(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி)
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி
கொண்டு வந்தானடி காட்டன் பிடி
அதை கூத்தாடி கூத்தாடி
வயலில் போட்டு விதைத்தாண்டி!
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ,ஜிக்கான்!
ஜிக்கான், ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!
மழை பேஞ்சு வயலெல்லாம் தண்ணி,
மச்சான் ஏர்ப்பூட்டி உழுதாரே எண்ணி!
பிடி காட்டனுக்கு இல்லடா போட்டி
அதனால வச்சானே விலையத்தான் கூட்டி!
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கான், ஜிகு ஜிக்கான், ஜிக்கான்!
ராவுனும் பகலென்னும் உழைச்சு
கடன் வாங்கி விதை விதைச்சாண்டி!
கடனுக்கு ஏறுதடா வட்டி
பிடி போட்டவனுக்கோ கிழியுதடா வேட்டி!
நந்தவனத்தில் ஓர் ஆண்டி,அவன்
நாளாறு மாதமாய் மான்சாண்டோவை வேண்டி!
ஜிகு ஜிக்கான் ,ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!
ஜிக்கான் ஜிகு ஜிக்கான்,ஜிகு ஜிக்கான்!
ஹி...ஹி வருங்காலத்தில் பிடி பருத்தி போட்ட விவசாயிகள் எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெம்பிப்போய் " BT -ANTHEM" என இந்த பாட்டை பாடினாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை!
இந்த பாட்டும் விக்கிப்பீடியாவில் இருக்கும்னு சிலப்பேரு நினைச்சிக்கலாம், இது அக்கால பழைய பாடலை ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ரீ - மிக்ஸ் செய்து "" BT -ANTHEM" ஆக உருவாக்கி இருக்கேன் ,நம்ம சமூகத்துக்கு ஏதோ என்னால முடிஞ்ச "கலைச்சேவை" எப்பூடி!
இடைக்குறிப்பு:
விக்கிப்பீடியாவில் எல்லாமே இருக்கு ,அது எங்களுக்கு தெரியாதா என நினைக்கும் அறிவு சீவிகள் வந்தவழியே ரிடர்ன் அடிச்சு விக்கிப்பீடியா தளத்தில் சென்று தேடிப்படித்துக்கொள்ளலாம், நாம் விக்கி முதல் ஏனைய தளங்களிலும் தகவல் வேட்டையாடி இயன்றவரை எளிய தமிழில் சில கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம்,ஏதேனும் புதிதாக அறிந்துக்கொள்ள ஆர்வமும் ,நேரமும் உள்ளவர்கள் மேற்கொண்டு தொடரலாம்!
BT- COTTON:மாயையும்,உண்மையும்!
முந்தையப்பதிவில் பிடி காட்டன் உள்ளே வந்தது, அதற்கு தோன்றிய எதிர்ப்புகளும் ,பின்னர் அவை எவ்வாறு தணிந்தது, பிடி பருத்தியின் இன்றைய சாகுபடி நிலவரம், மேலும் ,சுற்றுச்சூழலுக்கும்,பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசப்பட்டதை அறிவீர்கள், அப்பதிவை படிக்கத் தவறியவர்கள் சோம்பல் படாமல் ஒரு முறைப்படித்துவிட்டு தொடர்ந்தால் சில விவரங்களை புரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும்.
"Bt COTTON"- ஒரு மாற்றுப்பார்வை -1.
இப்பதிவில் முந்தைய பதிவில் லேசாக தொட்டுச்செல்லப்பட்ட சில விவரங்களையும் விரிவான "FLASH BACK" கில் காணலாம்,மேலும் புதிய விவரங்களும் இனி அடுத்துக் காண்போம்
விதை தயாரிப்பும்,காப்புரிமையும்:"FLASH BACK"
பருத்தியின் பூர்வீகம் சிந்து சமவெளிப்பகுதி என அறியப்படுகிறது ,இந்தியர்கள் கி.மு 2000-3000 கால இடைவெளியில் இருந்தே பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் கற்றிருந்தார்கள் என வரலாறு சொல்கிறது.
பந்தாக கம்பளி நூல் காய்க்கும் மரம் இந்தியாவில் உள்ளது என "ஹிரோடட்டஸ்" பருத்தியினை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து பாராசிகம் போய் எகிப்து என உலகமெங்கும் பரவியுள்ளது. தென்னமெரிக்காவிற்கும் சென்றுள்ளது,மயன்களும்,இன்காக்களும் பருத்தி ஆடையே அணிந்துள்ளர்.
பருத்தி பயிரு வச்சது நாமலா இருந்தாலும் பேரு வச்சது அரபியர்களே, காட்டன் என்ற சொல் AL -QUT(U)N" என்ற அரபிச்சொல்லில் இருந்து உருவானது ,அப்படி எனில் நேர்த்தியான துணி அல்லது முழுத்துணி ஆகும்.
அக்காலத்தில் அரேபியர்கள் மூலமே பருத்தி வியாபரம் நடந்ததால், அவர்கள் அப்பெயரில் விற்றுள்ளார்கள் அதுவே நிலைத்துள்ளது.
முற்காலத்தில் விதை தயாரிப்பாளர்கள் என தனியே சிறப்பான நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக இல்லை, விவசாயிகளே பாரம்பரியமாக தாங்கள் விளைவித்தவற்றில் ஒரு பகுதியை விதைக்கு என எடுத்து வைத்துக்கொண்டு பயன்ப்படுத்தி வந்தார்கள்.
காலப்போக்கில் தொடர்ந்து ஒரே பாரம்பரிய வகையினை பயிரிட்டு வந்தமையால் இயற்கையாக ஏற்படும் கலப்பு மகரந்த சேர்க்கை, மேலும் ஒரே பயிர் தொடர் விவசாயம் ஆகியவற்றால் விதைகளின் தூய்மை பாதிக்கப்பட்டு உற்பத்தி திறன் குறையலாயிற்று, எனவே உற்பத்தியை பெருக்க மேம்படுத்தப்பட்ட விதைகளை (High yield hibreeds)அறிமுகப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனை தனிநபர்கள் செய்ய இயலாது எனவே அரசே முன்னின்று மேம்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டது, உடனடியாக பெருமளவு விதை உற்பத்தி செய்ய இயலாது என்பதால் சர்வதேச விதை ஆய்வு மையங்களில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் அறிமுகப்படுத்தியது, ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ,இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் என்றாலும் அவற்றிற்கு காப்புரிமை என எதுவும் இல்லை, ஒரு முறை விதைத்து அறுவடை செய்தபின் ,விளைச்சலில் இருந்தே அடுத்த சாகுபடிக்கு விதை உருவாக்கிக்கொள்ளலாம், அதற்கு தடை ஏதும் இல்லை,இது அக்காலம்.
மேலும் அரசு வேளாண் ஆய்வு மையங்கள், பல்கலைகள் மூலம் அதிக மகசூல் கொடுக்கும் புதிய மேம்பட்ட விதைகள், மேலும் கலப்பின விதைகள் என உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிற்று ,அவற்றிற்கும் காப்புரிமை இல்லை, ஒரு முறை வாங்கினால் போதும் காலமெல்லாம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம்,'royalty free seeds"
ஒவ்வொரு புதிய விதைகளும்,கலப்பின விதைகளும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றதாக இருந்தன ,எனவே அவை மட்டும் அக்குறிப்பிட்ட பகுதிகளில் பரவலாக பயன்ப்பாட்டில் இருந்து வேருன்றின, அக்குறிப்பிட்ட விதைகள் அப்பகுதிகளுக்கான விதைகளாகவும் அறியப்பட்டன.
காலங்கள் உருண்டோடின புதிய விவசாயிகள் நிறைய பெருகினர், சாகுபடி பரப்ப்பு விரிந்தது ,விதை தேவைகளும் அதிகரித்தது, சிலர் முன்னரே பயிரிட்டவர்களிடம் வாங்கி விதைத்தனர், ஆனாலும் எல்லாருக்கும் விதைக்கிடைக்காத நிலை உருவாயிற்று, அப்பொழுது தான் விதைகளை உற்பத்தி செய்து தனியாக விற்கலாம்,அதற்கும் ஒரு சந்தை இருக்கிறது என்பது உணரப்பட்டது.
எனவே சில புத்திசாலி விவசாயிகள் அல்லது தொழில்முனைப்பு கொண்டோர் விதைக்கென பண்ணைகள் உருவாக்கி ,ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் வகைகளையும் பயிரிட்டு விதை பயிராக விற்கலானர், மேலும் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்ப்பட்டதும் மூல விதைகளை வாங்கி கலப்பினம் ஆகிவிடாமல் "தூய்மை பேணீ" விதைகளாக விற்கவும் செய்தார்கள், விதைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கும் பழக்கமும் உருவாயிற்று, இவற்றினை 'சான்றளிக்கப்பட்ட விதைகள்" என்றார்கள். ஆய்வு மையங்கள் உருவாக்கும் விதைகள் "BREEder seed" ஆகும்.
விதை வகைகள்:
BREEDER SEED- ஆய்வு மையங்கள்,வேளாண் பல்கலைகழங்களில் உருவாக்கப்படுவது.
FOUNDATION SEED- பிரீடர் விதைகளை பயிரிட்டு ,விதை உற்பத்தி மையங்களில் உருவாக்கப்படுவது.
CERTIFIED SEED- ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது.
TRUTHFULLY LABLED SEED- சான்றளிக்கப்பட்ட அல்லது ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது, இவையே விவசாயிகளுக்கு பெருமளவு விதைகளாக விற்கப்படுகிறது.
சான்றளிக்கப்பட்ட விதைகளும் விவசாயிகளுக்கு பயிரிட விற்கப்படும் விதையே ,ஆனால் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் ஏன் எனில் ஒரு மத்திய விதை சான்றளீக்கும் நிறுவனத்தால் "சான்றளிக்கப்பட வேண்டும்" மேலும் தரமும் கூடுதலாக இருக்கும்.
ட்ருத்ஃபுல்லி லேபிள்டு விதை என்பது சான்றளிக்கப்பட்ட விதை தரத்தில் தயாரிக்கப்பட்டு ஆனால் அரசு சான்று பெறாமல் ,விதை தயாரிப்பு நிறுவனத்தாலேயே " இது நல்ல விதை" என உறுதி அளிக்கப்பட்ட ஒன்று, கொஞ்சம் முளைப்பு திறன் & தூய்மையின் தரம் குறைவாக இருக்கலாம்,எனவே விலை கம்மியாக இருக்கும்.இவ்வகையே விவசாயிகளுக்கு அதிகம் விற்கப்படுகிறது.
இவ்வாறு விதை உற்பத்தி என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பாக உருவாயிற்று,ஆனால் அப்பொழுதும் "காப்புரிமை" என்ற ஒன்று பெயரளவில் இன்னார் தான் தயாரிச்சவர் என்ற "கிரெடிட் " கொடுக்க மட்டுமே ,ராயல்டி வழக்கம் உருவாகவில்லை, எல்லாமே "ஓபன் சோர்ஸ்" தான்.
கி.பி 1988 இல் உலக வர்த்தக ஒப்பதங்களின் காரணமாக இந்தியாவில் பன்னாட்டு விதை தயாரிப்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நுழைந்தார்கள்.2001 இல் உலக வர்த்தக மையத்தின் வழிக்காட்டுதல் அல்லது கட்டாயப்படுத்தல் காரணமாக, உருகுவே மாநாட்டுக்கு பின்னர் விதை காப்புரிமை ஒப்பந்தத்தில் இந்திய கை ஒப்பமிட்டது.
இதன் மூலம் விவசாயிகள் அல்லது இந்திய நிறுவனங்கள், தன்னார்வ குழுக்கள் வைத்துள்ள ,பாரம்பரிய விதைகளையும் ஒரு ரகமாக பதிவு செய்து காப்புரிமை கோரலாம் என சொல்லப்பட்டாலும்,வழக்கம் போல இந்தியாவில் எந்த விவசாயி போய் விதைக்காப்புரிமை வாங்க போகிறான்,பெரும்பாலும் அப்படி கோரப்படவேயில்லை, முன்னணியில் இருந்த தனியார் நிறுவனங்கள் அது வரையில் சந்தைப்படுத்திய விதை ரகங்களை அவர்களின் பெயரில் பதிவு செய்துக்கொண்டது தான் நடந்தது.
இப்பவும் ஒரு விவசாயி தனது விதையினை தான் மட்டுமே பயிரிடுகிறேன் ,தனித்துவமானது என சமர்ப்பித்து ,அதற்கு எதிர்ப்பு இல்லை எனில் காப்புரிமை சான்று பெறலாம்.
