Saturday, October 29, 2011

சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?



சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?


தமிழகத்தில் இஸ்லாமியர்கள் முகமன் கூற "சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று கூறுவதாக பதிவுலகில் பலரும் சொல்கிறார்கள். இதன் அரேபிய மூலம் அசலாமும் அலைக்கும் என்பதாகும். இதனை வைத்து தமிழ்மணத்தில் ஒரு பிரச்சினை எழுந்து அடங்கியது.

இதனிடையே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது(இவர் பாண்டிய மன்னரு!), சாந்தி என்றால் அமைதி...அமைதிக்கு பெயர் தான் சாந்தி என்று பாடல் கூட உள்ளது. அமைதி என்றால் சைலண்ட், மேற்கு தொடற்சி மலையில் கேரளாவில் "சைலண்ட் வாலி" என்று ஒரு பள்ளத்தாக்கு உள்ளது அந்த வனப்பகுதி இரவிலும் சப்தமில்லாமல் இருக்கும் ஏன் எனில் அங்கே சிக்காடா என்ற வண்டு இனம் இல்லை, சிக்காடா என்பது சில்வண்டு, சுவர் கோழி, மோல் கிரிக்கெட் எனப்படும் பூச்சியே. இது இரவு நேரங்களில் கிர்ரிச் கிர்ரீச் என சத்தமிடும். உலகிலேயே சிக்காடா இல்லாத வனம் சைலைண்ட் வாலி தான். இதை தமிழில் அமைதிப்பள்ளத்தாக்கு என்பார்கள்.

சமாதானம் என்பது ஆங்கிலத்தில் பீஸ்(peace) ஆகும்." peace treaty" இதை தமிழில் சமாதான உடன்படிக்கை (அ) ஒப்பந்தம் எனலாம்.சில சமையம் அமைதி உடன்ப்படிக்கை( அ) ஒப்பந்தம் என்று சொல்லவும் கேட்டு இருக்கிறோம்.

அப்படியானால் சாந்தி(=அமைதி), சமாதானம் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளைக்குறிக்கும் இரு சொற்கள் ஆகிறது. அன்னை, தாய் என்பது போல.

எனவே சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக என்று சொல்வது இரண்டு முறை சாந்தி என்றோ இரு முறை சமாதானம் என்றோ சொல்வதாகிறதே எப்படி அப்படி சொல்வார்களா?

ஆகவே அதன் அரபிய மூலமான "அசாலாமு அலைக்கும் வ" என்பதன் பொருளைத்தேடினேன்.
அதற்கு உலகெங்கும் பொதுவாக சுருக்கமாக "Peace be upon you" என்று சொல்வதாக போட்டிருந்தார்கள். இதன் பொருள் சமாதானம் நிலவுவதாக என்பதாகும்.

இரானில் "peace and health upon you" என்ற பொருளில் பயன்ப்படுத்துகிறார்களாம். தமிழில் அமைதியும் (அ)சமாதானமும் ஆரோக்கியமும் நிலவுவதாக என்பதாகும்.

ஆனால் இதுவே முழு முகமன் கிடையாது , முழுசாக "அசலாமு அலைக்கும் வ ரகமத்துல்லா வ பரக்கத்து" என சொல்லப்படுகிறது.
இதனை தமிழில் மொழிப்பெயர்த்தால் "சமாதானமும் அல்லாவின் கருணையும் (அ)இறையருளும் நிலவுவதாக" என்றோ அல்லது "அமைதியும் ஆரோக்கியமும் இறையருளும் நிலவுவதாக" என்றோ தான் மொழிப்பெயர்த்து பயன்ப்படுத்தி இருக்க வேண்டும்.
பரக்கத் என்பதற்கு அபிவிருத்தி என்றும் ஒரு பொருள் இருக்கிறது. சாப்பிடும் போது சொல்லும் வாக்கியத்தில் பரக்கத் என்பது அபிவிருத்தியாகவே பொருள் கொள்ளப்படுகிறது.

ஆகவே அரேபிய மூலத்தில் இல்லாத ஒன்றை தமிழில் அடுக்குத்தொடர் போல் ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களைப்பயன்ப்படுத்தக்காரணம் தவறான மொழிப்பெயர்ப்பே என நினைக்கிறேன்.

அந்த காலத்தில் தவறாக மொழிப்பெயர்த்திருந்தாலும், சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதனை சரிப்பார்க்க வாய்ப்பிருந்திருக்காது, ஆனால் இது இணைய உலகம், எதனையும் அறிந்து கொள்ள முடியும். சாந்தியும் சமாதானியும் சண்டையின் போது யாருமே அலசி ஆராயாமல் சண்டைப்பிடிக்க ஒரு வாய்ப்பு விடக்கூடாது என்று பாய்ந்ததாகவே இப்போது எனக்குப்படுகிறது.

இந்தப்பதிவிலும் ஏதேனும் பிழைகள் இருக்கலாம் சுட்டிக்காட்டவும், மேலும் அரபியும், தமிழும் தெரிந்தவர்கள் எது உண்மை என்று விளக்கினாலும் நன்றே!

மற்றப்படி சிலம்பாட்டம் ஆட ஆசைப்படுபவர்களை "பிதா சுதன் புனிதப்பேயோ, அல்லா ரக்காவோ ,அனுமானோ இரட்சிப்பாராக..ஆமென்!
-------------------------------------------------------------------------------------

விளக்கம் தேடியப்போது எனக்கு கிட்டியவை, ஆங்கிலத்தில் இதில் இருப்பதைத்தான் தமிழில் சொல்லியிருக்கிறேன்.சுட்டிகளும் உள்ளது , படித்துப்பாருங்கள்.


Assalamu Alaikum Wa (السلام عليكم و رحمة الله و بركاته)
Rahmatullahi Wa Barakatuh (السلام عليكم و رحمة الله و بركاته)
Grammar: greeting; 6 words;
"Peace be unto you and so may the mercy of Allah and His blessings". It is the full version of the Islamic greeting.

http://www.islamic-dictionary.com/index.php?word=assalamu%20alaikum%20wa%20rahmatullahi%20wa%20barakatuh
-----------------------------------------------------------------------------------


Definition: A common greeting among Muslims, meaning "Peace be with you." The appropriate response is "Wa alaikum assalaam" (And upon you be peace.)

Extended forms include "Assalamu alaikum wa rahmatullah" (May the peace and mercy of Allah be with you) and "Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh" (May the peace, mercy, and blessings of Allah be with you).

http://islam.about.com/od/glossary/g/gl_salaam.htm
---------------------------------------------------------------------------------------------

The Prophet said, "Allah created Adam in his image, sixty cubits (about 30 meters) in height. When He created him, He said (to him), ‘Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring.’ Adam (went and) said, ‘As-Salamu alaikum (Peace be upon you).’ They replied, ‘As-Salamu ‘Alaika wa Rahmatullah (Peace and Allah’s Mercy be on you).’ So they increased ‘wa Rahmatullah’ The Prophet added, ‘So whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih al-Bukhari, Volume 8, Book 74, Number 246)

http://www.iqrasense.com/muslim-character/assalamu-alaikum-origin-and-meaning-of-the-muslim-greeting.html
----------------------------------------------------------------------------------------------------

34 comments:

பழமைபேசி said...

