல்லான்,

வவ்வால்!

ராச நட,

தமிழ்சை சரியா கற்றுக்கொள்ளும் ,அரைகுறையா படிச்சிப்ப்புட்டு என் பிராணனை வாங்காதீர்.

மார்க்கப்பந்துக்களுக்கு படத்தினை போட்டுக்காட்டாமல் துப்பாக்கிப்பொல வெளியிட்டு விட்டு ,பின்னர் சமாளித்திருக்கணும் என சொன்னால் அதற்கு சரியாக எதிராக ஒன்றை நீரே எப்படி உருவாக்கி புரிந்துக்கொண்டீரோ?

# தெரியாதவருக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுப்பது ஒரு சேவையல்லவா?

இப்போ லோகநாயகர் கேட்டால் கூட நம்மால் படத்தினை பட்டி டிங்கரிங் பார்த்து எதிர்ப்பேயில்லாமல் வெளிவர செய்துவிட முடியும், அதற்கு முதல் வேலையாக படத்தில ஹீரோ பேர இஸ்லாமிய பேராக்கிடணும் :-))

டப்பிங்கில் சரி செய்துவிடலாம் இதை.

அதுக்கப்பறம் சில பல ,கிராபிக்ஸ் வேலை செய்தால் போதும் இதே படத்தினை மார்க்கப்பந்துக்கள் சீசன் டிக்கெட் எடுத்து பார்ப்பார்கள் :-))

# நீர் இன்னும் கற்காலத்தில் இருக்கீர், சமகால அரசியல் நிலவரம் இன்னும் தெரியலை, அரசு கேபிள் டீவி வரவிடாமல் டெல்லியில் லாபி செய்து தடுத்தது கேடி பிரதர்ஸ் தான் என செம காண்டில இருக்காங்க அம்மையார்.

தமிழ்நாட்டில் அரசு கேபிளை வர வைக்க கூட சட்டப்படி வழி இருக்கு, ஆனால் அதை நான் சொன்னால், யாராவது சொல்லி நல்லப்பேரு வாங்கிடுவாங்க, அதனால சொல்லமாட்டேன் :-))

உயர் நீதி மன்ற நீதிபதி ,ஜார்ஜ் என்றால் செயிண்ட் ஜார்ஜ்க்கோட்டைக்கே அதிபதியா என கேட்டு காய்ச்சியதை எல்லாம் அறிய மாட்டீர்கள் போல :-))

இன்னும் எத்தனைக்காலத்துக்கு தான் நக்கீரன் பத்திரிக்கையே படிச்சி அரசியல் தெரிந்துக்கொள்வீர் :-))
----------------
# சைனாக்காரனா தமிழ்நாட்டில படம் எடுத்தான், அதுவும் உள்ள பூந்து பார்த்தால் தமிழனா தான் இருக்கும்.

எனக்கென்னமோ அடுத்த ஜக்குபாய் விஷ்வரூபம் தான்னு தோணுது :-))

திருட்டு டிவிடியை ஒழிக்கணும்னு கூவுறவங்க அட்ரஸ் போட்டு விக்குற அய்ங்கரன், லோட்டஸ் மீது புகார் கொடுக்க வேண்டியது தானே? அதை சிந்திக்க மாட்டிர்களா?

வெளிநாட்டுக்கு பல்லை காட்டிக்கிட்டு விக்காம கண்டிப்பாக விதிமுறைகளுடன் ஒப்பந்தம் போடக்கூட முடியாதவர்கள் திருட்டு டிவிடி பத்திலாம் பேசக்கூடாது.

//ஆனால் நெட்பிளிக்ஸின் துரித வேக தரவிறக்கத்தை அடைய முடியவில்லை.//

உங்களுக்கும் தொழில் நுட்பத்திற்கும் ஸ்னான பிராப்தி கூட இருக்காது போல.

எந்த இணைய சேவை வழங்கியாக இருந்தாலும், அவர்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப வேகம் கிடைக்கும், நெட் ஃப்ளிக்ஸ் அதிக கட்டணம் கொடுத்து ,அதிக பேண்ட் வித் வாங்கி சேவை வழங்குகிறது, காசு இருந்தால் எல்லாம் நடக்கும், இதனை என்னமோ நெட் ஃப்ளிக்ஸ் தொழில்நுட்பம்னு பேசுறிங்களே ,சிந்திக்க மாட்டீர்களா?

மேலும் என்ட் யூசர் இணைய வேகம் மெதுவா இருந்தால் நெட் ப்ளிக்ஸ் வேகமா வந்திருமா என்ன?

கூகிள் விட வேகமான செர்வர், இணைய கேட்வே நெட் ஃப்ளிக்ஸ் வச்சிருக்கா என்ன?
-------------

நக்ஸ் அண்ணாத்த,

வாங்க நன்றி!

ராச நடைக்கு இன்னும் யார் எப்படினே புரியலை :-))

அவருக்கு தமிழ்மணத்தில இருப்பவர்கள் மட்டுமே பிராபல்யப்பதிவர்கள்னு மனப்பிராந்து :-))

என்ன பெரிய தொழில் நுட்ப தளமாக இருந்தாலும் சரி , எண்ட் டு எண்ட் இணையத்தில் செயல்படும் வேகம் தான் முக்கியம்.

