Tuesday, April 16, 2013

அஃதே,இஃதே-7


(ஹி...ஹி, பார்த்து பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன்...)

Play Back Singer!

தமிழ் திரையிசையில் மென்சோகம் கொண்ட குரலில் காதல் ரசம் சொட்ட பாடக்கூடிய பாடகராக கண்டசாலா விளங்கிவந்தார், அவரது அடியொற்றி அதே வகையில் பாடல்களை பாடி தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ,பி.பி.ஶ்ரீனிவாஸ் ஆவார், ஆரம்பகாலத்தில் இசையமைப்பாளர்கள் கண்டசாலாவிற்கு மாற்றாக ,அவரை அப்படியே நகல் எடுத்தார்ப்போல பாடவைத்தாலும், பின்னாளில் தனது தனித்துவத்தினை தக்க வைத்துக்கொண்டவர்.

பல நடிகர்களுக்கு பின்னணி பாடியிருந்தாலும் காதல்மன்னன்"சாம்பார்" ஜெமினிக்கு பாடும் போது அட்சசுத்தமாக குரல் பொருந்தும்,காரணம் ஜெமினியின் குரலும் கொஞ்சம் மென்மையாக பெண்மையுடன் இருந்ததாகும்.

டி.எம்.எஸ் போன்றோரின் அசுர ஆதிக்கத்தின் முன் பிபி.எஸின் ஆதிக்கம் செல்லுபடியாகாத சூழலில் அரிதாகவே பாடும் சூழல், ஆனால் அப்படியும் பெரும்பாலான காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளார், பிற்காலத்தில் பி.பி.எஸ் குரலின் இளம்  நகலாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளமையாக வரவே திரைப்பட வாய்ப்புகள் குறைந்து,ஓரம் கட்டப்பட்டார் என்றே சொல்லலாம். இது தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு சங்கதி.




குரல் தளர்ந்து, திரைப்பட வாய்ப்புகள் குறைந்த காலக்கட்டத்தில் "கஸல் பாடல்களில் தனது கவனத்தினை திருப்பினார், பாபர் வம்சாவழியில் ,கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர் -2 என்பவர் ஆவார், இவரது காலத்தில் பிரிட்டீஷார் இந்தியாவை முழுவதும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்தார்கள், பகதூர் ஷார்-2 வெறும் பொம்மையாக தில்லி செங்கோட்டையில் அமர்ந்தார், அப்படி இருக்கும் காலத்தில் சும்மா இல்லை, உருது,பாரசீக மொழிகளில் நல்ல ஞானமுடையவர்,எனவே அரசவை கவிஞர்களை வைத்து கவியரங்கம், கசல் பாடல்கள் எழுதுவதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார், 1857 இல் சிப்பாய் கலகம் நடந்த போது, பகதூர் ஷா ஜாப்பரை இந்திய அரசராக சிப்பாய்கள் அறிவித்து ,அவரது தலைமையின் கீழே போராடினார்கள். சிப்பாய் கலகம் அடக்கப்பட்டதும் , பகதூர் ஷாவை கைது செய்த பிரிட்டீஷார், கண்களை குருடாக்கி ரங்கூனுக்கு நாடுக்கடத்தி சிறையிலடைத்துவிட்டார்கள் ,அங்கு சிறையிலே காலமானார்.

பகதூர் ஷா ஜாபர்-2 எழுதிய பல கசல் பாடல்கள் சிப்பாய் கலகத்தின் போது அழிக்கப்பட்டுவிட்டது, ஆனாலும் எஞ்சிய பாடல்கள் பின்னாளில் தொகுக்கப்பட்டு பலராலும் பாடப்பெற்றது,அவர் எழுதிய பாடல்களில்  சில அரிய ,அது வரையில் யாரும் பாடியிராத கசல் பாடல்களை சேகரித்து, பி.பி.ஶ்ரீனிவாஸ் பாடி ஒரு கசல் ஆல்பமாக வெளியிட்டார்.

திரையுலகில் புகழின் உச்சியில் இருக்கும் போது என்ன செய்தாலும் ,ஆஹா ,ஓஹோ என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், லைம் லைட் இழந்த பின் கண்டுக்க ஆளே இருக்காது,காலம் போனப்பின் பாடியதாலோ என்னமோ  கசல் ஆல்பம் வெகுவாக எடுபடவில்லை,மேலும் அப்பொழுது தான் கணினி, சிடி என நுழைய ஆரம்பித்த காலம், ஆடியோ கேசட்டில் போட்டது எடுபடவில்லை,ஆனால் கள்ளத்தனமாக சிடிக்கள் நன்றாகவே போனது, அதனால் அவருக்கு ஒரு பலனும் இல்லை.
அதற்கு பின்னரும் பல காலம் கசல் ஆல்பம் போட முயன்றார், மேலும் அவரே கசல் பாடல்களும் எழுதுவார், எப்பொழுதும் பல வண்ணப்பேனாக்களும் பேப்பருமாக இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம், மேலும் நிறைய கவிதைகள் என எழுதிக்கொண்டேயிருப்பார், கவிதைகள் ,கசல் பாடல்கள் என எழுதும் போது ஒவ்வொரு "மூட்"கும் ஒரு வண்ணம், இசை அடிக்குறிப்புக்கு ஒரு வண்ணம் என எழுதுவாராம், மேலும் யார் மாட்டினாலும் நியுமராலஜி, பெயர் ஆராய்ச்சி என செய்வாராம்.

கசல் ஆல்பம் போட வேண்டும்,கவிதை நூல் வெளியிட வேண்டும் என சொல்லிக்கொண்டேயிருப்பாராம், ஆனால் மீண்டும் அதெல்லாம் செய்ய வாய்ப்பு கிடைத்ததா என தெரியவில்லை. நேற்று பிரியாவிடைப்பெற்று சென்றுவிட்டார். நல்லதொரு பாடகரை நமது சமூகம் சரியாக அங்கிகரிக்கவில்லையோ என்ற கேள்வி மட்டும் அவரின் பாடல்களை கேட்கும் போது காற்றுவெளியில் தொக்கி நிற்கிறது.



வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார், தமிழ்திரையிசைப்பாடல்கள் ஒலிக்கும் காலம் வரையில் "Play Back Singer"=PBS என தனித்து நிலைத்திருக்கும்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்!

(ஒலிப்பதிவு & இசைத்துறையில் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் பிபிஎஸுடன் பழகியவர்,அவரோடு முன்னர் பேசியப்போது அறிந்து கொண்டவற்றை பகிர்ந்துள்ளேன், என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என அடிக்கடி சொல்வார், நடக்காமலே போயிற்று)

----------------------

எப்படி இருந்த சென்னை இப்படி ஆகிடிச்சு!





