ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?
முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் தோன்றிய கிருத்துவமும் அதை அப்படியே சுவிகரித்து தனது பழைய ஏற்ப்பாட்டில் சேர்த்துக்கொண்டது. இதெல்லாம் முதல் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டம்.
பின்னர் ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதமும் ஆதாம் , ஏவாள் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் மோசஸ், ஏசு என்று அனைவரையும் இஸ்லாமியர்களாக ஆக்கி அவர்கள் தான் இஸ்லாத்தின் ஆரம்ப கால இறைத்தூதர்கள் என்று புதிதாக ஒரு கருத்தாக்கத்தை தானே உருவாக்கிக்கொண்டு தனது பழைமைக்கு தானே ஆதாரம் உருவாக்கிக்கொண்டது.
பாவம் மோசசுக்கு பின்னாளில் தாம் மூசா என்றும், ஏசுவுக்கு பின்னாளில் ஈசா என்றும் பெயர் மாறி இஸ்லாமியர்களாவோம் என்று தெரியாமல் போய்விட்டது :-)) தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் அவதரிக்காமலே இருந்து இருப்பார்கள்.முகமது நபிக்கு முன்னொடி இறைத்தூதர்கள் என சொல்லப்படும் பட்டியல் இறைத்தூதர்கள் பட்டியல். ஆதம் முதல் கொண்டு ஏசு வரை எல்லாருமே இஸ்லாமிய இறைத்தூதர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். இதில் விடுபட்டுப்போனது யாஹு மெசெஞ்சர் மட்டுமே என நினைக்கிறேன் :-))
இப்படி பல முன்னோடி இறைத்தூதர்கள் உண்டு என சொல்வது புதிதல்ல ஏற்கனவே புத்த மதத்தில் 28 புத்தர்கள் உண்டு என்றும் கவுதம புத்தருக்கு பின்னரும் ஒரு புத்தர் வருங்காலத்தில் வருவார் என புத்த மதம் சொல்கிறது. ஆனால் முகம்மது நபி கொஞ்சம் முன்னேற்பாடாக அவரே அல்டிமேட் இறைத்தூதர் என சொல்லிக்கொண்டார்.
புத்தர்களின் பட்டியல்
இப்போது எனது கேள்வி மனித இனம் பரிணாமத்தின் படி உருவானதா அல்லது மேற்கண்ட மதங்கள் சொன்னது போல ஆதாம்,ஏவாள் என்ற இரண்டே இரண்டு ஆதி மனிதர்களிடம் இருந்து தான் பல்கி பெருகி இன்றைய 600 கோடி மக்களாக ஆனதா என்பதே.
ஈடன் கார்டனில் ஆதாம்,ஏவாள்(படம் உதவி:விக்கி,நன்றி)
முதலில் ஆதாம் ,ஏவாள் கருத்தாக்கத்தினைப்பார்ப்போம், அது உண்மை எனக்கொண்டால் , அதனுள் இருக்கும் ஆபாசத்தினையும் மத வாதிகள் உண்மை என ஏற்றுக்கொள்வார்களா?
என்ன ஆபாசம் இருக்குனு என்று கேள்விக்கேட்பவர்கள் இந்த சுட்டியில் போய் முழுக்க ஆதியோடந்தமாக படித்து விட்டு வரவும். ஆதாம் ஏவாள் கதை- Chapter LXXIV . இங்கே பதிவில் சுருக்கமாகப்பார்ப்போம்.
கடவுள் என்று கூறப்படுவர் முதலில் ஆதாமை உருவாக்கினார், பின்னர் அவன் விலா எலும்பை வகுந்தெடுத்து அதில் இருந்து ஏவாளை உருவாக்கினார்.அவர்கள் வாழ ஏடன் கார்டனையும் உருவாக்கிக்கொடுத்தார்.
பாம்பு வடிவில் சாத்தான் எனப்படும் தீய சக்தியின் தூண்டுதலால் ஏவாள் ஆப்பிளையோ , தக்காளியையோ கடித்து வைத்து தன்னுணர்வு பெற்றாள் , போதாக்குறைக்கு ஆதமையும் கடிக்க சொல்ல இருவருக்கும் தன்னுணர்வு வரப்பெற்று, நிர்வாணம், ஆண், பெண் என்ற அறிவெல்லாம் எட்டிப்பார்த்தது.
இருவரின் கூட்டுசதியும் கடவுளுக்கு பிடிக்காமல் போனதால் அம்மையாரால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட சின்னம்மா போல இருவரும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர் . கூடவே கடவுளின் சில பல சாபங்களும் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது.அச்சாபங்களில் மரணம் , முதுமை, பசி, தாகம் எல்லாம் அடக்கம்
வெளியேறிய இருவரும் ஒரு குகையில் இனிதே தனிக்குடித்தனத்தை துவக்கினர் , இல்லறத்தின் விளைவால் ஓராண்டில் கெயின் என்ற ஆண் மகவும் லுலுவா என்ற பெண் மகவுவையும் ஒரே நேரத்தில் இரட்டையர்களாக ஈன்றெடுத்தாள் ஏவாள்.
இரண்டுப்பேரும் வளர்த்து வந்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இனிதே கழிய மீண்டும் ஒரு வாரிசு உருவாக்கம் நடைப்பெற்றது இப்போதும் பிரசவத்தில் ஒரு ஆண் , ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள். ஆண்க்குழந்தைக்கு ஏபெல் என்றும் பெண்ணுக்கு அக்லியா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
இங்கே ஒரு சின்ன குறிப்பு இரண்டாவது பிறந்த பெண் அக்லியா , லுலுவாவை விட அழகில் கொஞ்சம் குறைவு என்று கதையில் அல்லது புனித நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது எதுக்கு இப்போனு தோன்றலாம் ஆனால் இது ஒரு புரதான நிகழ்வுக்கு தூண்டலாக அமையப்போகிறது.
கெயின், ஏபெல் இருவரும் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தனர் அவர்களுக்கு என்று ஒரு தொழில் கொடுக்க வேண்டும் என ஆதம் முடிவெடுத்து கெயினிடம் விவசாயத்தையும் ஏபெலிடம் கால்நடை வளர்ப்பையும் ஒப்படைத்தார் ஒரு பொறுப்பான தந்தையாக.
இருவரும் தத்தமது வேலையில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்தார்கள், அதனை ஆண்டவனுக்கு படைக்கும் போது ஏபெல்லின் படையலை ஏற்று கெயினுக்கு வெறுப்பேத்தினார் கடவுள், இதனால் சகோதரர்களிடையே ஒரு பூசல் உருவானது.
