Wednesday, April 25, 2012

மின்வெட்டு குறையும்!

கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தலில் கழகம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் மின்வெட்டாகவும் இருக்கலாம்" என அப்போது மின்வெட்டு அமைச்சர் என அறியப்பெற்ற ஆர்க்காட்டாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு 1000 மெ.வாட் மின் உற்பத்தி திட்டம் கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.பல திட்டங்கள் வெற்றறிவிப்பாகவும், சில பேரங்கள் படிந்த பின் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைப்பெற்றன. அதிகரித்து வரும் மின் வெட்டினை சமாளிக்க வெளிசந்தையில் வாங்கியும், மத்திய அரசுடன் இருந்த உறவைப்பயன்ப்படுத்தி அவ்வப்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் கூடுமானவரை மின்வெட்டை சமாளித்து ஐந்து ஆண்டுக்காலத்தினை தள்ளிவிட்டனர்.

ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டினை  நொடியில் தீர்ப்பேன் என வரம் கொடுக்கும் மகாசக்தியைபோல் அருள் வாக்கு கொடுத்தே பொது தேர்தலில் அம்மையாரும் அமோக வெற்றிப்பெற்றார், அனேகமாக உள்ளூக்குள் அப்போது ஐயா மந்திரப்புன்னகை புரிந்து இருப்பார், இந்தம்மா எப்படித்தான் மின் வெட்டினை தீர்க்கிறது பார்ப்போமே என்று.

ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிகாரிகளை கூட்டி கூட்டம் போடும் போது தான் உண்மையான நிலையே தெரிய வருகிறது ,மின்வாரியத்துக்கு சுமார் 50000 கோடி கடன்,அதில் 10000 கோடி ரூபாய் கடன் மின்சாரத்தினை வெளி சந்தையில் வாங்கிய வகையில் நிலுவை என.

புதிதாக மின்சாரம் வாங்க வேண்டும் எனில் பழைய கடன் தொகையை கேட்கிறார்கள், மத்திய  மின் தொகுப்பில்  கூடுதல் மின்சாரம் கேட்டால் கூடன்குளத்தில் தமிழகரசு எதிர் நிலைப்பாடு எடுத்திருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை.

அந்த சமயத்தில் காற்று வீசும் பருவமும் டிசம்பருடன் முடிய துவங்கியது எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்தது விளைவு மின்வெட்டின் கடுமை கூடத்தொடங்கியது.

என்ன செய்யலாம் என மெத்தப்படித்த அதிகாரிகளைக்கூட்டி வைத்துக்கேட்டால் வழக்கம் போல கஜானா காலி ,மின் கட்டணத்தினை உயர்த்தினால் மட்டுமே வருமானம் கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் வாங்கி சமாளிக்கலாம் என அபூர்வமான அறிவுரை தந்தனர்.

இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்,இடைத்தேர்தல் வேற ஒன்னு வருது இப்போ கட்டணத்தை பல மடங்கு கூட்டினால் மக்கள் கடுப்பாகிடுவார்கள், கடும் தோல்விக்கு பிறகு பொட்டு வச்சுக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்க எதிர்க்கட்சிகளூம் துள்ளிக்குதித்து போராட்டத்தை நடத்தி மீண்டும் இழந்த மக்கள் செல்வாக்கை அடையப்பார்ப்பாங்க, எனவே வேற எதாவது செய்யணும் என இராசதந்திரமாக யோசித்து , மின்வெட்டு 4 மணியோ 10 மணி நேரமோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறிவிச்சுக்கோங்க, மக்கள் ஏன் இந்த மின்வெட்டு எனக்கேட்டால் மின்வாரியக்கடன் கதையையும் கடந்த ஆட்சியின் அவலத்தையும் சொல்லி காசு இல்லை என சொல்லிவிடலாம் அப்படியே சைடுல மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் உயர்த்த  ஆலோசிப்பதாக ஒரு அறிக்கையும் விட்டு வச்சுட்டோம்னா நம்ம "ஆபரேஷனை" வெற்றிகரமாக நடத்தி முடிச்சுடலாம் என முடிவுக்கு வருகிறார்கள்.