மேற்கண்ட மேப் பிரிட்டீஷார் ஆண்ட காலத்தில் சென்னை ,மெட்ராசா இருந்த போது  கி.பி 1893  இல் உருவாக்கப்பட்டது. அதில் பார்த்தால் சைதாப்பேட்டைக்கும் நுங்கம்பாக்கத்திற்கும் இடையே "லாங் டேங்" என குறிப்பிட்டு இளநீல வண்ணத்தில் ஒரு பகுதி தெரியும்,அது வேறு ஒன்றும் இல்லை அக்காலத்தில் அப்பகுதியில் இருந்த ஏரி ஆகும்.

ஆம் அக்காலத்தில் அவ்வளவு பெரிய ஏரி சென்னை நகருக்குள்ளே இருந்துள்ளது , இப்போது அந்த இடமெல்லாம் வீடுகளாகி ,தார் சாலைகள் போட்டு வாகனங்கள் ஓடுது :-((

இப்பொழுதும் மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் "லேக் வியூ ரோட்" என இருப்பதற்கு காரணமே அந்த லாங் லேக் தான், இப்போ ரோடு இருக்கு ஏரி இல்லை.

இந்த ஏரிக்கு அடையார் ஆற்றின் மூலம் தண்ணீர் வரத்து நடைபெறும் இடையில் ஒரு வாய்க்கால் ஓடுமாம், அதன் மூலம் தான் லாங்க் டேங்கும் ,அடையாறும் இணைந்திருந்தது,இக்கால்வாய் சைதாப்பேட்டையை இரண்டாக பிரித்துவிடுவதால் சைதாப்பேட்டையின் ஒருப்பகுதியினர் அக்காலத்தில் மவுண்ட் ரோட்டிற்கு  வர முடியாதாம், . இப்படி மக்கள் கஷ்டப்படுகிறார்களே என ஒரு வெள்ளைக்கார பொறியாளர் தனது சொந்த செலவில் ஒரு மரப்பாலம் அமைத்து கொடுத்திருக்கார், அவருக்கு ஒரு மார்பளவு சிலையும் கல்வெட்டும் மக்களே அமைத்திருக்கிறார்கள், அந்த சிலை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் டீச்சர்ஸ் கல்லூரிக்கு எதிரே உள்ள மின்வாரிய அலுவலக கட்டிடத்தின் ஓரமாக இன்றும் இருக்காம்.

அந்த கால்வாயை எல்லாம் மண்ணள்ளி போட்டு மூடியாச்சு,எனவே மரப்பாலத்துக்கும் வேலையில்லாம போய் யாரோ அடுப்பெரிக்க மரப்பாலத்தினை எடுத்து போயிருக்க கூடும்.

இப்பொழுது சைதையில் அடையாற்றின் மீது உள்ள மறைமலை அடிகள் பாலத்தினை முதலில் கட்டியது, பீட்டர் ஸ்கான் என்ற ஆர்மீனிய வியாபாரியாகும், அவர் சொந்த செலவில் மக்களுக்கு கட்டியுள்ளார், அதுவே பின்னாளில் விரிவாக கட்டப்பட்டு மர்மலாங் பிரிட்ஜ் எனப்பெயரிடப்பட்டு ,அப்புறம் மறைமலை அடிகள் பாலம் என தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்த ஏரி மட்டும் இல்லை சென்னை முழுக்கவே பல ஏரிகள், குளங்கள் என அக்காலத்தில் இருந்துள்ளன, ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தால் எல்லாம் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டது.

மேலும் நம்ம மக்கள் ஏரிக்கரையில் காலைக்கடன் கழிப்பது, ஏரியில் குப்பைகளை கொட்டுவது என சகலவிதத்திலும் மாசுப்படுத்துவதை தொடர்ந்ததால் ,மழைக்காலங்களில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகி மலேரியா,காலரா போன்ற நோய்கள் ஆண்டு தோறும் தாக்கவே ,இதற்கு என்ன காரணம் என வெள்ளையர்கள் ஆய்வு செய்து, நகரப்பகுதிக்குள் நிறைய நீர் நிலைகள் இருக்கு அதனால் தான் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது,என சொல்லி பல குளங்களை மண் அள்ளி போட்டு மூடவும் செய்தார்களாம்.

சுதந்திரம் அடைந்த பின் வந்த நம்ம ஆட்சியாளர்களும் எதாவது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் ஏதேனும் குளத்தினையோ ஏரியையோ தான் தூர்த்து மூடினார்கள். இதனால் நகரப்பகுதிக்கள் நீர் நிலைகள் என்பதேயில்லாமல் போய்விட்டது.

தரமணி,மயிலாப்பூர் பகுதிகளில் பறக்கும் ரயில் போகும் பாதையில் சாக்கடை போல கால்வாய் இருப்பதை காணலாம், அதன் பெயர் தான் பக்கிங் ஹாம் கால்வாய், இந்த கால்வாய் அப்போது  செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் இருந்து , இப்போது உள்ள கல்பாக்கம் அருகில் உள்ள சட்ராஸ் எனப்படும் சதுரங்கப்பட்டினம் வரையில் ஓடியது. இதில் படகுகள்  மூலம் பயணிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வார்கள்.

சட்ராஸ் என்ற ஊர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார துறைமுகம் ஆகும், வெள்ளையர்  வருமுன்னரே சட்ராசுக்கு போர்ச்சுகீசியர் வந்து வேலைய ஆரம்பிச்சுட்டாங்க, அவங்களை பார்த்து தான் பின்னர் வெள்ளையர் வந்து போட்டிக்கு மெட்ராசை ஆரம்பிச்சாங்க :-))

தெற்கில் பங்கிங்காம் கால்வாய் போல வட மெட்ராசிலும் ஒரு கால்வாய் ஓடியது, Coehrane river or North river என அழைக்கப்பட்டது,அது புலிகாட் ஏரியில் இருந்து ஆரம்பிச்சு , ராய புரம்,பேசின் பிரிட்ஜ்,சென்ட்ரல், தற்போதுள்ள மெடிக்கல் காலேஜ் வழியாக ஓடி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அருகே கூவத்துடன் சேரும், தீவுத்திடல் அருகே பக்கிங் ஹாம் கால்வாயுடன் இணைப்பு உருவாகும்.