இதனிடையே பொறுப்பான , பாசமிகு தாயாக ஏவாள் நம்ம பசங்க வளர்த்துட்டாங்க, தொழிலும் செய்யுறாங்க அவங்களுக்கு ஒரு கல்யாணம் செய்துப்பார்க்கலாம் என்று கணவன் ஆதமிடம் சொல்கிறாள்.
இங்கே அறிவார்ந்த மக்களுக்கு நியாயமாக ஒரு கேள்வி வரனும் , கேள்வி வந்துச்சா? உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள், அவங்களுக்கே இப்போ தான் ஆண் இரண்டு, பெண் இரண்டுனு பிறந்து உலகின் முதல் குடும்பமாக உருவாகி இருக்கு. அப்படி இருக்க அவங்க பசங்களுக்கு எங்கே இருந்து கல்யாணத்துக்கு பெண் கிடைக்கும்? இப்படி ஒரு கேள்வி எல்லாருக்கும் வந்திருக்கனும்.
கேள்விக்கு விடை என்ன , ஏவாளே சொல்கிறாள், வெண்ணைய கையில வச்சுக்கிட்டு நெய்க்கு அலைய வேண்டாம் , கெயின் கூடப்பொறந்த லுலுவாவை ஏபெலுக்கும், ஏபெல் கூடப்பொறந்த அக்லியாவை கெயினுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு ஆலோசனை சொல்கிறாள்.
அனேகமாக மனைவி ஒரு மந்திரி, மனைவி சொல்லே மந்திரம் எல்லாம் அந்த புராணக்காலத்திலேயே ஆரம்பம் ஆகிடுச்சு என நினைக்கிறேன். ஆதமும் சரி அப்படியே செய்யலாம்னு தலையை ஆட்டுகிறான். பொண்டாட்டிக்கு புருஷன்மார்கள் தலை ஆட்டுவதும் அப்போவே ஆரம்பம் ஆகி இருக்குனு தெரியுது :-))
எல்லாரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்களே என்று சொல்லி பரிணாமத்தை கிண்டல் செய்யும் மார்க்கபந்துகள் எல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க இதெல்லாம் நீங்க புனித நூல்னு சொல்வதில் இருப்பது தான். அதில் என்ன சொல்லி இருக்குனே தெரியாமா எல்லாம் புனிதம்னு கண் மூடித்தனமா நம்புவதால் தெரியாமல் போய் இருக்கலாம். முழுசா படிங்க, அதுக்கு அப்புறமா சொல்லுங்க எது சரினு.
மார்க்கப்பந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கும் , என்னடா இது அண்ணன் , தங்கச்சிக்க்குள்ள கல்யாணமானு, இதை தான் இத்தனை நாளா புனித நூல் சொல்லிச்சுனு நம்பி பரிணாமத்தை எதிர்த்தோமா என்றெல்லாம் கேட்டு லேசா தலைக்கூட சுத்தும் :-))
ஆதாம், ஏவாள் சூப்பராக திருமணத் திட்டம் போட்டாங்க, ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட் வைக்குறார் நம்ம சாத்தான். சாத்தான் அண்ணாச்சி கெயினிடம் போய் ஏற்கனவே உன் படையலை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் ஏபெல் தான் உங்க அப்பா,அம்மாவுக்கு செல்லம் ஆகிட்டார், மேலும் இப்போ உன்னோட அழகான தங்கையை ஏபெலுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு , ஏபெலின் அசிங்கமான தங்கையை உனக்கு கட்டி வைக்கப்போறாங்க எனவே நீ பேசாம உன் தம்பி ஏபேலை போட்டு தள்ளிடு , அப்புறம் நீ மட்டும் தான் உனக்கே ரெண்டு பொண்ணும் னு ஒரு நாராசமான ஐடியாவை தருகிறார் திருவாளார் சாத்தான்.
கெயினுக்கும் இது சரினு படவே , ஏபேலை நயவஞ்சகமாக பேசி வா வயலை சுத்திப்பார்க்கலாம்னு கூப்பிட்டு சென்று கல்லால் அடித்துக்கொள்கிறான். ஆகாவே புராணம்,இதிகாச வரலாற்றில் முதல் கொலைக்காரன் கெயின் ,அதுவும் சொந்த சகோதரனைக்கொன்றவன் என பிரசித்திப்பெறுகிறான்.
கெயின் ஏபேலை கொல்லும் சம்பவத்தினை விவரிக்கும் ஓவியம். படம் உதவி:விக்கி. நன்றி
பின்னர் கடவுள் கெயினுக்கு சாபம் விட்டது, மீண்டும் சேத் என்ற மகன் ஆதாம் ஏவாளுக்கு பிள்ளையாக பிறந்து அவர்கள் எல்லாரும் தமது தமக்கைகளையே மணம் புரிந்து வம்சம் விருத்தி செய்தது என புராண புனித நூல்களின் கதைப்போகிறது. நாம் இத்தோடு முடித்துக்கொண்டு மானிட குலம் முதல் இரண்டு மனிதர்களிடம் இருந்து தோன்றியது என்பது சரியா அல்லது பரிணாமவியல் தான் சரியா என்று கேள்வியுடன் துவங்குவோம் நமது அறிவார்ந்த சிந்தனையை.
மார்க்க பந்துகளே எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் வழித்தோன்றல் தான் என்று இனியும் நம்புவிர்களானால், நீங்கள் எல்லாம் சகோதர , சகோதரிகளை மணமுடிக்க ஆர்வம் உள்ளவர்களா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் ஆம் என்று ஒத்துக்கொண்டால் உங்கள் புனித நூல் சரியாக சொல்லி இருக்கு எனலாம் :-))
ஆதாம் ஏவாள் வழிவந்ததே மனிதகுலம் எனும் சித்தாந்ததிற்கு மாற்றாக வருவது பரிணாமவியல், மைட்டோ காண்டிரியல் ஏவாள் எனப்படும் சித்தாந்தம், இது குறித்து அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.
பரிணாமவியலுக்கு மாற்றாக சொல்லப்படுவது அறிவார்ந்த படைப்பாக்க சித்தாந்தம் ஆகும். எப்படி ஆகினும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் அனைவருமே ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்து உலக மக்கள் அனைவரும் பிறந்தார்கள் என்பதை மறுக்கவே செய்கிறார்கள்.
பதிவர் சார்வாகன் பரிணாமவியலை அறிவார்ந்த படைப்பாக்கம் என்பதன் வாயிலாக நோக்குபவர் ஆனாலும் பரிணாமம் , மைட்டோக்காண்ரியல் ஈவ் பற்றி எல்லாம் விரிவாக அலசுபவர். பரிணாமவியலுக்கு மாற்றுக்கருத்து எனினும் ஆதாம் ஏவாள் தியரி அறிவார்ந்த சித்தாந்தம் அல்ல என புரியவைக்கும் அவரதுப்பதிவுகள் விருப்பம் உடையவர்கள் அங்கு சென்று மேலதிக தகவல்கள் பெறலாம்.
1)சார்வாகன் -1
2)சார்வாகன் -2
3)சார்வாகன் -3
மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாம் ஏவாள், மற்றும் அவர்கள் சந்ததி குறித்தான தகவல் பக்கங்களின் சுட்டி:
1)) ஆதாம் ,ஏவாள்
2) கெயின் , ஏபெல்
3))சந்ததியினர்
பிற்சேர்கை:-
சார்வாகனின் கெயினின் மனைவி யார் என்னும் பதிவு,
கெயினின் மனைவி யார்ரெவெரி அளித்துள்ள கெயினின் மனைவி குறித்தான சுட்டி
29 comments:
http://www.christiananswers.net/q-aig/aig-c004.html
ரெவெரி,
நீங்க என்னா சொல்ல வரிங்க , எதுவும் சொல்லாம ஒரு சுட்டி தரிங்க, அதில் சகோதரியைத்தான் கெயின் மணம் முடித்து இருக்க வேண்டும் என்றும் , 400 ஆண்டுகளுக்கு பின் மோசஸ் காலத்தில் தான் அது போன்ற திருமணங்கள் தடை செய்யப்பட்டதாகவும் இருக்கு. அப்படி எனில் என்ப்பதிவில் சொன்னது சரி தானே. அப்புறம் மதவாதிகள் ஏன் புனிதம் எல்லாம் பேசனும்.
வணக்கம் வவ்வால
இபோது மதங்களை ஆய்வு செய்யும் பதிவுகள் எழுதியதை விட்டு விட்டு பிற விவரங்களில் எழுதி வருகிறேன்.நம் பழைய தளம் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். உங்களுக்கு தேவையான பல விவரங்கள் இருக்கலாம். கிறித்தவம்,இஸ்லாம் குறித்த பல விமர்சன தேடல்கள் இப்பதிவுகளில் உள்ளன.
ஆதம் ஏவாள் கதை:காயீனின் மனைவி யார்?
http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_3585.html
ஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரயாணம்
http://saarvaakan.blogspot.com/2011/07/dna-search-for-adam.html
வேண்டியவற்றை எவரும் மீள் பிரசுரம் செய்யவும் என்பெயரை குறிப்பிடாமலே கூட பயன்படுத்தலாம்.
நன்றி
நல்ல பதிவு
இந்த பிரச்சினையை இரு விதத்தில் அணுகலாம்.உண்மையை தேடுபவர்கள் எந்த வித முன் கருத்துமின்றி தேடுவது நலம்.
1. ஆதமின் மகன் காயீன் உறவுக்குள்ளே திருமணம் கொண்டான்.அப்போது அது படைத்த சக்தியால் அனுமதிக்கப் பட்டது.பிறகு அதுவே சில உறவு திருமணங்களை தடை செய்தது.ஆன்மீக வாதிகளுக்கு இவ்விள்க்கம் போதும்.
2. இப்போது உள்ள அனைவருமே ஒரு ஆண் பெண்ணில் இருந்தே தோன்றி இருக்க முடியுமா என்ற ஜீன் ஆய்வு.பரிணாம் (அறிவியலின்) படியும் மனிதன்(ஹோமோ சேஃபியன்) தோன்றியது கிழக்கு ஆப்பிரிக்காவில்.அங்கிருந்தே உலக முழுதும் பரவினான்.உலகில் உள்ள எந்த இரு மனிதனின் டி என் ஏ 99.99 % ஒட்துப் போகிறது.
இது குறித்து ஆதமை தேடியது மேலே சுட்டிய பதிவில் உள்ளது.இதில் பல ஆச்சர்யமான் விவ்ரங்கள் உண்டு.
விவாதத்தில் வருகிறேன்.
சார்வாகன்,
வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி!
முன்னரே நீங்கள் பதிவிட்டிருப்பது தெரியாது, அதனை முன்னரே படித்திருந்தால் உங்கள் பதிவின் அடிப்படையில் இன்னும் விரிவாக்கி இருப்பேன். இப்போது ஆரம்பத்தில் இருந்து நானும் கதை சொல்லிவிட்டேன்.
உங்கள் பதிவும் சிறப்பாக இருக்கு. நான் என்னுடை பாணியில் கிட்டத்தட்ட ஒத்த கருத்தையே எழுதியுள்ளேன்.
மேலும் 99.99 % டி என் ஏ ஒத்துப்போவதால் ஒரு மனிதனிடம் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்பதும் இல்லை. காரணம் ஒரு ஸ்பீசஸ் இன் எல்லா ஜீன்களும் ஒத்துப்போவது வாடிக்கையே.
அது எவலுஷனரி ஸ்பீசஸ் ஆக இருந்தாலும் பைலோஜெனிடிக் ஸ்பீசஸ் ஆக இருந்தாலும் சரியே.
மேலும் இன்டெர் ஜென்டிக் கிராஸ் பாலினேஷன் கூட சாத்தியமே. சப்.ஸ்பீசஸ் இடையே சிறிய ஜெனிடிக் வேறு பாடு உண்டு, ஆனாலும் ஹைபிரிட் செய்யலாம். சிங்கம் ,புலி போன்றவை ஒரே குடும்பம். வேறுபட்ட ஸ்பீசஸ் கலப்பினம் செய்துள்ளார்கள்.
வெள்ளை எலிக்கும்,கினியா பன்றிக்கும் மனிதனுக்கும் கூட 70 % மேல் ஜீன் ஒத்துப்போவது எப்படி எனவே ஒரு செல் இல் இருந்து அனைத்து உயிர்களும் பொதுவான ஜீன் உடன் பின்னர் பரிணமித்து இருக்க வேண்டும், மைட்டொ காண்ட்ரியல் ஈவ் தியரியில் உள்ளது போல ஒரு 10000 பேராவது முன்னோடிகளாக இருந்து இருக்கலாம். அடுத்தப்பதிவு அது தான்.
வணக்கம் நண்பர் வவவால் நான் சொல்லவந்ததும் அதேதான் .சென்ற பின்னூட்டத்தில் எழுதியதை வெட்டி ஒட்டும்போது சில சொற்கள் விட்டுப் போய் விட்டன.அதுதான் குறிப்பாக இருவர்தான் ஆதிப் பெற்றோர் என என்று அறுதியாக கூற இயலாது. இதை டார்வின் தனது மனிதனின் தோற்றம் புத்தக்த்தில் கூட விவாதிக்கிறார்.
தொடர்கிறேன்.நன்றி
வவ்வால் நண்பரே...நான் மதம் பற்றி யாரிடமும் விவாதிப்பதில்லை...
உங்கள் பார்வைக்காக அந்த இணைப்பு...அந்த வலைப்பூ முழுவதும் அந்த மதத்தைப் பற்றி உள்ள Myths பற்றியே...
ரெவரி,
நன்றி வணக்கம்,
இப்பதிவும் மதத்தினை விவாதிக்கும் பதிவல்ல மதத்தின் பெயரால் அறிவியலை புறக்கணிக்கும் மதவாதிகளுக்கு , பரிணாமம், அறிவியல் ஆகியவை சரியான விளக்கம் அளிக்கின்றன மனித படைப்பின் மூலத்திற்கு என்று சொல்லும் அறிவியல்/ தர்க்கப்பதிவு இது.
nice to know this story
சாலமன்-சுலைமான்,ஆப்ரஹாம்-இப்ராஹீம்,டேவிட்-தாவூத் என்று மாறினதும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
இது எப்ப?வழியில் போய்கிட்டேயிருந்தேனா மாட்டிகிட்டீங்க:)
நீங்க தர்க்க ரீதியாக வைக்கும் கேள்விகளை விட பதிவர் சார்வாகன் சான்றுகள் ரீதியாக வைக்கிறார்.
நீங்க ஆதாம் ஏவாள் முதல் துவங்க வேண்டிய அவசியமேயில்லை.பழைய ஏற்பாடும்,புதிய ஏற்பாடும்,கிறுஸ்தவமும் தர்க்கங்களை உள்வாங்கிக்கொள்ளும் சக்தியோடு நம்பிக்கைகளுடன் பயணம் செய்யும் வலுவுடையது.
பிரச்சினையே கெயின்.ஏபல் துவக்கமாக துவங்குகிறது.நீங்க அடிக்கிற அடியை விட மேற்கத்திய கிறுஸ்தவர்களே கிறுஸ்துவத்தை அடித்து காயப்போட்டு விடுகிறார்கள்.ஆனாலும் வரலாற்றின்,மேற்கத்திய கலாச்சாரத்தின் பாரம்பரியங்களில் பைபிளின் பிரதிபலிப்புக்கள் இருக்கவே செய்கின்றன.
புரியாத ஒன்றை விட புரிகின்ற ஒன்று மேல் எனலாம்:)
எனக்கு இந்த மேடை கொஞ்சம் கோணலாத் தெரியுது.இல்லாட்டி நானும் கூட காய்ச்சுவேனாக்கும்:)
கொடுமைக்கார மாமியாரை விட்டுப்புட்டு
புதுசா வந்த மருமகளை துவைக்கிற மாதிரி இருக்குது.
நானுந்தான் விக்கியெல்லாம் சுத்துறேன்.ஆதாம் ஏவாள் வேற போஸ்ல நின்னுகிட்டிருந்த மாதிரி இருந்தது.விக்கில சாத்தானையும் காணோம்.இங்கே சாத்தான்களையும் காணோம்.ருஷ்டியைத் தேடிகிட்டு ஓடிருச்சுகளோ:)
தாய் வழி சமுதாயமாக மனித பரிமாணம் எடுத்தது என்பதற்கு புராணங்கள் திரித்து கூற முயற்ச்சித்து தோல்வி அடைந்து உள்ளது, இது நம் மகா பாரதத்திலும் காணலாம்.... ஒரு அம்மா பல தந்தை என்று இருந்து தான் இன்று மாறி இருக்கிறது... மதவாதிகள் கேள்வி கேட்டிருந்தால் மதம் இன்று காணாமல் போய் இருக்கும்... கேள்வி கெட்டவர்களோ புது பாதை போட்டுக் கொண்டு ஆன்மீக வாதிகள் என்று பறை சாட்டி கொள்கிறார்கள்...
வணக்கம் சகோ வவ்வால்
ந்ல்ல பெயர் வைத்தீர் .சரி இந்த பதிவுக்கு எதிர் விவாதங்கள் வராது என எதிர்பார்த்தேன் .அது போன்றே ஆயிற்று.இது ஏன் என யோசித்தீர்களா?
1.முதலில் 6 நாள்கள் படைப்பு என்ற கொள்கையாக்கம்,இளைய பூமி கொள்கை(பூமிக்கு வயசு 6000 வருடம்!!),பூமி மையக் கொள்கை, போன்றவவை படைப்புக் கொள்கையாளர்களால் கைகழுவப் பட்டு விட்டன.
அறிவியல் இவ்விடயங்களில் ஆய்வு ரீதியாக் உண்மைகளை கொண்டு வந்து விட்டது.ஆகவே விள்க்கங்களை அறிவியலுக்கு ஏற்ப மாற்றும் மதமே நிலைக்கும்.மாற்ரி விட்டர்கள்.
2.அடுத்த பதிவில் ஆதம் ஏவாள் கதை டுபாக்கூர் என அறிவியல் ரீதியாக் விள்க்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.பிரபஞ்சம் தோன்றியது 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்,பூமி தோன்றியது 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்,ஆனால் மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.தோன்றிய 99.99% உயிரினங்கள் அழிந்து விட்டன.
மிக மிக பெரிய பிரபஞ்சத்தில்(எதுக்கு இவ்வளவு பெரிசு?) பூமியில் மட்டுமே (அறிந்தவரை) உயிரினங்கள்.
ஆகவே பரிணாம கொள்கை எளிமையாக் அய்வுரீதியாக் அனைவருக்கும் புரியும்படி விள்க்கப்படும் போது,விள்க்கம் இப்படி மாறிவிடும்.
அ)ஆதம் ஏவாள் மனிதர்கள் என்று குறிப்பிடப்படவில்லை.தேவ சாயல் என்று ஒரு புத்தக்த்தில் குறிப்பிடப் பட்டாலும் அது எப்படி மனித சாயல் ஆகும்?.
ஆ)முதல் உயிர்களே ஆதம் ஏவாள் என குறியீடுகளாக விள்க்கப்படுகிறார்கள்.
பரிணாமம் ஒரு சக்தியால் வழிநடத்தப்படுகிறது.
இன்னும் 50+ வருடங்களில் இதுதான் படைப்பியல் கொள்கை!!!!!!!!!!!
பரிணாம எதிர்ப்பாளர்களின் பரிணாம விள்க்க நகைச்சுவை
"ஒரு விலங்கு எலியில் இருந்து புலியாக மாறினால் இடைப்பட்ட நிலையில் எலிபாதி+புலி மீதியாக இருக்கும்"
'இப்படிப்பட்ட இடைநிலை படிமங்கள் கிடைக்காததால் பரிணாமம் முற்று முழுக்க தவறு!!!!!!!!!!!!!!!!!'
விட்டலாச்சார்ய படம்மாதிரி உடல் உறுப்பு ஒவ்வொன்றாக மாறும் என்று எதிர்பார்க்கும் இப்படிப்பட்ட ஆட்கள் பரிணாம கொள்கை எதிர்த்தால் நன்றாக வாய்விட்டு சிரிக்க்லாம்!!!!!!!!!!!!!.
இதுக்கு பாராட்டுகள்,ஓட்டுகள் குவியும்!!!!!!!!!!!!!!!!!!!
ஹா ஹா ஹா
Hi Hi read the original content!!!!!!!!!
//மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும்.
இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்படி, வரலாற்றில் எலி இருந்திருக்கின்றது, அதுபோலவே புலியும் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட உயிரினங்கள் (அதாவது 'பாதி எலி பாதி புலி' மற்றும் 1.1, 1.2 போன்ற உயிரினங்கள்) உயிரினப்படிமங்களில் காணப்படவில்லை.//
புரட்சிமணி,
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி!
--------------
குளிர்ந்த பீர்,
வாங்க, நீங்க சொன்னாப்போல பேரு மாத்தி வச்சுக்கிட்டாங்க, பதிவில் இறைத்தூதர்களின் பட்டியல்னு சுட்டி வருதே , அதுல போய் பாருங்க , ஆதாம் ல ஆரம்பிச்சு ஏசு =ஈசானு எல்லாரையும் தத்து எடுத்து இருப்பது தெரியும்.
சுட்டிப்போட்டா போய் பாருங்கப்ப்பா.
-----------------------
ராஜ்,
வாங்க, எளிமையாக இருக்க வேண்டும் என்பதால் அதிகம் சேர்க்கவில்லை. சான்றுகள் சுட்டிகளாக கொடுத்துவிட்டேன். மேலும் கேட்டாலும் கிடைக்கும்.
நான் எழுப்பிய கேள்வி சென்றடையாமல்ல் போய் விடும் என்பதாலே அப்படி.இந்த கேள்விக்கு பதில் சொல்ல வந்திருந்தால் ஒரு வீடு கட்டியிருப்பேன் :))
கிருத்துவம் இப்போது பெரும்பாலும் அறிவியலை ஏற்றுக்கொண்டு விட்டது. ஒரு சிறுபான்மையினர் தான் இன்னும் அறிவியல் வட்டத்துக்குள் வரவில்லை.
நீங்களே சொன்னாற்போல் ,இஸ்லாம் இன்னும் கலிலியோ கால கிருத்துவம் போன்றே இருப்பதால் அது குறித்தே இப்பதிவு.ஆரம்ப அறிமுகம் செய்ய யூதம் , கிருத்துவம் எல்லாம் சொன்னால் நீங்க என்ன இப்படி புரிஞ்சுக்கிறிங்க.
கோணலானவர்களுக்கு போட்ட மேடை அப்படித்தான் இருக்கும். ஆடத்தெரிந்தால் சுலபம் :-))
அந்த மருமகள் அடுத்த கொடுமைக்கார மாமியர் ஆகாம இருக்க தான் :-))
சாத்தான்களின் சாகசம் இங்கே செல்லுபடி ஆகாதுனு தெரிஞ்சிடுத்து போல.
------------
சூர்யா,
வாங்க,
//மதவாதிகள் கேள்வி கேட்டிருந்தால் மதம் இன்று காணாமல் போய் இருக்கும்... கேள்வி கெட்டவர்களோ புது பாதை போட்டுக் கொண்டு ஆன்மீக வாதிகள் என்று பறை சாட்டி கொள்கிறார்கள்...//
கேள்விக்கேட்டிருந்தால் ஏன் இப்படி. மேலும் அதை அறிவியல் என்றும், உயர்வானது என் றும் அல்லவா சொல்லிக்கொள்கிறார்கள்.
------------
சார்வாகன்,
வாங்க, வணக்கம், நானும் அப்படியே நினைத்தேன். வந்தா நல்லது தான் வர்ரலையே.
நீங்க சொன்னாப்போல அவங்க கொள்கை எல்லாம் அடி வாங்கிடுச்சு. இப்போ அறிவியலுக்கு ஏற்றார் போல அவங்க திரிச்சு சொல்லிக்க ஆரம்பிச்சுட்டாங்க .
அடுத்தப்பதிவில் உயிரினம் எப்படி பூமியில் தோன்றி இருக்க கூடும். டார்வின், கால போகஸ் தீவு, மைட்டோ காண்ட்ரியல் ஈவ்வ், எனப்போகலாம்னு இருக்கேன். நீங்க முன்னரே எழுதி இருக்க கூடும்.என் பங்குக்கு நானும் கிண்டலாம் பார்க்கிறென்.
//அ)ஆதம் ஏவாள் மனிதர்கள் என்று குறிப்பிடப்படவில்லை.தேவ சாயல் என்று ஒரு புத்தக்த்தில் குறிப்பிடப் பட்டாலும் அது எப்படி மனித சாயல் ஆகும்?.
ஆ)முதல் உயிர்களே ஆதம் ஏவாள் என குறியீடுகளாக விள்க்கப்படுகிறார்கள்.
பரிணாமம் ஒரு சக்தியால் வழிநடத்தப்படுகிறது.
இன்னும் 50+ வருடங்களில் இதுதான் படைப்பியல் கொள்கை!!!!!!!!!!!//
ஹி..ஹி எதை சொன்னாலும் அதான் இது என்பார்கள் மார்க்க பந்துக்கள் :-))
சகோ.சார்வாகன்,
வாங்க, எங்கே இருந்து கடத்தி வந்திங்க அந்த பாதி எலி- புலி ய. செம காமெடியா இருக்கே. அடிப்படை அறிவியல் கூட தெரியவில்லையே அவங்களுக்கு.
ஏன் அவங்க படிக்கிற காலத்தில் பரிட்சையில் கேள்வி வத்தா இப்படி எழுதுவாங்களா?
வவ்வால் நண்பா
அதுதான் இன்றைய தமிழ் மணத்தின் சிறந்த இடுகை.
இயற்கைத் தேர்வை விட்டலாச்சார்யா ஆக்கி விட்டார்களே.சென்று படியுங்க்ள் அந்த நகைசுவையை!!!!!!!!!!!!!
http://www.ethirkkural.com/2012/01/600.html
//அடுத்தப்பதிவில் உயிரினம் எப்படி பூமியில் தோன்றி இருக்க கூடும். டார்வின், கால போகஸ் தீவு, மைட்டோ காண்ட்ரியல் ஈவ்வ், எனப்போகலாம்னு இருக்கேன். நீங்க முன்னரே எழுதி இருக்க கூடும்.என் பங்குக்கு நானும் கிண்டலாம் பார்க்கிறென்.//
ஒரு சமயம் தோன்றியது ஆனால் அது பற்றி எழுதவில்லை ந்ண்பா,
உங்கள் பாணியில் அருமையான்க புள்ளி விவரங்களோடு எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நன்றி
நண்பர்களே
நம்ம் சகோக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக்[என்று நினைத்துக் கொண்டு] ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
அதாவது கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய விலங்கு ஒன்றின் படிமம் காட்டுங்கள் என்கிறார்கள்.இது குறித்த நம் கேள்விகள்.இபோது கிடைத்துள்ள படிமங்களில் பாக்டீரியா போன்ற உயிர்களே இருப்பதாக் நினைத்து கேட்கின்றார்.ஆனால் கிம்பெரல்ல என்னும் எடிகரன் கால விலங்கின் படிமம் இருக்கிறது என்ற அறியாமையில் வந்த கேள்வி இது.
http://www.fossilmuseum.net/Fossil_Sites/whitesea/kimberella/kimberella.htm
Description: This spectacular specimen of early life predates the Cambrian Explosion by tens of millions of years. Many early attempts at diversity were present during this time, both here and in the Ediacara Fauna of the Flinders Ranges of Australia. Many strange forms were present, some of which still do not have any parallels in modern times. This one is known as Kimberella, thought by some to have had a tough shell much like modern-day molluscs. It has been found associated with Radulichnus which appears to show scrapings much like those made by the radula of a modern snail, as well as traces that may have been made as Kimberella moved along the seafloor. Whatever its true identity, it has been assigned to the Vendozoa, a group of animals that existed prior to the better-known Cambrian Explosion. The incredible soft-bodied preservation is believed to be the result of impressions made in a microbial mat contained within the sand. Kimberella fossils are also found in the Ediacara Hills of Australia.
1.கேம்பிரியன் படிமங்களில் மனிதன் இல்லை.ஆகவே ஆதம் ஹவ்வா இவர்களை எப்போது __________ படைத்தான்?
வவ்!நான் முன்பு போட்ட பின்னூட்டத்தில் ஆதம்,ஏவாள் கூட சாத்தானைக் காணோமேன்னு சொல்லியிருந்தேன்.நீங்க கொடுத்த ஆதம்-ஏவாள் தொடுப்பை நான் முன்பு கிளிக்கவில்லை:)இப்ப பார்த்தேன் நீங்க கொடுத்த அனைத்து சுட்டிகளையும்.
நண்பர் சார்வாகன் கொடுத்த சுட்டிகளை முன்பே மேய்ந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை மேய்ந்தேன்.மனித வழித்தோன்றல்களை விவிலியம் மூலமாக விவாதிப்பதை விட நீங்களும்,சார்வாகனும் யாருக்குமே புரியாம பேசுறீங்களே....அதான் மைட்டோ காண்ட்ரியல் மொழி:)யில் ஆரம்பிப்பது ஆய்வு குறித்த பதிவாக இருக்குமென நினைக்கின்றேன்.
(அது மைட்டோ அல்லது மிட்டோ காண்ட்ரியலா).சொல்லைத் தேடிகிட்டுப் போனதில் கிடைத்தது உங்க பதிவோடு தொடர்பானதாக இருக்குமென்பதால் இங்கே சுட்டி.
http://en.wikipedia.org/wiki/Mitochondrial_Eve
நீங்களோ அல்லது சார்வாகனோ இது குறித்து இன்னும் விளக்க பதிவுகள் இட்டால் தமிழுக்கு தனயனாவீர்கள்:)
நியாண்டர்தால் மனிதர்களையெல்லாம் பள்ளியிலேயே படித்தோம்தானே.இப்ப வால்பையன் போன்றவர்கள் படம் வேற போட்டு காட்டுகிறார்கள்.விக்கி சுட்டியைப் படித்தால் ஆதாம்க்கு முன்பே ஏவாள் பிறந்திருக்க அல்லது உருவாகியிருக்க வேண்டுமென்ற விவிலிய பழைய ஏற்பாட்டை திருப்பி போடுகிற மாதிரி இருக்கிறது.இங்கேதான் நீங்க சொல்லும் மைட்டோ காண்ட்ரியல் ஈவ் தியரி வருகிறது.சரக்கு,கஞ்சா விலிருந்து இரண்டாவதா பிறந்த (Reborn Christian) ஜார்ஜ் புஷ் காலத்து குளோனிங் தடை,குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழலில்,ஆனால் குழந்தை வேண்டுமென்று விரும்பும் பெண்ணுக்கு இன்னொரு பெண்ணின் கரு முட்டை மூலமாக கணவன் அணுவை புகுத்தி கருத்தரிக்கும் நுட்பம் இப்ப புரிந்தாலும் கூட(ஆம்பிளை இல்லாட்டி கூட பொம்பளை புள்ள பெத்துக்க முடியும்) முதலாம் ஈவின் தியரிக்கு ஆணின் அணு மால்க்யூல் எப்படி கிடைத்தது என்ற புதிருக்கான விடை கிடைத்து விட்டால் மைட்டோ காண்ட்ரியல் தியரி வென்று விடக்கூடும்.
இதற்கு மாறாக விவிலியம் ஆதாம் மட்டுமே முதல் என்ற தியரியை எடுத்துக்கொண்டாலும் கூட பெண் குரோம்சோம் எப்படி உருவானதென்ற புதிரும் உருவாகவே செய்கிறது.விலா எலும்பு தியரியெல்லாம் நம்பிக்கை சார்ந்த ஒன்று மட்டுமே என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.
அதனால்தான் இப்ப இருக்குற கெயின்,ஏபல் ஆட்களை??? விட்டுப்புட்டு மைட்டோ காண்ட்ரியல் தியரிக்குள் இரண்டு உஸ்தாதுகளில் யாராவது ஒருவர் நுழைய வேண்டுகிறேன்.
உங்க பின்னூட்டத்துக்கு என்னோட கடையில் இன்னும் பதில் சொல்லவேயில்லை.பணியோடு,நம்மவீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பது போரடிக்கிற மாதிரி இருக்குது.(இப்படியெல்லாம் இருக்குற ஆளுகளுக்கு அலெக்சா ரேங்காவது முதல் வரிசையாவது)
அப்புறமா சொல்றேன்.
ஏற்கனவே நண்பர் சார்வாகன் பதிவில் நம்ம காந்தி படம் எடுத்த ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் சகோ.டேவிட் ஆட்டன்பரோ பி.பி.சியில் வந்த Live series காணொளி பற்றி சொல்லியிருந்தேன்.இப்ப நீங்க வேற வெள்ளைக்கார துரைமார்கள் தமிழ் கூட பேசுறாங்கன்னு சொல்றதால இந்த மாதிரி துரைமார்கள் நிச்சயம் பர்மா பஜார் பக்கம் சுத்திகிட்டிருப்பாங்க:)உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா ஒரிஜனல் துரையே கூட மாட்டினாலும் மாட்டுவாரு.
மொத்தம் 10 மெகா சீரியல்.நம்ம ஊரு மெகா சீரியலே விளம்பரமெல்லாம் சேர்த்தே 30 நிமிடம்தான்.(எங்க வீட்டு ஏவாளும் மெகா சீரியல் காதலிதான் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் இங்கே பதிவு செய்துக்குறேன்:))
டேவிட் ஆட்டன்பரோவின் ஒவ்வொரு சீரியலும் சுமார் 45 நிமிடத்திலிருந்து 50 நிமிடம் விளம்பர இடைவெளி இல்லாமலே.
பல உயிரினங்களை காடு,மேடு,ஐஸ்கட்டி,மெட்ரோ சிட்டி பெருச்சாளிகள் கூட எப்படி உணவுக்காக வாழ்கின்றன என்றும்,பாலூட்டிகள்(Mammals),Infrared காமிராவில் இரவில் காமிராவில் கொண்டு வந்தது,இறுதியில் நமக்கு கிட்டத்தட்ட தொடர்பான கொரில்லாக்கள் பற்றியெல்லாம் சொல்லி இருப்பார்.
One of the best in BBC documentary series.
க்ளிப்ஸ் யூடியுப்பில் கூட கிட்டும்.
ஆஹா, கதை மிகவும் சுவாரஸ்யமா இருக்கே. அந்த காலத்தில இது எல்லாம் தப்பு இல்லை அப்படின்னு இருந்திருக்கும். இருந்தாலும் பின்னூட்டங்களும் பல விசயங்கள் பேசுகின்றன. மீண்டும் வருகிறேன்.
மிக அழகாக தமிழில் த்ருகிறீர்கள்
பைபிள் உள்ளவை வெறும் ஊகக் கதைகள்- புனையப்பட்டவையே என பைபிளியலாளர்கள் ஏற்கின்றனர்.
தொடக்கத்தில் உள்ள முதல் 14 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய
புதிகளுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படப்பு, பாவம், சாவு, துன்பம்...)
இதற்குரிய பதிலகளைப் "படைப்பு" போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும்
முடியாது.
- பக்கம் "நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி -பதில்; - கத்தோலிக்க
பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் S.S.தெயோபிலஸ்
எழுதிய நூல்- : “நிஜங்கள்- விவிலியம் பற்றிய கேள்வி - பதில்கள்”, இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.
இதே போல இஸ்ரேலின் அக்ழ்வாஉவு முடிவுகள் ஆபிரகாம் ஸாலமோன் வரை உள்ளவை அனைத்தும் புனையப்பட்டவை என்கின்றனர்.
இன்னுமொரு நூல் –
http://wp.me/PxRSh-7E
• Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
மோசே சட்டங்கள் முழுதையும் மேலும் சாலமன் ஜெருசலேம் கர்த்தர் ஆலயம்
கட்டும்போது செய்தக் கொலைகளை எல்லாம் ஒன்றிணைத்து பார்த்த ஒரு
ஆப்பிரிக்கப் பாதிரியார், இவர் முன்பு கணிதப் பேராசிரியராக இருந்தவர்,
இவர் முன்பு கணிதப் பேராசிரியராக இருந்தவர், ஒவ்வொரு நிமிடமும்
தினந்தோரும் 400௧600 ஆடுகள் பலி எனக் கொலைகள் என்றும் எபிரேய யூதமதப்
பாதிரிகள் தினமும் 88 புறக்கள் சாப்பிட வேண்டும் என்பது பைபிள் படியான
சட்டங்களின்படி என்றார். அந்த ஆப்பிரிக்கப் பாதிர்யாரை சர்ச்
கிறிஸ்துவத்திலிருந்து வெளியேற்றியது, ஆனால் இப்படிப் பட்ட சட்டங்கள்
இன்றும் உலகில் தேவன் வார்த்தை என பரப்பப் படுகிறது.
No less provoking were the findings of the scholars working on the
text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained
as a Mathematician critically examined, the Old Testament records and
reckoned that on the basis of the Legislation found in the Pentateuch,
the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily
and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was
desposed but critical scholarship had made inroads.
Page-266 The Religious World.
ஒரு பத்திரிக்கைச் செய்திப்படி 20 ஆம் நூற்றாண்டில் மட்டும்
அமெரிக்காவின் பல்வேறு மாநில அரசுகளாலும் மாநில உச்ச நீதிமன்றங்களாலும்
படிப்பவர் மனதைப் பாதிக்கும் அருவெறுப்பானவைகளை கொண்டது என பைபிள் 113 முறை தடை செய்யப் பட்டது
BIBLE Banned IN America - Will Sonia Gandhi follow?-
http://youngindiansu.blogspot.in/2011/12/bible-banned-in-usa-will-sonia-gandhi.html
இங்கே இன்னும் பாமர மக்களை சர்ச் ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.
சகோ.சார்வாகன்,
வாங்க, நன்றி!
ஹி..ஹி நீங்க சொல்லும் விஞ்ஞானியோடு ஒரே நகைச்சுவையய்யா :-)) நானும் அதே ஆஸ்திரேலிய படிமம் பற்றி அங்கே சொல்லிட்டு வந்தேன்.
மனிதன்,உயிரின தோற்றம் என விரைவில் எழுதலாம்னு இருக்கேன், ஆனா ஏகப்பட்டது இருக்கு எப்படி சுருக்க்கி எழுதுவது என்று தெரியாமல் தலையை சொறிந்துக்கிட்டு இருக்கேன் :-))
//1.கேம்பிரியன் படிமங்களில் மனிதன் இல்லை.ஆகவே ஆதம் ஹவ்வா இவர்களை எப்போது __________ படைத்தான்?//
கடவுள் படைச்சா படிமம் ஆக மாட்டாங்களாம் நேர சொர்க்கம் போயிடுவாங்க :-))
---------------
வாங்க ராஜ்,
நன்றி!
ஹி..ஹி புரியலையா எங்க புரிஞ்சு சண்டைக்கு வருவாங்களோனு நான் கூட பயந்துட்டேன் :-))
ஆமாம் நீங்க சொன்ன விக்கி சுட்டில இருப்பது தான், இன்னும் நிறைய இருக்கு எல்லாம் தொகுத்து தமிழாக்க அடுப்புல வேக வைத்துக்கிட்டு இருக்கேன் சீக்கிரமா பரிமாறிடுறேன். மதவாதிகளுக்கு இறைநாடினால் அஜிரணக்கோளாரு வரக்கூடும் :-))
//நீங்களோ அல்லது சார்வாகனோ இது குறித்து இன்னும் விளக்க பதிவுகள் இட்டால் தமிழுக்கு தனயனாவீர்கள்:)//
எழுதாவிடில் தத்துப்புத்திரன் ஆகிடுவோமோ? :-))
---------
ரிச்சர்ட் ஆட்டன்ன்பரோ காணொளி சார்வாகன் பதிவிலும் பார்த்தேன், முன்னர் என்னோட நீள் உறக்கம்ம் பதிவிலும் சுட்டி போட்டிங்களே அதானே, நன்றி ! எப்படியும் தடவி தடவி பார்த்துடுறேன். இதெல்லாம் எங்கே கடையில விக்கிறாங்க எல்லாம் எக்ஸ் மயம் தான் இருக்கு,இல்லைனா மொக்கை தமிழ் இறுவட்டுகள் தான் :-))
---------
தேவா,
வாங்க,வணக்கம் நன்றி!
ஏகப்பட்ட தகவல்கள் கைவசம் வைத்திருக்கிங்க போல ,அப்போ அப்போ வந்து எனக்கும் தகவல் கொடுங்க, அதை வச்சு நான் வீடு கட்டிருவேன் :-))
பைபிள் மொத்தமுமே ஏசுக்கு பின்னர் காண்ஸ்டன்டைன் காலத்தில் எழுத்அப்பட்டது தானே, அதுக்கே யார் நல்ல பைபிள் எழுதுறாங்கனு போட்டி வேற வைத்தாராம் சுமார் 1000க்கும் மேற்பட்ட புத்த்அகம் எழுதி அதில் சிறப்பானதை புனித நூல் ஆக்கீடாங்க.
டெத் சீ ஸ்கிரால் தான் ஒரிஜினல்னு சொல்ராங்க.ஏசுநாத்அர் மொத்தமே32 பிரசன்ங்கம் தான் செய்துள்ளார், எனவே அத்உ மட்டுமே புனித நூல் ஆக எடுத்துக்கொள்ள முடியும்.
நிங்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் பயனுல்லவையாக இருக்கு,மக்கள் அப்போவும் நம்பாது. விருப்பத்துடன்
ஏமாற ஆசைப்படும் அப்பாவிகள். :-))
--------
ராகி,
வாங்க, நன்றி! வணக்கம்,
கதையல்ல நிஜம் ! ஆனால் கதையை நிஜம் என்கிறார்கள் :-))
வாங்க , வூடு கட்டி பேசலாம் :-))
வணக்கம் வவ்வால். ஒரு சுத்தமான ஆத்திகவாதியாக (கவனிக்க, நான் ஆத்திகனும் அல்ல பகுத்தறிவுவாதியும் அல்ல) எனது கருத்து என்னவென்றால், புராணங்களை தோண்டத் தோண்ட (நோண்ட என்றும் படிக்கலாம்) பல்வேறு ஐயப்பாடும் வாக்குவாதங்களும் எழும. அறிவியல் பூர்வமாக அனைத்தையும் ஆராய்வதில் தவறில்லை எனிலும் வாதங்கள் முடிவின்றி தொடர்கதை ஆகிவிடுவதை மறுப்பதற்கில்லை (உலகநாயகர் பேட்டி பார்த்து பார்த்து புரியாமல் பேசுகிற வியாதி வந்திட்டு). என்னை பொருத்தவரை மதங்கள் தோன்றியதன் நோக்கம் இரண்டாக வரையறுக்கலாம். 1. கடவுள் பெயரால் சொல்லுவதைத்தான் பெரும்பாலோர் கேட்பார்கள் (கண்ணைக் குத்திவிடும் பயம் ?) 2. விளக்க முடியாதவற்றை கடவுள் மேல் போட்டுவிடலாம். மற்றபடி கடவுள் நம்பிக்கையும் பயமும் உள்ளவரையே ஆறு அறிவு படைத்த மனிதனை ஓரளவாவது மட்டுப்படுத்த முடியும் என்பது அடியேன் எண்ணம். அனால் முட்டாள் தனமான மதவாதக் கொள்கையில் எனக்கு கிஞ்சித்தும் உடனபாடில்லை. (மறுபடியும் உலகநாயகர் பாணி :) நன்றி
KeeYes
திருத்தம் (கவனிக்க, நான் நாத்திகனும் அல்ல பகுத்தறிவுவாதியும் அல்ல)KeeYes
இறை தூதர்கள் நிறைய பேர் இருந்தா அடு தப்பு இல்ல , ஆனா கடவுள்கள் பல பேர்ன்னு சொல்றதுதான் தப்பு... இந்த மாதிரி மொக்கையா சொல்லிட்டு திரியவேண்டாம்...
Post a Comment