Wednesday, July 25, 2007

மரத்தின் வயதினை அறிவது எப்படி!

(a car travel thru a giant redwood)

மனிதர்களின் வயதினை அவர்களது பிறப்பு சான்றிதழ் வைத்து அறியலாம், அது இல்லாதவர்களிடம் ஆண்டு, நாள் எல்லாம் அவர்கள் நினைவில் இருந்து சொல்வதை வைத்து தான் அறியவேண்டும், பலர் கப்சா விடக்கூடும் குறிப்பாக பெண்கள் வயதை குறைத்தே சொல்வார்கள்!

இப்படி எந்த சான்றும் இல்லாத , வாய் திறந்தும் பேசாத மரத்தின் வயதினை எப்படி கண்டுபிடிப்பது.உலகில் பல நூற்றாண்டுகண்ட மரங்கள் இன்றும் உயிரோடு உள்ளன.

சில மாண்புமிகு மனிதர்கள் நட்ட மரம் என்றால் பக்கத்தில் ஒரு பலகையும் நட்டுவைப்பார்கள். காட்டு மரங்களுக்கு அப்படி எதுவும் இருக்காதே!

மரங்களின் வயதைப்பற்றி ஆராயும் துறைக்கு டென்ரோகுரோனோலாஜி(Dendrochronology)

முதல் வழி நம்பகமானதும் செலவு பிடிக்க கூடியதுமான கார்பன் டேட்டிங். C-14(isotope) என்ற கார்பன் அணு சோதனை மூலம் வயதினை ஆண்டு,வினாடி சுத்தமாக சொல்ல முடியும்.

மற்ற முறை எளிய செலவு இல்லாத ஒன்று மரங்களில் காணப்படும் வருடாந்திர வளையங்கள்.எல்லா மரங்களிலும் குறுக்கு வாட்டில் அறுத்து பார்த்தால் பல வளையங்கள் இருக்கும் ஒரு வளையம் உருவாக ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டு ஆகும். இப்படி எத்தனை வளையங்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டு வயதான மரம் என சொல்லலாம்!

வயதைக்கண்டுப்பிடிக்க எல்லா மரங்களையும் வெட்ட முடியாது எனவே மரத்தின் மையப்பகுதி வரை துளையிட்டு ஒரு சிறிய துண்டாக ஒரு மாதிரி எடுப்பார்கள், இதற்கு இன்கிரிமென்டல் போரர்(incremental borer) என்ற ஒரு குழல் போன்ற கருவி பயன்படுகிறது.

குழல் பகுதியை நன்கு முடுக்கி மரத்தின் உள்செலுத்துவார்கள் இதன் மூலம் மரத்தின் மையம் வரைஉள்ளப்பகுதி குழலின் உள் சேகரமாகிவிடும். அதனை எடுத்து வளையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பார்கள்.

இப்படி மரத்தின் வருடாந்திர வளையங்கள் மூலம் வயதை நிர்ணயிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.



1)துளையிடுவது மரத்திற்கு எந்தவகையிலும் சேதம் உண்டாக்கதவாறு இருக்க வேண்டும்.

2)விதையிலிருந்து மரம் உருவாகும் முதல் வருடத்தில் சிறு செடியாக இருக்கும் எனவே அப்போது எந்த வளையமும் உருவாகாது எனவே n+1 என வயது வரும்.

3)சில மரங்கள் ஏற்கனவே இருக்கும் மரத்தின் கிளைகளை நட்டு உருவான மரமாக இருக்கும் எனவே அதிலும் சில வலையங்கள் முன்னரே உருவாகி இருக்கலாம். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில தோராயமாக வயதை அறியும் முறைகளும் இருக்கிறது.

மரத்தின் சுற்றளவை நமது மார்பளவு உயரத்தில் அளந்து கொண்டு அதில் இருந்து மரத்தின் விட்டம் ,ஆரம் கண்டு பிடிக்க வேண்டும்.

பின்னர் அதே வகை வேறொரு மரத்தின் ஆண்டு வளைத்தின் மாதிரியில் இருந்து ஒரு வளையத்தின் தடிமனை அளந்து கொள்ளவேண்டும்.ஒரே வகை சேர்ந்த மரங்கள் பெரும்பாலும் ஒத்த தடிமன் உள்ள வலையங்களையே உருவாக்கும். இப்போது நாம் கண்டுப்பிடிக்க வேண்டிய மரத்தின் ஆரத்தை வளையத்தின் தடிமனால் வகுத்தால் வருவது மரத்தின் வயது ஆகும்.

உதாரணம்:

மரத்தின் சுற்றளவு c = 2x22/7xR,
இதிலிருந்து R=50 இன்ச் என வைத்துக்கொள்வோம்
வளையத்தின் தடிமன் =0.5 இன்ச்
ஃ வயது= R/0.5= 50/0.5= 100 ஆண்டுகள்.

Tuesday, July 24, 2007

கணினி ஓவியம் - 2

கணினிப்போட்டிக்கு இன்னொரு படம் , கோயில் குளம்!

கணினி ஓவியம்!

சிந்தாநதி கணினிஓவியப்போட்டி நடத்துவதால் நமது கிறுக்களையும் அனுப்ப வாய்ப்பு கிடைத்து விட்டது, கண்ணை பதம்பார்க்கும் படம் இதோ!

The water falls!

Monday, July 23, 2007

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?

மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?, நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.

ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.

சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,

பெரிய அளவில் அளக்க ,

1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!

வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.

உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்

(weir construction)
இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்
இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.

காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.

இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.

உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.

நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.
( low head dam)


பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.

உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.

Saturday, July 21, 2007

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!


விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை.

வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஈடுபட்டவர்களை பார்ப்போம்!

1)பறக்கும் எந்திரம் பற்றி முதலில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட ,

2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார்.

3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார்.

4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவி மூலாம் ஒரு விமானத்தை 50 மீட்டர் தூரம் பறக்கவைத்தார்.

5)ஓடோ லிலிந்தால் (german)என்பவர் கிளைடர் மூலம் வானில் பறந்து காட்டினார்.

6)இதன் பின்னரே ரைட் சகோதரர்கள்(america) தங்கள் முயற்சியில் இறங்கினார்கள் , கிட்டி ஹாக் , வடக்கு கரோலினா பகுதியில் முதல் பறக்கும் எந்திரத்தை பறக்க விட்டார்கள். அது பை பிளேன் எனப்படும் , 500 மீட்டர்கள் வரைக்கும் பறந்தது , பின்னர் அரை மணி நேரம் வானில் பறந்து காட்டினார்கள், இதன் பின்னறே விமானங்களின் வளர்ச்சி முழு வீச்சை எட்டியது.

விமானம் பறக்ககாரணம் , ஒரு விமானத்தின் மீது செயல்படும் விசைகள் என்னவெனப்பார்ப்போம்!1) மேல் தூக்கும் விசை(lift),

இந்த விசை விமானத்தின் இறக்கைகளின் வடிமைப்பினால் பெறப்படுகிறது. இறக்கையானது மேல் புறம் வளைந்து காணப்படும் அதனால் காற்றில் ஒரு அழுத்த வித்தியாசம் உருவாக்கப்படும். மேல் புறம் அழுத்தம் குறையும் அதே சமயத்தில் இறக்கையின் கீழ்புறம் அழுத்தம் மிகும். எனவே இறக்கைப்பறப்பு மேல் நோக்கி தூக்கப்படும் அதனால் விமானம் மேல் கிளம்ப்பும் , இது விமான எடையை சமன் செய்ய வேண்டும்.அப்போது தான் தொடர்ந்து விமானம் காற்றில் மிதக்கும்.

2) அதற்கு எதிறாக கீழ் நோக்கி செயல்படும் எடை(weight)

3) முன்னோக்கி செயல்படும் உந்து சக்தி(thrust)
இது விமானத்தின் மூக்கில் உள்ள புரோபெல்லர்கள் சுழல்வதால் கிடைக்கிறது ... ஒரு எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் எப்படி காற்றை உள் இழுக்கிறதோ அப்படி செயல்படும் அதன் மூலம் விமானம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

4) இதற்கு எதிறாக பின்னோக்கி செயல்படும் இழுவை சக்தி(drag)

காற்றோடு விமானம் உரசுவதால் ஏற்படும் பின்னோக்கிய இழுவை சக்தி இது , இதனை உந்து சக்தி சமன் செய்ய வேண்டும்.

மேல்நோக்கி செயல்படும் விசை விமான இறக்கை மூலம் எப்படி பெறப்படுகிறது என்பதை விளக்கமாக பார்ப்போம்,

இது இரண்டு விதிகளின் படி விளக்கபடுகிறது ,

1) பெர்னோலி விதி,
2) நியூட்டன் இரண்டாவது இயக்கவியல் விதி!

பெர்னோலி விதிப்படி ...

1)வேகமாக ஒரு திரவம் செல்லும் போது அழுத்தம் குறையும்,

2)ஒரு நீர்மம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இரண்டாக பிரிக்கும் போது இரண்டும் சம தூரத்தை சம நேரத்தில் கடக்கும்.

எனவே பெர்னோலி விதியை செயல்ப்படுத்தும் ஒரு கட்டமைப்பு காற்றில் மிதக்கும்,இதனை காற்றுச்சட்டம் (ஏர் பிரேம்/ஏர் ஃபாயில்) என்பார்கள். இதற்காக விமானத்தின் இறக்கை மேல்புறம் குவிந்து வளைவுடன் இருக்கும் அதனால் மேல்புறம் அதன் பரப்பளவு அதிகமாக இருக்கும்  அதே சமயம் கீழ்புற்ம் சமமாக இருக்கும், எனவே  குறைந்த பறப்பு!

எனவே இறக்கையின் முன்புறம் மோதும் காற்று இரண்டாக பிரிந்து செல்லும் போது மேல் செல்லும் காற்று அதிக தூரத்தை கடக்க நேரிடும் , அதே நேரத்தில்  கீழ் செல்லும் காற்று குறைந்த தூரம் கடக்கும் , ஆனால் இரண்டும் இறக்கையின் பின் புறம் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டும்.

எனவே தானகவே மேல் செல்லும் காற்றின் வேகம் அதிகரிக்கும், அதனால் குறைந்த அழுத்தம் உண்டாகும் அதனுடன் ஒப்பிடுகையில் கீழ் செல்லும் காற்று அழுத்தம் அதிகம் இருக்கும் எனவே இறக்கையின் மீது மேல் நோக்கி ஒரு விசையை உண்டாக்கும்.

இந்த விசையை அதிகரிக்க காற்று இறக்கையின் மீது மோதும் கோணத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக விசைய பெற செய்யலாம்.

நியூட்டனின் விதிப்படி ,விசை = முடுக்கம்xநிறை,
கீழ்புறம் செல்லும் காற்றினை கீழ் நோக்கிய கோணத்தில் திசை திருப்பினால் மேலும் லிப்ட் கிடைக்கும்.

எனவே கீழ் செல்லும் காற்றின் அளவை அதிகரித்தும் , அதனை கீழ் நோக்கிய கோணத்தில் இடப்பெயர்ச்சி செய்ய வைக்க வேண்டும். எவ்வளவு காற்று கீழ் நோக்கி இடப்பெயர்ச்சி செய்றதோ அவ்வளவு எடையை மேல் நோக்கி நகர்த்த முடியும்.

இதனை அதிகரிக்க விமான இறக்கைகளின் பின் விளிம்பில் நகரும் தன்மையுள்ள நீள்ப்பட்டிகள் (எயிலிரான்)இணைக்கபட்டு இருக்கும்.

விமானத்தின் மீது மோதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் லிப்ட் அதிகம் கிடைக்கும் என்பதால் தான் விமானம் பறப்பதற்கு முன் வேகமாக ஓட்டப்படுகிறது.

மேல் எழும்பி பறக்க ஆரம்ப்பித்ததும் முன் செலுத்தும் விசை ப்ரொபெல்லர்கள் மூலம் பெறப்படுகிறது.

மேல் எழும்ப ,கீழ் இறக்க .. இறைக்கைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டிகளை மேல்/ கீழ் நோக்கி நகர்த்துவன் மூலம் செய்யலாம்!

இடம், வலமாக திரும்ப வால்ப்பகுதியில் உள்ள செங்குத்தான அமைப்பு, ரட்டர் எனப்படும் அதனுடன் இணைந்த பட்டிகளை இடது வலதாக திருப்புவதன் மூலம் திருப்பலாம்.

மேற்சொன்ன தத்துவத்தின் அடிப்படையிலேயே நவீன விமானங்கள் உட்பட அனைத்தும் வானில் வட்டமிடுகின்றன.வாய்ப்பு கிடைத்தால் வானில் பறந்துப்பாருங்கள்!

----------------

பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...

சின்ன வயதில் எல்லோரும் பட்டம் பறக்க விட்டு இருப்பீர்கள், அப்படி பறக்க விட்ட எல்லாரும் ஒருவகையில் வானூர்தி பொறியாளர்கள் தான். பட்டம் பறக்க என்ன தத்துவமோ அதன் அடிப்படையில் தான் விமானங்கள் பறக்கிறது. ரைட் சகோதரர்கள் கூட தங்களது விமான மாதிரி செய்வதற்கு முன் பட்டம் பறக்கவிட்டு தான் பறத்தல் குறித்தான சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார்கள்!

பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...

பட்டம் என்பது சதுரமான ஒரு காகிதம் அதன் மீது ஒரு புறம் இருந்து வேகமான காற்று மோதுகிறது ... அப்படி மோதும் காற்று தடைப்பட்டு தொடர முடியாது ஆனால் பட்டம் தவிர்த்த பகுதிகளில் காற்று கடந்து செல்லும் எனவே பட்டத்தின் நேர் பின் புறம் காற்றின் அழுத்தம் குறையும் எனவே முன் பகுதியில் உள்ள கூடுதல் காற்ரழுத்தம் காரணமாக ஏற்படும் விசை பட்டத்தினை பின் நோக்கி தள்ளும்...அதே சமயம் பட்டம் தறைக்கு ஒரு கோணத்திலும் இருப்பதால் அதே கோணத்தில் காற்று செல்லும் அதனை தொடர்ந்து பட்டமும் மேல்னோக்கி தூக்கப்படும்.

இப்படியாக பட்டம் பறக்க ஆரம்ப்பிக்கிறது எளிதாக தெரிந்தாலும் இதன் அடிப்படை தான் விமானம் இயங்க காரணம்.

பெர்னோலி என்பவரின் நீர்மவியல் விதி இதில் செயல்படுகிறது
சுருக்கமாக அதனைப் பார்ப்போம்,

அழுத்தம் + இயக்க ஆற்றல்/ பருமன் = மாறிலி

இது தான் பெர்னோலியின் தத்துவத்தின் சூத்திர வடிவம்
{v^2 \over 2}+gh+{p \over \rho}=\mathrm{constant}

where:

v = fluid velocity along the streamline
g = acceleration due to gravity
h = height of the fluid
p = pressure along the streamline
ρ = density of the fluid
எந்த ஒரு பொருள் அதன் எடைக்கு சமமான காற்றினை இடப்பெயர்ச்சி செய்கிறதோ அதனால் பறக்க முடியும் , மனிதனால் அவன் எடைக்கு இணையான காற்றினை இடப்பெயர்ச்சி செய்ய முடியுமானால் பறவை ஆகலாம்.நீரில் நீந்துவதும் இப்படி தான்! பறவைகள் அத்னால் தான் எடைகுறைவாக , குழல் போன்ற எலும்புகளும், கொண்டு உள்ளது எனவே எளிதாக பறக்க முடிகிறது.
விமானம் பறப்பதை பிறகு பார்ப்போம்!

Thursday, July 19, 2007

நினைவிருக்கும் வரை...

என் நினைவுகளின்

ஆக்டோபஸ் கரங்கள்

கடந்த காலம் ,

நிகழ் காலம்

எதிர்காலம் என

எல்லா திசைகளிலும்

துழாவி என் இருப்பை

நினைவுருத்துகிறது

என் விருப்பமின்றி!

என்னையே தொலைத்த தருணங்களிலும்

நான் என்ற

என் நினைவைத்தொலைத்ததில்லை!

கசப்போ ,இனிப்போ எனது எண்ணங்களின் தொகுப்பே

என்னை தாங்கி நிற்கும் வேர்கள்!

என்றாவது என் நினைவுகள்

மரிக்கலாம்

எனவே என் நினைவுத்தடங்களை

விட்டு செல்கிறேன் இவ்விடம்!

சூப்பர் ஸ்டார்களின் நட்சத்திர கூட்டம்!

நட்சத்திரங்களை ஒரு குழுவாக சேர்த்து அதன் வடிவம் ,தூரம், இயல்புக்கு ஏற்றார்போல பிரித்து நட்சத்திர கூட்டங்கள் என பெயரிட்டு அழைக்கிறார்கள், இது வரை 88 நட்சத்திரக்கூட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 12 மட்டுமே ஜாதகவியல் அடிப்படையில் ராசி நட்சத்திர கூட்டங்கள் எனப்படுகிறது.

சோடியாக் என்பது "zoo" அதாவது விலங்குகள் கூட்டம் என்பதிலிருந்து வந்தது "circle of animals "என்பார்கள்
12 இல் 10 பெயர்கள் விலங்கு பெயர்கள் என்பதை நினைவில் கொள்க!

சரி எதற்கு 12 நட்சத்திரக்கூட்டம் மட்டும் ஜோதிடவியல் எடுத்துக்கொண்டது , பூமி சூரியனை சுற்றிவருவதை ஒரு வட்டம் என எடுத்துக்கொண்டால் , வட்டத்தின் மொத்த டிகிரிகள் 360 அதை தலா 30 டிகிரிகள் எனப்பிரித்தால் 12 வரும் , 30 டிகிரி அளவுக்கு வட்டப்பாதையில் பூமி கடக்க ஒரு மாதம் வரும். எனவே 12 மாதம் , 12 ராசி நட்சத்திரக்கூட்டம். எனவே தான் ஜோதிடர்கள் ஒவ்வொரு மாதமும் சூரியன் இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறான் என்பார்கள்.

ராசி நட்சத்திர கூட்டங்கள்!

தமிழ் - ஆங்கிலம்

1)மேஷம் - ஏரிஸ்
2)ரிஷபம் - டாரஸ்
3)மிதுனம் - ஜெமினி
4)கடகம் - கேன்சர்
5)சிம்மம் - லியோ
6)கன்னி - விர்கோ
7)துலாம் - லிப்ரா
8)விருட்சிகம் - ஸ்கார்பியன்
9)தனுஷ் - சாஜிட்டரியஸ்
10)மகரம் - கேப்ரிகார்ன்
11)கும்பம் - அக்குவரிஸ்
12) மீனம் - பிஸ்செஸ்

மூல நட்சத்திரங்கள் மொத்தம் 27 அவற்றின் தமிழ் பெயர்களும், வானவியல் பெயர்களும். சமஸ்கிருதத்தில் சூட்டப்பட்ட பெயர்களை தான் தமிழிலும் பயன்படுத்துகிறோம் ,தமிழில் தனியே பெயர்கள் இருக்கிறதா? தெரிந்தால் கூறுங்கள்.

1)அஷ்வினி - ஷெராடன்(பீட்டா ஏரிட்டிஸ்)

2)பரணி - 35 - ஏரிடிடிஸ்

3)கிரித்திகா - அல்சியோன்

4)ரோகினி - அல்டிப்ரான்

5)மிருக ஷீர்ஷம் - ஹேகா

6)அர்த்ரா - அல்ஹேனா

7)புனர்வாசு - கேஸ்டர் மற்றும் போல்லக்ஸ்

8)புஷ்யா - டெல்டா கேன்ரி

9)ஆஷ்லேஷா - எப்சிலான் ஹைட்ரா

10)மஹா - ரெகுலஸ்

11)பூர்வ பால்குனி - ஸோஸ்மா

12)உத்தர பால்குனி - டேன்போலா

13)ஹஸ்தம் - டெல்டா கார்வி

14)சித்ரா - ஸ்பிகா

15)ஸ்வாதி - ஆர்க்டஸ்

16)விசாகா - ஸூபென் எல்ஜெனுபி

17)அனுராதா - ஸ்சூபா

18)ஜேஷ்தா - அன்டாரெஸ்

19)மூலம் - ஷாவ்லா

20)பூர்வஷதா - டெல்ட்டா சாஜிட்டாரி

21)உத்ர ஷதா - ஸிக்மா சாஜிட்டாரி

22)ஷ்ரவன் - ஆல்டாய்ர்

23)தனிஷ்தா - ரோடனேவ்

24)ஷத தாரகா - லாம்ப்ட அக்வாரி

25)பூர்வ பத்ர பாதம் - மார்காப்

26)உத்ர பத்ர பாதம் - அல்ஜெனிப்

27)ரேவதி - -ஸீடா பிஸ்ஸியம்

Tuesday, July 17, 2007

ஓடு பாதை இல்லாமல் மேலெழும்பும் விமானங்கள்!

( விமானம் தாங்கி கப்பலின் ஓடு தளம்!)


சென்னைக்கு அமெரிக்காவின் USSநிமிட்ஸ் CVN- 68 என்ற அணு ஆற்றல் விமானம் தாங்கி கப்பல் வந்து சென்றதை அனைவரும் அறிவார்கள். சாதாரணமாக நீண்ட ஓடுபாதை தேவைப்படும் விமானங்கள் எப்படி ஒரு கப்பலின் மேல் தளத்தில் உள்ள குறுகிய பறப்பில் இருந்து பறக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். இதற்காக சில சிறப்பு உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

முதல் விமானம் ஒரு கப்பலின் மேல் தளத்தில் இருந்து பறந்தது 1910 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று USS பிர்மிங்காம் என்ற கப்பல் தளத்தில் இருந்தே , விமானத்தை ஓட்டியவர் யூஜென் எலி(eugene ely) என்பவர். கப்பல் மேலிருந்து ( முதல் விமானம் தாங்கி USSபர்மிங்காம் கப்பல்.)

கிளம்பியதும் கிட்டத்தட்ட கடலில் விமானம் விழுந்து பின்னர் திறமையாக தண்ணீர் பறப்பை முத்தமிட்ட விமானத்தை மேலே கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டும் பறந்தாலும் சரித்திரம் படைத்து விட்டார்.

விமானாம் தாங்கி கப்பல்கள் சாத்தியம் என்பதை இதன் பின்னரே உணர்ந்து ராணுவத்தில் பயன்படுத்தப் பட்டது.

சாதாரணமாக 3000 - 4000 மீட்டர் ஓடுதளம் தேவை ஆனால் மிகப்பெரிய கப்பல் ஆனா நிமிட்சில் உள்ள ஓடுதளம் 320 மீட்டர் தான் எனில் எப்படி விமானங்கள் குறுகிய தூரத்தில் மேல் கிளம்பும்?( நேரான ஒரு ஓடுபாதை படம்)

ஆரம்ப்பத்தில் இலகுவான போர்விமானங்களை மேலே கிளப்ப சற்றே சாய்வான ஓடு தளம் அமைத்தார்கள், அதன் மூலம் கூடுதல் விசை கிடைக்கப் பெற்றது.
(சாய்வான ஓடுபாதை படம்.)

அதிக ராணுவ தளவாடங்கள் ஏற்றி செல்லும் போது இவ்விசை பற்றவில்லை, எனவே கவன்கல் நுட்பம்(catapult)
எனப்படும் ஒரு உத்தியை பயன்படுத்தி மேலே கிளப்பினார்கள்.

கப்பல் மேற்தளத்தில் உள்புதைந்த வாறு ஒரு பிஸ்டன் போன்ற அமைப்பு இருக்கும் அதனுடன் விமானத்தின் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் ,அந்த பிஸ்டன் மிகவேகமா முன் செல்லும் அதனுடன் இனைந்த விமானமும் முன் எடுத்து செல்லப்படும் , விசையுடன் உந்தி தள்ளிவிட்டு இணைப்பு விடுவித்துக்கொள்ளும்.

இதிலும் நவினமாக லீனியர் மோட்டார் இழுவை என்ற உத்தியும் பயன்படுகிறது ,இதன் அடிப்படையில் தான் புல்லட் டிரெயின்கள் வேகமாக இயங்குகிறது.

இது போன்ற முறைகள் இல்லாமல் சில சிறிய ராக்கெட்டுகளை விமானத்தின் பக்கவாட்டில் பொருத்தி குறைந்த தூரத்திலும் மேல கிளப்புவார்கள்(RATO = rocket assisted take off). இத்தகைய ராக்கெட்டுகளுக்கு பூஸ்டர் ராக்கெட் என்பார்கள்.
(ராக்கெட் உதவியுடன் மேலெழும்பும் விமானம்!)

அப்துல்கலாம் இந்திய விமானப்படைக்காக இந்தியாவிலேயே பூஸ்டர் ராககெட்டுகளை வடிவமைத்ததில் ஈடுபட்டவர். பின்னாளில் அந்த பூஸ்டர் ராக்கெட்டுகள் தான் அக்னி ஏவுகணைகளாக மேம்படுத்தப்பட்டது. அக்னி சிறகுகள் புத்தகத்தில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளார் கலாம்.

இதே போன்று ஜெட் உதவியுடன்


விமாங்கள் மேலே கிளப்புவதும் உண்டு. (JATO = jet assisted take off)

இது சாதாரணமாக வடிவமைக்கப்பட்ட போர் விமானங்களை குறைந்த தூரத்தில் மேலே கிளப்புவது . ஆனால் இது போன்று ஓடுபாதையே இல்லாத இடத்திலும் மேலே கிளம்பும் வகையில் வடிமைக்கப்பட்ட சிறப்பு விமானங்களும் உள்ளது அவை வெர்டிகலாக மேலே கிளம்பும் ஹெலிகாப்டர்கள் போன்று, அவற்றின் மூக்கிலும் பெரிய புரொபெல்லர்கள் இருக்கும்.

மின்காந்த சக்தி கொண்டு விமானத்தை செலுத்தும் முறை ஒன்று ஆய்வில் உள்ளது , பரிசோதனைகள் வெற்றி அடைந்தால் அம்முறையில் போர் விமானங்கள் குறைந்த தூரத்தில் மேல் கிளம்பும்!