இதன் மூலம் புலிகாட்டில் இருந்து சட்ராஸ் வரைக்கும் படகில் பயணிகளும்,பொருட்களும் கொண்டு செல்வார்கள். புலிகாட் பகுதியை ஏன் இப்படி இணைத்தார்கள் என்றால் அங்கு டச்சுக்கோட்டை மற்றும் துறைமுகம் இருந்தது, போர்ச்சுக்கீசியர்களுக்கு அடுத்து ,வந்து வியாபாரம் ஆரம்பித்தார்கள், எல்லாருக்கும் கடசியா வந்த கொள்ளைக்காரன் தான்  வெள்ளைக்காரன்,ஆனால் அவன் தான் ரொம்ப நாளு ஆட்டி வச்சிருக்கான் :-))

இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் ஒருக்காலத்தில் சென்னை நீர் வளத்தோடு சிறந்து விளங்கிச்சு என்பதை நினைவுறுத்தவே.

இப்போ தண்ணீருக்காக வீராணம் ,தெலுங்கு கங்கா, கடல் நீர் குடி நீர் ஆக்குதல் பகீரத பிரயத்தனம் செய்கிறோம்.அக்காலத்தில் கொஞ்சம் பொறுப்புடன் மக்களை கண்டித்து "லாங் டேங்" போன்றவற்றை காத்திருந்தால் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே வந்திருக்காது.

மேலும் நீர் நிலை என்பது  நிலத்தடி நீர் சேமிப்புக்கு ஒரு இன்றியமையாத அமைப்பாகும். ஒரு அடி நீர் தரைக்கு மேல் நிற்கிறது என்றால் 60 அடி நீர் அதற்கு கீழே சேமிக்கப்பட்டிருக்கும்,என தேசிய நீர்வள ஆய்வுத்துறையின் அறிக்கை சொல்கிறது. இதனால் தான் ஆற்றுப்படுகையில் சிறிது பள்ளம் தோண்டினாலும் நீர் சுரக்கிறது. நிலத்தடி நீர் சேமிக்க நீர் நிலைகள் மிக அவசியம் ,சென்னை நகரிலோ எல்லாம் வீடுகளாகவும், தார் சாலைகளாகவும் ஆகிவிட்டதால் மழைபெய்தால் எல்லாம் கடலுக்கு ஓடிவிடும்,நிலத்தடி நீர் சேகரிப்பு என்பதே இல்லை, இதனால் போர் போட்டாலும் நீர் கிடைக்காது. இருக்கும் கொஞ்ச நஞ்ச நீரையும் உறிஞ்சி விட்டதால், கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராகிவிட்டது.

அப்பொழுது மெட்ராசப்பட்டினத்தில் பல சிறிய காடுகளும் இருந்துள்ளன.

தற்போது உள்ள ஸிம்சனுக்கு எதிர்ப்புரம் செல்லும் பகுதி(பயன்ப்படுத்தாத தலைமைசெயலகம்) முழுவதும் நரிமேடு என்ற காடாக இருந்துள்ளது.அங்கு நரிகள் அதிகம் உலாவுமாம்.

மேலும் மவுண்ட் ரோட்டிற்கும்,திருவல்லிக்கேணிக்கும் இடையே காடு, தேனாம் பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையில் காடு இருந்துள்ளது.

நந்தனத்தில் தான் விவசாய கல்லூரி முதலில் துவங்கப்பட்டுள்ளது, அதை அங்கிருந்து தூக்கிட்டு அதில் எஞ்சிய பகுதியில் இப்பொழுது கோழிஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு வரைக்கும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் விடப்பட்டதாக மேப்பில் இருக்கு, இப்போ ரயிலும் காணோம், காடும் காணோம்.

இப்பொழுது ஐ.ஐடி உள்ள இடம், வன உயிரியல் பூங்காகவா இருந்துள்ளது, இந்தியாவிலேயே முதல் வன உயிரியல் பூங்கா அது தான், பின்னாளில் ஐ.ஐடி,கேன்சர் ஆஸ்பத்திரி எல்லாம் கட்டிட்டு ,வன உயிரியல் பூங்காவை சில்ரன்ஸ் பார்க் ஆக்கிட்டாங்க :-))

அதற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வனஉயிரியல் பூங்கா தான் வண்டலூரில் இருப்பது, போகிறப்போக்கைப்பார்த்தால் வண்டலூரிலும் ஒரு ஐ.டி பார்க் ஆரம்பித்துவிட்டு ,திண்டி வனத்தில் வனயிரியல் பூங்கா திறந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை,இந்தியா வல்லரசாக  தடையாக கேவலம் சில விலங்குகள் இருக்க விடுவோமா :-))

இப்போ இருக்கும் கே.கே.நகர்,அசோக் நகர்,அண்ணா நகர் எல்லாம் அக்காலத்தில் காடுகளே, இதை எல்லாம் சுதந்திரம் அடைந்த பின்னர் நம்ம ஆட்சியாளர்கள் தான் வீடுகளாக்கினர்.

இப்பொழுது பிசியாக இருக்கும் நூறடி ரோடு ஒரு காலத்தில் சென்னை -கொல்கத்தா பைபாஸ் சாலையாகும், பின்னர் அந்த ரோடே நகர சாலையாகிவிடவே, இரும்புலியூர் -மதுரவாயல் பைபாஸ் போட்டாங்க, இப்போ அதுவும் பிசியாகிட்டு இருக்கு,எனவே இப்போ முடிச்சூர் வழியா ஒரு பைபாஸ் சாலை போட்டுக்கிடு இருக்காங்க, கூடுவான்சேரிக்கிட்டே ஏரினா நேரா கொண்டு போய் தடாவில இறக்கிடுவாங்கனு நினைக்கிறேன் :-))

நகர வளர்ச்சி என்றப்பெயரில் நகரத்தின் ஜீவனை அழித்துக்கொண்டிருக்கிறோம்,ஆனாலும் எப்படியாவது ஒரு இடம் சொந்தமாக்கிடனும்னு அனைவருக்கும் ஆசையும் இருக்கு.

நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டு , தண்ணீர் இல்லைனு தண்ணீர் லாரி பின்னாடி ஓடுகிறோம், காடுகளை எல்லாம் அழித்துவிட்டு ,சுற்று சூழல் காக்க வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள்னு விளம்பரம் செய்கிறோம்.

நவீன பொருளாதார சார் உலகில் சுற்று சூழலை அழிப்பதில் தனி நபர்களை விட அரசே பெரும்பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.
------------

கன்னி வெடி!