வட மொழிச் சொற்கள் பாவிப்பதால் விளையும் குழப்பமிது.

அமைதியும் இணக்கமும் நிலவுவதாக!!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! உங்கள் பதிவை படித்து முடித்ததும் நினைவுக்கு வந்த வரிகள், வடிவேலு ஒரு படத்தில் சொல்லும் ”மறுபடியும் சியர்ஸா”

வவ்வால் said...

பழமைபேசி,

வணக்கம்,நன்றி,

ஆஹா நீங்க ஒரு புது விளக்கம் சொல்றிங்களே,ஆக மொத்தம், சாந்தி சமாதானம் என்பது பொருத்தமில்லாத மொழிபெயர்ப்பு தான்.

வவ்வால் said...

தி.த.இளங்கோவன்,

வணக்கம்,நன்றி, சியர்ஸ் சொல்ல எல்லாம் தயங்ககூடாது :-))
(steel body)

"நடு சென்டர்" என்பது போல அடுக்குத்தொடராக ஒரு சொற்பிரயோகத்தை வைத்துக்கொண்டு என்னமா சண்டைப்போட்டாங்க, எனக்கு அப்பவே சந்தேகம் வந்து கண்டுபிடிச்சேன்,அப்போ கூச்சல் அதிகமா இருந்ததால் ஓயட்டும் என இருந்தேன். இது உண்மை கண்டறியும் முயற்சியே!

Feroz said...

அன்பின் வவ்வால் சார். நலமா. இரண்டு வருடங்களுக்கு மேலாக பார்க்க முடியவில்லையே. என்னை நினைவிருக்கா?? நண்பர் ரத்னேஷ் பதிவுகளில் பேசி இருக்கோம். முன்பு தலைகீழ் பார்வை. இப்போ தலைகீழ் விகிதமா?? தோழமையுடன்

வவ்வால் said...

அன்பின் பெரோஸ்,

வாங்க,வணக்கம், நன்றி. நலாமா? என்னை இன்னும் நினைவில் வைத்திருப்பதை நினைத்தால் பதிவெழுதி என்ன கிடைத்தது என்றால் இதை விட வேறு என்ன வேண்டும், நன்றி!

ஆம் ஒரு இடத்தில் நிலைக்காமல் ஓட்டமாக இருந்தது. அதான் இரண்டு ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை, ஆனால் அவ்வப்போதுபடித்துக்கொண்டு தான் இருந்தேன்,ரத்னேஷ் கூட காணோம்.அடிக்கடி வாங்க.

ராஜ நடராஜன் said...

என்னது! வாலி சைலண்டா!மேடை கிடைக்கலியாக்கும்:)சிக்காடா வண்டின் சததமெல்லாம் தேடும் தாகம் இருந்தால் சிலம்பாட்டம் போடறதுக்கு மனசு வருமா என்ன?"தாம் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்...பிதாவே இவர்களை மன்னியும்"இயேசுவின் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.அரேபிய மொழி தவிர peace be upon you என்ற சொல்லே பரவலாக எழுத்தில் தென்படுகிறது.எனது தமிழ் இஸ்லாமிய நண்பர்கள் ஒருவரும் சாந்தி சமாதானம் உச்சரிப்பதில்லை.

மாடல மறையோன் said...

இவ்வாசகத்தின் பொருளுக்காக எவரும் மோதிக் ள்ளவில்லை. மாறாக, ஏன் சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே.

இஃதொரு இசுலாமிய முகமனாகும். ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும் போது ஆங்கிலேயர் Good Morning, How are you ? How do you do ? சொல்வார்கள். இந்துக்கள் வட மானிலங்களில் 'ராம்...ராம்..' என ஒருவரைப் பார்க்கும்போது சொல்ல, அவர் திருப்பி, 'ராம்..ராம்' என்பார்கள். சீக்கியர்கள, 'ஜெய் சிரி அகால்' என்பார்கள். இந்துத்துவா இந்துக்கள், 'ஜய் சிரி ராம்' என்பார்கள். அதி தீவிர இந்துத்வாவினர், 'பஜ்ரங் பலி' என்பார்கள். எனவே இப்படிப்பட்ட முகமன்கள் அவை காட்டும் வெறும்பொருளுக்காகச் சொல்லப்படுவதில்லை. நீங்கள் எங்களுள் ஒருவர் என்பதைச் சொல்லா நிற்கின்றன.

ஒரு இசுலாமியர் ஒரு இந்துவைப்பார்த்து, இப்படி முகனைச் சொல்வதற்குமுன், அவர் இவரின் 'ராம்..ராம்' என்ற் முகமனை ஏற்றுக்கொள்வாரா ? 'ஜய் சிரிராமை' ஏற்றுக்கொள்வாரா ? 'ஜய் பஜரங் பலி'யை ஏற்றுக்கொள்வாரா ? சீக்கியரின் 'ஜய் சிர் அகால்'ஐ ஏற்றுக்கொள்வாரா ? என்று தன்கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

மேலும், இப்படி இன்னொருவர் ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா என்று தெரியா முன்னெ ஏன் சொல்ல வேண்டும் ?

மதமில்லா செகுலர் முகமன்கள் ஏராளம் இருக்க, ஏன் மதவடையாளத்தோடு வரும் முகமன்கள் அம்மதம் சாராதாவர்களிடம் சொல்லப்பட வேண்டும் என்பதே கேள்வி. இதற்குத்தான் மோதல் நடந்தது. இந்துவல்லா அல்லது எம்மதத்தையும் ஏற்றுக்கொள்ளவதர்களிடமோ, மதம்சாரா அரங்கை நடாத்துபவருடமோ இம்முகமன் சொல்லப்படும்போது அஃதொரு அதிகப்பிரசங்கித்தனம், அல்லது, திணிப்பாகவே கொள்ளப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, தவறல்ல.

மற்றெவருமே செய்யவில்லை. இசுலாமியப்பதிவர்களும் பின்னூட்டமிடும் இசுலாமியருமே இதைச்செய்தவர்கள்.

அழையா வீட்டில் நுழையா விருந்தாளியாக இருப்பதே பண்பாகும்.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,வணக்கம்,
//என்னது! வாலி சைலண்டா!மேடை கிடைக்கலியாக்கும்:)//

உண்மைல கலைஞர் வீட்டுக்கு போனதால் வாலிக்கு தான் இழப்பு, இல்லைனா வாரா வாரம் நடக்கும் பாராட்டு விழாவில "கலைஞர் தான் தமிழ் குங்குமம் இருக்கும் சிமிழ்" னு கவிதைப்பாடிட்டு இருப்பார். இப்போ சைலண்டாகிட்டார்.

ஆமாம் பலரும் சாந்தியும் ,சமாதானமும் சொல்வதில்லை, அரபிலவே சொல்லிக்கிறாங்க, இதெல்லாம் வஹாபிசம் பேசுறவங்க வேலையா இருக்குமோனு தோணுது(ஏ யப்பா யாரும் கட்டை எடுத்துட்டு சண்டைக்கு வராதிங்க)

வவ்வால் said...

மாடல மறையோன்,

வணக்கம், வாங்க,நன்றி!