"ஆப்பரேஷன்" என சொன்னார்களே என்ன என்று புரியவில்லையா, மின் கட்டணம் உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும், உயர்த்தாமல் அரசின் கையிருப்பு பணத்தினைக்கொண்டு மின்சாரம் வாங்கிக்கொடுத்தால் பின்னர் அதிகமாக மின் கட்டணம் உயர்த்தினால் ஏன் இந்த அளவு உயர்த்தணும் கேட்பார்கள்.அதே சமயம் கடுமையான மின்வெட்டினை செய்தோம் எனில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்களாகவே முன் வந்து நீங்க கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கோன்ங்க ஆனால் தடையில்லாமல் அல்லது குறைவான மின் வெட்டுடன் மின்சாரம் கொடுத்தா போதும் கோடி புண்ணியம் நீங்க ந்ல்ல்லாயிருப்பிங்கனு கதற ஆரம்பிச்சுடுவாங்க.அரசியல் நாடக மேடையில் ...அ நாடகமே அரசியல்தான் :-))

நாம அந்த நேரம் பார்த்து மானாவாரியா மின் கட்டணம் உயர்த்திக்கலாம்,மக்கள் எதிர்ப்பே காட்ட மாட்டாங்க, அதே நேரம் எதிர்க்கட்சிகள் உத்தம அவதாரம் எடுத்து இது வரலாறுக்காணாத மின் கட்டண உயர்வு இதற்கு தானா ஆசைப்பட்டாய் தமிழினமே சற்றே சிந்தித்துப்பார் கழக ஆட்சியின் மேண்மைகளைனு  அறிக்கை விட்டால் 50000 ஆயிரம் கோடிக்கடன் சுமை அதில் 10000 கோடி மின் சாரம் வாங்கியது என தேதி,கிழமை ,தொகை வாரியா 100 பக்க அறிக்கை விட்டு பிரஸ் மீட் வச்சு பேசினோம்னா சும்ம அல்லு சில்லு அலறும்ல ஏன்னா நாம பேசுறது ஃபேக்ட்டு ...ஃபேக்ட்டு ... ஃபேக்ட்டு என அம்மையார் அமர்க்களமாக இராசதந்திர ஆபரேஷனை விளக்கவே அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பக்தி பரவசமாகி அம்மானா சும்மா இல்லைடா என பாடி மெய்சிலிர்க்கிறார்கள்.

FACTU..FACTU...FACTU...

"Last year, we purchased 1,500MW of electricity from private players at high prices and somehow managed the situation. But this time, we are not able to buy as we still owe 10,000 crore to suppliers," said the power manager.

மேலும் இப்போது மீண்டும் காற்று வீசும் பருவம் துவங்கிவிட்டது எனவே மீண்டும் காற்றாலை மின்சாரம் கிடைக்க ஆரம்பித்துவிடும்  கூடவே அரசியல் காற்றும் அம்மையாருக்கு சாதகமாக வீச ஆரம்பித்து விட்டது, கூடங்குளத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் டில்லி அன்னையும் நட்பாக பார்க்க துவங்கிவிட்டார், இப்போது ஜனாதிபதி தேர்தல் அடுத்து மக்களவைத்தேர்தல் என வரிசைக்கட்டி வருகிறது செல்வாக்கு இழந்து விட்ட திமுகவை அதற்கெல்லாம் நம்பினால் மீண்டும் ஒரு முறை மூக்குடைப்பட நேரிடலாம் என பல அரசியல் கணக்குகள் போட்டு அவ்வப்போது அம்மையாருக்கு சமரச செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறார் டில்லி அன்னை, அது போல ஒரு சமரச செண்டு தான் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பாராட்டு மடல் அல்லது மெடல் கூடவே கேட்காமலே வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 100 கோடி கூடுதல் நிதி என பச்சை விளக்கு எரிய விட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டாலும் கிடைக்கும் சூழல், வெளி சந்தையில் மின்சாரம் வாங்கவும் நிதி கிடைத்து விட்டது, காற்றாலைகளும் உற்பத்திக்கு தயாராகிவிட்டது எனவே இன்னும் சில நாட்களில் படிப்படியாக மின்வெட்டு குறைய ஆரம்பித்து விடும், முற்றிலும் மின் வெட்டு நீங்கிவிடும் என சொல்ல முடியாது ஆனால் 10 மணி நேர மின் வெட்டு இருக்காது பெரும்பாலும் 2-3 மணி நேர மின்வெட்டாக குறைய வாய்ப்புள்ளது.