தற்சமயம் விதைகள் எல்லாம் காப்புரிமையாக்கப்பட்டு , விதைகளின் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில் ,விதை வாங்கும் விவசாயிகளை காக்கவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விதை நிறுவனங்கள் அளித்த உத்தரவாதத்திற்கு ஏற்ப உற்பத்தி செய்யவில்லை எனில் இழப்பீடு பெற்று தர ஒரு அமைப்பினை "Birsa Agriculture University at Kanke" உருவாக்கியுள்ளது,இவ்வமைப்பில் சேர்ந்து இழப்பீடு பெறலாம். தற்சமயம் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா, சத்தீஷ்கர், அந்தமான் தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சுட்டி:
http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office
இதில் கவனிக்க தக்கது என்னவெனில் காப்புரிமை வரும் வரையில் இந்திய தனியார் விதை உற்பத்தியாளர்கள் யாரும் பீரிடர் விதை ஆய்வில் ஈடுபட்டதாகவோ, அல்லது தயாரித்ததாகவோ அறியப்படவில்லை, ஆனால் ஆய்வு செய்து விதைகள்ள் உருவாக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டு பெரும்பாலும் அவர்கள் பிரீடர் விதைகளை வாங்கி தான் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள்,சிலர் பேக் கிராசிங் செய்து ஒரு வகையாக உருவாக்கி வைத்திருந்தார்கள்,ஆனால் பல மடங்கு விதைகளாக்கி விவசாயிகளுக்கு விற்கும் போது ஒரு "டிரேட் நேம்" போட்டு விற்பது வழக்கம், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சில குறிப்பிட்ட விதைகள் சில குறிப்பிட்ட விதை தயாரிப்பாளர்களின் "டிரேட் நேம்" பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.
உதாரணமாக , கி.பி.1963 இல் டெல்லியில் நடந்த விவசாயக்கண்காட்சியில் 100 கிராம் Pusa Saoni bhendi (lady's finger) விதையை சாம்பிளாக வாங்கி வந்து அதனை வளர்த்து பல மடங்கு விதைகளாக்கி தான் முதன் முதலில் மாகிகோ விதை விற்பனையை ஆரம்பித்தது. பின்னர் அவர்களின் டிரேட் நேம் பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.
இப்படி காப்புரிமை இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக விதை கிடைக்கும் சூழல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உருவாகும் காலம் வரையில் தான் இருந்தது, விதைக்காப்புரிமை என்ற கொள்கையை தூக்கிப்பிடிக்க காரணமே பன்னாட்டு நிறுவனங்களின் "மரபணு மாற்ற ஆய்வுகளே' ஆகும்.
எதுக்கு இந்த வரலாறு என சலிப்படையலாம், ஆனால் விதைகள் உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏன் பலத்த போட்டியிடுகின்றன என்பதை புரிந்துக்கொள்ள இந்த அடிப்படை தகவல்கள் உதவும். ஏன் எனில் காப்புரிமை என்ற பெயரில் கிடைக்கும் ராயல்டி தொகை என்பது நோகாமல் நோம்பு கும்பிடும் ஒரு நுட்பம் ஆகும், ஒரு முறை தயாரித்து விட்டால் போதும் அப்புறம் தொடர்ந்து ராயல்டி ராஜலக்ஷ்மி வாசக்கதவை தட்டி துட்டக்கொட்டுவாள் :-))
மேலும் இந்தியா எப்பொழுதுமே விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள ,விதை தேவை அதிகம் உள்ள நாடு ஆகும், இங்க மார்க்கெட்டினை பிடித்து விட்டால் ,அப்புறம் வாழ்நாளெல்லாம் கவலையே இல்லை, நாம ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஆவோம்.
இந்தியாவில் எப்போவோ யாரோ தயாரித்த பாரம்பரிய விதைகளின் காப்புரிமை எல்லாம் மாநில வாரியாக பல தனியார்கள் கைகளில் சிக்கிய நிலையில், பல சர்வதேச விதை நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்து செயல்ப்பட ஆரம்பித்தந்தன , அவர்களின் கலப்பின விதைகளையும் நம்ம ஊர் விதை வியாபாரிகளே விநியோகம் செய்து வந்தார்கள், ஆனால் 2001 க்கு முன்னர் ராயல்டி என்ற பிரச்சினை இல்லாமல் கமிஷன் அடிப்படையில் வியாபாரம் நடந்தது, மேலும் விவசாயிகளும் நினைத்தால் அவர்களே சாகுபடியில் இருந்து விதைகளாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம் இந்நிலையில் காப்புரிமை என்பது உறுதியானதும் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டு காத்திருந்த சர்வதேச விதை தாதா மான்சான்டோ வியாபார களத்துக்குள் வருகிறார். தனது பிடி தொழில் நுட்ப விதைகளை தனியாக விற்கப்பார்க்க , ஏற்கனவே கமிஷனில் விதை விற்றுக்கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் கூட்டாளிகளான இந்திய வியாபாரிகளுக்கும் சிக்கல், பிடி விதையை பூச்சியே தாக்காது, பூச்சி மருந்து வேண்டாம் என சொல்லி விற்றுவிட்டால்,நம்ம விதை விற்காதே எனவே , பீடி வந்தால் நாடே அழிந்துவிடும் என முதலில் எதிர்ப்பை கிளப்பிவிட்டு ஆரம்பத்தில் கன ஜோராக எதிர்ப்பரசியல் செய்ய வைத்தார்கள். இதற்கு மற்ற பன்னாட்டு விதை நிறுவனங்களும் உடந்தை. சர்வதேச சந்தையிலும் பிடி தயாரிக்காத நிறுவனங்கள்,பிடி தயாரிக்கும் நிறுவனங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டே தான் இருக்கின்றன.
இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு விதை நிறுவனங்கள்;பிடி யுகம்!
இப்போ திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட் ஆக மோன்சான்டோ மகாராஷ்ராவை சேர்ந்த மாகி கோவின் மூல நிறுவனத்தின் 26% பங்குகளை வாங்கி முதலீடு செய்வதோடு அல்லாமல்,மரபணு மாற்று விதைகளுக்கென்றே பிரத்யோகமா 50:50 மூலதன பங்கில் "மாகிகோ- மோன்சான்டோ பயோ டெக் இந்தியா" என உள்நாட்டு கூட்டு நிறுவனமாக அவதாரம் எடுத்து விடுகிறது. மகாராஷ்ட்ராவை பிடிக்க காரணம் ,அம்மாநிலம் தான் இந்தியாவிலே அதிக பருத்தி உற்பத்தி செய்யும் ,மாநிலமாகும், அதோடு இல்லாமல் மற்ற உள்நாட்டு வியாபாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி மற்ற பன்னாட்டு நிறுவனங்களை விட்டுவிட்டு வந்துவிடுங்கள், எங்க பிடியை விற்றால் நல்ல மார்ஜினில் லாபம் வரும் வகையில் ஒப்பந்தம் போடலாம் என பேசி மடித்துவிட்டது.
தற்போதைய நிலையில் 450 கிராம் பிடி பருத்தி விதை பாக்கெட்டின் விலை சுமார் 980 ரூ, இதற்கு ராயல்டி கட்டணமாக 225 ரூவை மோன்சாண்டோவிற்கு உள்ளூர் தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும், மிச்ச தொகை முழுவதும் நம்ம ஆட்களுக்கு.
முன்னர் மிக உயர்வான வழக்கமான கலப்பின பருத்தி விதைகளின் விலை ரூ 400-500 மேல் எக்காலத்திலும் போனதில்லை. எனவே அவற்றினை விற்கும் போது பெர்சேன்டேஜில் கமிஷன் பெரிதாக கிடைக்கவில்லை, இப்பொழுது பிடி பருத்திக்கு இரண்டு மடங்கில் விலை , மார்ஜினும் அதிகம் என்பதால் வியாபாரிகளும் மோன்சான்டோவை ஏகமாக ஆதரிக்க துவ்வங்கிவிட்டார்கள்.
தற்சமயம் சுமார் 150 நிறுவனங்கள், மான்சான்டோ உடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு 600 வகையான பெயர்களில் பிடி பருத்தி விதைகளை விற்று படுத்தி எடுக்கிறார்கள் இந்திய விவசாயத்தை!
இப்படித்தான் சுமார் பத்தாண்டுகளில் 94.75% பருத்தி சாகுபடி பரப்பினை மோன்சான்டோ விதைகளே ஆக்ரமித்தது. ஆண்டுக்கு சுமார் 4 கோடி விதை பாக்கெட்டுகள் ,அதாவது சுமார் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, அமெரிக்காவில் கூட மோன்சான்டோவிற்கு இவ்வளவு பெரிய சந்தையில்லை.
உலக அளவில் பல நாடுகளிலும் எதிர்ப்புகள், வழக்குகள்,நஷ்ட ஈடுகள் என அடிவாங்கிக்கொண்டு , அதன் பங்கு சந்தை மதிப்பு கூட சரிய ஆரம்பித்துள்ளது ,ஆனால் இந்தியாவில் பலமாக காலூன்றி சக்கைப்போடு போடுவதால் நட்டத்தையும் தாங்க முடிகிறது, இந்திய வருவாய் இல்லை எனில் இன்நேரம் மூடுவிழாக்கூட கண்டிருக்கலாம்.
மேலும் மோன்சான்டோ இந்தியாவில் நுழைந்த காலத்தில் உலக அளவில் 50 நிறுவனங்கள் பிடி பருத்தி நுட்பத்தினை கையில் வைத்திருந்தன, இன்று சுமார் 150 நிறுவனங்களுக்கு அது சாத்தியம்,ஆனால் வேறு எந்த நிறுவனத்திற்கும் இந்தியாவில் அனுமதி அளிக்காமல் மோன்சான்டோவிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது, இன்று வரையில் வேறு யாரும் நுழைய விடாமலும் பார்த்துக்கொள்ளப்படுகிறது, மகாராஷ்ட்ரா நிறுவனத்தின் பின் புலமும்,சில அரசியல் சக்திகளுமே "மான்சான்டோவிற்கு " இத்தகைய தனிசிறப்பு சலுகையை வழங்கி வரக்காரணமாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது,இதனைப்பற்றி வெளிப்படையாக"Centre for Cellular and Molecular Biology (CCMB) former director Pushpa M Bhargava" என்பவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
செய்தி:
//He wanted to know why the central government allowed only Monsanto to produce the Bt seed when there were more than 50 seed companies that had the capacity to do so.
He appealed to the farmer leaders and farmers to be cautious about the usage of Bt seed as it would not only damage the crops but the environment as well.//
சுட்டி:
http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava
இம்முறையினால் மோன்சான்டோவிற்கு கொள்ளை லாபம் எப்படி எனில் மாகிஹோ மூலம் மட்டுமே சுய தயாரிப்பு பிடி விதைகள் ,பிற தயாரிப்பாளர்களுக்கு பிரீடர் சீட் மட்டும் கொடுக்கும்,அதனை ஏற்கனவே காப்புரிமை பதிவு செய்து வைத்துள்ள இந்திய பருத்தி விதைகளுடன் கலப்பினம் செய்து புதிய "பிடி ரகமாக " மாற்றிக்கொள்ள வேண்டும் தொழில்நுட்ப உதவி மட்டுமே அளிக்கும், பின்னர் அதில் இருந்து லேபிள்டு சீட் உற்பத்தி செய்து விற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு பாக்கெட்டு 225 ரூ ராயல்டி கொடுத்து விட வேண்டும்.
இதில் உள்ள தந்திரம் என்னவெனில் மான்சான்டோ வசம் காப்புரிமையே இல்லாத விதைகளிலும் பிடியை புகுத்தி அவற்றை பிடி காப்புரிமை என சொந்தம் கொண்டாடிக்கொள்வதாகும், சில காலம் போனபின்னர் பிடி கலக்காத இந்திய விதையே இல்லாத சூழலில் நம்ம விதை தயாரிப்பாளர்களுக்கு "விதை என சொல்லி ' விற்க ஒரு மூலப்பொருளே இல்லாமல் போய்விடும்,எல்லாமே மோன்சான்டோவின் காப்புரிமை வளையத்தில் சிக்கி இருக்கும்.
விதை உற்பத்தியில் அரசின் மெத்தனம்:
உணவு தானிய விதைகளை "high volume, low value seeds" என்கிறார்கள் ,அப்படி எனில் மிக அதிக விதைகள் உற்பத்தி செய்ய வேண்டும் ,ஆனால் விலை குறைவாக விற்கப்படுபவை, இவற்றில் நிறைய லாபம் கிடைக்காது. பருத்தி போன்ற பணப்பயிர்களின் விதைகளை "low volume ,high value seeds" என்கிறார்கள் , அதாவது குறைவான அளவு விதை உற்பத்தி ,ஆனால் அதிக விலைக்கு விற்கப்படுவை,எனவே லாபம் அதிகம் கிடைக்கும்.