//ஒரு இசுலாமியர் ஒரு இந்துவைப்பார்த்து, இப்படி முகனைச் சொல்வதற்குமுன், அவர் இவரின் 'ராம்..ராம்' என்ற் முகமனை ஏற்றுக்கொள்வாரா ? 'ஜய் சிரிராமை' ஏற்றுக்கொள்வாரா ? 'ஜய் பஜரங் பலி'யை ஏற்றுக்கொள்வாரா ? சீக்கியரின் 'ஜய் சிர் அகால்'ஐ ஏற்றுக்கொள்வாரா ? என்று தன்கேள்வி கேட்டிருக்க வேண்டும்.//

விக்கிப்பீடியாவில் படித்தேன், முகம்மது நபி(சல்) அப்பவே முகமன் கூற வறையரைக்கொடுத்துள்ளார்,இந்த முகமன்னை இன்னொரு இஸ்லாமியரிடம் தான் கூற வேண்டும், யார் முதலில் கூற வேண்டும் என்பதற்கும் வரையரை உள்ளது, ஒட்டகத்தில் செல்வோர் நடந்து செல்வோருக்கும், நடந்து செல்வோர் அமர்ந்திருப்பவருக்கு, வீட்டுக்கு செல்வோர் அங்கிருப்பவருக்கும் முதலில் சொல்ல வேண்டுமாம்.

இதை எல்லாம் இங்கே பேசாததுக்கு காரணம், இப்பதிவு வீண் விவாதத்திற்கு அல்ல என்பதால் தான்.நீங்கள் சொன்ன கூற்றும் சரியாத்தான் இருக்கு ஆனால் சமயப்பொறை என்று ஒன்று உண்டல்லவா? அது தமிழகத்தில் அதிகம், எனவே அவங்க முகமன் சொன்னா உங்கள் முகமன் எதுவோ அதை சொல்லக்கூடாதுனு எதுவும் இல்லையே.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது 'சாந்தியுடையசமாதானம்' நிலவட்டுமாக.

அன்புள்ள சகோ.வவ்வால்...

இன்னும் இதைப்பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்..? சரி, ஓகே.

'ஸலாம்' என்ற அரபி பதத்துக்கு சரியான பொருள் தரும் ஒரு வார்த்தை...
சாந்தி/அமைதி மட்டுமோ...
அல்லது
சமாதானாம்/இணக்கம் மட்டுமோ கிடையாது..!

மாறாக, இவை இரண்டும் இணைந்துதான் அந்த அரபி பதத்துக்கு சரியான பொருள் தர முடியும்.

அதாவது, "அமைதியான இணக்கம்", அல்லது "சாந்தியுடைய சமாதானம்" என்று சொல்லலாம்..!

ஆங்கில வார்த்தை 'love' என்றால் தமிழில் அதை மொழி பெயர்க்கும்போது இடத்துக்கு ஏற்ப காதல், அன்பு, பாசம், நேசம், பற்று என்றெல்லாம் பரிணமிக்கிறது.

தமிழில், 'எடிசனும் கண்டுபிடித்தார்; கோலம்பசும் கண்டுபிடித்தார்' என்றுதான் சொல்ல முடியும்...! ஆனால், அதுவே ஆங்கிலத்தில்??? 'invention', 'discovery' என இரண்டு அழகிய வார்த்தைகள் உள்ளனவே..? இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு நன்கு தெரியும்.

இதேபோலத்தான் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவ ஒரு சிறப்பு உண்டு. ஒரு மொழியில் சொல்லப்படும் ஒரு வார்த்தைக்கு இன்னொரு மொழியில் அதேபோல துல்லியமான வார்த்தை இருக்காது.

அரபி மொழியில் உள்ள அந்த 'ஸலாம்' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் பொதுவாக 'peace' என்று சொல்வார்கள்.

உதாரணமாக,

"'சமாதான' உடன்படிக்கை கைஎழுத்தாகும்போது
என் மனதில் 'சாந்தி' நிலவியது" என்று ஒரு பிரதமர் கூறினார்.

இந்த சொற்றொடரை ஆங்கிலத்தில் எழுதும்போது இரண்டு இடத்திலும் 'peace' என்றுதான் வரும். ஏனென்றால் அங்கே அந்த பதம் மட்டுமேதான் உள்ளது. வேறு வழியில்லை.

ஆனால், 'ஸலாம்'..?
இந்த சாந்தியும் இந்த சமாதானமும் ஒருங்கே இணைந்தது அல்லவா..?

மேலும், இந்த முகமனை முஸ்லிம்கள் எவருக்கும் சொல்லலாம்.
காரணம்,
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், முஸ்லிம் அல்லாத பிறநாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதத்தில் இதே முகமனை கூறித்தான் ஆரம்பித்து எழுதியுள்ளார்கள்.

அப்புறம் இந்த வார்த்தைகளை கூற நான், நீங்கள், என சகலருக்கும் உரிமை உண்டு.

ஆனால், "சாந்தி... அவ அக்கா, சமாதானி... ரெண்டு பேரும் உங்களோடு கூடி..." என்றெல்லாம் 'நடுநிலையாளர்கள்' என்று தங்களை சொல்லிக்கொள்வோர் அசிங்கமாக கேலி பேசுவதுதான் அவர்களின் தரத்துக்கு இழுக்கு..!

'தம்மிடம் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டாம்' என்று எவருக்காவது தொன்றுமா, தமிழ்மணத்தாரை தவிர்த்து..?

தங்கள் மீது 'சாந்தியுடையசமாதானம்' என்றென்றும் நிலவட்டுமாக..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வவ்வால்,
நான் சேர்த்து சொன்ன முகமனை பிரித்தும் 'சாந்தியும் சமாதானமும்' என்று பிரித்தும் சொல்லலாம். கருத்தில் தவறில்லை. அப்புறம், உங்களின் கேள்வி நல்ல சந்தேகம்தான். தவறில்லை. ஆனால், இது தவறான புரிதலால் விளைந்த ஒன்று.

சென்ற உதாரணத்தில்,

"'சமாதான' உடன்படிக்கை கைஎழுத்தாகும்போது
என் மனதில் 'சாந்தி' நிலவியது" ---என்று ஒரு தமிழ் அறிந்த பிரதமர் தினமணி நிருபரிடம் பேட்டியில் கூறினார் என்று வைத்துக்கொள்வோம்.

இப்படியே தினமணியில் செய்தி பிரசுரம் ஆனது எனக்கொள்வோம்.

ஆனால், 'Indian Express'-ல் எப்படி வரும்..?

"I got peace only after signing that peace treaty" என்றுதானே..?

இந்த ஆங்கில 'மொழியாக்க செய்தியை' அடுத்தநாள், உங்கள் தளத்தில் நீங்கள் "மறு மொழியாக்கம்" செய்கிறீர்கள் எனக்கொள்வோம்.

எப்படி..?
இப்படி..!

"'சாந்தி' உடன்படிக்கை கைஎழுத்தாகும்போது
என் மனதில் 'சாந்தி' நிலவியது"

என்றா..?

இது மூலப்பேட்டியின் படி தவறல்லாவா..?

அதாவது, மொழியாக்கத்திலிருந்து மொழியாக்கம் செய்யும் போதுதான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன சகோ.வௌவால். மற்றபடி உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால், தவறான புரிதல் என்பதே நான் சொல்ல விழைவது..! நன்றி.

Aashiq Ahamed said...