அரசியல் வானிலை அய்யாவுக்கு சாதகமில்லாமல் போவது பெரிய பின்னடைவு தான் , இப்படியே மின்வெட்டு தொடர்ந்தால் மக்களவை தேர்தலில் அதையே பெரிய பிரச்சாரம் ஆக்கி சட்ட சபை தேர்தலில் விட்டதைப்பிடிக்கலாம் என ஒரு கணக்குப்போட்டு காத்திருக்கையில் இப்படி வெகு சீக்கிரம் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்தால் ஏமாற்றமாக இல்லாமல் என்ன செய்யும்.

இப்பவும் அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கு மின்வெட்டினைக்கண்டித்து மாபெரும் உண்ணா நிலை போராட்டம் மே-1 இல் நடத்தப்போவதாக அறிவிச்சுடுங்க, வழக்கம் போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நிலை போரட்டம் இருந்துக்கலாம், எப்படியும் இன்னும் சில நாட்களில் மின்வெட்டு தானா குறையத்தான் போகுது அதுக்கு காரணம் நான் உண்ணா நிலை போராட்டம் நடத்தியதனால் தான் என சொல்லிக்கலாம் எப்பூடி :-))

பின்குறிப்பு:

நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))

9 comments:

சிவானந்தம் said...

///நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))//

அரசியல் பதிவு எழுத ஆரம்பிச்சா இதை தவிர்க்கவே முடியாது. இப்படி ஒரு ஆசையெல்லாம் இருக்கா!

அரசியல் குறித்த பார்வையை தயங்காம சொல்லுங்க! தவறு இருந்தா திருத்திக்க போறோம். இல்ல... அவங்களுக்கு தெரிஞ்சது அவவளவுதான் நாம நம்ம வேலையை பாக்க வேண்டியதுதான்.

வவ்வால் said...

சிவானந்தம்,

வணக்கம்,நன்றி!

முழூக்க அரசியல்ப்பதிவு எழுதுவது என்றால் எல்லா பேச்சு,பேட்டி,அறிக்கைக்கும் விமர்சித்து எழுத வேண்டும் அதை நாம செய்ய ஆசைப்படவில்லை, பொதுவான மக்கள் பிரச்சினை,நாட்டு நடப்பினை எழுதினாலே அதிலும் அரசியல் வந்து விடுமே அப்போது போன ஆட்சியில் ஏன் எழுதவில்லை என்பது போல கேட்பார்கள் ஆனால் எப்பொழுதுமே எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் அதைப்படிக்காமல் சாயம் பூச மட்டுமே ஆசைப்பட்டு வருபவர்களுக்கு அந்த பின்குறிப்பு.

இப்போதும் மின் வெட்டு குறையும் என்றாலும் 3000 மெ.வா அளவுக்கு மின்வாரியத்தில் உற்பத்தி தட்டுப்பாடு உள்ளது விலைக்கு வாங்கி தான் சமாளிக்க போகிறார்கள், எனவே நிரந்தர தீர்வு கிடைக்க மின் உற்பத்தி செய்தால் மட்டுமே சாத்தியம், அதற்கு குறைந்தது 2-3 ஆண்டுகளாவது ஆகும்.