சார்வாகன் said...

வணக்கம் நண்பா,
நல்ல அலசல். நம்ம லோக நாயகருக்கு விஸ்வரூபம் ஆரம்பித்ததில் இருந்தே சரியாக திட்டமிடவில்லை எனத் தெரிகிறது.
1. திருட்டு விசிடி காலத்தில் 60 கோடிக்கு திரைப்படம்.
2. டிடிஎச்சில் முயன்று தோல்வி.

3.சரி திரையரங்குக்கு கொடுக்க்லாம் என்றால் நம்ம சகோக்களின் குழுத் த்லைவர்களுக்கு த்னையாக போட்டுக் காட்டினால் விள்ங்குமா?
விவாதத்தில் குரான் ஹதிதில் இருந்து காட்டினாலே கடப்பாரையை முழுங்கி சுக்கு கஷாயம் குடித்து அதுதான் இது என்பார்கள் நம் சகோக்கள்.

இவரு எடுத்த படத்திற்கு குரான்,ஹதிதில் சான்று காட்டி ஹலால் என நிரூபிப்பது நடக்கும் விஷய்மா?

அவர்களுக்கு போடாமல் ரிலீஸ் செய்து இருந்தால் பிரச்சினை பண்ணுபவர்களை கொஞ்சம் கவனித்தால்[டொக்டொர் விசயிடம் கலந்து இருக்க்லாம்] சரியாக போய் இருக்கும்.

அங்கே யாரு மிக பெரிய மத பாதுகாவலன் என குழு மோதல் இருக்கும் போது, ஒரு மதக் குழு ஆள் படம் பரவாயில்லை என்றால் அவருக்கு காஃபிர் பட்டம் கிடைத்து ஹூரி கிடைக்காதே!! ஹி ஹி

ஆகவே அனைவரும் படம் எப்படி இருந்தாலும் எதிர்ப்பார்கள்.


இதில் பாராளுமன்ற தேர்தல் மன‌தில் வைத்து அரசும் தடை விதித்து விட்டது,மிகப் பெரிய வரலாற்றுத் தவறு!!

ஆர்.கே செல்வமணியின் குற்றப் பத்திரிக்கை ஞாபகம் வருகிறது. ஒளி ஓவியர் கர்ணனுக்கு பிறகு துணிச்சலாக படம் எடுப்பார் ஹி ஹி

குஜராத்தில் ரிலீஸ் பண்ணினால் யாரும் எதிர்க்க மாட்டார்!

மோடியாய நமஹ!!
**
வவ்வால்'னு படம் பேரு வைத்து இருப்பதற்கு நாமும் சிலம்பலாமா ஹி ஹி

லோக நாயகர் பகவத் கீதை படிக்க்லாம்.

எது நடந்ததோ நன்றாகவே நடந்தது?
....

படம் எடு ,இலாபத்தை எதிர்பார்க்காதே!! ஹி ஹி

நன்றி!!

கோவை நேரம் said...

வவ்வால் யூகம் சரிதான்..இளையவருக்கு ரொம்ப வருசமாவே இருக்கு..இரண்டு வருடங்களுக்கு முன்பே கேள்விபட்டு இருக்கிறேன்,,,

அஞ்சா சிங்கம் said...

யோவ் வவ்ஸ் உமக்குன்னு நேர்ந்து விட்ட கோழி அசின் இருக்கும்போது .
எங்க சங்கத்து தலைவி காஜலை எதுக்கு ஓட்டீட்டு வந்தீரு ...எங்க சங்கத்து ஆளுங்க பார்த்தாங்கன்னா கலவரம் ஆகிடும் .
சட்ட ஒழுங்கு பிரெச்சனை வரலாம் அதனால் அந்த காஜல் படத்தை எடுத்து விடவும் ..
ஆளாளுக்கு சொம்ப தூக்கிட்டு கிளம்பிடுறாங்க . நாம என்ன கலர் ஜட்டி போடலாம்ன்னு இவங்க தான் இனிமேல் தீர்மானிப்பாங்க போல இருக்கு .
கொஞ்சூண்டு கிடைக்கிற அந்த ஓட்டுக்காக அரசியல் கட்சிகளும் ஒத்து ஊதுறாங்க. இது ரொம்ப ஆபத்தான முன்னுதாரணம் .
ஆனால் ஒன்னு பத்து வருடத்திக்கு முன்னாள் குஜராத்தில் ஒரே ஒரு கலவரம் நடந்தது . இன்று வரை அது அமைதி பூங்காவாக இருக்கு .
மேடையில் மோடி பாஷா மாதிரி இருக்க மத தலைவர்கள் எல்லாம் வரிசையில் வந்து மோடி கையில் முத்தம் இடுகிறார்கள்.
நாம ஒன்னும் செய்ய வேண்டாம் இவங்களே மோடியை பிரதமர் ஆக்காமல் விடமாட்டாங்க ...............தேவர் மகன் கமல் போல் வாசிக்கவும்
(கடைசியில் என்னையும் மோடி ஆட்சிக்கு வந்தால் நல்லா இருக்கும்ன்னு பேச வச்சிட்டீங்களே )

யோவ் பெரிய கிசு சொல்றாராமாம் ...அதர பழைய செய்தி அது அவர் ரொம்ப நாளாக சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கார் .
தமிழ் நாட்டில் இந்த செய்தியை கடைசியாக தெரிஞ்சிக்கிட்டவர் நீராகத்தான் இருக்கும் .
ராச நடை கமல் ரசிகர். நீர் ரஜினி ரசிகர் .அடிசிக்கங்க அடிசிக்கங்க ...........
ஆனால் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அலெக்ஸ் பாண்டியன் தான் லாயிக்கு .