சகோதரர் வவ்வால்,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக),

தாங்கள் சற்று ஆழமாக ஆராய்ந்திருந்தாலே இப்படியொரு அறியாமை பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது சகோதரர். சரி, விசயத்திற்கு வருவோம்.

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற சொற்களில் உள்ள மத்திய வார்த்தையான 'சலாம்' என்பதற்கு அமைதி (peace), சமாதானம் (truce) என்ற பொருள்கள் உண்டு. இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றீர்களா? நீங்களே செக் செய்யலாம்.

இங்கே சென்று அரபியில் 'சலாம் (سَلاَم)' என்று கொடுத்து அதற்கான ஆங்கில அர்த்தங்களை பாருங்கள். நான் பார்த்ததற்கு என்னென்ன அர்த்தங்கள் வருகிறதென்றால் peace, pax, salutation, concord, salaam. இதில் pax என்றால் truce (சமாதானம்) என்று அர்த்தம். இதையும் நான் சொல்லவில்லை, விக்கிபீடியா தான் சொல்கின்றது. பார்க்க இங்கே

இவை மட்டுமல்லாமல், அரபி மொழி lexicon-களில் பிரபலமான ஒன்றான Lissan al-Arab, சலாம் என்ற வார்த்தைக்கு peace, a truce என்ற அர்த்தங்கள் உள்ளதாக சொல்வதாக கூகிள் தேடல்கள் சொல்கின்றன. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே தேடிப் பார்த்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் விட மேலாக, தமிழ் விக்கிபீடியா இது குறித்து என்ன சொல்கின்றது? இதோ

அஸ்ஸலாமு அலைக்கும் (السلام عليكم) - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பது இதன் பொருளாகும். இது அரபி வாக்கியமாகும். இது முகமன் கூறுவதற்கு பயன்படுகிறது - தமிழ் விக்கிபீடியா.

ஆக சகோதரர், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைக்கு 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக' என்ற தமிழ் மொழிபெயர்ப்பு சரியானதே ஆகும். அரபி மொழி குறித்தான சரியான ஆய்வு இல்லாததே இப்படியொரு அறியாமை பதிவிற்கு காரணம்.

அப்புறம், சாந்தியும் சமாதானமும் ஒன்று தான் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் அதனை பார்த்து வருத்தப்படுவதை தவிர எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை. சகோதரர் முஹம்மது ஆஷிக் இது குறித்து மேலே தெளிவாகவே கூறிவிட்டார்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா என்ற கேள்விக்கு பதில் எளிதானது. குர்ஆனில் இருந்தே இதற்கு பதில் அளிக்கலாம். தன் முஸ்லிமல்லாத தந்தையை நோக்கி இப்ராஹீம் (அலை) நபி அவர்கள் சலாம் கூறியதாக குர்ஆன் (19:47) சொல்கின்றது. ஆக, முஸ்ளிமல்லாதவர்களை நோக்கி சலாம் கூறுவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஜாகிர் நாயக் அவர்களின் இது குறித்த வீடியோ youtube-பில் காணக்கிடைக்கின்றது. பார்த்துக்கொள்ளலாம்.

ஆகையால் சகோதரர், இந்த பதிவு உங்கள் அறியாமையின் வெளிப்பாடாகவே கருதுகின்றேன். இனியும் தாங்கள் இது போன்ற தவறான தகவல்களை பொதுவில் வைக்காமலிருக்க இறைவன் துணை புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் இறைவன் தந்தருள்வானாக...

தவறாக ஏதும் பேசி இருப்பின் மன்னிக்கவும்..

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

வவ்வால் said...

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
வாங்க, நன்றி, வணக்கம்,

//ஆனால், 'ஸலாம்'..?
இந்த சாந்தியும் இந்த சமாதானமும் ஒருங்கே இணைந்தது அல்லவா..?//

நீங்க சொல்றது சரி தான் ரொம்ப அழுத்தமா சொல்லணும் நினைக்கிறிங்க, ஆனா கொஞ்சம் யோசிச்சா நடு சென்டர் என்று சொல்வது போல தெரியுதே. அப்புறம் ஏன் ஒரு முகமன்னுக்கு ரொம்ப புனித தன்மை கொடுக்க வேண்டும், யாரேனும் அன்பே சிவம்னு சொன்னா ஆமாம் அன்பே சவம் சொல்ல வந்துட்டாருனு சொன்னா பெருசா யாரும் எடுத்துக்க போரதில்லை.

வவ்வால் said...

ஆஷிக் அஹமது,
வாங்க,வணக்கம், நன்றி!

//'அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற சொற்களில் உள்ள மத்திய வார்த்தையான 'சலாம்' என்பதற்கு அமைதி (peace), சமாதானம் (truce) என்ற பொருள்கள் உண்டு. இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றீர்களா? நீங்களே செக் செய்யலாம்.

இங்கே சென்று அரபியில் 'சலாம் (سَلاَم)' என்று கொடுத்து அதற்கான ஆங்கில அர்த்தங்களை பாருங்கள். நான் பார்த்ததற்கு என்னென்ன அர்த்தங்கள் வருகிறதென்றால் peace, pax, salutation, concord, salaam. இதில் pax என்றால் truce (சமாதானம்) என்று அர்த்தம். இதையும் நான் சொல்லவில்லை, விக்கிபீடியா தான் சொல்கின்றது. பார்க்க இங்கே//

எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறிங்க, நானே அதானே சொல்லி இருக்கேன், சமாதானம், அமைதி என்று ஏன் ரெண்டையும் அடுத்து சொல்லிக்கிட்டு என்பது தான் நான் கேட்ட கேள்வி..

//அரபி மொழி குறித்தான சரியான ஆய்வு இல்லாததே இப்படியொரு அறியாமை பதிவிற்கு காரணம்.//

ஹி..ஹி நானே அரபி தெரிஞ்சவங்க வந்து சரியான மொழிப்பெயர்ப்பைக்கொடுங்கனு சொல்லிட்டேனே பதிவில.அப்புறம் பெரும்பாலான இணைய தளங்களில் நான் பார்த்தது போல தான் இருக்கு,சுட்டிகளும் கொடுத்து இருக்கேன், எனவே இது எனது அறியாமை அல்ல.

ஆனால் நீங்கள் சொன்ன விளக்கமும் இரண்டு முறை அழுத்தி சொல்லணும் என்பதாகவே இருக்கு.மீண்டும் சக்கரத்தை கண்டு பிடிச்ச கதை தான் :-))

//முஸ்லிமல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா என்ற கேள்விக்கு பதில் எளிதானது. குர்ஆனில் இருந்தே இதற்கு பதில் அளிக்கலாம். தன் முஸ்லிமல்லாத தந்தையை நோக்கி இப்ராஹீம் (அலை) நபி அவர்கள் சலாம் கூறியதாக குர்ஆன் (19:47) சொல்கின்றது. ஆக, முஸ்ளிமல்லாதவர்களை நோக்கி சலாம் கூறுவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஜாகிர் நாயக் அவர்களின் இது குறித்த வீடியோ youtube-பில் காணக்கிடைக்கின்றது. பார்த்துக்கொள்ளலாம்.//

இது நல்ல செய்தி தான், இணையத்தில் மற்றவர்களுக்கு சொல்லக்கூடாதுனு பார்த்தேன், ஆனால் அது எனக்கு சரியாகப்படவில்லை, என்பதால் தான் பதிவில் சொல்லவில்லை, பின்னூட்டத்தில் அப்படி இருக்கு ஆனால் வீண் விவாதம் வரும் என சொல்லி இருக்கேன்.