மேலும் வரும் ஆண்டுகளில் ஏற்ப்பட போகும் தேவைகளையும் கணக்கில் கொண்டால் சுமார் 6000 மெ.வா உற்பத்தி கூடுதலாக செய்ய வேண்டும் செய்வார்களா அல்லது இப்படியே விலைக்கு வாங்கி ஆட்சிக்காலத்தினை சமாளித்து ஓட்டப்போகிறார்களா எனத்தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

//நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))///

இதைத்தான் வருண்கிட்ட சொல்றோம்.அவர் கண்டுக்கிற மாதிரியே தெரியல:)

நேற்று பதிவர் கோகுல் தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்ன்னு நகைச்சுவையாக ஒரு பதிவு போட்டிருந்தார்.

http://gokulmanathil.blogspot.com/2012/04/blog-post_27.html

அங்கே சொன்னதுதான் இங்கேயும்.முந்தைய நிலையில் பார்த்தால் ஒரு வீட்டுக்கான பல்புகளின் மின்சாரம்,ரேடியா பின் அதனைக் கடந்த தொலைகாட்சியென்று தொடர்ந்து,வி.சி.ஆர்,வாஷிங் மெஷின்,பிரிட்ஜ்,கணினி,ரிசார்ஸ் இன்ன பிற என்று மின்சார உபயோகம் வளர்ந்து விட்டது.மக்கள் தொகை ஒப்பீட்டளவில் மின் உற்பத்தி இப்போதைய நிலையில் குறைவே எனலாம்.தமிழகம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கூடங்குளம் மின்சாரத்தை தமிழகம் எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.

ராஜ நடராஜன் said...

நான் உங்கள் பதிவுகளை தவறுவதற்கு காரணம் உங்களை தமிழ்மண இணைப்பில் காண்பதேயில்லை.நீங்கள் திரட்டிகளில் இணைக்கிறீர்களா அல்லது இல்லையா?

ஜெயலலிதா ஆட்சி ஐந்து வருடத்துக்கு ஸ்ட்ராங்கு என்பதாலும் இரண்டு வருடத்துக்கு மின் தட்டுப்பாடு இருக்கும் என்ற அறிக்கையாலும் நீங்கள் சொல்லும் காரணங்களும் கூட மின் தட்டுப்பாட்டு உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் போகும்:)

வவ்வால் said...

வாங்க ராஜ்,

வணக்கம், நன்றி!

வருண் போன்றவர்கள் மொத்தப்பதிவிலும் ஏதேனும் ஒன்றிரண்டு வரிகளைம்மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு கருத்தினை கற்பித்துக்கொண்டு , நமக்கும் ஒரு நிறம் ஏற்றுவார்கள், அதனை பல காலமாக பார்த்தாச்சு என்பதாலே ஒரு சுய விளக்க பின்குறிப்பும் போட்டேன் அப்படியாவது உணரட்டுமே என்று ம்ம்ஹீம் எல்லாத்தையும் ஊதித்தள்ளிட்டு அவங்க வேலையை சிறப்பாக செய்கிறாங்க என்ன சொல்ல they come with a preoccupied mind ...pre conceived idea ...அதாவது வரும் போதே ஒரு முன் முடிவுடன், எண்ணத்துடன் வராங்க , என்ன எழுதி இருந்தாலும் அவங்க நினைத்ததை மட்டுமே சொல்வார்கள்.

எனக்கு சிவானந்தம் சொன்னது இதெல்லாம் கண்டுக்காதிங்கன்னு அதுவே உங்களுக்கும் எம்சிஆர் ரசிகன்னு சொன்னா அப்படியா எனக்கே இத்தனை நாளா தெரியாத ரகசியம் அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சதுனு ஒரு கலாய் கலாய்க்கணும் :-))
------

நீங்க சொன்னது போல மின்நுகர்வு பெருகிவிட்டது ஆனாலும் இன்னும் உலக சராசரி நுகர்வு அளவுக்கோ அல்லது அனைவருக்கும் மின்சாரம் என்ற நிலைக்கோ மின் உற்பத்தி இல்லை, நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஸ்ட்ராங்க் தான் ஆனால் இடையில் மக்களவை தேர்தல் வருதுள்ள அதுக்கு பயன் ஆகும் பார்ட் டைம் உண்ணாவிரம் அத சொன்னேன்.