பெண்களின் கண்ணுக்கு பயங்கரமான சக்தி இருக்குனு ,பல கவிஞர்கள் "ரா"வா கவிதை எல்லாம் சொல்லுவாங்க, வாள் எடுத்து போனாலும் முனை உடைஞ்சிருமாம், உன் விழியும் என் வாளும் சந்தித்தால் எனை வெல்லும்னு மண்டிப்போட்டுறுவாங்க:-))

பொண்ணுங்க கண்ணுக்கே அம்புட்டு பவர்னா ,"gun" எடுத்தா, அதுவும் இது மாதிரி இரட்டை கோபுர துப்பாக்கி எடுத்தா, எதிர்க்க எவனுக்கு தெகிரியம் இருக்கும் :-))



மறைஞ்சி நின்னு சுடுற கொடுற வில்லன் கூட்டம் கூட நெஞ்ச நிமித்திக்கிட்டு நேரா வந்து சண்டைப்போடுவான்ல! குண்டு தொளைச்சாளும் இத மாதிரி "குண்டு" தான் தொளைக்கணும் :-))

இணையத்தில் இந்த போஸ்டரை பார்த்த பின்னாலே ராத்திரியானா என் கெனாவுல ஒரே துப்பாக்கி சுடுற சத்தமா கேட்குது, அதான் முடிவு பண்ணிட்டேன் படம் எப்போ வந்தாலும் மொத நாளு மொத ஷோ பார்த்துப்பிடுறதுனு :-))

அடே கோடம்பாக்கம் டைரடக்கருங்களே, ஒலகப்படம் எடுக்கிறேன்னு சேப்பா இருக்க பொண்ணுக்கு வண்டி மசிய எடுத்து பூசி கருப்பாக்கி கண்ணை பதம் பாக்கும் பாவிகளே இனிமேலாச்சும் உங்க கற்பனைய நல்லவிதமா காட்டி,இப்படிலாம் படம் எடுக்க கூடாதா?

அதிரடி ஆக்‌ஷன் சண்டைப்படங்களுக்கு அழகூட்டும் இது மாதிரியான புதிய படைப்புகளை கலை ஆர்வத்துடன் வரவேற்பதில் அடியேனுக்கு என்றுமே அலாதி ஆர்வமுண்டு என்பதாலே இந்த பிட்டை போட்டுள்ளேன் என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

-----------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி ,கூகிள், யூடியூப்,ரூட்ஸ்வெப், இணைய தளங்கள்.

History of the city of Madras,Rao Sahib.C.S.Srinivasachari.M.A

நன்றி!
---------------------------

28 comments:

குட்டிபிசாசு said...

// பிற்காலத்தில் பி.பி.எஸ் குரலின் இளம் நகலாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளமையாக வரவே திரைப்பட வாய்ப்புகள் குறைந்து,ஓரம் கட்டப்பட்டார் //

…எஸ்.பி.பி இவருடைய "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடலை வாய்ஸ் டெஸ்டிங்க்கு பாடிக்காட்டினாராம்.

…தமிழ், கன்னடத்தில் கவிதைகள் எழுதுவார். கன்னடத்திலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

…//இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் ஒருக்காலத்தில் சென்னை நீர் வளத்தோடு சிறந்து விளங்கிச்சு என்பதை நினைவுறுத்தவே.//

…இன்னும் தமிழகத்தில் பல இடங்களில் பல நீர்நிலைகள் ஆறுகள் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. நம் அரசுக்கு புத்தி வராட்டி பரவாயில்லை. மக்களாவது சிந்தித்து, மிச்சசொச்சம் இருப்பவற்றையாவது காக்க வேண்டும்.

…இந்தப்படம் மசெடே படத்தோட இரண்டாவது பாகமென்று நினைக்கிறேன்.

சார்வாகன் said...

வணக்கம் சகோ வவ்வால்,
முதல் படம் ,கடைசிப் படம் நெஞ்சுக்கு நீதி தந்தமைக்கு ந்ன்றி!!ஹி ஹி நான் அளவோடு இரசிப்பவன்!!
**

பி.பி சீனிவாஸ் பற்றி அறியா பல தகவல்கள் அருமை!!.

**
நீரின்றி அமையாது உலகு!! ஆகவே உலகை நாசமாக்க‌ நீரை ஒழிக்க வேண்டும் என சென்னை ஹோமோ சேஃபியன்கள் புரிந்து கொண்டது சோகம்!!
**
//அதிரடி ஆக்‌ஷன் சண்டைப்படங்களுக்கு அழகூட்டும் இது மாதிரியான புதிய படைப்புகளை கலை ஆர்வத்துடன் வரவேற்பதில் அடியேனுக்கு என்றுமே அலாதி ஆர்வமுண்டு என்பதாலே இந்த பிட்டை போட்டுள்ளேன் என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!//
கலையடா கலை!!![ எம்.ஆர் இராதா மாதிரி படிக்கோணும்]
இப்படி உண்மையான ஒலக மகா கலைப் படைப்புகளை எதிக்கும் வல்லமை எவருக்காவது உண்டா என நெ(?!)ஞ்சு மீது கை வைத்து கூற சவால் விடுகிறேன்!!

நன்றி!!! நன்றி!! நன்றி!!!

Anonymous said...

//முழுவதும் நரிமேடு என்ற காடாக இருந்துள்ளது.அங்கு நரிகள் அதிகம் உலாவுமாம்.///

பார்டா....சென்னையில நரி...!!!! எங்க போனாலும் நரி போலயே....

சென்னை பற்றிய தகவல்கள் அருமை...

--கொங்கு நாட்டான்.

Anonymous said...

//இந்த ஏரி மட்டும் இல்லை சென்னை முழுக்கவே பல ஏரிகள், குளங்கள் என அக்காலத்தில் இருந்துள்ளன//

கால இயந்திரம் கண்டுபிடித்தால் 200 ஆண்டுகளுக்கு பின்னால் [முன்னால்] உள்ள சென்னைக்கு போய்விடலாம் போலிருக்கே!..

அருமை வவ்வால்...

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

நன்றி!

எஸ்பிபி வாய்ப்பூ கேட்டதே இப்படித்தானா? நல்ல தகவல்.

கன்னடம் பாடியிருக்கார் தெரியும் கவிதையும் எழுதினது தெரியாது.

# மக்களுக்கு புத்தி வந்து செய்றதா நடக்கிற காரியமா.வாய்க்காஏரி குளம்னு ஆக்ரமிக்கிறதே மக்கள் தானே. அப்புறம் எங்கே காப்பாற்ற?

மாசெட் அப்படினு ஒரு படமும் இருக்கு,தாடிக்காரன் ஒருத்தன் படம் போட்டு இருந்துச்சு,அதோட சீக்வலானு தெரியலை.
---------

சகோ.சார்வாகன்,

நன்றி!

ஹி..ஹி நெஞ்சுக்கு நீதி மட்டுமல்ல நிம்மதியும் அளிப்பவை :-))

# ஹோமோ சேப்பியன்கள் இயற்கையின் எதிரிகளாக பரிணாம மாற்றம் அடைவார்கள் என எந்த பர்ணாமவாதியும் சொல்லவ்நெஎயில்லை அவ்வ் :-))

நீரின்றி இப்போதும் உலகமையாது,காய்ச்சி வடித்த நீர் புட்டிகளில் டாஸ்மாக்கில் அதனால் விற்கப்படுகிறது.