எதையும் கேள்வி கேட்காமல், அடிய பணியவோ ஏற்கவோ எனது சித்தாந்தம் இடம் தறாது.எனவே இதனை கேள்வி கேட்கலாம் கேட்க கூடாது என எதுவும் இல்லை.

நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.இது எனது கொள்கை அவ்வளவே.உங்களுக்கு தவறாக தோன்றினால் பொருத்தருள்க.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ வௌவால்

//ஆனா கொஞ்சம் யோசிச்சா நடு சென்டர் என்று சொல்வது போல தெரியுதே.//---அப்படி தெரியக்கூடாது என்றுதான் அவ்ளோ வெவரமா வெளக்கி வெளக்கி சுட்டிகள் எல்லாம் கொடுத்து சொல்லப்பட்டது. இருந்தும் நீங்கள் பிடித்த முயலுக்கு முப்பது கைகள்.

உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன்...

காதை கொண்டாங்க...

வேற யாரும் கேட்டு சிரிச்சிட போறாங்க...

'நடு'...
இது தமிழ் வார்த்தை.

'சென்டர்' என்று தமிழில் நீங்க பினாத்தினாலும்... ஹி... ஹி... அது (center என்ற ) ஆங்கில வார்த்தைதான்..!

"தங்கள் மீது 'சாந்திபீஸ்' உண்டாகட்டும்" :-)

...என்று நாங்க இப்படி சொல்லிட்டு இருந்தா உங்க கருத்தை நீங்க ஜஸ்டிஃபை பண்றதுல கொஞ்சமாச்சும் ஒரு நியாயம் இருக்கலாம்.

ஆனால்... வௌவால் கண்ணு... சாந்தி&சமாதானம் அல்லது அமைதி&இணக்கம் ரெண்டுமே வெவ்வேறு பொருள்கொண்ட ஒரே மொழி வார்த்தைகள்தானே..?

உங்கள் ஓட்டை உதாரணமான "நடு center" பொருந்துரா மாதிரியே இங்கே இல்லையே..!?!?

//ஒரு முகமன்னுக்கு ரொம்ப புனித தன்மை கொடுக்க வேண்டும்//---யாரு குடுத்தா..? எனக்கென்னமோ நீங்கதான் அப்படி நினைச்சு குடுத்துக்குட்டு குழம்பிப்போய் இருக்கிறீங்க.
தெளிவாகுங்க.

அன்பு செத்துப்போன உங்கள் மனதில் உதித்த.... //அன்பே சிவம்னு சொன்னா ஆமாம் அன்பே சவம்//---இந்த வரிக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

'நாத்திகர்' என்றாலே இப்படித்தான்..! ஒழுக்கம் வரைமுறை இன்றி எதையும் எப்படியும் பேசலாம் எழுதலாம் என்று ஆகிவிட்டது. உங்களின் எழுத்தில் அறியாமை துர்நாற்றம் தாங்க முடியவில்லை.

Anonymous said...

ஒரு விசயம் புரியவில்லை. சாந்தி ஆகட்டும் சமாதானம் ஆகட்டும். இந்த இரண்டு வார்த்தைகளும் இஸ்லாமியர்கள் காப்பிரைட் வாங்கிய வார்த்தைகளா என்ன? உண்மையை சொல்லப் போனால், கிறிஸ்துவர்களிடம் இருந்து இவர்கள் காப்பி அடித்த நிறைய விசயங்களில் இந்த சாந்தியும், சமாதானமும் ஒன்று. இங்கே வலைப்பதிவில் தமிழில்(?!) முகமன் கூறிக் கொள்ளும் எந்த தமிழ் இஸ்லாமியராவது நேரில் பார்க்கும்போது தமிழில் முகமன் சொல்லிக் கொண்டது உண்டா? யாரோ ஒருவர் சாந்தியையும், சமாதானத்தையும் பகிடிக்காக தன்னுடைய பதிவில் பயன்படுத்த, இவர்கள் பொங்கி எழுகின்றார்களே? என்ன ஒரு (து)வேசம்! தமிழில் ஒரு பெயர் கூட வைத்துக்கொள்ளாத இவர்கள், நம்முடைய சகோதரிகள் வைத்துக் கொள்ளும் அழகிய சாந்தி என்ற பெயரைச் சொல்லி, அவள் உன்னுடன் இருக்கட்டும் என்று மற்றொரு இஸ்லாமியருக்கு சொல்வதை ஏற்று கொள்ளும் மடையர்களாக நாம்தான் இருந்து வருகின்றோம். எங்கே எதாவது பேசினால் இந்துத்வா முத்திரை விழுந்துவிடுமோ என்று பயந்து, இஸ்லாமியத்துவா நமது முதுகில் பச்சை குத்துவதற்கு காட்டிக் கொண்டு இருக்கின்றோம். வேதனை. வேதனை.

ராம்குமார்

Robin said...

ஆஷிக் செய்வது விதண்டாவாதம்.

Anonymous said...

அவர்களுக்கு ஒரு பிரச்னையென்றால் வரிந்துகட்டிக்கொண்டு வால் பிடிக்கும் அத்தனை ......களும்

இந்துக்கடவுள்களையோ,வழிபாடுகளையோ கிண்டல் செய்யும்போது எங்கே போனார்கள்?

அஸ்ஸலாமு அலைக்குமை கிண்டல் பண்ணியிருந்தால் சரி! அதன் தமிழ் மொழிபெயர்ப்பு - அதுவும் தவறானது - அதை ஒருவன் கிண்டலடித்ததற்காக கூச்சல் போடும் இவன்களெல்லாம் மதவெறி பிடித்துப்போய் திரிந்துவிட்டு, இந்தியாவில் இந்து என்று சொல்லிக்கொள்வதை மதவாதம் என்பான்கள்!

அரேபிய நாடுகளில் இருக்கும் இஸ்லாமியப் பற்றுதலை விட, இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய வெறி அதிகமாகவே தெரிகிறது. ஏனெனில் இங்குதான் சிறுபான்மைன்னு சொல்லி ஆடலாம்.

தன் மதத்தை யாரும் ஒன்றும் சொல்லிவிடக்கூடாது என்று சீறுவது விஷமுள்ள பாம்பின் தன்மை! அடிக்கத்தான் தோன்றும்.!

அதான் அமெரிக்கா அடிக்கிறான்.

வவ்வால் சொல்லவந்ததையே புரிந்துகொள்ளாமல் வாப்பா வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்!
இணையத்திலும் குண்டுவைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
சிலர் பேச்சுவாக்கில்" என்னிடம் காசு,பணம்" எதிர்பார்காதீங்க என்றும், பாரதியார்- காணி-நிலம் வேண்டும்
என்று கூட , கிட்டத்தட்ட ஒரே சொல்லைத் தான் கூறியுள்ளார்கள்
அதனால் சாந்தி, சமாதானம் என மொழிபெயர்த்திருக்கலாம் அல்லவா?
அதன் பயனை நோக்குவோம்.

வவ்வால் said...

அன்பின் ஆஷிக்!,

நல்லாப்பேசுரிங்க, நீங்க சொன்னதிலயே ஒரு ஓட்டைய காட்டுறேன் அதுல ஆஷிக் அண்ணாச்சியே பூந்து வரலாம் :-))

//ஆனால்... வௌவால் கண்ணு... சாந்தி&சமாதானம் அல்லது அமைதி&இணக்கம் ரெண்டுமே வெவ்வேறு பொருள்கொண்ட ஒரே மொழி வார்த்தைகள்தானே..?

உங்கள் ஓட்டை உதாரணமான "நடு center" பொருந்துரா மாதிரியே இங்கே இல்லையே..!?!?//

ஷாந்தி என்பது வட மொழி சொல், தமிழில் சாந்தி எனப்பாவிக்கப்படுகிறது, இதனை திசைச்சொல் என்பார்கள். உ.ம் ராகவ்= ராகவன், மாதவ் = மாதவன்,ஆதித்யா = ஆதித்யன், நாம தமிழில் அப்படியே விகுதி ,சேர்த்தோ, தமிழ் எழுத்து போட்டோ எடுத்து புழங்குவதால் அது தமிழ் ஆகிவிடாது! :-))

இணக்கம் என்பது சமாதானம் அல்ல, அதனை ஒத்துழைப்பு அப்படினு சொல்லலாம். அதுவும் இணக்கம் என்பதை பழமைப்பேசி என்பவரே எடுத்துக்காட்டியுள்ளார். விட்டா நீங்க operation and co-operation ஒன்று தான்னு சொல்வீங்க போல :-))

//உங்களின் எழுத்தில் அறியாமை துர்நாற்றம் தாங்க முடியவில்லை.//

தங்கள் கண்டுப்பிடிப்புக்கு நன்றி!

அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம் , அரபி தெரியலைனாலும் பரவாயில்லை, தமிழை பிழையில்லாமல் தெரிந்து வச்சுக்கோங்க!

வவ்வால் said...

ராம்குமார், ரோபின், அனானி, அனைவருக்கும் நன்றி,

தனியாக விளக்கத்தேவையில்லை என் கருத்து , புரிந்திருக்கும்! மீண்டும் நன்றி(அனானி கொஞ்சம் கூல் ஆகுங்க)
---------------------------------------------

வாங்க யோகன்,

வணக்கம்,

இப்படி எதவாது போனா தான் எட்டிப்பார்பீங்க போல :-))

//சிலர் பேச்சுவாக்கில்" என்னிடம் காசு,பணம்" எதிர்பார்காதீங்க என்றும்,//

நீங்களே சொல்லிட்டிங்க பேச்சு வாக்கில என அப்போ அதுக்கு அவ்வளவு முக்கியம் இல்லைனு ஆகுது, ஆனால் இங்கே எழுத்துப்பூர்வமா, அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இந்த பேச்சு வாக்கு கூட பிழை அல்ல. காசு என்பது பொதுவா சில்லரைய சொல்ரது சிறிய அளவு, பணம் என்பது கொஞ்சம் பெரும் தொகை சொல்ல பயன்படுவது. அதிகமா இல்லைனா பரவாயில்லை இருக்கிறது குடு சிலர் கேட்பாங்க அதுக்காக இப்படி காசு,பணம் இல்லை னு பேச்சுவாக்கில சொல்றது . ஆனால் பொருள் உண்டு.

//பாரதியார்- காணி-நிலம் வேண்டும்
என்று கூட , கிட்டத்தட்ட ஒரே சொல்லைத் தான் கூறியுள்ளார்கள்//

யார் இப்படிலாம் சொன்னது,

காணி என்பது நில அளவை குறியீடு, கிட்டத்தட்ட 1.25 ஏக்கர் வரும், மைல், கிலோ மீட்டர் போல, காணி மற்றும் ஏக்கர், ஆகும். பாரம்பரிய நில அளவை இவை, காணி, குழி,மா, வேலி என பல நில அளவைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் இருக்கு.. மெட்ரிக் முறைக்கு முன்னர் இதான் நடைமுறையில இருந்தது.

நிலம் என்பது பொதுவா என்ன அளவுனு சொல்லாம சொல்றது எனவே ஒரு காணி நிலம் வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்றார் பாரதியார்.நீங்க என்ன காருக்கு பெட்ரோல் போடுங்க என்றா சொல்வீங்க 5 லிட்டர் பெட்ரோல் சொல்ல மாட்டிங்க!

Radhakrishnan said...

மொழிப்பிரச்சினை பாழாய் போன ஒன்று. கோனார் தமிழ் உரை தமிழுக்கு அவமதிப்பு.

மொழிப்பெயர்ப்பு அதைவிட பாழாய் போன்ற ஒன்று.

மிகவும் அழகாக எடுத்து காட்டி இருக்கிறீர்கள்.

தங்கள் பக்கம் இல்லாத நியாயத்தை சகோதரர்கள் ஏதேதோ எழுதி போராடித்தான் பார்க்கிறார்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வௌவால்,
நான் மிக தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படியுங்கள்,//சாந்தி&சமாதானம் அல்லது அமைதி&இணக்கம் ரெண்டுமே வெவ்வேறு பொருள்கொண்ட ஒரே மொழி வார்த்தைகள்தானே..? //--என்றுதான் சொல்லி இருக்கிறேன்.

ஆனால், மிக சாதுரியமாக... நீங்கள்...//நாம தமிழில் அப்படியே விகுதி ,சேர்த்தோ, தமிழ் எழுத்து போட்டோ எடுத்து புழங்குவதால் அது தமிழ் ஆகிவிடாது!//---என்று நான் அவற்றை 'தமிழ் வார்த்தைகள்' என்று சொன்னது போல திரித்து நான் சொல்லாததை சொன்னதாக உங்கள் நச்சுக்கருத்தை புகுத்த முயல்கிறீர்கள்.

இப்படித்தான் ஒட்டுமொத்த பதிவையும் ஓட்டையுடன் திரித்து எழுதியதோடு நில்லாமல் பின்னூட்டங்களிலும் 'ஓட்டையை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி' என்று ஓட்டை உடைசலாய் விழிபிதுங்கி நிற்கிறீர்கள்.

சில அனானிகளின் ஜால்ரா சத்தங்கள் உங்கள் கருத்தை உண்மைபோல மாயத்தோற்றம் உண்டாக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையில் உங்களை பொய் சொல்லி எப்படியாவது காப்பாற்ற முனைபவர்கள் என்பதை புரிந்து நன்றி சொல்கிறீர்கள். ஹ..ஹ..ஹா.. என்னே உங்கள் அறியாமை..!.

வவ்வால் said...

ஆஷிக் அண்ணாச்சி,

வணக்கம், நன்றி!

காபி பேஸ்ட் பண்ணதுல பாதி விட்டு போச்சு, இது நீங்க சொன்னதானு பாருங்க,

//'நடு'...
இது தமிழ் வார்த்தை.

'சென்டர்' என்று தமிழில் நீங்க பினாத்தினாலும்... ஹி... ஹி... அது (center என்ற ) ஆங்கில வார்த்தைதான்..!

"தங்கள் மீது 'சாந்திபீஸ்' உண்டாகட்டும்" :-)

...என்று நாங்க இப்படி சொல்லிட்டு இருந்தா உங்க கருத்தை நீங்க ஜஸ்டிஃபை பண்றதுல கொஞ்சமாச்சும் ஒரு நியாயம் இருக்கலாம்.//

இதுக்கு தான் ஷாந்தி தமிழ் அல்லனு சொல்லி இருக்கேன், மேலும் என் பதிவில ஆரம்பத்திலவே சாந்தி= அமைதி = சமாதானம் என்பதை விளக்கி இருக்கேன், பாருங்க அப்புறம் மீண்டும் வேற வேற பொருள் வர ஒரே மொழி?!! என்றால் எப்படி அய்யா?இப்போ பினாத்துவது யாருனு உங்க மனசாட்சிக்கே தெரியும்! :-))

வவ்வால் said...

ராதாகிருஷ்ணன்,

வாங்க வணக்கம், நன்றி!

//மொழிப்பிரச்சினை பாழாய் போன ஒன்று. கோனார் தமிழ் உரை தமிழுக்கு அவமதிப்பு.

மொழிப்பெயர்ப்பு அதைவிட பாழாய் போன்ற ஒன்று.

மிகவும் அழகாக எடுத்து காட்டி இருக்கிறீர்கள்.//

இத தான் நான் கொஞ்சம் பெருசா சொல்லி இருக்கேன், நீங்க சுருங்க சொல்லிட்டிங்க, அவ்வளவு விளக்கம் போட்டும் விளங்காதவர்களை என்ன செய்ய :-))

தங்கள் புரிதலுக்கு நன்றி!(ஆஷீக் அண்ணாச்சி நன்றி சொன்னாக்கூடா கோச்சுக்கிறார்)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஹ..ஹ..ஹா..

//இணக்கம் என்பது சமாதானம் அல்ல, அதனை ஒத்துழைப்பு அப்படினு சொல்லலாம். அதுவும் இணக்கம் என்பதை பழமைப்பேசி என்பவரே எடுத்துக்காட்டியுள்ளார்.//

---அவர் சொல்லும்போது... நீங்கள் அதை தவறு என்று கூறாததால்.... நான் அதயே மேற்கோள் காட்டினேன்.

இப்போது உடனே அது தவறு என்று குதிக்கிறீர்கள். அதாவது, "வேண்டாத மருமகள்... கைபட்டால்..கால்பட்டால்.."
சரி அது போகட்டும்..

உங்களின் இந்த மறுமொழியிலும் பெரிய்ய்ய்ய ஓட்டை என்னனா...

நீங்க "அமைதியும் இணக்கமும்" ஒரே வார்த்தை என்றுதான் உங்க தரப்புக்கு நிரூபிக்கவேண்டும். ஆனால், அதை கோட்டை விட்டுவிட்டு... "இணக்கம் என்பது சமாதானம் அல்ல"... என்று எதோ சொல்கிறீர்கள். சரி, உங்கள் கருத்து படியே 'ஒத்துழைப்பு' என்றே வைப்போம்.

"தங்கள் மீது அமைதியும் ஒத்துழைப்பும் உண்டாகட்டும்" என்று சொல்லலாம் என்கிறீர்களா..?

மீண்டும் குழம்பாமல் பதில் தர முடிந்தால் தரவும்..!

வவ்வால் said...

ஆஷிக் அண்ணாச்சி,

நுணலை தன் வாயால் கெடும் கேள்விப்பட்டு இருக்கீறா, அது இதான் அய்யா! உங்க கடைசி பின்னூட்டம் இதானே,

//-அவர் சொல்லும்போது... நீங்கள் அதை தவறு என்று கூறாததால்.... நான் அதயே மேற்கோள் காட்டினேன்.

இப்போது உடனே அது தவறு என்று குதிக்கிறீர்கள். அதாவது, "வேண்டாத மருமகள்... கைபட்டால்..கால்பட்டால்.."
சரி அது போகட்டும்..

உங்களின் இந்த மறுமொழியிலும் பெரிய்ய்ய்ய ஓட்டை என்னனா...

நீங்க "அமைதியும் இணக்கமும்" ஒரே வார்த்தை என்றுதான் உங்க தரப்புக்கு நிரூபிக்கவேண்டும். ஆனால், அதை கோட்டை விட்டுவிட்டு... "இணக்கம் என்பது சமாதானம் அல்ல"... என்று எதோ சொல்கிறீர்கள். சரி, உங்கள் கருத்து படியே 'ஒத்துழைப்பு' என்றே வைப்போம்.

"தங்கள் மீது அமைதியும் ஒத்துழைப்பும் உண்டாகட்டும்" என்று சொல்லலாம் என்கிறீர்களா..?

மீண்டும் குழம்பாமல் பதில் தர முடிந்தால் தரவும்..!//

அய்யா ஆஷிக், நான் சாந்தியும்,சமாதனமும் ஒன்று என சொன்னேன், அவர் ,சாந்தி , சமாதானம் நீங்க சொன்னாப்போல ஒரே மீனிங் தான், இணக்கமும் என வர வேன்டும் என்றார், சரியா போய் என் பதிவையும், அதுக்கு அவர் சொன்ன பதிலையும் இணைத்து...இணைத்து படிக்கவும்!

எனவே அவர் சொன்ன கருத்துக்கு நான் மறுப்பு சொல்லவில்லை.. புரிந்ததா!

சாந்தியும் சமாதானமும் என்பது பொருத்தமில்லாத ஒன்று , எனவே வேறு எதுவாக இருந்தாலும் விளக்கம் சொன்னால் சரி என்று நானும் ஏற்றுக்கொண்டேன். நான் அவருக்கு என்ன பதில் சொல்லியுள்ளேன் என்பதைப்பார்க்கவும்.

நான் என்னமோ சாந்தி,சமாதானம் தான் சொல்லனும் சொன்ன மாதிரில பேசுறிங்க!என்னைப்பொருத்தவரை சாந்த்இ,சமாதானம் என்பது சரியான பதம் அல்ல! வேற என்ன சொன்னாலும் சரியான விளக்கம் இருப்பின் சரியே! கீழ நீங்க சொன்னது சரினு நீங்க சொன்னா எனக்கும் சரி! :-))

//
"தங்கள் மீது அமைதியும் ஒத்துழைப்பும் உண்டாகட்டும்" என்று சொல்லலாம் என்கிறீர்களா..?//

இதை தான் பழமை பேசி" சாந்தியும் இணக்கமும் உண்டாகட்டும் என்றார்"

நானும் இதுவும் நல்லா இருக்கு, இது சாந்தி,சமாதானம் விட பெட்டர்னு சொன்னேன் புரியுதா!!!!!

சாந்தியும்,சமாதானமும், நிலவுவதாக என்பது ஒலி சந்தம்," ச"..வுக்கு" ச" ... என போட்டது.

ஆஷிக் அண்ணாச்சி எனக்கு தெரியும், புரிந்தாலும் நீங்க புரியாத மாதிரி தான் பேசுவிங்கனு, உங்க பூச்சாண்டிக்கு பயப்படுற ஆளு நான் இல்லை, நீங்க 1000 பின்னூட்டம் போட்டாலும் பதில் சொல்வேன், உங்களுக்கு தான் திராணி காணாது, என் கூட பேசனும்னா பெரியவங்க துணையோட வாங்க!

தமிழ் இலக்கணம் தெரியுமா? மோனைத்தொடை னு ஒன்று இருக்கு(ரம்பா தொடை தான் உமக்கு தெரியும்) இப்போ பாரும்,

//மோனைத் தொடை
மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் ஆகும். அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே ஆகும். சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்ற//

இதுல சீர்கள் என்று போட்டு இருக்கே கல்யாணம் ஆனா பண்ற சீர்னு நினைச்சுக்காதீர், அது இலக்கண சீர், ஒரேஅடில அடுத்து வர சொல்லுக்கு ஒரே ஒலி நயத்தில சொல் அமைப்பது!
உ.ம்= சாந்தியும், சமாதானமும்
ச னாவுக்கு சானா அப்படினு போடுறது!

ஆஷிக், நீர் பதிவுக்கு ரொம்ப கத்துக்குட்டினு என் கிட்டே மாட்டும் போதே தெரிஞ்சு போச்சு, என் பேரை கேட்டாலே எல்லாம் எகிரி ஓடுவாங்க! :-)) வாங்க பாத்துக்கலாம்!

வேகநரி said...

எந்த ஒரு இஸ்லாமியர்களும் சாந்தியும் சமாதானமும் என்று முகமன் சொல்வதில்லை.பாக்கிஸ்தான்காரர்களே குட் மோனிங் தான் மற்றவர்களுக்கு சொல்கிறார்கள. சாந்தியும் சமாதானமும் விவகாரம் மதவாதிகளின் அடாவடிதனமேயல்லாது வேறல்ல.

வவ்வால் said...

வேகமான நரி,

என்னா ஒரு பேரு சாமி!

//பாக்கிஸ்தான்காரர்களே குட் மோனிங் தான் மற்றவர்களுக்கு சொல்கிறார்கள.//

பாகிஸ்தான் காரனுக்கு தமிழ் தெரியாது தெரிஞ்சா சாந்தி, சமாதனம் தான்சொல்வான் அப்படினு ஆஷிக் அண்ணாச்சி சொல்வாரு, அப்போ நீர் வருவீரா, நாந்தேன் பதில் சொல்லணும்! :-))

இப்போ ஒரு 2-3 வருசமா தான் சாந்திலாம் நடமாடுறாப்போல எனக்கு தெரியுது, அதுக்கு முன்ன எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை சாந்தியை!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இதை தான் பழமை பேசி" சாந்தியும் இணக்கமும் உண்டாகட்டும் என்றார்"//---அவர் சொன்னது இதுவா என்று முதல் பின்னூட்டம் பார்க்கவும். சரி ஓகே. குழம்பிப்போய் இருப்பது புரிகிறது.

// உங்க பூச்சாண்டிக்கு பயப்படுற ஆளு நான் இல்லை,//---பொதுவா, 'பயந்தாங்கோலிகள்தான் தங்களை தாங்களே தைரியப்படுத்திக்கொள்ள இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள்' என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். நன்றி.


//நீங்க 1000 பின்னூட்டம் போட்டாலும் பதில் சொல்வேன்,//--ஹி..ஹி..ஹி.. அவ்ளோ தேவையே இல்லை. அஞ்சு பின்னூட்டத்திலேயே அறிந்து கொண்டேன். கேட்டகேள்விக்கு பதிலே சொல்லாத பட்சத்தில் இன்னும் 995 பின்னூட்டம் போடுவேன் என்று கனவு காண வேண்டாம் சகோ..!

///உங்களுக்கு தான் திராணி காணாது, என் கூட பேசனும்னா பெரியவங்க துணையோட வாங்க!///---நன்றி பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்யவரே..! :-)


//ஆஷிக், நீர் பதிவுக்கு ரொம்ப கத்துக்குட்டினு என் கிட்டே மாட்டும் போதே தெரிஞ்சு போச்சு, என் பேரை கேட்டாலே எல்லாம் எகிரி ஓடுவாங்க! :-)) வாங்க பாத்துக்கலாம்!//---இப்போதானே புரியுது அந்த காரணம்..! எல்லாரும் ஏன் எகிரி ஓடுறாங்கன்னு..!


//நுணலை தன் வாயால் கெடும் கேள்விப்பட்டு இருக்கீறா,//---இதைத்தான் இப்போ இங்கே பார்த்துட்டே இருக்கேன்..! ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல், ஒரு அரைவேக்காட்டு பதிவு போட்டு.. குறைசொல்லிக்கிட்டு... அப்புறம் அதுக்கு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு... கூட்டத்தோடு அனானிகள் உதவியால் திட்டிக்கிட்டு... ரம்பா தொடை...கல்யாண சீர்....

நீங்க எல்லாரும் என்ஜாய்...

எனது விவாதக்களம் இதுவல்ல...
சோ... பை..பை... குட் பை.

தங்கள் மீது "சாந்தியும் சமாதானமும்" நிலவட்டுமாக.

அல்லது

தங்கள் மீது "அமைதியும் இணக்கமும்" நிலவட்டுமாக.

அல்லது...

தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக.

வவ்வால் said...

வாங்கோ ஆஷிக் அண்னாச்சி,

மண் ஒட்டிச்சா ஒட்டலையா? சாந்தி, அமைதி,சமாதானம் எல்லாம் ஓன்று தான்னு பதிவு போட்டா, அதுவேற இது வேற சொன்னீர், அப்புறம் , எப்படினு கேட்டா ஒண்ணும் சொல்ல காணோம், இதுல எனக்கு சலாம் உண்டாகணுமாம்..அப்போ சாந்தி "உண்டாகணும்" சொல்றிங்க, சாந்தி "உண்டானா" அது என் தப்பில்லை! :-)) நான் ரொம்ப்ப நல்லவன்!(உமக்கு தான் தமிழ் தெரியாதே அப்புறம் என்னா)

ஆமாம் இப்போவாது தெரியுமா சாந்தி என்கிற ஷாந்தி தமிழா இல்லை வட மொழியானு :-))

வவ்வால் said...

ஆஷிக் ஒன்று சொல்ல மறந்துட்டேன்,

சாருக் கான்," ஓம் சாந்தி ஓம்" அப்படினு தமிழில் பெயர் வைத்து இந்தியில் படம் எடுத்து , வரி விலக்கு வாங்கி இருப்பார் போல :-)) (சினிமா உதாரணம் சொன்னாலாவது விளங்குதாப் பார்ப்போம்)

ஜோதிஜி said...

ஆகையால் சகோதரர், இந்த பதிவு உங்கள் அறியாமையின் வெளிப்பாடாகவே கருதுகின்றேன். இனியும் தாங்கள் இது போன்ற தவறான தகவல்களை பொதுவில் வைக்காமலிருக்க இறைவன் துணை புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

மதம் என்பது கொள்கை அல்ல. அது மனிதனை மதம்பிடிக்க வைக்கக்கூடியது என்று நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. அது இந்து முஸ்லீம்,கிறிஸ்துவம் என்று பாரபட்சம் இல்லாத அணைவரையும் ஒரு போடு போட்டு தாக்கி விடும் போலிருக்கு. ஏற்கனவே சாதி பற்றி பேசி சண்டைக்கு வந்தீங்க. இப்ப இதைப் பற்றி என் உண்மையான கருத்தை பேசினால் உதைக்க வருவீங்க.