Anonymous said...

தல... பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி, ஆனாலும் கூகுள், விக்கிபீடியாவெல்லாம் பதில் சொல்ல முடியாத சந்தேகங்களுக்கு பதில் சொல்ல உங்களை விட்டா யார் இருக்கா?!

அதாவது, ஃபாரடே இண்டக்ஷனைக் கண்டுபிடிச்சு 200 வருஷம் ஆகுது. ஆனா, இண்டக்ஷன் அடுப்புகள் இப்ப 10 வருஷம் முந்திதான் வந்துச்சு. ஏன், அதுக்கு முன்ன இதை வச்சு அடுப்பு பண்ணலாம்னு யாருக்கும் தோணலையா தல? தொழில் நுட்பம் இப்பதான் வந்திருக்குன்னும் சொல்றதுக்கில்ல, ஏன்னா இதிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் அப்படி ஒண்ணும் பிரம்மாத சிக்காலானாது இல்லயே?

சரவணன்

அஞ்சா சிங்கம் said...

அப்புறம் ஒரு மேட்டரு இந்த ஆந்திரா எம்.எல்.ஏ. ஒருத்தன் 15 நிமிடம் குடுத்தால் பொதும் இந்தியாவில் மிச்சம் இருக்கும் 75 கோடி பேர்களை கொன்று விடுவோம் என்று சொன்னானே . சொன்னவன் மக்கள் பிரதிநிதி இந்துக்களின் மற்ற மதத்தினரின் ஓட்டையும் வாங்கி ஜெயித்தவன் .
இவனுக்கு எதிராக ஏதாவது இஸ்லாமிய அமைப்பு போராட்டம் நடத்தியதா...? அவன் சொன்ன கருத்து தீவிரவாதம் இல்லையா ..?
அட குலபெருமையை கெடுக்கவந்த கோடரி காம்பே உன்னால் முஸ்லீம்களுக்கு கெட்டபெயர் என்று யாராவது போராடினார்களா ..?
நான் பார்த்த வரையில் அவனை கைதி செய்யாதே என்று தான் போராட்டம் நடந்தது .


ஜோதிஜி said...

I Share with google plus. And face book. Tks.

Thekkikattan|தெகா said...

ஹாஹாஹா... வவ்வாலு, பிரிச்சு மேஞ்ச்சிட்டீரே.

என்னமோ நடக்கிது, மர்மமா இருக்கிது! எப்படியோ ஹாலிவுட்டை மடக்கி போட்டா சரித்தான்.

ராஜ நடராஜன் said...

ஆந்திரா முட்டைக்கோழி சாப்பிட்டா நெட்பிளிக்ஸ் பற்றி இப்படித்தான் புரோகிராமிங் கோட் எழுதறவன்கிட்ட கூகிளை கட்டிப்பிடிச்சுகிட்டு கேள்வி கேட்க தோன்றும்:)

நான் பாகிஸ்தான் மெக்கானிக்குக்கு ஈத் மிலாபி பிரியாணி வாங்கிக்கொடுக்கனும்.அந்தாளு இருப்பதே மெய்யாலுமே ஒட்டகம் மேயும் இடம்தான்:)

நான் அப்புறமா வந்து கவனிச்சுக்கிறேன்.

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

படம் எடுக்கும் போதும் திட்டமிடவில்லை,எடுத்தப்பின்னும் திட்டமிடவில்லை.

நீங்க தான் 60 கோடினு சொல்லுறிங்க,லோகநாயகர் 95 கோடினு சொல்லுறார் ,அதான் பெரிய பிரச்சினை, படத்தில் அவ்வளவு செலவாகவில்லை, அப்படியே செய்திருந்தாலும், லோகத்தின் மார்க்கெட்டுக்கு அது ஓவர் பட்ஜெட்.

எனது கணிப்பு என்னவெனில் படத்தினை ஒரு 50 கோடிக்குள் தான் தயாரித்திருப்பார், ஆரோ அது இது என சொல்லி அதிக தொகைக்கு விற்க ஆசைப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார்.

தமிழ் விநியோக உரிமையை மட்டும் 40 கோடிக்கு கேட்டதாக செய்தி, அந்த விலைக்கே கொடுத்திருக்கலாம். அப்படியும் லாபமே வந்திருக்கும், எப்படி எனில்,

தமிழ் -40 கோடீ
தெலுகு-10
இந்தி- 10
அயல்நாட்டு உரிமை -15 கோடி
சேட்டலைட் -12 கோடி

என மொத்தம் 87 கோடி வியாபாரம் ஆகி இருக்கும், மேலும் ஒரு வாரம் கழித்து டிடிஎச் இல் போட்டிருந்தால் கூடுதலாக ஒரு 10 கோடி கிடைத்திருக்கும், ஆனால் 150 கோடிக்கு பேராசை பட்டதன் விளைவே ,டிடிஎச், சொந்த வெளியீடு என போய் இப்போ எல்லாம் சொதப்பி சிக்கலில் நிற்கிறார்.

பேராசை பெரு நட்டம்!

# அடுத்த தவறு மார்க்கப்பந்துக்களுக்கு போட்டு காட்டியது, நான் விரிவாக துப்பாக்கி படத்தினை அதனால் தான் உதாரணம் காட்டினேன்.

புதிதாக வேருன்ற ஆரம்பித்திருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தம் மக்களை உணர்ச்சிப்பெருக்குடன் தூண்டி விட ஏதேனும் பிரச்சினை தேவை , எனவே எங்கே என்ன கிடைக்கும்னு தேடிக்கிட்டு இருக்காங்க, இந்த நிலையில் தானாக கூப்பிட்டு படத்தை போட்டுக்காட்டி சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டார் :-))

படத்தினை போட்டுக்காட்டாமல் வெளியிட்டு இருந்தால் ,படம் பார்க்காமலே எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க என இவர்களின் போராட்டத்தினை யாரும் சீரியசாக எடுத்திருக்க மாட்டார்கள்,இப்போ படம் பார்த்தாச்சு, இழிவா காட்டிடாங்கன்னு ஆதாரம் சொல்லிப்போராடவும் நல்லா பத்திக்கிச்சு.

அப்படியே ரிலீசுக்கு அப்புறம் போராட்டம் வலுத்தாலும், துப்பாக்கி போல சில காட்சிகளை நீக்கி சமாதனப்படுத்தினாலே போது, படமும் ஓடி இருக்கும், எதிர்த்தவர்களும் ,எங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து சில காட்சிகளை நீக்கியதற்கு நன்றினு போஸ்டர் ஒட்டி இருப்பாங்க :-))

# அரசு திடிர் தடையை போடக்காரணம் , சேட்டலைட் ரைட்ஸ் இங்கே கொடுத்துட்டு , டிடிஎச் அங்கே, மேலும் மஞ்சத்துண்டுக்கூட நெருக்கம் பாராட்டுவதை எல்லாம் பார்த்து வந்த கடுப்பு தான்.

#குற்றப்பத்திரிக்கை சென்சார் சான்றே வாங்கலை, இங்கே சென்சார் சான்று வாங்கி 3 மாசம் ஆச்சு. பொத்துனாப்போல வெளியிட்டு இருக்கலாம், இவரா போட்டுக்காட்டி தூங்கிட்டு இருந்த கொசுக்களை கிளப்பிவிட்டார் :-))

# லாபம் வந்தாலும் ,இன்னும் அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் படம்ம் எடுக்கணும்.
----------------
கோவை ஜீவா,

வாங்க,நன்றி!

முன்னரே பல விதமா வதந்திக்கிளப்பி பேசியதை கேட்டுள்ளேன்,ஆனால் என்ன நோய் ,டிரீட்மெண்ட் என கொஞ்சம் டிடெயிலா இப்போ தான் நியூஸ் வெளியாச்சு, அதும் நம்ப தகுந்த நபர்கலே சொல்லுறாங்க.
----------

அஞ்சா ஸிங்கம்,

வாரும்,நன்றி!

ஹி...ஹி நமக்குன்னு ஒன்னு இருந்தாலும் ரோட்டில போற ஃபிகரையும் சைட் அடிப்போம்ல :-))

மேலும் மாற்று சங்கத்தினரின் மனம் மகிழ வேண்டாமா? டொக்டர் விசய் படத்தினை போட்டு இருப்பேன், கண்னுக்கு குளிர்ச்சியா இருக்கட்டுமேனு தான் காஜல் :-))

# இப்போ நாட்டாமைகளை விட சொம்புக்களின் எண்னிக்கை அதிகமாய்யிடுச்சு :-))

மார்க்கப்பந்துக்களோட பேசினால நம்மளையும் இந்துத்வா ஆக்கிடுறாங்க, நம்ம வாயால மோடி பிரதமர் ஆன என்னனு கேட்க வச்சிடுவாங்க, இந்துத்வா வளர்க்க ஆர்.எஸ்.எஸ் விட மார்க்க பந்துக்கள் தான் அதிகம் உழைக்கிறாங்களோனு தோனுது :-))

# கிசு கிசு ரொம்ப நாளா இருக்குன்னு எனக்கும் தெரியும் ஓய், ஆனால் இந்த அளவுக்கு தெளிவா தகவல் வர்ரது இப்போ தான்.

நாம ஒன்னை கஷ்டப்பட்டு செய்துடக்கூடாதே , இத்தனை நாளா சும்மா இருந்துப்புட்டு ,இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும்னு சொல்ல வேண்டியது ...அவ்வ்வ்!

# சிங்கங்கள் மோதுவதை கண்டு சிறு நரிக்கு கொண்டாட்டமாக இருக்கலாம்,ஆனால் அஞ்சா ஸிங்கத்துக்கே கொண்டாட்டம் என்றால் என்ன செய்ய்ய்வே ஏ ஏ...ன்!