இதனாலே தனியார் நிறுவனங்கள் பருத்தி,பிடி பருத்தி விதை உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இவர்களுக்கு மறைமுகமாக அரசு எந்திரமும் ஒத்துழைக்கிறது, தற்பொழுதெல்லாம் அரசு விதை நிறுவனங்களோ, வேளாண் பல்கலைகளோ பருத்தி விதை உற்பத்தியில் கவனம் செலுத்துவதையே குறைத்துக்கொண்டன,பல இடங்களில் விதை உற்பத்தி மையங்களை மூடவும் செய்துவிட்டார்கள்.
கோவை மாவட்டம்,பொங்கலூரில் 57 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மாநில அரசு விதைப்பண்ணை இயங்கி வந்தது, பல வகை சான்றளிக்கப்பட்ட பருத்தி ஹைபிரிட் விதைகளை உற்பத்தி செய்து பெருக்கி மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வெற்றிகரமாகவே இயங்கியது.காலப்போக்கில் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு சாதகமாக அரசாலேயே ஓரங்கட்டப்பட்டு இன்று பாழடைந்து கிடைக்கிறது, அரசுக்கு விதை உற்பத்தியில் உள்ள ஆர்வத்திற்கு இதுவே சான்று!
சுட்டி:
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/efforts-to-revive-57yearold-seed-farm/article4417172.ece
மரபணு மாசு :
இவ்வாறு திட்டமிட்டு மரபணு மாற்றத்தினை அனைத்திலும் புகுத்துவதை "மரபணு சூழல் சீர்க்கேடு" என்கிறார்கள். எப்படி காற்றில் கரியமிலவாயு கலப்பது சுற்று சூழல் சீர்க்கேடோ அப்படியே மரபணு கலப்பாக அனைத்தையும் மாற்றுவதையும் சீர்க்கேடு என்கிறார்கள், பழைய பாரம்பரிய மூல விதைகளே இல்லாத நிலையில் இச்சீர்கேடு திரும்ப சரி செய்ய இயலா நிலையை அடையவும் கூடும், எனவே தான் பாரம்பரிய விதைகளை காக்க வேண்டும் என பல இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
செய்தி:
Monsanto is a ticking time bomb for U.S. agriculture
As the USDA has now admitted, Monsanto's GMO experiments from 1998 - 2005 were held in open wheat fields. The genetically engineered wheat escaped and found its way into commercial wheat fields in Oregon (and possibly 15 other states), causing self-replicating genetic pollution that now taints the entire U.S. wheat industr//
சுட்டி:
http://www.naturalnews.com/040572_japan_ge_wheat_genetic_pollution.html
பாரம்பரிய விதை வங்கி:
இவ்வாறு மரபணு மாசு செய்வதன் இன்னொரு உள்நோக்கம் என்னவெனில் ,பிற்காலத்தில் மரபணு மாற்றிய பயிர்களை விதைக்காத விவசாயிகளின் வயலில் இருக்கும் பயிர்களின் விதையும் எங்களுடையதே என சொல்லி ராயல்டி கேட்டு மிரட்டலாம்!
இந்தியாவிலும் பிடி இல்லாத பருத்தி விதைகளை பாதுகாத்து பயிரிட சில தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
வட கர்நாடக மாநிலம், மகரி என்ற கிராமத்தினை சேர்ந்த விவசாயி "Nagappa Nimbegundi"(52) என்பவர் பிடி பருத்தியில் ஊடுபயிராக காய்கறிகளை பயிரிட்டால் சரியாக விளையாததை கண்டு , சாதாரண பருத்தி பயீரிட முயன்றுப்பார்க்கலாம் என நினைத்த பொழுது விதைகளே கிடைக்கவில்லை என்பதை அறிது பின்னார் தேடிப்பார்த்து விதைகள் வாங்கி பயிரிட்டுள்ளார், அப்பொழுது தான் பிடி பரவலால் பாரம்பரிய விதைகள் அழியும் நிலையில் உள்ளது என உணர்ந்து ,இந்தியா முழுவதும் சென்று 13 பழமையான பருத்தி வகைகளையும், 11 பிடி அல்லாத வகைகளையும் கண்டுப்பிடித்து சேகரித்து , பாரம்பரிய விதை வங்கியினை உருவாக்கியுள்ளார்.
செய்தி:
//W DELHI: For 52-year-old Nagappa Nimbegundi, a farmer from Makari village in North Karnataka, this Independence Day was special. After three years of relentless efforts, he has managed to revive 13 varieties of indigenous cotton and 11 other varieties of non-Bt cotton in his farm.
The seed bank that he is developing is of significance as 90% of cotton production in India has been taken over by Bt cotton, a genetically modified variety developed by an American company. Indigenous varieties have become virtually non-existent and are difficult to find even at research institutions.//
சுட்டி:
http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi
இது போன்று மேலும் பல தன்னார்வலர்கள் சுய முயற்சியில் பல பாரம்பரிய விதைகளை மீட்டு பயிரிட்டு ,பாரம்பரிய விதை வங்கிகளை நடத்துகிறார்கள்.
மேலும் பிடி பருத்தியின் மூலம் பிற தாவரங்களிலும் பிடி கலப்பினம் இயற்கையாக நேரிடலாம், இதனால் பொதுவாக தாவர உயிர்ச்சூழலில் "மரபணு மாசு" ஏற்படலாம்.
அரிசியில் "மரபணு மாசு" ஏற்படுத்திவிட்டதாகா "பேயர்" நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு ,750 மில்லியன் டாலர்கள்,நஷ்ட ஈடு பெறப்பட்டுள்ளது.
ஆனால் இம்மாதிரி நம்ம நாட்டில் எளிதில் வழக்கு நடத்தி நட்ட ஈடு பெற முடியாது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக போய்விட்டது!
செய்தி:
while in 2006 a large part of the U.S. long-grain rice crop was contaminated by an experimental strain from Bayer CropScience , prompting import bans in Europe and Japan.
The company agreed in court in 2011 to pay $750 million to growers as compensation.//
சுட்டி:
http://www.dailymail.co.uk/news/article-2333381/GM-wheat-crops-America-facing-wheat-export-crisis-Europe-Japan-lead-way-rejecting-genetically-modified-crops.html
#அமெரிக்காவில் இவ்வாறு கோதுமையில் அனுமதியின்றி மரபணு கலப்பினை செய்துவிட்டதாக "மோன்சான்டோ" மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
//The U.S. Judicial Panel on Multidistrict Litigation announced that at least 16 lawsuits will be sent to U.S. District Judge Kathryn Vratil in Kansas City for pretrial evidence gathering.
Lawsuits started to be filed in June after an Oregon farmer found wheat that would not die in his field. After the wheat was tested, it was discovered that it contained a gene that allowed it to withstand Monsanto’s herbicide glyphosate.
Monsanto had previously field tested a Roundup Ready wheat variety 15 years prior. It remains unknown how the GM variety got into the field since trials haven’t been conducted for many years after Monsanto abandoned the project after trading countries would not accept such wheat.
The GM wheat discovery this year caused multiple wheat importers to stop importing wheat from the United States for several weeks, dropping the price of U.S. wheat.//
சுட்டி:
http://www.agprofessional.com/news/GM-wheat-lawsuits-to-be-consolidated-in-Kansas-City-228392511.html
அமெரிக்க அரசும் மரபணு கோதுமையை பொது வயலில் பயிரிட அனுமதியே தரவில்லை என சொல்லியுள்ளது, அமெரிக்க கோதுமையில் மரபணு கலப்பு இருக்கலாம் என சந்தேகித்து ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமெரிக்க கோதுமை இறக்குமதியை தடையும் செய்துள்ளது.
# ஹங்கேரியில் அரசுக்கே தெரியாமல் 1000 ஏக்கரில் மோன்சான்டோ மரபணு மாற்ற மக்காசோளத்தினை பயிரிட்டுள்ளது கண்டறியப்பட்டு அரசால் அழிக்கப்பட்டு , ஒட்டுமொத்தமாக தடையும் விதித்துள்ளார்கள், இதெல்லாம் 2011 இலேயே நடந்துவிட்டது.
செய்தி:
Almost 1000 acres of maize found to have been grown with genetically modified seeds have been destroyed throughout Hungary deputy state secretary of the Ministry of Rural Development Lajos Bognar said. The GMO maize has been ploughed under, said Lajos Bognar, but pollen has not spread from the maize, he added.
Unlike several EU members, GMO seeds are banned in Hungary. The checks will continue despite the fact that seed traders are obliged to make sure that their products are GMO free, Bognar said.//
சுட்டி;
http://www.foodfirst.org/en/Hungary+destroys+GMO+corn
#
இதன் எதிரொலியாக இந்திய அரசும் அமெரிக்காவில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து விட்டது. ஏன் எனில் பெரும்பாலும் "அறிவிக்கப்படாமல் மரபணு தானியங்களை" பதப்படுத்தப்பட்ட உணவில் கலப்பது "அமெரிக்க வியாபார தந்திரமாகும்". கண்டிப்பாக மரபணு தானியங்கள் பற்றி உணவு பாக்கெட் லேபிளில் குறிப்பிட வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் விதி இருக்கு,ஆனால் அமெரிக்காவில் அது கட்டாயமில்லை. அவ்வாறு கட்டாயமாக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செய்தி:
//No import nod for GM processed food items till March 2014
NEW DELHI: The Union environment ministry has issued an order keeping in abeyance the controversial August, 2007 notification, which allows import of genetically modified (GM) processed food items into India without its prior permission, till March 31, 2014.//
சுட்டி:
http://articles.timesofindia.indiatimes.com/2013-10-25/india/43394778_1_gm-food-crops-ministry-final-order
உலகெங்குமே மரபணு மாற்று தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புகள் உள்ள நிலையில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடு தேவையே இல்லாமல் முழு அளவில் "மரபணு மாற்றத்தொழில்நுட்பத்தினை "பின்ப்பற்ற என்ன தேவை?
மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் வந்தால் தான் உணவுப்பஞ்சம் தீரும்,அனைவருக்கும் உணவு மலிவாக கிடைக்கும் என்கிறார்கள்,ஆனால் இத்தொழில்நுட்பமோ உற்பத்தியை பெருக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்படவில்லை, பூச்சிக்கொல்லியாகவும்,"கிளைப்போசைட், ரவுண்ட் அப்" போன்ற களைக்கொல்லி தாங்கு சக்தியை உருவாக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவோ, ஊட்டச்சத்து மிக்கதாகவோ உணவுப்பொருட்கள் மாறவேயில்லை என்பதே நிதர்சனம், தொடர்ந்து அவற்றையும் காண்போம்.
-------------------------
விதை நிறுவனங்களின் அறம்:
இந்தியாவில் பருத்தி சாகுபடியில் மாகாராஷ்ட்ரா,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா ,தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் விதை உற்பத்தியில் ஆந்திர மாநிலமே முன்னணியில் உள்ளது, இந்தியாவின் விதை உற்பத்தி தலைநகரம் என அழைக்கப்படுகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளின் நிலங்களில் விதை உற்பத்தியில் ஈடுபடுகின்றன, மலிவான கூலியில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியுள்ளன.
இதில் பெரிய கொடுமை என்னவெனில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "குழந்தை தொழிலாளிகள்"ஆகும். சுமார் 6 முதல் 16 வயதிற்குற்பட்ட சிறார்களை,அதிலும் குறிப்பாக பெண் சிறார்களை கிராமங்களில் இருந்து பிடித்து வந்து பண்ணையில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்குகிறார்கள், தினசரி சம்பளம் வெறும் 20 ரூபாய்களே ஆனால் வேலை நேரமோ 16 மணி நேரத்திற்கு குறையாத அளவில்.
பருத்தி சாகுபடி என்பது மிக அதிகமாக பூச்சி மருந்து,களைக்கொல்லி என புழங்கும் இடம் அவற்றின் ஊடே பணி புரிவதால் பல சிறார்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
ஆந்திராவில் மட்டும் பன்னாட்டு நிறுவன சார்பாக ஒப்பந்த தொழிலார்களாக உள்ள சிறார்களின் எண்ணிக்கை நிறுவனங்கள் வாரியாக.
Hindustan Lever Ltd.- 2,500 ஏக்கர்- 22,500 சிறார்கள்.
Syngenta - 650 ஏக்கர் - 5,850சிறார்கள்.
Advanta -300 ஏக்கர் - 2,700 சிறார்கள்
Mahyco-Minsanto -1,700 ஏக்கர்- 15,300 சிறார்கள்
Proagro- 200 எக்கர் - 1,800,சிறார்கள்
Total ஏக்கர் -5350
மொத்த சிறார்கள் - 48,150.
பன்னாட்டு விதை நிறுவனங்கள் லாபத்திற்காக விவசாயிகளின் இயல்பான விதை உரிமைகளை மட்டும் பறிக்கவில்லை, சட்டத்திற்கு புறம்பாக குழந்தை தொழிலாளர்களையும் பயன்ப்படுத்தி வருகின்றன, ஆனால் அவர்களை நேரடியாக குற்றம் சட்டமுடியாத படி இதனை எல்லாம் ஒப்பந்த விவசாயிகளைக்கொண்டு நடத்துகின்றன, சட்டப்படி அவர்களுக்கும் ,இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நழுவி விடுவார்கள்.