# ஹி..ஹி கண்களும் கவி பாடுதே..கலைக்கு ஏது விலை?

உலகமகா உன்னத கலைப்படைப்புகளுக்கு தடை என்றால் நெஞ்சு பொறுக்குதில்லையே!!!
--------------------
கொங்கு நாட்டர்,

நன்றி,

நரியாருக்கு தொன்ம வரலாற்று பின்புலம் உண்டு எனத்தெரிகிறது!
-------------

வேற்றுகிரகவாசி,

நன்றி!

ஹி..ஹி கால எந்திரம் மற்றும் கிடைச்சா ,நான் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்திட மாட்டேன் :-))

வரலாறே மாற்றி எழுதப்பட்டிருக்கும், இன்று பள்ளியில் எல்லாம் நம் தேச தந்தை வவ்வால்னு படிச்சிக்கிட்டு இருந்திப்பாங்க :-))

நீர் வளமும்,நிலவளமும் மிக்க சென்னையில் இன்று அனைவரும் வாழ்ந்திருப்பார்கள் !
----------------

Jayadev Das said...

காரணம் ஜெமினியின் குரலும் கொஞ்சம் மென்மையாக பெண்மையுடன் இருந்ததாகும்.\\ இத மட்டும் டாக்டர்.கமலா செல்வராஜ் கேட்கணும், தேடி வந்த பொம்பளைங்க எல்லாத்தையும் satisfy பண்ணி அனுப்பிய எங்க அப்பாவியா இப்படி சொன்னேன்னு உம்மை கட்டையாலேயே அடிப்பாங்க!!

யார் மாட்டினாலும் நியுமராலஜி, பெயர் ஆராய்ச்சி என செய்வாராம்.\\முதலில் அவரோட பேரை ஆராய்ஞ்சு துட்டு பண்ணுவதற்கு தோதா மாத்தியிருக்கனும் விட்டுட்டாரு.........

இப்பொழுது ஐ.ஐடி உள்ள இடம், வன உயிரியல் பூங்காகவா இருந்துள்ளது, இந்தியாவிலேயே முதல் வன உயிரியல் பூங்கா அது தான்.\\ தமிழக அரசிடம் நிலம் வாங்கும்போது அங்குள்ள மரங்களை வெட்ட மாட்டோம் என்று எழுதாத ஒப்பந்தம் போட்டு ஐ.ஐடி க்கு இடம் வாங்கினார்கள், அதை இன்றளவுக்கும் காப்பாற்றுகிறார்கள், அடர்ந்த காடும், துள்ளித் திரியும் மான் கூட்டமும் சென்னை ஐ.ஐடியின் டிரேட் மார்க்........


viyasan said...

//வெள்ளைக்கார பொறியாளர் தனது சொந்த செலவில் ஒரு மரப்பாலம் அமைத்து கொடுத்திருக்கார், அவருக்கு ஒரு மார்பளவு சிலையும் கல்வெட்டும் மக்களே அமைத்திருக்கிறார்கள்//
நான் அந்த‌ச்சிலையை பார்த்திருக்கிறேன். C.I.T ந‌க‌ரிலுள்ள Honda showroom இலிருந்து சைதாப்பேட்டை ப‌ஸ்நிலைய‌ப்ப‌க்கமாக‌ வ‌ரும்போது Kuber Inn க்குப் ப‌க்க‌த்தில் இருக்கிற‌து. :))

வவ்வால் said...

பாகவதரே,

வாரும்,நன்றி!

//தேடி வந்த பொம்பளைங்க எல்லாத்தையும் satisfy பண்ணி அனுப்பிய//

என்ன ஓய் ,அந்த காலத்தில ஜெமினி "விலைமகன்" சேவை செய்தா போல சொல்றீர் :-))

அவர் குரலை தான் பெண்மையான குரல்னு சொன்னேன்,மத்த மேட்டர்லாம் உமக்கே நன்னா தெரியுதே நான் என்னாத்த சொல்ல.

அந்த காலத்தில சாம்பார்னு சொல்லக்காரணமே அதான், இப்பவும் டிவிடில படம் பார்க்கும் போது "சாந்தா.."என்னிடம் ஏன் கோபம் கொள்கிறாய்"போல படத்தில் டயலாக் வரும் போது செம காமெடியா இருக்கும்.

டயலாக் மட்டுமில்லை,பாடி லாங்வேஜ் எல்லாமே கொஞ்சம் பெண்தன்மையுடன் நளினமாகவே இருக்கும்.

ஒரு சமாச்சாரம் தெரியுமோ ஜெமினி கணேஷ் முதல் படத்தில் வில்லனாக நடிச்சார், ஹீரோ நம்பியார்னு நினைக்கிறேன் :-))

ஜெமினி ஸ்டுடியோ பத்திய ஒரு புக்கில் படிச்சது, படமெல்லாம் எடுத்து போட்டு பார்க்கும் போது தான் ,என்னையா பச்ச மண்ணு போல இருக்க பையன வில்லனா போட்டிங்களேனு கேட்டுவிட்டு,அப்புறமா அந்த ரோல் ஜெமினியே வற்புறுத்தி செய்தது(அப்போ ஜெமினி ஸ்டுடியோ கதை இலாகாவில் வேலையாம், எல்லா டைரக்டர்கலையும், எனக்கு ஒரு ரோல் கொடுனு தொல்லையாம்),அவருக்கு நடிக்க ஆசை இருக்குனு ,தெரிஞ்சுக்கிட்டு ஹீரோவாக்கினாராம் வாசன்.

# அவருக்கு எல்லாம் சரியாத்தான் போச்சு, அப்போ ரொம்ப ,மென்மையா பாடுபவர்னு பேரு வாங்கிட்டார், பத்தாதுக்கு டி.எம்.எஸ் பாடினா தான் எம்ஜிஆர், சிவாஜிக்கு செட் ஆகும்னு ஒரு பொது கருத்து.

அதுவும் இல்லாம ,எம்ஜிஆர்,சிவாஜி போன்றவர்களே என் படத்துக்கு இன்னார் தான் பாடனும்னு சொல்லுவாங்க,அந்த சப்போர்ட் பிபி.எஸ்குக்கு இல்லை.

அந்த காலத்து சினிமா உலகம் ஒரு மாதிரி பண்ணையார் உலகம்,நிறைய பேரு வாழ்க்கை வரலாறு படிச்சு இதான் தெரிஞ்சுக்கிட்டது.