Thursday, July 12, 2007

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

மின்சாரம் இல்லாத உலகில் இனி மனிதன் இருக்க மாட்டான் , நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டேயுள்ளது , பொறக்கும் போதே கைல செல்ஃபோன், கம்பியூட்டர் நு தான் பொறக்குறாங்க இப்போ, எல்லாத்துக்கும் மின்சாரம் வேணுமே, அரசு இலவச மின்சாரம் தருமா? அதுக்கு எங்கே போகும், ஆனால் கடல் தரும் மின்சாரம் அதுவும் இலவசமா, இது ஒரு மின்சார கனவு இல்லை , உண்மை!

பொதுவா மின்சாரம் , அனல் ,புனல்( எண்ணை ஊத்துற புனல் இல்லிங்கோ), அணு மின்சாரம் எனத்தான் தயாரிக்கப்படுகிறது , இவைகளால் பல சுற்று சூழல் மாசு ஏற்படுவதால் , தற்போது மரபு சாரா மின் உற்பத்தி பக்கம் அரசாங்கம் திரும்பியுள்ளது.

அப்படி மரபு சார மின்சார தயாரிப்புகளில்,

காற்றாலை,
சூரிய சக்தி ,
புவி வெப்ப சக்தி ,
கடல் அலை மின்சாரம் என தயரிக்கப்படுகிறது.

இப்பொ அலை அடிச்சா ஷாக் அடிக்கும் மின்சாரம் எப்படினு வருதுனு லேசா பார்ப்போம்!

கடலும் ,ஆறும் சந்திக்கும் இடங்கள் , அல்லது கடலை ஒட்டியுள்ள கடல் நீர் ஏரிகள்(லகூன்)
ஆகியவற்றில் ஒரு தடுப்பணைக்கட்டுவார்கள் அதில் ஒரு வாய்க்கால்,அல்லது குழாய்களை அமைத்து அதனுடன் டர்பைன் பொருத்தி அதனைக்கொண்டு மினுற்பத்தி செய்வார்கள்.இதனல் சில சுற்று சூழல் பாதிப்பு உண்டு , கழிமுகஙளில் வரும் பறவைகள் ,மற்றும் அது சார்ந்த உயிர் மண்டலம் பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்க கடலில் அலை மின்சார உற்பத்தி மைங்களை தற்போது அமைக்கிறார்கள்.

நடுக்கடலில் தூண்களை அமைத்து அதனுடன் டர்பைன் மற்றும் ஜெனெரேட்டர்கள் பொருத்தி நீர் அடி நீரோட்டத்தின் விசையை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள், இதிலும் ஒரு மேம்பாடு செய்து நீரில் மூழ்கி இருக்கும் டர்பைன்களும் அமைக்கிறார்கள்.



நல்ல கடல் அடி நீரோட்டம் ,அலையடிக்கும் இடங்களில் மிக பெரிய அளவில் மின்னுற்பத்தி செய்யலாம்.

நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு சக்தி மாறுபாடுகளினால் அலை உற்பத்தி ஆகிறது எனவே ஒரு முறை அமைத்து விட்டால் காலா காலத்திற்கும் இலவச மின்சாரம் தான்!

என் கடல் நிறைவதில்லை!

மழைக்காலங்களில்

குளங்கள் நிரம்பி வழிகின்றது

ஏரிகள் நிரம்பிவழிகின்றது !

ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன

எல்லா மழைகாலங்களிலும்

கடல் மட்டும்

காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்

பேராவலுடன் பெற்றுக்கொள்ள!

நானும் அப்படித்தான்!

அன்றும் இன்றும்!

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!

மவுண்ட் ரோட் - அண்ணா சாலை

பூனமல்லி ஹை ரோட் - பெரியார் ஈ.வி.ஆர் சாலை

எட்வர்ட் எல்லியட்ச் ரோட் - டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை

எல்லியட் பீச் ரோட் - சர்தார் படேல் சாலை

மவ்பரிஸ் ரோட் - டி.டி.கே சாலை

கமாண்டர் இன் சீப் ரோட் - எத்திராஜ் சாலை

நுங்கம்பாக்கம் ஹை ரோட் - உத்தமர் காந்தி சாலை

வாரென் ரோட் - பக்தவசலம் சாலை

லாயிட் ரோட் - அவ்வை ஷண்முகம் சாலை

ஆலிவர் ரோட் - முசிரி சுப்ரமணியம் சாலை

மான்டியத் ரோட் - ரெட் கிராஸ் சாலை

பைகிராப்ட்ஸ் ரோட் - பாரதி சாலை

பர்ஸ்ட் லைன் பீச் ரோட் - ராஜாஜி சாலை

ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை

லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் - டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை

சேமியர்ஸ் ரோட் - பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.

கிரிபித் ரோட் - மகா ராஜபுரம் சந்தானம் சாலை

வால் டாக்ஸ் ரோட் - வ.வு.சி சாலை.

ஆர்காட் ரோட் - என்.எஸ்.கே சாலை

உங்களுக்கு தெரிந்த பெயர் மாறிய சாலைகளையும் சொல்லுங்கள். அப்படியே முடிந்தால் இந்த சாலைகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் பார்ப்போம்!

Wednesday, July 11, 2007

பெயரின் மறுபக்கம்!

1)P.T.உஷா - "பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் ".உஷா

2)S.P.பால சுப்ரமணியம் - " ஷ்ரிபதி பண்டித ராயுல ".பாலசுப்ரமணியம்.

3)K.J.ஏசுதாஸ்- "கட்டசேரி ஜோசப்". ஏசுதாஸ்.

4)A.R. ரஹ்மான் - "அல்லா ரக்கா. ரஹ்மான்" (அ) A.S. திலிப் குமார்

5)M.S.சுப்புலஷ்மி - மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி

6)மனோ - நாகூர் பாபு

7)P.B. ஷ்ரினிவாஸ் - "பிரதிவாதி பயங்கரம் "ஷ்ரினிவாஸ்

8)மணிரத்னம் - "கோபால ரத்னம்" சுப்ரமணியன்

9)பாரதி ராஜா - P.சின்னசாமி

10)K.பாலசந்தர் - கைலாசம் பாலசந்தர்

11)சிரஞ்சீவி - கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.

12)N.T.ராமா ராவ் - "நந்த மூரி தாரக".ராமராவ்

13)S.V.ரங்கா ரவ் - "சாமர்லா வெங்கட்ட" ரங்கா ராவ்

14)T.R.பாப்பா - சிவசங்கரன்

15)L.R. ஈஷ்வரி - "லூர்து மாரி" ஈஷ்வரி

16)S.G. கிட்டப்பா - செங்கோட்டை கங்காதர கிட்டப்பா

17)M.R.ராதா - மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.

18)சின்னி ஜெயந் - கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.

19)V.V.S.லஷ்மண் - வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்

20)கவாஸ்கர் - சுனில் மனோகர் கவாச்கர்

21)கபில் தேவ் - கபில் தேவ் ராம்லால் நிகாஞ்

இன்னும் பல பெயர்களின் பின்புலம் பற்றி தேடிக்கொண்டுள்ளேன் , தெரிந்தவர்கள் கூறலாம் , உதாரணமாக ,எம்.எஸ்.விச்வநாதன், எம்.கே.டி., டி.எம்.சவுந்தர் ராஜன் போன்றோரின் பெயர்களுக்கு.

Monday, July 09, 2007

சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:

இன்னாள் - முன்னால்

1)பழனி - திருஆவினன் குடி

2)திருசெந்தூர் - திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை - பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை - செருத்தணிகை

5)மதுரை - மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு - செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி - பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் - ஆருக் காடு!

9)சோளிங்கர் - சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை - நாலுகோட்டை

11)சிதம்பரம் - தில்லை

12)தருமபுரி - தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் - நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை - திரு நல்லுர்

15)எக்மோர் - எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை - சின்ன தறிப் பேட்டை .

17) கோடம்பாக்கம் - கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி - திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் - பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் - குண்சீல நல்லுர் (அ) தர்மபுரம்

இன்னும் பல ஊர்களின் பெயரையும் தேடி வருகிறேன் தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்

Saturday, July 07, 2007

புறக்கணிப்பின் வலி

வெயிலில் நிற்கும்

மரங்கள் தரும்

நிழலில் நடக்கிறார்கள் மனிதர்கள்!

நானோ நிழலை புறக்கணித்து

வெயிலில் நடக்கிறேன்,

எனக்கென துணையாய்

பின் தொடரும்

என் நிழலை புறக்கணிக்க

என்னாலாகாது!

எனக்கு தெரிந்த

புறக்கணிப்பின் வலி

என் நிழலுக்கு தெரிய வேண்டாம்!

பின்குறிப்பு:-
கண்டிப்பாக இதை கவிதை என நான் கூறவில்லை வாசிப்போர் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

Friday, July 06, 2007

தெரிந்த பெயர்களும் தெரியாத பெயர்களும்.

நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு "பாட்ஷா"னு ரஜினி சொல்வது போல!)

புகழ்பெற்ற பெயர் - இயற்பெயர்

ஜீசஸ் கிரைஸ்ட் - ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் - காப்பவர் , கிரைஸ்ட் - தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் - ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் - நஸ்ஸிருதின்

அக்பர் - ஜலாலுதின்

ஜெஹான்கிர் - நூருதின்

ஷா ஜெஹான் - குர்ரம்

அவ்ரங்கசெப் - ஆலம் கிர்

நூர்ஜஹான் - மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் - பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் - மணிக்கர்னிகா

பூலித்தேவன் - காத்தப்ப துரை

மருது பாண்டி - மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் - கருத்தப்பாண்டி

ஊமைத்துரை - சிவத்தையா

தீரன் சின்னமலை - தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் - குமரேசன்

பாரதியார் - சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் - கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் - வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் - சூரிய நாரயண சாஸ்திரிகள்

திரு.வி.க - திருவாரூர் .விருத்தாசலம்.கல்யாண சுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி - தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் - ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் - மருதூர், ஜி - கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா - கோமள வல்லி

ரஜினி காந்த் - அனைவருக்கும் தெரியும் "சிவாஜி ராவ் கெயிக்வாட்" என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்று செல்லமாக அழைக்கப்பட்டர்!

இப்படி அதிகம் வெளியில் தெரியாத பெயரைக்கேட்டாலே ச்சும்மா அதிருதுல.. ..

சக்ரவர்த்தி அசோகர்!


சந்திரகுப்த மெளரியர்

மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய பீகாரின் தலை நகரம், பாட்னா என அழைக்கப்படுகிறது.இவர் இடையர் குலம் , அல்லது சூத்திரர் என சிலர் கூறுவர், மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர் அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர்.காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.

சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மத துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சிரவண பெலகுலாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்கை வாழ்ந்து உயிர் துறந்தார் ,இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது.

பிந்துசாரர்

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார், பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் , சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் /மானின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்(பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப்பொருள் படும்).

பிந்து சாரர் திருநெல்வேலி வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள்.இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.

பிந்து சாரருக்கு பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்ரவர்த்தி அசோகர்!(B.c 271 - 232)

அசோகர் பிந்து சாரருக்கும் அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ் நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.

அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் , சங்கமிதிரையும் ,பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.

கலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.

சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.

கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதையா பிகார்,. கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.

கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறி, புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.

அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் ,குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவில்லை எனவே வஞ்சகமாக அவரை வெளினாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்கள் மூலம் கண்களை குருடாக்கி விட்டார் எனவும் ஒரு சில நூல்களில் உள்ளது.

கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்துள்ளார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து ,திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா).

தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் எளிமையாக வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துனபமானதாகவும், தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை மெய்ப்பித்தார் இல்லை எனில் இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திலேயே சாராநாத் ஸ்தூபி போன்றவை அகழ்வராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது. அது வரையில் அசோகருக்கான வரலாறே இந்தியாவில் இல்லை, வாய்மொழி தகவல்களும், நாட்டுப்புற பாடல்களும் மட்டுமே இருந்தன.

அசோகருக்கு பினனர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படை வீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் மவுரிய அரசர்கள் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினார். அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

பின் குறிப்பு:-

அசோகர் என்றால் சாலை ஓரங்களில் மரம் நட்டார், குளம் வெட்டினார் , சத்திரம் கட்டினார் என்பது வரைதான் பள்ளிகளில் சொல்கிறார்கள் என்பதால் என்னால் முடிந்த ஒரு சுருக்கமான அசோக சரித்திரம். பிழை இருப்பின் திருத்தம் தரலாம்!

Thursday, June 21, 2007

இன்று உலக இசை நாள் மறக்கப்பட்ட இசை மேதை எம்.எஸ்.வி!

கேள்விக்குறி!

எஸ்.ராமக்கிருஷ்ணன், பிரபலமான சிற்றிலக்கிய எழுத்தாளர், தற்போது வெகுஜன ஊடகங்களாகிய விகடனிலும் தொடர் எழுதுகிறார் கேள்விக்குறி என்ற தலைப்பில், இந்த வார விகடனில் மீதமிருக்கும் வலி என்ற பெயரில் அவரது கட்டுரை வந்துள்ளது அதிலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதி!

எஸ்.ராமகிருஷ்ணனின் நண்பர் கூறியதாக வந்துள்ள பகுதி!

என் நண்பரும் இசை விமர்சகருமான ஷாஜியிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் சொன்னார்...எம்.எஸ்.விச்வநாதன் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்! தென்னிந்தியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ லட்சம் பேர் அவர் பாடல்களை கேட்டு ரசிக்கிறார்கள்.அவ்வளவு பெரிய இசையமேதைக்கு இது வரை மிகப்பெரிய அங்கீகாரம் என்று எதுவுமே கிடைக்கவில்லை. தமிழ்த்திரையுலகின் இசை அரசனாக இருந்த எம்.எஸ்.வி. க்கு இன்று வரை மானில அரசு விருதோ, தேசிய விருதோ கிடைத்தது கிடையாது.பத்மஷ்ரி,பத்மபூஷன் போன்ற விருதுகள் எதற்கும் அவர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதில்லை. திரையிசை சாதனை மட்டுமின்றி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இசை மைத்தது போன்ற எண்ணிக்கையற்ற சாதனைகள் செய்துள்ள மனிதரையே நாம் தொலைவில் வைத்துதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

மக்களின் மனதில் நீங்காத இடம் கிடைத்துள்ள அங்கீகாரம் தவிர வேறு விதங்களில் கெளரவப்படுத்தவோ,சிறப்பு செய்யவோ நாம் மறந்து போனோம். அது சரி அவராக வாய்விட்டுக் கேட்கவா முடியும்? என்றார்.

பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கலாம்.ஆனால செய்த பணிக்காக மரியாதையை எப்படி வாய்விட்டுக் கேட்பது?

நம் வாழ்வுடன் ஒன்றுகலந்து விட்ட கலைஞர்களை,நம் மொழியும் வாழ்வும் உயர்வு பெறப் பாடுபட்ட அறிஞர்களை,வல்லுனர்களை, மூதோர்களை அடையாளம் கண்டு கெளரவப்படுத்த வேண்டியது நமது அடிப்படைச் செயல்பாடு அல்லவா?

எவ்வளவு அலட்சியமாக கடந்த காலத்தையும் , மனிதர்களையும் நம் மக்கள் மறந்து விடுகிறார்கள் என்று பார்த்தால் சற்றே பயமாகவும் , வெறுப்பாகவும் உள்ளது இந்த போக்கு எது வரை செல்லும் நாட்டையும் மறக்கும் வரை செல்லுமோ?

இன்று உலக இசை நாள் , எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ....என்ற பாடல் தான் மனதில் கேட்கிறது.கண்ண தாசன் மற்றும் எம்.எஸ்.வி இணைந்தால் இனிமையான பாடல்கள் தான் , அதை இசை அமைத்தவரோ எங்கேயோ மறக்கடிக்கப்பட்டு விட்டார். எம்.எஸ்.விக்கு பின்னால் வந்த கற்றுக்குட்டி இசையமைப்பளர்கள் எல்லாம் பத்மஷ்ரி விருதுகள் வாங்கியுள்ளார்கள் இவரை மட்டும் கவனிக்காமல் விட்டவர்களை என்ன செய்வது என்பது தான் எனது கேள்விக்குறி?

Friday, June 15, 2007

செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!





தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

ஆடு மேய்க்கும் ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப்பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.புதையல் பணத்தில் கோட்டை கட்டியவர் பெயர் ஆனந்த கோன்,அவ்ரது மகன் கிருஷ்ணக் கோன் தான் கிருஷ்ண கிரி உருவாக காரணமாக இருந்தார் பின்னாளில்.

பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும் , கதைகளும் உண்டு.

ராஜ தேசிங்கின் வரலாறைப் பார்ப்போம், மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெரிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக , தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சாமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் மகமூத் கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

மகமூத் கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப் சிங் , ராஜபுத்திர வீரர் அவரது மகன் தான் ராஜ தேசிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்க சீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்ப்பட்டதால் சொருப் சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து ,அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷா ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார்.

ஷா ஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப் சிங்க்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜா தேசிங்கும் சென்றான்.தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான்.வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான் .அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). அவர் சமைந்த நேரம் சரியான நேரம் இல்லை என்பதால் ஆறு மாதக்காலம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்ககூடது என தடை விதித்து விட்டார் பெண்ணின் தந்தை.முகம் பார்க்காமலேயே தான் திருமணம் நடந்து அந்தக்கால காதல் கோட்டை!

-தொடரும்.

சென்னையில் ஒரு மழைக்காலம்!

சென்னையில் என்னைப்போல புனிதர்கள் இருப்பதன் அடையாளமாக இன்று இரவு நல்ல மழை தாராளமாக பெய்கிறது.

ரஜினி ரசிக கண்மணிகள் அவர்கள் தலை படம் வருவதால் தான் சென்னையில் மழை என்று கொஞ்சம் போல உடான்ஸ் விட்டுக்கொள்ளலாம்,யார் கேட்கப் போகிறார்கள்.

மழையைப் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது என்பதால் ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தேன். ஒரு தம் பற்ற வைத்துக்கொண்டு (நமுத்து விட்டது பாதி தம்)

மழை பெய்தால் சினிமாவில் கதாப்பாத்திரங்கள் எல்லாம் ஓடிப்போய் நனைகிறார்கள் (பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கவோ?) நாம் மட்டும் ஒதுங்கி நிற்கிறோமே என்று தோன்றியது ஆனால் நாளைக்கு நமககு தான் மூக்கடைப்பு ,காய்ச்சல் ,இன்ன பிற எல்லாம் வந்து நான்கு விரல் காட்டும் அனாசின் தேவைப்படும்!

மழை பெய்த்ததும் மண் வாசனை வருமே எங்கே காணோம் என்று கொஞ்ச நேரம் மண்டையை பிறாய்ந்துக்கொண்டேன் இந்த கான்கிரிட் காட்டில் அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை என்பதை தாமதமாக விளங்கிக் கொண்டேன்.

சரி அந்த மண்வாசனை வரக்காரணம் ஒரு பேக்டீரியா என்று படித்த நியாபகம் அது என்ன என்று யோசித்து கடைசியில் ஒரு பழைய புத்தகத்தை தேடி கண்டுக்கொண்டாயிற்று, "ஆக்டினோமைசெட்ஸ்" என்ற நுண்ணுயிர் , வறண்ட காலத்தில் ஸ்போர்களை உருவாக்கி மண்ணில் விட்டு செல்லும் மழை நீர் பட்டதும் அவை உடைந்து நுண்ணுயிர் வெளிப்படுகிறது,எனவே மண்வாசனை வருகிறது என ஆழமாக சுவாசித்தால் நுண்ணுயிர் தான் நம் மூக்கில் போகும் ஜாக்கிரதை(பயம் வேண்டாம் நோய் எதுவும் வராது அது ஒரு தாவரங்களுக்கான நுண்ணுயிர்)

Wednesday, June 13, 2007

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.

பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்!

அப்போதைய தமிழக ஆட்சி முறை பாளையம் அல்லது சமஸ்தானம் என்ற பெயரில் நடைப்பெற்று வந்தது.இந்த பாளையக்காரர் முறை தமிழக முறை அல்ல அதனை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவ ராயர் ஆவார். மூவேந்தர் காலத்திற்கு பிறகு தமிழகம் விஜய நகர பேரரசின் கீழ் வந்தது,அப்போது தமிழகத்தை நிர்வகிக்க கிருஷ்ண தேவ ராயரிடம் மெய்க்காப்பாளர்கள்,மற்றும் அரண்மனை வாயில் காப்போன் என பணிபுரிந்த 3 பேரை நாயக்கர்களாக தமிழகத்திற்கு அனுப்பினர்.அவர்களை மதுரை நாயக்கர்கள்,தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்பர், புகழ் பெற்ற திருமலை நாயக்கர், ராணி மங்கம்மா எல்லாம இவர்கள் வழி வந்தோரே. ,அந்த நாயக்கர்களின் கீழ் வரி வசூலிக்கவும் நிர்வாகம் பண்ணவும் உருவாக்கப்பட்டது தான் பாளையம் முறை.

ஒரு பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது. அப்படி ஒரு பாளையத்தை தான் வீர பாண்டிய கட்ட பொம்மன் பஞ்சாலம் குறிச்சியை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார்.தந்தை பெயர் ஜக வீர பாண்டியன்.அவர் பால் ராஜு என்ற பாளையக்காரர் வழி வந்தவர் .

வீர பாண்டியனின் இயற் பெயர் கருத்தப் பாண்டி என்பதே. இரண்டு சகோதரர்கள் சிவத்தையா என்கிற ஊமைத்துரை,மற்றும் துரை சிங்கம் ஆகியோர்.இரண்டு சகோதரிகள் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு.

தென் மாவட்ட பாளையக்காரர்கள் அனைவரும் மதுரை நாயக்கர்களுக்கு வரி செலுத்த கடமை பட்டவர்கள் பின்னர் முகலாய ஆட்சியின் போது ஆர்க்காடு நவாப்புக்கு வரி செலுதினார்கள்.அப்போதைய ஆர்க்காடு நவாப் முகமது அலி என்பவர் வெள்ளையரிடம் கடன் வாங்கியதால் வரி வசுலிக்கும் உரிமையை தந்து விட்டார்.

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் வரி வசூலிக்கும் உரிமையை வாங்க வேண்டும் , காரணம் வெள்ளையர்களின் அனைத்து வியாபரங்களும் பலத்த நஷ்டம் அடைந்து விட்டது , வெள்ளையர்களின் துணிகளை வாங்க அப்போது யாரும் முன் வர வில்லை நம் மக்கள் மேல் சட்டை அணிவதில்லை , குழாய் மாட்டுவதில்லை பின்னர் அந்த துணிகளை எதற்கு வாங்கப் போகிறார்கள்.இங்கிலாந்தில் இருந்து லாபம் ஈட்ட வில்லை எனில் கம்பெனியை இழுத்து மூடி விட்டு வரவும் என இறுதி ஓலை வந்து விட்டது.எனவே வேறு வழி இல்லாமல் வரி வசூலித்து லாபம் ஈட்ட தலைப்பட்டார்கள்.

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.

இன்னும் சொல்ல போனால் வெள்ளையருடன் இனக்கமனவராக இருந்தவர் தான் கட்ட பொம்மனின் தந்தை ஜக வீரபாண்டியன், பூலித்தேவன் முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த போது வெள்ளையருக்கு ஆதரவாக படை வீரர்களை கொடுத்து உதவியுள்ளார் மேலும் பூலித்தேவன் போரில் தோற்று தலை மறைவாக இருந்த காலத்தில் அவரை தேட திருவிதாங்கூர் ராஜவுடன் சேர்ந்து வெள்ளயருக்கு உதவியுள்ளார், அதாவது எட்டையப்பன் செய்தது போன்று.

இதனால் அப்போது தேவர்களை தலைவராக கொண்ட பாளையங்களும் , சமஸ்தானங்களும் தெலுங்கு பேசும் நாயக்கர் வழி வந்த கட்ட பொம்மனின் தந்தை மீது வெறுப்புற்றிருந்தர் இதையே பின்னாளில் கட்ட பொம்மன் வெள்ளையரை எதிர்த்த போது பிரித்தாலும் சூழ்சியின் மூலம் பயண்ப்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

அப்போதைய பாளையங்களில் மூன்று வகையான படை வீரர்கள் இருந்தார்கள்,

அமரம் சேவகம் -பரம்பரை நில உரிமை பெர்ற்று அதிலிருந்து வரும் வருமானத்திற்கு பதிலாக படையில் பணிபுரிவர்.

கட்டுபுடி சேவகம் - பரம்பரை உரிமை இல்லாமல் நிலம் பெறு சேவகம் புரிவர்.

கூலி சேவகம் அல்லது படை - போர்க்காலத்தில் மட்டும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்வர், மற்றக் காலங்களில் இவர்கள் வழிப்பறி ,கன்னம் வைத்து கொள்ளை அடித்து வாழ்வார்கள்.இவர்களின் சேவைக்கு பரிசாக கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் விடுவார் பாளையத்தின் தலைவர் (நம்பித்தான் ஆக வேண்டும !) ஆனால் ஒரு நிபந்தனை உண்டு உள்ளூரில் அதாவது அதே பாளையத்தில் கொள்ளை அடிக்காமல் வெளியில் போய் கொள்ளை அடிக்க வேண்டும்.

இந்த மூன்று வகையான போர்ப்படை சேவைகளை செய்தது முக்குலத்தோர் சமூக மக்களே. இப்படிப் பட்ட படைகளை கொண்டிருந்தால் தான் கட்ட பொம்மனை கொள்ளைக்காரன் எனவும் வெள்ளையர்கள் குற்றம் சாட்டினர். திரைப்படத்தில் ஏன் வரிக்கொடுக்க வேண்டும் என்று வசனம் பேசினாலும் உண்மையில் வரி செலுத்த கட்ட பொம்மன் தயாராகவே இருந்தார். அருகாமை பாளையக்காரர்கள் கட்டபொம்மனை வெறுப்பதும், மேல் உதவிக்கு யாரும் வர மாட்டர்கள் என்பதும் தெரிய வந்ததால் ஒரே அடியாக பாஞ்சாலக்குறிச்சியை தங்க்கள் வசம் படுத்த படை எடுத்து சாதித்துக்கொண்டார்கள்.

எட்டையப்பனுடன் எல்லை தகராறு, தேவர் சமூகத்தினை சேர்ந்த பூலித்தேவனை பிடிக்க கட்ட பொம்மனின் தந்தை உதவியதால் ,பூலித்தேவனின் உறவினரான புதுக்கோட்டை சமஸ்தான ராஜா விஜய ரகுனாத தொண்டை மானுக்கும் வெறுப்பு எனவே அனைத்து வகையிலும் கட்ட பொம்மன் தனிமை படுத்தப் பட்டது தோல்விக்கு வழி வகுத்தது.

மேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.

Tuesday, June 12, 2007

வலைப்பதிவுலகின் விக்கிரமாதித்தன்!



ஹலோ யாரு அது?....

கோன் ஹை?...

மீரு எவரண்டி?...

who are you?...
...

...)))<--)))<--)))<---."வவ்வால்"-->(((-->(((-->((( ...

வவ்வாலா..ஆஆ....ஆஹ்... வந்துடான்யா .....வந்துட்டான்...

பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல .... அதான் வவ்வால்...

(எந்த அதிர்வையும் நீங்கள் உணரவில்லை என்றால் உங்களுக்கு பக்கவாதம் , முடக்கு வாதம் அல்லது அல்ஸீமர் என நினைத்துக்கொள்ள வாய்ப்புண்டு)

போதும் அடங்கு ராசா...!

தலைமறைவா சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதும் இல்லாமல் இப்போ வந்து ஓவரா பந்தா விட்டா தர்ம அடிதான் ஜாக்கிரதை!

இந்த வலைப்பதிவுகள் பக்கம் வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டபடியால் மக்கள் அன்புடன் முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை இணைய உலகின் சுற்று சுவர்களில் ஒட்டி வைத்து துக்கம் கொண்டாடி அல்லது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுவார்கள் எனவே அப்படி பட்ட ஒரு துன்பியல் சம்பவம் நடக்காமல் தடுக்கும் வண்ணம் மீண்டும் எனது குளிர் மற்றும் கோடை கால உறக்கம் கலைத்து மலை மீது இருந்து இறங்கி வந்து விட்டேன்.

நான் வருகையிலே என்னை வரவேற்க எங்கும் வண்ண பூ மழை பொழியவில்லை ஒரே அனல் காற்று தான் அடித்தது சென்னை மாநகர வீதிகளிலும் வலைபதிவு நெடுஞ்சாலையிலும் எப்போதும் மக்கள் சூடும் சுரணையுமாகவே இருக்கிறார்கள் சந்தோஷம்!

வலைப்பதிவுகளின் உள்ளடக்கதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இந்த இடைப்பட்டக் காலத்தில் ஆனால் பல புற தோற்ற மற்றும் எண்ணிக்கை அளவிலான முன்னேற்றம்/ மாற்றம் கண்கூடாக தெரிகிறது , நிறைய புது பதிவுகள், பல புதிய கூட்டணிகள், மாற்றம் ஒன்றே மாறாதது எனவே மாற்றங்களை வரவேற்போம்!

ஆயிரம் பதிவுகள் போட்ட அபூர்வ சிந்தாமணியாக ஒரு புதிய வலைப்பதிவைக் கண்டு உள்ளம் துணுக்குற்றது அது பொன்ஸ் மற்றும் குழுவினரின் கைங்கர்யம் என்பதை கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன்!

இப்படி சில பல மாற்றங்களுடன் தமிழ்வலைப்பதிவுலகம் தளராது பீடு நடைப்போட்டு வருவதை காணும் பொழுது என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது!

ஊரை விட்டு ஓடிப்போய் திரும்பி வந்த" வெயில் பசுபதி" போல சொக்காய் எல்லாம் கிழித்துக்கொண்டு வந்துள்ளேன் எனவே பாசக்கார வலைப்பதிவு மக்கள் எல்லாம் வழக்கம் போல ஆதரவு தந்து என்னைப் போஷிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக்கொள்கிறேன்!

அன்றாட வாழ்கையின் கோரப்பிடிகள் வேதாளம் போல் என்னை பிடித்து அழுத்திக்கொண்டு இருப்பினும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் மீண்டும் வந்து எனது வலைப்பதிவு கடமையை செய்ய தலைப்பட்டுள்ளேன்! உஜ்ஜைனியில் உள்ள காளியிடம் சாகா வரம் பெற்றும் நாடாறு மாதம் காடாறு மாதம் என வாழ நிர்பந்திக்கப்பட்ட விக்கிரமாதித்தன் போல!.

இப்படிக்கு

என்றும் மனம் தளராத
உங்கள் அன்பன்
வவ்வால்.

விக்கிரமாதித்தன் பற்றிய ஒரு வரலாற்று பின் குறிப்பு:-

அம்புலி மாமா புகழ் விக்கிரமாத்தித்தனுக்கு வரலாற்று முகமும் உண்டு அதனையும் பார்ப்போம்.

விக்கிரமாதித்தன் சரித்திர புகழ் பெற்ற இரண்டாம் புலிகேசியின் பேரன் ஆவான்.உஜ்ஜைனியை தலை நகராகக்கொண்டு ஆட்சி பரிபாலணம் செய்தவன்!

விக்கிரமாதித்தன் தனது தாத்தா புலிகேசிக்கு பல்லவன் மகேந்திரன் மற்றும் அவனது மகன் நரசிம்மவர்மனால் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க தமிழகத்தின் மீது படை எடுத்து வந்துள்ளான். போரின் முதல் கட்டத்தில் மணிமங்கலம்(தாம்பரம் அருகேயுள்ளது) , மற்றும் சோலிங்கர் ( சோழசிங்கபுரம் என்பதே சோலிங்கர் என மறுவியது,ஆர்க்காடு அருகேயுள்ளது) அருகே பல்லவர்களை வென்று புறமுதுகிட வைத்தான். மேலும் முழு தமிழகத்தையும் வெல்லும் அவாவில் பாண்டியர்களையும் வெல்ல மதுரை வரை சென்றான்,அக்காலக்கட்டத்தில் சோழ பேரரசு கிடையாது.

அங்கு தான் விதி சிரித்தது விக்கிரமாதித்தனைப் பார்த்து .பாண்டிய மன்னன் கோச்சடை என்பவன(தாய்க்குலங்கள் போடும் இரட்டை ,ஒற்றை சடை அல்ல இது ஒரு பெயர்) நெல்வேலி என்னுமிடத்தில் தீரத்துடன் போரிட்டு விக்கிரமாதித்தனை வென்றான் ,அதனால் கோச்சடைக்கு ரணதீரன் என்ற பட்டம் கிடைத்தது.பின்னர் கோச்சடை ரணதீரன் என்றே அழைக்கப்பட்டான். விக்கிரமாதித்தனுக்கு ரணதீரன்,ரண ரஸிகா என்ற பட்டப்பெயர்கள் உண்டு.

மதுரையிலிருந்து உதைவாங்கி கொண்டு வந்தவனை நரசிம்மன் மீண்டும் பெரும் படை திரட்டிக்கொண்டு வழியில் எதிர்க்கொண்டான் இம்முறை பல்லவனுக்கே ஜெயம்.விக்கிரமாதித்தனை ஓட ஓட விரட்டிக்கொண்டு உஜ்ஜைனி வரை நரசிம்மன் சென்றதாக சரித்திரம் கூறுகிறது.இதனால் நரசிம்மவர்மனுக்கு ரணஜெயன் என்ற பட்டம் கிடைத்தது.

Thursday, October 19, 2006

விடுகதை!

நேற்று என்பது
பழங்கதை!
நாளை என்பது
விடுகதை!
விடை
நாளை மறுநாள்
உயிரோடிருந்தால் தெரியும்!
வாழ்க்கை என்பது
புதுக்கதை!
வாசிக்க வாழ்நாள் தேவை!

இதயம் விடுதலையாகுமோ!

தேன்கூடு அக்டோபர் மாத போட்டிக்கான ஆக்கம்(இப்படிலாம் வேற விளம்பரம் போடனுமா??!!)


மொட்டு மலர்ந்தால்
மறைந்திருக்கும்
மணம் விடுதலையாகும்!
மனம் மலர்ந்தால்
கட்டவிழும்
கவிதை விடுதலையாகும்!
கனவு மலர்ந்தால்
மனக்கவலை விடுதலையாகும்!
ஆனால்
காதல் மலர்ந்தால் மட்டும்
இதயம் சிறைப்படுவதேன்!

Wednesday, October 18, 2006

உயிர்த்துளி!

மரத்தின் வேர்கள்
மண்ணில்
மனதின் வேதனை
என் கண்ணில்!
உருகும் உயிரின்
ஒரு துளி
உறைந்து நின்றது
விழியோரம்
அது காற்றில்
கரையும் முன்னே
காண வருவாயோ
என் கண்ணே!

Tuesday, October 10, 2006

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

கொசுக்கடி தாங்காமல் அர்த்த ராத்திரியில் என் கவிதை உள்ளம் விழித்துக்கொண்டதால் , கடித்த கொசுவை பழி வாங்கும் வன்மம் என் மனதில் கொழுந்து விட்டு எரிந்ததன் விளைவே இந்த சிக்குன் குன்யா கவிதைகள்.


கொசுவை பழிவாங்குறதா சொல்லிட்டு எங்களை ஏன்யா பழி வாங்குறனு புலம்புறது கேட்கிறது என்ன பண்றது கொசுவுக்கு கடிக்க மட்டும் தான் தெரியும் படிக்க தெரியாதே.... உங்களுக்கு படிக்க தெரியுமே... ஹே... ஹே ஹே.
கொசு கடியை விட இந்த வவ்வால் கடி பெரும் கடியா இருக்கேனு திட்டாம ,சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகளைப்படித்து விட்டு சிக்கனமா ரெண்டு வரி பின்னூட்டமாவது போடுங்க மகா ஜனங்களே!.
********************************************************************

* நாட்டில பாதி பேரு ஆண்யா

பெண்கள் தலைல இருக்கு பேன்யா

கொசு கடிச்சா எல்லாருக்கும் சிக்குன் குன்யா..

இது ஏன்யா?

******************************

* குடிச்சா கிக் தருவது

'ரம்'யா

கொசு கடிச்சா வருவது

சிக்குன் குன்யா!

*****************************
* சிக்குனு உடைப்போட்டா

அது டென்னிஸ் சான்யா

பக்குனு கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

****************************
* பெண் டைகர் போல

ஏஸ் அடிச்சா

அது டென்னிஸ் சான்யா!

ஏடிஸ் டைகரிஸ்

பெண் கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

*****************************

* சச்சின் டெண்டுல்கர் தூக்கி அடிச்சா

வரும் சிக்ஸ் ரன்யா!

கொசு ஓங்கி கடிச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* பார்ல கடிச்சுக்க வச்சா

போன்லெஸ்

சிக்கன் துன்யா!

போன்லெஸ் கொசு

கடிச்சு வச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* அரட்டை அரங்கம்

நடத்தியது விசு

கொரட்டை விடும் மனிதனை

கடிப்பது கொசு!

Monday, October 09, 2006

எங்கே எந்தன் வெண்ணிலா!...

காற்று வெளியில்

கட்டி வைத்தேன்

கதவில்லா மேகக்கோட்டை!

மின்னல் கொடியில் தோரணம் கட்டி

மினுக்கும் நட்சத்திர விளக்கமைத்து

நாட்தோறும் காத்திருந்தேன்

விளக்கேற்ற வருமா எந்தன்

வெண்ணிலா என்று!

எங்கே என் முகம்!

கொஞ்சம் பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது இம்சைகள் துவங்கிவிட்டது இதோ முதல் போனி! அனுபவி ராஜா அனுபவி...

கனவில் ஒரு முகம்,

நினைவில் மறு முகம்,

நிஜத்தில் வேறு முகம்,

நீ காண்பதொன்று,

நான் காண்பதொன்று,

யார் காண்பது என் முகம்?

எனக்கே தெரியவில்லை

எவருக்கேனும் தெரிந்தால் கூறுங்களேன்!

மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்



மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்!

வணக்கம் நண்பர்களே!

நகர்ப்புரத்தில் சுற்றுப்புறம் மாசடைந்துவிட்டதால் ஒரு மாறுதல் வேண்டி சிறிது காலம் வனவாசத்திற்கு சென்று விட்டேன்.ஆனால் வவ்வாலை என் நேசமிகு வலைஞர்கள் வலை வீசி தேடி வருவதாகவும், வவ்வால் இல்லாமல் வலைப்பதிவுலகம் சுரத்தின்றி தொய்ந்து விட்டது விரைந்து வந்து எங்களை எல்லாம் காத்தருள வேண்டும் என்று கைப்பேசி குறும் செய்தி(எஸ்.எம்.எஸ்),மின்னஞ்சல், தொலை ஒளி நகல் (ஃபேக்ஸ்),தந்தி, அஞ்சல் அட்டை போன்ற பலவற்றின் வாயிலாகவும் விடாத அழைப்புகள் வந்தமையால் அன்பர்களின் அழைப்பிற்கு செவி மடுத்து, என் வனவாசத்தை பாதியில் முடித்துக்கொண்டு மீண்டும் தமிழை காக்க ஓடொடி வந்து விட்டேன்.

என் உடல் பொருள் ஆவி எல்லாம் அர்ப்பணித்து தொய்ந்து விட்ட வலைப்பதிவு உலகிற்கு முட்டு கொடுத்து நிமிர்த்துவதே எனது தலையாயப் பணி என்பத்தை தட்டச்சு விசைப்பலகை மீது ஓங்கி அறைந்து உறுதி கூறிக்கொள்கிறேன்.

அவ்வப்போது அஞ்சாத வாசம் சென்றாலும் எப்பொழுதெல்லாம் தமிழுக்கு தொய்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் வவ்வால் அவதரிப்பான்!(தலைமறைவு ஆனதும் இல்லாமல் . இதுல ஓவர் அலம்பல் வேறயா அடங்குய்யா)
சரி இத்தோட நிப்பாட்டிப்போம் இல்லைனா நம்ம பதிவ படிக்கிற ஒண்ணு ரண்டு மக்களும் ஓடிப்போய்டுவாங்க ..ஹே ஹெ..ஹே மீண்டும் வவ்வால் இம்சைகள் தொடறும்...

Friday, June 23, 2006

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்கும் பணி

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்கும் பணி மீண்டும் அரங்கேறுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(NLC தமிழகம்) தேசிய அலுமினியம் கம்பெனி(NALCO),ஒரிசா ஆகியவற்றில் உள்ள அரசின் பங்குகளில் 10 சதவீதம் பொது விற்பனைக்கு விற்க இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.இதன் மூலம் 2500 கோடி(NALCO-1400 CR, NLC-1100 cr) மூலதனம் திரட்டப்படும்.இதில் 75% சமுதாயப்பணிகளுக்கும் 25% நலிவடைந்த பொது துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் செலவழிக்கப்படும் என சொல்கிறார்கள்.

இதில் தமிழகத்தை சார்ந்த NLC யின் பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்க தி.மு.க,பா.ம.க போன்ற தமிழக கட்சிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பது வருத்தம் அளிக்க கூடியது மட்டுமல்ல ,அவர்களின் மெத்தனப்போக்கு கண்டிக்க தக்கதும் கூட.

தமிழக கட்சிகள் ஒரு காலத்தில் NLC யை தனியார் மயம் ஆக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடத்தின ,இப்போழுது அந்த போராட்டக்குணம் எங்கே போயிற்று.

பங்கு சந்தை சரிவைக்கண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பங்கு சந்தை சரிவை தடுக்கலாம் என்பது நிதியமைச்சரின் குறுகிய கால கணக்காக இருக்கலாம். NLC யின் மிகப்பெரிய தொழிற் சங்கமான தொ.மு.ச. தி.மு.க சார்புடையதே அவர்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் எனப்பார்க்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் தேர்தல் காலங்களில் தனியார் மயம் ஆதலை தடுக்க எங்களுக்கே வாக்கு போடுங்கள் என கோரியவர்கள்.சமீபத்தில் தேர்தல் எதுவும் வராது எனவே சத்தம் போடாமல் அடக்கி வாசிப்பார்களோ!

லாபத்தில் நடப்பதை விற்று காசு வாங்குவதற்கு பதில் நஷ்டத்தில் இயங்குவதை விற்று நிதி திரட்டலாம்,மேலும் அரசின் செலவீனங்களும் குறையுமே! நலிவடைந்த நிறுவனம் விலைப்போகாது என்று சொல்லலாம் அதையும் வாங்க ஆள் இல்லாமலா போவார்கள்.

Thursday, June 22, 2006

ஆராரோ ஆறு யாரோ ....



ன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பென்ச் மேல் நிக்க வைக்கும் டீச்சர் போல் எங்கே அந்த ஆறு என்று என்னை கடுமையாக விரட்டி விரட்டிக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடாங்க பொன்ஸ்(உன்னை எல்லாம் ஆறு போட சொல்லி கூப்பிடனே என் புத்திய... அப்படினு புலம்புறாங்க) ,இதுக்கு மேலே தாமதம் செய்தால் யானைக்காலால் இடறி சிரச்சேதம் செய்தாலும் செய்வார்கள் என்று உடனே போட்டு விட்டேன் எனது ஆறை.ஒரு வவ்வாலையும் ஆட்டத்திற்கு அழைத்தற்கு நன்றி! ஆர்.டி.ஓ கிட்டே கூட 8 போட்டு லைசென்ஸ் எளிதாக வாங்கிடலாம் போல இருக்கு இந்த ஆறு செமையா படுத்துது.ஒரு தடவை தட்டச்சு செய்து பிளாக்கர் சொதப்பலால் காணாம போய்டுச்சு (சி.பி.ஐ கிட்டெ தேட சொல்லனும்)ஒரு வழியா நானும் களத்தில் ஆறோட குதிச்சுட்டேன்!

I)பிடித்த நூல்கள்/எழுத்தாளர்கள்:

1)காதெலுனும் தீவினிலே- குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி:

குமுதத்தில் தொடராக வந்த நாவல்.குமுதம் ஆசிரியர் அதிகம் எழுதிக்குவிப்பவர் அல்ல ஆனால் எழுதிய சிலக்கதைகளில் முத்திரைப்பதித்தவர்.ஏழைக்காதலன் பணக்காரப்பெண்ணை காதலிக்கும் எவர் கிரீன் பார்முலா தான் ஆனால் வித்தியாசமா இருக்கும்.

2)சங்கர்லால் கதைகள்- தமிழ்வாணன்:

தமிழ்வாணனின் தொப்பி,கருப்புக்கண்ணாடி படு பிரசித்தம் அவரது சங்கர்லால் போல. தமிழ் நாட்டின் ஷெர்லாக் ஹோம்ஸ் சங்கர்லால்.அடிக்கடி தேநீர் அருந்துவது ,சத்தம் கேட்காத ரப்பர் காலணி என்று ஒரு மார்க்கமான துப்பறியும் நிபுணர் ஆக வருவர்.நியுயார்க்கில் சங்கர்லால், ஹாங்காங்கில் சங்கர்லால் என உலகம் சுற்றி துப்பறிந்தவர்.

3)கடல் புறா - சான்டில்யன்:

சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் பிடிக்கும் ,அதுவும் அவரது பெண்களைப்பற்றிய வர்ணனை தீப்பிடிக்க வைக்கும்.புரவி,மரக்கலம் எல்லாம் இல்லாமல் ஒரு சமூக நாவல் கூட எழுதியுள்ளார் படித்துள்ளேன் பெயர் நினைவில்லை.இவரைப் பின்பற்றி கோவி.மணிசேகரன், மு.மேத்தா(சோழ தீபம்) எல்லாம் எழுதிப்பார்த்தார்கள் சாண்டில்யனின் நிழலை கூட தொடமுடியவில்லை.

4)கரித்துண்டு- மு.வரதராசன்:

கரித்துண்டு சாலையோரத்தில் படம் வரைந்து ஜீவனம் செய்யும் ஒரு ஓவியனின் கதை.இதில் ஒரு உளவியலை சொல்வார் அவன் வரையும் படங்களில் கால் இருக்காது ஏனெனில் அவனுக்கும் கால் இல்லை என.இப்பொழுதும் சாலையில் படம் வரைந்து காசு கேட்கும் ஓவியர்களைப்பார்த்தால் இந்த கதை தான் நிழலாடும்.பெரும்பாலும் கடவுள் படங்களையே வரைகிறார்கள் இத்தகைய ஓவியர்கள்

5)சுஜாதா கதைகள்:

இவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை சகலகலா வல்லவர்.இவரின் அனைத்து கதைகளும் பிடிக்கும். ஸ்ரிரங்கத்து தேவதைகள் கதைகள் சிலிர்ப்பானவை.சுஜாதாவும் மெக்ஸிகோ சலவைக்காரியும் பிரிக்க முடியாதவர்கள் :-)).விஞ்ஞானக்கதைகளில் வித்தகர்.கணேஷ்- வசந்த் என்ற இரட்டையர்களை வைத்துக்கொண்டு சமகாலத்தையும் பேசுவார் சோழர் காலத்தில் பெண்கள் மார்கச்சை அணிவதில்லையாம் பாஸ் என்றும் ஜொள்ளுவார் வசந்த் மூலமாக!

6)வீரப்பிரதாபன் கதைகள்- வாண்டுமாமா:

வாண்டுமாமா என்ற குழந்தைகள் கதாசிரியர் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஜே.கே ரவ்லிங் கின் ஹாரிப்பாட்டர்களுக்கு எல்லாம் தாத்தா இவர்.வீரப்பிரதாபனின் குதிரையின் காதில் ஒரு மந்திரம் சொன்னால் வானில் பறக்கும்.ஒரு குளிகையை வாயில் அடக்கிக் கொண்டால் மாயமாக மறையலாம். ஆலோசனை சொல்ல கூட ஒரு கட்டை விரல் சைஸ் குள்ளன் வேறு இருப்பான்.

II) பிடித்த திரைப்படங்கள்

1)கர்ணன் - சிவாஜி:

சிவாஜியின் கலக்கலான நடிப்பில் வந்த படம்.கர்ணன் கதாப்பாத்திரம் ஒரு சூழ்னிலைக் கைதி அதனை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பர்

2) முள்ளும் மலரும்-ரஜினி:

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற கிரீடம் எல்லாம் சூட்டப்படாத காலத்திய படம் இயல்பான நடிப்பைக் காட்டி இருப்பார். செந்தாழம் பூவில் ...என்ற பாடல் கேட்டால் காதுகளை விட்டு நீங்காது ஒலிக்கும்

3)ரத்தக்கண்ணீர்-எம்.ஆர்.ராதா :

வில்லத்தனமாக நடித்தே சமூகத்திற்கு மெஸ்ஸேஜ் தந்தவர்.அள்ளி அள்ளி கொடுத்தேனே அடியே காந்தா ... வசனமும் குற்றம் புரிந்தவன் ..பாடலும் மறக்க முடியாதவை

4)ஒரு தலை ராகம்:

சோகமான காதலை இனிமையான பாடல்களுடன் சொன்னப் படம் .இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ராஜேந்தரா இப்படியெல்லாம் படம் எடுத்தார் என்று ஆச்சரியப்படுவார்கள்.இப்போது முரளி செய்த வேலையை அப்போது செய்தவர் சங்கர்

5) மூன்றாம் பிறை-கமல்:

உணர்வுப்பூர்வமான படம், கமலின் கிளைமாக்ஸ் நடிப்பு பிரமாதம் என்பார்கள் ஆனால் அந்த கிளைமாக்ஸ் எனக்கு நாடகத்தனமாகவே தோன்றியது. இயக்குனர்களை கமல் இயக்காத காலத்தில் வந்த படம் என்பதால் பாலுமகேந்திராவின் இயக்கதில் ராஜாவின் இசையில் இயல்பாக இருக்கும் .கண்ணே கலைமானே... எந்த காலத்திலும் தெவிட்டாத பாடல்

6)காதலுக்கு மரியாதை-விஜய் :

காதலியுடன் கனவுப்பாட்டு பாடும் போது ,அது வரைக் குடும்ப குத்து விளக்காக காட்டிய நாயகியை குறைந்த பட்ச உடையில் ஆடவிடுவார்கள்.அப்படியில்லாமல் நாகரீகமாக காதலை சொல்லி மரியாதை செய்து மரியாதை வாங்கிய படம்.என்னை தாலாட்ட வருவாளா... பாடல் காதுகளுக்கு உண்மையான தாலாட்டு.

III)பிடித்த விளையாட்டு

1)கோலிக்குண்டு :

கோலிகுண்டில் பேந்தா என்று ஒரு வகை சுவற்றுக்கு பக்கத்தில் செவ்வக பெட்டி போல கோடு போட்டு இரண்டு சின்ன கோலி ஒரு பெரிய கோலி வைத்து ஆடுவார்கள் அதில் அய்யா சூரப்புலி. ஒலிப்பிக்கில் இதை எல்லாம் சேர்க்க மாட்டேன்கிறார்கள். சேர்த்தால் ஒரு தங்கம் நிச்சயம்.ஆட்ட விதி, பந்தய தொகை என சந்தேகம் இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்!

2)காத்தாடி விடுவது:

காத்தாடி விட்டு டீல் விடுவதிலும் எக்ஸ்பெர்ட் தான். இப்போ கூட பலரது வலைப்பதிவில் போய் பின்னூட்டமிட்டு டீல் விடுவதெல்லாம் அங்கே கத்துகிட்டது தான் :-))

3)கிரிக்கெட்:

கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் நாம். அதிலும் ஸ்பெஷல் ஒரு ஓவரில் 3 பந்துகளை வலது கையாலும் 3 பந்துகளை இடது கையாலும் வீசி ரொம்ப டார்ச்சர் தருவேன்.(எனக்கு நோ பால் தந்துடுவானுங்க ரூல்ஸ் தெரியாத தத்திங்க)

4)சதுரங்கம்:

விஸ்வநாதன் ஆனந்த் வரவில்லை என்றால் அவர் இடத்தை நான் தான் நிரப்பி இருப்பேன் :-))

5)டேபிள் டென்னிஸ்: இந்த இரண்டு விளையாட்டும் நேரம் கிடைத்தால் ஆடுவது.
6)பேட்மின்டன்

IV)பிடித்த உணவு

1) பழைய சாதம், மோர், மாங்கா ஊறுகாய்:

மோர் ஊத்தி பழைய சாதத்திற்கு மாங்கா ஊறுகாய் தொட்டுகிடு சாப்டா ஜம்ம்னு இருக்கும். உடம்புக்கும் நல்லது.


2)முட்டை தோசை:

முட்டை தோசை மேல மிளகு பொடி தூவி ,காரசட்னி வைத்துகொண்டு சாப்டா சும்ம நச்சுனு இருக்கும்

3) இட்லி காரசட்னி:

இட்லி கூட கார சட்னி இல்லைனா கத்திரிக்கா கொத்ஸ்து இருந்தா ஒரு டஜன் இட்லி சகஜமா உள்ள இறங்கும்.

4)மாகி நூடுல்ஸ்(நானே செய்வதால் நல்லா இருக்கும்):

ஆபாத்பாந்தவன் இந்த மாகி நூடில்ஸ் அதனாலேயே நமக்கு புடிக்கும்

5)ரசம் சாதம் -தக்காளி ரசம் அரிசி வத்தல் அல்லது உருளை கிழங்கு வருவல். எதேஷ்டம். நல்லா எளிதா ஜீரணம் ஆகும்.

6)பிரெட் ஆம்லெட் :

இதுவும் அப்படி தான் எப்போ வேனா பசிக்கு உடனே தயார் ஆகிடும் சமயத்தில சைட் டிஷ் ஆகவும் பயன்படும்.

V)பிடித்த பானங்கள்:

1)ஏலக்காய் போட்ட டீ:

மழைக்காலத்திலே கொதிக்க கொதிக்க ஊதி ஊதி குடிக்கணும். தம் டீ என்று கேன் ல இருக்க டீ சொல்வாங்க நாங்க எல்லாம் ஒரு தம் அடிச்சுட்டு டீ குடிக்கிற ஆளுங்க!(கடைசில மறக்காம ஒரு ஹால்ஸ் இல்லைனா மெந்தோ போட்டுகணும் வாய்ல)

2) சுக்கு காபி/பிளாக் காபி:

சுக்கு காபியும் தொண்டைக்கு இதமானது. வீட்டில போட்டு குடிக்கிறது சமயத்தில ரோட்ல சைக்கிளில் சுக்கு காபி வித்துகிட்டு போவங்க அதையும் வாங்கி குடிக்கிறது.(அவங்க எப்படி போடுவாங்கனு ஆராய்ச்சிலாம் பண்ணா குடிக்க முடியாது)

3) சாதம் வடித்த கஞ்சி:

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சூடான கஞ்சி தண்ணி குடிக்கிறது உண்டு. சாதத்தில இருக்க சத்தெல்லாம் தண்ணில போகுது அதனால அதை மீண்டும் அடைய ஒரு வழி. சூப்பரா இருக்கும்

4)மோரில் எலுமிச்சம் பழம் பிழிந்து:

இப்படிக்குடித்தால் உடல் குளிர்சியடையும் ,காலையில் வெறும் வயிற்றில் குடிக்கணும்.

5)ராயல் சேலஞ்ச் (விஸ்கி):

நம்ம வசதிக்கு இதான் சரிப்படும் அயல்னாட்டு சரக்குலாம் கைய கடிக்கும். இதிலும் நான் பல பரிசோதனைகள் செய்து இருக்கேன் அதெல்லாம் சொன்னா இடம் போதாது. சாம்பிளுக்கு சில. மிக்ஸிங்கு கோக்/பெப்சி லாம் பயன்படுத்த மாட்டேன் ,கொய்யா ஜூஸ்,(பொன்ஸ் உங்களுக்கும் கொய்யா ஜூஸ் மட்டும் தானே பேவரைட்) ஆப்பிள் ஜூஸ், மாதுளம் ஜூஸ் என்று பழச்சாறுகளை தான் பயன் படுத்துவேன்.
ஆல்கஹாலின் தீமையை குறைக்க :-))

ஒரு நாள் கொஞ்சம் வித்தியாசமாக குளுக்கோஸ் ஆரஞ்ச் கலந்து கூட குடிச்சாச்சு (இப்படி குடித்தா அதிகமா கிக் வந்து தூக்கிடும் கவனமா ட்ரை பண்ணனும் )

6)புல்லட் பீர்:

புல்லட் பீர் நல்லா ஸ்ட்ராங்க் ஆக இருக்கும் சமயத்துல அதுல வே சரக்கையும் மிக்ஸ் பண்ணி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்க் ஆக்கிடுவேன் :-))

VI) அழைக்க விரும்பும் ஆறு

1)சுப்பிரமணிய பாரதி
2)இராமலிங்க அடிகளார்
3)கவிஞர் கண்ண தாசன்
4)நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ்
5)ஆல்பிரெட் ஐன்ஸ்டீன்
6)நெப்போலியன் போனபார்ட்.

இவர்களை எல்லாம் அழைக்க முடியாது ,அழைத்தாலும் வரமுடியாத இடத்தில் இருக்கிறார்கள்.வலைபதிவுலாம் இல்லாத காலத்திலேயே நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க!
எனவே வலையுலகில் இருக்கும் ஆறு பேரை அழைக்கிறேன்..

1)வெளிகண்ட நாதர்
2)திராவிடதமிழர்கள்

3)பத்ரி
4)மா.சிவக்குமார்
5)யாத்திரிகன்
6)பாடும் நிலா பாலு சுந்தர்

இப்படி ஆறு பேரை அழைப்பதில் தான் பெரும் சிக்கலே யாரை அழைக்க ,விட என முடிவெடுக்க முடியவில்லை.முன்பே சிலரை அழைத்து விட்டார்கள். எனவே என்னால் முடிந்த வரை ஒரு 6 பேரை அழைக்கிறேன் பெரிய மனசு பண்ணி வந்து உதவுங்கள்.

Saturday, June 10, 2006

காதல் வளர்சிதை மாற்றம்!




இருண்ட கிணற்றின் சுவர்களில்

எவரும் அறியாமல் கசியும்

நீர்த்தாரைகளைப் போல

என் இதயத்தின் நாளங்களில்

உன் நினைவுகள் கசிகின்றன!

இலையுதிர் காலத்து மரத்தில்

இளைப்பார நிழல் தேடும்

ஊர்க்குருவியைப் போல

என் மனம்

திக்கு தெரியாத மனிதக்கூட்டத்தில்

புறக்கண் மூடி

அகக் கண் திறந்து

தேடி அலைகிறது

என் இதயம் மட்டுமே

அறிந்த முகத்தை!

முகம் தேவை இல்லை உணர

மூச்சுக் காற்றே போதும்

உன் வரவை எனக்கு சொல்ல!

தற்செயலான விழி தீண்டலில்

என் இதயக்கூட்டில்

உறங்கும் உணர்வுகள் சிலிர்த்து

எந்தன் காதல் முகிழ்த்து வளர்ந்ததில்

எந்தன் இதயம் சிதைந்து

சிறைப்பட்ட உணர்வுகள் பொங்கி

பிரவாகம் எடுத்தது கவிதையாக!

நானும் கவிஞன் ஆனேன்!

இது தான் காதல் வளர்சிதை மாற்றமோ!

------------------------------------------------------------------------------------------------

ஒரு பிற்சேர்க்கை!

காதல் வளர்சிதை மாற்றம்! - வவ்வால் 9.2% (11)


இந்த கவிதை தேன்கூட்டின் மாதாந்திர போட்டியில்(ஜூன்) கலந்துகொண்ட ஒன்று,அதிகம் அறிமுகம் இல்லாத எனது வலைப்பதிவையும் படித்து கவிதையை நேசிக்கும் 11 ஆத்மாக்கள் வாக்களித்துள்ளன,அவர்களுக்கு தெண்டனிட்டு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

எனது வலைப்பதிவு மறுமொழியிடப்பட்டவை என தமிழ்மணத்தின் முகப்பில் அடிக்கடி தோன்றி மின்னாது,ஏனெனில் நான் மட்டுறுத்தல் பயன்படுத்தவில்லை,அது வாசகர்களின் மனதை உறுத்தும், பின்னூட்டம் இட்டோமே அது எப்போது வரும் என காத்திருக்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.பின்னூட்டம் இட்டதும் அது உடனே தோன்றுவதை பார்த்து சிறிது மனம் ஆனந்திக்கும் வாசகர்களுக்கு அதனை ஏன் கெடுக்க வேண்டும். ஒரு சிறிய மன நிறைவு கிட்டும் அவர்களுக்கு. அது தான் என்னால் முடிந்த பதில் மரியாதை.

அப்படி இருந்தபோதிலும் 11 வாக்குகள் கிடைத்திருப்பதை எண்ணி ... எண்ணி(11 முறை எண்ணி) மனம் இரும்பூது எய்துகிறது.பேரில்லா உவப்பு அடைகிறது! வெற்றி தோல்விகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. மேலும் ஆக்கப்பூர்வமாக பின்னுட்டம் இட்ட அன்பர்களுக்கும் நன்றி! வெற்றிப்பெற்றோர்க்கு வாழ்த்துகள்!

Thursday, June 08, 2006

சாதனை இளைஞர் அப்துல் கலாம்!



இந்திய விமான படையின் சுகோய்- 30.எம்.கே.ஐ என்ற ரஷ்ய தயாரிப்பு மீ ஒலி வேகத்தில்(super sonic fighter jet) பறக்கும் யுத்த விமானத்தில் இந்திய அதிபர் திரு."அவுல் பக்கீர் ஜெயினுலாபிதின் அப்துல் கலாம்" 30 நிமிடங்கள் பறந்து சாதனைப்படைத்துள்ளார்.யுத்த விமானத்தில் பறந்த முதலாவது இந்திய அதிபர் இவரே,இதற்கு முன் நீர் மூழ்கி கப்பலில் 3 மணி நேரம் பிரயாணம் செய்தும் சாதனை படைத்துள்ளார்! வித்தியாசமான ஏவுகனை விஞ்ஞானி நம் நாட்டின் அதிபராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே!

புனேயில் உள்ள இந்திய விமான படை விமான தளத்தில் இருந்து விங்க் கமாண்டர் அஜய் ரத்தோர் செலுத்த 30 நிமிடங்கள் மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் கலாம் பயணம் செய்த விமானம் பறந்துள்ளது.திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு 75 வயது ஆகிறது இந்த வயதில் இது ஒரு மகத்தான சாதனையே ,எனவே இளைஞர்கள் எத்தனை சாதிக்கலாம் என எண்ணிப்பார்க்க வேண்டும்! நமது அதிபரின் விருப்பமும் அதுவே இளைஞர்கள் அரிய சாகசம் நிகழ்த்த வேண்டும் ,உயர் தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என மக்களுக்கு குறிப்பாக இலைஞர்களுக்கு செய்தி விடுத்துள்ளார்!

திரு. அப்துல் கலாம் விஞ்ஞானி மட்டும் அல்ல சிறந்த சிந்தனையாளரும் கூட அவரது அக்னி சிறகுகள்,இந்தியா விஷன் 2020 போன்ற நூல்கள் விற்பனையில் சாதனைப்படைத்தவை!

Monday, May 29, 2006

மெய் தேடல்!



நதியை தேடியலைந்தேன் பாலைவனத்தில்

நல்ல இதயத்தை தேடியலைந்தேன் நகரத்தில்

மெல்லிசையைத் தேடியலைந்தேன் மயானத்தில்


நெருப்பைத் தேடினேன் நீர்க்குடத்தில்

நிலவைத் தேடினேன் அம்மாவாசையில்

நித்திரையை தேடினேன் நீயில்லாமல்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த பின்னும்!

இருக்குமிடத்தை விட்டு

இல்லாத இடங்களில்

திக்கெட்டு திசையும் தேடினேன்

தேடிக்களைத்தும் தீரவில்லை தேடல்!

மீண்டும் துவங்கியது தேடல்

என்னுள்ளே எதையோ தேடினேன்

எதுவும் கிடைக்கவில்லை ஏமாற்றத்தை தவிர!



Sunday, May 28, 2006

பார்க்க...ரசிக்க

சூப்பர் ஸ்டார் தொண்டர் செல்வன் அவர்களுக்காக இந்த படங்கள்,பார்க்க...ரசிக்க










காத்திருத்தலே தொழிலாய்....




உயிர் பிரிந்த பின்னும்

சுவாசித்திருப்பேன் உன் நினைவில்!

உதிர்ந்த பின்னும்

மணம் வீசும் உதிரிப்பூக்களைப் போல !

கனவென்று தெரிந்த பின்னும்

கலையாதிருக்க வேண்டினேன்!

காற்றில் வரைந்த ஓவியத்தை

கண்களில் சுமந்து நின்றேன்!

ஓவியம் உயிராகி வருமென

காத்திருந்தேன்...

காத்திருத்தலே தொழிலாய்ப் போனது !

Wednesday, May 24, 2006

சிப்பிக்குள் முத்து!



இந்த கவிதையை முன்னரே நான் வெளியிட்டேன் ஆனால் ஏனோ எனது வலைபதிவில் தெரியவே இல்லை எனவே மீண்டும் போடுகிறேன்.


கடலை விட்டுப் பிரிந்தாலும்

கடலோசையை சங்கு துறப்பதில்லை

உன்னை விட்டுப் பிரிந்தாலும்

உன் நினைவுகள் அலையடிப்பது ஓய்வதில்லை!

கடல் நீரின் உப்பு போல கலந்து விட்ட

நினைவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை!

கரையைத் தொட்டு தொட்டு செல்லும் அலைகள்

கடலை விட்டு விலகி செல்வதில்லை

ஒவ்வொரு அலைகளும் மணல் வெளியில்

பதிந்து விட்ட கால் தடங்களை அழித்து சென்றாலும்

என் மன வெளியில் அழிவதில்லை உன் நினைவு தடங்கள்!

மனக்கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் முத்தென

உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்குகிறேன்!

விடியலை நோக்கி



இரவுக்கும் விடியலுக்கும் இடையே நிறுத்தி சென்று விட்டாய்

இரவு தொடருமா விடியல் வெளிச்சம் தெரியுமா?

யாதொன்றும் அறியாமல் அந்தகாரத்தில் மூழ்கி கிடக்கிறேன்

சுவர்க்கோழியின் ரீங்காரம் செவிகளில் எதிரொலிக்க!

உன் புன்னகையால் சிறு மெழுவர்த்தி ஏற்றுவாய் என

இருளைப்புசித்து உறங்காமல் இருக்கிறேன் விடியுமென!

இழப்பதற்கு ஏதுமில்லாதவன்!



விலகி சென்றாய் விறகாய் எரிந்தேன்

மீண்டும் வந்தாய் மெழுகாய் உருகினேன்!

கடந்து சென்றாய் கண்கள் மூடி கல்லாய் இருகினேன்!

காலம் முழுதும் காத்து நின்றேன்

காலம் என்னை தின்றது

கவலை என்னை கொன்றது!

மரணம் கூட நெருங்க மறுத்தது

இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்

இதயத்தையும் இழந்தவன் இவனென்று!

போய் வா தென்றலே...



போய் வா தென்றலே...

நீ பிறந்த இடம் பொதிகை என்றாலும்

புகுந்த இடம் என் மனம் அல்லவா

சிறைப் பிடிக்க சிட்டுக்குருவியல்ல தென்றல் நீ!

வலையில் வீழாமல் வானகமே தாயகமாய்

வலம் வரும் தென்றலே

வசந்தமாய் வாராய் என் நெஞ்சில் வீசிட

நித்தம் காத்திருப்பேன் நீ வரும் திசை நோக்கி!

Saturday, May 20, 2006

எதையும் நினைக்கவில்லை...



பிரிவென்று நினைக்கவில்லை பிரிந்த பின்னும்

வலி என்று நினைக்கவில்லை வலித்த பின்னும்

வாழ்க்கை என்று நினைக்கவில்லை தொலைத்த பின்னும்

உண்மை என்று நினைக்கவில்லை உதறிய பின்னும்

உயிர் என்று நினைக்கவில்லை இழந்த பின்னும்.

உறக்கம் என்று நினைக்கவில்லை உறங்கிய பின்னும்

விடியல் என்று நினைக்கவில்லை விடிந்த பின்னும்

மலர் என்று நினைக்கவில்லை மலர்ந்த பின்னும்

மனம் என்று நினைக்கவில்லை உடைந்த பின்னும்

தாகம் என்று நினைக்கவில்லை தவித்த பின்னும்

தீ என்று நினைக்கவில்லை தீண்டிய பின்னும்

தேவை என்று நினைக்கவில்லை இதயம் தொலைந்த பின்னும்

தேடல் என்று நினைக்கவில்லை தேடியலைந்த பின்னும்

எதையும் நினைக்கவில்லை என்னையே மறந்த பின்பு!

Thursday, May 18, 2006

என்னவானேன் நான்...

நீ பிரிந்த தருணம் முதல்...

கண்ணீர் இல்லா கண்கள் ஆனேன்

தண்ணீர் இல்லா தடாகம் ஆனேன்

உணர்வு இல்லா உருவம் ஆனேன்

வேர் இல்லா மரம் ஆனேன்

வேகம் இல்லா காற்று ஆனேன்

தோகை இல்லா மயில் ஆனேன்

தூக்கம் இல்லா துயரம் ஆனேன்

ராகம் இல்லா பாடல் ஆனேன்

மேகம் இல்லா வானம் ஆனேன்

நிலவு இல்லா இரவு ஆனேன்

நிச்சயமில்லா கனவு ஆனேன்

இத்தனையும் ஆன பின்னும்

இறவாது இருக்கின்றேன் மண்மீது

மீண்டும் சந்திப்போம் என்றாவது என்று!

Monday, May 15, 2006

பின்னூட்டம் குறித்தான வலைப்பதிவரின் மனோ நிலை!

தருமி என்பவரின் வலைப்பதிவில் "நாமும் தமிழும், ஆங்கிலமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் படித்தேன்,சரி பின்னூட்டம் இடலாம் என்று போனால் பெயர், மின்னஞ்சல்,வலை மனை முகவரி எல்லாம் கொடுத்தால் தன் பின்னூட்டம் ஏற்கப்படும் என்பது போல் ஒரு அமைப்பில் உள்ளது அவரது வலைப்பதிவு!

எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின, இவர் எதற்காக யார்ப் படிப்பதற்காக வலைப்பதிவு போடுகிறார்? இவரது கருத்துகள் அப்படி என்ன தனித்தன்மை வாய்ந்தது என்று மறு மொழி இட இத்தனை கட்டுப்பாடுகள்.எல்லாரும் பின்னூட்டம் இட அனுமதித்தால் ஆபாசமாக திட்டி சிலர் இடுகிறார்கள் அதை தவிர்க்க என்றால்.அதற்கு தானே கமெண்ட்ஸ் மாடரேஷன் உள்ளதே. அதனையும் மீறி ஆபாச பின்னூட்டம் வர வாய்ப்பு உள்ளதா? அப்படியே வந்தாலும் அதனை எளிதில் நீக்க முடியுமே.எனக்கு எதற்கு வீண் வேலை நான் இப்படி தான் செய்வேன் என்றால் அத்தனை பயம் இருப்பவர் ஏன் இங்கே வந்து அவர் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டும்.பேசாமல் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பாக பக்கத்து வீட்டுக்காரர் உடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாமே!

தருமி இப்போது வேண்டுமானால் நான்கு பேருக்கு நன்கு தெரிந்தவராக இருந்து தேடி வந்து சிலர் பின்னுட்டம் இட்டு செல்லலாம். இவரின் துவக்க காலத்தில் ஒரு பின்னூட்டமாவது வராதா என்று காத்திருந்தவராக தான் இருக்க வேண்டும்.

இதனை தருமி என்ற தனி நபரை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை.இங்கே வலைப்பதிவு செய்யும் பெரும்பாண்மை மக்களுக்கு இருக்கும் மனோ நிலையை ஒட்டு மொத்தமாக கணக்கில் கொண்டே சொல்கிறேன்.சரி நீ ஏன் அவசியம் பின்னூட்டம் இட்டு தான் ஆக வேண்டுமா. அப்படி மறு மொழி கூறி தான் ஆக வேண்டுமெனில் நீ தைரியமாக மின்னஞ்சல் முகவரி தர வேண்டியது தானே என்று கேட்கலாம்.ஒரு வலைப்பதிவைப் படித்து அதை எழுதியவர்க்கு மறு மொழி சொல்வது ஒரு ஊக்கம் அளிக்கும் சேவை.அதனை செய்ய முன் வருபவர்க்கு ஏன் கட்டுப்பாடுகள் என்பது தான் என் வினா? மின்னஞ்சல் முகவரி தர முடியவில்லை என்றால் வேறு வேலைப் பார்த்து கொண்டு போகலாமே என்றும் கேட்கலாம்.எல்லோர்ப் பார்வையிலும் படும் வண்ணம் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டியில் வெளியிட்டப் பின் மாற்று கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமையுண்டு.அது பாரப்பட்சம் இன்றி அளிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்து.

ஒரு வலைப்பதிவு துவக்க வங்கி கணக்கு எண் தர வேண்டும் என்று சொன்னால் எத்தனை பேர் முன் வருவார்கள்.இலவசம் என்பதால் தானே ஆள் ஆளுக்கு வந்து கருத்து கந்தசாமிகளாய் மாறி தங்கள் வெந்ததும் வேகாததுமான கருத்துகளை அள்ளி இறைக்கிறார்கள்.இல்லை எல்லா வலைப்பதிவும் ஒரு தேர்வு குழு பரிசீலித்து அதன் பின்னரே வெளியிடப்படும் என்றால் எத்தனை தேறும்? இணையத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல வாய்ப்பளிக்க தான் இலவசமாய் பிளாக்குகள் உள்ளது.அப்புறம் என்ன தனியே ஒரு கருத்து சொல்வதில் பாகுபாடு!

பின்னூட்டமாக சொல்ல நினைத்ததை இங்கே நானே ஒரு வலைப்பதிவாக வெளியிட்டுள்ளேன்.இது எந்த தனி நபரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டது அல்ல.முதலில் தங்கள் எழுத்துகளை யாரேனும் படித்தால் போதும் என்று இருந்து காலப்போக்கில் வலைப்பதிவு வெளியிடுவோரிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றத்தை சுட்டிக் காட்டவே.எனது வலைப்பதிவில் மறுமொழியிட எந்த வகைக் கட்டுபாடும் விதிக்கவில்லை என்பதை கவணத்தில் கொள்ளவும்!


வணக்கம் தருமி!

//1. அங்கலாய்த்தல் - இதிலிருந்துதான் கலாய்த்தல் என்ற சொல் வந்திருக்குமோ? (எப்படி நமது ஆராய்ச்சி?)//

கலாய்த்தல் என்று சொல்வது நடைமுறையில் இருந்தாலும் .. சரியான சொற்பதம் கலாசுதல் தான்.இது ஒரு தூய தமிழ்ச்சொல்.சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அகராதில் உள்ளது.

"கலாசுதல் என்றால் உரக்க சத்தமிட்டு பேசுவது ,பெரும்பாலும் பொருள் அற்ற பேச்சு என்று போட்டுளார்கள். மிகவும் பொருத்தமான வார்த்தை தான்.சென்னையில் பெரும்பாலும் சாதாரண வாய் சண்டைக்கு கூட "போடாங்கோ டுபுக்கு தட்டுனா தாரந்துருவ... எங்க ஏரியா பக்கம் வந்துருவியா நீ மவனே செத்த" என்று "ஓவரா சவுண்டு" வேறு விடுவாங்க அதை நம்ம கைல ராங்க் காட்டினான் நல்ல கலாசிடேன்னு பெருமையா சொல்லிப்பாங்க! இதனை கொஞ்ச நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட விவாதத்திற்காக தேடி எடுத்தேன்.தற்போது தான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன்.. நம்ம ஆராய்ச்சிய வெளிக்காட்டிக்க ஒரு வாய்ப்பா போச்சு (எப்படி நம்ம வெட்டி ஆராய்ச்சி!??)

Thursday, May 11, 2006

சோனியா இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி

சோனியா ரேபரேய்லி(உ.பி) தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி(உறுதி செய்ய பட்ட ஒன்று)

தேர்தல் வெற்றி

தேர்தல்2006 வெற்றி -மு.கருணநிதி(சேப்பாக்கம்),
நாகநாதன்(திருவல்லிகேணி),
கு.பிச்சாண்டி(திருவண்ணாமலை)

என் கனவும் நீயடி!



உன் நினைவு என்னுள் ஊர்கையில்

தேகம் எங்கும் தீயின் தீண்டல்கள்

தொலைந்து போன எனது நினைவுகளை

தேடிப் பார்த்து களைக்கிறேன்

தொலைவில் செல்லும் உனது நிழலை

தொடர்கிறேன் தொடாமலே!

இருளில் ஒளியை தேடினேன்

ஒளியில் இருளை காண்கிறேன் !

காலம் கடந்து நிற்கிறேன்

கரையில் அலையாய் அடிக்கிறேன்!

கடந்து விடவே துடிக்கிறேன் !

கடக்க மறந்து தவிக்கிறேன்!

கானல் நீரை குடிக்கிறேன்!

கண்கள் திறந்தே காண்கிறேன் கனவு

கலைந்த பின்னும் தொடருமென் கனவு!

என் கனவு என்ன தேடினேன்

என் கனவும் நீயென கண்டு கொண்டேனடி!

Wednesday, May 10, 2006

அந்தி மழை!



கோடை மழை அந்தியில் பொழிகிறது

வரண்ட நிலத்தில் நீர்த் தாரைகள்

ஓடி மறைகிறது புழுதி வாசனையை கிளப்பி!

வெளிறிய வானவில்லில் மிச்சமிருக்கும் வர்ணத்தை போல

என்னுள் ஒட்டிகிடக்கும் உன்னுடைய நினைவுகள்

முளை விடும் விதை என முகிழ்த்து

விருட்சம் என வளர்ந்து விட்டது

வானவில் மறையும் முன்னே!

விலகி சென்ற பிறகும் விலக மறுக்கும் நினைவுகள்

துடுப்பற்ற படகைப் போல

நீரோட்டத்தின் திசையில் செல்கிறது நதியில்!

நாணல்கள் மட்டும் கரையோரம்!

மீட்சி!


கனவு வெள்ளத்தில் மூழ்கி

ஸ்வாசம் இழந்தேன்!

உன் நினைவு துளிகளே

மீட்டெடுத்தது என் மூச்சை!