சுட்டி:
கீழ்கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தளத்தில் மேலதிக தகவல்கள் உள்ளன.
http://www.indianet.nl/cotssec2.html
மரபணு மாற்றத்தின் யதார்த்த நிலை:
ஒரு மரபணு மாற்றம் எனப்படுவது ஒரு மூல உயிரியில் இருந்து தேவைப்படும் மரபணுவை மட்டும் வெட்டி , தேவைப்படும் உயிரியில் ஒட்டுவதாகும்.
வெட்டுவது கூட சரியாக வெட்டிவிடலாம்,ஆனால் ஒட்டும் இடத்தில் சரியாக தேவையான இடத்தில் ஒட்ட இயலாது,தோராயமாகவே ஒரு இடத்தில் நுழைக்க முடியும், அவ்விடம் உண்மையில் நமக்கு தேவையான மாற்றத்தினை தரக்கூடிய மரபணு தொடர் வரிசையாக இருக்கும் என சொல்லவும் முடியாது. காரணம் ஜீனோம் சீக்கவன்சில் அறியப்பட்ட மரபணுத்தொடர்களை விட அறியப்படாத "ஜங்க்" எனச்சொல்லப்படும் மரபணுத்தொடர்களே அதிகம் உள்ளது.
இதன் விளைவாக மரபணு மாற்றம் உரிய விளைவை "உருவாக்கப்பட்ட உயிரியில்" தரும் என சொல்ல முடியாது, நூற்றுக்கு 90 சதவீதம் போல மரபணு மாற்ற வினை தோல்வியாகவே அமையும், வெற்றிகரமாக நடந்தவையும் சிறப்பான விளைவை தருமா என்பதும் கேள்விக்குறியே.
# மேலும் எல்லா உயிரியிலும் என்னவென்று அறியாத 'ஜன்க் டி.என்.ஏ" நிறைய உள்ளன, இவற்றுடன் பிடி மரபணு வினைப்புரிந்தால் என்னவாகும் என யாருக்கும் தெரியாது, ஒரு வேளை விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.
பெரும்பாலும் "ஆபரேஷன் சக்சஸ்,பேஷன்ட் டெட்" கதை தான்!
# மிக நுண்ணிய மரபணுவில் ,தோராயமாக மரபணு மாற்றம் செய்யப்படுவது கண்ணை மூடிக்கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்வது போலத்தான்.
# மரபணு மாற்ற உயிரியில் ஒரு குறிப்பிட்ட பண்பினை உருவாக்கி தொடர்ந்து அதனையே பயிர் செய்வதன் மூலம், ஒரே வகையான நோய்,பூச்சி என்ற நிலை உருவாகி, அதன் எதிர்ப்பு தன்மையும் குறைந்து ,பின்னர் சாதாரண பூச்சி,நோய் தாக்குதலுக்கே கடும் விளைவை தரக்கூடும்.
எனவே எதிர்ப்பு தன்மை குறைந்த ஒரு உயிரி சூழல் உருவாகிவிடும்.
# மரபணு மாற்றத்தின் போது , பேக்ட்ரீயா, மற்றும் பூஞ்சைகள் தொற்றினை தாவரங்கள் தாக்கு பிடிக்க வேண்டும் என ஆன்டி பயாடிக் ரசாயனங்கள் பயன்ப்படுத்தப்படும், எனவே மரபணு மாற்ற பயிரில் உருவாகும் நுண்ணுயிர்களும் ஆன்டி பயாடிக் எதிர்ப்பை வளர்த்துக்கொள்ளும், எனவே மரபணு மாற்ற பயிர்கள் மூலம் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் ,ஆண்டி பயாடிக் மருந்து கொடுத்தாலும் மனிதருக்கு நோய்கள் குணமாகாது.
# ஒரு பூச்சி மருந்து ,பூச்சியினை கொல்கிறது, அதே மருந்தை மனிதர்கள் உட்கொண்டால் அவர்களும் இறப்பார்கள் என்பது உண்மை.
அதே போல பிடி டாக்சின் புரதமான கிரை-3ab உட்கொண்டால் ,காய் துளைப்பான் இறக்கிறது.
இப்பொழுது கிரை 3ab டாக்சின் கொண்ட அதே தாவரப்பகுதியை மனிதன் உண்டால்,அதில் உள்ள நஞ்சு மனிதனை பாதிக்காதா? ஒரு பூச்சியை கொல்லும் எனில் அது மனிதனையும் கொல்லும், அல்லது பாதிப்பாவது கொடுக்கும் என்பதே நிதர்சனம்.
எலி மருந்து வைத்து எலியை கொல்கிறோம், விஷம் தோய்ந்த அவ்வெலியை பூனை சாப்பிட்டால் பூனைக்கு நஞ்சு போகாதா?
இங்கே தாவரத்திலேயே தோய்ந்த பிடி டாக்சின் புரதமும் அப்படியானதே.
# பிடி டாக்சின் புரதமானது மனித செரிமான அமைப்பால் சிதைக்கப்பட இயலாத ஒரு புரதமாகும், எனவே உயிரினை கொல்கிறதோ இல்லையோ ஒவ்வாமையை பெரும்பாலும் உருவாக்கிவிடும்.
உணவில் பிடி நஞ்சு: பிடி பருத்திப்பால் அபாயம்!
கனடாவில் கருவுற்ற பெண்களின் இரத்த மாதிரியில் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது, மேலும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது.
அவர்களை விசாரித்த போது அவர்கள் ,மரபணு மாற்றப்பட்ட சோயா பீன், உருளை, மக்காச்சோளம்,பருத்தி எண்ணையிலான உணவை உண்பது தெரிய வந்துள்ளது,எனவே மரபணு விதையில் இருந்து பிடி டாக்சின்கள் உடலுக்குள் சென்றுள்ளது உறுதியாகிறது. இவ்வாய்வு முடிவுகளை "the journal Reproductive Toxicology இலும் வெளியாக தேர்வு செய்யப்பட்டதாம்.
நமது செரிமான அமைப்புகளால் செரிக்கப்படாத பிடி டாக்சின்கள் ரத்தத்தில் கலந்து அப்படியே அழியா நிலையில் பிளாஸ்டிக் போல உடலில் சுற்றி வந்துக்கொண்டிருந்துள்ளது.
வழக்கமாக தாவரத்தின் மீது செலுத்தப்படும் பூச்சிக்கொல்லியின் எச்சம் அதன் விதைகளிலேயே அதிகம் சேகரமாகும், அதே போல பிடி டாக்சின்களில் எச்சமும் பிடி பருத்தியின் விதையில் தான் அதிகம் இருக்கிறதாம்.
பருத்தி எண்ணையாவது சமைக்கும் போது நன்கு கொதிக்க வைக்கப்படுகிறது,அப்படியும் பிடி டாக்சின் சிதையவில்லை, நம் நாட்டிலோ பருத்திப்பால் என பருத்திக்கொட்டையில் இருந்து எடுத்து அருந்துகிறோம்,அவை அந்த அளவு முழுக்க வேகவைப்பதோ சூடுப்படுத்தப்படுவதோ இல்லை எனவே மிக நன்றாக பிடி டாக்சின்கள் அழியாமல் முழு வடிவில் இருக்கும், அவற்றை தொடர்ந்து பருகினால் பிடிடாக்சின்கள் உடலில் சிறுக சிறுக சேர்ந்து ஒரு காலத்தில் "chronic poison'" ஆகி பெரும் பின் விளைவை உண்டாக்கலாம். எனவே பெரும்பான்மை பிடி பருத்தி பயிரிடும் இக்காலத்தில் "பிடி பருத்திப்பால்" தான் கிடைக்கும் அதனைக்குடிப்பதும் அபாயமான ஒன்றாகிவிட்டது எனலாம். பிடி பருத்தி மூலம் செய்யப்படும் அல்வாவுக்கும் இதே நிலை தான்.
வருங்காலத்தில் இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய உணவு என அறிவிக்கப்படும் நிலை கூட வரலாம்.
பிடி டாக்சின் புரதம் என்பது விஷத்தன்மையே இல்லாத ஒன்றாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் ,அவை உடலுக்கு தேவையில்லாத ஒரு பொருள், பிளாஸ்டிக் குப்பைகள் போல ரத்தத்தில் சேர்ந்து அழியாமல் தொடர்ந்து குவிந்துக்கொண்டே இருந்தால் ஒரு எல்லையில் கடும் விளைவை உண்டாக்க நிச்சயம் வாய்ப்புண்டு.
# அதே போல பிடி பருத்தி விதைகள் மாட்டிற்கு தீவனமாக அளிக்கப்படுகிறது ,மாட்டின் ஜீரண மண்டலத்தாலும் பிடி டாக்சின் புரதம் செரிக்கப்படுவதில்லை, அழியாத பிடி டாக்சின் புரதம் மாட்டின் பாலின் மூலம் மீண்டும் மனிதர்களுக்கே வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்படி பல வகையிலும் தொடர்ந்து பிடி நஞ்சை நம் உடலில் சேர்த்துக்கொண்டு போனால் எதிர்காலத்தில் அனைவருமே நோயோடு வாழ்வதை தவிர வேறு வழியில்லை, தவணை முறையில் மரணம் எனலாம்!
பிடி பருத்தியின் கிரை டாக்சின் புரதத்தால் பருத்திப்பால் மற்றும் மாட்டுப்பால் உற்பத்தி நஞ்சாவது குறித்து இது வரையில் வெகுஜன ஊடகம் எதுவுமே கண்டுக்கொள்ளவில்லை, மரபணு மாற்ற உணவால் பிடி புரதம் ரத்தத்தில் கலந்து விடுவதை வைத்து ,பிடி பருத்திப்பால்,மற்றும் மாட்டுப்பால் நஞ்சாக வாய்ப்புள்ளதை கணித்துள்ளேன்,இனி வருங்காலத்தில் வெகுஜன ஊடகங்கள் இதனை காப்பி அடிச்சு புதுசா கண்டுப்பிடிச்சா போல சொன்னா அடியேனின் தீர்க்க தரிசனத்தினையும் நினைவு கூரவும் ...ஹி ...ஹி சும்மா ஒரு வெளம்பரம்!
மேலும் சர்க்கரை வியாதி, ஆண்மை இழப்பு போன்றவற்றை எலிகளில் ஏற்படுத்தியுள்ளதை சில ஆய்வக பரிசோதனை முடிவுகள் உறுதி செய்கின்றன.
செய்தி:
//Scientists from the University of Sherbrooke, Canada, have detected the insecticidal protein, Cry1Ab, circulating in the blood of pregnant as well as non-pregnant women.
They have also detected the toxin in fetal blood, implying it could pass on to the next generation. The research paper has been peer-reviewed and accepted for publication in the journal Reproductive Toxicology. The study covered 30 pregnant women and 39 women who had come for tubectomy at the Centre Hospitalier Universitaire de Sherbrooke (CHUS) in Quebec.
None of them had worked or lived with a spouse working in contact with pesticides.
They were all consuming typical Canadian diet that included GM foods such as soybeans, corn and potatoes. Blood samples were taken before delivery for pregnant women and at tubal ligation for non-pregnant women. Umbilical cord blood sampling was done after birth.
Read more at: http://indiatoday.intoday.in/story/toxin-from-gm-crops-found-in-human-blood/1/137728.html//
# மரபணு மாற்ற பயிர்களால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறைந்துள்ளதா?
இந்தியாவில் பிடி பருத்தி அறிமுகம் ஆகி சுமார் பத்தாண்டுகள் ஆகிறது, பிடி நுட்பத்தால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறையும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும் எனப்பொதுவாக சொல்லப்படுவதால், அதன் உண்மை தன்மை அறிய மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் ,இணை இயக்குனர் Dr. Kesavraj Kranthi தலைமையில் ஒரு ஆய்வினை மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
அவர்களின் ஆய்வு கணிப்பு என்னவெனில் எதிர்ப்பார்த்த அளவு பூச்சி மருந்து பயன்பாடு குறையவில்லை, மேலும் பல புதிய செகன்டரி காட்டன் பெஸ்ட்கள் அதிகமாகியுள்ளது என்பதாகும்.
படம்:
சுட்டி:
சுட்டியில் உள்ள பிடிஎஃப் படித்தால் முழு அறிக்கையின் விவரம்ம் கிடைக்கும்.
படத்தில் பார்த்தால் தெரியும்,
பருத்திக்கும்,மற்ற பயிர்களுக்கும் பயன்ப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் ஒப்பீடு ,
ஆண்டு-2004
மொத்த பருத்தியில் பிடி பருத்தி சதவீதம் - 5.59
பூச்சிக்கொல்லி மதிப்பு: 1032 கோடிகள்.
பூஞ்சை கொல்லி - 6 கோடி.
களைக்கொள்ளி- 4 கோடி.
பருத்திக்கு மட்டும் மொத்தம்= 1040 கோடிகள்.
ஒட்டு மொத்த விவசாய பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் மதிப்பு =2455 கோடிகள்.
இப்பொழுது பிடி காட்டன் சாகுபடி அதிகமாக நடக்கும் ஆண்டினை காண்போம்,
ஆண்டு - 2010
பிடி பருத்தி சதவிகிதம்- 90.67%
பூச்சிக்கொல்லி- 884 கோடி,
பூஞ்சைக்கொல்லி -67 கோடி,
களைக்கொல்லி - 87 கோடி.
பருத்திக்கு மட்டும்மொத்தம்- 1038 கோடிகள்.
ஒட்டு மொத்தமாக அனைத்து பயிர்களுக்குமான செலவு= 4283 கோடிகள்.
மேற்கண்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பிடி பருத்தி குறைவாக பயிரிட்ட 2004 காலத்தில் 1040 கோடிகள் செலவாகியுள்ளது, அதே சமயம், பிடி பருத்தி பருத்தி 90.45 சதவீதம் இருந்த போது 1038 கோடிகள் செலவாகியுள்ளது.
பிடி பரவலான பின் ஏற்பட்ட பூச்சிக்கொல்லி பயன்ப்பாட்டு அளவில் ஏற்பட்ட மாற்றம் என்பது வெறும் 2 கோடி ரூபாய்கள் மதிப்பளவில் தான்!
நம்ம பிடி ஆதரவு விஞ்'சாணிகள்" பூச்சிக்கொல்லி செலவு குறைவு என சொன்னது எப்படி எனில், நேரடியாக "பூச்சிக்கொல்லிக்கு" மட்டும் ஆன செலவை வைத்தே, மேலும் மற்றப்பயிர்களுக்கு செலவான பூச்சிக்கொல்லிகள் அளவு கூடியதை ஒப்பிட்டு சதவீதத்தில் பருத்திக்கு குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆனால் 2004 ஐ விட 2010 இல் அதிகமாக பூஞ்சைக்கொல்லியும்,களைக்கொள்ளிக்கும் செலவாகியுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால் கிட்டத்தட்ட சமம் எனும் நிலை,ஏனெனில் பிடி பருத்திக்கு பூஞ்சை எதிர்ப்பு தன்மை குறைவு என்பதால் அதன் செலவு கூடியுள்ளது.
களைகள் அதிகம் இருந்தால் பிடி விளையாது,ஆனால் சுதேசி பருத்திகள் ஓரளவு களைகளை சமாளிக்கும் ,எனவே களைக்கொல்லியே தேவைப்படாது.
பூச்சிக்கொல்லி செலவை கொஞ்சம் குறைத்து மற்ற ரசாயன செலவையே பிடி பருத்தி அதிகரித்துள்ளது தெளிவாகிறது.
எனவே விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி செலவு குறைந்து பண ஆதாயமும் இல்லை, சுற்று சூழல் பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.
பிடி பருத்தி போட்டதால் விளைச்சல் பெருகிவிட்டது நல்ல லாபம் என்கிறார்களே அதிலாவது உண்மை உள்ளதா எனப்பார்க்கலாம்.
(தற்சமயம் ஓரளவு லாபம் அளிப்பதாக உள்ளது ஆனால் அது நீடித்த ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
பிடி பருத்தி விளைச்சல்:
பிடி பருத்தி சாகுபடியால் விளைச்சல் பல மடங்கு உயர்ந்துள்ளது என பொதுவாக சொல்லப்படுவது உண்மையல்ல, ஒட்டு மொத்தமாக பருத்தி உற்பத்தி அதிகம் ஆனது உண்மை ஆனால் அது பிடி பருத்தியால் அல்ல, மொத்த சாகுபடி பரப்பு அதிகரிப்பால் மட்டுமே.
காண்க படம்.
http://www.business-standard.com/article/companies/seed-companies-reap-rich-harvest-on-bt-cotton-wave-112022300038_1.html
ஆண்டு- 1950-51 -
பரப்பளவு - 5.8 மில்லியன் ஹெக்டேர்.
மொத்த உற்பத்தி- 3.4 மில்லியன் பேல்கள்.
ஒரு ஹெக்டே விளைச்சல்- 99 கி.கி
அக்காலக்கட்டத்திற்கு குறைவு என தோன்றலாம்,ஆனால் அதுவே உலக அளவில் பெரிய உற்பத்தி ஆகும், நாம் 1800 களிலேயே இங்கிலாந்துக்கு லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதி செய்தவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் பருத்தி உற்பத்தியில் இந்தியா அப்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தது, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பின் இங்கிலாந்தின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்தது இந்தியாவே.
பிரிட்டீஷார் தங்கள் தொழில் நலனுக்காக இந்தியாவில் துணி உற்பத்தி நடக்காமல் பார்த்துக்கொண்டு மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் உற்பத்தியை பெருக்கினார்கள்.
இதனால் தான் இந்தியாவில் அப்பொழுதே நிறைய நூற்பாலைகள் பெருகின, அதுவும் மும்பையில் மிக அதிகம்,எனவே இந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது, கோவைப்ப்பகுதியிலும் நூற்பாலைகள் பெருகியதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது.
சரி பழங்கதை போகட்டும், பிடி கதைக்கு வருவோம்,அதான் பிடி சாமியின் மயிர் கூச்சறிய செய்யும் திகில் கதையை விட பிரமாதமாக இருக்கும் அவ்வ்!
பி.டி பருத்திலாம் வந்த 2004 -5 ஆண்டு காலத்தினை பார்ப்போம்,
பி.டிப்பருத்தியின் சதவீதம் 5.59.
மொத்த பரப்பளவு- 8.78 மி.ஹெக்டேர்.
மொத்த உற்பத்தி - 24.3 மி.பேல்கள்.
ஒரு ஹெக்டேர் விளைச்சல்- 470 கி.கி
மொத்த உற்பத்தியினை வைத்து கூடி இருக்கிறது, மேலும் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி திறனும் 470 கி.கி என உயர்ந்துள்ளது, இது பிடி பருத்தியினால் என சொல்ல முடியாது, ஏன் என்னில் 2004 இல் பி.டி பருத்தி வெறும் 5.59 சதமே சாகுபடியில் இருக்கு.
சரி இப்போ 2012 ஆம் ஆண்டுக்கான நிலவரத்தினை காண்போம்.
பி.டி பருத்தி சதவீதம் - 94.75%
மொத்த பரப்பு- 12.19 மி.ஹெக்டேர்கள்.
மொத்த உற்பத்தி - 34.5 மில்லியன் பேல்கள்.
உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு - 481 கி.கி.
இப்போவும் உற்பத்தி கூட இருக்குனு சொல்லலாம்,ஆனால் இதெல்லாம் மொத்த சாகுபடி பரப்பு உயர்வால் தான், ஏன் எனில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி என பார்த்தால் தெரியும், 2004 இல் 5.59% ஆக பிடி இருக்கும் போது 470 கி.கி,இப்பொழுது 94.5% இருக்கும் போது 481 கி.கி தான் அதாவது பிடி சாகுபடி அதிகரிப்பால் ஒரு ஹெக்டேருக்கு வெறும் 11 கிலோ உற்பத்தி தான் அதிகரித்துள்ளது.
எப்படியோ அதிகரித்துள்ளதே என சொல்வீர்கள் ஆனால் விவசாய பொருளாதாரமே அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும், ஏன் ஏனில் ஒரு பாக்கெட் பாரம்பரிய விதை என்பது 400-500 ரூக்கு வாங்கி பயிரிடும் போது 470 கிலோ உற்பத்தி, ஆனால் இப்பொழுதோ சுமார் 980 ரூக்கு பிடி பருத்தி விதை வாங்கி பயிரிட வேண்டியுள்ளது, அதாவது விதை செலவு இரட்டிப்பு ஆகியுள்ளது ,மேலும் சுற்றுச்சூழல், நுகர்வோர் நலன் ,விதையுரிமை என அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேருக்கு 11 கிலோ உற்பத்தியினை அதிகரிக்க இவ்வளவு பெரிய அபாயத்தினை எதிர்க்கொண்டு பயிரிட வேண்டுமா?
இவ்வுற்பத்தியை மேம்படுத்தப்பட்ட கலப்பின பாரம்பரிய விதைகளாலேயே எட்ட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
மேலும் 2004 இல் இருந்து பருத்தி உற்பத்தியினை கவனித்து வந்தால் தெரியும்,
2007 -521 கி.கி
2008- 554
2009- 524
2010 -503
2011- 511
2012- 480.கி.கி
ஆரம்பத்தில் கொஞ்சம் உயர்ந்த உற்பத்தி படிப்படியாக சரிய துவங்கி மெதுவாக உற்பத்தி திறன் குறைந்து வருவதை காணலாம், பிடி பருத்தி இல்லாத காலத்தின் போது இருந்த உற்பத்தி திறனை நோக்கி பிடி பருத்தியின் உற்பத்தி சரிந்து செல்வதாக வேளாண் பொரூளாதார வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
எனவே பிடி பருத்தி என்பது உற்பத்திக்கு கிடைத்த மாபெரும் வரம், பூச்சிகளுக்கு எமன் என்பதெல்லாம் 'பிரச்சார மாயைகள்" என்பது தெளிவாகும்.
பிடி அல்லது மரபணு மாற்றத்தினால் பெரும் பலன்கள் உருவாகும் என்பதெல்லாம் வெற்று காகித அறிக்கைகளே, உண்மையில் பெரும் பலன் என்பதெல்லாம் இல்லை எல்லாம், பெரும் பன்னாட்டு விதை நிறுவனங்கள் சந்தைப்பிடிக்க கிளப்பிவிடும் கட்டுக்கதைகளே என்பது தெளிவாகி இருக்கும், இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் தொடர்வேன்!
(இவன திருத்தவே முடியாது போல ,இப்படி பெருசா எழுதி தலைய பிச்சுக்க வைக்கிறானே... அவ்வ்)
------------------------------
பின்குறிப்பு:
# இன்னும் பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை, பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் ,திருத்தம் செய்யப்படும்.
# சுட்டிகள் முதல் அனைத்தையும் முழுவதும் படித்தபின் , ஏதேனும் விவாதம் இருப்பின் உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம், முழுவதும் படிக்காமல் முன் முடிவுடன் விவாதம் செய்ய முற்படுவதை தவிர்க்கவும். அடியேன் விஞ்சானியெல்லாம் இல்லை, ஏதோ வாசிப்பின் வாயிலாக உருவான புரிதலை பகிர்ந்துக்கொண்டுள்ளேன், கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் எவ்வளவு இருக்கோ அவ்வளவு குறைச்சுக்கிட்டு கருத்து சொல்லலாம் அவ்வ்!
# மேலும் எமது முந்தைய விவசாயம் சார்ந்த இடுகைகளின் சுட்டியும் அளித்துள்ளேன் ,விருப்பம் இருப்பின் வாசிக்கவும்.
என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,
#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!
1) விவசாயி படும் பாடு-1
2)விவசாயி படும் பாடு-2
இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.
1)பஞ்ச கவ்யம்
2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1
3)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2
4)நடவு எந்திரம்
5) ஒருங்கிணைந்த விவசாயம்
-------------------------------
தரவுகள்:
சுட்டிகள் அனைத்தும் பதிவினூடாக அளிக்கப்பட்டுள்ளது , எனினும் உங்களின் மேலான பார்வைக்கு மீண்டும் பட்டியலிடப்படுகிறது.
# http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi
# http://articles.timesofindia.indiatimes.com/2011-05-17/nagpur/29551789_1_bt-cotton-seeds-price-hike-bg-ii
# http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava
# http://articles.timesofindia.indiatimes.com/keyword/seed-companies
# http://articles.timesofindia.indiatimes.com/2012-06-02/hyderabad/31982969_1_bt-cotton-seed-ankur-seeds-seed-companies
# http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office
# http://thealternative.in/beat/india-after-gandhi-monsanto-raj-bt-cotton/
# http://www.indianet.nl/cotssec2.html
# http://www.mindfully.org/Industry/2003/Monsanto-Unilever-Child-Labour17may03.htm
# http://www.globalissues.org/article/214/stress-on-the-environment-society-and-resources
# http://agrariancrisis.in/2012/06/28/pesticide-use-in-bt-cotton-dr-kesavraj-kranthi/
# http://www.ota.com/organic/environment/cotton_environment.html
# http://ejfoundation.org/sites/default/files/public/the_deadly_chemicals_in_cotton.pdf
# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html
# http://www.seedbuzz.com/knowledge-center/article/impact-of-bt-cotton-seeds-on-indian-agriculture
# http://articles.economictimes.indiatimes.com/2012-06-11/news/32175116_1_cotton-seed-bollgard-ii-bt-cotton
# http://articles.timesofindia.indiatimes.com/2013-05-21/aurangabad/39417570_1_bt-cotton-seeds-seed-companies-farmers
# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html
# http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/glut-triggers-price-war-among-bt-hybrid-cotton-seed-makers/article4686541.ece
http://www.thehindu.com/sci-tech/agriculture/article3222647.ece
மற்றும் நமது அபிமான "விக்கிப்பீடியா & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-----------------------------------------------------------------------
18 comments:
ஜிகு ஜக்கான் வரையிலுமே வாசிக்க முடிந்தது.விக்கிபீடியாவுக்கு போட்டி போடுமளவுக்கு தகவல் நிரல்கள்.
நேற்று Pentax காமிரா விமர்சகர் ஒருவ்ரைப் பற்றி குறிப்பிடும் போது நம்மிடமும் ஒரு தலைகீழா தொங்கிற மனுசன் இருக்கிறார் என குறிப்பிட்டேன்.உங்களைப் போலவே பிரபலமான காமிரா தளங்களுக்குப் பின்னூட்டம் போடுகிறேன் பேர்வழியென போய் வாங்கி கட்டிக்கொண்டு சரிப்பட்டு வராது என இப்ப தனிக்கச்சேரி நடத்துகிறார்.காமிரா நிறுவனத்தார் காண்டாகி விடுகிற தோரணைக்கான ஆணி வேறு அக்கு வேறு என மேய்கிறார்.வலை இணைப்பு தரலாமென்றால் நினைவில்லை.
இந்த சேச்சியை இன்னுமா வச்சுகிட்டிருக்கீங்க:)
\\நமது செரிமான அமைப்புகளால் செரிக்கப்படாத பிடி டாக்சின்கள் ரத்தத்தில் கலந்து அப்படியே அழியா நிலையில் பிளாஸ்டிக் போல உடலில் சுற்றி வந்துக்கொண்டிருந்துள்ளது.\\
அபாயச்சங்கு பலமாகவே ஊதப்பட்டுள்ளது.நம்மாழ்வாரும் இதே விவரங்களைத்தான் பத்துப்பதினைந்து ஆண்டுகளாகச் சொல்லிவருகிறார்.இயற்கை விவசாயத்துக்குத் திரும்புவோம் என்பதுதான் ஒரே தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் நடைமுறை சாத்தியம் எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை.
நல்ல விஷயங்களைத் தானே சொல்லியிருக்கிறீர்கள்? எதற்காக இரண்டு மூன்று இடங்களில் அத்தனைப் பாதுகாப்பு வார்த்தைக் கவசங்கள்?
மேற்கண்ட வாக்கியத்தில் சுற்றி வந்துக்'கொண்டிருந்துள்ளது' என்ற வார்த்தைப் புரியவில்லை.
சிறந்த பதிவு...என்ன கொஞ்சம் பெருசா இருக்கு பதிவு...
----கொங்கு நாட்டான்
ராச நட,
வாரும்,நன்றி!
நல்லோருக்கு நாளும் கோளும் இல்லை :-))
பிசினெஸ் மேக்னெட் ஆனப்பிறகும் பின்னூட்ட மேக்னெட் தான்னு காட்டுறிங்களே ,நன்றி!
ஜிகு ஜிக்கான்னுக்கு மேல வண்டி ஓடலையா?
ஹி...ஹி நம்மளை மாரி இன்னொருத்தரும் வாங்கிக்கட்டிக்கொண்ட்ருக்காரா ,மகிழ்ச்சி,இக்கிரகத்தில் நான் மட்டும் தனியாள் இல்லை அவ்வ்!
//இந்த சேச்சியை இன்னுமா வச்சுகிட்டிருக்கீங்க:)//
# என்னாது வச்சிருக்கேனா...அபச்சாரம் ,அபச்சாரம் ,முதலில் வாயில கோக்,பெப்சினு எதாவது ஊத்திக்கழுவுங்க :-))
-----------------------
அமுதவன் சார்,
வாங்க,நன்றி!
உங்க கடைக்கு போயிட்டு ,இங்கே வந்தால் எனக்கு முன்ன வந்து நிக்கிறீங்களே!
#//இயற்கை விவசாயத்துக்குத் திரும்புவோம் என்பதுதான் ஒரே தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் நடைமுறை சாத்தியம் எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை.//
சாத்தியமுண்டு ஆனால் மக்கள் பழக்கத்துக்கு அடிமையாகி சிக்கி ரசாயணம் பின்னால் அலையிறாங்க.
எங்க வீட்டுல ரெண்டு முருங்க மரம் ,தலா 1000 காய்கள், அப்புறம் நார்தங்காய் - சுமார் 500 காய்கள். எலுமிச்சை, நிறைய காய்,கருவேப்பிலை, அப்புறம் மிளகாய், வல்லாரை கீரைனு கிடக்கு, தண்ணி மட்டும் ஊத்தி ,குப்பைகளை தான் போடுறது ,இவ்ளோ காய்க்குது. சுமார் 1500-2000 ரூவாக்கு விக்கவும் செய்வோம்.
இதுலவே செலவில்லாமல் நடக்குதுனா பெருசாவும் செய்யலாம் ,லாபம் வரும், ஆனால் ஆர்கானிக்குனு கொஞ்சம் காசு கூட கொடுக்கலாம் ஆனால் கொடுக்க மாட்டேங்கிறாங்க, முருங்கை 1 ரூ, நார்தங்காய் 1ரூ, எலுமிச்சை 50 காசுனு கொடுத்து ஒரு யாவாரி வாங்கிட்டு போறார். அவரே வந்து பறிச்சிட்டு போறதால வேலை மிச்சம்னு கண்டுக்கிறதில.
#//நல்ல விஷயங்களைத் தானே சொல்லியிருக்கிறீர்கள்? எதற்காக இரண்டு மூன்று இடங்களில் அத்தனைப் பாதுகாப்பு வார்த்தைக் கவசங்கள்?//
ஒரு கெரகாட்ட கோஸ்டி வயத்தெரிச்சலில் நீ சயிண்டிஸ்ட்டா,இல்லை எதாவது லேப்பில் அட்டெண்டர் வேலையாச்சும் பார்த்திருக்கியானு கேட்டுக்கிட்டு இருக்கு அதான் ஒரு முன்னெச்சரிக்கை அவ்வ்!
அப்புறம் சம்பதப்பட்ட நிறுவனங்கள் கூட நம்ம மேல பாய்ஞ்சிடக்கூடாதில்லையா அதான்.
# // சுற்றி வந்துக்'கொண்டிருந்துள்ளது' என்ற வார்த்தைப் புரியவில்லை.//
இறந்தக்காலத்தில் சொல்லி,இன்னும் உடம்பில் தான் இருக்குனு சொல்ல அப்படி சொன்னேன் ,தப்போ?
பதிவுல சொல்ல நினைச்சு கொஞ்சம் மிஸ்சாகி இருக்கு ,சேர்க்கனும்.
நமது உடல், செரிக்க கூடியது,அழிக்க கூடியது, அகற்றக்கூடியது எனக்கண்டறிந்து அதுக்கு ஏற்ப செயல்படும்.
உணவு -செறிச்சுடும்,
நோய் கிருமி - உடல் எதிர்ப்பு சக்தியால் அழிக்கப்பட்டிரும்.
கூடுதல் உப்பு,சர்க்கரை,நீர்,நச்சுக்கழிவு,- நீக்கக்கூடியது ,சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்பட்டு விடும்.
ஆனால் இந்த பிடி புரத நச்சு எவ்வகையிலும் சிக்காது என்பதால் உடலுக்கு என்ன செய்யுறதுனு தெரியாம ரத்தத்துலவே வச்சு பாதுகாத்திட்டுருக்கும் அவ்வ்!
கொங்கு நாட்டார்,
வாரும் நன்றி!
அந்த ஸ்பாம் பொட்டியில என்ன இருக்குனு அங்கேயே போறீர்?
ஹி...ஹி பதிவுல இன்னும் கொஞ்சம் சேர்க்கனும்னு இருக்கேன்,பெருசா இருக்குனு சொல்லிட்டீரே அவ்வ்!
பெருசா இருக்குனு திட்டக்கூடாதுனு தான் கடைசில படம் போட்டு விளக்கம் கொடுத்திருக்கேன் ,ரசிச்சு மகிழ வேணாமா?
//6 முதல் 16 வயதிற்குற்பட்ட சிறார்களை...........
............தினசரி சம்பளம் வெறும் 20 ரூபாய்களே ஆனால் வேலை நேரமோ 16 மணி நேரத்திற்கு குறையாத அளவில்.//
திடுக்கிட்டேன்....இதில் சம்பந்த பட்டவர்கள் எல்லோரும் தே...பசங்க.
துள்ளி குதித்து ஓடியாட வேண்டிய இந்த 48,150 சிறார்கள் தினமும் கஷ்டப்படுத்தப்பட்டு இருப்பதை விட, இந்த பூமி ஒழிந்து போவதே மேல்.
எங்கய்யா நந்தவனம் என் சொந்தவனம்,
யோவ், ஏன்யா உமக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது? உரையாடலில் கொஞ்சம் முன்ன பின்ன பேசிட்டா நமக்குள்ள என்ன கொரஞ்சுரபொகுது?
சீக்கிரம் வாங்க. உங்க பின்னூட்டத்த ஆரம்பிங்க.
We are sorry if you have been hurted, Please come and join.
Expecting you........
Please respect this.
கிரகவாசி,
ஐயா ராசா, யாரு பெத்த புள்ளையோ இம்புட்டு நல்லவானா இருக்கியே யப்பா? வாழ்க.
அடுத்தவனை கோர்த்து விடுவதில் உங்களுக்கு இவ்வளவு இன்பம்!
கோபமெல்லாம் இல்லை. பதிவுலகில் யாருக்குமே பிடிக்காத விசயம் என்னவெனில் அதுதான் 'மாற்றுக்கருத்து'.
மாற்றுக்கருத்தை சொல்லுவதையே வாடிக்கையாக கொண்டிருப்போருக்கும் (பார்க்க ராசநடவின் முதல் பின்னூட்டம்), தங்களின் கருத்துக்கு பிறர் மாற்றுக்கருத்து சொன்னால் பிடிப்பதில்லை, இதுதான் எதார்த்தம். அதை மீறி சொன்னால் ஒரிரு தடவை பொறுத்துக்கொள்ளுவார்கள். அப்புறம் இந்த பக்கம் வராதே என்பார்கள். இல்லை பின்னூட்டத்தை அனுமதிப்பவர்களும், அடிமை சிக்கீட்டான்டா என்பது போல நைஸாக தனிமனித தாக்குலாக மாற்றி கடைசியில் உங்கொம்மா *த்தா ஓடிடு-வில்தான் முடிப்பார்கள். என் கையும் சும்மாயிருக்காது. கஸ்டப்பட்டு பக்கம் பக்கமாக எழுதும் பதிவருக்கும் மனவருத்தம், பின்னூட்டம் போடுபவனுக்கும் மனவருத்தம். இந்த லட்சணத்தில் நமக்கு பெரும்பாலும் எதிர்கருத்து தோன்றினால்தான் பின்னூட்டமே போட வருது. இதில்,எதுக்கு தேவையில்லாத பிரச்சனை என்பதால் இனி பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறலாம் என முடிவெடுத்துவிட்டேன். ;)
http://www.systemcomic.com/2011/08/03/so-youre-mad-about-something-on-the-internet/
இனிமேல் level oneலேயே எனது விடை YESSSSS!!!
இந்த பின்னூட்டத்தையே கடை ஓனர் அனுமதிப்பாரா என தெரியவில்லை. இருந்தாலும் உங்களின் பின்னூட்டம் பற்றி நட்பு ஒன்று தெரிவித்த ஒரே காரணத்தால் இங்கு வந்து இந்த பின்னூடத்தை போடுகிறேன். அவர் இடமளித்தால் அவருக்கும் ஒரு நன்றி!
Mr. Alien, Thank you. I appreciate your gesture.
PS: I am not sure, whether I can say... the word hurt has no past participle! You should use "hurt" for past tense and participle. (இப்படி எதையாவது எழுத போக கடைசியில் வெட்டு குத்தில்தான் முடியுது, ஸாரி! ;)
எமது வேண்டுகோளுக்கிணங்க வந்து சிறப்பித்தமைக்கு நன்றி.
//இந்த லட்சணத்தில் நமக்கு பெரும்பாலும் எதிர்கருத்து தோன்றினால்தான் பின்னூட்டமே போட வருது.//
உங்கள் மாதிரி துறை அறிவு நிறைந்த ஆட்கள் வந்து எதிர் கருத்து போட்டால் தான் பதிவே நிறைவு அடையும்.
எங்களை மாதிரி நீங்களும் வந்து ஆதரவு கருத்து சொன்னால், ஏற்கனவே வவ்வாலுக்கு இருக்கிற 4 முழ நீளம் இறக்கை பத்தாது என்று கொம்பு வேற முளைக்க ஆரம்பித்து விடும் (what would be the vavvaal's reaction now????? அவ்வ்....)
//எதுக்கு தேவையில்லாத பிரச்சனை என்பதால் இனி பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறலாம் என முடிவெடுத்துவிட்டேன்//
அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில நாங்க உங்கள விட்டுற மாட்டோம்.
// the word hurt has no past participle!//
நீங்க அமிஞ்சகரையில இல்ல, நிஜமாவே அமெரிக்காவுல தான் இருக்கீங்கன்னு நம்புறேன். ஹி..ஹி..ஹி..
Thanks for correcting me.
Thanks for coming and joining us.
வேற்றுகிரகவாசி,
வாரும்,நன்றி!
நம்ம நாட்டோட நிலையை அறிந்ததும் உமக்கே கோவம் வந்திடுச்சு பாரும், இது போல பல விடயங்களை மூடி மறைச்சு ,எல்லாம் இந்தியாவின் வளர்ச்சி, அன்னிய செலவாணி என நியாப்படுத்தப்படுவதைப்பார்க்கும் போது எனக்கு இன்னும் கடுப்பாகவே செய்கிறது.
நான் தேடிப்படிக்கும் போது தான் இது போல தகவல்கள் கிடைக்குது,ஏன் இதை எல்லாம் வெகுஜன ஊடகங்களோ,இல்லை சோ கால்டு "இணைய சேகுவேராக்களோ" இதெல்லாம் பற்றி பேசுவதேயில்லை அல்லது நம்ம கண்ணுக்கு தெரியாமல் பொங்கிட்டு இருக்காங்களோ என தெரியலை.
சிலபேரு ரொம்ப சிம்பிளா, முகம் தெரியாமல் என்னவேனா எழுதலாம் ,முகம் தெரியிற நாங்க எழுதினா உசுருக்கே ஆபத்துனு சொல்லிடுவாங்க அவ்வ்!
பலரும் நாட்டுல என்ன நடக்குதுனு தெரியாமலே " வெகுஜன ஊடக" கருத்தையே மீண்டும் சொல்லி "இந்தியா ஒளிர்கிறது" எனப்பெருமை பட்டுக்கொள்வதிலேயே காலம் கழிக்கிறாங்க,சரி நாம சுட்டிக்காட்டினோம் என்றால் அவங்க சொன்னதுக்கு மாற்றா சொல்லிட்டோம்னு நம்ம மேல தான் பாயுறாங்க.
நடக்கிற அக்கிரமத்தை தடுத்து நிறுத்தக்கூட வேண்டாம், இப்படி நடக்குதுனு தெரிஞ்சிக்க கூட விரும்ப மாட்டேங்கிறாங்க,அதுக்கு பதிலா எதுவுமே நடக்காதது போல வெற்று புனைவுகளை பேசிக்கொண்டாடி "எல்லாம் இன்பமயம்" என சொல்லி தங்களை ஏமாற்றிக்கொள்வதில் தான் திருப்தி காண்கிறார்கள்.
நான் சுட்டிக்காட்டியது ஆந்திராவில் உள்ள எண்ணிக்கை மட்டுமே,இன்னும் இந்தியா முழுக்க எவ்ளோ பேரோ? பருத்தியில மட்டும் இவ்ளோனா மற்றவற்றில் எவ்ளோ ,நினைச்சாலே கிர்ருன்னு தான் இருக்கு!
இதுல கவனிக்க வேண்டியது என்னவெனில் பருத்தி சார்ந்த துறையில் தான் அதிக மனித உரிமை மீறல்கள் இருக்கு. "From fibre to fabric" எல்லா நிலையிலும் மனித உரிமை மீறல்களே, அதை பற்றி பேசக்கூட இங்கே யாரும் தயாரில்லை.
தமிழ்நாட்டில் உள்ள ஜின்னிங் மில், ஸ்பின்னிங் மில்லில் எல்லாம் "சுமங்கலி திட்டம்" என ஒன்னு பெரும்பாலும் இருக்கு, இதன் படி ஒரு 10-12 வயசு பெண் சிறார்களை கொஞ்சம் முன் பணம் கொடுத்து மில் வேலைக்கு ஒப்பந்தத்தில் அழைத்து சென்றுவிடுவார்கள், கல்யாண வயசு வரும் வரையில் மில்லில் சோறு போட்டு வேலை வாங்குவார்கள், வயசுக்கு வந்ததும் அல்லது எப்பொழுது கல்யாணம் செய்யுறங்களோ அப்பொழுது "கல்யாண செலவுக்கு" பணம் கொடுத்து அனுப்புவாங்க, அதுக்கு அப்புறம் வேலைக்கு வந்தாலும் ஓகே தான்.ஆனால் பெரும்பாலும் சக்கையாக பிழிந்து பாதி சவமாக தான் அப்பெண்கள் மில்லை விட்டே வருவார்கள்.
ஆனால் பெரும்பாலும் இளம் சிறார்களையே மீண்டும் புடிச்சு வருவாங்க, ஏன்னா அவங்க தான் சொன்ன வேலையை தட்டாமல் செய்வாங்க, எத்தனை மணி நேரம்ம் வேண்டுமானால் வேலை வாங்கலாம்.
இப்படி இளம் சிறார்களின் இரத்தமும் வேர்வையும் தான் நாம போட்டிருக்க பனியன் ,ஜட்டில எல்லாம் இருக்கு :-((
இப்படி ஏற்றுமதி செய்து தான் டாலர்களை நாம் குவிக்கிறோம் அவ்வ்!
பதிவில இதெல்லாம் மீண்டும் சேர்க்கனும்னு நினைச்சது, உங்க அறச்சீற்றம் பார்த்து இங்கேயே சொல்லிட்டேன்!
----------------
# என்னத்தவிர எல்லாருமே "ரொம்ப்ப நல்லவய்ங்களா" இருக்காங்களே அவ்வ்!
மற்றவை தனியாக பின்னூட்டமிடுகிறேன்.
------------------------------
வேற்றுகிரவாசி,
அடியேன் உமக்கொரு கதை சொல்லப்போகின்றேன், அது ஒன்றும் இதுகாறும் கேட்டிராத கதையோ, யாரும் சொல்லாத கதையோ அல்ல ,பல தலைமுறைகளாக பல்லாயிரம் வாய்களால் சொல்லப்பட்டு ,பல்லாயிரம் காதுகளால் கேட்கப்பட்ட ஒரு கதையே ,ஆனால் யாருடைய சிந்தையிலும் அக்கதையின் 'அறம்" என்னவென்பது அறவே பதியவில்லை, அக்கதை என்றென்றும் ஒரு கதையாகவே "கர்ண பரம்பரையாக " சொல்லப்பட்டு வருகிறது அவ்வளவே!
வீரர்களும் ,தீரர்களும், அரச குமாரர்களும் ,ஆன்றோர்களும்,சான்றோர்களும் கூடிய மாபெரும் அவையில் ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது , யார் வில் வித்தை போட்டியில் வெற்றி பெருகிறார்களோ, அவருக்கே இவ்வழகிய அரசிளங்குமரி மனையாட்டி ஆவாள் என 'சுண்டி' இழுக்கும் பரிசு அறிவிக்கப்படுகிறது.
ஆனால் இப்போட்டியே ஒரு நாடகம், யாரோ ஒருவனை வெற்றியாளனாக அங்கே எதிர்ப்பார்த்து போட்டி அறிவிக்கப்படவில்லை, இன்னார் வருவான் வெற்றிப்பெறுவான் , என்றே திட்டமிட்டு அமைக்கப்பட்ட போட்டி ,அவனால் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என கணித்தே அவனுக்கு ஏற்ப கடினமாக அமைக்கப்பட்ட போட்டி அது.
பல அரசிளங்குமாரர்களும், தீரர்களும் ,வீரர்களும் முயன்றார்கள் ,மூக்குடைப்பட்டார்கள், எதிர்ப்பார்த்த வீரன் வருவான் என நினைத்திருக்கையில் ,கூட்டத்தில் இருந்து ஒருவன் எதிர்பாராமல் களத்தில் குதித்தான் , அவன் இராஜவம்சமல்ல ஆனால் தன் திறமையை மட்டுமே நம்பிக்குதித்தான், போட்டி நடத்தியவர்களுக்கோ அது அதிர்ச்சி, இவன் ஒரு வேளை வென்று விட்டால் நாம் போட்ட திட்டம் வீணாகிடுமே என்று, அவனை எப்படி வெளியேற்றுவது என்று யோசித்தார்கள், உடனே நீ யார் ,உன் குலம் என்ன கோத்திரம் என்ன எனக்கேட்டார்கள் ,போட்டிக்கும் குலம் ,கோத்திரத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்டுப்பார்த்தான் அதெல்லாம் முடியாது அரசர்களுக்கு இணையாக போட்டியில் கலந்துக்கொள்ள அரச வம்சமாக இருக்க வேண்டும் என்றார்கள் , இப்படிக்கேட்டவர்கள் மெத்தப்படித்த சான்றோர்கள், கேட்கப்பட்டவனோ கர்ணன், பாவம் அவன் என்ன செய்வான் ,தேரோட்டியின் வாரிசு என்ற"முகமூடியை" விரும்பியா சுமந்தான், அவனது வீரத்தை உரசி பார்க்க திராணியில்லாமல் காலை வாரிவிட்டார்கள்.
பின்னர் துரியோதனன் கைக்கொடுத்தாலும் போட்டியில் கர்ணன் தோற்றானே எனலாம், தோற்றான் தான் காரணம் போட்டிக்கு முன்னர் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டதால் நிலைக்குலைந்த நிலையில் எப்படி முழுத்திறனை காட்ட முடியும்?
இன்று வரையிலும் இவ்வுளவியல் தாக்குதல்கள் (trolling)"கர்ணன்கள்" மீது தொடுக்கப்பட்டே வருகிறது!
ஒருவர் சொல்லும் கருத்துக்கு சரியான பதில் அளிக்க முடியாத நிலையில் எளிதாக ,இந்த சப்ஜெக்ட்லாம் சயிண்டிஸ்ட்கள் பேச வேண்டியது ,அமெரிக்காவில எல்லாம் எக்ஸ்பெர்ட்கள் தான் கருத்து சொல்வாங்க, நீ எப்படி பேசலாம்,சய்யிண்டிஸ்ட்டா நீ ? என்ன படிச்ச ,உன் மூஞ்சே தெரியில ,விக்கிப்பீடியாவில இருந்து காப்பி அடிச்சிட்ட என போட்டு தாக்கிடுவார்கள்.
ஆனால் அதே வில்வித்தை போட்டியில் யார்னே தெரியாத ஒருவன் வில்லெடுத்து வென்றான் யாரும் கேள்வியே கேட்காம .அரசிளங்குமரியை கையில புடிச்சு கொடுத்துட்டாங்க, ஏன்னா போட்டியில் கலந்துக்கொண்டது தலைமறைவு வாழ்க்கையில் இருந்த அர்ஜுனன், யார்னே சொல்லாமல் "அந்தணர்" வேடத்தில் "முகமூடி" அணீந்து வந்தான், எனவே யார்னே தெரியாவனா இருந்தாலும்" உயர்ந்த முகமூடி" ஆச்சே கேள்விக்கேட்க முடியுமா, அதே போலத்தான் அமெரிக்க முகமூடி அணிந்துவிட்டால் கேள்விலாம் கேட்க முடியாது, இந்திய முகமூடினா செல்லாது செல்லாது முகம்மூடி இருக்குனு கேட்டுப்புடுவாங்க அவ்வ்!
மீறி "கர்ணன்கள்" பதிலுக்கு கேள்விக்கேட்டுவிட்டால், தனிமனித தாக்குதல்னு கூட்டம் கூட்டி தீர்ப்பு வழங்கிடுவாங்க அவ்வ்!
ஹி...ஹி ...கர்ணபரம்பரைக்கதை கேட்டு மெர்சலாகிட்டிங்களோ, அடுத்து ஆட்டுக்குட்டியும் ஓநாயும்னு ஒரு கதை சொல்லவா ,அது இதை விட இன்ட்ரஸ்டிங்க்கா இருக்கும் :-))
வேற்றுகிரவாசி,
//கொம்பு வேற முளைக்க ஆரம்பித்து விடும் (what would be the vavvaal's reaction now????? அவ்வ்....)//
ஹி...ஹி நோக்கு தெரியுமோ "கொம்பு அல்ரெடி மொளைச்சிடுச்சு" :-))
இந்தப்பதிவில ஒரு கொம்பு மொளைச்ச படம் தான் போடலாம்னு இருந்தேன்,அப்புறம் தனி ஆவர்த்தனமா ஒரு பதிவு எழுதி அதுல "கொம்பு" போட்டுக்கலாம்னு விட்டுட்டேன் அவ்வ்!
வவ்வால் நீங்களும் கொஞ்சம் இறங்கி வாங்க. (எங்கிருந்துன்னு கேட்கப்படாது.. அவ்வ்...)
வந்து நந்தவன தோட்டத்தில் கலந்து (பேசி) இளைப்பாறுங்கள்.
(யப்பா....இந்த இரண்டு பேரையும் சேர்த்து வைப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியதிருக்கு.)
//நான் சுட்டிக்காட்டியது ஆந்திராவில் உள்ள எண்ணிக்கை மட்டுமே,இன்னும் இந்தியா முழுக்க எவ்ளோ பேரோ? பருத்தியில மட்டும் இவ்ளோனா மற்றவற்றில் எவ்ளோ ,நினைச்சாலே கிர்ருன்னு தான் இருக்கு!
இதுல கவனிக்க வேண்டியது என்னவெனில் பருத்தி சார்ந்த துறையில் தான் அதிக மனித உரிமை மீறல்கள் இருக்கு. "From fibre to fabric" எல்லா நிலையிலும் மனித உரிமை மீறல்களே, அதை பற்றி பேசக்கூட இங்கே யாரும் தயாரில்லை.//
நிதர்சனமான உண்மை. எனக்கு கூட சென்னை அம்பத்தூரில் ஒரு garmant factory தெரியும். Readymade ஆடை செய்கிற இடம். இங்கு வேலை பார்க்கும் பெண்களுக்கும் சம்பளம் மிக குறைவு. இதைவிட மேலே இருக்கிற சூப்பர்வைசரின் கடும் சொற்கள். ஒரு நாள் கூட விடுமுறை எடுக்க முடியாத நிலைமை.. அப்பப்பா. ரொம்ப கஷ்டம்...சென்னையில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் கிராமத்து பெண்கள் இந்த மாதிரி வேளையில் இருப்பதை கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை...
2 பேர் நன்றாக வாழ்வதற்கு மூன்று பேர் கஷ்டப்படுகிறார்கள். யப்பா, யாராவது ஒரு புண்ணியவான் வந்து மூன்றாவது உலகப்போரை ஆரம்பிச்சி பூமியிலிருக்கிற எல்லோரையும் காலி பண்ணுங்கப்பா. அப்படியாவது இவர்கள் கஷ்டம் தீரட்டும்.
//தமிழ்நாட்டில் உள்ள ஜின்னிங் மில், ஸ்பின்னிங் மில்லில் எல்லாம் "சுமங்கலி திட்டம்" என ஒன்னு பெரும்பாலும் இருக்கு, இதன் படி ஒரு 10-12 வயசு பெண் சிறார்களை கொஞ்சம் முன் பணம் கொடுத்து மில் வேலைக்கு ஒப்பந்தத்தில்.......//
கேட்கவே முடியவில்லை. தினமும் வேதனையை அனுபவிப்பவர்களுக்கு??????????????
வேற்றுகிரகவாசி,
ங்க்ண்ணா ...கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருங்க்ணா ...அல்ரெடி தரைமட்டத்துக்கு கீழ போயிட்டேன் ,இப்போ தான் லேசா தலையே வெளியே காட்டுறேன் அதுக்குள்ள இன்னும் இறங்கி போக சொல்லுறிங்களே அவ்வ்!
நான் யாரையும் தடுப்பதும் இல்லை ,இழுப்பதும் இல்லை, அனைவரும் நண்பர்களே,அவரே போட்ட பின்னூட்டங்கள் எல்லாம் நீக்கிவிட்டு நான் நீக்கியது போல காட்ட பார்க்கிறார் என்ன கொடுமை சார் இது அவ்வ்!
நான் பதிவு ஆரம்பித்த காலம் தொட்டே திறந்த வெளி மைதானமாதான் பின்னூட்டப்பெட்டி இருக்கு. இது அனைவருக்குமே தெரியும்.
நான் செய்வதெல்லாம் எறிந்த கல்லை கேட்ச் பிடிச்சு மீண்டும் அங்கேயே எறிந்தேன்.
கருத்து ரீதியாக உரையாடுபவர்களை எப்பொழுதுமே தடை செய்வதில்லை, பொறுமையாக விளக்கவே முற்படுவேன்.
எத்தனையோ பேர் பின்னூட்டம் போட்டவங்களுக்கு நன்றினு கூட சொல்வதில்லை, நான் மெனக்கெட்டு விரிவா பதில் சொல்லிட்டு(என்னளவுக்கு விரிவா பின்னூட்டத்தில் பதில் அளித்தவர்கள் எனக்கு தெரிஞ்சு யாரும் இல்லை) ,தேவையான சுட்டி எல்லாம் கொடுத்து புரிய வைக்க முயற்சிக்கிறேன் பாருங்க எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
இனிமே நானும் வம்படியா வரவங்களுக்கு பதில் சொல்லாமல் இருந்திடுறேன் , எப்பொழுதும் போல் அனைவருக்கும் இவ்விடம் கதவு திறந்தே இருக்கும்,அனைவரும் வரலாம்,மகிழ்வோடு வாசிக்கலாம், ஏன் என்னையும் திட்டிட்டு போங்க இனிமே கண்டுக்க போவதில்லை.
----------------
# //நிதர்சனமான உண்மை. எனக்கு கூட சென்னை அம்பத்தூரில் ஒரு garmant factory தெரியும். Readymade ஆடை செய்கிற இடம். இங்கு வேலை பார்க்கும் பெண்களுக்கும் சம்பளம் மிக குறைவு. //
நீங்க சொல்றது அந்தக்காலமா இருக்கும், இப்போலாம் மாறிப்போச்சில்ல, நம்ம ஊரு ஆட்களுக்கு கொடுக்கிற அந்த சம்பளமே ரொம்ப அதிகமா இருக்காம் முதலாளிகளால் சரியா லாவம் எடுக்க முடியலைனு ,பிகார், ஒடிஷா, அஸ்ஸாம், ம.பி,உ.பி னு ஆட்களை அடிமாட்டு சம்பளத்துக்கு இறக்குமதி செய்து , காண்ட்ராக்ட்டில் வேலை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.
கொடுக்கிற காச வாங்கிட்டு எத்தினி மணி நேரம் வேண்டும்னாலும் வேலை செய்றாங்க. எதுத்து பேசவும் மாட்டாங்க,பேசினால் "எங்க மாநிலத்துல வந்து எங்களையே எதிர்க்கிறியானு , திருட்டு கேசு போட்டு உள்ளத்தள்ளிடுவாங்க, நம்ம போலிசும் , உள்ளூர் முதலாளீகளுக்கு தானே சப்போர்ட் செய்யும்.
அங்காடி தெரு படத்தில கூட இப்படி ஒரு காட்சி வரும்.
# சுமங்கலி திட்டம் பற்றி பல கட்டுரைகள் வந்திருக்கு ,தொகுத்து எழுத வேண்டும் என நினைப்பது ,அப்புறம் அப்படியே மறந்து போயிடுவேன், எப்படியும் எழுதி வச்சிடுவோம்.
திருத்தம்,
//நீங்க சொல்றது அந்தக்காலமா இருக்கும், இப்போலாம் மாறிப்போச்சில்ல, நம்ம ஊரு ஆட்களுக்கு கொடுக்கிற அந்த சம்பளமே ரொம்ப அதிகமா இருக்காம் முதலாளிகளால் சரியா லாவம் எடுக்க முடியலைனு ,//
இந்த டிரெண்ட் சமீபத்தில சென்னை சுற்றுவட்டாரப்ப்குதிகளில் அதிகமா நடக்குது என்பதையும் சேர்த்துக்கொள்ளவும், ஏன்னா எங்க ஊருல அப்படிலாம் இல்ல,இத எப்படி சொல்லலாம்னு சன்டைக்கு வந்திடும் கெரகாட்ட கோஸ்டி அவ்வ்!
மேலும் இப்பவும் நம்ம ஊரு பெண் தொழிலாளிகளுக்கு டிமான்ட் இருக்கு,ஆண்களை தான் புறக்கணிக்கிறாங்க, இதுவும் நான் பார்த்ததை வச்சே சொல்கிறேன்.
ஆக மொத்தம் எதிர்ப்பு அதிகம் தெரிவிக்காத ஒரு அடிமை தொழிளார்கள் கூட்டத்தினை தான் முதலாளிகள் விரும்புறாங்கனு நினைக்கிறேன்.
தாம்பரத்தில மெப்ஸ்னு எக்ஸ்போர்ட் ஸோன் இருக்கு அங்கே மாலையில பார்த்தா கூட்டம் கூட்டமா பெண்கள் தான் வருவாங்க,ஆண்களே ரொம்ப கம்மிய இருப்பாங்க.
எனவே நீங்க சொன்னாப்போல இன்னமும் கார்மெண்ட் தொழிலில்ல பெண்கள் தான் அதிகம் வதைப்படுறாங்க.
இப்போலாம் சின்ன ஹோட்டலுக்கு போனால் கூட நிறைய வட இந்தியர்கள், வடகிழக்கு மாநிலத்தவர்கள் தான் வேலை செய்துக்கிட்டு இருப்பதை பார்க்கலாம்.
பேசும் போது தான் தமிழ் ,தமிழன் எல்லாம் , மற்றபடி உழைப்பை சுரண்ட தோதான ஆட்களையே நம்ம ஊரு முதலாளிகள் தேடுறாய்ங்க அவ்வ்!
அடியேன் விஞ்சானியெல்லாம் இல்லை, ஏதோ வாசிப்பின் வாயிலாக உருவான புரிதலை பகிர்ந்துக்கொண்டுள்ளேன், கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் எவ்வளவு இருக்கோ அவ்வளவு குறைச்சுக்கிட்டு கருத்து சொல்லலாம் @@@@
Nature-ல் publish ஆகும் தகுதியுடைய அறிவியல் கருத்துக்களை அசாதராணமாக எழுதிவிட்டு, கீழேயே மேற்கண்ட disclaimer -யும் எழுதும்பொழுதினில் கணிணியும் keyboard தானாகவே உடையும்படி ஒரு program எழுத வேண்டும், முதலில்.
இதுதான் அறிவியல் தமிழினுடைய சாபக்கேடு.
100 லின்க்கும், சமூகத்தினை பற்றிய (சதா)சிந்தனையும் இருந்தால், எல்லா இழவினைப் பற்றியும் கருத்து சொல்லலாம்.
மொத்தத்தில், அறிவியல் எழுத என்ன தேவை ? Net & சமூகப் பார்வை. அறிவியல் - அது disclaimer போட்டுக்கலாம்.
உயிர கொடுத்து 20-30 வருடம் ஆராய்ச்சி செய்து, எந்தவொரு disclaimer -ம் போடாமல் Paper publish செய்து கொண்டிருக்கிண்ற விஞ்ஞானி மடபசங்களுகெல்லாம் சமூகபார்வை, பன்னாட்டு கம்பெனி சூழ்ச்சி பற்றி ஒரு எழவும் தெரியாது.
உ.ம். IARI-ல் (or any CSIR institute) ஒரு புது BT-cotton-னை உருவாக்குகின்ற விஞ்ஞானி, ஜெய்பால்ரெட்டிகிட்ட அவரே போய் காலில் விழுந்து கேட்டு, சாகின்ற வயசு வரைக்கும் அய்யம்பாளைத்தில் வந்து BT-பருத்திபால் காய்ச்சி வித்து, Bacillus Protein இல்லையென்று நிருபித்து Publish-ம் செய்து சமூகப்பார்வையும் நிருபிக்கனும்.
இதனை நிருபித்தாலும், மீண்டும் வாதத்திற்காக இந்த - சமூக விழிப்புணர்வாத அறிவுஜிவி களப்பணியாள இடதுசாரி போராளி முற்போக்கு வாத பூவுலக காக்கும் பிரபஞ்சத்தின் ஒரே ஒரு சிந்தனையாள தெய்வ மச்சான் - திருப்பி வந்து போட்சுவானாவில் தடை பண்ணியிருக்கங்கா, இந்த பாழாய் போன (இப்படியெல்லாம் Science எழுதினால், அப்புறம்..) இந்தியாவில் தான் இப்படீ.. மியாவ், மியாவ், மியாவு.
இதில் ஒரு இனத்தினை சேர்ந்த பூச்சி மட்டும் சாகிறெதென்று வேறு தனி ஒப்பாரி வேறு. பூச்சிக்கெல்லாம் கவலைப் படுகின்ற நல்லவர்களா நாம். இவ்வளவு நல்ல மனிதர் வாழும் பூமியில் வாழ புண்ணியம் பண்ணியிருக்க வேண்டுமென்று பூச்சிகளின் மாநாட்டில் பேசிக் கொண்டதாம்.
தயவுசெய்து, கருத்துப்பிழைகளை குறிப்பிட்டு குழாயடிச் சண்டைக்கு வரும்படி, தாங்கள் அழைப்பு - நிராகரிக்கப்டுகிறது. என்னால் செத்து செத்து விளையாட முடியாது.
Post a Comment