நாகேஷ் எல்லாம் சினிமாவில நடிக்க முடியாம சில காலம் இருக்கும் சூழல் இருந்துச்சுனு சொன்னா நம்புவீரா?

அந்த காலத்தில் எம்ஜிஆரின் கண்ணசைவில் சினிமா இருந்துச்சு.

# ஐஐ.டிக்குலாம் போயிருக்கேன், நல்லா காடு ,மரம்லாம் இருக்கு தான் ஹி...ஹி இப்போ அங்கே பசங்க ஜல்சா தான் செய்றாங்கோ :-))

இதெல்லாம் பார்க்க கொஞ்சம் இருட்டினப்பொறகு பொதர் பக்கமா போகனும் :-))

கட்டிடம் எல்லாம் கட்ட எப்படியும் 50% மரங்களாவது வெட்டியிருப்பாங்க.

அங்கே உள்ள ஒரு ஓபன் ஏர் தியேட்டர் கூட இருக்கு.

---------------

வியாசர்,

வாரும்,நன்றி!

சிலைய பார்த்திருக்கீரா, எப்பூடி?

ஆனா சொல்லிட்டு சிரிப்பான் போட்டிருக்கீரே?

உண்மையில அங்கே ஒரு சிலை இருக்கு, நானும் பார்த்திருக்கிறேன்,ஆனால் அந்த சிலையை இதுக்கு தான் வச்சாங்களானு எனக்கு அப்பொ தெரியாது.

இந்த பாலம் கட்டினதுக்குனு எடுத்துக்க கூடாது அப்போ நிறைய உதவி செய்திருக்கலாம்.

மேலும் அப்போ இருந்த நிலை என்னவெனில் இந்திய பணக்கார முதலாளிகள் வெள்ளையரை விட கொடுரமானவர்கள்(இலங்கையிலும் அதான்)

அப்போ மெட்ராசில உணவுப்பஞ்சம் எல்லாம் வரும், ஆனால் ஏகப்பட்ட நிலம், விஅசாயமும் நடக்கும் ,ஆனால் வெளியில அரிசி கிடைக்காது,காரணம் பண்னையார்கள் தான் எல்லா நெல்லும் வச்சிருப்பாங்க,அவங்க வித்து ,கடைக்கு வந்தால் தான் ,பொது மக்களுக்கு அரிசி கிடைக்கும்.

ஜமிந்தாரி சிஸ்டம் பத்திலாம் சொல்ல நிறைய இருக்கு.

குட்டிபிசாசு said...

வவ்வால்,

…//ஒரு சமாச்சாரம் தெரியுமோ ஜெமினி கணேஷ் முதல் படத்தில் வில்லனாக நடிச்சார், ஹீரோ நம்பியார்னு நினைக்கிறேன் :-))//

…படத்தின் பெயர் தாயுள்ளம். ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகன்.

அப்படியே இதை இந்த லிங்கை ஒரு லுக் விடுங்க.

http://chennai.metblogs.com/2007/12/12/the-second-and-lost-bridge-of-saidapet

Anonymous said...

வவ்வால்,

சமீன்தார்கள் பத்தி ஒரு பதிவு போடுறது...

---கொங்கு நாட்டான்.

viyasan said...

//ஆனா சொல்லிட்டு சிரிப்பான் போட்டிருக்கீரே?//
சும்மா தான், ப‌ழ‌க்க‌ தோச‌ம்.. :))


வ‌வ்வால்:
//ஜமிந்தாரி சிஸ்டம் பத்திலாம் சொல்ல நிறைய இருக்கு.//

கொங்கு நாட்டான்:
//சமீன்தார்கள் பத்தி ஒரு பதிவு போடுறது...//

அடுத்த‌ ப‌திவு ச‌மீந்தார்க‌ள் ப‌ற்றிய‌து தான், என‌க்கு என்ன‌மோ ப‌ஞ்சாய‌த்துத் தலைவ‌ர் வெள‌வாலிட‌ Alter ego தான் கொங்கு நாட்டான் போல‌ தெரியுது. :)))

Anonymous said...

வவ்வால்,

//வெள‌வாலிட‌ Alter ego தான் கொங்கு நாட்டான் போல‌ தெரியுது.//

மறுபடியும் முதலில் இருந்தா.....முடியல...இம்சை வர வர தாங்க முடியவில்லை. அடுத்தடுத்து மாறி மாறி ... அதே கேள்வி....

------கொங்கு நாட்டான்.

Anonymous said...

வவ்வால்,

"மன்னரைப்" போல கொஞ்சநாள் தலைமறைவு வாழ்க்கை வாழவேணும் போல....(King Walker)...

--கொங்கு நாட்டான்.

? said...

//ஐஐ.டிக்குலாம் போயிருக்கேன், நல்லா காடு ,மரம்லாம் இருக்கு தான்//

அங்க மாசுகட்டுப்பாட்டுக்காக உள்ளற பைக்கை அனுமதிக்காம லந்து பண்ணுவானுக. புலியை பாத்து பூனை சூடு போட்ட கதைய அண்ணா பல்கலை'க்கு உள்ளேயும் ஐஐடி பார்த்து வண்டிய உள்ள விட மாட்டானுக. இந்த பழக்கத்தை ஆரம்பிச்ச நாதாரி பழய வீ.சி விசுவநாதன் 100 அடி தூரத்தில் இருக்கற குவாட்டர்ஸல இருந்து வீ.சி ஆபிஸூக்கு கார்லதான் போவாரு. முதல்ல அந்த ஆளு போட்ட விதியை பாலோ பண்ணுனதானா பசங்க பாலோ பண்ணுவானுக. இதுல சட்ட விரோதமா சிகப்பு விளக்கு வைச்ச காரு வேற!

//அவருக்கு நடிக்க ஆசை இருக்குனு ,தெரிஞ்சுக்கிட்டு ஹீரோவாக்கினாராம் வாசன்.//

வாசன் ஜெமினியை ஹீரோ ஆக்கல. அவருக்கு துக்கடா ரோல்தான் கொடுத்தார் -1947ல் மிஸ் மாலினி. ஜெமினியை முதலில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தவர் ஏவிஎம் செட்டியார், படம் பெண், லேட்டாக 1954ல் வந்தது. அவர் ஹீரோவாக நடித்து முதலில் வெளிவந்தது மனம் போல் மாங்கல்யம் 1953-ல். ஆனால் முதல் ஹீரோ படம் என ஜெமினி பெண் திரைப்படத்தைதான் குறிப்பிடுவார்.

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

நன்றி!