இப்போதே நான் சொன்னது போல மின்வெட்டுக்குறைய ஆரம்பித்துவிட்டது, வெளி சந்தையில் , காற்றாலை மின்சாரம்ம் ,மத்திய தொகுப்பு எல்லாம் கைக்கொடுக்க ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.அரசு கஜானாவில் காசு இருக்கும் வரையில் மின் வெட்டினை தற்போது சமாளிக்க முடியும், விரைவில் ஏதேனும் மின் திட்டங்கள் உற்பத்தியை துவங்க வேண்டும், இன்னும் சில மாதங்களில் வள்ளூர் அனல் மின் திட்டம் , என்.எல்.சி கூடுதல் மின் உற்பத்தி எல்லாம் துவங்கும் என செய்திகள் வருகிறது. கூடவே நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்த நோட்டீசும் வருகிறது, ஒரு கலவையா இருக்கு நிலமை.

கூடன் குளம் விரும்பாவிட்டாலும் மின் உற்பத்தியை துவக்கிவிடும் ஆனால் கிரிட்டிக்கலாட்டி அடைந்து முழு மின்சாரம் கிடைக்க எப்படியும் ஒரு ஆண்டு ஆகும் என நினைக்கிறேன்.

அணு சக்தி வேண்டாம்னு சொன்னாலும் மின்சாரம் வந்தா விளக்கெரிக்காமலா போய்ட போறோம்.
------

என் பதிவில் கருவிப்பட்டை இல்லாத போதே தெரிய வேண்டாமா சில மாதங்களுக்கு முன்னரே தமிழ்மணத்தில் இணைவதை நிறுத்திவிட்டேன், சங்கமம், இன்டெலியில் நானாக இணைத்தால் தான் உண்டு.

எனவே எத்தனைப்பேரு படிக்கிறாங்க என்று கவலை எல்லாம் எனக்கு இல்லை. நீங்க சொன்ன ஆர்ட் பில்ம், கதை தான் ... ஏதோ ஒன்று ரீல் அந்துப்போகாமல் ஓடினால் சரி தான். என் பதிவையே அதிகம் கவனிப்பதில்லை ஊரார் பிலாக்குக்கு கமெண்ட் போட்டு வளர்த்தால் நம் பிலாக் தானா வளரும்னு ஒரு நம்பிக்கை தான் :-))
---

வரிசையா எல்லா பதிவிலும் பின்னூட்டம் போட்டுடிங்க போல , தொடரும் போட்ட பதிவுக்கு தொடர்ச்சி வருது அப்போ ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் கார்பன் கிரெடிட் டிரேடிங்க் என்ற ஏமாற்றுத்தனங்கள் எல்லாம் புரியவரும்.
------

ராஜ் said...

Good One...ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...
வேற ப்ளாக்ல உங்க கமெண்ட்ஸ் பார்த்து இருக்கேன்,,,இப்ப தான் உங்க ப்ளாக் பக்கம் வரேன்....
எங்க ஊரில் 12 மணி நேரம் இருந்த மின் வெட்டு இப்பொழுது 2 மணி நேரமாக குறைக்க பட்டு விட்டது.... எல்லாம் காற்றாலை மாயம் தான்..
மேலும் மின் வெட்டு குறையுமா அல்லது குடும்மா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்..

வவ்வால் said...

ஆஹா உங்க பேரும் ராஜ் அஹ் ... ஏற்கனவே சீனியர் தோழர் ராஜ நடராஜன் அவர்களை ராஜ்னு கூப்பிட்டே பழகிடுச்சு , உங்களை இளம் ராஜ்னு அழைத்துக்கொள்கிறேன் அதாவது ஜூனியர் ராஜ் :-))

ஜூனியர் ராஜ்,

வாங்க வணக்கம் நன்றி!

இப்போது இருக்கும் மின் நிலவரத்துக்கே வரும் டிசம்பர் வரையில் 10-12 மணி நேர மின் வெட்டு எனப்போகாது ..மேலும் ஆகஸ்ட்டில் திருவள்ளூர், நெய்வேலியில் புது யூனிட் என செயல்படும் என செய்தி ,எனவே இனிமேல் மின்வெட்டு கூடாது, ஆனால் காற்றாலை மின் உற்பத்தி அப்போ அப்போ சுனங்கும் என்பதால் சில மணி நேர அளவில் மின் வெட்டு நீடிக்க செய்யும்.

மேலும் புதிய மின் நுகர்வோர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கண்டிப்பாக புதிய உற்பத்தி திட்டங்களை அரசு செயல்படுத்தியே தீர வேண்டும், இல்லை எனில் வருங்காலத்தில் பிரச்சினை பெரிதாகும்.

ராஜ நடராஜன் said...

இதென்ன ஆவி ஜூவி மாதிரி சீரா ஜூரா?

வ்வ்வு!பின்னூட்டம் போடறதுலயும் பலன் இருக்கத்தான் செய்யுது.ரூட்டு புடிச்ச்கிட்டு வந்துடறாங்களே!

நெய்வேலி பற்றி ஒரு பதிவு போடனுமென்று படமெல்லாம் க்ளிக்கிட்டு வந்தேன்.புகைப்படம் தடை செய்யப்பட்ட இடம்ங்கிறதால விட்டு விட்டேன்.ஆனால் கீழே வருவதைப் பற்றி நிச்சயம் இங்கே சொல்ல வேண்டும்.

ஊருக்கு மின்சாரம் வேண்டுமென்று அரசாங்கம் கம்பி வடம் போட்டுக்கூட நிலக்கரி எடுத்தா அந்தப் பக்கம் சுத்துற ஆளுக ராத்திரியோட ராத்திரியா செம்புக் கம்பி வடத்தை துண்டு போட்டு வெட்டி பிளாக் மார்க்கெட்டுல வித்துடறாங்க.

இன்னும் மனசு ஆறலையே!பதிவு போட்டுடலாமா?

வவ்வால் said...

ராஜ்,

இன்னிக்கு ரவுண்டு கட்டுறிங்க போல... வாங்க,

ஆமாம் ஜூரானு வந்தன்னிக்கே சொன்னா யார்ரா இவன்னு ஓடீட்டா அதான் விளக்கி வச்சிருக்கேன் இனிமே ஜூரா போட்டுறலாம் :-))

நெய்வேலிக்குலாம் போனிங்களா? இந்தியா வந்ததா பழைய பதிவு படிச்சேன் அப்போவா...சீர்காழி சிவசிதம்பரம், அகதி முகாம் பார்க்க முடியலை, ஐ போன் ரிச்சி ஸ்ட்ரீட்னு கதைத்திருந்தீங்க.

பத்திரிக்கையில் வந்த புகைப்படங்களைப்பயன்ப்படுத்தலாமே.

நெய்வேலி பத்தி சில சமாச்சாரங்கள் தெரியும் ,அதெல்லாம் சொன்னால் சிலருக்கு பாதிப்பு வரலாம்னு விட்டாச்சு.

ஆமாம் கம்பி ,இரும்பு, நிலக்கரி திருட இங்கே பெரிய கும்பலே இருக்கு.இப்போ அந்த ஏரியா எம்.எல்.ஏ வே ஆரம்பத்துல அந்த தொழில் தான் , அதை வச்சு தான் அரசியலில் முன்னேறியதே.

எல்லாக்கட்சியிலும் குட்டி அரசியல்வாதிகள் இதான் செய்யுறாங்க.உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க.எதாவது முன்னேற்றம் வருதா பார்ப்போம்.