மேலும் அடியேன் லோகநாயகரின் நலம் விரும்பியும் கூட என்பதை இந்நேரத்தில் நினைவுறுத்துகிறேன்!
------------------

வவ்வால் said...

சரவணன்,

வாங்க,நன்றி!

ஆனாலும் நீங்க என்னை ரொம்ப புகழுறீங்க :-))

இன்டக்‌ஷன் ஸ்டவ் கண்டுப்பிடிச்சு 100 ஆண்டு ஆயிடுச்சு. இப்போ சமீபகாலமாக பரவலாக பயன்ப்படுத்த இரண்டு காரணம் சொல்லலாம்,

1) உலக அளவில் எரிவாயுவின் விலை உயர்ந்து வருவது.

2)ஜப்பான், சீனா, கொரியா ஆகிய நாடுகள் விலை மலிவான இண்டக்‌ஷன் ஸ்டவ்களை தயாரிக்க ஆரம்பித்தது ஆகும்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் இண்டக்‌ஷன் ஸ்டவ்வின் விலை 50,000 ரூபாய் என கேள்வி. அப்போது பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும் சூழல்,விலை குறைய குறைய மக்கள் அதிகம் பயன்ப்படுத்துகிறார்கள்.
---------------------

அஞ்சா ஸிங்கம்,

ஆமாம்பா ,அப்போ மட்டும் ஆந்திராக்காரன் பேசினத எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது, இதனால என்ன கலவரமா ஆச்சுனு சொல்லிட்டாங்க, நானும் கூட அந்த ஒவாசி ஓட்டைவாயனா இருப்பான், இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க கூடாதுனு சொன்னேன்.

ஆனால் மார்க்கப்பந்துக்களுக்கு மட்டுமே மெல்லிதயம் இருப்பது போலவும், எது சொன்னாலும் வலிப்பதாகவும் சொல்லிக்கிறாங்க ,மத்தவங்களுக்கு எல்லாம் மறத்து போன இதயம் போல, அவங்களுக்கு வந்தா ரத்தம், நமக்கு வந்தா தக்காளி சூசு :-))
---------------
ஜோதிஜி,

வாங்க,நன்றி!

புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்.

இந்த பிசியான வேளையிலும் இணையத்தில் கடமை தவறாமல் சேவை ஆற்றும் உங்களை நினைத்தால் நெஞ்சம் இனிக்கிறது, கண்கள் பனிக்கிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி!
-----------------------

வவ்வால் said...

தெ.கா,

வாங்க,நன்றி!

என்ன ரொம்ப பிசியா கேமராவ தூக்கிட்டு படம் புடிக்கிறதுல மூழ்கிட்டிங்க போல ,பதிவுப்பக்கம் எல்லாம் காணோம்.

என்னமோ ஹாலிவுட்டில் 500 மில்லியன் தாம்பாளத்துல வச்சுக்கூப்பிடுறாப்போல சொல்லுறிங்க, அங்கே போனால் இவர் ஒரு புதுமுக நடிகர் என்ற அளவில் பெருசா காசு கொடுக்காம வேலை வாங்குவாங்க, அப்படி வேலை செய்து வெற்றிப்பெற்றுக்காட்டினால் தான் மார்க்கெட்.

உள்நாட்டில் நல்ல சம்பாத்தியம் இருக்கும் பலரும் இதனால் தான் ஹாலிவுட் பக்கம் போகாமல் இருப்பதே, சிலப்பேரு ஹாலிவுட் படத்தில நடிச்சோம்னு பேர் வாங்க மட்டும் செல்வதுண்டு.

---------------

ராச நட,

நீங்க தான் பில்கேட்சுக்கே வழிக்காட்டும் மகான்னு தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சு :-))

ஒட்டகப்பிரியாணி சாப்பிடும் போதே இப்படினா, சிக்கன்,மட்டன் பிரியாணி சாப்பிட்ட என்ன சொல்லுவிங்க :-))

எரா பிரியாணி தெரியுமா, காடை பிரியாணி தெரியுமா, முயல் பிரியாணி மோந்துப்பார்த்திருப்பீரா? முதலை பிரியாணி கூட மேட்டூரில் விக்குறாங்க தெரியுமா ஓய்!

நானெல்லாம் ஒரிஜினல் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்த ஆளு, பிரியாணி கலர வச்சே தரம் எப்படி இருக்கும்னு சொல்லிடுவேன்.

விஸ்ஹ்வரூபம் படம் வராம இருந்தா பிரியாணி வாங்கி தரேன்னு மெக்கா மஸ்ஜித்தில் வேண்டிக்கிட்டு ,இங்கே வந்து என்னா பேச்சு :-))

Unknown said...

நன்றி mr.பதிவுலக ரமணா அவர்களே புள்ளி விவரங்கள் பகிர்ந்து கொண்டதற்கு/

Anonymous said...

தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க கலக்குற தல பின்னூட்ட திலகம் அண்ணன் வ்வ்வால் வாழ்க

Anonymous said...

ஆனா இயக்கங்கள் படத்த முழுசா தடை பண்ண சொஓ ல்ராங்க இதுக்கு என்ன தீர்வு 2 வருஷத்துக்கு அப்புறம் 1 சினிமா தியேட்டர்ல பார்கலாம் நெனச்சன் ம்ம்........ வட போஔ ச்சச்ச

Anonymous said...