ஜெமினி வில்லனாக நடிச்சப்போ,வில்லன் நடிகர் ஹீரோவா நடிச்சார்னு நியாபகத்தில தங்கிடுச்சு, சரியா பேரு நியாபகம் இல்லை, ஆனால் பழைய படமெல்லாம் நல்லா பக்காவா சொல்லுறீர் ,ஒரு வேளை "பெரிய"பிசாசோ :-))

# சைதாப்பேட்டை பாலம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நன்றி, அந்த பாலம் தான் சென்னையில் கட்டிய பாலத்திலேயே முதல் பாலம் போல,அதான் கல்வெட்டுலாம் வச்சிருக்காங்க, சிலையும் வச்சாங்கனு நான் படிச்சேன்.
---------------------

வியாசர்,

நல்ல பழக்கம் :-))

//என்ன‌மோ ப‌ஞ்சாய‌த்துத் தலைவ‌ர் வெள‌வாலிட‌ Alter ego தான் கொங்கு நாட்டான் போல‌ தெரியுது. :)))//

ஹி...ஹி உடம்பெல்லாம் மூளையா இருக்கு தலைவருக்கு :-))

உங்களுக்கு யானக்கண்ணு, எப்பிடி இவ்ளோ சரியா கன்டுப்பிடிச்சீர் ,விடாதீர் கொங்கு நாட்டாரை, எதுக்கு இந்த ரெட்டை வேடம்னு நல்லா நாக்கைப்புடிங்கிறாப்போல கேளுங்க, எனக்கே தெரியாம இந்த வேலைய எல்லாம் கொங்குநாட்டார் செய்றார், நல்ல வேளை உங்களைப்போன்ற துப்பறியும் சொம்புகள் சாரி சாம்புகள் இருக்கிறதாலே இந்த உண்மை எல்லாம் தெரிய வருது,இல்லைனா ஏமாந்து போயிருப்பேன்ல :-))
---------

கொங்கு நாட்டார்,

வசமா மாட்டிக்கிட்டீர், எதுக்கு வவ்வாலுனு எழுதிட்டு அப்புறமா ,கொங்குநாட்டார்னும் பின்னூட்டம் போடுறீர், மருவாதியா உண்மைய ஒத்துக்கிட்டு , வியாசரிடம் சரண் அடையவும்,இல்லைனா ஐநா சபை மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுத்து, போர்க்குற்றவாளினு அறிவிப்பு செய்துடுவார் வியாசர் :-))

# தலையில ஒரு சட்டி/பானை போல மாட்டிக்கிட்ட தலை மறைஞ்சிடும் :-))
-------------------

நந்தவனம்,

வாரும்,நன்றி!

ஐ.ஐ.டில உள்ளார போக ஒரு பேருந்து எல்லாம் விட்டிருக்காங்க, அண்ணா பல்கலையில அப்படிலாமா விட்டிருக்காங்க?

ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் வண்டியில தான் போறாங்க, ஆனால் உள்ளார சும்மா டுர்..டுர்னு ஓட்டக்கூடாது போல.

அண்ணா பல்கலைக்கு ,ஏசிடெக் கேட் வழியா போனா ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க, மெயின் கேட்டில் தான் இந்த குடைச்சல் போல தெரியுது. நான் போனப்போலாம் ஒருத்தனும் கண்டுக்கலை.

விசுவநாதனு பழைய ஆளுங்க பேரெல்லாம் சொல்லுறீர்,அலும்னியா அப்போ?

# ஹி...ஹி உங்க காலத்து ஹீரோ ஜெமினி என்பதால்,வரலாறு எல்லாம் நல்ல தெரிஞ்சு வச்சுருக்கீர் போல, நான் எல்லாம் எப்போவோ படிச்சத நினைவில இருந்து சொல்றதால கொஞ்சம் சொதப்பிடுது :-))

? said...

//பழைய ஆளுங்க பேரெல்லாம் சொல்லுறீர்,அலும்னியா அப்போ?
# ஹி...ஹி உங்க காலத்து ஹீரோ ஜெமினி என்பதால்,//


ஆமாம்யா அங்கதான் முதியோர் கல்வி படிச்சேன். இப்போ திருப்பதியா? ... அடுத்தவனை அசிங்கப்படுத்தி பாக்குறதுல உமக்கு அப்படியொரு ஆனந்தம்!

வவ்வால் said...

நந்தவனம்,

ஹி...ஹி அப்படில்லாம் சொல்லப்படாது, பெரியோரை அடையாளங்கண்டு அவர்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே எனது அவா :-))

கிண்டில முதியோர் கல்வி படிச்சவரென்றால் பெரிய ஆளு தான், அதுவும் பயோடெக்னாலஜி, கெமிக்கல் டெக்னாலஜி வாசம் வேற அடிக்குது,சாக்கிரதையா தான் பேசனும்.

ஆனாலும் நீங்க தான் தென்சென்னை செமினி கணேசன் ரசிகர் மன்றத்தலைவர் என்பதையும், அந்த காலத்தில மயிலாப்பூர் கபாலி,காமதேனுல படம் ஓடினா ,கட் அவுட்டுக்கு மாலைப்போட்டு பாலாபிஷேகம் செய்வீர் என்பதையும் மறைச்சிட்டீரே அவ்வ்!

1 said...
This comment has been removed by the author.
? said...

எல்லாம் நான் முன்னாடி செஞ்ச வெனை. படிக்குற காலத்துல ஒருத்தன் ஜெமினி பாட்டு பிடிக்கும்னு சொன்ன ஒரே காரணத்துக்காக அவனை ரத்தம் வர்ற அளவுக்கு ஓட்டினோம். அதுக்கு அனுபவிக்கிறேன். வேற என்னத்தை சொல்ல!

Anonymous said...

voval

Yesterday in Thanthi TV I saw a news script about lakes in Chennai city and how it transformed into living spaces....i really surprised because I red about it from your article...Have a nice day.

Rajaraman

Anonymous said...

//i really surprised because I red about it from your article...Have a nice day. //

media folks too read blogs, i suppose?

வவ்வால் said...

நந்தவனம்,

முன்னிரவு பிராந்தியடித்தால் அடிச்சால் பின்னிரவு வாந்தி தான் வரும் ,பின்ன பிராந்தியா வரும் :-))

கிண்டில எல்லாம் பண்டுகளா இருப்பாங்களே, நீங்களே கலாய்ச்சிங்கன்னா அப்போ ,அந்த நண்பர் ஞானப்பண்டா இருப்பார் போல :-))
------------

ராஜாராமன்,

தகவலுக்கு நன்றி!

நாம சுருக்கமா போட்டோம், இன்னும் நிறைய சொல்ல இருக்கு. கலவையா எழுதும் பதிவு என்பதால் சுருக்கிட்டோம்.