உண்மையின் தரிசனம்.... வௌவால் பட்டையை கிளப்புங்க.....



By--
மாக்கான்

ராஜ நடராஜன் said...

நக்ஸ்!நீங்க என்னமோ அரபியில் பேசுறீங்கன்னு நினைச்சு சரியா கவனிக்கலை.இப்ப திரும்பவும் பார்த்தால்தான் கைபேசியில் டெலகிராம் அனுப்புறீங்கன்னு புரியுது.

ஓ!நீங்களும் நம்ம மனோ மாதிரி இட்லி வடை,காபி,டீ மொக்கையரா!நம்ம பன்னிக்குட்டி ராமசாமி அசின் படம் புடிக்கலைன்னு சொல்லும் போதே உங்க பின்புலத்தையும் ஆராய்ந்திருக்கனும்.

அப்ப சரி!நக்ஸ் கெட்டா வவ்வால் குகைதான்:)

எப்படியோ அங்கேயிருக்கும் ஆட்களையெல்லாம் இங்கே கூட்டி வந்து கும்மியடிக்காம இருந்தா சரி.

ராஜ நடராஜன் said...

ஹலோ!ஹலோ!ஆந்திரா முட்டைக்கோழியா:)நான் ஒட்டக பிரியாணி பேசுறேன்.ரயில்வே ஸ்டேசன் போனமா எந்த கோச் எண் நமக்கு தேவைன்னு கண்டுபிடிச்சமான்னு இருக்கனும்.இல்லைன்னா சிகரெட்,பத்திரிகை கடைல என்ன விற்குதுன்னு பார்க்கனும்.அதுவும் இல்லைன்னா காபி,டீன்னு ராதா குரலில் சத்தம் போடுபவரிடம் ஒரு காபியாவது வாங்கிக் குடிக்கனும்.அதையெல்லாம் விட்டுப்புட்டு கோழி மேயுதா,அது எந்தக் கோச்சிலிருந்து எங்கேயிருந்து வந்ததுன்னு என்ன துப்பறியும் சாம்பு வேலை:)

சரி அதாவது துப்பறிஞ்சீங்களே!கால் கடுக்க நடந்து போய் மசூதிக்கு எதிர்த்த கடையில் பெரியாடு,கோழிக்கால் பிரியாணி துன்னும் ஆனா மூனா போன்றவர்களுக்கு உதவியாக ஒரு பதிவாவது போட்டிருக்கனும்.ஆனால் அங்கேயும் வாலிப,வயோதிக வாலிபர்களுக்கு லாட்ஜ் நேரம் விளம்பரம் மாதிரிதான் பின்னூட்டத்தில் மூலையில் உட்கார்ந்துகிட்டு பிரியாணி துன்பவர்களுக்கு பேதி,பீதி கிளப்புறீங்க:)

ராஜ நடராஜன் said...

நான் முன்னாடி பாகிஸ்தானிய மெக்கானிக்கு மிலாது நபி பிரியாணி பற்றி அவசரத்தில் ஒரு முக்கியமான செய்தியை சொல்ல மறந்து விட்டேன்.

பாகிஸ்தானியர் தன் உடல் உழைப்பு,மூளை இரண்டுமே கடவுள்ன்னு நம்புவர் போல.மசூதிப்பக்கம் எட்டியே பார்ப்பதில்லையாம்.ஆனால் ஈத் பிரியாணி,ரம்ஜான் பிரியாணி ஓ.கே ரகம்:)

ராஜ நடராஜன் said...

ஒரு பக்கம் உங்களை ஓட்டையில் வயர் சொருகுவது எப்படியென்ற நிலையிலிருந்து எப்படி காப்பாற்றுவது என்ற யோசனையும் பின்னூட்டம் போடுறேன் பேர்வழின்னு சொந்த செலவில் சூனியம் வச்சுக்கவா என்ற கேள்வியும் எழுந்தாலும் கூட சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.இவையெல்லாம் இப்பொழுது அரத புராதன வரலாறாகிப்போன பழைய தொழில் நுட்பம் கூட.

இணைய தேடலில் கூகிள் சிறப்பாக செயல்பட்டாலும் அது ஒரு தேடல் சர்வர் மட்டுமே. 5 நிமிட யூடிப்பை பார்ப்பதற்குள்ளேயே கஜனி ராமசாமி மாதிரி நினைவு போகும் நிலையில் ஒரு முழுப்படத்தையும் எங்கே தொடர்ச்சியாக குறைந்த விலை கணினி கான்பிகரில் பார்த்து தொலைப்பது:)

நம்ம தொழில் நுட்பம் சமையல் கலை ரெசிபி மாதிரி.முதலாவதாக தேவையான பொருள் ஒரு அமெரிக்க பங்காளி.அதுவும் உங்க கூட சண்டை போடும் பங்காளியா இருந்தா இன்னும் கூடுதல் அனுகூலம்:)

மேலும் கூடுதலாக ஸ்லிங்க் பாக்ஸ்,டைவோ இன்னும் எஸ்.பி எனப்படும் மென்பொருள் போன்றவைகள் தேவை.ஒரு முறை செட் செய்துட்டா 98% அதுபாட்டுக்கு ஓடும்.தொடர்பு கிடைக்கலைன்னா மறுபடியும் அமெரிக்காவிலிருந்து மூடித்திறக்க வேண்டும்.ஆனால் தமிழக மின்வெட்டில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை என்பதோடு முன்பு மனிதன் மண்ணுக்குத்தான் எல்லைக்கோடு போட்டான்.இப்ப 21ம் நூற்றாண்டின் நாட்டு எல்லைக்கோடு என்னவென்றால் இணைய எல்லைக்கோடே.இந்தியாவின் எல்லை விதிகள்,தகவல் ஐரோப்பா,வளைகுடா,ஆப்பிரிக்காவில்வசிப்பவர்களுக்கு இல்லை.இதே மாதிரியே ஒவ்வொரு கண்ட எல்லையும்.அதே போல் ஐரோப்பிய எல்லையை மட்டுமல்ல,உலக எல்லையளவில் அமெரிக்காவும்,ஏன் சீனா கூட பெற்று விட முடியும்.இன்னும் சில ரஷ்ய தளங்கள் உலக மயமாக்கலில் நுழைகிறோம் பேர்வழியென சந்திரனுக்கு ராக்கெட் விடுவதை விட்டுப்புட்டு ஹேக் கிங்க் என சொல்லிக்கொள்கிறார்கள்.

நமக்குத்தான் டி.டி.ஹெச் நுட்பமே வேண்டாமே!அப்புறம் என்ன இதையெல்லாம் நான் பினாத்திக்கிட்டு!

மொண்ணைச் சாக்கு பின்னூட்டங்கள் எதிர்பார்த்துகிட்டு முடிக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

இதோ!உலகநாயகர் லாஸ் ஏஞ்சல்ஸில் உட்கார்ந்து கொண்டு பேட்டி அளிப்பதன் சாரம்.

அவர் பேசுவதைப்பார்த்தால் உங்களை மாதிரி,பந்துக்கள் எனும் சில்வண்டுகளுக்கெல்லாம் அசருகிற தோரணையா தெரியல.

வவ்வாலும் மார்க்க பந்துக்களும் ஒண்ணா சேர்ந்துகிட்டு வியாபார,மத ஒற்றைக்கண்ணால் ஆடும் ஆட்டம்--- What a paradox!

தணிக்கை குரலில் இஸ்லாமியர் உட்பட அனைவரும் பார்த்து அனுமதித்த பின்பே யூ.ஏ முத்திரையுடன் படம் வெளியிடலாம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

பார்க்கலாம் உச்சநீதிமன்ற தீர்ப்பு கருத்துரிமைக்கு ஆதரவாக வருகிறதா?இல்லை தங்களை அடையாளம் காட்ட முயல்பவர்களுக்கு ஆதரவாக தணிக்கை துறையை தூக்கி வீசிவிட்டு படம் பார்க்காமலே அல்லது பார்த்தாலும் புரியாத மண்டைகளுக்கு ஆதரவாக வருகிறதா என.

இதுல இன்னுமொரு என்ன கொடுமை சார் ன்னா கமல் நடித்த அத்தனை படங்களுக்கும் ஒரு பந்து புதிய கதைவசனம் சொல்வதுதான்:)

Anonymous said...

...//புதிதாக வேருன்ற ஆரம்பித்திருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தம் மக்களை உணர்ச்சிப்பெருக்குடன் தூண்டி விட ஏதேனும் பிரச்சினை தேவை , எனவே எங்கே என்ன கிடைக்கும்னு தேடிக்கிட்டு இருக்காங்க//...

1000%%%% True.


By--
Maakkaan

வவ்வால் said...

ராச நட,

இதானா நீங்க சொன்ன இன்னும் முடிக்கலை பின்னூட்டங்கள்? வழக்கம் போல அவுட் ஆஃப் காண்டெக்ஸ்டில் பேசிட்டு இருக்கீங்க, நானே அங்கே இங்கேனு சேர்த்து கோர்த்து ஒரு பதிலை சொல்லணும் போல :-))

நான் என்ன சாப்பாடுக்கடைனு பதிவை போட்டூ கல்லா கட்டிட்டி இருக்கேனா, ஏன் அது போன்ற பதிவர்களிடம் இதே கேள்வியை கேட்கவில்லை, எனக்கு தோன்றுவதை எழுதுவேன் மற்றபடி இன்னார் என இல்லாமல் அனைவருக்கும் பின்னூட்டமிடுகிறேன்.

என்ன கெட்டுப்போச்சுனு பின்னூட்டத்தில் மூலையில் சொல்கிறேன் என நீர் கவலைப்படனும்? எவனுக்குமே பின்னூட்டம் கூட போடாமல் ,அவன் பதிவில் பின்னூட்டம் போட்டதுக்கு பதில் கூட சொல்லாமல் இருப்பவர்களை என்றாவது கேள்விக்கேட்டுள்ளீர்களா?

பிரியாணியை பத்தி எனக்கு தெரிந்தாலும் அதைப்பற்றி கவலை எனக்கு இல்லை, ஏன் எனில் நான் பிரியாணி பதிவு போடுவதில்லை :-))

# அய்யா நீர் எல்லாம் எந்த காலத்தில் இணையம் என்றால் என்ன என தெரிந்துக்கொண்டீர்களோ தெரியாது, சென்னையில் அகலப்பட்டை இணையம் வந்த காலத்துல இருந்தே குப்பைக்கொட்டின ஆளு நான், இணையத்தின் சந்து பொந்துகளை வெளிநாட்டுக்கு போன பின்னால் மட்டுமே அறிந்து கொண்டவன் நானல்ல :-))

எனவே உங்க நெட்டு புளிக்குது கதையை எல்லாம் வேறிடத்தில் சென்று அவிழ்க்கவும்!!!

#//தணிக்கை குரலில் இஸ்லாமியர் உட்பட அனைவரும் பார்த்து அனுமதித்த பின்பே யூ.ஏ முத்திரையுடன் படம் வெளியிடலாம் அனுமதி பெறப்பட்டுள்ளது.//

பதிவை மீண்டும் ஒரு முறை படிக்கவும், சென்சார் போர்டு சான்றுடன் என்ன சொல்லி இருக்கிறேன் என புரியும்.
-------------------------------

மார்க்கப்பந்து,அனானி 1&2, மற்றும் மாக்கான் அனைவருக்கும் நன்றி!

அனானி அன்பர்களே, அனானியாக பின்னூட்டம் போடுங்கள், கூடவே அம்மாவாசை,அய்யானார், அங்குசாமினு ஏதேனும் பெயரையும் சேர்த்தால் , குறிப்பிட்டு நன்றி கூற வசதியாக இருக்கும் :-))

Anonymous said...

சரி தல.
வ்வ்வால் ரசிகன்

Dinesh Kumar said...

This is purely business. Everybody wants to earn money in business. Discovering new way to earn money in unexplored area is always part of any business tactics. Kamal is trying to do few new things. Let him do.

Whatever the market tactics used by Kamal may seems like wrong.
But it is not fair to impose a ban on a movie and this is a very bad example set by TN Govt. Going forward, each and every religious and caste based outfits is going to use the same tactics. Whether you like Kamal or not is not the question here. But we need to support him to revoke the ban.

Lot of times, I admired your skills about analyzing any subject end to end. But I don't know why you are again and again cornering Kamal only. Apart from this, There were lot of other matters going on. So please come out this.

வவ்வால் said...

அனானி,

நன்றி!

ஆஹா ரசிகர் மன்றமே திறந்தாச்சா, அடுத்து ஒரு கொடியை உருவாக்கி அரசியலில் இறங்கிட வேண்டியது தான் :-))

-------------

தினேஷ் குமார்,

நன்றி!

பதிவை கொஞ்சம் பொறுமையாக படித்து பார்த்திருக்கலாம், இந்த பதிவே விஷ்வரூபம் பற்றியது மட்டுமல்ல, திருட்டு டிவிடியின் ஊற்றுக்கண், அரசியல் என கலந்தே எழுதியுள்ளேன்.

மேலும் இதனையும் சொல்லியுள்லேன்,

//அரசியலமைப்புள்ள ஒரு நாட்டில், சட்டப்பூர்வமாக இயங்கும் தணிக்கை அமைப்பால் பொது மக்கள் பார்க்கலாம் என சான்றளிக்கப்பட்ட பின் , அதில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையது அல்ல ,வெளியிட கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது யதேச்சதிகாரம் ஆகும்.//

தடை செய்தது, எதிர்த்து போராடியதையும் கண்டித்துள்ளேன், அனைத்து அம்சங்களையும் அலசியுள்ளேன்.

ஆளுவோர் தான் நெருக்கமாக இருப்பதான கற்பனையில் லோகநாயகர் கொஞ்சம் அதிகப்படியாக ரிஸ்க் எடுத்து ,மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டி,அவர்களின் போராட்டத்தினை தீவிரப்படுத்திவிட்டார், ஆனால் ஆளுவோரின் அரசியல்கணக்கு வேறாக இருக்கவே , திடீர் தடையைப்போட்டு அதிர்ச்சி வைத்தியம்ம் கொடுத்துவிட்டார்கள்,

தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகாமல் மற்ர இடங்களில் வெளியானதால், தமிழில் வெளிவரும் முன்னர் திருட்டு டிவிடி வரும் வாய்ப்பு இப்பொழுது அதிகமாகிவிட்டது, இது படத்தின் வெற்றியினைக்கண்டிப்பாக பாதிக்கும்.

புதுவையில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது, எனவே உடனடி கேம்மிரா பிரிண்ட் நிச்சயம், பின்னர் மலேஷியாவில் இருந்து 5.1 இலும் வந்துவிடும், இப்போது ஆப்பசைத்த குரங்கின் நிலை!

இப்பொழுது ஊருக்கு வந்துள்ளேன், நாளை புதுவையில் படம் பார்க்கலாம் என இருக்கிறேன்.

பார்த்துவிட்டு சூடாக விமர்சனம் செய்கிறேன் :-))

இப்பதிவுக்கு அடுத்தப்பதிவும் உரமானிய ஊழல் என வந்துவிட்டது, நீங்கள் நினைப்பது போல இப்படத்தினையே ஆய்வு செய்துக்கொண்டு இல்லை :-))