இப்போ தான் நாம சொல்றதெல்லாம் நடக்குதுனு அலப்பரையா " என்ன கொடுமை சார் இதுனு" ஒரு பதிவு ரெடியாகுது,, நீங்க அதுக்கு ஏத்தாப்போல ஒரு தகவல் சொல்லுறிங்க,மீடியா பதிவெல்லாம் கவனிக்குதா...ஹி...ஹி அப்போ நாமளும் பெரிய ஆளு தான்னு கொஞ்சம் பந்தா விட்டுக்கலாம் :-))

ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் இந்த பொம்பள படத்தை பெரிசா (அதென்ன சவுக்கு மாதிரி படத்தை பெரிசா போடுற பழக்கம்) பாக்குறச்சே சற்று எரிச்சல் வரும். ஆனா இந்த முறை நிதானமாக பார்த்தேன். (தப்பா அர்த்தம் எடுத்துக்க கூடாது) அந்த உடைகளை தைத்தவர், மற்றும் அதற்கு தேவைப்படும் பல விசயங்களைப் பற்றி யோசித்த போது வெளிச்சத்தில் நிற்கும் இவர்களுக்கு பின்னால் உள்ளவர்களைப் பற்றி எழுத வேண்டும் போல் உள்ளது. குறிப்பாக காஸ்ட்யூம் மக்களைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.

ஜோதிஜி said...

1991 ல் சென்னையில் இருந்த போது நண்பரை பார்க்க மடிப்பாக்கம் மற்றும் கீழ்க்கட்டளை பகுதியில் அதிகம் சுற்றி திரிந்த போது நான் பார்த்த பல இடங்கள் இப்ப இல்லவே இல்லை. போயிந்தே.

வளைத்து வளைத்து கட்டிய இடங்களால் இன்று தவித்து சாகுடா என்று சொல்லிவிட்டதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.

ஜோதிஜி said...

பாடகரைப் பற்றிய எழுதி விசயங்களில் நான் நாலைந்து நாட்களாக ஒரு சில சம்பவங்களைப் பார்த்து யோசித்துக் கொண்டிருப்பது

பிரபல்ய மயக்கமும் மாயமும்

இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டே கொண்டே இழுத்துக் கொண்டே கொண்டே
போய்க் கொண்டே கொண்டே
இருக்கிறது.

ஜோதிஜி said...

தலைவர் வியாசனையும் குட்டிப்பிசாகு கூட்டணியில் கொண்டு வந்து விட்டீங்க போலிருக்கே.

இன்று என் வேலையே ஒவ்வொரு பதிவாக படித்து விடுவது.

நீண்ட நாட்கள் ஆகி விட்டதல்லவா?

வவ்வால் said...

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

ஒரே நாளில் ரவுண்டு கட்டலாம்னு பார்க்கிறிங்களே :-))

என்னது எரிச்சலா வருதா? இதெல்லாம் ரசிக்க ஒரு கலையுள்ளம் வேண்டும் :-))

பெருசா படம் போட்டாத்தான் கண்ணுக்கு நெறைவா,குளிர்ச்சியா இருக்கும் :-))

நம்ம பதிவில படமெல்லாம் போட மூலக்காரணமே நீங்க தான், நீங்களே இப்படி சொல்லலாமா,நன்றாக சிந்தித்துப்பார்க்கவும், பெட்ரோலிய விலை மோசடி பற்றிய பதிவில் ஒரே புள்ளிவிவரமா ,தகவல்களாக இருக்கு வறட்சியா இருந்தா எப்படி படிப்பாங்க ,கொஞ்சம் கவர்ச்சியா பதிவு இருக்கணும்னு சொன்னீங்களே நியாபகம் இல்லையோ?

சரி பதிவ கவர்ச்சியாக்க என்னவழினு குவாட்டர் அடிச்சிட்டு குப்புற அடிச்சு படுத்து யோசிச்சப்போ கணநேரத்தில் கபாலத்தில் உதித்த சிந்தனை தான் இப்படி படம் போடும் யுக்தி :-))

//அந்த உடைகளை தைத்தவர், மற்றும் அதற்கு தேவைப்படும் பல விசயங்களைப் பற்றி யோசித்த போது//

அழகை அனுபவிக்கணும் இப்படிலாம் தச்ச டைலரு யாருனு ஆராயப்படாது, ஜானம் அதிகமாகிடுச்சு போல :-))

# மடிப்பாக்கம் எல்லாம் இப்போ சிட்டி சென்டராகிடுச்சு :-))

செங்கல்ப்பட்டு ,மதுராந்தகம்ம்னு டெவலப் ஆகிட்டாங்க, இனிமே சந்திரன்,செவ்வாய்னு தண்ணி புடிக்க போவாங்க போல.

எங்க ஏரியாவில வீட்டுக்கு வீடு கார்ப்பரேஷன் தண்ணிலாம் வராது ,பொதுக்குழாய்னு ரோட்டில் தான் பிடிக்கணும், பாலத்து தண்ணி வருது, பைப்பில் தண்ணி ஏறாது எனவே ஒரு நாலடி பள்ளம் வெட்டி அதுக்குள்ள குடம் வச்சு புடிக்கணும்,நைட் 10 மணிக்கு விடுறாங்க,, அப்புறம் விடிய விடிய மக்கள் குடம் சுமக்கும்.

இந்த நிலைமைக்கே எங்க ஏரியாவை தண்ணிப்பஞ்சமில்லாத ஏரியானு ஹவுஸ் புரோக்கர்லாம் சொல்லி மார்க்கெட் செய்றாங்க :-))

#//டே இழுத்துக் கொண்டே கொண்டே
போய்க் கொண்டே கொண்டே
இருக்கிறது.//

உங்களுக்கே இழுக்குதா அவ்வ்!

# குட்டிப்பிசாசு நம்ம கரையில நிக்கிறவர், தலைவர் வியாசர் எதிர்க்கரையில நிக்கிறவராச்சே,ஆனாலும் விடுவமா பாலம் கட்டி இழுத்திடுவோம்ல!
-----------------------

அ.பாண்டியன் said...

வரலாற்று செய்திகளிலிருந்து இன்றைய கோடம்பாக்கம் செய்தி வரை அலசி ஆராய்ந்து கசக்கி காயப் போட்டுடிங்க நண்பரே. இயற்கையை தொலைத்து விட்டு அனாதைகளாய் திரிந்து கொண்டிருக்கிறோம் இதற்கு எல்லாம் மனித சுயநலம் தான் காரணம். தங்கள் பதிவில் எதையாவது மேற்கோளிட்டு கருத்துக் கூறலாம் என்றால் எதை விடுவது என்றே தெரியவில்லை. அத்தனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி.